Aggregator

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months ago
வணங்காமுடி சொன்னது விஞ்ஞான ரீதியில் சரியான தகவல் தான். பொய்யல்ல. புகையிலைப் பயிர் நிலத்தின் பல போசணைப் பொருட்களை மிகக் குறுகிய காலத்தில் உறிஞ்சி நிலத்தைச் சக்கையாக்கி விடும் ஒரு பயிர். இதனைப் பணத்திற்காக விரைவில் வளர்க்க, மேலும் களை நீக்கிகளும், அசேதன உரங்களும் போடுவார்கள். இதனால், புகையிலைத் தோட்டத்திற்கு அயல் நிலங்கள் கூட மாசடையும் நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. கீழே இருக்கும் கட்டுரையில், புகையிலையைப் பணப்பயிராக வளர்க்கும் சிறிய நாடுகளில் உணவுப் பயிர்களுக்கான நிலங்கள் குறைந்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4669730/ ஆரோக்கியமான பயிர்களை விளைவித்து உள்ளூர் மக்களின் பசியை நீக்குவதை விட்டு விட்டு புகையிலையைப் பயிரிட்டு, பெரும் விலைக்கு விற்று, பல ஆயிரம் பேருக்கு புற்று நோயைக் கொடுத்து, பின்னர் வெளிநாட்டில் இருந்து அரிசியும், உணவுகளும் இறக்குவது எவ்வளவு புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months ago
நான் மூன்றாவதாநம்ப முடியவில்லை. போட்டியில் வென்ற கிருபன் அண்ணா, ஈழப்பிரியன் அங்கிளுக்கும் மற்றும் போட்டியைநடாத்திய கோசானுக்கும் வாழ்த்துக்கள். அவுஸ்ரேலியாவைத்தான் தெரிவு செய்தேன் ஆனாலும் தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி

வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்

3 months ago
சுக்ரோசு (sucrose) என்பது நாம் கரும்பில் இருந்து எடுக்கும் சீனியில் (sugar) இருப்பது. இந்த சுக்ரோசில் ஒரு குளுக்கோஸும் (glucose) ஒரு பிரக்ரோசும் (fructose) இருக்கும். உணவுக் கால்வாயில் சுக்ரோசு குளுக்கோசாகவும், பிரக்ரோசாகவும் உடைத்துத் தான் உடல் உறிஞ்சிக் கொள்ளும். குளூக்கோசை உடல் கலங்கள் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளும். பிரக்ரோசை ஈரல் மட்டும் பயன் படுத்திக் கொள்ளும். ஈரல், பிரக்ரோசைப் பயன்படுத்தி கொழுப்பை உற்பத்தி செய்து தன்னிடம் சேமித்துக் கொள்ளும், சில சந்தர்ப்பங்களில் இரத்தம் வழியாக ஏனைய உறுப்புகளுக்கும் அனுப்பி வைக்கும். இப்போது இதை யோசித்துப் பாருங்கள்: சீனியை அதிகம் எடுத்துக் கொண்டால், சுகர் வருத்தம் எனப்படும் நீரிழிவு உருவாக சீனியில் இருக்கும் குளூக்கோஸ் முதன்மைக் காரணமாக இருக்கிறது. ஆனால், சீனியில் இருக்கும் பிரக்ரோசு கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவுக்கு துணைக் காரணமாகவும், உடல் பருமன் அதிகரிப்பிற்கு (obesity) முதன்மைக் காரணமாகவும் இருக்கிறது. எனவே, பிரக்ரோசு "தீங்கற்றது" என்று சொல்வது சரியாகப் படவில்லை. ஆனால்: பழங்களில் இருக்கும் பிரக்ரோசை எடுத்துக் கொள்ளும் போது, அது நார்த்தன்மையோடு சேர்ந்து உள்ளெடுக்கப் படுவதால், குடலின் ஊடாக மெதுவாக நகர்ந்து செல்லும். உடலினுள் உறிஞ்சப் படும் வேகமும் குறைவாக இருக்கும். இதனால் பழங்களில் இருந்து கிடைக்கும் பிரக்ரோசு அளவாக எடுக்கப் படும் போது தீங்குகள் குறைவு. அளவாக எடுத்துக் கொள்வது முக்கியமானது. இதை நீரிழிவு நோயாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மைனஸ் 7 டிகிரி குளிரில் ஆற்றில் இறங்கிய விமானம் - 155 பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?

