Aggregator

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

2 months 3 weeks ago
சும்மா இருந்த உக்கிரேனை ரசியாவுக்கு பாடம்புகட்டப் போய் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி ஆகியது அமெரிக்காவும் ஐரோப்பாவுமே.

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!

2 months 3 weeks ago
💐 நினைவஞ்சலி 💐 யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் சிறந்த சத்திரசிகிச்சை நிபுணராகப் பணியாற்றி, அமைதியான பண்பும், அர்ப்பணிப்பும், அன்பும் கொண்டிருந்த யாழ். இந்துவின் பெருமைமிகு மைந்தர், வைத்தியர் வெங்கடாசலம் சுதர்சன் அண்ணா அவர்கள், சுகயீனம் காரணமாக எம்மை விட்டு பிரிந்துச் சென்றார். மருத்துவத் துறையில் தமது ஆற்றலும் அறிவும் முழுமையாக அர்ப்பணித்து, நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் காக்கக் காரணமாக இருந்து, சமூகத்தின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த அன்னாரின் திடீர் பிரிவு எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் இனிய நினைவுகள் என்றும் எம்முடன் நிலைத்திருக்கும். இறைவன் அன்னாரின் ஆன்மாவை சாந்தியடைய அருள்புரிவானாக. துயருற்ற குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், எமது இதயபூர்வமான அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏 ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 Yarl Gulan

கொழும்பிற்கு வருகிறது அமெரிக்க கடற்படையின் லிட்டோரல் போர்க்கப்பலான சான்டா பாப்ரா

2 months 3 weeks ago
மற்றுமொரு ரோந்துக் கப்பலை இலங்கை்கு வழங்கவுள்ளோம் : சான்டா பாப்ரா போர் கப்பலின் வரவேற்பின்போது அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவிப்பு Published By: PRIYATHARSHAN 16 AUG, 2025 | 03:43 PM உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும் என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்தார். சான்டா பாப்ரா என்ற அமெரிக்க போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதர் ஜூலி சங், அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான நீடித்த நல்லுறவின் சக்திவாய்ந்த சின்னமாக விளங்கும் U.S.S. Santa Barbara கப்பல், முதல் முறையாக இலங்கைக்கு வருகை தரும் இந்த தருணத்தில், நான் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். கப்பலின் கட்டளைத் தளபதி ஆடம் ஓக்ஸ், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி சம்பத் துயாகொந்தா, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொட ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் அவர்களது தொடர்ச்சியான தலைமைத்துவத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் நான் நன்றி கூறுகிறேன். வேகம், சுறுசுறுப்பு மற்றும் மேம்பட்ட நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட கடலோரப் போர் கப்பலான U.S.S. Santa Barbara-வின் வருகை வெறும் ஒரு துறைமுக வருகை மட்டுமல்ல. இது நமது நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவைப் பிரதிபலிக்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதார வளம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய பொதுவான இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல இணைந்து செயல்பட்டு வருகின்றன. உலக வர்த்தகத்திற்கு இந்தியப் பெருங்கடல் மிகவும் முக்கியமானது. அதன் மூலோபாய இருப்பிடத்தால், இந்த கடல் வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. போதைப்பொருள் கடத்தல், ஆட் கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட நாம் இணைந்துள்ளோம். இது பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு பங்களிக்கிறது. கடல்சார் பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகள் ஊக்கமளிக்கின்றன. Santa Barbara கப்பலின் குறிக்கோள் "நெகிழ்வு மற்றும் உறுதிப்பாடு" ("Resilient and Determined") என்பதாகும். அதேபோல், இலங்கை கடற்படைக்கும் அது பொருந்தும். 2024-ல் Operation Prosperity Guardian-ன் ஒரு பகுதியாக அரேபிய கடற்பரப்பில் கடற்படை ஈடுபட்டதும், இந்த ஆண்டு Combined Maritime Force – Task Force 154 அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றதும், இப்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க இலங்கை கடற்படை தயாராக இருப்பதைக் காட்டுகிறது. இலங்கையின் இந்த முயற்சிகளை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. முன்னர் வழங்கப்பட்ட மூன்று அமெரிக்க கடலோரக் காவல் கப்பல்களான Samudura, Gajabahu மற்றும் Vijayabahu ஆகியவை இலங்கையின் கடற்பரப்பில் தீவிரமாக ரோந்து சென்று சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதோடு, மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில், நான்காவது ரோந்து கப்பலை நாங்கள் அன்பளிப்பாக இலங்கைக்கு வழங்குவோம், இது இலங்கையின் கடல்சார் பாதுகாப்பிற்கான திறனை மேலும் வலுப்படுத்தும். U.S.S. Santa Barbara கப்பலின் வருகை, நமது நல்லுறவின் வலிமையையும், சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான நமது பொதுவான உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இந்த மதிப்புகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவோம். மேலும், உலகின் இந்த முக்கியப் பகுதி ஸ்திரத்தன்மை மற்றும் வாய்ப்புகளின் கலங்கரை விளக்கமாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/222690

இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த 'ராஜேந்திர சோழன்'

