3 months ago
290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்
adminJune 16, 2025
written by admin June 16, 2025

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியதாக இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனத்திற்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துடையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை ஏதிலிகள் மறுவாழ்வு நிறுவனம் (ஒஃபர் சிலோன்) மற்றும் Acted நிறுவன உத்தியோகத்தர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையாடல் நடத்தினர். குறித்த கலந்துரையாடலின் போதே குறித்த விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் குறித்த கலந்துரையாடலில் இந்த ஆண்டு தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஏது நிலைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவாலாகியமையும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகப்பொறுப்புடன் கையாண்டமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அது வரவேற்கப்பட்டது.


கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற ஒழுங்குமுறை தொடர்பாக விசேட அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டிய முக்கியத்துவம் கலந்துரையாடப்பட்டது.
இதற்காக ஒஃபர் சிலோன் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமும் மாகாண மட்ட கலந்துரையாடலில் பெறப்பட்ட விடயங்கள் தொடர்பான ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு ஓர் ஆவணமாகத் தயாரிக்கப்பட்டு அரச உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துக்கள் பெறப்பட்டு உரிய முறையில் அமைச்சரவைக்கு ஊடாக கௌரவ ஜனாதிபதியின் பார்வைக்கு சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மீள் திரும்புகின்ற மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தின் சகலநிலை அதிகாரிகளையும் உள்ளடக்கி மக்களின் தேவைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், மாகாணமட்ட உயர் அதிகாரிகளை தமிழ் நாட்டிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச்சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அவதானிப்புக்களை மேற்கொள்வதுடன் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பவை தொடர்பாகவும் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மீள்குடியேறும் மக்களுக்கான வீட்டுத்திட்டம், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான விசேட தேவைகளை எவ்வாறு விரைவாகப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதையும் நிலைத்த மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்தையும் கட்டி எழுப்புதலின் அவசியம் தொடர்பாக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவைகளை தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
https://globaltamilnews.net/2025/216885/
3 months ago
வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர் adminJune 16, 2025 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் போது, யாழ். மாநகர சபையின் பல்வேறு தேவைகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். யாழ்ப்பாண நகர அபிவிருத்தி தொடர்பாக எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றவேண்டும் என ஆளுநர் இதன்போது கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/216890/
3 months ago
இப்போது இதை சிறுவகள் அதீதமாக பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஆங்கிலத்தில் Nanny state என்பார்கள். தமிழில் ஆயா-அரசு எனலாம். ஒவ்வொரு விடயத்திலும் அரசு ஒரு ஆயா போல் தலையிடுவது. இதை மக்கள் பலர் விரும்புவதில்லை. ஆகவே அரசுகள் இதை தன்மையாகத்தான் கையாளும். சிகெரெட் போல கைப்பேசிகளும் ஆபத்து என நிறுவப்படின், சிகெரெட் போலவே அவையும் படிபடியாக களையப்படும். யூகேயில் குளிர்பானங்களில் sugar tax என ஒன்றை அறிமுகபடுத்தியதால், பல நிறுவனங்கள் தம் தயாரிப்புகளில் சீனி அளவை குறைத்தன. இவ்வாறாக விஞ்ஞான புரிதல் மாற, மாற அதற்கேற்ப அரசுகளும் தம் அணுகுமுறை, நிலையை மாற்றும்.
3 months ago
புற்று நோய் பல காரணங்களால் வருவது உண்மை. ஆனால் புற்று நோயை உருவாக்கும் மிக பெரிய, ஆய்வு மூலம் ஐயம் அற நிறுவப்பட்ட காரணி சிகெரெட். இதுவும் மதுவிலக்கு போலவே. தடை செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், கள்ள சிகெரெட் பரவும். ஆகவே பூரண தடை சரிவராது. ஆனாலும் யூகேயில் இப்போ படிப்படியாக வாங்கும் வயதை கூட்டி, ஒரு காலத்தின் பின் பிறந்தவர்கள், அதாவது 01-01-2009 இன் பிறந்த பிள்ளைகள் வாழ்க்கையில் எப்போதும் சிகெரெட் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். இப்படி மைக்ரோ பிலாஸ்டிக் உட்பட ஒவ்வொரு புற்று நோய் ஊக்கியும் மனித உணவு, பழக்க சங்கிலியில் இருந்து அகற்றபட வேண்டும். அதன் முதல்படி உள்ளதில் மோசமானதில் ஒன்றான சிகரெட். கள்ளுக்கு மட்டும் அல்ல தடை. தனிநபர்கள் தயாரிக்கும், விநியோகிக்கும் சகல மதுவுக்கும் தடை. சாராயம் போல கள்ளையும் அரசு விற்க வேண்டும் என கேட்பது லொஜிக்கலானது. ஆனால் பியரை எதிர்த்து கொண்டு கள்ளை ஆதரிப்பது வெறும் அரசியல் பம்மாத்து.