3 months ago
இந்த சம்பவத்தை வைத்து Sully எனும் படம் 2016 இல் வெளியானது. மிகவும் சுவரசியமான படம். Netflix இல் உள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கவும்.

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

3 months ago
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள் Published By: VISHNU 16 JUN, 2025 | 06:28 PM (நெவில் அன்தனி) சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது. இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன. இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது. இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாஹாட்டியிலும் சந்திக்கும். மற்றைய 5 அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும். இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும். இலங்கையின் போட்டிகள் செப். 30 - எதிர் இந்தியா - பெங்களூரு அக். 04 - எதிர் அவுஸ்திரேலியா - கொழும்பு அக். 11 - எதிர் இங்கிலாந்து - குவாஹாட்டி அக். 14 - எதிர் நியூஸிலாந்து - கொழும்பு அக். 17 - எதிர் தென் ஆபிரிக்கா - கொழும்பு அக். 20 - எதிர் பங்களாதேஷ் - கொழும்பு அக். 24 - எதிர் பாகிஸ்தான் - கொழும்பு முழு அட்டவணை (Full Schedule) https://www.virakesari.lk/article/217658

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

3 months ago

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண லீக் சுற்று: இந்தியாவில் 17 போட்டிகள், இலங்கையில் 11 போட்டிகள்

Published By: VISHNU

16 JUN, 2025 | 06:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மகளிர் கிரிக்கட் அரங்கில் உயரிதும் உன்னதம் வாய்ந்ததுமான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 13ஆவது அத்தியாயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பெங்களூருவில் செப்டெம்பர் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்குபற்றுவதன் காரணமாக இந்த வருட ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவிலும் இலங்கையிலும் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனினும் இந்தப் போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடு என்ற தனி உரிமம் இந்தியாவுக்கே இருக்கிறது.

இந்த வருடம் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன்அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய எட்டு அணிகள் பங்குபற்றுகின்றன.

defending_champions_australia_2021_w_wc.

இந்த எட்டு அணிகளும் ஒரே குழுவில் ஒன்றையொன்று எதிர்த்தாடும் வகையில் மகளிர் உலகக் கிண்ணம் நடத்தப்படுவதால் இலங்கையில் 11 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவை பெங்களூரிலும் 3ஆவது போட்டியில் இங்கிலாந்தை குவாஹாட்டியிலும் சந்திக்கும்.

மற்றைய 5 அணிகளை இலங்கை தனது சொந்த மண்ணில் எதிர்த்தாடும்.

இதேவேளை, பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட ஏழு போட்டிகளும் கொழும்பில் நடைபெறும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானும் இடையில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு காரணமாக இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் இரண்டு நாடுகளுக்கும் விஜயம் செய்வதில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றன. இதன் காரணமாகவே பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அரை இறுதிக்கும் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினால் ஒரு அரை இறுதிப் போட்டியும் இறுதிப் போட்டியும் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறினால் இறுதிச் சுற்று யாவும் இந்தியாவில் நடைபெறும்.

இலங்கையின் போட்டிகள்

செப். 30 - எதிர் இந்தியா - பெங்களூரு

அக். 04 - எதிர் அவுஸ்திரேலியா - கொழும்பு

அக். 11 - எதிர் இங்கிலாந்து - குவாஹாட்டி

அக். 14 - எதிர் நியூஸிலாந்து - கொழும்பு

அக். 17 - எதிர் தென் ஆபிரிக்கா - கொழும்பு

அக். 20 - எதிர் பங்களாதேஷ் - கொழும்பு

அக். 24 - எதிர் பாகிஸ்தான் - கொழும்பு

முழு அட்டவணை (Full Schedule)