2 months 3 weeks ago
சோழர் ஆட்சி பொற்காலமா? நீர், நில மேலாண்மை, சாதிய சமூக கட்டமைப்பு பற்றிய ஒரு பகுப்பாய்வு பட மூலாதாரம், KALANIDHI கட்டுரை தகவல் கா.அ.மணிக்குமார் பேராசிரியர் (ஒய்வு) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 16 ஆகஸ்ட் 2025, 03:53 GMT "என் நாட்டு மக்கள் இதைப் பார்த்தால் பரவசமடைவார்கள்; இதை விவரிக்க அவர்களால் முடியாது. பின் எப்படி இது போன்றதைக் கட்டமைக்க அவர்களால் சிந்திக்க முடியும்" கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரனால் கட்டப்பட்ட பதினாறு மைல் நீளம், நான்கு மைல் அகலம் கொண்ட "சோழ கங்கம்" ஏரியைக் கண்டு மனித நாகரிகத்தில் மிகவும் முன்னேறியிருந்த அரபு நாட்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த அறிஞர் அல்பெருனி வியந்து கூறிய வார்த்தைகள் இவை. நீர்ப்பாசன நிர்வாகம் வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வீழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு சில பேரரசுகள் மட்டும் சிறப்புமிக்க சில சாதனைகளுக்காக மக்களின் மனதில் நீங்கா நினைவில் வாழ்கின்றன. அத்தகைய வரிசையில் சோழப் பேரரசு நீர்ப்பாசன வேளாண்மைக்காகவும், உள்ளாட்சி நிர்வாகத்திற்காகவும் இன்றும் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தை வகிக்கிறது. கரிகாலன் பாரம்பரியத்தில் வந்த சோழ மன்னர்கள் குளங்கள், ஏரிகளை வெட்டி மழை நீர், ஆற்று நீர் ஆகியவற்றைச் சேகரித்து வேளாண்மையைப் பெருக்கினர். அவற்றில் சிறப்புமிக்கவை சோழ கங்கம், மற்றொன்று வீராணம். நிலங்களை வகைப்படுத்துதல் முறை பராந்தகனின் கல்வெட்டுகள் ஒன்றில் ஆறு வகை நிலங்கள் குறிப்பிடப்பட்டன. அனைத்து நெல் வயல்களும் நீர்-நிலம் (நன்செய்) என வகைப்படுத்தப்பட்டன. வறண்ட நிலம் புன்செய் என்று குறிப்பிடப்பட்டது. இவை நெல் அல்லாமல் இதர தானியங்கள் விளைந்த நிலங்களாகும். மூன்றாவது வகை தோட்ட நிலமாகும். ஆங்கிலேயர்கள் இம்மூன்று வகைகளை ஏற்றனர். நான்காவது வகை களர்-நிலம் (உப்பு நிலம்) ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் ஒரு கல்வெட்டு, கால்நடைகளைப் பார்ப்பதற்கான நிலங்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு வகையைக் குறிப்பிடுகிறது. இதை ஆங்கிலேயர் மேய்ச்சல் என்று தங்கள் ஆவணங்களில் பதிவு செய்தனர். தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது வகை நிலம் தரிசு; இதை ஆங்கிலேயர்கள் தங்கள் பதிவுகளில் "பஞ்சார்" என்று குறிப்பிட்டனர். நிலஉடைமை முறைகளும், வாரியங்களும் காடுகளை அகற்றுதல், நீர்ப்பாசனக் குளங்கள், கால்வாய்கள் வெட்டுதல் போன்றவற்றுக்கு கூட்டு முயற்சி தேவைப்பட்டது, கல்வெட்டுகளில் காணப்படும் சபா-மஞ்சிகம், ஊர்-மஞ்சிகம், மற்றும் ஊர்ப்பொது ஆகிய சொற்கள் சோழர் காலத்திய நிலத்தில் கூட்டுடைமை உரிமையைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்மதேயம், தேவதானம், ஆங்கிலேயரது இரயத்வாரி நிலங்களைப் போன்ற வேளாண் வகை, போர்க்காலங்களில் மன்னரின் இராணுவ சேவைக்குத் தயாராக இருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களைப் பராமரிப்பதற்காக நிலப்பிரபுகளுக்கு "படைபற்று" போன்ற நிலஉடைமைகள் உருவாக்கப்பட்டிருந்தன. பிரம்மதேயம், தேவதானம் அரசுக்கும் விவசாயிக்கும் இடையில் ஒரு இடைநிலையை உருவாக்க வழிவகுத்தது. பிரம்மதேயத்தில், பொதுவாக, ஒரு பிரம்மதேய நிலம் பல பங்குதாரர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஆனால் ஏகபோக பிரம்மதேயம் ஒரு தனிநபருக்கு மட்டுமே உரிமை உடையதாக இருந்தது. "குடிநீக்கா" அல்லது "குடிநீக்கி" என இரு வகையான கிராமங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. "குடிநீக்கி" கிராமங்களில் பிராமண நிலஉரிமையாளர்கள், குத்தகைதாரர்களையும் விவசாய தொழிலாளர்களையும் வெளியியிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது. கோயில்களால் நிர்வகிக்கப்பட்ட தேவதான நிலங்கள் கிராம சபை மற்றும் அரசு மேற்பார்வையில் இருந்தன. தரிசு நிலங்களும், வன நிலங்களும் பெயரளவு வருடாந்திர வாடகைக்கு கோயில்களுக்கு வழங்கப்பட்டன. கோயில்கள் இந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு சாகுபடி செய்தன. நிலத்தை உழுதல், சமன் செய்தல், நீர்ப்பாசனம் வழங்குதல் ஆகியவை குத்தகை நிபந்தனைகளாக இருந்தன. பொதுவாக, கோயில் நிலங்களை பயிரிட்டவர்கள் வழங்க வேண்டிய சேவைகள் கோயில்களில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்குதல், வழிபாடு நடத்துதல் மற்றும் கோயிலைக் கண்காணித்தல் போன்ற வடிவங்களில் இருந்தன. மன்னரின் முன் அனுமதி இல்லாமல் கோயில் நில குத்தகைதாரர்களை அகற்ற முடியாது. படக்குறிப்பு, முதலாம் பராந்தகன் ஆட்சியில் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை வெளிப்படுத்தும் கல்வெட்டு உள்ளாட்சி நிர்வாகம் பல சோழர் கால மகாசபை கல்வெட்டுகள் சாகுபடியின் பல்வேறு அம்சங்களை மேற்பார்வையிடும் கிராம சபையின் குழுக்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. இரண்டு முக்கியமான குழுக்கள் ஏரி வாரியம், தோட்ட வாரியம். பயிரிடப்பட்ட நிலங்களின் பொது மேற்பார்வைக்கு கழனி-வாரியம், மதகுகளைப் பராமரிக்க கலிங்கு-வாரியம், மற்றும் சாகுபடி வயல்களைச் சுற்றியுள்ள பாதைகள் மற்றும். சாலைகளை பராமரிக்க தடிவழி-வாரியம் அமைக்கப்பட்டிருந்தது. எந்தெந்த ஊர்களின் வழியாக பெருவழிகள் சென்றனவோ அந்தந்த ஊர்களில் வணிகர்களிடமிருந்து தடிவழி வாரியம் மூலம் பராமரிப்பு வரிகள் பெறப்பட்டன. ஊர், நாடு, நகரம், பிரம்மதேயம் (பிராமணர் குடியிருப்புகள்) ஆகியவை சோழர்களின் நிர்வாக அமைப்புகளாகும். ஊர் என்பது பிரம்மதேயமல்லாத கிராமம். சில கல்வெட்டுகளில் காணப்படும் 'ஊர் உழுதுகொண்டு' என்ற சொற்றொடர், நிலம் ஊர் மக்களால் பயிரிடப்பட்டதைக் குறிக்கிறது. நொபுரு காராஷிமா ஆய்வு செய்த சோழமண்டலத்தில் உள்ள அல்லூரில், ஊர்ப் பொது நிலம் அங்கு குடியிருந்தவர்களால் பயிரிடப்பட்டது. அதே நேரத்தில் கோயில், அர்ச்சகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்குச் சொந்தமான மற்ற நிலங்கள் உள்ளூர் மக்களைத் தவிர "புறக்குடி" என அழைக்கப்பட்ட வெளியூர் மக்களால் பயிரிடப்பட்டன. இவர்கள் நிரந்தர குத்தகைதாரர் அந்தஸ்து அல்லாதவர்கள் ஆவர். 'நாடு' என்பது பல சிற்றூர்கள் சேர்ந்த விவசாயப் பகுதிகள். வேளாண் சமூகக் கட்டமைப்பின் ஒரு சிறிய வடிவம். ஒவ்வொன்றும் திருமணம் மற்றும் இரத்த உறவால் பிணைக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைக் கொண்டிருந்தது. ஏராளமான கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'நாட்டார்' அப்பகுதியில் மன்னரிடமிருந்து நில உரிமை சாசனத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியவர்கள்; தங்களுக்குரிய பகுதியில் நிலங்களை வகைப்படுத்தி பதிவு செய்தனர். நீர்ப்பாசனக் குளங்களைச் சார்ந்திருந்த நிலங்களின் முழு உற்பத்தித்திறனையும் உபயோகிக்க அவர்களுக்கு உரிமை இருந்தது. நாட்டார்களின் ஆதிக்கம், அவர்களின் பகுதியில் கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத் திறனை அடிப்படையாகக் கொண்டது. சோழ அரசின் சோழமண்டல கடலோரப் பகுதியில் வலதுகைப் பிரிவைச் சேர்ந்த வலங்கை வேலைக்கார வீரர்கள் அடங்கிய சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ அமைப்பு அத்தகைய தோர் ஏற்பாட்டின் அங்கமாகும். வருவாய் கணக்கெடுப்பு மற்றும் தீர்வை நிர்ணயம் செய்தது நாடு-சேய் அல்லது நாடு-வகை-சேய் அதிகாரி ஆவார். தமிழகத்தை ஆண்ட சோழப்பேரரசு கடலாதிக்கம் செலுத்திய ஒரு ஏகாதிபத்திய பேரரசு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி இப்பேரரசை கிழக்கு ரோமப் பேரரசான பைசாண்டின் (கான்ஸ்டான்டிநோபிள்- இன்றைய இஸ்தான்புல்-) பேரரசோடு ஒப்பிட்டார். சோழ நாடு ஒரு பேரரசாக உருவாவதில் முக்கிய பங்காற்றியவர்கள் இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் முக்கிய