Aggregator

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

3 months ago

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

இனிப்பு வகைகளையும் சீனி சம்மந்தமான உணவுகளையும் அறவே நீக்கும்படி கூறியுள்ளீர்கள், ஆனால் நார்சத்துக்காக பழங்களை உண்ணச் சொல்லியிருக்கிறீர்கள், அந்த பழங்களில் காணப்படும் சர்க்கரையாகிய பிரக்டோசு (Fructose) கெடுதல் விளைவிக்காதா? தயவு செய்து அறியத்தரவும்.

பழங்களில் காணப்படும் பிரக்டோசு கெடுதல் விளைவிக்காது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months ago
யாழ், திருமலை, கண்டிக்கு விஜயம் செய்வார் வோல்கர் ; வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்தே நிகழ்ச்சி நிரலில் யாழ். விஜயம் உள்வாங்கப்பட்டதாகத் தகவல் 15 JUN, 2025 | 10:58 AM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவிருப்பதுடன் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தன. இருப்பினும் அவரது வருகை பெருமளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவர் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை இலங்கைக்கு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அவரது முள்ளிவாய்க்கால் விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை. மேலும் ஆரம்பத்தில் 23 - 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது விஜயத்தில் யாழ் விஜயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை எனவும், பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மத்தியில் வலுவடைந்த எதிர்ப்பை அடுத்தே அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதி 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதில் யாழ் விஜயமும் உள்வாங்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. https://www.virakesari.lk/article/217493

ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்

3 months ago
நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை 15 JUN, 2025 | 11:02 AM வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது. எனவே இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (14) அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உரையாற்றினார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுமுன்தினம் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனியடைடுத்து ஜனாதிபதி பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் ஜனாதிபதியை உற்சாகத்துடன் வரவேற்றனர். வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/217495

கீழடி வரலாற்றை அழிக்க பாஜக முயற்சி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

3 months ago
Keezhadi Excavation - அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் என்ன இருந்தது? சர்ச்சைகள் தொடர்வது ஏன்? கீழடி தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகே அமைந்திருக்கும் ஒரு தொல்லியல் களம். 2014ஆம் ஆண்டிலிருந்து இங்கே அகழாய்வுகள் நடந்துவருகின்றன. இதில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்திருந்தார். இதில் சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை திருப்பி அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கீழடியின் தொன்மை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் முடிவுகள் என்ன? தற்போது அதில் என்ன சர்ச்சை? இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம். #Keezhadi #KeezhadiExcavation #AmarnathRamakrishna இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இந்திய விமானம் விபத்துக்குள்ளானது

3 months ago
Flight-ல் ஆபத்து காலத்தில் உதவ என்னென்ன இருக்கும்? Safety பற்றி கட்டாயம் தெரிய வேண்டிய தகவல் ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின், இதற்கு முன்பு நடந்துள்ள விமான விபத்துக்கள் குறித்தும், விமானங்களின் தரம் குறித்தும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. விபத்துக்களுக்குக் காரணம் விமானங்களின் பராமரிப்பு குறைபாடா, மனிதப்பிழைகளா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், விமானத்தின் முக்கிய பாகங்கள், அவற்றின் செயல்பாடுகள், பொதுவான விமானப் பராமரிப்பு முறைகள் குறித்து விமானவியல் துறை சார்ந்த நிபுணர்களிடம் பிபிசி தமிழ் கலந்துரையாடியது. #AirIndia #FlightCrash #FlightSafety இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது; வெரிட்டே ரிசேர்ச் ஆய்வில் வெளிக்கொணர்வு

3 months ago
Published By: VISHNU 15 JUN, 2025 | 05:56 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition” அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில் IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )' எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும். இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது. https://www.virakesari.lk/article/217549

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது; வெரிட்டே ரிசேர்ச் ஆய்வில் வெளிக்கொணர்வு

3 months ago

Published By: VISHNU

15 JUN, 2025 | 05:56 PM

image

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட

ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition” அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில் IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )' எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும். இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது.

https://www.virakesari.lk/article/217549

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months ago
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months ago
2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