icc_women_s_world_cup_schedule_1.jpg

icc_women_s_world_cup_schedule_2.jpg

https://www.virakesari.lk/article/217658

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
ஈரானிற்குள் வைத்து தாக்குதலை மேற்கொள்வதற்காக மொசாட் ஆளில்லா விமானங்களை எப்படி கொண்டு சென்றது? வோல்ஸ்ரீட் ஜேர்னல் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 04:00 PM ஈரான் மீதான தாக்குதல் இடம்பெறுவதற்கு முந்தைய மாதங்களில் இஸ்ரேல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ஈரானிற்குள் இரகசியமாக கொண்டு சென்றது என அவற்றை பயன்படுத்தி வான்தாக்குதலை ஈரான் தடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது என அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து நன்கறிந்த வட்டாரங்களின் தகவல்களின்படி சூட்கேஸ்கள் டிரக்குகள் டாங்கர்கள் மூலம் இஸ்ரேல் இந்த ஆளில்லா விமானங்களைவெடி பொருட்களுடன் ஈரானிற்குள் கொண்டு சென்றது என தெரிவித்துள்ளன. ஈரானிற்குள் வர்த்தக நோக்கங்களுடன் செல்லும் வாகனங்களை பயன்படுத்தி ஆளில்லா விமானங்களை மொசாட் கொண்டு சென்றது ஈரானிற்குள் இருந்த அதன் முகவர்கள் அவற்றை பொருத்தினார்கள். அதன் பின்னர் வார இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினரிடம் கையளித்தனர் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிற்குள் செயற்படும் குழுக்களின் தலைவர்களிற்கு முதலில் மூன்றாவது நாடொன்றில் வைத்து பயிற்சியளித்தது இஸ்ரேல், அதன் பின்னர் அவர்கள் ஈரானிற்குள் இருந்த தங்கள் அணிகளிற்கு உத்தரவுகளை வழங்கினார்கள். நடவடிக்கை ஆரம்பமானதும், இஸ்ரேலின் இரகசிய படைப்பிரிவினர் ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகளிற்கும் ஏவுகணை ஏவும் பகுதிகளிற்கு அருகிலும் நிலைகொண்டனர். வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்ததும் இஸ்ரேலின் சில அணியினர் ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறைகளை செயல் இழக்கச்செய்தனர், ஏனையவர்கள் ஏவுகணை செலுத்திகளை இலக்குவைத்தனர். ஏவுகணைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட பல டிரக்குகளும் தாக்கப்பட்டன. ஈரானால் ஏன் ஆரம்பத்தில் பதில் நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பதை இஸ்ரேலின் இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகின்றது. புதுமையான விதத்தில் செலவின்றி ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. ரஸ்யாவின் விமானங்களை தாக்குவதற்காக உக்ரைன் இவ்வாறான தந்திரோபாயங்களை பயன்படுத்திய சில நாட்களின் பின்னர் இஸ்ரேல் ஆளில்லா விமானங்கள இவ்வாறான விதத்தில் பயன்படுத்தியுள்ளது. ஈரான் தனது ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை இல்லாமல் செய்வதற்கு மொசாட்டின் ஆளில்லா விமான நடவடிக்கை உதவியது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. பயன்படுத்துவதற்கான நிலையில் காணப்பட்ட பல ஏவுகணைகளை இஸ்ரேலின் விசேட படைப்பிரிவுகள் அதிகாலையில் அழித்தன. இதன் பிறகே ஈரான் வெள்ளிக்கிழமை முதல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதனால் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளன எனினும் இஸ்ரேல் இதனை விட கடுமையான பதில் தாக்குதலை எதிர்பார்த்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மொசாட் இந்த நடவடிக்கைக்காக பல வருடங்களாக திட்டமிடல்களை மேற்கொண்டது என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், மற்றும் தனது விசேட படைப்பிரிகளை எங்கு நிறுத்தவேண்டும் போன்ற விடயங்கள் குறித்து திட்டமிடல்களில் இஸ்ரேல் பல வருடங்களாக ஈடுபட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217633

முதியோர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிட வாட்ஸ்அப் இலக்கம்!

3 months ago
16 JUN, 2025 | 04:58 PM முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும். இந்த வாட்ஸ்அப் இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217645

முதியோர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிட வாட்ஸ்அப் இலக்கம்!

3 months ago

16 JUN, 2025 | 04:58 PM

image

முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சினால் வாட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே முதியோர்களுக்கு எதிராக இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிட தேசிய முதியோர் செயலகத்தின் 0707 89 88 89 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தை பயன்படுத்த முடியும்.

இந்த வாட்ஸ்அப் இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படும் உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/217645

மைனஸ் 7 டிகிரி குளிரில் ஆற்றில் இறங்கிய விமானம் - 155 பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?

3 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், சித்தாநாத் கானு பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது. இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார். அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி. விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார். 2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது. விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன. அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார். இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும். சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை. அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது. மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார். அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார். விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன. விமானி சல்லன்பெர்கர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார் அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது. சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார். 1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o

மைனஸ் 7 டிகிரி குளிரில் ஆற்றில் இறங்கிய விமானம் - 155 பயணிகள் காப்பாற்றப்பட்டது எப்படி?