இடம் வகிக்கின்றனர். இராஜராஜ சோழன் சோழ மன்னர்களில் ராஜராஜன் பதவியேற்கும் போது அரசியல் ரீதியாக சாதகமானதொரு சூழல் இருந்தது. வடக்கிலிருந்து பெரும் அச்சுறுத்தலாக இருந்த ராஷ்டிரகூடர்கள் சாளுக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். முதலாம் பராந்தகன் தெற்கே பாண்டிய நாட்டு கடைசி முக்கிய மன்னனான இரண்டாம் ராஜசிம்மனைத் தோற்கடித்து "மதுரை கொண்டான்" என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டிருந்தார். ராஜவர்மன் இலங்கைக்குத் தப்பி ஓடி தனது கிரீடத்தையும் கழுத்தில் அணியும் பதக்கங்களையும் இலங்கை மன்னனிடம் கொடுத்துவிட்டு கேரளாவில் தனது தாயின் ஊருக்குச் சென்று விட்டார். ஆட்சி பறிபோன பிறகு (920), கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கழித்தே (1216), மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியை மீட்டு அரியணையில் அமர்ந்தார். இலங்கை மீதான படையெடுப்பு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கு எதிராக முதலாம் நரசிம்மனுக்கு இலங்கை அரசன் மானவம்மன் உதவியதாலும் பின்னர் மானவம்மன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட போது நரசிம்மவர்மன் மானவம்மன் மீண்டும் அரியணையில் அமர உதவியதாலும் பல்லவர் காலத்தில் இலங்கையுடனான அரசியல் தொடர்பு நெருக்கமாக இருந்திருக்கிறது. பல்லவர் காலத்தில் மகாபலிபுரம் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்திருக்கிறது. அதன் மூலமாக ஏற்பட்ட சமூக-கலாசார பாதிப்புகள் இரு நாடுகளிலும் வெளிப்பட்டன. இலங்கையில் கோவில் கட்டடக்கலை, சிற்பங்கள் அனைத்திலும் பல்லவர் தாக்கத்தைப் பார்க்கமுடியும். ஆனால் சோழர் காலத்தில் அரசியல் சூழல் மாறியிருந்தது. இராஜராஜன் தான் பதவிக்கு வந்தவுடன் இலங்கையின் மீது தாக்குதல் நடத்த பாண்டிய நாட்டின் மீதான ஆதிக்கம் அவசியம் என உணர்ந்தார். தன் இளம் வயதிலேயே மலபார் கடற்கரையில் சேர மன்னரைத் தோற்கடித்து சோழர்களின் கடற்படை வலிமையை வெளிப்படுத்தியிருந்தார். தனது ஆட்சி எல்லைக்கு மேற்குப் பகுதிகளில் இருந்த சேர மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை சோழ பேரரசுப்பகுதிகளோடு இணைத்தார். பாண்டியர் ஆட்சி முடிவடைந்திருந்தாலும் பாண்டிய இளவரசர்கள் இலங்கை அரசருடன் கூட்டு சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக தொடர்ந்து சதியில் ஈடுபட்டு வந்ததால் தனது ஆதிக்கத்தை அங்கு நிறுவிட எண்ணி இலங்கையின் மீது படையெடுத்தார். அங்கு ஐந்தாம் மகிந்தா பதவி ஏற்ற சூழலில் அங்கு அவரது படைவீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் தனது ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டினார். தலைநகர் அனுராதபுரம் தரைமட்டமாக்கப்பட்டது. பொலநருவா சோழர் தலைநகரானது. இராஜராஜன் காலத்திலேயே அங்கு ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. இராஜராஜன் ஏற்கனவே தான் சூட்டியிருந்த ஜெகநாதன் என்ற பெயரில் அந்நகருக்கு ஜெகநாதமங்களம் எனப் பெயரிட்டார். மற்றொரு சிவன் கோவில் அவரது அதிகாரி தளி குமரன் என்பவரால் கட்டப்பட்டு பேரரசரின் பெயரில் ராஜராஜேஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டது. காட்டிற்குள் தப்பியோடிய இலங்கை அரசன் பிடிபட்டு சோழ மன்னர் சிறையில் தனது எஞ்சியிருந்த 12 ஆண்டு காலத்தை கழித்து உயிரிழந்தார். இராஜராஜன் தான் அரியணை ஏறிய பத்து ஆண்டுகளுக்குள் தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டி, நிலையானதோர் ஆட்சியை அமைத்தார். ராஜராஜனின் இறுதிக்காலம் தென் தக்காணத்தில் பல்லவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களுடன் போர் புரிவதில் கழிந்தது. பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம். ராஜேந்திர சோழன் 1012இல் ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் சாளுக்கியர் அச்சுறுத்தலை முழுவதும் முறியடிக்கும் நோக்கில் சாளுக்கிய மன்னர் மூன்றாம் ஜெயசிம்மனை போரில் வென்றதோடு (1020), வடக்குநோக்கி மேலும் முன்னேறி ஒரிசா, கோசல நாட்டு மன்னர்களையும் வென்றார். வட இந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் சூழல் ராஜேந்திரனுக்கு மிகச் சாதகமாக இருந்தது. அதுவரை அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய பிரத்திகாரர், பாலர் பேரரசுகள் பலம் குன்றி நலிவடைந்திருந்தன. ஆதலால் கன்னோஜ் அரசன் கோவிந்த சந்திரா, வங்காளத்து மஹிபாலன் ஆகியோரையும் தோற்கடித்து அவரது படை கங்கைக்கரையை சென்றடைய முடிந்தது. இவ்வெற்றிகளின் நினைவாக பின்னர் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டத்தைச்சூடியதை நாம் அறிவோம். தான் அரியணை ஏறிய ஐந்தாம் ஆண்டில் மகிந்தாவின் ஆட்சியின் போதே ராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்து (1017) இலங்கையை வென்றார். ஏராளமான கொள்ளைப் பொருள்களுடன் சோழர் வெற்றிப்படை அங்கிருந்து திரும்பியது. பராந்தகனாலும் இராஜ ராஜ சோழனாலும் செய்ய முடியாத பாண்டிய மன்னரின் கிரீடம், பரம்பரை நகைகள், ஒடிக்க முடியாத வாள், விலைமதிக்க முடியாத வைரக்காப்பு, கற்களாலான பதக்கங்கள் அனைத்தையும் ராஜேந்திரன் மீட்டு வந்தார். இராஜேந்திரன் அனுப்பிய கப்பற்படை வங்கக்கடலைக் கடந்து ஸ்ரீ விஜயா பேரரசின் கீழ் இருந்த மலேயா தீபகற்பத்தில் கடாவை (காந்தாரம்) வென்று சோழராதிக்கத்தை நிலைநாட்டியது. கல்வெட்டுப் பதிவுகளின் படி ஸ்ரீவிஜயத்தைத் தாக்கிய பிறகு முதலாம் இராஜேந்திரன் சங்கிராம் விஜயதுங்கவர்மனை கைது செய்து ஸ்ரீவிஜயத்தின் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட வித்யாதர தோரணம் உட்பட பல விலைமதிப்பற்ற பொருள்களைப் பறித்தார். இராஜராஜனும் இராஜேந்திரனும் அந்நிய நாட்டு எதிரிகளை முழுமையாக முறியடித்து உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பின் தான் கோவில் கட்டுதல், புதிய தலைநகர் கட்டுவது, போன்ற பணிகளில் ஈடுபட்டனர். தஞ்சை பெரிய கோவில் (இராஜராஜேஸ்வரர் கோவில்) இராஜராஜனின் 20ஆம் ஆண்டு ஆட்சியின் போது, அதுவும் மகனிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்தபின் (1012) கட்டப்பட்டது. வெளிநாட்டு வணிகத்தொடர்பு பண்டைய உலகின் "புதையல் பெட்டியாக" இந்தியா விளங்கியது என்று புதைபொருள் ஆய்வாளர் பீட்டர் பிரான்சிஸ் கூறுகிறார். உலகச்சந்தை உருவாக சோழப் பேரரசின் துறைமுகங்களும், தமிழ் வர்த்தகக் குழுவினரும் முக்கிய காரணிகள் என வரலாற்றறிஞர் டான்சன் சென் குறிப்பிடுகிறார். தமிழர்களின் கடல் கடந்த நாடுகளுடனான வணிகத்தொடர்புகள் துறைமுகங்கள் பகுதிகளில் மட்டுமில்லாமல் உள்நாட்டிற்குள்ளும் விஸ்தரிக்கப்பட்டிருந்ததை கொடுமணல், உறையூர், ஆலங்குளம் போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள புதைபொருள் சான்றுகள் அடிப்படையில் நாம் அறிகிறோம். தென் இந்தியாவிலிருந்து முத்து, பவள மணிகள், மாணிக்கக் கற்கள் கண்ணாடி போன்றவை சீனாவிற்கு சென்றிருக் கின்றன. கடல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கவிழ்ந்த, விபத்துக்குள்ளான கப்பல்களிலிருந்து கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் என்னென்ன பொருள்கள் ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதைத் தெரிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஸ்ரீ விஜயா தலைநகரான பலெம் பாங்கிலிருந்து (சுமத்ரா) ஜாவாவிற்குச் செல்லும்போது கடலில் மூழ்கிய கப்பலில், சீன நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக வந்த கண்ணாடிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வெண்கலம், தகரம், ஈயம், இந்தோனீசியாவின் சிறப்பு அணிகலன்கள் மற்றும் வெள்ளி போன்றவை முக்கிய சரக்குகளாகக் காணப்பட்டன. ஸ்ரீவிஜயம் பத்தாம் நூற்றாண்டில் கடல் வணிகத்தில் தலை சிறந்து விளங்கியது. சுமத்ரா, மலேயா