Aggregator
பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ வழி நடத்த முதல் முறையாக பெண் நியமனம்
பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ வழி நடத்த முதல் முறையாக பெண் நியமனம்
Published By: DIGITAL DESK 3
17 JUN, 2025 | 12:22 PM
“MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.
MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார்.
MI6 மற்றும் MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் - புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.
பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார்.
மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்,
“MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் - சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி,
“எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 - MI5 மற்றும் GCHQ உடன் - முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு
17 JUN, 2025 | 02:06 PM
வடபகுதியில் பல மனிதபுதைகுழிகள் உள்ளதாக வெளியாகியுள்ள உறுதிப்படுத்தப்படாத வாய்மொழிமூலதகவல்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடாது என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் பல மனித புதைகுழிகள் குறித்து வாய்மொழி மூல உறுதிப்படுத்தப்படாத தகவல்களே வெளியாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக புளோரிடாஅனுப்பவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் - ராஜ்சோமதேவ
செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் - ராஜ்சோமதேவ
Published By: RAJEEBAN
17 JUN, 2025 | 02:29 PM
மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம்-இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது
செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்பேராசிரியர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள் பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜசீராவிற்கு(ஜீவன் ரவீந்திரன் ) இதனை அவர் தெரிவித்துள்ளார்
உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்துள்ள அவர் திகதிகளுடன் காணப்படும் பொலித்தீன் உறைகள் அல்லது ஆடைகள் போன்ற உடல்களுடன் மீட்கப்பட்ட பொருட்களை போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்
நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார்
மன்னார் புதைகுழி விவகாரத்தை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள சோமதேவ, மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்தவாரமேஉடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ. குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிப்பதற்கான விதிகளில் மாற்றம் - ஐசிசி புதிய விதிகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், க.போத்திராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
17 ஜூன் 2025, 03:51 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்
சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்போது புதிய விதிகளையும், ஏற்கெனவே இருக்கும் விதிகளையும் காலத்துக்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாற்றி, இன்னும் உயிர்ப்புடன் கிரிக்கெட்டை வைத்திருக்கிறது.
ஆட்டத்தில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த வேண்டி விதிகளில் மாற்றம் செய்வது, புதிய விதிகளைப் புகுத்துவது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரிக்கெட் விளையாட்டின் அம்சங்களை மறுஆய்வு செய்து, விமர்சனங்களுக்கு ஏற்ப விதிகளில் மாற்றத்தையும், புதிய விதிகளையும் ஐசிசி அவ்வப்போது அறிவிக்கும். இது உலகக் கோப்பைத் தொடக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கியத் தொடர்களுக்கு முன்பாக ஐசிசி அறிவிக்கும். அந்த வகையில், ஏற்கெனவே இருக்கும் இரு விதிகளில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்து ஒப்புதல் அளித்துள்ளது.
ஐசிசி அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஜூன் 17ம் தேதி (இன்று) நடைமுறைக்கு வருகிறது. ஒருநாள் போட்டிகளில் ஜூலை 2ம் தேதியும், டி20 போட்டிகளில் ஜூலை 10ம் தேதியும் சர்வதேச அளவில் நடைமுறைக்கு வருகிறது.
இந்த புதிய விதிகள் என்ன? அவை யாருக்கு சாதகமாக அமையும்?
ஐசிசி கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியிலும், அனைத்து சர்வதேச போட்டிகளிலும் கன்கசனில் (தலையில் அடிபடும் வீரர்) வெளியேறும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதியிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் இரு பந்துகளை பயன்படுத்தும் விதியில் ஐசிசி மாற்றம் கொண்டு வந்துள்ளது.
ஒருநாள் போட்டியில் இரு பந்துகளை பயன்படுத்துவதில் மாற்றம்
தற்போது ஒருநாள் போட்டிகளில் பந்துவீசும் அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு இரு பந்துகளைப் பயன்படுத்துகிறது. ஒரு முனையிலிருந்து வீசுவதற்கு ஒரு புதிய பந்தும், மறுமுனையில் இருந்து வீசும்போது ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தலா 25 ஓவர்களுக்கு ஒரு புதிய பந்து, பந்துவீசும் அணியால் பயன்படுத்தப்படுகிறது.