3 months ago

செஸ்லீ சல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூயார்க்கில் உள்ள ஹட்சன் ஆற்றில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சித்தாநாத் கானு

  • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து 155 பேருடன் ஒரு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவைக் கூட்டம் ஒன்று விமானத்தில் மோதியது.

இதையடுத்து, விமானத்தை விமான நிலையத்துக்கு திருப்புவது இனி சாத்தியமில்லை என்பதை விமானி உடனடியாக உணர்ந்தார். எனவே, அவர் விமானத்தை ஆற்றில் தரையிறக்கினார்.

அது, யுஎஸ் ஏர்வேஸ் 1549 எனும் விமானம். நியூயார்க்கின் ஹட்சன் ஆற்றில் விமானம் தரையிறக்கப்பட்டதால், இச்சம்பவம், 'மிராக்கிள் ஆஃப் ஹட்சன்' என்றும் அறியப்படுகிறது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர்தப்பினர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் விமானத்தை 'நீரில் தரையிறக்கிய' விமானி செஸ்லீ சல்லன்பெர்கர் என்கிற சல்லி.

விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்தன

செஸ்லீ சல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலத்த நீர் ஓட்டம் இருந்தபோதிலும், எந்த பயணிக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து 2016ம் ஆண்டில் 'சல்லி' ('Sully') எனும் படமும் வெளியானது, அதில் விமானி கதாபாத்திரத்தில் டாம் ஹேங்க்ஸ் நடித்திருந்தார்.

2009ம் ஆண்டு ஜனவரி 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்திலுருந்து வட கரோலினாவுக்கு விமானம் செல்லவிருந்தது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஹஸ்டன் நதியில் இறங்கியது.

விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே, அதில் பறவைக் கூட்டம் மோதியதால், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதடைந்தன.

அதன்பின், விமானத்தின் அனுபவம் வாய்ந்த விமானி சல்லன்பெர்கர், லாகார்டியா விமான நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் தான் ஹட்சன் நதியில் விமானத்தை தரையிறக்குவதற்கு முயற்சி செய்வதாக கூறினார்.

இது மிகவும் அசாதாரணமான, மிகவும் ஆபத்தானதாகும்.

சுமார் மூன்றரை நிமிடங்கள் பறவைகள் விமானத்தில் மோதிய பின், அந்த விமானம் நதியில் தரையிறக்கப்பட்டது. அப்போது, விமானத்தின் பின்பகுதி தான் முதலில் ஆற்றில் இறங்கியதால், தண்ணீர் விமானத்துக்குள் புகுந்தது. ஆனால், இது விமானத்தை துண்டுதுண்டாக நொறுக்கவில்லை.

அவசரகால கதவுகள் மற்றும் அதன் இறக்கை பகுதிகள் வாயிலாக பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறினர். அப்போது, விமானம் நீரில் மிதப்பதையும் அதன் இருபுறமும் உள்ள இறக்கையின் மேலே பயணிகள் நிற்பதையும் காட்டும் தனித்துவமான படத்தை இந்த உலகம் கண்டது.

மோசமான குளிரில் மீட்பு நடவடிக்கை

செஸ்லீ சுல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விமானம் ஹட்சன் ஆற்றில் தரையிறங்கியபோது உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

விமானம் ஆற்றில் தரையிறக்கப்பட்ட சமயத்தில், ஹட்சன் நதியில் தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

நியூ யார்க்கில் ஜனவரி மாதம் மிகவும் குளிராக இருக்கும். இச்சம்பவம் நடந்த நாளில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாக இருந்தது.

ஆனால், ஆற்றில் விமானம் இறங்கிய சில நிமிடங்களிலேயே அருகே இருந்த படகுகள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இந்த துரிதமான நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இத்தகைய அசாதாரணமான, ஆபத்தான முறையில் விமானம் நீரில் இறங்கியதால், ஒரேயொரு பயணிக்கும், விமானக்குழுவினர் ஐந்து பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. 78 பேருக்கு சிறியளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அச்சமயத்தில் செய்தி சேகரித்த பிபிசி செய்தியாளர், பயணிகளின் அதிர்ஷ்டத்தாலும் விமானியின் திறன் மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கைகளாலும் அனைவரும் உயிர் தப்பியதாக கூறியிருந்தார்.

