Aggregator
'கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர்
கருநிலம்’ (கருப்பு மண்) மன்னார் மக்கள் மாற்றத்தின் ‘காற்றை’ தொடர்ந்து எதிர்க்கின்றனர்.
Published By: RAJEEBAN
13 AUG, 2025 | 01:55 PM
![]()
தமிழில் - ரஜீவன்
மன்னாரில் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பமாகி தொடரும் போராட்டத்திற்கான பெயர் கருநிலம். சட்டவிரோத கனியவள - இல்மனைட் அகழ்வு - காற்றாலை மின் திட்டம் - இறால் பண்ணைகள் போன்ற மன்னார் தீவின் இயற்கை சமநிலையை அழித்துக்கொண்டிருக்கின்ற விடயங்களிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
மன்னார் இலங்கையில் அதிகளவு மணல் பரப்பை கொண்ட தீவாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு அருகில் உள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் தொலைநோக்கற்ற தீர்மானங்கள் காரணமாக மன்னார் மக்கள் நிலம், நீரை பெறுவதற்கான வழிமுறைகள் உட்பட ஏனைய அடிப்படை உரிமைகளை இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் எப்படி காற்றாலையை அமைப்பதற்கான பொருட்கள் மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டன என்பதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கடும் பாதுகாப்புடன் ஆறு ஏழு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட இந்த இறக்கைகளை - பொதுமக்கள் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மறித்தனர் என தெரியவந்துள்ளது. மன்னாரில் ஏற்கனவே உள்ள 30 காற்றுவிசையாழிகளிற்கு அப்பால் இந்த காற்றாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
மிகவும் பலவீனமான சுற்றுசூழல் அமைப்பை கொண்ட மன்னார் தீவிற்கு 30 விசையாழிகள் போதும் என மக்கள் நம்புகின்றனர்.
மன்னாரின் சுற்றுசூழல் மதிப்பும் முக்கியத்துவமும் பல்லுயிர் பெருக்கமும் பல்லாயிரக்கணக்கான வலசப்பறவைகளை ஈர்க்கின்றது.
ஆனால் மன்னார் தீவில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை விசையாழிகள் பல பறவைகளை கொல்லக்கூடியவை என சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதானி குழுமத்தின் முன்மொழியப்பட்ட காற்றாலை மின்திட்டத்தினை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ள போதிலும் பல நிறுவனங்கள் காற்றாலைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இது பசுமை ஆற்றலை உருவாக்கும் போர்வையில் ஒரு அழகிய சுற்றுசூழல் அமைப்பை அழிப்பதற்கு சமமானது.

மன்னார் மக்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களின் நீதியைக் கோருவதற்கான ஒரே வழி அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை கேட்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதுதான். "ஏற்கனவே மழைக்காலத்தில் மன்னார் தீவு 3-4 மாதங்களாக நீரில் மூழ்கி அனைத்து குடியிருப்பாளர்களின் வாழ்க்கையையும் துயரத்தில் ஆழ்த்துகிறது" என்று மன்னாரில் ஏற்படும் அழிவுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு குடியிருப்பாளர் கூறினார். "கழிவுநீர் கசிவுகள் மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் காரணமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இது எங்கள் வீடு நாங்கள் எங்கும் செல்ல முடியாது" என்று குடியிருப்பாளர் மேலும் கூறினார்.
வரவிருக்கும் பேரழிவு

கடந்த சில நாட்களாக கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். மேலும் வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க அரசாங்கத்தை நம்ப வைக்கும் நம்பிக்கையுடன் தங்கள் போராட்டத்தைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.
ஜூன் 18 அன்று வெளியிடப்பட்ட "பேரழிவு தரும் திட்டங்களை நிறுத்துங்கள்!": மன்னார் மக்களிடமிருந்து ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் முந்தைய கட்டுரையில் டெய்லி மிரர் மன்னார் தீவுக்கு ஏற்பட்ட அழிவின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் பொதுமக்கள் அடிப்படை உயிர்வாழ்தலிற்கே சவாலை ஏற்படுத்தியுள்ள போதிலும் அடிப்படை உரிமைகளை பாதித்துள்ள போதிலும் இந்த திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போகின்றார்களா என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதில் எதுவுமில்லை.
மன்னாரில் நடந்து வரும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் 'கருநிலம்' என்ற தலைப்பில் ஒரு அதிகாரப்பூர்வ போராட்டப் பாடலை வெளியிட்டனர். இது நிலைமையின் தீவிரத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்காட்டுகிறது.
இல்மனைட் அகழ்வினால் ஏற்படும் நீரில் அதிக அளவுகள் மற்றும் இந்த முன்னேற்றங்களால் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விளைவுகள் குறித்து இந்தப் பாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மௌனப் போராட்டம் நடத்தி வந்த போதிலும் அரசாங்கம் மௌனமாக இருப்பதை அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
டெய்லி மிரருக்கு பேட்டி அளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மெலனி குணதிலகா மன்னார் தீவில் முன்மொழியப்பட்ட இல்மனைட் அகழ்வு மற்றும் பிற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்தார்.
"மன்னார் ஒரு உள்ளூர் பிரச்சினை மட்டுமல்ல, இது உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்தது. அழிந்து வரும் பல்லுயிர் பெருக்கம் வளமான கடல் வாழ்விடங்கள் மற்றும் மத்திய ஆசிய விமானப் பாதையில் ஒரு முக்கியமான முனை 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இடம்பெயர்வு பாதை. இந்தப் பகுதியில் பெரிய அளவிலான தொழில்துறை சீர்குலைவு வனவிலங்குகளுக்கு மட்டுமல்ல இந்த உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பைச் சார்ந்திருக்கும் பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கும் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.
சர்வதேச சட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க மாநிலங்கள் சட்டப்பூர்வ கடமைகளைக் கொண்டுள்ளன இதில் சுத்தமான ஆரோக்கியமான மற்றும் நிலையான சூழலுக்கான உரிமையும் அடங்கும் என்று சர்வதேச நீதிமன்றம் ) சமீபத்தில் உறுதிப்படுத்தியதாக குணதிலகா மேலும் கூறினார். "இது தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களை தனியார் ஒழுங்குபடுத்துவதற்கும் மீளமுடியாத சுற்றுச்சூழல் சேதத்தைத் தடுப்பதற்கும் உள்ள கடமையை உள்ளடக்கியது. இதற்கு மேலதிகமாக நவ்ரு எள. ஆஸ்திரேலியா வழக்கில் அமைக்கப்பட்ட முன்னுதாரணமானது பாதிக்கப்படக்கூடிய தீவு சூழல்களில் வளங்களை பிரித்தெடுப்பதால் ஏற்படும் அழிவுக்கு மாநிலங்கள் பொறுப்பேற்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்
பல சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் மற்றும் மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் கைசாத்திட்டுள்ள இலங்கை மக்களின் மட்டுமல்ல இயற்கையின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது. திட்டங்களை ஒவ்வொன்றாக அங்கீகரிப்பது மன்னாரின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படும் ஒட்டுமொத்த தாக்கத்தை புறக்கணிக்கிறது. ஒரு விரிவான முழு தீவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியம். குறைவான எதுவும் சர்வதேச விதிமுறைகளை மீறுகிறது மற்றும் சுற்றுச்சூழல் பாகுபாட்டின் செயலாக மாறும் அபாயம் உள்ளது. அங்கு சிறுபான்மை சமூகங்கள் மாசுபாடு இடப்பெயர்ச்சி மற்றும் வாழ்வாதார இழப்பு ஆகியவற்றால் விகிதாசாரமாக சுமையாக உள்ளன. மன்னார் தீவு செலவிடத்தக்கது அல்ல. இது அதன் மக்களுக்கு பறவைகளுக்கு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஒரு சரணாலயமாகும் மேலும் தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்” என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அழிவுகரமான திட்டங்களையும் அனுமதிக்காது' என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்தார். ஒவ்வொரு திட்டமும் மக்களின் ஒப்புதலுடனும் குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்துடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு கட்சி உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். ஆயினும்கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆன பிறகும் மன்னார் தீவின் தொடர்ச்சியான அழிவுக்கு முடிவே இல்லாததால் மன்னார் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கோவில் யாத்திரை பாதையை சூழ்ந்த திடீர் வெள்ளம் – 38 பேர் பலி
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
இத்தாலியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; 26 பேர் உயிரிழப்பு
இத்தாலியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; 26 பேர் உயிரிழப்பு
Published By: DIGITAL DESK 3
14 AUG, 2025 | 09:38 AM
![]()
இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய ஊடகப் பேச்சாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்துள்ளார்.
அறிமுகம்
அறிமுகம்
கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர்
கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர்

கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம்-ஐநா மனித உரிமை ஆணையாளர்.