போர்னியோ, பிலிப்பைன்ஸ், மேற்கு ஜாவா, பார்மோசாவின் (தைவான்) பாதி இடங்களையும் கொண்டிருந்த பரந்து விரிந்திருந்த இந்த ஏகாதிபத்தியப் பேரரசு பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தான் நலிவடையத் தொடங்கியது. அத்தகையதொரு நாட்டை சோழப்பேரரசர்கள் போரில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள் சோழர்கள் தமிழகத்தை ஆண்ட விதம் மேற்கூறிய சாதனைகள் எல்லாம் சோழர்களால் சாதிக்க முடிந்ததற்குக் காரணம் அவர்களது அரசாண்மைத் தந்திரம். பிராமணர்கள், கோவில்கள், சமயநிறுவனங்கள், வர்த்தகக்குழுக்கள் அனைத்துடனும் ஒருங்கிணைந்த அரசாக தங்கள் அரசை அமைத்தார்கள். கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் சோழர் படை பெற்ற வெற்றிகளால் அப்பகுதிகளில் வணிகத்தொடர்பை விரிவாக்கம் செய்ய முடிந்தது; அதுபோல் இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் போரின் மூலம் வென்ற பகுதிகளின் மீதான ஆதிக்கத்தால் தான் அங்கு வணிகத்தொடர்பு தங்குதடையின்றி நீடித்தது என பேராசிரியர் சம்பக லெக்ஷ்மி கருதுகிறார். பேரரசின் ஆதரவைப் பெற்றிருந்த பெரும்பொருள் ஈட்டியிருந்த வணிகர்கள் கோவில்களுக்கும் சமயநிறுவனங்களுக்கும் தாராள நிதி வழங்கி சோழப் பேரரசைப் போற்றினர். பெரும்பாலும் மெய்க்கீர்த்தி சாசனங்கள், மகாசபை கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிவது அனைத்தும் மன்னர்களைப் பற்றியும் மேல்தட்டு மக்களைப் பற்றியுமே ஆகும். இருப்பினும் சிலவற்றில் குறிப்பிடப்படும் விவரங்கள் அக்கால அடக்குமுறையிலான சுரண்டல் சமூகத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு ஒரு உதாரணம். குடவோலை முறையில் மகாசபைக்கும் அதன் பல்வேறு வாரியங்களுக்கும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதாக அது பறைசாற்றுகிறது. ஆனால் அத்தேர்தல்களில் போட்டியிட, வாக்களிக்க, நிர்ணயிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நாம் படிக்கும்போது உண்மை நிலை நமக்குப் புரிகிறது. சொத்துரிமை கொண்ட, வேதங்களைக் கற்றறிந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியும். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆக பெரும்பான்மையான மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவோ அல்லது தங்கள் கருத்துகளைக் கூறவோ உரிமை இல்லை. சோழர்கள் மாபெரும் கோயில்களைக் கட்டினார்கள் என பெருமைப்படுகிறோம் ஆனால் அக்கோவில்களுக்குள் சூத்திரர்களாக முத்திரை குத்தப்பட்ட உழைப்பாளர்களில் பெரும்பகுதியினர் நுழைய முடியாது. சோழர் சாதனைகளுக்கு பின்னே ஒளிந்துள்ள 'அடிமை முறை' சோழ மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அரசுக்கு நீர்ப்பாசன அல்லது பொதுப்பணித் துறை எதுவும் இல்லை. ஏரிகள், குளங்கள் வெட்டுவது, அவற்றை பராமரிக்கும் பணிகள் அனைத்தும் தனிநபர்கள், கிராம சபைகள், கோயில்களிடம் விடப்பட்டன. மழை பெய்யும் முன் ஒவ்வொரு ஆண்டும் கிராம சபைகள் தூர் வார வேண்டும். வெட்டி, மஞ்சி போன்ற சொற்கள் அத்தகைய சேவை வழங்கிய பணியாளர்களைக் குறிக்கும். நதி நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரமாக இருந்த பகுதிகளில், நீர்தேக்கங்களைப் பராமரிக்கும் பொறுப்பு நிலத்தை வைத்திருப்பவர்களுடையதாகும். வெறுக்கத்தக்க அடிமை முறை அவர்கள் கடமையை ஆற்ற உதவியது. நிலவரி கொள்கை வேளாண் வகை கிராமங்களில், மேல்வாரம் அரசுக்குரிய பங்கு. குடிவாரம் நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவரின் பங்கு என பிரிக்கப்பட்டு நிலஉடமையாளரிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. மேல்வாரம், குடிவாரம் தவிர, நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயிகளாக இல்லாத இடங்களில், துண்டுவாரம் எனப்படும் பங்கு வசூலிக்கப்பட்டது. உதாரணமாக, கோயில், இராணுவ அதிகாரிகள், வணிகர்கள், அர்ச்சகர் கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் வைத்திருந்த நிலத்தின் விளைபொருட்கள் மேல்வாரம், குடி வாரம், மற்றும் துண்டு வாரம் எனப் பிரிக்கப்பட்டன. கிடைக்கக்கூடிய அனைத்து புள்ளிவிவரங்களும் வருவாயில் அதிக விகிதத்தை அரசு வரியாகக் கோரியதைக் குறிக்கின்றன. ராஜேந்திரனின் சிதம்பரம் கல்வெட்டின்படி, 4500 கலம் நெல் விளையும் 44 வேலி நிலத்திற்கான மேல்வாரம் மொத்த விளைச்சலில் 50% ஆகும். இதுதான் ஆங்கிலேயர்கள் நீர் நிலங்களுக்கு(நன்செய்) விதித்தது. இருப்பினும், சோழ ஆட்சியாளர்களின் நன்கு நிறுவப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் காரணமாக வரிவிதிப்பு அடக்குமுறையாகக் கருதப்படவில்லையா அல்லது விதிக்கப்பட்டிருந்த சமூகக் கட்டுப்பாடுகளால் எதிர்ப்பதற்கான சூழல் இல்லையா என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு வழிபாட்டுத் தலங்களை இடித்தல் சோழர் காலத்தில் பெரும் துறைமுகமாக இருந்த நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசன் விஜயோத்துங்க வர்மன் தனது நாட்டு மக்கள் வழிபட கட்டியதுதான் சூடாமணி விகாரம். இதைக் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனதாக இராஜராஜ சோழனின் 21ஆம் ஆண்டு ஆட்சியில் வெளியிடப்பட்ட சாசனம் தெரிவிக்கிறது. இதைப் பேணிப் பாதுகாக்க 97வேலி நிலங்கள் அடங்கிய 26 கிராமங்கள் தானமாக இராஜராஜ சோழனால் வழங்கப்பட்டிருந்தது. "சீன பகோடா" என அழைக்கப்பட்ட இது சுமத்ரா, ஜாவா கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டது. அதே விஜயதுங்கவர்மனை . ராஜேந்திர சோழன் போரில் வென்றபின் ஸ்ரீவிஜயாவில் பௌத்த விகாரைகளை இடித்து அவ்விடங்களில் சிவன் கோவில்கள் கட்டுகிறார். அக்காலத்தில் வழிபாட்டு தலங்கள் ஏகாதிபத்தியத்தின் சின்னமாகக் கருத்தப்பட்டது. இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் சோழப் பேரரசின் ஏகாதிபத்தியத்தின் அடையாளம். தில்லி சுல்தான்களாக இருந்தாலும் முகலாய மன்னர்களாக இருந்தாலும் எங்கே தனது பேரரசுக்கு அடங்கிப் போனார்களோ, அப்பகுதியில் கோவில் கட்ட நிலம் தானமாக வழங்கினார்கள். எங்கு தனது ஆட்சிக்கு சவால் வந்ததோ அங்கு வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன. ஔரங்கசீப் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தார் இந்தியாவில் கோவிலை இடித்த. முகமது கஜினி மத்திய ஆசியாவில் முஸ்லிம் மன்னர்களின் மீது போர் தொடுத்த போது தனது இந்து தளபதி திலக் என்பவரை அனுப்பி மசூதியை இடிக்கச் செய்தார். எந்த விதத்திலும் சோழ மன்னர்கள் சமகாலத்து (இடைக்கால) பேரரசர்களிடமிருந்து வேறுபட்டிருக்கவில்லை. அவர்கள் கடைபிடித்த அதே நடைமுறையையே பின்பற்றினர். பட மூலாதாரம், GETTY IMAGES சமூக வன்முறைகள் சோழர் ஆட்சி சாதிய பாகுபாடுகளை ஆழமாக சமூகத்தில் வேரூன்றச்செய்தது. அவ்வேறுபாடுகள் அவர்கள் காலத்திலேயே சமய வழிபாடுகளில் வெளிப்பட்டது. வலங்கையினர் (வேளாண் குடியினர்- உள்ளூர் மக்கள்) பெற்றிருந்த சிறப்பு உரிமைகளுக்கு இடங்கையினரிடமிருந்து (கைவினைஞர்கள்-வெளியூரிலிருந்து வந்து குடியிருந்தவர்கள்) எதிர்ப்பு கிளம்பியதால் பகைமை அதிகரித்தது. சோழர்ஆட்சி காலத்தில் காஞ்சிபுரத்தில் வலங்கை-இடங்கை பிரிவினர் ஒரே கோவிலில் கடவுள் தரிசனம் செய்யமாட்டார்கள்; மதச் சடங்குகளுக்காக ஒரே மண்டபத்தை பயன்படுத்த மாட்டார்கள்; தேவதாசிகள், நடனமாடும்பெண்கள் கூட இரு பிரிவினருக்கும் தனித்தனி தான் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின் போது இரு பிரிவினருக்கும் இடையே வெடித்த மோதலின் விளைவாக ராஜ மகேந்திர சதுர்வேதி மங்களம் (பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்) தீக்கிரையானது. அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு, விலைமதிப்பில்லா பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சாஸ்திரி சுட்டிக்காட்டுகிறார். (கட்டுரையாளர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjdyr57gz9mo

