Aggregator

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம்

2 months 3 weeks ago

08 Dec, 2025 | 05:11 PM

image

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு வேண்டுமெனக் கோரி போராட்டமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை (08)  முன்னெடுக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது.

இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைக் கட்டாணை ஒன்றை வழங்கியது.

இந்நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை என்பதை வலியுறுத்தி விளையாட்டு துறைசார்ந்தவர்கள் பேரணியை முன்னெடுத்தனர்.

சென் போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர்.


யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்குக்கான போராட்டம் | Virakesari.lk

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!

2 months 3 weeks ago
08 Dec, 2025 | 05:04 PM பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார். சாமிக்க கருணாரத்ன DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு! | Virakesari.lk

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!

2 months 3 weeks ago

08 Dec, 2025 | 05:04 PM

image

பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். 

எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான் என கூறி பெண் ஒருவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜரான பெண், “எனது குழந்தையின் தந்தை இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன தான். தந்தை உரிமையை நிலைநாட்டுவதற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கின் பிரதிவாதியான இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன 100,000 ரூபா பெறுமததியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜெருசா தம்பையா, குழந்தையின் தந்தை யார் என்பதைக் கண்டறிய DNA பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாமிக்க கருணாரத்ன சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல ரேகவ, DNA பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது என்றும் நிரூபிக்க வேண்டிய சுமை முறைப்பாட்டாளரிடம் தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சாமிக்க கருணாரத்ன  DNA பரிசோதனை கோரிக்கையை நிராகரிப்பதாகவும், குழந்தையின் தந்தை உரிமையை மறுப்பதாகவும் சட்டத்தரணி அசேல ரேகவ நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இதனை கருத்தில் கொண்ட நீதவான், வழக்கு விசாரணையை ஜனவரி 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பெண் விமானியின் குற்றச்சாட்டு ; DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு! | Virakesari.lk

அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை!

2 months 3 weeks ago
அமெரிக்காவினை பொறுத்தவரை நேட்டோ விரிவாக்கம் என்பதன் அடிப்படை; அமெரிக்க ஆயுத வியாபாரத்திலான பொருளாதார இலாபம் என கருதுகிறேன், ஆனால் ஐரோப்பாவினை பொறுத்தவரை ஒரு அதிகார படிக்கல்லாக கருதுகிறேன். இரஸ்சிய பூச்சாண்டி மூலம் எல்லைகளற்ற அதிகாரத்தினை அடைவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருக்கலாம், ஐரோப்பிய ஒன்றிய முடிவுகள் எடுப்பதில்; தகுதி உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டும் கலந்து கொள்ளும் ஜனநாயக (?) முறைமையினை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் நகருகிறது, இது ஒரு பாரபட்சமான தரப்படுத்தல் போன்ற முறைகேடான முறைமையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவிற்கெதிராக உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கூட தற்போது ஐரோப்பிய ஒன்றிய பெற்றுள்ளது, இதற்கெதிராக பாதிக்கப்படும் நாடுகளால் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு தேர்தலில் கூட தலையீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தினால் முடியுமாக இருந்தால் அந்த நாடுகளின் இறைமயிற்கு யார் உத்தரவாதம் கொடுப்பது? ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய வடிவிலான இந்த காலனித்துவமே ஐரோப்பாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதுகிறேன், அதற்காக அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் இரஸ்சியா எனும் புலி வருது கதை. நேட்டோ நாடுகள் வெறும் ஏறத்தாள 2% மொத்த தேசிய வருமானத்திற்கு அமெரிக்க ஆயுதம் வாங்கும் போது அமெரிக்காவிற்கு ஆண்டு தோறும் ஏறத்தாள 0.5 ரில்லியன் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது, அதனை அமெரிக்கா 5.5% அதிகரிக்க கோருகிறது, ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் காசில்லாமலேயே இரஸ்சிய பனத்தினை கையாடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நிலையில் பிச்சைக்காரனிடமே பிச்சை இரக்கும் நிலையாகியுள்லது. அமெரிக்காவினை தம் பக்கம் இழுக்க உக்கிரேன் தனது வளங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் 1.3 ரில்லியனுக்கு ஒப்பந்தம் என நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் பானையில் இருந்தால்த்தானே அகப்பையில் வரும் என்ற உண்மை நிலையினை அமெரிக்காவிற்கு உணர்த்திய சம்பவம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரஸ்சிய பணத்தினை ஆட்டையை போட செய்கின்ற பகீரத பிரயத்தனமே வெளிக்காட்டி விட்டது. இரஸ்சியா, அமெரிக்காவிற்கு தனது பக்கமான சில ஒப்பந்தங்கள் மூலம் தன் பக்கம் அமெரிக்காவினை இழுத்துவிட்டது என நினைக்கிறேன், வடதுருவ கனிம அகழ்வு மிக பெறுமதியான விடயம், அத்துடன் ஐரோப்பாவினால் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் உள்ளடங்கலாக ஐரோப்பிய உக்கிரேன் தரப்பினை விட பெறுமதியான உடன்பாடு எட்டபட்டிருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியஒன்றியம் விரும்பும் புதிய ஐரோப்பா (இரஸ்சிய அற்ற ஐரோப்பா) எனபது நடைமுறையில் சாத்தியமற்ற விடயம் என பலரும் கருதுகிறார்கள், வைக்கோல் போரில் ஊசியினை தொலைத்துவிட்ட ஐரோப்பிய ஒன்றியம் ஒரு புதிய கூட்டணியினை தேடுகிறார்கள், அதனை அவர்கள் எங்காவது சமாந்தர உலகில்தான் காணமுடியும். பலரும் கூறும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றம் இது என (புதிய அமெரிக்க கொள்கை அமெரிக்க ஏகாதிபத்திய உலக ஒழுங்கின் முடிவுதான் - சில வருடங்களுக்கு முன்னர் இது பற்றி பேசப்பட்ட போது யாழில் பலத்த அவநம்பிக்கை நிலவியிருந்தது), ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் தோல்வியாக உருவெடுக்க உள்ளதாக கருதுகிறேன், அமெரிக்கா போலல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தினை இரஸ்சிய உக்கிரேன் சமாதானம் உருவாக்கி விடலாம் (அமெரிக்கா தற்போதும் உலகின் முதலாவது பெரிய பொருளாதார சக்தியாகவே உள்ளது, ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டு மொத்த அதிகாரத்தின் மூலம் அதே சக்தியாக உருவெடுக்க முயற்சிக்கின்றது, ஆனால் அதன் முயற்சிகள் அனைத்தும் ஐரோப்பிய பொருளாதார நலனுக்கெதிராகவே உள்லதாக கருதுகிறேன்).