3 months ago
போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்! இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேல் செய்த ஒரு சிறு தவறுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை இஸ்ரேல் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சமீபத்தில் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அடியாக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஒரு மேப்பையும் வெளியிட்டது. அந்த உலக மேப்பில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகள் என இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய நெட்டிசன்கள் பலர் அந்த பதிவிலேயே கமெண்டில் இதுகுறித்து சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அந்த பதிவையே இஸ்ரேல் ராணுவப்பிரிவின் எக்ஸ் தள நிர்வாகம் நீக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ”எல்லைகளை சரியாக கவனிக்காததன் தோல்வி இது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து IDF (Israeli Defence Force) வெளியிட்டுள்ள பதிவில் “இந்தப் பதிவு இந்தப் பகுதியை விளக்குகிறது. இந்த வரைபடம் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டது. இந்தப் படத்தால் ஏற்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது. https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/israel-apologize-to-india-for-their-wrong-measurements-in-india-and-kashmir-in-their-maps-125061500009_1.html

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

3 months ago
போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

IDF Map controversy

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இஸ்ரேல் செய்த ஒரு சிறு தவறுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

 

ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை இஸ்ரேல் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சமீபத்தில் இருநாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அடியாக தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஈரானின் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனை மையங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

 

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் ஒரு மேப்பையும் வெளியிட்டது. அந்த உலக மேப்பில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகள் என இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய நெட்டிசன்கள் பலர் அந்த பதிவிலேயே கமெண்டில் இதுகுறித்து சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அந்த பதிவையே இஸ்ரேல் ராணுவப்பிரிவின் எக்ஸ் தள நிர்வாகம் நீக்கியுள்ளது. 

 

இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் ”எல்லைகளை சரியாக கவனிக்காததன் தோல்வி இது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து IDF (Israeli Defence Force) வெளியிட்டுள்ள பதிவில் “இந்தப் பதிவு இந்தப் பகுதியை விளக்குகிறது. இந்த வரைபடம் எல்லைகளைத் துல்லியமாகக் காட்டத் தவறிவிட்டது. இந்தப் படத்தால் ஏற்பட்ட எந்தவொரு குற்றத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளது.

https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/israel-apologize-to-india-for-their-wrong-measurements-in-india-and-kashmir-in-their-maps-125061500009_1.html

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
கிருபன், ஈழப்பிரியன், வாதவூரானுக்கு வாழ்த்துக்கள். போட்டியை இனிதுற நடாத்திய கோசானுக்கு நன்றி. தென்னாபிரிக்கா வென்றது சந்தோசம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
Fire and smoke rise from an oil storage in Tehran as Israel continues strikes on Iran. [Abedin Taherkenareh/EPA] People watch from a bridge as flames rise from the Sharan oil depot following Israeli strikes in Tehran. [Majid Asgaripour/WANA via Reuters] Israeli forces inspect a building hit by an Iranian missile near Tel Aviv. [Ohad Zwigenberg/AP Photo] A building hit by an Iranian strike in Tamra, northern Israel. [Ammar Awad/Reuters] Damaged buildings after Iranian missiles hit Rehovot, central Israel. [Abir Sultan/EPA]

தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த புதிய சட்டம் - கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?

3 months ago

லோன் செயலிகளால் ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு அரசு புதிய சட்டம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது.

கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், 'பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்' என்றும் புதிய சட்டம் கூறுகிறது.

புதிய சட்டத்தின்படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா?

கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள்

  • கடன் தொல்லை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பால்ராஜ் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாக வேலையில்லாமல் தவித்த அவர், கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் செயலி நிறுவனத்தினர் அளித்த மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர்.

சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

இத்தகைய சூழலில், கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில், "கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.

ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.

இந்நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினமே விவாதங்களுக்குப் பின் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதிய சட்டத்தில் என்ன உள்ளது?

அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்குப் பின் சட்டமாகியுள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  • கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு (Registration of money lending Entity)

  • கடன் வழங்கும் நிறுவனத்தை முறைப்படுத்துதல் (Regulations of money lending entity)

  • பதிவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரம் (Powers of registering authority)

  • குற்றங்களும் அபராதமும் (Offences and penalties)

எவையெல்லாம் குற்றம்?

ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும்.

  • கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். (வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்)

  • கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல்

  • கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல்

  • கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல்

  • கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று பேசுதல் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?

"வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company) ஆகியவற்றுக்கு அரசின் சட்டம் பொருந்தும். உடனடி கடன் செயலிகளால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால், இவை எதுவும் நிறுவனங்களாக நடத்தப்படுவதில்லை" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது ஒரு மென்பொருள். உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கடன் பெறலாம். ஐந்தாயிரம், பத்தாயிரம் உடனடியாக கடன் கொடுத்துவிடுகின்றனர்" எனக் கூறுகிறார்.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள் அதிகம் உள்ளதாகக் கூறும் அவர், "ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இந்நிறுவனங்கள் மக்களை ஈர்க்கின்றன. இதனை முறைப்படுத்த வேண்டும்" எனக் கூறுகிறார்.

"ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது ஆவணங்களை சரிபார்த்து நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகளுக்கு இந்த விதிகள் எதுவும் இல்லை. பணம் கொடுத்து மிரட்டிப் பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது," எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதுப் போல, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

லோன் செயலிகளால் ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு அரசு புதிய சட்டம், ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு,கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்

"கடன் செயலியாக இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்"

இதனை மறுக்கும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், "கடன் செயலிகளை யார் நடத்துகிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடன் வழங்கும் தொழில் செய்வோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பாக, செல்போனில் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். கடன் செயலிக்காக நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

"அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுத்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் அனைவரையும் பதிவு செய்ய வைத்து முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது" எனவும் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்காக, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி,

  • கடன் வழங்கும் நிறுவனத்தை ஒருவர் நடத்த விரும்பினால் அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

  • கடன் வழங்கும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்.

  • மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

  • வட்டி வீதம், இணையதள முகவரி, அலுவலக விவரங்கள் ஆகியவற்றை விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக கூற வேண்டும்.

  • அரசிடம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

லோன் செயலிகளால் ஏற்படும் பிரச்னைகள், தமிழ்நாடு அரசு புதிய சட்டம், ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன்

தீர்வு கிடைக்குமா?

2003 ஆம் ஆண்டில் கந்துவட்டி தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை மேற்கோள் காட்டிப் பேசிய சி.பி.கிருஷ்ணன், "அதில், எத்தனை சதவீதத்துக்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்ற விவரம் இல்லை. 'மிகவும் அதிகமான', 'மனதை உலுக்கும்' ஆகிய வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றிருந்தன" எனக் கூறுகிறார்.

"கடன் செலுத்த முடியாவிட்டால் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டுவது, பலர் முன்னிலையில் தாக்குவது போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய தீர்வாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, " கடன் வசூலிப்பதில் காட்டப்படும் கெடுபிடியால் தற்கொலைகள் நடக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிரட்டல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார்.

கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு அதிகளவில் கடன் பெறப்படுவதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன்.

கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதாகக் கூறும் நடராஜன், "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது அவருக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை நிதி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. அதைக் கவனித்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்" என்கிறார்.

தொடர்பு கொள்க...

  • நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050 -க்கு அழைப்பு விடுக்கவும்.

  • மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy0j08lvzvwo

தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த புதிய சட்டம் - கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?

