Aggregator

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாகும் - ஜனாதிபதி

3 months ago
Published By: VISHNU 16 JUN, 2025 | 06:58 PM 2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்காக, மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, திங்கட்கிழமை (16) முற்பகல் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற "இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" (Sri Lanka's Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில் பிரதான உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் மேலோட்டமான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகியுள்ள போதிலும், அந்த நிலைமையை பலமாக நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய பொருளாதார மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நாடு பல பொருளாதார வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் இலங்கையின் அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி (ECF) வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர். இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை, சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாடாக, நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக ஆழமான நெருக்கடியின் விளைவுகளை நாம் எதிர்கொண்டோம். அதன்போது நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் இருந்தன. பழைய தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையில் தொடர்வதா, அல்லது நமது நாட்டை மீண்டும் வெற்றிபெறச் செய்ய புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா, என்ற இரண்டு விடயங்கள் நமது முன்னே இருந்தன. இன்று, நாம் தேர்ந்தெடுத்த பாதை நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும். அதில், அரசியல் அதிகாரத்திற்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அதேபோல், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. மேலும், இந்த மறுசீரமைப்புகளின்போது,பாதிக்கப்பட்ட மக்களுக்கே இதில் மிகப்பெரிய பங்கு இருந்தது. அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்தனர். இன்று, ஒரு நாடாக நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய முடிந்தது, மேலும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு டொலரை நிலையாக பேண முடிந்தது. எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்டவும், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு கையிருப்புக்களை உருவாக்கவும் முடிந்தது. இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக் காரணிகளில் மிகவும் வலுவான நிலைபேற்றுத் தன்மையை பார்க்க முடிகிறது. ஆனால் நெருக்கடியின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறவில்லை. உள்நாட்டில் நெருக்கடி இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மேலோட்டமாக ஸ்திரத்தன்மை இருந்தாலும், அந்த நிலைமையை ஸ்திரப்படுத்தவும், பொருளாதாரத்தை, அது இருக்கும் இடத்திலிருந்து உயர்த்தவும் புதிய மறுசீரமைப்புகளும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களும் அவசியம் ஆகும். பல முக்கியமான காரணிகள் குறித்து நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், இந்த நெருக்கடியை வெற்றி கொள்ளவும் ஒரு வலுவான அரச சேவை அவசியம். ஆனால் அந்த அரச சேவைக்காக நாம் சுமக்கும் செலவு மிகப்பெரியது. இன்று, நாம் சுமக்கக்கூடாத ஒரு செலவைச் சுமக்கிறோம். எனவே, வலுவான அரச சேவையை உருவாக்குவதோடு, பிரஜைகளுக்கு மிகக் குறைந்த செலவில் அந்த சேவையை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. சில அரச நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அந்த அரச நிறுவனங்கள் அந்தக் கால சமூக-பொருளாதார சூழ்நிலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டமைக்கப்பட்டன. இன்று, அந்தப் பொருளாதார மற்றும் சமூக நிலைமை மாறிவிட்டது. சில நிறுவனங்களின் இருப்பு கூட தேவையற்றுப்போய் விட்டது. எனவே, நாம் அதைச் செய்ய வேண்டும். மேலும், ஒரே செயல்பாட்டிற்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை நாம் இணைக்க வேண்டும். மேலும், சில அரச நிறுவனங்களின் நோக்கமும் இலக்குகளும் மாற்றப்பட வேண்டும். எனவே, இந்த ஸ்திரத்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல, அரச கட்டமைப்பின் வலுவான மாற்றம் தேவை. அதை மிகவும் வலுவாக செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது அரச பொறிமுறை முழுவதும் பரவலாக இருக்கும் செயற்திறனின்மை, குறிப்பாக ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். அண்மைய கால செய்தி அறிக்கைகளைப் பார்க்கும்போது, நமது நாடு எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். பொலிஸாருக்குப் பயந்து பொலிஸ் மா அதிபர் ஒளிந்து கொண்டிருக்கிறார். சிறைச்சாலைகள் ஆணையாளர் சிறையில் அடைக்கப்படுகிறார். போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியானால் நமது அரச கட்டமைப்பு எங்கே செல்கிறது? திறமையின்மை, இலஞ்சம் மற்றும் ஊழல் இந்த நெருக்கடிக்கு ஒரு பெரிய பாதையை உருவாக்கின. இலஞ்சம் என்பது அந்த நேரத்தில் நடக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. இலஞ்சம் மற்றும் ஊழல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மறுபுறம், இலஞ்சம் மற்றும் ஊழல் நமக்கு தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தியது. அவை இன்றும் நமக்கு ஒரு சுமையாக மாறிவிட்டன. எனவே, இந்த சூழ்நிலையை விட்டு மீண்டு வர, அரச நிறுவனங்களை திறமையாக்குவதும், இலஞ்சம் மற்றும் ஊழலை தீர்க்கமாக தோற்கடிப்பதும் அவசியம். ஒரு நாடாக நாங்கள் அதற்கு உறுதிபூண்டுள்ளோம். நமது அரச நிறுவனங்கள் , குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான முக்கியமான பகுதிகளில், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது வலுசக்தி சந்தை மற்றும் நிதிச் சந்தை மிகச் சிறிய சந்தைகள் ஆகும். எனவே, நம்மைப் போன்ற ஒரு நாட்டில், ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது. ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்தை எதிர்கொள்ள, அரசாங்கம் சில பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது. குறிப்பாக மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பொருளாதாரத்துடனும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அந்த நிறுவனங்களை நடத்துவதில் பொதுமக்கள் சுமையைச் சுமக்கக்கூடாது. எனவே, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலைகள் சீர் செய்யப்பட வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைப் பொறுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையை பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அதேபோன்று, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை வலுப்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். பிரஜைகள் அந்த சேவைகளின் செலவை செலுத்தி, அந்த சேவைகளைப் பெற வேண்டும். இருப்பினும், சில குறைந்த வருமானம் பெறுவோர் இருப்பதையும் நாங்கள் அறிவோம். பொருளாதார மறுசீரமைப்புகளின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை காத்திருக்கச் சொல்ல நமக்கு உரிமை இல்லை. பலன்கள் அவர்களுக்கு செல்லும் வரை நாம் அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நீதியான அரசின் பொறுப்பு. எந்த நேரத்திலும், பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடாத ஒரு பிரிவினர் சமூகத்தில் உள்ளனர். முதியோராக இருக்கலாம், ஊனமுற்றவர்களாக இருக்கலாம், அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்து பொருளாதாரத்தில் இணைய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபடாத மற்றும் இணைக்க முடியாத ஒரு சமூகம் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த சமூகத்தைப் பற்றி குறிப்பிடாமல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இது மனிதநேயம், நீதி மற்றும் நியாயம் பற்றிய கேள்வி. எனவே, இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்களிடம் உள்ளது. இது அரசியல்மயமாக்கப்பட்ட மானியத் திட்டம் அல்ல. அதை சமூக நீதி, சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பு பற்றிய கேள்வியாகக் கருத நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் அனுபவத்தின்படி, நிவாரணத் திட்டங்கள் எப்போதும் அரசியல்மயமாக்கப்பட்ட திட்டங்களாக மாறிவிட்டன. அரசியலுக்காக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்பதை நான் பொறுப்புடன் உங்களுக்குச் கூறுகிறேன். மறுபுறம், பல துறைகளில் நிலையான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம். ஆனால் இலக்குகளை விரைவாக அடைய வேண்டிய பல பகுதிகள் இன்னும் உள்ளன. முதலில், நாம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க வேண்டும். கடந்த பல தசாப்தங்களைப் பார்க்கும்போது, அந்த குறிப்பிட்ட தருணத்தில், உலகின் பொருளாதார இயல்புடன், பொருளாதார செயற்பாடுகளையும் நாம் பார்த்தால், போதுமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கத் தவறிய ஒரு நாடு நாம். எனவே, போதுமான அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஈர்க்க வேண்டும். ஆனால் அதை மீண்டும் கொண்டு வருவது ஒரு சவாலாகும். நாம் மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இடத்தில் இல்லை. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து மீள்வதற்கு நாம் போராடும் இடத்தில் இருக்கிறோம். நமது நிதிச் சந்தைகள் மீதான நம்பிக்கை வீழ்ச்சி கண்டது. அன்றாடப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டொலர் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருந்தது. அதிலிருந்து நாம் மீண்டு வருகிறோம். ஆனால், முதலீட்டை ஈர்க்க அது போதுமானதா? முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முதலீட்டிற்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குவதிலும் சில சலுகைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். நமது நாட்டில் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய உற்பத்தியையும் எவ்வாறு மீட்டெடுப்பது? என்ற ஒரு கேள்வி உள்ளது. அண்மைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஏராளமான சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சியடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் 90% க்கும் அதிகமானோர் தங்கள் நிர்வாகப் பிழைகள் அல்லது வணிகப் பிழைகள் காரணமாக பாதிக்கப்படவில்லை, மாறாக பொதுவான பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை அவர்கள் அனுபவித்ததால் பாதிக்கப்பட்டனர். எனவே, அவற்றை மீட்டெடுக்க நாம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து மேலும் ஒரு படி முன்னேற, நாம் இந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார விரிவாக்கமும் நம் நாட்டில் முக்கியமானவை. கிராமப்புற மக்கள் பொருளாதாரத்திலிருந்து நீங்கியுள்ளனர். பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த தரவுகளைப் பற்றி நாம் நிறைய பேசலாம். ஆனால் தரவுகளில் பிரதிபலிக்காத ஒரு உண்மை உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணிகள் மக்களுக்கு நல்ல பலன்களைக் கொண்டுவர வேண்டுமென்றால், பொருளாதார விரிவாக்கம் அவசியம். எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், தொலைதூர கிராமங்களின் பிரஜைகளை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் தேவையான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாம் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே, தற்போதைய பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்தி, இந்த நிலைமையை இன்னும் வலுப்படுத்தும் ஒரு பெரிய பணி நமக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவிற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எமது மக்களின் பொறுத்துக்கொள்ளும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல, சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்னெடுக்கும் கடைசித் திட்டமாக இதை மாற்றுவதே எமது நோக்கம். அதற்கான எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் எங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் நாட்டின் இறையாண்மை நிலைத்திருக்காது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் சுயாட்சி நிலைத்திருக்காது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமது சுயாட்சியையும் இறையாண்மையையும் இழந்துவிட்டோம். எனவே, இதன் இறுதி விளைவாக, ஒரு தேசமாக நாம் சுயாட்சியையும் இறையாண்மையையும் பெற வேண்டும். அதற்காக ஒரு கடுமையான முயற்சி உள்ளது. விட்டுக்கொடுக்காத ஒரு முயற்சி உள்ளது. அதற்காக நிறைவு செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அந்தப் பணியை செய்வதற்கு அரசியல் அதிகாரமாக எமது பங்களிப்பும், அரச அதிகாரிகள் என்ற வகையில் உங்கள் பொறுப்பு மற்றும் பொதுமக்களாக உங்கள் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். https://www.virakesari.lk/article/217660