3 months ago
டாஸ்மாக்கின் விஷ மதுவில் இருந்து விடுதலை கிடைக்குமா? -சாவித்திரி கண்ணன் பனை தமிழ்நாட்டின் தேசிய மரம். நமது அடையாளம், பாரம்பரியம், பண்பாடு, வாழ்வாதாரம்…அனைத்தும் பனையே. அதிகாரத்தில் உள்ளவர்களின் பேராசைக்காக மெல்லக் கொல்லும் விஷமான டாஸ்மாக் மதுவை அருந்தி தமிழனம் மாய்ந்தழிவதா? கள் எனும் உணவு நம் உரிமை அல்லவா..? பனை ஏறுவது குற்றமா? சீமானை கைது செய்வீர்களா…? பனை மரம் மீதேறி சீமான் பனங்கள்ளை எடுத்தது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. பெரிய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுதி வருகின்றனர் சிலர்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், வி.சி.கவின் ரவிக்குமாரும் இந்த விவகாரத்தில் சீமானை இன்னும் ஏன் கைது செய்யவில்லை எனக் கேட்கின்றனர். பல்லாயிரம் வருடங்கள் பனங்கள்ளை உண்டு வளர்ந்த சமூகத்திடம் அதை உண்ணாதே, இதோ நான் கொடுக்கும் மெல்லக் கொல்லும் விஷமான சீமை மதுவைக் குடி என அரசாங்கம் அழுத்தம் தருகிறது..என்றால், தமிழ் சமூகத்தை இழிச்சவாய் சமூகம் என கருதுகிறார்கள் என்று தான் அர்த்தமாகும். நாம் அதற்கு இடம் தரலாமா? நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியாவில் பல கோடிப் பேர் மது அருந்துகிறார்கள். இதை எந்தக் காலத்திலும், எந்த அரசாலும் முற்றிலும் ஒழிக்க முடிந்ததில்லை. இவை அளவுக்கு மீறி சமூகத்தை ஆக்கிரமிக்காமல் தடுப்பது தான் ஒர் மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால், நம்மை ஆளும் அரசுகளோ மக்கள் வேண்டாம் என எதிர்த்து போராடினலும் வலுக்கட்டாயமாக டாஸ்மாக் கடைகளை திரும்பும் திக்கெல்லாம் ஏற்படுத்தி மக்கள் பணத்தையும், ஆரோக்கியத்தையும் ஒருசேர சூறையாடுகின்றன. டாஸ்மாக்கில் அதிகார மையத்தினரின் பாக்கெட்டை நிரப்புகின்ற அந்த மதுவை IMFL என அழைக்கிறார்கள். அதாவது, Indian Made Foreign Liquor என்று பொருளாகும். உண்மையிலேயே சீமை சரக்கை குடித்தவர்கள் டாஸ்மாக் மதுவை சீண்ட மறுக்கிறார்கள். சாக்கடையில் வீசுங்கள் எனச் சீறுகிறார்கள். மிக மோசமான தரத்தில் அதிக இரசாயனக் கலவையுடன், அதிக ஆல்கஹால் கலந்து விற்கப்படும் இந்த மது, தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. ஏராளாமான அடித்தட்டு உழைப்பாளிகளை உறிஞ்சி எடுத்து எதற்கும் லாயக்கற்றவர்களாக குப்பையில் வீசி எறிந்துள்ளது. கணக்கற்ற விதவைகளை உருவாக்கி உள்ளது. பல லட்சம் குடும்பங்களை நிராதரவற்ற நிலைக்கு தள்ளி உள்ளது. 48 சதவிகித ஆல்கஹால் கொண்ட இந்தக் கொடூர மதுவின் தரம் குறித்த, எந்த விவாதமும் இங்கு ஊடகங்களில் நடப்பதில்லை. இதை தடுப்பதற்கும் வழியில்லை என்பதாக தமிழ்ச் சமூகம் விழி பிதுங்கிக் கொண்டுள்ளது. ஆனால், இயற்கை பானமான கள் உண்ணும் உரிமைக்கு எதிராகத் தான் எத்தனை குரல்கள் வீரியத்துடன் வருகின்றன…! இந்திய அரசியல் சட்டப்படி கள் என்பது ஒரு உணவு தான். அது தடை செய்யப்பட வேண்டியதல்ல. அதில் ஆல்கஹால் இருக்கிறதா? என்றால், இருக்கிறது. ஆம், 4 சதவிகித ஆல்கஹால் இருக்கிறது. நாம் உண்ணும் உணவில் கூட ஓரளவு குறைந்த ஆல்கஹால் உள்ளது. பழைய சோற்றில் மிதமான ஆல்கஹால் உள்ளது. புளித்த மோர், புளித்த இட்லி,தோசை மாவு, திராட்சை பழரசம் ஆகியவற்றிலும் உள்ளது. இவை எதுவும் சட்டப்படி தடை செய்யப்பட்டதல்ல. அவ்வளவு ஏன்? மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற இருமல் சிரப்பு