3 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், 'பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்' என்றும் புதிய சட்டம் கூறுகிறது. புதிய சட்டத்தின்படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா? கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள் கடன் தொல்லை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பால்ராஜ் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாக வேலையில்லாமல் தவித்த அவர், கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் செயலி நிறுவனத்தினர் அளித்த மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர். சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் இத்தகைய சூழலில், கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், "கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகின்றனர். இந்நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினமே விவாதங்களுக்குப் பின் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய சட்டத்தில் என்ன உள்ளது? அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்குப் பின் சட்டமாகியுள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு (Registration of money lending Entity) கடன் வழங்கும் நிறுவனத்தை முறைப்படுத்துதல் (Regulations of money lending entity) பதிவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரம் (Powers of registering authority) குற்றங்களும் அபராதமும் (Offences and penalties) எவையெல்லாம் குற்றம்? ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும். கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். (வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்) கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல் கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல் கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று பேசுதல் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா? "வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company) ஆகியவற்றுக்கு அரசின் சட்டம் பொருந்தும். உடனடி கடன் செயலிகளால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால், இவை எதுவும் நிறுவனங்களாக நடத்தப்படுவதில்லை" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது ஒரு மென்பொருள். உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கடன் பெறலாம். ஐந்தாயிரம், பத்தாயிரம் உடனடியாக கடன் கொடுத்துவிடுகின்றனர்" எனக் கூறுகிறார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள் அதிகம் உள்ளதாகக் கூறும் அவர், "ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இந்நிறுவனங்கள் மக்களை ஈர்க்கின்றன. இதனை முறைப்படுத்த வேண்டும்" எனக் கூறுகிறார். "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது ஆவணங்களை சரிபார்த்து நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகளுக்கு இந்த விதிகள் எதுவும் இல்லை. பணம் கொடுத்து மிரட்டிப் பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது," எனக் கூறுகிறார் கார்த்திகேயன். ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதுப் போல, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் "கடன் செயலியாக இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்" இதனை மறுக்கும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், "கடன் செயலிகளை யார் நடத்துகிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடன் வழங்கும் தொழில் செய்வோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பாக, செல்போனில் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். கடன் செயலிக்காக நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்" என்று குறிப்பிட்டார். "அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுத்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் அனைவரையும் பதிவு செய்ய வைத்து முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது" எனவும் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார். இதற்காக, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தை ஒருவர் நடத்த விரும்பினால் அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும். கடன் வழங்கும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். வட்டி வீதம், இணையதள முகவரி, அலுவலக விவரங்கள் ஆகியவற்றை விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக கூற வேண்டும். அரசிடம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன் தீர்வு கிடைக்குமா? 2003 ஆம் ஆண்டில் கந்துவட்டி தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை மேற்கோள் காட்டிப் பேசிய சி.பி.கிருஷ்ணன், "அதில், எத்தனை சதவீதத்துக்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்ற விவரம் இல்லை. 'மிகவும் அதிகமான', 'மனதை உலுக்கும்' ஆகிய வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றிருந்தன" எனக் கூறுகிறார். "கடன் செலுத்த முடியாவிட்டால் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டுவது, பலர் முன்னிலையில் தாக்குவது போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய தீர்வாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, " கடன் வசூலிப்பதில் காட்டப்படும் கெடுபிடியால் தற்கொலைகள் நடக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிரட்டல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார். கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு அதிகளவில் கடன் பெறப்படுவதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன். கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதாகக் கூறும் நடராஜன், "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது அவருக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை நிதி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. அதைக் கவனித்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்" என்கிறார். தொடர்பு கொள்க... நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050 -க்கு அழைப்பு விடுக்கவும். மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0j08lvzvwo

பதவியில் உயிர்வாழ்வதே தமிழ் அரசியல்வாதிகளின் குறிக்கோள்; காணாமல்போனோரின் உறவுகளின் சங்கம்

3 months ago
கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு 15 JUN, 2025 | 03:49 PM கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சியில் அவர்களது அலுவலகத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி கலந்து கொண்டு குறித்த ஊடக சந்திப்பபை நடத்தியுள்ளார் இவ் ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியை பெற்று தருவதற்கு இது இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அலுவலகத்தை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (16) காலை அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடைபெறவுள்ள ஐநா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார் போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும் என்றம் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217528

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் - அமைச்சர் சந்திரசேகர்

3 months ago
15 JUN, 2025 | 12:59 PM தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம். நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம். இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும். உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள். அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும். கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சக்களுடன் நெருங்கி செயற்ப்பட்டவர் எனக் கூறப்பட்ட, மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆசியமைக்கின்றனர். இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் அதிகாரத்துக்காக - கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/217500

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் - அமைச்சர் சந்திரசேகர்

3 months ago

15 JUN, 2025 | 12:59 PM

image

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம்.

நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும்.

உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள்.

அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை.

சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்.

கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சக்களுடன் நெருங்கி செயற்ப்பட்டவர் எனக் கூறப்பட்ட, மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர்.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆசியமைக்கின்றனர்.

இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் அதிகாரத்துக்காக - கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/217500