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

2 months 3 weeks ago
லொஹான் ரத்வத்தவின் மரணம் முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 16 AUG, 2025 | 02:19 PM ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் மரணம் கண்டி பிரதேசத்திற்கு மட்டுமல்ல முழு நாட்டுக்கே ஏற்பட்ட இழப்பு ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லொஹான் ரத்வத்த உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (15) காலமானார். லொஹான் ரத்வத்தவின் சடலத்தை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை (15) சென்றுள்ளனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222675

கொழும்பிற்கு வருகிறது அமெரிக்க கடற்படையின் லிட்டோரல் போர்க்கப்பலான சான்டா பாப்ரா

2 months 3 weeks ago
அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 16 AUG, 2025 | 03:05 PM அமெரிக்க கடற்படையின் போர் கப்பலான சான்டா பாப்ரா (u s s santa barbara) இன்று சனிக்கிழமை (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட கால நட்புறவின் சின்னமாக அமெரிக்க கடற்படையின் சான்டா பாப்ரா கப்பல் காணப்படுகின்றது. அமெரிக்காவும் இலங்கையும் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியப் பெருங்கடல் உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். அமெரிக்காவும் இலங்கையும் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு நோக்கங்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக தமது நட்புறவை பேணி வருகின்றது. அமெரிக்க கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் உள்ள நட்புறவை சான்டா பாப்ரா கப்பல் எடுத்துக்காட்டுகிறது. இது கடற்பாதுகாப்பிற்கான இலங்கையின் பங்களிப்புகளை ஊக்கமளிக்கின்றது. இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/222688

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 3 weeks ago
மன்னாரில் 14 ஆவது நாளாக தொடரும் போராட்டம் : கறுப்புப் பட்டி அணிந்து காற்றாலை, கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக கோஷம் 16 AUG, 2025 | 01:19 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு சனிக்கிழமை (16) ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். சனிக்கிழமை (16) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222678

புதிய காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய

2 months 3 weeks ago
புதிய பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்! 16 AUG, 2025 | 12:20 PM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என கடந்த 13 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு, பொதுமக்களிடமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222660

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

2 months 3 weeks ago
ஆம் உக்ரைன் தான் சண்டை பிடிக்கிறது பிடிக்கும். ஆனால் உக்ரைனில் அழிவை வேண்டும் என்றால் அமெரிக்கா ஐரோப்பா ஆயுதங்கள் குறைத்து இருக்கலாம்.

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 3 weeks ago
மன்னாரில் எப்படி நாசூக்காக காற்றாலைகளை நிறுவ இலங்கை அரசு முயல்கிறது என்று ஒரு விரிவான காணொளி. மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டேன் என்ற அனுர மின்சாரத்துக்காக நாம் ஒரு பகுதியை இழந்தேயாக வேண்டும் எனும் நிலைக்கு வந்துவிட்டார். சிங்கள பிரதேசங்களில் எவ்வளவோ இடங்கள் இருக்கும் போது ஏன் தமிழ் பிரதேசங்களை நாடுகிறார்கள்?

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் குண்டு வைத்து கொல்லப்பட்டது ஏன்?