மருந்திலும் ஆல்கஹால் உள்ளது. ஆகவே, பனங் கள்ளை பார்த்து பயமுறுத்தக் கூடாது. தென்னங் கள்ளைக் காட்டி திகில் உருவாக்கக் கூடாது. சில மேதாவிகள் பக்கம்பக்கமாக கள்ளின் தீமை பற்றி எழுதுகிறார்கள். அதைவிட பத்து மடங்கு வீரியமுள்ள அரசாங்க மது குறித்து இவர்கள் கள்ளமெளனம் சாதிக்கிறார்கள். ஆகவே தான், நாம் வலியுறுத்த விரும்புவதெல்லாம் மதுவில் இருந்து கொள்ளை லாபம் ஈட்டும் மனப்பான்மையே மனிதகுலத்திற்கு எதிரானது. இதை கட்டுப்படுத்தி அளவில் வைக்க வேண்டும். அத்துடன் மக்கள் குடிக்கும் மது அதிக தீமை இல்லாததாக இருக்க வேண்டும். மது தயாரிப்பு, விநியோகம் என்பதை மையப்படுத்தாமல் அந்தந்த மண் சார்ந்து மக்களின் பழக்க வழக்கம் சார்ந்து இருப்பதை கூர்ந்து அவதானித்து அவற்றை முறைப்படுத்தி அங்கீகரிக்க வேண்டும். சில இடங்களில் மது தயாரிப்பு என்பது பழங்களில், தானியங்களில், மூலிகை சாறுகள், தேன் போன்றவற்றின் கலவையில் உருவாக்கப்படுகிறது. இந்த பழத்தயாரிப்பு மது என்பது எந்தெந்த பழங்கள் அந்தப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறதோ அதைக் கொண்டு உருவாக்கபடுவதாகும். பீகாரில் இலுப்பை பூவைக் கொண்டு அருமையான இனிமையான மலிவான மது தயாரிக்கிறார்கள் எளிய தலித் மக்கள்! அசாம் போன்று பழங்குடிகள் வாழும் மாநிலங்களில் ரைஸ்பீர் எனப்படும் ஆரோக்கிய மதுபானத்தை தயாரிக்கிறார்கள். கோவாவில் முந்திரி பழத்தைக் கொண்டு ஃபென்னி என்ற மதுபானத்தை தயாரிக்கிறார்கள். திராட்சை, ஆப்பிள், முந்திரிப் பழம், பிளம்ஸ், செர்ரி, பெர்ரி போன்ற பழங்கள் தீமை குறைவான ஆரோக்கிய மது தயாரிப்புக்கு மூலமாகும். இது தவிர பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களைக் கொண்டும் சிறந்த மது தயாரிக்க முடியும்! இதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நம் டாஸ்மாக்கில் கரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் மோலாசஸைக் கொண்டு மெத்தனால், ஸ்பிரிட் கலந்து ஒரு செயற்கை மதுவை – கேடுதரும் மதுவை – வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். தமிழகத்தில் முந்திரி பழங்கள் கேட்பாரற்று பல்லாயிரம் டன்கள் பயனின்றி வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! இவை விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன. நமது சட்டமன்றத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அதே போல தென்னங் கள்ளை விவசாய கூட்டுறவில் தயாரித்து விற்க அதிமுக அரசாங்கத்தில் எடுத்த முயற்சிகளையும் சாராய அதிபர்கள் தடுத்துவிட்டார்கள். ஐந்து கோடி பனைமரங்கள் இருந்த தமிழ் நாட்டில் இன்று அது சரிபாதிக்கும் கீழாகி விட்டது. காரணம், பனையை பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்திருப்பதால், பனை மரம் ஏறுவதையே குற்றச் செயலாக அறிவித்து இருப்பதால் பனை வளர்ப்போர் விரக்தி அடைந்து அதனை வெட்டி செங்கற் சூளைகளுக்கு அனுப்பி வருகின்றனர். பனை விவசாயிகளும், பனையேறிகளும் பல போராட்டங்கள் நடத்தி ஓய்ந்துவிட்டனர். நாம் இவர்களை ஆதரிக்காதது தான் காரணம். பனங்கள்ளு இறக்கும் உரிமை கேட்டு நடந்த போராட்டம் பனை தான் தமிழ்நாட்டின் தேசிய மரம். ஆம், நமது அடையாளம், நமது பாரம்பரியம். நமது வாழ்வாதாரம். பனையேறுவது நம் தொழில் உரிமை. பசிக்கின்ற ஏழைக்கு மட்டுமல்ல, பறவையினங்கள் பலவற்றுக்கும் பனையே சரணாலயம். அப்படிப்பட்ட பனையை பகை மரமாக பாவித்து, இல்லாத