இலங்கை அரசாங்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக ஏற்க மறுத்து வந்துள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்;க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விடுவித்தல் புதிய நிலக் கையகப்படுத்துதல்களை நிறுத்துதல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவித்தல் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு முயற்சிகளை ஆதரித்தல் மற்றும் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் பாரபட்சமற்ற தன்மையை உறுதி செய்தல் அதன் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப சர்வதேச நிபுணத்துவம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் நிலைமாறுகால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான இலங்கை குறித்த அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ஈடுபாடு இன்றியமையாததாக உள்ளது மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நீண்டகால நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கு உறுதுணையாக இருக்க முடியும். சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் முதன்மை பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது என்றாலும் இதை சர்வதேச வழிமுறைகளால் பூர்த்தி செய்து ஆதரிக்க முடியும். என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்
மாற்றத்திற்கான அடித்தளங்களை நடைமுறைப்படுத்தவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும்கடந்தகால மோதல்களிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவும் நிலையான சமாதானம் மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான அடித்தளத்தை இடவும் கிடைத்துள்ள வரலாற்று சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் இருந்து விடுபடுவதற்கு இலங்கைக்கு இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குதல்சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல்பாரபட்சம் மற்றும் பிரிவினைவாத அரசியலை முடிவிற்கு கொண்டுவருதல் போன்ற நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது புதிய திசையில் பயணிப்பதற்கு தலைமைத்துவம் உறுதிவழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசநிறுவனங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த அர்ப்பணிப்புகளை உறுதியான நடவடிக்கைகளுடன் ஒரு ஒத்திசைவான காலக்கெடு திட்டமாக மாற்றவேண்டும் என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு நீதிவழங்குவதும் இதில் உள்ளடங்கியிருக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரின் போது மீறல்கள் துஸ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களிற்கு அரசபடையினரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற அரசசாரா தரப்பினரும் காரணம் என்பதை தெளிவாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுதலுடன் இதனை ஆரம்பிக்கவேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான எனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை துன்பத்தை நான் தெளிவாக பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களின் வேண்டுகோள்களிற்கு தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார். தேசிய ஐக்கியம் பற்றிய அரசாங்கத்தின் நோக்கினை சாத்தியமாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அனைத்திற்கும் அப்பால் கடந்தகால மீறல்கள் மீண்டும் இடம்பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வரவேற்றுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் பாரிய மனித உரிமைமீறல்கள் சர்வதேச சட்;ட மீறல்களிற்கு தீர்வை காணபதற்கு அர்ப்பணிப்புள்ள நீதித்துறைபொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலங்களை விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். நீண்டகால பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு வெளியேயும் உள்ளேயும் அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளிற்கு சர்வதேச சமூகம் தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வழக்குதொடுப்பதற்கான பொறுப்பு முக்கிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்குரியது என்றாலும் இதனை சர்வதேச வழிமுறைகளால் ஆதரிக்க முடியும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் வலுப்படுத்தப்பட்ட திறனை பயன்படுத்தி பொறுப்புக்கூறல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு பங்களிப்பதற்கும் ஐநா உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
அறிமுகம்
‘கூலி’ விமர்சனம்
அறிமுகம்
‘கூலி’ விமர்சனம்
‘கூலி’ விமர்சனம்
‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம்.
சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்).
தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை.
ADVERTISEMENT


’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது.
வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை.
படம் முழுக்க ரஜினி, சவுபின் இருவருடைய ஆதிக்கம்தான். தனது அட்டகாசமான திரை ஆளுமையால் ரஜினிகாந்த், நட்சத்திர நெரிசல் மிகுந்த படத்தில் வழக்கம் போல ஜொலிக்கிறார். ரஜினியின் சின்னச் சின்ன மேனரிசங்கள் கூட ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ‘ரஜினி ஸ்பெஷல்’ தருணங்கள் படத்தின் நகர்வுக்கு வலுவூட்டுகின்றன.
சவுபினுக்கு முழுநீள நெகட்டிவ் கதாபாத்திரம். படம் முழுக்க தனது குரூரத் தன்மை கொண்ட கதாபாத்திரத்துக்கு சிறப்பான முறையில் நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் உபேந்திரா வரும் இடங்கள் மாஸ். ஆமீர்கான் கதாபத்திரம் ரோலக்ஸின் இன்னொரு வடிவம். சிறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.
லோகேஷின் படங்களில் தொடக்கம் முதல் வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென ஆக்ரோஷம் கொண்டு எழுந்து நிற்கும். உதாரணமாக ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம். அப்படி இதிலும் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. இணையத்தில் பெரும் வைரலான ‘மோனிகா’ பாடல் பொருந்தாத இடத்தில் வருகிறது. ஆனால் அதில் பூஜா ஹெக்டேவின் நடனம் சிறப்பு.
அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.
80களின் ரஜினியை ரசித்தவர்களுக்கு படத்தில் சிறப்பான ட்ரீட் உள்ளது. நேர்த்தியான முறையில் டீ-ஏஜிங் செய்த தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். லோகேஷ் படங்களில் டிரேட்மார்க் ஆக வரும் பழைய பாடல் இதில் சுத்தமாக எடுபடவில்லை.
படத்தின் முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், படத்தின் நீளம் காரணமாக கிட்டத்தட்ட அந்தக் காட்சி வரும்போதே பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுகின்றனர்.
மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், அது சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘ஆவரேஜ்’ ஆன படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன.
‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? | Coolie Movie Review - hindutamil.in