2 months 3 weeks ago
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 15 ஆகஸ்ட் 2025 தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை. 70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார். சோர்வடையும்போதும் அல்லது சலிப்படையும்போதும் உறங்குவது அவர் வழக்கம். ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அவரது விருப்பம் ஒருபோதும் குறையவில்லை. குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவந்த மவுண்ட்பேட்டன், ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிராட்லேண்ட்ஸில் கொண்டாடினார். ஈஸ்டருக்கு பிராபோர்னில் ஒன்றுகூடி மகிழும் மவுண்ட்பேட்டனின் குடும்பத்தினர், பெரும்பாலும் தங்கள் கோடைகாலத்தை அயர்லாந்தில் உள்ள கிளாசிபானில் கழித்தனர். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார் "மவுண்ட்பேட்டன் தனது பேரக்குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று பிரையன் ஹோய் 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். "மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறைக் காட்டுவார் என்று அவரது பேரனின் தோழிகளில் ஒருவர் கூறுகிறார். அவர் தற்போதும் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்படுவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பிரையன் ஹோய் எழுதுகிறார். "அவருடன் இருப்பது ஜாலியாக இருக்கும். அவர் உல்லாசமாக இருப்பார், ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை." குழந்தைகளுடனான அவரது தொடர்புக்கு ஒரு காரணம், அவரே குழந்தையைப் போன்ற இயல்பைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. மவுண்ட்பேட்டனின் பேரன் மைக்கேல் ஜான், "அவருக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. அவர் எங்களுடன் அமர்ந்து சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது விழுந்து-விழுந்து சிரிப்பார்" என்று தெரிவித்தார். "அவர் அந்தப் படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் புதிதாக பார்ப்பதுபோலவே ரசித்து சிரிப்பார்." பட மூலாதாரம், BLINK படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார் ஐஆர்ஏவின் இலக்கான மவுண்ட்பேட்டன் பணி ஓய்வுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அரசு அறிந்திருந்தது. 1971ஆம் ஆண்டிலேயே, அவரது பாதுகாப்பிற்காக 12 போலீசார் பணியமர்த்தப்பட்டனர். தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிலிப் ஜீக்லருக்கு அளித்த பேட்டியில், "வடக்கு அயர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தோழர்கள் சிலரை விடுவிக்க அயர்லாந்து குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) என்னைக் கடத்திச் செல்லக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது" என்று மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார். "ஒரு சோதனையில், ஐஆர்ஏ கொல்ல விரும்பிய 50 பேர் கொண்ட பட்டியலில் மவுண்ட்பேட்டனும் இருப்பது தெரியவந்தது," என்று ஆண்ட்ரூ லூனி தனது "The Mountbattens: Their Lives and Loves" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். "70களின் முற்பகுதியில் க்ளோசிபனில் மவுண்ட்பேட்டனைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாக ஒரு மூத்த ஐ.ஆர்.ஏ உறுப்பினர் உறுதிப்படுத்தினார், ஆனால் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை." என ராயல் மிலிட்டரி காவல்துறை அதிகாரியான கிரஹாம் ஜோயல், ஆண்ட்ரூ லூனியிடம் கூறினார் "ஆகஸ்ட் 1976இல் மவுண்ட்பேட்டனை சுடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது, ஏனெனில் அலைபாயும் கடல் பகுதியில் ஐ.ஆர்.ஏ ஆயுததாரிகளால் துல்லியமாக குறிவைத்து சுடமுடியவில்லை." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்டு மவுண்ட்பேட்டன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் 1979 மார்ச் மாதத்தில், நெதர்லாந்திற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் சைக்ஸ் மற்றும் எம்.பி. எரிக் நீவ் ஆகியோர் ஐ.ஆர்.ஏ-வால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோ தலைவர் ஜெனரல் அலெக்சாண்டர் ஹெய்கை பெல்ஜியத்தில் படுகொலை செய்ய ஐ.ஆர்.ஏ முயற்சித்தது, ஆனால் அவர் மயிரிழையில் மரணத்திலிருந்து உயிர் தப்பினார். இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான், தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிக்னெல், அயர்லாந்துக்கு செல்ல வேண்டாம் என்று மவுண்ட்பேட்டனுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர், 'அயர்லாந்து மக்கள் எனது நண்பர்கள்' என்று கூறினார். இதற்கு எதிர்வினையாற்றிய பிக்னெல், 'எல்லா அயர்லாந்து மக்களும் உங்கள் நண்பர்கள் அல்ல' என்று சொன்னார். எனவே, பிக்னெலின் அறிவுரையின்படி, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை இரவில் உறங்கும்போதும் அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கினார் மவுண்ட்பேட்டன் "ஜூலை 1979 இல், அவருக்கு ஏற்படவுள்ள ஆபத்தை மதிப்பிட்ட கிரஹாம் ஜோயல், 'ஷேடோ ஃபைவ்' சொகுசு படகில் பயணிப்பது மவுண்ட்பேட்டனுக்கு ஆபத்தை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் யாரும் சப்தமில்லாமல் அதில் ஏறிவிடமுடியும் என்று கூறினார்'' என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார் "பெல்ஃபாஸ்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கார் பல முறை கடற்கரையை நெருங்கி வருவதைக் கண்டதால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஒரு முறை, காரில் உள்ளவர்களை பைனாகுலரைப் பயன்படுத்தி பார்க்க ஜோயல் முயன்றார்." ''மவுண்ட்பேட்டனின் படகை ஒரு மனிதன் தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோயல் கண்டார். படகிலிருந்து சுமார் 200 கெஜம் தொலைவில் சந்தேகத்திற்குரிய நபர் இருந்திருக்க வேண்டும்." பட மூலாதாரம், SIDJWICK & JACKSON படக்குறிப்பு, பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் லார்ட் மவுண்ட்பேட்டன் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார் மவுண்ட்பேட்டனின் படகில் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை ஜோயலின் எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது அறிக்கை புறக்கணிக்கப்பட்டு மவுண்ட்பேட்டனின் பாதுகாப்பு அயர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் 27ஆம் நாள் பிரிட்டன் முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது. பல நாட்கள் மழைக்குப் பிறகு சூரியனைப் பார்த்த மவுண்ட்பேட்டன், காலை உணவின் போது தனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,'ஷேடோ ஃபைவ்' படகில் சவாரி செய்ய தன்னுடன் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அவர் கேட்டார். படகுத்துறைக்குச் செல்வதற்கு முன், மவுண்ட்பேட்டன் பயணத்திட்டத்தை தனது பாதுகாப்புப் பணியாளர்களிடம் விளக்கினார். பைனாகுலர் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள், தங்கள் காரை படகுத்துறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள். மவுண்ட்பேட்டனுக்கு பாதுகாவலாக வந்த காவலர்களில் ஒருவர் கடல் அலைகளினால் வாந்தி எடுக்கத் தொடங்கினார். எனவே, பாதுகாவலர்கள் யாரும் தங்களுடன் படகில் வரத் தேவையில்லை என்று மவுண்ட்பேட்டன் கூறிவிட்டார். 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற தனது புத்தகத்தில், ''படகில் அமர்ந்தவுடன் மவுண்ட்பேட்டன் படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்'' என்று பிரையன் ஹோய் எழுதியுள்ளார் படகின் அடிப்பாகத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் ஐ.ஆர்.ஏ கூறியது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அயர்லாந்தை பிரிட்டன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டிருந்த அமைப்பு ஐஆர்ஏ ஆகும் மவுண்ட்பேட்டனின் படகு 'ஷேடோ ஃபைவ்' காலை 11:30 மணிக்கு 'ஷேடோ ஃபைவ்' படகு நகரத் தொடங்கியது. படகு சென்றுக் கொண்டிருந்தபோது, கடற்கரையோர சாலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் காரில் பயணித்துக் கொண்டே பைனாகுலர் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். சிறிது தூரம் சென்றதும், மேலும் இரண்டு ஜோடி கண்கள் படகை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை, ஐ.ஆர்.ஏ உறுப்பினர்களுடையவை. அந்த தருணத்தைப் பற்றி பிரையன் ஹோய், "ஷேடோ ஃபைவ் படகின் நடுவில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர், லார்ட் மவுண்ட்பேட்டன் படகை ஓட்டிக்கொண்டிருந்தார், படகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பதை ஐ.ஆர்.ஏஆட்களால் தெளிவாகக் காண முடிந்தது." என எழுதியுள்ளார் "படகில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம், கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்தது." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, வெடிப்பினால் சேதமடைந்த மவுண்ட்பேட்டனின் படகு வெடித்தது படகு 'ஷேடோ ஃபைவ்' படகு, படகுத்துறையிலிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் சரியாக காலை 11:45 மணிக்கு, கொலையாளிகளில் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் பொத்தானை அழுத்தினார். படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ வெடிபொருட்கள் பெரும் ஓசையுடன் வெடித்தன, படகு துண்டு துண்டாகச் சிதறியது. அந்த நாளை நினைவுகூர்ந்த மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, "நான் என் மாமியார் லேடி பிராபோர்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அப்போது நியூ ஸ்டேட்ஸ்மேனின் சமீபத்திய இதழைப் படித்துக்கொண்டிருந்தேன்." "கையிலிருந்த நியூ ஸ்டேட்ஸ்மேனை படிப்பதற்காக என்னுடைய தலை குனிந்திருந்தது. ஒருவேளை அதனால்தான் குண்டு வெடித்தபோது, என் கண்களுக்கு சேதம் குறைவாக ஏற்பட்டதோ என்று நினைக்கிறேன்." "என் தந்தையின் கால்களுக்கு அருகில் டென்னிஸ் பந்து ஒன்றின் அளவுள்ள ஏதோ ஒன்று இருந்ததாக எனக்கு தோன்றியது, அது மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிட்டது. அடுத்த கணம் நான் தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் கூறுகிறார். மவுண்ட்பேட்டனின் மருமகன் லார்ட் பிராபோர்ன் படகின் நடுவில் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்தபோது, அவரது உடலின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அவரது முகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்டார். இந்த வார்த்தைகள்தான் மவுண்ட்பேட்டன் கேட்ட கடைசி வார்த்தைகளாக இருக்கலாம். "மாமாவிடம் இந்தக் கேள்வியை கேட்ட அடுத்த கணம் நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தேன், மிகவும் குளிராக இருந்தது. என்னை எப்படி மீட்டார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை" என்று லார்ட் பிராபோர்ன் நினைவு கூர்ந்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனின் உடலை கரைக்கு கொண்டு வரும் பாதுகாப்புப் பணியாளர்கள் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது படகின் இடிபாடுகளிலிருந்து சிறிது தொலைவில் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. "மவுண்ட்பேட்டனின் கால்கள் அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் அணிந்திருந்த 'HMS கெல்லி' என்று எழுதப்பட்டிருந்த முழுக் கை ஜெர்சியைத் தவிர, அவரது உடலில் இருந்த அனைத்து ஆடைகளும் கிழிந்திருந்தன." என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார் "அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பொதுமக்களின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உடலை படகு ஒன்றில் வைத்திருந்தோம்" என்று அவர் எழுதுகிறார். அந்த நேரத்தில் அங்கு இருந்த டாக்டர் ரிச்சர்ட் வாலஸ், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை." "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, தண்ணீரில் பலர் விழுந்திருந்ததைக் கண்டோம். எங்கள் முதல் பணி உயிருள்ளவர்களிடமிருந்து இறந்தவர்களைப் பிரிப்பதாகும்." "மருத்துவர்களாக, இறந்தவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது கடமையாக இருந்தது. மவுண்ட்பேட்டனின் சடலத்துடன் நாங்கள் படகுத்துறையை அடைந்தபோது, எங்களுக்கு உதவ பலர் முன்வந்தனர்" என்று அவர் கூறுகிறார். "ஒரு கதவை உடைத்து தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்று உருவாக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு கட்டுப் போடுவதற்காக பெண்கள் துணிகளைக் கிழித்துக் கொடுத்தனர்," என்று டாக்டர் வாலஸ் கூறினார். "நாங்கள் மவுண்ட்பேட்டனின் உடலைக் கரைக்குக் கொண்டு வந்தபோது, அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களும் காயங்களும் இருந்தன, ஆனால் அவரது முகம் சிதைவடையாமல் சாதாரணமாக இருந்தது." பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, IRA 1990களில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது மவுண்ட்பேட்டனுக்கு பிரியாவிடை மவுண்ட்பேட்டன் இறந்த செய்தி கிடைத்தவுடன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டன. அவரது மறைவையொட்டி இந்தியாவில் ஏழு நாட்களுக்கு 'அரசு துக்கம்' அறிவிக்கப்பட்டது. 1979 செப்டம்பர் 5ஆம் நாளன்று, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1400 பேர் முன்னிலையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி, இளவரசர் சார்லஸ், ஐரோப்பிய மன்னர்கள் பலர், பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் நான்கு முன்னாள் பிரதமர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் மவுண்ட்பேட்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர். பட மூலாதாரம், PHOTO BY TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY IMAGES படக்குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் ஐ.ஆர்.ஏ பொறுப்பேற்பு மவுண்ட்பேட்டனின் கொலைக்கு பொறுப்பேற்ற அயர்லாந்து குடியரசுப் படை (Provisional IRA) ஒரு அறிக்கையை வெளியிட்டது. 79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.ஏ ஒருபோதும் தரவில்லை. மவுண்ட்பேட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிலிப் ஜீக்லர், "மவுண்ட்பேட்டனின் கொலை நடந்த அதே நாளில் அயர்லாந்தில் 18 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்த முடிவு ஐஆர்ஏவின் உயர் மட்டங்களில் எடுக்கப்பட்டதை உணர்த்துகிறது" என எழுதுகிறார் "நமது நாட்டை தொடர்ந்து ஆக்ரமித்திருப்பது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஐஆர்ஏ தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தது. மவுண்ட்பேட்டனின் படுகொலைக்குப் பிறகு, ஐஆர்ஏவின் பிரசாரத்திற்கான பொதுமக்களின் ஆதரவு குறைந்தது. அதே நேரத்தில், பிரிட்டனின் பிரதமரான மார்கரெட் தாட்சர், ஒரு அரசியல் அமைப்பு என்ற நிலையில் இருந்து ஐ.ஆர்.ஏவை நீக்கி, அதை குற்றவியல் அமைப்பாக அறிவித்தார். மேலும், அவர் ஐ.ஆர்ஏ போராளிகளுக்கு வழங்கப்பட்ட போர்க் கைதி என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றார். மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாமஸ் மெக்மஹோன் குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குள், கொலையாளிகளைப் பிடிக்க அயர்லாந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள், இது அவர்களுடைய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணை என்று கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, பிரான்சிஸ் மெக்கேர்ல் (24), தாமஸ் மெக்மஹோன் (31) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். 1979 நவம்பர் 23ஆம் நாளன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேகத்தின் பலனை மெக்கேர்லுக்கு வழங்கி அவரை விடுவித்தது. இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததாக மெக்மஹோன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது. தாமஸ் மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 1998இல் 'குட் ஃப்ரைடே' ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். அவர் மவுண்ட்பேட்டனை கொலை செய்ததற்காக மொத்தம் 19 ஆண்டுகள் பிரிட்டன் சிறையில் கழித்தார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgpdgl21qlo

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் குண்டு வைத்து கொல்லப்பட்டது ஏன்?