அப்போதைய நியூ யார்க் மேயர் ப்ளூம்பெர்க் ஊடகத்திடம், "ஆற்றில் விமானத்தை தரையிறக்கி விமானி சிறப்பாக செயல்பட்டதாக" தெரிவித்தார்.

விமானம் ஆற்றில் இறங்கியவுடன், யாரேனும் விமானத்துக்குள் சிக்கியுள்ளனரா என முழு விமானமும் இருமுறை பரிசோதிக்கப்பட்டது.

விமானி சல்லன்பெர்கர் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிதும் பாராட்டப்பட்டார், ஆனால் சில கேள்விகளும் எழுப்பப்பட்டன.

விமானி சல்லன்பெர்கர்

செஸ்லீ சுல்லன்பெர்கர், மிராக்கிள் ஆஃப் ஹட்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தன்னுடைய துரிதமான முடிவுக்காக விமானி சல்லன்பெர்கர் இன்றும் அறியப்படுகிறார்

அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு இதுகுறித்து விசாரித்தது. ஆற்றில் விமானத்தை தரையிறக்கிய முடிவு சரியானதுதான் என, விசாரணையை அந்த அமைப்பு முடித்துவைத்தது.

சில நாட்களில், குறிப்பிட்ட விமானம் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் கரோலினாஸ் ஏவியேஷன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

விமானி சல்லன்பெர்கர் தன் 16வது வயதில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினார். அமெரிக்காவின் விமானப் படை அகாடமியில் 1973ம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவின் விமானப் படையில் போர் விமானியாக இணைந்தார்.

1980ம் ஆண்டில் தனியார் விமானப் போக்குவரத்து துறையில் விமானியாக இணைந்தார். அவசரகாலத்தில் விமானத்தை தரையிறக்குவதற்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட உதாரணமாக இச்சம்பவம் உள்ளது.

இந்த சம்பவத்துக்கு முன்பாக விமானி சல்லன்பெர்கர் 20,000 மணிநேர பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். சுமார் 40 ஆண்டுகள் அவர் விமானியாக இருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce9v97er3m0o

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி, ஊழலை ஒழித்தல் - கொரிய தூதுவரிடம் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

3 months ago
Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:49 PM அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில், அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும். அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கையாக, "தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை" (National Single Window) நிறுவுவது மிகவும் முக்கியமானது, அதாவது, நாட்டின் குடிமக்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றார். இந்தக் கூட்டத்தில், கொரியத் தூதுவர் லீ, கொரியக் கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். மேலும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரம் அதிக பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது, கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் யூன்ஜி கான், (Eunji Kan) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவ ஹேரத், மற்றும் பிரதிப்பணிப்பாளர் உதித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217627

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி, ஊழலை ஒழித்தல் - கொரிய தூதுவரிடம் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் தெரிவிப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 2

16 JUN, 2025 | 03:49 PM

image

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார்.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில்,

அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும்.

அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கையாக, "தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை" (National Single Window) நிறுவுவது மிகவும் முக்கியமானது, அதாவது, நாட்டின் குடிமக்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றார்.

இந்தக் கூட்டத்தில், கொரியத் தூதுவர் லீ, கொரியக் கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். மேலும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரம் அதிக பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது, கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் யூன்ஜி கான், (Eunji Kan) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவ ஹேரத், மற்றும் பிரதிப்பணிப்பாளர் உதித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

01.jpeg

https://www.virakesari.lk/article/217627

ஜனாதிபதி நிதியமூடாக கிளிநொச்சியில் வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

3 months ago
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:40 PM 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர். இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/217623

ஜனாதிபதி நிதியமூடாக கிளிநொச்சியில் வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு

3 months ago

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு

Published By: DIGITAL DESK 2

16 JUN, 2025 | 03:40 PM

image

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/217623

கலாநிதி கீதா கோபிநாத் இன்று இலங்கை செல்கின்றாா்.