இந்த விதியில் ஐசிசி மாற்றம் கொண்டுவந்துள்ளது. இதன்படி, இன்னிங்ஸ் தொடக்கம் முதல் 34 ஓவர்களுக்குள் இரு புதிய பந்துகளையும் பந்துவீசும் அணி பயன்படுத்த வேண்டும். அதாவது 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும், அடுத்த 17 ஓவர்களுக்குள் ஒரு புதிய பந்தும் பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இரு பந்துகளில் இருந்து ஏதாவது ஒரு பந்தையே கடைசி 15 ஓவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சமநிலையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டால் என்னாகும்?
மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கும் குறைவாக குறைக்கப்பட்டால், பந்துவீசும் அணி ஒரு புதிய பந்து மட்டுமே பயன்படுத்தி பந்துவீச வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. வழக்கமாக 2 பந்துகள் பயன்படுத்தும் விதி இதற்குப் பொருந்தாது.
ஐசிசி கன்கசன் விதியில் கொண்டுவந்துள்ள மாற்றம் என்ன?
கன்கசன் (தலையில் அடிபடும் வீரர்) முறையில் ஒரு பேட்டர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், அல்லது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரைக் கொண்டுவருவது குறித்து ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, போட்டி தொடங்கும் முன்பே இரு அணிகளும் கன்கசனுக்கான மாற்று வீரர் குறித்த பட்டியலை போட்டி நடுவரிடம் வழங்க வேண்டும். அந்த 5 வீரர்களில் ஒரு விக்கெட் கீப்பர், ஒரு பேட்டர், ஒரு வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் இருக்குமாறு வீரர்கள் பெயரை வழங்க வேண்டும்.
கன்கசனில் எந்த மாதிரியான வீரர் வெளியேறுகிறாரோ, அதற்கு ஏற்றபடியே மாற்று வீரரை களமிறக்க வேண்டும். ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு தலையில் அடிபட்டு கன்கசனில் வெளியேறும் நிலையில், அவருக்குப் பதிலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர்தான் வர வேண்டும். ஒரு பேட்டர் தலையில் அடிபட்டு கன்கசனில் சென்றால் அவருக்குப் பதிலாக பேட்டர்தான் வர வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடு விதித்துள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது
கன்கசன் விதியில் திருத்தம் செய்ய என்ன காரணம்?
கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி செய்த செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுதான் காரணம். கன்கசனில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே தொடர்ந்து விளையாட முடியாமல் போகவே அவருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்சித் ராணாவை விளையாட வைத்தனர்.
அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக இருந்தார். கன்கசன் மாற்று வீரருக்கு பேட்டிங் ஆல்ரவுண்டருக்குப் பதிலாக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சேர்க்க போட்டி நடுவர் ஒப்புதல் அளித்தது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து, கன்கசனில் மாற்று வீரராகக் களமிறங்குவோருக்கு குறிப்பிட்ட ரோலில் களமிறங்க வேண்டும் என்ற விதியை ஐசிசி கொண்டுவர திட்டமிட்டது.
அதாவது, பந்துவீச்சாளர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை விளையாட வைக்கலாம், விக்கெட் கீப்பர் கன்கசனில் சென்றால், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக விக்கெட் கீப்பரை விளையாட அனுமதிக்கலாம் என்று விதிகளைக் கொண்டுவந்துள்ளது.
பவுண்டரி எல்லையில் கேட்ச் விதிகளில் மாற்றம் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் "பன்னி ஹாப்" (bunny hop) முறைக்கு, அதாவது பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்தால் அதை வானில் தூக்கிப் போட்டோ அல்லது தட்டிவிட்டோ பீல்டர் பவுண்டரி எல்லைக்குள் வந்து கேட்ச் பிடிக்கும் முறைக்கு எம்சிசி (மெர்ல்போர்ன் கிரிக்கெட் கிளப்) தடை விதித்துள்ளது.
ஆட்டத்தில் முக்கியத் திருப்புமுனையாக சில கேட்சுகள் அமையக்கூடும். அதில் பவுண்டரி எல்லைக்கு வெளியே கேட்ச் பிடித்து அல்லது கேட்ச் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஒரு பீல்டர் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும்போது பந்தை வானில் தூக்கி வீசியோ அல்லது மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசியோ கேட்ச் பிடிக்கிறார்கள். இந்த கேட்சில் பல்வேறு சந்தேகங்களும், பீல்டிங்கில் இருக்கும் நேர்மைத் தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. இதையடுத்து, முற்றிலுமாக பன்னிஹாப் கேட்சுக்கு எம்சிசி தடை விதித்துள்ளது.
