Aggregator
வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle)
யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்
இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு
இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே
பதவி, பிபிசி வெரிஃபை
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார்.
எதற்காக இந்த நடவடிக்கை?
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார்.
பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது.
அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல்
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது.
இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன.
F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம்.
இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார்.
பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு
இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.
பட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம்
இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும்.
டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும்.
"[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.
மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை.
வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.
"இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்."
மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து
Published By: DIGITAL DESK 3
18 JUN, 2025 | 10:49 AM
இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18) முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.
எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல் வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.
ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.
புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.
லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது.
மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது.
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளது - இணைத்தலைமை நாடுகள்
Published By: RAJEEBAN
18 JUN, 2025 | 10:36 AM
மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் என இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை மீதான உரையாடலிற்காக இணைத்தலைமை நாடுகளின் சார்பில் இங்கிலாந்தின் மனித உரிமைகளிற்கான தூதுவர் எலினோர் சான்டெர்ஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது=
இலங்கை குறித்த உங்கள் அலுவலகத்தின் பணிகள் குறித்து நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம்.
இலங்கையில் மேமாதம் தேர்தல்கள் நடாத்தப்பட்டதை நாங்கள் வரவேற்பதுடன்,2009ம் ஆண்டு ஆயுதமோதலின் போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவது இம்முறை அமைதியான விதத்தில் இடம்பெற்றதை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அதேவேளை மனித உரிமைகள்,பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம், நல்லாட்சி ,அரசமைப்பு சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே கண்டுள்ளமை குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.
நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கீட்டிற்கு அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகின்றோம் மேலும் ஊடகவியலாளர்கள்,மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படகூடிய நிலையை ஏற்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை பாதிக்கப்பட்ட மக்களின் நம்பி;க்கையை பெறுவது மிகவும் முக்கியமானது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச்;சட்டத்தை நீக்குவதே தனது நிலைப்பாடு என தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கரிசனைகொண்டுள்ளோம்.
மேலும் காணாமல்போனோர் அலுவலகத்தை மீண்டும் வலுப்படுத்துவதன் மூலம் பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்க்கப்படாத விடயங்களை தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!
கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!
கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை!
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் இருப்பு இருந்தபோதிலும், நுகர்வோர் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி இவ்வாறு செயல்படுவதால், பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!
இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!
இஸ்ரேல் - ஈரான் முறுகலால் இலங்கைக்கு கடும் பாதிப்பு; பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு!
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தற்போதைய இராணுவ நிலைமை அதிகரித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த இராணுவ நிலைமை பிராந்திய ரீதியாக பரவினால், சுற்றுலாத் துறை உட்பட இலங்கையில் பல துறைகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்கே சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கையைப் பாதிக்கும் பலகாரணிகள் உள்ளன. முக்கியமானது எரிபொருள் விலை அதிகரிப்பு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை ஏற்கனவே பத்து முதல் பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தப் போர் பிராந்திய ரீதியாக பரவினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை மோசமாக பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலைமை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீது மிகவும் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். வேலை, பாதுகாப்பு, புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை என்பன கடுமையாகப் பாதிப்படையும் - என்றார்.
கருத்து படங்கள்
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்!
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்!
வல்வெட்டித்துறை தமிழ் தேசிய பேரவை வசம்!
adminJune 18, 2025
வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (18.06.25) வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
16 உறுப்பினர்களை கொண்ட வல்வெட்டித்துறை நகர சபைக்கு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திரநாதனுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர்.
தேசிய மக்கள் சக்தியின் மூன்று பேரும் வாக்களிப்பில் நடுநிலை வகித்தனர்