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாகும் - ஜனாதிபதி

3 months ago

Published By: VISHNU

16 JUN, 2025 | 06:58 PM

image

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியின் போது ஒரு நாட்டின் சுயாட்சி மற்றும் இறையாண்மையைப் பேண முடியாது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு தேசமாக சுயாட்சி மற்றும் இறையாண்மையை அடைவதே, இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதற்காக, மிகவும் கடினமான மற்றும் கைவிடாத முயற்சியில் தனது தலைமையிலான அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், அரச அதிகாரிகள் மற்றும் பிரஜைகள் என அனைவரின் ஆதரவையும் இதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, திங்கட்கிழமை (16) முற்பகல் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற "இலங்கையின் மீட்சிக்கான பாதை: கடன் மற்றும் நிர்வாகம்" (Sri Lanka's Road to Recovery: Debt and Governance) என்ற கருத்தரங்கில் பிரதான உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் மேலோட்டமான பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாகியுள்ள போதிலும், அந்த நிலைமையை பலமாக நிலைநிறுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதிய பொருளாதார மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் நாடு பல பொருளாதார வெற்றிகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி நாட்டை பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியாக வெற்றிபெறச் செய்வதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் இலங்கையின் அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி (ECF) வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை,

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாடாக, நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிக ஆழமான நெருக்கடியின் விளைவுகளை நாம் எதிர்கொண்டோம். அதன்போது நாம் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் இருந்தன. பழைய தோல்வியுற்ற மற்றும் அழிவுகரமான பாதையில் தொடர்வதா, அல்லது நமது நாட்டை மீண்டும் வெற்றிபெறச் செய்ய புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பதா, என்ற இரண்டு விடயங்கள் நமது முன்னே இருந்தன.

இன்று, நாம் தேர்ந்தெடுத்த பாதை நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க முடியும். அதில், அரசியல் அதிகாரத்திற்கு ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளது. அதேபோல், மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது.

மேலும், இந்த மறுசீரமைப்புகளின்போது,பாதிக்கப்பட்ட மக்களுக்கே இதில் மிகப்பெரிய பங்கு இருந்தது. அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பெரும் தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் செய்தனர்.

இன்று, ஒரு நாடாக நாம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம். கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய முடிந்தது, மேலும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு டொலரை நிலையாக பேண முடிந்தது. எதிர்பார்க்கப்படும் அரச வருமானத்தை ஈட்டவும், எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு கையிருப்புக்களை உருவாக்கவும் முடிந்தது. இவ்வாறு, மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக் காரணிகளில் மிகவும் வலுவான நிலைபேற்றுத் தன்மையை பார்க்க முடிகிறது. ஆனால் நெருக்கடியின் ஆழமான காயங்கள் இன்னும் ஆறவில்லை. உள்நாட்டில் நெருக்கடி இன்னும் நீங்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, மேலோட்டமாக ஸ்திரத்தன்மை இருந்தாலும், அந்த நிலைமையை ஸ்திரப்படுத்தவும், பொருளாதாரத்தை, அது இருக்கும் இடத்திலிருந்து உயர்த்தவும் புதிய மறுசீரமைப்புகளும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களும் அவசியம் ஆகும். பல முக்கியமான காரணிகள் குறித்து நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், இந்த நெருக்கடியை வெற்றி கொள்ளவும் ஒரு வலுவான அரச சேவை அவசியம். ஆனால் அந்த அரச சேவைக்காக நாம் சுமக்கும் செலவு மிகப்பெரியது. இன்று, நாம் சுமக்கக்கூடாத ஒரு செலவைச் சுமக்கிறோம். எனவே, வலுவான அரச சேவையை உருவாக்குவதோடு, பிரஜைகளுக்கு மிகக் குறைந்த செலவில் அந்த சேவையை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. சில அரச நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம்.

அந்த அரச நிறுவனங்கள் அந்தக் கால சமூக-பொருளாதார சூழ்நிலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டமைக்கப்பட்டன. இன்று, அந்தப் பொருளாதார மற்றும் சமூக நிலைமை மாறிவிட்டது. சில நிறுவனங்களின் இருப்பு கூட தேவையற்றுப்போய் விட்டது. எனவே, நாம் அதைச் செய்ய வேண்டும். மேலும், ஒரே செயல்பாட்டிற்கு பல அரச நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களை நாம் இணைக்க வேண்டும்.

மேலும், சில அரச நிறுவனங்களின் நோக்கமும் இலக்குகளும் மாற்றப்பட வேண்டும். எனவே, இந்த ஸ்திரத்தன்மையை முன்னோக்கி எடுத்துச் செல்ல, அரச கட்டமைப்பின் வலுவான மாற்றம் தேவை. அதை மிகவும் வலுவாக செயல்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். நமது அரச பொறிமுறை முழுவதும் பரவலாக இருக்கும் செயற்திறனின்மை, குறிப்பாக ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். அண்மைய கால செய்தி அறிக்கைகளைப் பார்க்கும்போது, நமது நாடு எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

பொலிஸாருக்குப் பயந்து பொலிஸ் மா அதிபர் ஒளிந்து கொண்டிருக்கிறார். சிறைச்சாலைகள் ஆணையாளர் சிறையில் அடைக்கப்படுகிறார். போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள். அப்படியானால் நமது அரச கட்டமைப்பு எங்கே செல்கிறது? திறமையின்மை, இலஞ்சம் மற்றும் ஊழல் இந்த நெருக்கடிக்கு ஒரு பெரிய பாதையை உருவாக்கின.

இலஞ்சம் என்பது அந்த நேரத்தில் நடக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் அல்ல. இலஞ்சம் மற்றும் ஊழல் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மறுபுறம், இலஞ்சம் மற்றும் ஊழல் நமக்கு தேவையற்ற திட்டங்களை செயல்படுத்தியது. அவை இன்றும் நமக்கு ஒரு சுமையாக மாறிவிட்டன. எனவே, இந்த சூழ்நிலையை விட்டு மீண்டு வர, அரச நிறுவனங்களை திறமையாக்குவதும், இலஞ்சம் மற்றும் ஊழலை தீர்க்கமாக தோற்கடிப்பதும் அவசியம். ஒரு நாடாக நாங்கள் அதற்கு உறுதிபூண்டுள்ளோம்.

நமது அரச நிறுவனங்கள் , குறிப்பாக பொருளாதாரம் தொடர்பான முக்கியமான பகுதிகளில், அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது வலுசக்தி சந்தை மற்றும் நிதிச் சந்தை மிகச் சிறிய சந்தைகள் ஆகும்.

எனவே, நம்மைப் போன்ற ஒரு நாட்டில், ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது. ஏகபோகத்தை உருவாக்கும் ஆபத்தை எதிர்கொள்ள, அரசாங்கம் சில பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடாது.

குறிப்பாக மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்கள் பொருளாதாரத்துடனும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையுடனும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் மீது அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். அந்த நிறுவனங்களை நடத்துவதில் பொதுமக்கள் சுமையைச் சுமக்கக்கூடாது. எனவே, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலைகள் சீர் செய்யப்பட வேண்டும். ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைப் பொறுத்து, ஒரு யூனிட் மின்சாரத்தின் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையை பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அதேபோன்று, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்குத் தேவையான பொறிமுறைகளை வலுப்படுத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். பிரஜைகள் அந்த சேவைகளின் செலவை செலுத்தி, அந்த சேவைகளைப் பெற வேண்டும். இருப்பினும், சில குறைந்த வருமானம் பெறுவோர் இருப்பதையும் நாங்கள் அறிவோம். பொருளாதார மறுசீரமைப்புகளின் பலன்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை காத்திருக்கச் சொல்ல நமக்கு உரிமை இல்லை. பலன்கள் அவர்களுக்கு செல்லும் வரை நாம் அந்த மக்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நீதியான அரசின் பொறுப்பு. எந்த நேரத்திலும், பொருளாதார செயல்பாட்டில் ஈடுபடாத ஒரு பிரிவினர் சமூகத்தில் உள்ளனர்.

முதியோராக இருக்கலாம், ஊனமுற்றவர்களாக இருக்கலாம், அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்து பொருளாதாரத்தில் இணைய முடியாமல் போகலாம். இதன் காரணமாக, பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபடாத மற்றும் இணைக்க முடியாத ஒரு சமூகம் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும்.

அந்த சமூகத்தைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு. அந்த சமூகத்தைப் பற்றி குறிப்பிடாமல் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. இது மனிதநேயம், நீதி மற்றும் நியாயம் பற்றிய கேள்வி. எனவே, இலக்கு வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை எங்களிடம் உள்ளது. இது அரசியல்மயமாக்கப்பட்ட மானியத் திட்டம் அல்ல. அதை சமூக நீதி, சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறுப்பு பற்றிய கேள்வியாகக் கருத நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் அனுபவத்தின்படி, நிவாரணத் திட்டங்கள் எப்போதும் அரசியல்மயமாக்கப்பட்ட திட்டங்களாக மாறிவிட்டன. அரசியலுக்காக சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்பதை நான் பொறுப்புடன் உங்களுக்குச் கூறுகிறேன்.

மறுபுறம், பல துறைகளில் நிலையான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம். ஆனால் இலக்குகளை விரைவாக அடைய வேண்டிய பல பகுதிகள் இன்னும் உள்ளன. முதலில், நாம் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க வேண்டும். கடந்த பல தசாப்தங்களைப் பார்க்கும்போது, அந்த குறிப்பிட்ட தருணத்தில், உலகின் பொருளாதார இயல்புடன், பொருளாதார செயற்பாடுகளையும் நாம் பார்த்தால், போதுமான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கத் தவறிய ஒரு நாடு நாம். எனவே, போதுமான அந்நிய நேரடி முதலீட்டை நாம் ஈர்க்க வேண்டும்.

ஆனால் அதை மீண்டும் கொண்டு வருவது ஒரு சவாலாகும். நாம் மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட இடத்தில் இல்லை. வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்திலிருந்து மீள்வதற்கு நாம் போராடும் இடத்தில் இருக்கிறோம். நமது நிதிச் சந்தைகள் மீதான நம்பிக்கை வீழ்ச்சி கண்டது. அன்றாடப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டொலர் கையிருப்பு மிகக் குறைந்த அளவில் இருந்தது. அதிலிருந்து நாம் மீண்டு வருகிறோம்.

ஆனால், முதலீட்டை ஈர்க்க அது போதுமானதா? முதலீட்டிற்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முதலீட்டிற்கு கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குவதிலும் சில சலுகைகளை வழங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம்.

நமது நாட்டில் தேசிய பொருளாதாரத்தையும் தேசிய உற்பத்தியையும் எவ்வாறு மீட்டெடுப்பது? என்ற ஒரு கேள்வி உள்ளது. அண்மைய பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஏராளமான சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் வீழ்ச்சியடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்களில் 90% க்கும் அதிகமானோர் தங்கள் நிர்வாகப் பிழைகள் அல்லது வணிகப் பிழைகள் காரணமாக பாதிக்கப்படவில்லை, மாறாக பொதுவான பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை அவர்கள் அனுபவித்ததால் பாதிக்கப்பட்டனர். எனவே, அவற்றை மீட்டெடுக்க நாம் சில நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையிலிருந்து மேலும் ஒரு படி முன்னேற, நாம் இந்த பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியும் பொருளாதார விரிவாக்கமும் நம் நாட்டில் முக்கியமானவை. கிராமப்புற மக்கள் பொருளாதாரத்திலிருந்து நீங்கியுள்ளனர். பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். தலைநகரில் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த தரவுகளைப் பற்றி நாம் நிறைய பேசலாம். ஆனால் தரவுகளில் பிரதிபலிக்காத ஒரு உண்மை உள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணிகள் மக்களுக்கு நல்ல பலன்களைக் கொண்டுவர வேண்டுமென்றால், பொருளாதார விரிவாக்கம் அவசியம்.

எனவே, பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், தொலைதூர கிராமங்களின் பிரஜைகளை பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் தேவையான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாம் தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

எனவே, தற்போதைய பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்தி, இந்த நிலைமையை இன்னும் வலுப்படுத்தும் ஒரு பெரிய பணி நமக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவிற்கும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் எமது மக்களின் பொறுத்துக்கொள்ளும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நான் முன்பு கூறியது போல, சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முன்னெடுக்கும் கடைசித் திட்டமாக இதை மாற்றுவதே எமது நோக்கம். அதற்கான எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் எங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கும் எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் நாட்டின் இறையாண்மை நிலைத்திருக்காது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த இடத்தில் சுயாட்சி நிலைத்திருக்காது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நமது சுயாட்சியையும் இறையாண்மையையும் இழந்துவிட்டோம்.

எனவே, இதன் இறுதி விளைவாக, ஒரு தேசமாக நாம் சுயாட்சியையும் இறையாண்மையையும் பெற வேண்டும். அதற்காக ஒரு கடுமையான முயற்சி உள்ளது. விட்டுக்கொடுக்காத ஒரு முயற்சி உள்ளது.

அதற்காக நிறைவு செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அந்தப் பணியை செய்வதற்கு அரசியல் அதிகாரமாக எமது பங்களிப்பும், அரச அதிகாரிகள் என்ற வகையில் உங்கள் பொறுப்பு மற்றும் பொதுமக்களாக உங்கள் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன்.

https://www.virakesari.lk/article/217660

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறை!

3 months ago
எங்களைக் காப்பாற்றுங்கள்! கண்ணீர் வடிக்கும் முன்னாள் அமைச்சர்கள் தங்களைக் கைவிடாமல் காப்பாற்றுமாறு முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கதறியழத் தொடங்கியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது 14 ஆயிரம் கரம் பலகைகள் மற்றும் 11 ஆயிரம் டாம் விளையாட்டுப் பலகைகள் என்பவற்றைக் கொள்வனவு செய்து முறைகேடான வழியில் விநியோகித்த குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகளும், மஹிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹிந்தானந்தவின் மைத்துனரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான அனுராத ஜயரத்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்றிருந்த சமயம், அவர்கள் இருவரும் அழுதுபுலம்பியுள்ளனர். தங்களைக் கைவிடாமல் காப்பாற்றி வெளியில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கண்ணீர் வடித்து கதறியழுதுள்ளனர். https://tamilwin.com/article/sri-lanka-political-crisis-npp-1750086103

அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்

3 months ago
பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES படக்குறிப்பு, அணு குண்டு தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி 16 ஜூன் 2025, 02:00 GMT இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையைச் சேதப்படுத்தியதுடன் மூத்த படைத்தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது. தங்கள் நாட்டில் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக உள்ள அணு உலைகளை இஸ்ரேல் ''பொறுப்பற்ற முறையில்'' தாக்கியுள்ளதாக, இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டித்துள்ளார். பதிலடியாக இரானும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. உலகளாவிய அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான, சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் நடான்ஸ் அணு உலை இயங்கி வந்ததாகவும், அங்கு தாக்குதல் நடத்தியது ''கதிர்வீச்சு பேரழிவு'' ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அப்பாஸ் அராக்சி கூறினார். ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார். "இரானைத் தடுக்கவில்லை என்றால், அது குறுகிய நேரத்தில் அணுகுண்டை உருவாக்கக் கூடிய நிலைக்குச் செல்லும்" என கூறிய அவர், இதன் காரணமாகவே இஸ்ரேல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறினார். "அது ஒரு ஆண்டாக இருக்கலாம். சில மாதங்களுக்குள்ளேயும் இருக்கலாம்" என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டாலும், அதை அந்நாடு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரானில் டஜன் கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா? அணு குண்டு வெடிப்பைத் தூண்டும் கருவி, யுரேனியம் உலோக கோர் (Uranium metal core) போன்ற ஒரு அணுகுண்டுக்கான முக்கிய பாகங்களைத் தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது. "இரான் அணு அயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது என நெதன்யாகு கூறினாலும் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை" என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் அணு ஆயுத பரவல் தடுப்பு கொள்கையின் இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறினார். அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை ஏற்கெனவே பெரும்பாலும் இரான் உருவாக்கிவிட்டது, பல மாதங்களாக இதே நிலையில்தான் இரான் உள்ளது என அவர் கூறினார். ''இரானால் சில மாதங்களில் எளிய அடிப்படை வடிவிலான அணுகுண்டை தயாரிக்க முடியும் என்ற கணிப்பும் புதிது அல்ல'' இரானின் சில நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அணு ஆயுதத்தை முழுமையாக உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய பணியில் இரான் இன்னும் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக அவர் கூறினார். இரான் யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவு அதிகம் செறிவூட்டியுள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்காத ஒரு நாடு இப்படிச் செய்வது விசித்திரமானது என, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை இன்னும் நம்புவதாக அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார். இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது மட்டுமே நெதன்யாகுவின் ஒரே கவலை என்றால், அது குறித்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கலாம் மற்றும் தொடக்கத்திலேயே இரானின் அனைத்து முக்கிய அணு ஆலைகளைத் தாக்கியிருக்கலாம் என டேவன்போர்ட் கூறினார். இரான் 60% தூய தன்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்து வைத்துள்ளது என்றும் அணு ஆயுதம் தயாரிக்க 90% தூய தன்மை தேவைப்படும் நிலையில், அதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது என்றும், அது குவித்து வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் 9 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இது அணு ஆயுத பரவல் தடைக்கு அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அந்த அமைப்பு கூறியது. நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இரான் அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என தங்களால் சொல்ல முடியாது எனவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட யுரேனியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறித்த விசாரணைக்கு இரான் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை தெரிந்தது என்ன? தனது அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அணு ஆயுதங்களை உருக்க நினைத்ததில்லை எனவும் இரான் கூறுகிறது. ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகளில் இரான் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இரானில் பத்தாண்டுகளாக விசாரணை நடத்திய சர்வதேச அணுசக்தி முகமை கண்டறிந்தது. பிராஜக்ட் அமத் எனும் ரகசிய அணு திட்டத்தை இரான் 2003-ல் நிறுத்தும் வரை, 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்த செயல்பாடுகள் இருந்தது. 2009 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் ஃபோர்டோ நிலத்தடி செறிவூட்டல் வசதியின் கட்டுமானத்தை வெளிப்படுத்தியது வரை, இரான் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஆனால் அதன் பிறகு அணு ஆயுத மேம்பாடு குறித்த "நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை'' என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியது. 2015ஆம் ஆண்டில், இரான் 6 உலக வல்லரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் கீழ் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் கடுமையான கண்காணிப்பை அனுமதித்தது. இதற்குப் பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. இந்த அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் அறிவித்த டிரம்ப், இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். இரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் அளவுக்கு இந்த ஒப்பந்தம் வலிமையாக இல்லை என அவர் கூறினார். இரான் கட்டுப்பாடுகளை, குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறி இதற்குப் பதிலடி கொடுத்தது. அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஃபோர்டோவில் உள்ள அணு உலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த செறிவூட்டலும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுவதை மீண்டும் தொடங்கியது. வியாழக்கிழமை, சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகளின் போர்ட் ஆஃப் கவர்னர்ஸ் குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் அதன் அணு ஆயுதப் பரவல் தடையை மீறுவதாக அறிவித்தது. 'பாதுகாப்பான இடத்தில்' ஒரு புதிய யுரேனியம் செறிவூட்டல் வசதியை அமைப்பதன் மூலமும், ஃபோர்டோ ஆலையில் உள்ள பழைய யுரேனியம் செறிவூட்டல் இயந்திரங்களை புதிய மற்றும் வேகமாகச் செயல்படும் இயந்திரங்களாக மாற்றுவதன் மூலம் இதற்குப் பதிலடி தரப்படும் என இரான் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது' இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பு என்ன? வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் தனது முதல் கட்ட வான்வழித் தாக்குதல்கள் நடான்ஸில் உள்ள நிலத்தடி அமைப்புகளையும், முக்கியமான உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியதாகக் கூறியது. நடான்ஸில் தரைக்கு மேலே உள்ள பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலை மற்றும் மின்சார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகச் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். நிலத்தடி கட்டமைப்பில் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், மின்சார துண்டிப்பு அங்குள்ள இயந்திரங்களைப் பாதித்திருக்கலாம் எனவும் அவர் கூறினார். பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் அழிவு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்த வசதி 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட மையவிலக்குகளை (entrifuges) உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் கூறியது. நடான்ஸில் நடந்த தாக்குதல்கள் அணு ஆயுதத்தை உருவாக்கும் இரானின் திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், இது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என இப்போதே சரியாகக் கூற முடியாது என டேவன்போர்ட் கூறினார். ''சர்வதேச அணுசக்தி முகமை அந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் வரை, எவ்வளவு விரைவாக இரான் அங்கு மீண்டும் பணிகளைத் தொடங்கும் அல்லது யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்துக்கு மாற்றியதா போன்றவை குறித்து நமக்குத் தெரியாது'' என்றார் டேவன்போர்ட். ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தொழில்நுட்ப மையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் தெரிவித்திருந்தது. இஸ்ஃபஹானில் நடந்த தாக்குதல் மூலம் "யுரேனியத்தை உற்பத்தி செய்யும் வசதி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீண்டும் மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை" தகர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. "ஃபோர்டோ செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் இன்னும் அணு ஆயுத பெருக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆயுத தர நிலைகளுக்குச் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை ரகசிய இடத்துக்கு அனுப்பவோ இரானுக்கு வாய்ப்பு உள்ளது" என்று டேவன்போர்ட் கூறினார். "இந்த அச்சுறுத்தலை நீக்க எத்தனை நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள்" இந்த நடவடிக்கை தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார். ஆனால், இது அடைய முடியாத இலக்கு என்கிறார் டேவன்போர்ட். ''தாக்குதல்கள் தளங்களை அழிக்கலாம், விஞ்ஞானிகளைக் குறிவைக்கலாம். ஆனால், இரான் அணுசக்தி குறித்து பெற்றுள்ள அறிவை அழிக்க முடியாது. இரானால் மீண்டும் கட்டமைக்க முடியும். யுரேனியம் செறிவூட்டலில் கடந்த காலத்தை விட மிக விரைவாக அதனால் கட்டமைக்க முடியும்''என்று அவர் கூறினார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04e4r960w0o

அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்

3 months ago

அணு ஆயுத தயாரிப்பான இறுதிக் கட்டத்தில் இரான் இருந்ததா?