3 months ago
இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் 16 JUN, 2025 | 12:39 PM சர்வதேச நாணய நிதியம் தற்போது முன்னெடுக்கும் திட்டத்தினை இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக மாற்றுவோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் அங்கீகாரம் மற்றும் உறுதிப்பாடு குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளார் - இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக இது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையை தொடருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்தது போல இந்த நேரம் வித்தியாசமானதாகயிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு தேவைப்படும் இறுதி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமாக இதனை மாற்றுவோம் என தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217608

ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள்

3 months ago
விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள் படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தரின் லாதம் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில் ரகசிய குறியீடுகளை படித்தவருக்கும் விந்தணுவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? விந்தின் விந்தையான மர்மங்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம். ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமான உண்மை. அதேபோல், உடலுறவின் போது, 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் வீரியத்துடன் சூறாவளியாய் நீந்திச் சென்று கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. விந்துக்களிடையிலான பந்தயத்தில் வென்று கருமுட்டையை அடையும் பயணத்தில், கோடிக்கணக்கிலான விந்தணுக்களில் வெகுசிலவே இலக்கை வெற்றிகரமாக சென்றடைகின்றன. இதுவரையில் தான் விந்து பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், விந்துக்களின் வீரியமான நீச்சல் பயணமானது அறிவியலுக்கும் மர்மமாகவே உள்ளது. "விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? அது எப்படி கருமுட்டையுடன் இணைந்து கருவாகிறது எனத் தெரியுமா? " என்று இங்கிலாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நாளமில்லா சுரப்பியியல் மற்றும் இனப்பெருக்க உயிரியலின் "கிளினிகல் ரீடர்" சாரா மார்டின்ஸ் டா சில்வா கேட்கிறார். விந்தணு கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், விந்தணு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இடப்பெயர்வு குறித்து கண்காணித்து வருகின்றனர். இதில் விந்தணுக்களின் தோற்றம் முதல், அது ஆணிடம் இருந்து கடந்து, பெண் உடலில் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தல் வரை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் விந்தணுக்கள் எவ்வாறு நீந்துகின்றன என்பதில் தொடங்கி, அவை பெண் உடலை அடையும் போது ஏற்படும் வியக்கத்தக்க பெரிய மாற்றங்கள் வரை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? "உடலுக்குள் வேறு எந்த உயிரணுவும் இவ்வளவு தனித்துவமான முறையில் அதன் அமைப்பை, வடிவத்தை மாற்றுவதில்லை" - ஆடம் வாட்கின்ஸ் "விந்தணுக்கள் பூமியில் உள்ள மற்ற அனைத்து செல்களிலிருந்தும் 'மிக மிக வேறுபட்டவை'" என்கிறார் மார்டின்ஸ் டா சில்வா. "அவை ஆற்றலை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை. மற்ற எல்லா செல்களிலும் இருக்கும் அதே வகையான செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் வழிமுறைகள் விந்துக்களில் இல்லை." விந்தணுக்களின் மிகப்பெரிய அளவிலான செயல்பாடுகள் காரணமாக, அவற்றுக்கு பிற செல்களை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. விந்து வெளியேறும் போதும், பெண்ணின் யோனி வழியாக கருமுட்டையை நோக்கி பயணிக்கும் போதும், கருத்தரித்தல் வரை, சுற்றுச்சூழல் குறிப்புகள் மற்றும் மாறுபட்ட ஆற்றல் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க, விந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டும். மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்கள் விந்தணுக்கள் மட்டுமே என்று மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார். "அதனால்தான், அவை அசாதாரணமான சிறப்பு வாய்ந்தவை" என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மிகச் சிறிய அளவின் காரணமாக அவற்றை அவதானிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். "இனப்பெருக்கம் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்றாலும், தெரியாத விசயங்கள் அதைவிட மிகவும் அதிகமாக உள்ளது." பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, மனித உடலில் மிகச்சிறிய செல்லாக இருந்தாலும், அசாதாரணமாக சிறப்பு வாய்ந்தது விந்தணு கிட்டத்தட்ட 350 ஆண்டுகால ஆராய்ச்சியில் இதுவரை விடையறியா வினா: விந்தணு என்றால் என்ன? "விந்தணு அதிசயமான விதத்தில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது," என இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி உடலியல் இணைப் பேராசிரியர் ஆடம் வாட்கின்ஸ் வியக்கிறார். "விந்தணுவை ஒரு வாலில் உள்ள டிஎன்ஏ பை என்றே நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால், இது மிகவும் சிக்கலான செல் என்றும், அதில் பல்வேறு வகையிலான மரபணு தகவல்களும் உள்ளதை உணரத் தொடங்கியுள்ளோம்." விந்தணு ஆராய்ச்சிகளின் தொடக்கப் புள்ளி விந்தணு பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் 1677 ஆம் ஆண்டில் தொடங்கியது, டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் வீட்டில் தயாரிக்கப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் ஒன்றில் விந்துக்களைப் பார்த்து, அவற்றை "விந்து விலங்குகள் " என்று அவர் அழைத்தார். 1683 ஆம் ஆண்டில், முன்பு நம்பப்பட்டது போல, முட்டையில்தான் அந்த மினியேச்சர் மற்றும் முழு மனிதனும் அடங்கியிருக்கவில்லை, ஆனால் மனிதன் "ஆண் விதையில் உள்ள ஒரு விலங்குக் கூட்டிலிருந்து" வருவதாக அவர் கருதினார். 1685 வாக்கில், ஒவ்வொரு விந்தணுவும், அதன் சொந்த "உயிருள்ள ஆன்மா" கொண்ட ஒரு முழு மினியேச்சர் நபரைக் கொண்டுள்ளது என்று அவர் முடிவு செய்தார். அதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1869 ஆம் ஆண்டில், சுவிஸ் மருத்துவரும் உயிரியலாளருமான ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்து தொடர்பான மற்றுமொரு முக்கிய விசயத்தைக் கண்டறிந்தார். நோயாளிகளின் கட்டுக்களை பிரித்து மருத்துவமனைகளின் குப்பையில் வீசப்படும் சீழ் நிறைந்த கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித ரத்த வெள்ளை அணுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் கண்டறிந்த விசயத்துக்கு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். "நியூக்ளின்" என்ற சொல் பின்னர் "நியூக்ளிக் அமிலம்" என்று மாற்றப்பட்டு இறுதியில் "டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்" என்றும் சுருக்கமாக "டிஎன்ஏ" என்றும் அழைக்கப்பட்டது. டிஎன்ஏ பற்றிய தனது ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பிய ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், ஆய்வின் ஆதாரமாக விந்தணுவைத் தேர்ந்தெடுத்தார். குறிப்பாக சால்மன் மீன்களின் விந்தணுக்கள், அவற்றின் பெரிய கருக்கள் காரணமாக "அணுக்கருப் பொருளின் சிறந்த மற்றும் சுவராஸ்யமான மூலமாக" இருந்தன. சால்மன் மீனின் விந்தணுக்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உறைபனி தட்பவெப்பநிலையில், ஆய்வக ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1874 ஆம் ஆண்டில், அவர் விந்தணுவின் ஒரு அடிப்படை கூறுகளை அடையாளம் கண்டார், அதற்கு "புரோட்டமைன்" என்று அவர் பெயரிட்டார். முதன்முதலாக விந்தணுக்களை உருவாக்கும் புரதங்கள் தொடர்பான உண்மை வெளியானது என்றே சொல்லலாம். இருப்பினும், அதற்கு பிறகு 150 ஆண்டுகள் கழித்தே, விந்தணுக்களின் முழு புரத உள்ளடக்கத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதற்குப் பிறகு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது என்ற போதிலும், இன்னும் பல விசயங்கள் மர்மமாகவே உள்ளன என்று வாட்கின்ஸ் கருதுகிறார். விஞ்ஞானிகள் கருவின் ஆரம்பகால வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதால், விந்துவானது, தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, எபிஜெனெடிக் தகவல்களையும் கடத்துகிறது என்பது புரிந்திருப்பதாக அவர் கூறுகிறார். எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது "பெண் பரிணாமம்தான் இந்த அமைப்பை இயக்குகிறது என்பது தெரியவந்துள்ளது; ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கிறார்கள்" - ஸ்காட் பிட்னிக் ஆண் பருவமடையும்போது அவரின் உடலில் உருவாகத் தொடங்கும் விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் இருக்கும் செமினிஃபெரஸ் குழாய்கள் எனப்படும் நாளங்களில் உருவாகின்றன. "விந்தணுக்கள் உருவாகும் விரைப்பைக்குள், அது வேறு எதையும் போலவே தோற்றமளிக்கும் ஒரு வட்டமான செல்லாகவே தொடங்குகிறது," என்று வாட்கின்ஸ் கூறுகிறார். "பின்னர் அது வியத்தகு மாற்றத்துக்கு உட்படுகிறது, அது வால் கொண்டதாக உருமாறுகிறது. உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ தனது வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லை." ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன. விந்தணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . 1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, கருவறைக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, 17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார் ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டுக்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு. விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும். மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை. இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும் எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன. நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும். பழ ஈ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது . "சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம் உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்." பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும். "பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றுக்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்." பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார். ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்." பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார். இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார். விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவுக்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்." கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை. "நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்." ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி, விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது." விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9098y8p32o