2 months 3 weeks ago

லார்டு மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார்

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி செய்தியாளர்

  • 15 ஆகஸ்ட் 2025

தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை.

70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

சோர்வடையும்போதும் அல்லது சலிப்படையும்போதும் உறங்குவது அவர் வழக்கம். ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அவரது விருப்பம் ஒருபோதும் குறையவில்லை.

குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவந்த மவுண்ட்பேட்டன், ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிராட்லேண்ட்ஸில் கொண்டாடினார்.

ஈஸ்டருக்கு பிராபோர்னில் ஒன்றுகூடி மகிழும் மவுண்ட்பேட்டனின் குடும்பத்தினர், பெரும்பாலும் தங்கள் கோடைகாலத்தை அயர்லாந்தில் உள்ள கிளாசிபானில் கழித்தனர்.

மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார்

"மவுண்ட்பேட்டன் தனது பேரக்குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று பிரையன் ஹோய் 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறைக் காட்டுவார் என்று அவரது பேரனின் தோழிகளில் ஒருவர் கூறுகிறார். அவர் தற்போதும் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்படுவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பிரையன் ஹோய் எழுதுகிறார்.

"அவருடன் இருப்பது ஜாலியாக இருக்கும். அவர் உல்லாசமாக இருப்பார், ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை."

குழந்தைகளுடனான அவரது தொடர்புக்கு ஒரு காரணம், அவரே குழந்தையைப் போன்ற இயல்பைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

மவுண்ட்பேட்டனின் பேரன் மைக்கேல் ஜான், "அவருக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. அவர் எங்களுடன் அமர்ந்து சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது விழுந்து-விழுந்து சிரிப்பார்" என்று தெரிவித்தார்.

"அவர் அந்தப் படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் புதிதாக பார்ப்பதுபோலவே ரசித்து சிரிப்பார்."

மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், BLINK

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார்

ஐஆர்ஏவின் இலக்கான மவுண்ட்பேட்டன்

பணி ஓய்வுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அரசு அறிந்திருந்தது.

1971ஆம் ஆண்டிலேயே, அவரது பாதுகாப்பிற்காக 12 போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.

தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிலிப் ஜீக்லருக்கு அளித்த பேட்டியில், "வடக்கு அயர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தோழர்கள் சிலரை விடுவிக்க அயர்லாந்து குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) என்னைக் கடத்திச் செல்லக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது" என்று மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார்.

"ஒரு சோதனையில், ஐஆர்ஏ கொல்ல விரும்பிய 50 பேர் கொண்ட பட்டியலில் மவுண்ட்பேட்டனும் இருப்பது தெரியவந்தது," என்று ஆண்ட்ரூ லூனி தனது "The Mountbattens: Their Lives and Loves" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"70களின் முற்பகுதியில் க்ளோசிபனில் மவுண்ட்பேட்டனைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாக ஒரு மூத்த ஐ.ஆர்.ஏ உறுப்பினர் உறுதிப்படுத்தினார், ஆனால் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை." என ராயல் மிலிட்டரி காவல்துறை அதிகாரியான கிரஹாம் ஜோயல், ஆண்ட்ரூ லூனியிடம் கூறினார்

"ஆகஸ்ட் 1976இல் மவுண்ட்பேட்டனை சுடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது, ஏனெனில் அலைபாயும் கடல் பகுதியில் ஐ.ஆர்.ஏ ஆயுததாரிகளால் துல்லியமாக குறிவைத்து சுடமுடியவில்லை."

லார்டு மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்டு மவுண்ட்பேட்டன்

தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன்

1979 மார்ச் மாதத்தில், நெதர்லாந்திற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் சைக்ஸ் மற்றும் எம்.பி. எரிக் நீவ் ஆகியோர் ஐ.ஆர்.ஏ-வால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோ தலைவர் ஜெனரல் அலெக்சாண்டர் ஹெய்கை பெல்ஜியத்தில் படுகொலை செய்ய ஐ.ஆர்.ஏ முயற்சித்தது, ஆனால் அவர் மயிரிழையில் மரணத்திலிருந்து உயிர் தப்பினார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான், தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிக்னெல், அயர்லாந்துக்கு செல்ல வேண்டாம் என்று மவுண்ட்பேட்டனுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர், 'அயர்லாந்து மக்கள் எனது நண்பர்கள்' என்று கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பிக்னெல், 'எல்லா அயர்லாந்து மக்களும் உங்கள் நண்பர்கள் அல்ல' என்று சொன்னார்.

எனவே, பிக்னெலின் அறிவுரையின்படி, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை இரவில் உறங்கும்போதும் அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கினார் மவுண்ட்பேட்டன்

"ஜூலை 1979 இல், அவருக்கு ஏற்படவுள்ள ஆபத்தை மதிப்பிட்ட கிரஹாம் ஜோயல், 'ஷேடோ ஃபைவ்' சொகுசு படகில் பயணிப்பது மவுண்ட்பேட்டனுக்கு ஆபத்தை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் யாரும் சப்தமில்லாமல் அதில் ஏறிவிடமுடியும் என்று கூறினார்'' என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"பெல்ஃபாஸ்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கார் பல முறை கடற்கரையை நெருங்கி வருவதைக் கண்டதால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஒரு முறை, காரில் உள்ளவர்களை பைனாகுலரைப் பயன்படுத்தி பார்க்க ஜோயல் முயன்றார்."

''மவுண்ட்பேட்டனின் படகை ஒரு மனிதன் தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோயல் கண்டார். படகிலிருந்து சுமார் 200 கெஜம் தொலைவில் சந்தேகத்திற்குரிய நபர் இருந்திருக்க வேண்டும்."

லார்டு மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், SIDJWICK & JACKSON

படக்குறிப்பு, பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் லார்ட் மவுண்ட்பேட்டன் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்

மவுண்ட்பேட்டனின் படகில் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை

ஜோயலின் எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது அறிக்கை புறக்கணிக்கப்பட்டு மவுண்ட்பேட்டனின் பாதுகாப்பு அயர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் 27ஆம் நாள் பிரிட்டன் முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது.

பல நாட்கள் மழைக்குப் பிறகு சூரியனைப் பார்த்த மவுண்ட்பேட்டன், காலை உணவின் போது தனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,'ஷேடோ ஃபைவ்' படகில் சவாரி செய்ய தன்னுடன் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அவர் கேட்டார்.

படகுத்துறைக்குச் செல்வதற்கு முன், மவுண்ட்பேட்டன் பயணத்திட்டத்தை தனது பாதுகாப்புப் பணியாளர்களிடம் விளக்கினார்.

பைனாகுலர் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள், தங்கள் காரை படகுத்துறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

மவுண்ட்பேட்டனுக்கு பாதுகாவலாக வந்த காவலர்களில் ஒருவர் கடல் அலைகளினால் வாந்தி எடுக்கத் தொடங்கினார். எனவே, பாதுகாவலர்கள் யாரும் தங்களுடன் படகில் வரத் தேவையில்லை என்று மவுண்ட்பேட்டன் கூறிவிட்டார்.

'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற தனது புத்தகத்தில், ''படகில் அமர்ந்தவுடன் மவுண்ட்பேட்டன் படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்'' என்று பிரையன் ஹோய் எழுதியுள்ளார்

படகின் அடிப்பாகத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் ஐ.ஆர்.ஏ கூறியது.

ஆயுதமேந்திய ஐரிஷ் அமைப்பு ஐஆர்ஏ

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அயர்லாந்தை பிரிட்டன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டிருந்த அமைப்பு ஐஆர்ஏ ஆகும்

மவுண்ட்பேட்டனின் படகு 'ஷேடோ ஃபைவ்'

காலை 11:30 மணிக்கு 'ஷேடோ ஃபைவ்' படகு நகரத் தொடங்கியது. படகு சென்றுக் கொண்டிருந்தபோது, கடற்கரையோர சாலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் காரில் பயணித்துக் கொண்டே பைனாகுலர் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும், மேலும் இரண்டு ஜோடி கண்கள் படகை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை, ஐ.ஆர்.ஏ உறுப்பினர்களுடையவை.

அந்த தருணத்தைப் பற்றி பிரையன் ஹோய், "ஷேடோ ஃபைவ் படகின் நடுவில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர், லார்ட் மவுண்ட்பேட்டன் படகை ஓட்டிக்கொண்டிருந்தார், படகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பதை ஐ.ஆர்.ஏஆட்களால் தெளிவாகக் காண முடிந்தது." என எழுதியுள்ளார்

"படகில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம், கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்தது."

லார்ட் மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வெடிப்பினால் சேதமடைந்த மவுண்ட்பேட்டனின் படகு

வெடித்தது படகு

'ஷேடோ ஃபைவ்' படகு, படகுத்துறையிலிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் சரியாக காலை 11:45 மணிக்கு, கொலையாளிகளில் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் பொத்தானை அழுத்தினார்.

படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ வெடிபொருட்கள் பெரும் ஓசையுடன் வெடித்தன, படகு துண்டு துண்டாகச் சிதறியது.

அந்த நாளை நினைவுகூர்ந்த மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, "நான் என் மாமியார் லேடி பிராபோர்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அப்போது நியூ ஸ்டேட்ஸ்மேனின் சமீபத்திய இதழைப் படித்துக்கொண்டிருந்தேன்."

"கையிலிருந்த நியூ ஸ்டேட்ஸ்மேனை படிப்பதற்காக என்னுடைய தலை குனிந்திருந்தது. ஒருவேளை அதனால்தான் குண்டு வெடித்தபோது, என் கண்களுக்கு சேதம் குறைவாக ஏற்பட்டதோ என்று நினைக்கிறேன்."

"என் தந்தையின் கால்களுக்கு அருகில் டென்னிஸ் பந்து ஒன்றின் அளவுள்ள ஏதோ ஒன்று இருந்ததாக எனக்கு தோன்றியது, அது மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிட்டது. அடுத்த கணம் நான் தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

மவுண்ட்பேட்டனின் மருமகன் லார்ட் பிராபோர்ன் படகின் நடுவில் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்தபோது, அவரது உடலின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அவரது முகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை.

குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்டார்.

இந்த வார்த்தைகள்தான் மவுண்ட்பேட்டன் கேட்ட கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்.

"மாமாவிடம் இந்தக் கேள்வியை கேட்ட அடுத்த கணம் நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தேன், மிகவும் குளிராக இருந்தது. என்னை எப்படி மீட்டார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை" என்று லார்ட் பிராபோர்ன் நினைவு கூர்ந்தார்.

பிரிவினை, லார்ட் மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனின் உடலை கரைக்கு கொண்டு வரும் பாதுகாப்புப் பணியாளர்கள்

மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது

படகின் இடிபாடுகளிலிருந்து சிறிது தொலைவில் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

"மவுண்ட்பேட்டனின் கால்கள் அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் அணிந்திருந்த 'HMS கெல்லி' என்று எழுதப்பட்டிருந்த முழுக் கை ஜெர்சியைத் தவிர, அவரது உடலில் இருந்த அனைத்து ஆடைகளும் கிழிந்திருந்தன." என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பொதுமக்களின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உடலை படகு ஒன்றில் வைத்திருந்தோம்" என்று அவர் எழுதுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த டாக்டர் ரிச்சர்ட் வாலஸ், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை."

"நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, தண்ணீரில் பலர் விழுந்திருந்ததைக் கண்டோம். எங்கள் முதல் பணி உயிருள்ளவர்களிடமிருந்து இறந்தவர்களைப் பிரிப்பதாகும்."

"மருத்துவர்களாக, இறந்தவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது கடமையாக இருந்தது. மவுண்ட்பேட்டனின் சடலத்துடன் நாங்கள் படகுத்துறையை அடைந்தபோது, எங்களுக்கு உதவ பலர் முன்வந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு கதவை உடைத்து தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்று உருவாக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு கட்டுப் போடுவதற்காக பெண்கள் துணிகளைக் கிழித்துக் கொடுத்தனர்," என்று டாக்டர் வாலஸ் கூறினார்.

"நாங்கள் மவுண்ட்பேட்டனின் உடலைக் கரைக்குக் கொண்டு வந்தபோது, அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களும் காயங்களும் இருந்தன, ஆனால் அவரது முகம் சிதைவடையாமல் சாதாரணமாக இருந்தது."

IRA

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, IRA 1990களில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது

மவுண்ட்பேட்டனுக்கு பிரியாவிடை

மவுண்ட்பேட்டன் இறந்த செய்தி கிடைத்தவுடன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டன. அவரது மறைவையொட்டி இந்தியாவில் ஏழு நாட்களுக்கு 'அரசு துக்கம்' அறிவிக்கப்பட்டது.

1979 செப்டம்பர் 5ஆம் நாளன்று, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1400 பேர் முன்னிலையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி, இளவரசர் சார்லஸ், ஐரோப்பிய மன்னர்கள் பலர், பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் நான்கு முன்னாள் பிரதமர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் மவுண்ட்பேட்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.

ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், PHOTO BY TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்

ஐ.ஆர்.ஏ பொறுப்பேற்பு

மவுண்ட்பேட்டனின் கொலைக்கு பொறுப்பேற்ற அயர்லாந்து குடியரசுப் படை (Provisional IRA) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.ஏ ஒருபோதும் தரவில்லை.

மவுண்ட்பேட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிலிப் ஜீக்லர், "மவுண்ட்பேட்டனின் கொலை நடந்த அதே நாளில் அயர்லாந்தில் 18 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்த முடிவு ஐஆர்ஏவின் உயர் மட்டங்களில் எடுக்கப்பட்டதை உணர்த்துகிறது" என எழுதுகிறார்

"நமது நாட்டை தொடர்ந்து ஆக்ரமித்திருப்பது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஐஆர்ஏ தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தது.

மவுண்ட்பேட்டனின் படுகொலைக்குப் பிறகு, ஐஆர்ஏவின் பிரசாரத்திற்கான பொதுமக்களின் ஆதரவு குறைந்தது.

அதே நேரத்தில், பிரிட்டனின் பிரதமரான மார்கரெட் தாட்சர், ஒரு அரசியல் அமைப்பு என்ற நிலையில் இருந்து ஐ.ஆர்.ஏவை நீக்கி, அதை குற்றவியல் அமைப்பாக அறிவித்தார். மேலும், அவர் ஐ.ஆர்ஏ போராளிகளுக்கு வழங்கப்பட்ட போர்க் கைதி என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றார்.

மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

தாமஸ் மெக்மஹோன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாமஸ் மெக்மஹோன்

குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குள், கொலையாளிகளைப் பிடிக்க அயர்லாந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள், இது அவர்களுடைய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணை என்று கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு, பிரான்சிஸ் மெக்கேர்ல் (24), தாமஸ் மெக்மஹோன் (31) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

1979 நவம்பர் 23ஆம் நாளன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேகத்தின் பலனை மெக்கேர்லுக்கு வழங்கி அவரை விடுவித்தது. இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததாக மெக்மஹோன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது.

தாமஸ் மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 1998இல் 'குட் ஃப்ரைடே' ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். அவர் மவுண்ட்பேட்டனை கொலை செய்ததற்காக மொத்தம் 19 ஆண்டுகள் பிரிட்டன் சிறையில் கழித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgpdgl21qlo

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

2 months 3 weeks ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி! 16 AUG, 2025 | 10:10 AM உடல்நலக் குறைவு காரணமாக காலமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் சடலம் கண்டி – மஹய்யாவ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) காலமானார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தனது 57 ஆவது வயதில் காலமாகியுள்ளார். லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு எதிர்வரும் 17 ஆம் திகதி கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222659

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

2 months 3 weeks ago
அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஆயுதங்களை கொடுத்து உசுப்பேற்றாவிட்டால் உக்ரேன் வழிக்கு வரும். இவ்வளவு காலம் உக்ரேனா சண்டை பிடித்தது?

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 months 3 weeks ago
மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள் Published By: VISHNU 15 AUG, 2025 | 10:09 PM மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (15) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மதியம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர். வெள்ளிக்கிழமை(15) மதியம் நடைபெற்ற ஜும்மா தொழுகை நிறைவடைந்த நிலையில், முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் 13 வது நாளாக மக்களினால் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது. அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222650