Aggregator

யாழ். பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்கம் – அமைச்சர் சந்திரசேகர்

3 months ago
Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:55 PM யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார். இதற்கமைய அமைச்சர் சனிக்கிழமை (14) பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/217464

யாழ். பொருளாதார மத்திய நிலையம் ஆகஸ்ட் முதல் மீண்டும் இயங்கம் – அமைச்சர் சந்திரசேகர்

3 months ago

Published By: DIGITAL DESK 2

14 JUN, 2025 | 07:55 PM

image

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார்.

இதற்கமைய அமைச்சர் சனிக்கிழமை (14) பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

அதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார்.

DSC_5491.jpg

DSC_5511.jpgDSC_5495.jpgDSC_5571.jpgDSC_5521.jpg

https://www.virakesari.lk/article/217464

தாக்குதல் அச்சுறுத்தல் - KKS பொலிஸ் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு

3 months ago
வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbvx38vg01uhqpbs6m6te5rt

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
மினி முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் அதிரடியாக போட்டியை நடாத்திய கோசானுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் போட்டியை கலகலப்பாக வைத்திருந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months ago
'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெம்பா பவுமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய ஏக்கத்துடன் இருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. இதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய (உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தவிர்த்து) 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை தென்னாப்ரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் கூடுதல் உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம். யார் இந்த டெம்பா பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவுமா தலைமையில், 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. “இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென் ஆப்ரிக்க அதிபர்) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென் ஆப்ரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.” இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனால் சிலர் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா. டெம்பா பவுமா தென் ஆப்ரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன? 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார். பவுமா, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென் ஆப்ரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காகச் சென்றனர். இந்த சிக்கலில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமா தான் 2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான 'Black Lives Matter' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது. ஆனால், அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார். இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார். டி காக், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார். அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென் ஆப்ரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார். விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021ம் ஆண்டு நடந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்காவை வழிநடத்தியுள்ளனர். இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய போதுதான் தென் ஆப்ரிக்காவிற்கு 'சோக்கர்ஸ்' என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது. கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது. இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென் ஆப்ரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா. இதற்கு முன், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்பட்டார். 2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால், இன்று பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி, அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2gpdrd4po

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
பாகிஸ்தான் இஸ்ரேலுடனான உறவை துண்டித்ததுடன், ஈரானுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரான், பாகிஸ்தான் அண்டைய நாடுகள் எனும் வகையில் பார்க்கும்போது, அத்துடன் முஸ்லீம் நாடுகள் எனும் வகையில் ஒன்றிணையும்போது இது போரில் மாற்றத்தை கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் ஈரானும் ஆயுத வழங்கல்கள் வெளியில் இருந்து கிடைக்கும் என்றே தோன்றுகின்றது.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
இதோ ஆவலுடன் எதிர்பார்த்த கணிப்பு போட்டியின் முடிவுகள். சத்துருக்களை எல்லாம் சங்காரம் செய்து, முதல் நாளில் இருந்த இடத்துக்கு மீண்டு வந்து, நான் முதலிலும் முதலாவதாக வருவேன், கடைசியிலும் முதலாவதாக வருவேண்டா என பஞ்ச டயலாக் அடிக்கிறார் நிரந்தர முதல்வர் கிருபன் ஜி. “எங்கிருந்தோ வந்தான்” ஈழப்பிரியன் அதிரடியாக மேலே வந்து துணை முதல்வராகியுள்ளார். இவர்களோடு பரிட்சையில் பாசாகியவர் என்ற தகுதியை பெறுகிறார் வாதவூரான். மிச்சம் எல்லாரும் மாடு, ஆடு மேய்க்கத்தான் இலாயக்கு என்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளாதாம். செம்பாவிற்கு ஒருவழியாக எவிக்சன் நோட்டீஸ் கொடுத்து, பெரிய வீட்டை தனதாக்கி கொண்டார் நுணா. போட்டியில் பங்கு பற்றிய, கலகலப்பாக திரியை கொண்டு போன அனைவருக்கும் நன்றிகள். டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டும் நான் யாழில் தனிமரம் அல்ல தோப்பு என அறியும் போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் சுவையே வேறு. அது மிகவும் அலாதியானது. ஒரு மினி மனித வாழ்க்கை போன்றது. இதை ஒவ்வொரு வீரர்களினதும் test of character அதாவது, சுயத்தின் மீதான பரீட்ச்சை என்பார்கள். இந்த பரிட்சையில் தெ ஆ குறிப்பாக மார்க்கம் இன்று அதி விசேட சித்தி அடைந்துள்ளனர். இதுவரை இருந்த chokers என்ற பழியையும் தகர்துள்ளனர். பவுமா கிண்ணத்தை ஒருகையிலும், குழந்தையை மறு கையில் ஏந்தியபடி அணியின் lap of honour ஐ செய்ய, மனைவி, கேள்பிரெண்டுகள் சகிதம் அணி பின்னால் வர, கறுப்பு வெள்ளை தென்னாபிரிக்கர் ஒரே அணியாக நின்று ஆடியும் பாடியும் ஆரவரித்தத்து - நான் அங்கே இருந்தேன் என பேரப்பிள்ளைகளுக்கு சொல்லதக்க ஒரு மெய்சிலிர்க்கும் தருணம். 1992 இல் மெல்பேர்னில், மழை செய்த சதியின் பின், கெப்லர் வெசள்ஸ் அணி கண்ணீருடன் மைதானத்தை சுற்றி வந்ததை டிவியின் கண்டு மனம் வெதும்பி அழுத சிறுவன் கோஷானுக்கு, இது ஒரு சந்தோசமான முடிவுதான்❤️❤️❤️. கிருபன் 60🪑 ஈழப்பிரியன் 50 வாதவூரான் 40 சுவி 30 ரசோதரன் 30 வாத்தியார் 30 கந்தப்பு 30 பிரபா 30 செம்பாட்டான் 30 வீரப்பையன் 20 ஏராளன் 20 புலவர் 20 வசி 20 அல்வாயான் 20 எப்போதும் தமிழன் 20 கோஷான் 20 நுணாவிலான் 10 🏠

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
பங்குபற்றிய மூன்று யாழ் களப் போட்டிகளிலும் வெல்லும் அணிகளைச் சரியாகக் கணித்தவன். ICC சாம்பியன் கிண்ணம் - இந்தியா IPL - RCB ICC டெஸ்ட் உலக வெற்றிக் கிண்ணம் - தென்னாபிரிக்கா ஞான் செம்பாட்டன் மட்டுமே என்பதை பெருமையுடன் சொல்லிக்கொண்டு.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
இதோ உங்கள் வெற்றியாளர்கள். உலக டெஸ்ட் கிண்ணம் வென்ற தென்னாபிரிக்கா. அவர்களின் முதலாவது பெரிய கோப்பை. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது நடந்து விட்டது. வாழ்த்துகள் பசங்களா.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
பலஸ்தீன் தனிநாட்டை ஆதரிக்கும் அதே வேளை இஸ்ரேலுடன் ஈரானுக்கு எதிரான போரில் பிரான்ஸ் பங்குகொள்ளும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நேற்று அறிவித்திருந்தார்.