சட்டங்களை போட்டு இன்னல்கள் பல தந்து பனையேறிகளை வேட்டையாடி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பனை வளர்ப்பையே படு பாதளத்திற்கு தள்ளிவிட்டன, மாநிலத்தை ஆண்ட திராவிடக் கட்சிகள்! ஏன் இவ்வாறு செய்தார்கள். பக்கத்தில் உள்ள கேராளவில் கள்ளுக் கடைகள் உள்ளன. மற்ற பல மாநிலங்களில் புழக்கத்தில் இருக்கும் இயற்கை பானங்கள் தமிழ் நாட்டை பொறுத்த வரை சர்வாதிகாரமாக மறுக்கப்பட்டு வருகின்றது. பனங்கள் புழக்கத்தில் வந்தால் அதில் கண்டதைக் கலப்பார்கள். இதனால் விபரீதங்கள், மரணங்கள் ஏற்படும். இன்னும் அதிகமானோர் மதுவை நாடிச் சென்று சீரழிவார்கள்…அது பாதுகாப்பற்றது, ஆபத்தானது..எனச் சொல்கிறார்கள். இதைத் தடுப்பதற்கு அரசாங்கமே பாலை கொள்முதல் செய்து ஆவீனை நடத்துவதை போலக் கள்ளை கொள்முதல் செய்து முறையாக பதப்படுத்தி குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கிடைக்கும்படி செய்யலாம். அல்லது விவசாயக் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு எப்படி செயல்படுவது என வழிகாட்டி கண்காணிக்கலாம். இது ஒன்றும் செய்ய முடியாததல்ல. நல்ல நோக்கமும், மக்கள் நலனில் அக்கறையும் இருந்தால், சாத்தியமே. இதற்கு கட்டுபடியாகக் கூடிய எளிய வரிவிதிப்பு முறையை கையாளலாம். இதனால், அதிகாரத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் இது வரை சாராய அதிபர்களிடம் பார்த்து வந்த பெரிய கையூட்டு பணம் இதில் தடைபடும் என்பதால், பல சாக்கு போக்குகளைச் சொல்லி அமல்படுத்த மறுப்பார்கள். மக்கள் வீறு கொண்டு பொங்கி எழுந்து உணவு என்பது எங்கள் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் ஆள்வோருக்கு இல்லை என்பதை உணர்த்த வேண்டும். மூத்த விவசாயி நல்லுசாமி இதைத் தான் பல்லாண்டுகளாக வலியுறுத்தி வந்தார். சீமான் எடுத்த முன்னெடுப்பை மக்கள் நலன் கருதி தமிழ் நிலத்தில் வாழும் அனைவருமே கட்சிகளைக் கடந்து ஒன்றிணைந்து இதை சாத்தியப்படுத்த வேண்டும். பனை, தென்னை விவசாயிகள் வாழ்வில் இது பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். 2026 தேர்தலின் மைய விவாத பொருளாக இதை செயல்படுத்த வேண்டும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/21902/palm-trees-panangkallu-seeman/
3 months ago
ஜனாதிபதி மற்றும் IMF இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் இடையே சந்திப்பு June 16, 2025 3:21 pm ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று (16) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கை நிதி நெருக்கடியிலிருந்து மீள, வழிகாட்டிய சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். அமெரிக்கா அண்மையில் விதித்த வரிகளைப் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அவ்வாறு வரி அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் கூறினார். உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இந்த சவால்களை செயற்திறன் மிக்க வகையில் முகாமைத்துவம் செய்வதற்கும் அவற்றின் தாக்கத்தை குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் வர்த்தக உறவு, குறிப்பாக இலங்கையின் 23% ஏற்றுமதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு அனுமதி வழங்கும் GSP+ வர்த்தகச் சலுகை பற்றியும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டன. முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஆட்சி