பட மூலாதாரம்,NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, அணு குண்டு தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்

  • பதவி, பிபிசி

  • 16 ஜூன் 2025, 02:00 GMT

இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையைச் சேதப்படுத்தியதுடன் மூத்த படைத்தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது.

தங்கள் நாட்டில் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக உள்ள அணு உலைகளை இஸ்ரேல் ''பொறுப்பற்ற முறையில்'' தாக்கியுள்ளதாக, இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டித்துள்ளார். பதிலடியாக இரானும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது.

உலகளாவிய அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான, சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் நடான்ஸ் அணு உலை இயங்கி வந்ததாகவும், அங்கு தாக்குதல் நடத்தியது ''கதிர்வீச்சு பேரழிவு'' ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அப்பாஸ் அராக்சி கூறினார்.

ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார்.

"இரானைத் தடுக்கவில்லை என்றால், அது குறுகிய நேரத்தில் அணுகுண்டை உருவாக்கக் கூடிய நிலைக்குச் செல்லும்" என கூறிய அவர், இதன் காரணமாகவே இஸ்ரேல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறினார்.

"அது ஒரு ஆண்டாக இருக்கலாம். சில மாதங்களுக்குள்ளேயும் இருக்கலாம்" என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டாலும், அதை அந்நாடு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அணு ஆயுத தயாரிப்பான இறுதிக் கட்டத்தில் இரான் இருந்ததா?

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இரானில் டஜன் கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியது

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

அணு குண்டு வெடிப்பைத் தூண்டும் கருவி, யுரேனியம் உலோக கோர் (Uranium metal core) போன்ற ஒரு அணுகுண்டுக்கான முக்கிய பாகங்களைத் தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

"இரான் அணு அயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது என நெதன்யாகு கூறினாலும் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை" என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் அணு ஆயுத பரவல் தடுப்பு கொள்கையின் இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறினார்.

அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை ஏற்கெனவே பெரும்பாலும் இரான் உருவாக்கிவிட்டது, பல மாதங்களாக இதே நிலையில்தான் இரான் உள்ளது என அவர் கூறினார்.

''இரானால் சில மாதங்களில் எளிய அடிப்படை வடிவிலான அணுகுண்டை தயாரிக்க முடியும் என்ற கணிப்பும் புதிது அல்ல''

இரானின் சில நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அணு ஆயுதத்தை முழுமையாக உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய பணியில் இரான் இன்னும் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக அவர் கூறினார்.

இரான் யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவு அதிகம் செறிவூட்டியுள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்காத ஒரு நாடு இப்படிச் செய்வது விசித்திரமானது என, அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஆனால், இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை இன்னும் நம்புவதாக அவர் கூறினார்.

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேலின் இருப்புக்கு அச்சறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த'' இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார்.

இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது மட்டுமே நெதன்யாகுவின் ஒரே கவலை என்றால், அது குறித்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கலாம் மற்றும் தொடக்கத்திலேயே இரானின் அனைத்து முக்கிய அணு ஆலைகளைத் தாக்கியிருக்கலாம் என டேவன்போர்ட் கூறினார்.

இரான் 60% தூய தன்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்து வைத்துள்ளது என்றும் அணு ஆயுதம் தயாரிக்க 90% தூய தன்மை தேவைப்படும் நிலையில், அதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது என்றும், அது குவித்து வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் 9 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இது அணு ஆயுத பரவல் தடைக்கு அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அந்த அமைப்பு கூறியது.

நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இரான் அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என தங்களால் சொல்ல முடியாது எனவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட யுரேனியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறித்த விசாரணைக்கு இரான் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது.

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுவரை தெரிந்தது என்ன?

தனது அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அணு ஆயுதங்களை உருக்க நினைத்ததில்லை எனவும் இரான் கூறுகிறது.

ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகளில் இரான் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இரானில் பத்தாண்டுகளாக விசாரணை நடத்திய சர்வதேச அணுசக்தி முகமை கண்டறிந்தது. பிராஜக்ட் அமத் எனும் ரகசிய அணு திட்டத்தை இரான் 2003-ல் நிறுத்தும் வரை, 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்த செயல்பாடுகள் இருந்தது.

2009 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் ஃபோர்டோ நிலத்தடி செறிவூட்டல் வசதியின் கட்டுமானத்தை வெளிப்படுத்தியது வரை, இரான் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஆனால் அதன் பிறகு அணு ஆயுத மேம்பாடு குறித்த "நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை'' என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியது.

2015ஆம் ஆண்டில், இரான் 6 உலக வல்லரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் கீழ் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் கடுமையான கண்காணிப்பை அனுமதித்தது. இதற்குப் பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.

இந்த அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் அறிவித்த டிரம்ப், இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். இரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் அளவுக்கு இந்த ஒப்பந்தம் வலிமையாக இல்லை என அவர் கூறினார்.

இரான் கட்டுப்பாடுகளை, குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறி இதற்குப் பதிலடி கொடுத்தது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஃபோர்டோவில் உள்ள அணு உலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த செறிவூட்டலும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுவதை மீண்டும் தொடங்கியது.

வியாழக்கிழமை, சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகளின் போர்ட் ஆஃப் கவர்னர்ஸ் குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் அதன் அணு ஆயுதப் பரவல் தடையை மீறுவதாக அறிவித்தது.

'பாதுகாப்பான இடத்தில்' ஒரு புதிய யுரேனியம் செறிவூட்டல் வசதியை அமைப்பதன் மூலமும், ஃபோர்டோ ஆலையில் உள்ள பழைய யுரேனியம் செறிவூட்டல் இயந்திரங்களை புதிய மற்றும் வேகமாகச் செயல்படும் இயந்திரங்களாக மாற்றுவதன் மூலம் இதற்குப் பதிலடி தரப்படும் என இரான் கூறியது.

இரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 'இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது'

இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் தனது முதல் கட்ட வான்வழித் தாக்குதல்கள் நடான்ஸில் உள்ள நிலத்தடி அமைப்புகளையும், முக்கியமான உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியதாகக் கூறியது.

நடான்ஸில் தரைக்கு மேலே உள்ள பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலை மற்றும் மின்சார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகச் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். நிலத்தடி கட்டமைப்பில் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், மின்சார துண்டிப்பு அங்குள்ள இயந்திரங்களைப் பாதித்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் அழிவு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்த வசதி 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட மையவிலக்குகளை (entrifuges) உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

நடான்ஸில் நடந்த தாக்குதல்கள் அணு ஆயுதத்தை உருவாக்கும் இரானின் திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், இது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என இப்போதே சரியாகக் கூற முடியாது என டேவன்போர்ட் கூறினார்.

''சர்வதேச அணுசக்தி முகமை அந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் வரை, எவ்வளவு விரைவாக இரான் அங்கு மீண்டும் பணிகளைத் தொடங்கும் அல்லது யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்துக்கு மாற்றியதா போன்றவை குறித்து நமக்குத் தெரியாது'' என்றார் டேவன்போர்ட்.

ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தொழில்நுட்ப மையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் தெரிவித்திருந்தது.

இஸ்ஃபஹானில் நடந்த தாக்குதல் மூலம் "யுரேனியத்தை உற்பத்தி செய்யும் வசதி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீண்டும் மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை" தகர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

"ஃபோர்டோ செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் இன்னும் அணு ஆயுத பெருக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆயுத தர நிலைகளுக்குச் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை ரகசிய இடத்துக்கு அனுப்பவோ இரானுக்கு வாய்ப்பு உள்ளது" என்று டேவன்போர்ட் கூறினார்.

"இந்த அச்சுறுத்தலை நீக்க எத்தனை நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள்" இந்த நடவடிக்கை தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

ஆனால், இது அடைய முடியாத இலக்கு என்கிறார் டேவன்போர்ட்.

''தாக்குதல்கள் தளங்களை அழிக்கலாம், விஞ்ஞானிகளைக் குறிவைக்கலாம். ஆனால், இரான் அணுசக்தி குறித்து பெற்றுள்ள அறிவை அழிக்க முடியாது. இரானால் மீண்டும் கட்டமைக்க முடியும். யுரேனியம் செறிவூட்டலில் கடந்த காலத்தை விட மிக விரைவாக அதனால் கட்டமைக்க முடியும்''என்று அவர் கூறினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c04e4r960w0o

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

3 months ago
Published By: VISHNU 16 JUN, 2025 | 09:38 PM போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன். இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே மக்கள் செயற்கையான தட்டுப்பாட்டு நிலைவரத்தை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றேன். https://www.virakesari.lk/article/217666

யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

3 months ago

Published By: VISHNU

16 JUN, 2025 | 09:38 PM

image

போதியளவு எரிபொருள் வருகை தரவுள்ளதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.

இந்நிலையிலேயே யாழ். மாவட்ட அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை ஊடகங்கள் வாயிலாக விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை (16) எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன்.

இன்றையதினம் அநுராதபுரத்திலிருந்து 23 பௌசர்களில், ஒரு பௌரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, நாளையும் இதே அளவான எரிபொருள் எடுத்துவரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்து வரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது.

ஆகவே யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலகம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகவே மக்கள் செயற்கையான தட்டுப்பாட்டு நிலைவரத்தை ஏற்படுத்த வேண்டாமென பொதுமக்களை வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றேன்.

https://www.virakesari.lk/article/217666

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

3 months ago
எனக்கு இதுவும் ஐ பி எல் லும் ஒன்றேதான். நிச்சயமாக இது என் ஆணாதிக்க மனோநிலையின் வெளிப்பாடேதான். சந்தேகமில்லை. ஆனாலும் - எவ்வளவோ முயன்று டிவிக்கு முன் வலுகட்டாயமாக குந்தி இருந்து பார்த்தாலும் - மனம் லயிப்பதில்லை. தானாக போனை நோண்ட ஆரம்பித்து விடுவேன். இத்தனைக்கும் எனக்கு தெரிந்த சில சிறுமிகளின் கிரிகெட் மீதான ஆர்வத்தை ஊக்குவித்தது மட்டும் அல்லாமல், உள்ளூர் கிளபுகளின் அறிமுக நாட்கள் பற்றிய தகவல்களை கூட பகிர்ந்துள்ளேன். ஆனாலும் என்னால் ஆர்வமாக பார்க்க முடிவதில்லை. வெட்கப்படவேண்டிய விடயம்தான்.

காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி

3 months ago
யாழில் வீதி புனரமைப்பை தடுத்து நிறுத்திய உபநகரபிதா! வழங்கியுள்ள விளக்கம் யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மீசாலை அல்லாரை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் பொது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர். இந்நிலையில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தரோடு கலந்துரையாடி அப்பகுதி மக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்றினை உருவாக்கிய பின்னர் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புனரமைப்பு வேலை அதுவரை புனரமைப்பு வேலைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் இதனை மீறி நேற்றைய தினம் புனரமைப்பு பணிகள் தொடரப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட வீதிக்கு சென்ற உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரை தொடர்பு கொண்டு வீதிப் புனரமைப்பின் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர், மக்களை தெளிவு படுத்தி கண்காணிப்பு குழு ஒன்றினை அமைக்குமாறு கேட்டதோடு அதுவரை புனரமைப்பை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனையடுத்து புனரமைப்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. https://tamilwin.com/article/road-reconstruction-halted-1750037253#google_vignette

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

3 months ago
16 JUN, 2025 | 09:11 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார். களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும். மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன. அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது. ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர். அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர். எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த போதிலும், 5 இலட்சம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது. சஜித் பிரேமதாசவின் வாக்குகளும் 50 சதவீதத்தால் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். 2 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள சஜித், அடுத்து தானே ஜனாதிபதி என எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாமலுக்கு 6 இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன. தந்தையைப் போன்று மீண்டும் நாட்டை ஏமாற்றி பிளைக்க முடியும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் இவர்கள் இருவரிடமும் மக்கள் நாட்டை ஒப்படைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போது இவர்களுக்கு இராணுவ வீரர்கள் மீது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததாக அதனை பெரும் குறையாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ராஜபக்ஷர்கள் தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர். இராணுவத்திற்கு சிப்பாய்களே ஆட்சேர்க்கப்படுகின்றனர். இராணுவ வீரர்கள் அல்ல. எனவே அது வெட்கப்படக் கூடிய சொற் பிரயோகம் அல்ல. இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என அழைத்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷர்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர். என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர். சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சித்தப்பாவும் அனுமதித்தனர். எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர். பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினர் என்றார். https://www.virakesari.lk/article/217625

பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர் - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா

3 months ago

16 JUN, 2025 | 09:11 PM

image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நேருக்கு நேர் போர் களத்தில் மோதிய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கூட என் குடும்பத்தை பழிவாங்கவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் அதனை செய்தனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

களுத்துறையில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடன் பெற்று அதனை மீள செலுத்தாமல் மோசடி செய்தமை தொடர்பில் பேசும் போது, ராஜபக்ஷர்களை நினைவு கூராவிட்டால் அது நாம் எமது பொறுப்பினை தட்டிக்கழிப்பதற்கு சமமாகும்.

மக்களுக்கு எவ்வித பயனும் அற்ற வேலைத்திட்டங்களுக்காக பாரிய தொகையில் கடன் பெற்று, அதனை மோசடி செய்துள்ளனர். இவ்வாறான மோசடிகளின் பலனாக 2022இல் எரிபொருள், எரிவாயு கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் அவை திரும்பிச் சென்றன.

அது மாத்திரமின்றி அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைமையும் ஏற்பட்டது.

ஊழல், மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டது என மக்கள் நம்பினர்.

அது தான் உண்மை நிலைமை என்பதே எனது நம்பிக்கையுமாகும். இளம் தலைமுறையினர் இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

எனவே முந்தைய கால கட்டத்திலிருந்த அரசியல்வாதிகள் தற்போது காலாவதியாகிவிட்டனர். எனவே இந்த அரசாங்கத்தை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

இந்த அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் முந்தைய ஊழல், மோசடி அரசியல்வாதிகள் அதனால் பலன் பெறுவார்கள்.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியடைந்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், முந்தைய ஆட்சியாளர்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பளிப்பார்கள் என்று நான் நம்பவில்லை.

கடந்த தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த போதிலும், 5 இலட்சம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

சஜித் பிரேமதாசவின் வாக்குகளும் 50 சதவீதத்தால் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஓரளவு வாக்குகளைப் பெற்றுள்ளதால் அதனை அடிப்படையாகக் கொண்டு பாரிய பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

2 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ள சஜித், அடுத்து தானே ஜனாதிபதி என எண்ணிக் கொண்டிருக்கின்றார். நாமலுக்கு 6 இலட்சம் வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளன.

தந்தையைப் போன்று மீண்டும் நாட்டை ஏமாற்றி பிளைக்க முடியும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கின்றார். எவ்வாறிருப்பினும் இவர்கள் இருவரிடமும் மக்கள் நாட்டை ஒப்படைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தற்போது இவர்களுக்கு இராணுவ வீரர்கள் மீது புது விதமான மரியாதை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்ததாக அதனை பெரும் குறையாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நாம் அது குறித்து கவலை கொள்ளவில்லை. ராஜபக்ஷர்கள் தான் இராணுவத்தினரைக் கொண்டு இலாபம் தேட முற்படுகின்றனர்.

இராணுவத்திற்கு சிப்பாய்களே ஆட்சேர்க்கப்படுகின்றனர். இராணுவ வீரர்கள் அல்ல. எனவே அது வெட்கப்படக் கூடிய சொற் பிரயோகம் அல்ல.

இன்று இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என அழைத்தமைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷர்கள், அன்று யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தளபதியான என்னை சிறையிலடைத்து நன்கு உபசரித்தனர்.

என்னுடன் பணியாற்றிய இராணுவத்தில் முக்கிய பதவி நிலைகளை வகித்த 35 இராணுவ அதிகாரிகள் ஓய்வூதியம் இன்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

சரத் பொன்சேக்காவை சிறையிலடைத்ததை தன்னால் அனுமதிக்க முடியாது என தற்போது நாமல் கூறுகின்றார். ஆனால் அதனை அவரது தந்தையும், சித்தப்பாவும் அனுமதித்தனர்.

எனது மகள்கள் இருவரும் அமெரிக்காவிலிருந்து திரும்பும் போது, அவர்கள் விமான நிலையத்தில் பல மணித்தியாலங்கள் தடுத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

பிரபாகரன் கூட இவ்வாறு எமது குடும்பங்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை. ஆனால் ராஜபக்ஷர்கள் எமது குடும்பத்தினரையும் பழிவாங்கினர் என்றார்.

https://www.virakesari.lk/article/217625

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months ago
சிகரெட் மட்டும் என்ன காயகல்ப மருந்தா? அதுவும் ஒரு கான்சர் ஊக்கிதானே? ஒரு காலத்தில் 90கள் வரைக்கும் மேற்கில் சிகெரெட் பிடிக்காட்டி ஸ்டைல் இல்லை என்ற நிலை இருந்தது, சிறுவர் பார்க்கும் விளையாட்டுகள் எங்கினும் சிகெரெட் கம்பனிகளின் ஆதிக்கமே. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். இதே போன்ற விழிப்புணர்வுதான் தமிழ் நாட்டிலும் குடிக்கு தேவைப்படுகிறது. பூரண மதுவிலக்கு கள்ளசாராயத்தை ஊக்குவிக்கும். கள்ளுக்கும் பியருக்கும் அதிக வேறுபாடில்லை. எமக்கே தெரியும் கள்ளால் எத்தனை குடும்பங்கள் ஊரில் சீரழிந்தன என்பது. ஆகவே கள்ளை ஊக்குவிப்பது போல ஒரு மடமை வேறு இருக்க முடியாது. ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை திமுக , அதிமுக கொள்ளை அடிக்க பயன்படுத்துகிறது. சீமான் வாக்கு கொள்ளைக்கு பயன் படுத்துகிறார். மூவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months ago
உக்ரெய்னில் அமெரிக்கா தனது இராணுவ தளபாட வழங்கலைக் குறைத்துக் கொண்டு அவற்றை ஈரானை நோக்கி நகர்த்துவதாக இரு வாரங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே ட்றம்ப் உக்ரெயின் போரை நிறு த்த முயற்சித்தது இதற்காகவும் இருக்கலாம். தேர்தலின் முன் உக்ரெயின் மற்றும் பலஸ்தீன போர்களை நிறுத்துவேன் என்று கூறிய ட்றம்ப், இரண்டாக இருந்த போர் முனைகளை இப்போது மூன்றாக்கியுள்ளார்.