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

2 months 3 weeks ago
அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு! 08 Dec, 2025 | 03:33 PM நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள் காரணமாக மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மாரடைப்பு , ஏனைய இதய நோய்கள், மனநல பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232773

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

2 months 3 weeks ago

அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு!

08 Dec, 2025 | 03:33 PM

image

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான நிலைமைகள் காரணமாக மக்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் மத்தியில் மாரடைப்பு , ஏனைய இதய நோய்கள், மனநல பாதிப்புகள் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுவதாக இதய நோய் தொடர்பான வைத்திய நிபுணர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/232773

மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது!

2 months 3 weeks ago
அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கண்டனம் 08 Dec, 2025 | 03:55 PM செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும், வரலாற்று நினைவுகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ள இத்தூபியைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சேதம், சமூக ஒற்றுமைக்கும் ஜனநாயக மதிப்புகளுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நிலவும் அமைதி மற்றும் சமூக ஒற்றுமையை எந்த விதமான எதிர்மறை கைகளும் பாதிக்க அரசு அனுமதிக்காது. மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இப்படியான நடவடிக்கைகளைத் தடுக்க சமூக ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/232781

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

2 months 3 weeks ago
வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் Dec 8, 2025 - 03:52 PM பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழு இன்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmix059tv02iso29ndslfe5ct

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

2 months 3 weeks ago

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

Dec 8, 2025 - 03:52 PM

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். 

இன்று (08) இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர இதனை தெரிவித்தார். 

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை இந்தக் குழு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்தக் குழுவின் தலைவராக பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்தக் குழு இன்று (08) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmix059tv02iso29ndslfe5ct

நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்

2 months 3 weeks ago
வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர் 08 Dec, 2025 | 02:59 PM கடந்த மாதம் வடக்கு நைஜீரியாவிலுள்ள கத்தோலிக்க பாடசாலையொன்றில் அத்துமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் கடத்தி சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்களில் மேலும் 100 மாணவர்கள்விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட 100 மாணவர்கள் நைஜீரியாவின் தலைநகரான அபூஜாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நைஜர் மாநில உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், விடுவிக்கப்பட்ட 100 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன், பின்னர் குடும்பத்துடன் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜர் மாநிலத்தின் அகவாரா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலையில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (21) அததுமீறி நுழைந்த ஆயுதக் குழுவினர் 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களை கடத்தி சென்றனர். இதில் 10 முதல் 18 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் அடங்குவதாக அந்நாட்டு கிறிஸ்துவ சங்கம் தெரிவித்தது. கடத்தப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பி சென்று அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். மேலும் 153 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/232767

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

2 months 3 weeks ago
Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 03:06 PM நிவாரண பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம் இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/232771

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

2 months 3 weeks ago

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 03:06 PM

image

நிவாரண பணிகளுக்கு  ஞாயிற்றுக்கிழமை (டிச.07) கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்று திங்கட்கிழமை (டிச.08) காலை நிவாரண பொருட்களுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

நாடு முழுவதும் நிவார பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு Super Hercules  விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/232771

மக்களே அவதானம் - புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது : பேரா நாகமுத்து பிரதீபராஜா

2 months 3 weeks ago
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது - பிபிசி வானிலை சேவை 08 Dec, 2025 | 03:34 PM இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகமானது இந்த வாரம் ஒரு புயலாக வலுப்பெறக்கூடும் என பிபிசி வானிலை சேவை அறிவித்துள்ளது. இந்தப் புயல் படிப்படியாக மேற்கு நோக்கி நகரும். இது புயலாக மாறினாலும் மாறாவிட்டாலும் இலங்கையின் சில பகுதிகளில் இடையிடையே நிலையின்மையுடனான கனமழை பெய்யும் என பிபிசி வானிலை ஆய்வாளர் லூயிஸ் லியர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232779

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

2 months 3 weeks ago
டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு! December 8, 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது. இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. “நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார். இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

2 months 3 weeks ago

டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்திக்கு ரஷ்யா வரவேற்பு!

December 8, 2025

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியை ரஷ்யா வரவேற்றுள்ளது. அது ரஷ்யாவின் தொலைநோக்கு பார்வையுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது.

இந்த வாரம் அமெரிக்க அரசு வெளியிட்ட 33 பக்க ஆவணம், ஐரோப்பா ‘நாகரிக அழிவை’ எதிர்கொள்கிறது என்று கூறுகிறது. அது ரஷ்யாவை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகக் காட்டவில்லை. வெளிநாட்டு செல்வாக்கை எதிர்த்துப் போராடுவது, வெகுஜன இடப்பெயர்வை நிறுத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தணிக்கை நடைமுறையை நிராகரிப்பது ஆகியவை அறிக்கையில் மற்ற முன்னுரிமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

“நாங்கள் பார்க்கும் மாற்றங்கள்… பெரும்பாலும் எங்கள் நோக்கத்தோடு ஒத்துப்போகின்றன” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட பேட்டியில் கூறினார். “இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆவணத்தை ரஷ்யா தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆவணம் அமெரிக்க வெளிநாட்டு உறவுகளை சிதைக்கக்கூடும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஜேசன் க்ரோ, இந்த உத்தி “உலக அரங்கில் அமெரிக்காவின் நிலைக்கு பேரழிவு” என்று கூறினார். https://www.ilakku.org/russia-welcomes-trumps-new-national-security-strategy/

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

2 months 3 weeks ago
போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி Published By: Digital Desk 3 08 Dec, 2025 | 11:56 AM போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார். https://www.virakesari.lk/article/232752

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

2 months 3 weeks ago

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது ; உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை - அமெரிக்க ஜனாதிபதி

Published By: Digital Desk 3

08 Dec, 2025 | 11:56 AM

image

போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரேன், ரஷ்யா இடையே இன்று திங்கட்கிழமை (டிச. 08) 1 ஆயிரத்து 383வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரேன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரேன் - ரஷ்யா போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் பேசி வருகிறோம். போர் நிறுத்தம், அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த திட்டத்தை உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி புரிந்துகொள்ளவில்லை. அது எனக்கு ஏமாற்றம் தான்’ என்றார்.

https://www.virakesari.lk/article/232752

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

2 months 3 weeks ago
கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் 08 Dec, 2025 | 12:43 PM கம்போடியா மீது தாய்லாந்து இன்று (டிச.08) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் கம்போடியா முதலில் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகவே வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. கம்போடியா நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாகவும், இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தாய்லாந்து தெரிவித்துள்ளது. அதேவேளை, தாய்லாந்து நடத்திய தாக்குதலில் கம்போடியாவில் ஏற்பட்ட உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மோதலால் தாய்லாந்து, கம்போடியா இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/232757