மக்களை மையமாகக் கொண்டது என்றும், மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையில் தனக்குக் கிடைத்த அமோக வரவேற்புக்கு திருமதி கோபிநாத் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டிலும் அரசாங்கத்திற்குக் கிடைத்த வலுவான மக்கள் ஆதரவு, அத்தியாவசிய மறுசீரமைப்புகளைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு பலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். கடுமையான நெருக்கடியிலிருந்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அடைந்த பொருளாதார வளர்ச்சியையும், மிக அதிக பணவீக்க விகிதத்திலிருந்து பணவீக்க விகிதம் குறைந்ததையும் குறிப்பிட்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் பாராட்டினார். அதேபோன்று, அரச நிர்வாக மறுசீரமைப்புகளில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், இந்த முயற்சிகளை நிலைநிறுத்தி விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீட்சி செயல்பாட்டில், சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருக்கும் என்று திருமதி கோபிநாத் உறுதியளித்தார். தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://oruvan.com/meeting-between-the-president-and-dr-gita-gopinath-deputy-managing-director-of-the-international-monetary-fund/
3 months ago
கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது. அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmbyp0hs701wrqpbsfjoncu90
3 months ago
கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61 வாக்குகளை விராய் கெலி பல்தஸார் பெற்றுக்கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத கொழும்பு மாநகர சபையின் கன்னிக் கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்றது.
அதற்கமைய, நீண்ட நேர விவாதத்திற்கு பின்னர் இரகசிய வாக்கெடுப்பு மூலம் கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதாக சபையில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு அமைய பிரதி மேயராக ஹேமந்த குமார தேர்ந்தெடுக்கப்பட்டார்.
https://adaderanatamil.lk/news/cmbyp0hs701wrqpbsfjoncu90
3 months ago
தெஹ்ரான் வான்வெளியை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ள இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். மேலும், தெஹ்ரானின் வான்வெளியை இஸ்ரேலிய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அணுசக்தி அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களை அடைய நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நாங்கள் தெஹ்ரான் குடிமக்களிடம் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்யோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றது. இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போரின் முடிவு தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. போர்நிறுத்த பேச்சுவார்த்தை இந்நிலையில் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்திவருகிறது. ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியமை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. https://tamilwin.com/article/israel-has-full-control-of-tehran-s-airspace-1750085552