இதன்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே செல்லும் பந்தை கேட்ச் பிடிக்க பந்தை ஒருமுறை மட்டுமே தட்டி பிடிக்க வேண்டும், பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்லும் பந்தை பிடிக்க முற்பட்டு, வானில் பலமுறை தட்டிவிட்டு மீண்டும் பவுண்டரி எல்லைக்குள் பீல்டர் வந்து பிடிக்கும் முறை இனி செல்லாது. அவ்வாறு 2வது முறையாக பந்தை கையால் தட்டிவிட்டு பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது.
பந்தை தட்டிவிட்டு கேட்ச் பிடிக்கும் முன்பாக, பீல்டர் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும், பந்தை பிடித்த பின்பும் பவுண்டரி எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். பந்தை தொட்ட பின் பீல்டர் பவுண்டரி எல்லைக்கு அப்பால் சென்றாலோ அல்லது பவுண்டரி எல்லையைக் கடந்து பந்தை பலமுறை அந்தரத்தில் தட்டிவிட்டு பவுண்டரி எல்லைக்குள் வந்தபின் பீல்டர் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது. அது சிக்ஸராக அல்லது பவுண்டரியாக கருதப்படும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, ஐபிஎல் ஆட்டம் ஒன்றில் சிஎஸ்கே வீரர் பிரேவிஸ் அபாரமாக கேட்ச் பிடித்த காட்சி
மாற்றம் கொண்டுவர என்ன காரணம்?
ஆஸ்திரேலியாவில் 2023 சீசன் பிக்பாஷ் லீக் டி20 போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர் இடையிலான போட்டியில் பிடிக்கப்பட்ட கேட்ச்-தான் விதியில் திருத்தம் செய்ய காரணமாக அமைந்தது. சிட்னி சிக்ஸர் அணி வீரர் ஜோர்டான் சில்க் லாங் ஆன்திசையில் அடித்த ஷாட்டை பிரிஸ்பேன் வீரர் நீசர் கேட்ச் பிடித்தார்.
நீசர் கேட்ச் பிடித்தபோது, பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் பறந்துகேட்ச் பிடித்தார், கேட்ச் பிடித்த அடுத்த நொடியே பந்தை வானில் தூக்கி வீசி பவுண்டரி எல்லைக்குள் நீசர் வந்து, மீண்டும் அந்தரத்தில் குதித்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். நீசர் கேட்ச் பிடித்தபோது அவரின் இரு கால்களும் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் இருந்ததே தவிர தரையில் படவில்லை, கேட்ச் பிடித்த பிறகு அவர் தனது காலை பவுண்டரி எல்லைக்குள் வைத்தார் என்பதால் இது கேட்சாக அறிவிக்கப்பட்டது. இந்த முறையில் நீசர் கேட்ச் பிடித்தது பெரிய சர்ச்சையானது, பன்னி ஹாப் முறையில் பிடிக்கும் கேட்சுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்த நிலையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.
ரிலே கேட்சில் வந்துள்ள மாற்றம் என்ன?
பழைய விதியின்படி, ஒரு பீல்டர் கேட்ச் பிடித்த தருணத்தில் அவர் பந்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே செல்ல முயலும்போது, பந்தை மற்றொரு பீல்டரிடம் தூக்கி வீசும்போது அந்த பீல்டரும் பவுண்டரி எல்லைக்குள் இருந்தவாறே அந்த பந்தை பிடித்தால் அது கேட்சாக கருதப்படும்
ஆனால், புதிய விதியின்படி முதல் பீல்டர் அல்லது பந்தை இரண்டாவதாக பிடிக்கும் சகவீரர் பந்தை கேட்ச் பிடித்து முடிக்கும்போது கண்டிப்பாக பீல்டிங் எல்லைக்குள்தான் இருக்க வேண்டும். ஒருவேளை பந்தை கேட்ச் பிடிப்பதற்கு முன்பே, கேட்ச் பிடிக்கும் வீரர் பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று கேட்ச் பிடித்து, அதை தூக்கி வீசி மற்றொரு வீரருக்கு வீசி எறிந்து அவரும் கேட்ச் பிடித்தால் அது கேட்சாக கருதப்படாது, அது பவுண்டரி அல்லது சிக்ஸராகவே கருதப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு