Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் - ஈரான் 18 JUN, 2025 | 12:20 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானை நிபந்தனையற்ற விதத்தில் சரணடையுமாறும் பொறுமை குறைகின்றது எனவும் எச்சரித்த நிலையில் புதன்கிழமை இஸ்ரேலிற்கு எதிராக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல்அவி மக்கள் தாக்குதலிற்கு தயாராகவேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்த அதேவேளை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஹைபர்சோனிக் பட்டா ஏவுகணைகள் பாதுகாப்பான பதுங்குமிடங்களை உலுக்கிவருகின்றன என தெரிவித்துள்ளது. நேர்மையான வாக்குறுதி நடவடிக்கையின் 11வது சுற்றுதாக்குதல்களை பட்டா ஏவுகணைகளை பயன்படுத்தி மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட ஐந்துமடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்ககூடியவை. நடுவானில் தங்கள் பயணத்தை மாற்றக்கூடியவை இதனால் அவற்றின் பயணத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். https://www.virakesari.lk/article/217800

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

2 months 4 weeks ago
தையிட்டி விகாரை விவகாரம், செம்மணி புதைகுழி, காணி விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:43 PM யாழ்ப்பாணத்தின் வலி. வடக்கு பிரதேசத்தில் எதிர்காலத்திலும் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக்கிற்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (18) வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன், முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார். வடக்கில் அமையப்பெறவுள்ள மூன்று முதலீட்டு வலயங்களினதும் உட்கட்டுமான அபிவிருத்திற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் தெரிவித்தார். வேலை வாய்ப்புக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அவை அவசியம் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் இங்கு அதிகளவில் வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். இளையோரிடத்தில் புலம்பெயர்வுக்கான சிந்தனை மேலோங்கியிருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இங்கே உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலீட்டு வலயங்களை அமைக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்துகொண்டார். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டுநாயக்காவுக்கும் பலாலிக்கும் இடையிலான விமானசேவை ஆரம்பிப்பது பெருமளவு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவக்கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் இதற்குரிய கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார். மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தினார். இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/217828

11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்

2 months 4 weeks ago
பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை. அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும். ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார். பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார். இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார். மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார். காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார். ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது. சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார். மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன? அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது. தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது. அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர். காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார். பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார் டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது. பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார். 2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது. 2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். 2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன. மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார். முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார். 1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர். பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam) அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார். மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை. தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது. காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார். 1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை. தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார். இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு இஸ்ரேல் - இரான் மோதல் முற்றுவதால் ரஷ்யா கவலை ஏன்? காமனெயி, அணுசக்தி திட்டம்: இரானில் இஸ்ரேலின் உண்மையான இலக்கு எது? இரானை ஆதரிக்கும் பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? இரு மகள்கள் காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை. குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர். 1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார். காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o

11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்

2 months 4 weeks ago

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது.

1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை.

அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும்.

ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார்.

இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார்.

மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார்.

காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார்.

ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது.

சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார்.

மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன?

அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது.

தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர்.

காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்.

மோஜ்தாபா காமனெயி, இரான்

பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES

படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார்

டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது.

பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார்.

2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது.

2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார்.

1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர்.

ஆயதுல்லா அலி காமனெயி, மேசம், இரான்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam)

அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார்.

மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை.

தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது.

காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார்.

1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை.

தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார்.

இரு மகள்கள்

காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை.

குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர்.

1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார்.

காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் ; ரஜீவன் கோரிக்கை

2 months 4 weeks ago
18 JUN, 2025 | 02:54 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார். வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார். கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை. திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும். தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது. இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம். குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம். மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார். குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். https://www.virakesari.lk/article/217826

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் ; ரஜீவன் கோரிக்கை

2 months 4 weeks ago

18 JUN, 2025 | 02:54 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார்.

வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார்.

கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாணமே, இலங்கையின் அடுத்தபட்ட சுற்றுலா மையமாக வளரக்கூடிய வளமான பகுதி. யாழ்ப்பாணம் –கிளிநொச்சி பகுதிகள் பண்பாட்டு பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் ஆன்மீக ஆழம் கொண்டவை.

திறமையான திட்டமிடலும், சரியான விளம்பர முயற்சிகளும், முதலீடுகளும் இடம்பெற்றால், இது இலங்கையின் வடக்கு சுற்றுலா மையமாக மாறும்.

தற்போது வடக்கு மாகாணம், இலங்கையில் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சுமார் 3-5% மட்டுமே ஈர்க்கிறது.

இது கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, தம்புள்ளை போன்ற பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

இவ்வாறு ஒப்பீட்டளவில் பின்னடைவில் இருக்கும் வடமாகாணத்தின் சுற்றுலா துறையை முன்னேற்ற, பல தளங்களில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம்.

குறிப்பாக ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தனியார் முதலீடுகளுடன் ஹோட்டல் மற்றும் விடுதி வசதிகள், நவீன விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரங்கள், சிறப்பான இளைஞர் பயிற்சிகள், கிராமப்புற அனுபவத்துடன் வீட்டு விடுதிகள், யாழ் உணவுப் பாதைகள், நல்லூர் திருவிழா போன்ற திருவிழாக்களை சர்வதேச நாட்காட்டியில் இணைத்தல் போன்றவற்ரை நடைமுறைப்படுத்தவேண்டும் இவை யாவும் இணைந்து மேற்கொள்ளப்பட்டால், 2030ஆம் ஆண்டுக்குள் யாழ் மற்றும் வடமாகாணத்தில் மொத்த சுற்றுலா பங்கு 15-18% வரை உயரலாம்.

மேலும் வடமாகாணத்தில் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு விசேட உபக்குழுவை அமைத்து வடக்கு அபிவிருத்திக்காக திட்டமிட வேண்டும் என்றார்.

குறித்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் இவை தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

https://www.virakesari.lk/article/217826

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

2 months 4 weeks ago
யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:30 PM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார். இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217825

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

2 months 4 weeks ago

யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2025 | 02:30 PM

image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217825

இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு

2 months 4 weeks ago
சுரங்கங்களை தகர்க்கும் உலகின் ஒரே வெடிகுண்டு - இரானின் அணு ஆராய்ச்சி மையங்களுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்துமா? பட மூலாதாரம்,US AIR FORCE படக்குறிப்பு, US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பார்ருச்சோ பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத "பங்கர் பஸ்டர்" ("bunker buster") வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானதாக உள்ளது. துல்லியமாக வழிகாட்டப்படும், 30,000 பவுண்ட் (13,600 கிலோ) எடையுள்ள இந்த வெடிகுண்டு, ஒரு மலைக்குள் ஆழமாக புதைக்கப்பட்டுள்ள இரானின் ஃபோர்டோ அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் வளாகத்தை ஊடுருவும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை, எம்ஓபி வெடிகுண்டை உபயோகிப்பதற்கான அனுமதியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கவில்லை. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் ஆயுதம் என்ன செய்யும்? அதன் சவால்கள் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, GBU-57A/B என்பது, "ஆழமாக புதைக்கப்பட்ட மற்றும் உறுதியாக கட்டப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஒரு பெரிய ஊடுருவக்கூடிய ஆயுதம்"என அறியப்படுகின்றது. இந்த வெடிகுண்டு சுமார் ஆறு மீட்டர் நீளமுடையது. இது வெடிக்கும் முன் சுமார் 200 அடி (61 மீட்டர்) ஆழத்தில் நிலத்தின் உள்ளே ஊடுருவக்கூடியது என நம்பப்படுகிறது. இதுபோன்ற வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டால், ஒவ்வொரு வெடிப்பும், நிலத்தை ஆழமாக துளையிட்டு, இலக்கைச் சேதப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. போயிங்கால் தயாரிக்கப்பட்ட எம்ஓபி (MOP), இதுவரை போரில் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. எனினும், இது அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் மிஸைல் ரேஞ்ச் (White Sands Missile Range) என்ற ராணுவ சோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. "அனைத்து வெடிகுண்டுகளின் தாய்" என அழைக்கப்படும் 21,600 பவுண்ட் (9,800 கிலோ) எடையுள்ள Massive Ordnance Air Blast (MOAB) வெடிகுண்டை விட இது அதிக சக்தி வாய்ந்தது. இந்த MOAB, 2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போருக்காக பயன்படுத்தப்பட்டது. "MOAB போலவே பெரிய அளவிலான ஆயுதங்களை உருவாக்க முயற்சித்த அமெரிக்க விமானப்படை, வெடி பொருளை மிகவும் வலிமையான உலோகப் பெட்டிக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைத்தது. அதன் விளைவாக உருவானது தான் GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர்" என்று கூறுகிறார் பிரிட்டனின் ப்ராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலுள்ள அமைதிக் கல்வித் துறையின் பேராசிரியரான பால் ரோஜர்ஸ். தற்போது , எம்ஓபி வெடிகுண்டை ஏவுவதற்காக கட்டமைக்கப்பட்டும், நிரலாக்கம் செய்யப்பட்டும் இருப்பது அமெரிக்காவின் B-2 ஸ்பிரிட் என்ற ஸ்டெல்த் பாம்பர் மட்டும் தான். B-2 என அழைக்கப்படும் இந்த போர் விமானம், நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் தயாரித்தது. அமெரிக்க விமானப்படையின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாக இந்த விமானம் கருதப்படுகின்றது. இந்த விமானத்தின் உற்பத்தியாளரான நார்த்ரோப் க்ரம்மனின் கூற்றுப்படி, B-2 விமானம் 40,000 பவுண்டு (18,000 கிலோ) வரை சுமக்கக்கூடியது. ஆனால், இரண்டு GBU-57A/B "பங்கர் பஸ்டர்" வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் B-2 விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மொத்த எடை சுமார் 60,000 பவுண்டு (27,200 கிலோ). குண்டுவீச்சுக்குப் பயன்படும் இந்த நீண்ட தூர கனரக விமானம், எரிபொருள் நிரப்பாமல் சுமார் 7,000 மைல்கள் (11,000 கிமீ) வரை பறக்கக்கூடியது. பறக்கும் நிலையில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், அதன் வரம்பு 11,500 மைல்கள் (18,500 கிமீ) ஆக அதிகரிக்கிறது. இதன் மூலம், உலகின் எந்தப் பகுதியையும் சில மணி நேரங்களில் இந்த விமானத்தால் அடைய முடியும் என நார்த்ரோப் க்ரம்மன் கூறுகிறது. இரான் போன்ற நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நாட்டிற்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டால், B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் கூடுதல் விமானங்களும் அதில் பங்கேற்க நேரிடும். எடுத்துக்காட்டாக, எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எதிராக F-22 ஸ்டெல்த் ஸ்ட்ரைக் விமானங்கள் பயன்படுத்தப்படலாம். அதன் பிறகு, சேதத்தை மதிப்பீடு செய்யவும், அதற்குப் பிறகும் தாக்குதல்களைத் தொடரவேண்டுமா என்பதை தீர்மானிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். இந்த எம்ஓபி வெடிகுண்டுகள் அமெரிக்காவிடம் மிகக் குறைந்த அளவு இருப்பதாக அவர் மதிப்பிடுகிறார். "அவர்கள் சுமார் 10 அல்லது 20 எம்ஓபி வெடிகுண்டுகளை வைத்திருக்கக்கூடும்" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். பட மூலாதாரம்,WHITEMAN AIR FORCE BASE படக்குறிப்பு, எம்ஓபி வெடிப்பதற்கு முன் மேற்பரப்பில் இருந்து சுமார் 200 அடி (61 மீட்டர்) வரை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. இரானுக்கு எதிராக எம்ஓபி வெடிகுண்டு பயன்படுத்தப்படுமா? ஃபோர்டோ என்பது இரானின் இரண்டாவது அணுசக்தி செறிவூட்டல் நிலையமாகும். நடான்ஸுக்கு பிறகு இதுவும் ஒரு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது. டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 60 மைல் (95 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கோம் நகருக்கு அருகில், ஒரு மலையின் ஓரத்தில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்திற்கான கட்டுமானம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், 2009ஆம் ஆண்டு இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையம் அங்கு செயல்படுவதை, இரான் அதே ஆண்டில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. 80 மீட்டர் (260 அடி) ஆழத்தில் பாறை மற்றும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதுடன், இரான் மற்றும் ரஷ்ய தயாரிப்புகளான தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகளால், ஃபோர்டோ வளாகம் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA), அந்த தளத்தில் ஆயுத தரத்திற்கு அருகிலுள்ள 83.7% தூய்மையுடைய யுரேனியம் துகள்களைக் கண்டறிந்தது. இரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் அழிப்பதே, இரான் மீது தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். அதனை, "இஸ்ரேலுக்கு ஒரு இருத்தலியல் (existential) அச்சுறுத்தல்" எனவும் அவர் விவரித்தார். அந்த நோக்கத்தை அடைய, ஃபோர்டோ வளாகமும் ஒரு முக்கியப் பகுதியாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். "இந்த முழு நடவடிக்கையும்… ஃபோர்டோவை முற்றிலும் நீக்குவதன் மூலம் முழுமை பெறும்" என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் யெச்சியல் லீட்டர் வெள்ளிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்தார். ஆனால் எம்ஓபி வெடிகுண்டை தனியாக பயன்படுத்துவதற்கான திறன் இஸ்ரேலிடம் இல்லை. மேலும், அமெரிக்கா நேரடியாக ஈடுபடாமல் அதற்கு அனுமதி அளிக்காது என்று பேராசிரியர் ரோஜர்ஸ் குறிப்பிட்டார். "நிச்சயமாக, இஸ்ரேலியர்கள் தனியாக இதைச் செய்ய அமெரிக்கா அனுமதிக்காது. மேலும் இத்தனை பெரிய அளவில் ஊடுருவும் வெடிகுண்டுகளும் இஸ்ரேலிடம் இல்லை" என்று அவர் கூறினார். அமெரிக்கா இந்த வெடிகுண்டை பயன்படுத்துமா என்பது, குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ், அந்த நாடு தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க தயாரா என்ற விருப்பத்தைப் பொறுத்தது. "இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவளிக்க டிரம்ப் தயாராக உள்ளாரா என்பதைப் பொறுத்தது" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். கனடாவில் நடைபெற்ற G7 மாநாட்டில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு என்ன தேவைப்படும் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை"என்று டிரம்ப் பதில் அளித்தார். ஏபிசி நியூஸுடன் நடைபெற்ற சமீபத்திய நேர்காணலில், ஃபோர்டோ மீதான தாக்குதலில் அமெரிக்கா ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தூதர் லீட்டரிடம் கேட்கப்பட்டது. இஸ்ரேல், அமெரிக்காவிடம் தற்காப்பு உதவியை மட்டுமே கேட்டுள்ளது என்று அவர் பதில் கூறினார். "எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. அவை ஃபோர்டோவை சமாளிக்க எங்களுக்கு உதவும்," என்று அவர் குறிப்பிட்டார். "எல்லா விஷயங்களும் வானத்தில் பறந்து தூரத்திலிருந்து குண்டு வீசுவது போன்றவை அல்ல," என்றும் அவர் கூறினார். எப்போதுமே தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியானது என்றும் அணு ஆயுதத்தை உருவாக்க அவர்கள் எப்போதும் முயற்சி செய்யவில்லை என்றும் இரான் கூறி வருகிறது. ஆனால் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் 35 நாடுகளைக் கொண்ட நிர்வாக குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் தனது அணுசக்திப் பரவல் தடைகளை மீறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானில் ராணுவ ரீதியாக தலையிட அமெரிக்காவிற்கு என்ன தேவை என்று கனடாவில் நடந்த G7 கூட்டத்தில் டிரம்பிடம் கேட்டபோது, 'நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை' என்று அவர் கூறினார். 'கேம் சேஞ்சர்' சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, "ஆழமாக புதைக்கப்பட்ட இரானின் அணுசக்தி நிலையங்களை சேதப்படுத்துவதில் இஸ்ரேல் எந்த வகையிலும் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு குறைவு தான்" என்று பேராசிரியர் ரோஜர்ஸ் நம்புகிறார். "தங்களால் செய்ய முடியாத விஷயத்தைச் செய்ய, இஸ்ரேலுக்கு எம்ஓபி போன்ற சக்திவாய்ந்த ஒரு வெடிகுண்டு தேவைப்படும்," என்று அவர் கூறினார். "ஃபோர்டோ தளம் செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் அணு ஆயுதம் தொடர்பான அபாயத்தை ஏற்படுத்தும் நிலைமையில் தான் இருக்கிறது. டெஹ்ரானுக்கு, அந்த தளத்தில் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றவோ வாய்ப்பு இருக்கிறது" என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் அணுசக்தி பரவல் தடுப்பு கொள்கைக்கான இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறுகிறார். எம்ஓபி பயன்படுத்தப்பட்டாலும், இரானின் அணு ஆயுதத் தளங்கள் எவ்வளவு ஆழத்தில் இருக்கின்றன, எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன என்பது தெரியாததால், இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் வெற்றி கிடைப்பதற்கும் உத்தரவாதம் இல்லை என்று பேராசிரியர் ரோஜர்ஸ் கூறுகிறார். "தற்போது உள்ள எந்த ஆயுதத்தையும் விட, இரானின் நிலத்தடியில் ஆழமாக உள்ள அணுசக்தி திறன்களை சேதப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஆயுதத்திடமே உள்ளது. ஆனால் அதைச் செய்ய முடியுமா என்பது யாருக்குத் தெரியும்!" என்கிறார் பேராசிரியர் ரோஜர்ஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cew0lwxwx02o

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

2 months 4 weeks ago
சங்கிலிய மன்னனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மனிதர்கள் கொலை செய்யப்பட்டர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். அவர்களது வயதை, கொல்லப்பட்ட விதத்தை இந்த முறையில் கணிக்க முடியுமா?

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்!

2 months 4 weeks ago
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்! காங்சேன்துறையிலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 08ஆம் திகதி புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையின் புனரமைப்புக் காரணமாக, இவ்வளவு காலமும் அநுராதபுரத்திலிருந்தே யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்கள் எடுத்துவரப்பட்டன. இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான கோரிக்கை கிடைத்தும் சில நாள்களின் பின்னரே எரிபொருள் வந்துசேர்ந்தது. இதனாலேயே, கடந்தகாலங்களில் தாமங்கள் ஏற்பட்டிருந்தன. எனினும் இனிவரும் காலங்களில் உடனுக்குடன் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1436090

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்!

2 months 4 weeks ago

0-8.webp?resize=750%2C375&ssl=1

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்!

காங்சேன்துறையிலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 08ஆம் திகதி புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது.

இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியசாலையின் புனரமைப்புக் காரணமாக, இவ்வளவு காலமும் அநுராதபுரத்திலிருந்தே யாழ்ப்பாணத்துக்கு எரிபொருள்கள் எடுத்துவரப்பட்டன.

இதனால் எரிபொருள் விநியோகத்துக்கான கோரிக்கை கிடைத்தும் சில நாள்களின் பின்னரே எரிபொருள் வந்துசேர்ந்தது. இதனாலேயே, கடந்தகாலங்களில் தாமங்கள் ஏற்பட்டிருந்தன.  எனினும் இனிவரும் காலங்களில்  உடனுக்குடன் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1436090

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 4 weeks ago
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : { அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி } (2) பெண் : அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வேனடி பெண் : { ஏன் அத்தான் என்னை பார் அத்தான் கேள் அத்தான் என்று சொல்லித்தான் } (2) பெண் : சென்ற பெண்ணை தான் கண்டு துடித்தான் அழைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி பெண் : { மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் } (2) பெண் : என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி ........ ! --- அத்தான் என்னத்தான் ---

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

2 months 4 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02 [This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.] பகுதி: 02 / 'புத்தரின் வருகைக்கு முன்பே இலங்கையில் மனித இனம்' புத்தர் நிர்வாணம் அடைந்து, அதாவது பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியவற்றை நீக்கி, ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வான்வழியாகப் பறந்து, இலங்கைக்கு தன் முதல் வருகையை நிகழ்த்தினார் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. ஆனால், புத்தர் எங்களைப்போல் ஒரு மனிதர், கட்டாயம் தன்பாட்டில் இலங்கைக்கு பறந்திருக்க முடியாது. பௌத்தர்கள் அதை நம்புவது அவர்களைப் பொறுத்தது. ஏனெனில் இந்தியாவில் இருந்து, புத்தருக்கு முன்பே, அனுமன் ஒரு மலையைச் சுமந்து இலங்கைக்கு பறந்தார் என்று இன்னும் பல இந்துக்கள் நம்புவது போல, அவர்களும் நம்பலாம். அவ்வளவுதான்! மற்றும்படி அது உண்மை நிகழ்வாக இருக்க முடியாது. ஆனால், இந்துக்கள் அதன் அடிப்படையில், இலங்கை தமக்கே உரிமை என்று என்றும் கோரவில்லை. 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' பக்கம் 8ல் தெளிவாகக் கூறுகிறது, 'எந்த நேரத்திலும் அவர் (புத்தர்) காசி [வராணசி / பெனாரஸ்] யில் இருந்து 250 மைல்களுக்கு மேல் செல்லவில்லை என்று குறிப்பிடுகிறது. புத்தர் பறந்து இலங்கைக்கு வந்த பயணங்கள் உண்மையற்றதுடன் வரலாற்று சிறப்புகள் கொண்டதும் அல்ல. அவரது முதல் வருகையின் நோக்கம், அந்த நேரத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த உயிரினங்களை அகற்றுவதன் மூலம், இலங்கையை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், புத்தரின் காலத்தில், இலங்கையில் கோரமா [கோரமான விலங்குகள்] போன்ற இயக்கர்கள், அரக்கர்கள், போன்ற மனிதனுக்கு கீழான உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுவது பரிதாபகரமான பொய் ஆகும். புத்தரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான பல தொல்பொருள் சான்றுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. அவைகளின் சில மாதிரிகள் கீழே தரவுள்ளேன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் காலத்தில், இயக்கர், அரக்கர், பூதம் [Yakkhas, Rakkhasas and Bhutas] போன்ற உயிரினங்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறுவது, அறிவியல் ரீதியான பரிணாமக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது ஆகும். 'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' என்ற நூலில், சுமார் 174 செமீ (ஐந்தடி எட்டரை அங்குலம்) உயரம் கொண்ட பலாங்கொட மனிதன் சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்ததாக கூறுகிறது. அவரது எலும்புக்கூடு 1950 களில் கண்டு பிடிக்கப்பட்டது. 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001' என்ற நூலின் பக்கம் 77 இன் படி இது உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதனுக்கு உடையது என்கிறது. 'உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்' [‘First Farmers in Global Perspective’] என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் திரு. ஆர். பிரேமதிலகாவின் ஆய்வு கட்டுரையில்: "குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி உள்ளிட்ட ஆரம்பகால இரும்புக் கால பண்பாட்டின் ஆரம்ப சான்றுகள், நாட்டின் புராதன நகரமான அனுராதபுரத்தில், கி.பி. 900 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதே தாளில்; பார்லி மற்றும் ஓட்ஸின் [barley and oats] ஆரம்ப மேலாண்மை ஹார்டன் சமவெளியில் [இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓட்டன் சமவெளி / Horton Plains] 15,500 B. C. இல் நடந்தது என்பது தெளிவாகிறது, இது விஜயனின் வருகைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே என்பது குறிப்பிடத் தக்கது. மேலதிக குறிப்புகளுக்கு, 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake' என்ற ஆய்வின் கட்டுரையைக் பார்க்கவும். இது இந்தியாவின் லக்னோவில் நடந்த ‘உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 18 – 20 ஜனவரி 2006 இல் இந்த கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக. பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கா தனது ‘விஜயனுக்கு முந்தைய விவசாயம் [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] ’ என்ற கட்டுரையில், “இலங்கையில் 300,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இருந்தன என்று கூறுகிறது. மேலும் ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தீபகற்பத்தின் [தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம். தீவு போல் தோன்றும் தீவு அல்லாதது தீபகற்பம் ஆகும்] தென்கோடி முனைக்கு நடந்து பரவியிருக்கலாம். பின்னர் ஒரு காலம் அது பிரிந்து இலங்கையாக மாறியிருக்கலாம் என்கிறது. அதுமட்டும் அல்ல, இறுதிப் பிரிவிற்குப் பிறகும், கடல் மட்டம் குறையும் போதெல்லாம் தரைப்பாலங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 50,000 ஆண்டுகளில் படகுகள் மூலம் பாக்கு நீரிணை கடக்கப்பட்டு இருக்கும். எனவே தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய மக்களிடையே தடையற்ற மரபணு ஓட்டமும் மற்றும் பாலியல் உறவுகள் அல்லது இனப்பெருக்கம் கூட நடந்து இருக்கும். தென்னிந்தியாவின் பாம்பன் கடற்கரையில் (இது தம்பபன்னி கடற்கரைக்கு நேர் எதிரே உள்ளது. தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும். இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும் என அறியப் படுகிறது) இருந்த இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் மற்றும் இலங்கையின் இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது. இந்த இரண்டு கடற்கரைகளிலும், முத்து குளித்தலும் மற்றும் கடல் அடியில் உள்ள உற்பத்திப் பொருட்களும் எடுக்கப்பட்டன. இலங்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் சங்குகள் பெரியதாக இருந்தன, இது தென்னிந்திய மக்களை இலங்கைக்கு அழைத்து வந்திருக்கலாம்? பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கவின் கட்டுரை, விஜயனின் வருகைக்கு முன்னர் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்தக் கூடிய, மேல் அதிகமான தரவுகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake'' என்ற குறிப்பைப் பார்க்கவும். R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தனது குறிப்பில், ‘சிங்கள மக்கள் தென்னிந்தியாவின் தமிழர்கள் மற்றும் கேரளர்களுடனும், வங்காளத்தின் உயர் சாதிக் குழுக்களுடனும், குஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் தொகையை விட நெருக்கமாக உள்ளனர்’ என்கிறது. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia , என்ற குறிப்பைப் பார்க்கவும். (இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் 1980 களுக்கு முந்தியவை என்பதால், இந்த கட்டுரை 1970 களின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்). வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முதன்முதல் துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார். உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market]. எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது. Part: 02 / 'Human occupation in Sri Lanka before the alleged visits of Buddha' The Buddha’s alleged first visit, by flying through air, to Lanka took place, as per the chronicles, nine months after his attaining Nirvana; the enlightenment. The Buddha was a human, and he could not have flown to Lanka. It is perfectly all right for the Buddhists to believe in it, as Hindus from India also believe that Hanuman flew to Lanka carrying a mountain in their Epic Ramayana. But the Hindus have never claim sole ownership over Lanka based on it as it happened as per epic, before Buddha’s alleged first visit. 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' clearly says on page 8 that ‘At no time did he (Buddha) go farther than 250 miles from Benares. Buddha’s flying visits to Lanka are not true and have no historical merits. The alleged purpose of his first visit was to make Lanka fit for men by removing the beings existed at that time. It is a pathetic lie to say that there were sub-human beings in Lanka at the time of the Buddha, about 2500 years ago. There are many archaeological evidences for the human occupation of Lanka prior to the alleged visits of Buddha, and a few samples are given below. It is against the evolutionary concept to say that sub humans like Yakkhas, Rakkhasas and Bhutas inhabited Lanka about two thousand five hundred years ago, during the time of the Buddha. 'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' says that The Balangoda man of about 174 cm (five feet and eight and a half inch) in height lived in Lanka about 28,000 years ago. His skeletal remains were found in the 1950s. This belongs to an anatomically modern human as per the page 77 of Reference 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001'. Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’: “The earliest evidence of the Early Iron Age culture including horse breeding, iron production, and paddy cultivation found at Anuradhapura, ancient city of the country has been dated around 900 B. C.’. In the same paper, the author says; ‘It is clear that incipient management of barley and oats occur around 15,500 B. C. in the Horton Plains’, well before the arrival of Vijaya. See the Reference 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006' in this regard. Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago. Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”. Unquote • Prof T. W. Wikramanayake’s article gives other data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake' in this regard. R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference 'The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s)' in this regard. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 03 தொடரும் / Will Follow

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

2 months 4 weeks ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 02 / 'புத்தரின் வருகைக்கு முன்பே இலங்கையில் மனித இனம்'

புத்தர் நிர்வாணம் அடைந்து, அதாவது பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியவற்றை நீக்கி, ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வான்வழியாகப் பறந்து, இலங்கைக்கு தன் முதல் வருகையை நிகழ்த்தினார் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. ஆனால், புத்தர் எங்களைப்போல் ஒரு மனிதர், கட்டாயம் தன்பாட்டில் இலங்கைக்கு பறந்திருக்க முடியாது. பௌத்தர்கள் அதை நம்புவது அவர்களைப் பொறுத்தது. ஏனெனில் இந்தியாவில் இருந்து, புத்தருக்கு முன்பே, அனுமன் ஒரு மலையைச் சுமந்து இலங்கைக்கு பறந்தார் என்று இன்னும் பல இந்துக்கள் நம்புவது போல, அவர்களும் நம்பலாம். அவ்வளவுதான்! மற்றும்படி அது உண்மை நிகழ்வாக இருக்க முடியாது. ஆனால், இந்துக்கள் அதன் அடிப்படையில், இலங்கை தமக்கே உரிமை என்று என்றும் கோரவில்லை.

'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' பக்கம் 8ல் தெளிவாகக் கூறுகிறது, 'எந்த நேரத்திலும் அவர் (புத்தர்) காசி [வராணசி / பெனாரஸ்] யில் இருந்து 250 மைல்களுக்கு மேல் செல்லவில்லை என்று குறிப்பிடுகிறது. புத்தர் பறந்து இலங்கைக்கு வந்த பயணங்கள் உண்மையற்றதுடன் வரலாற்று சிறப்புகள் கொண்டதும் அல்ல. அவரது முதல் வருகையின் நோக்கம், அந்த நேரத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த உயிரினங்களை அகற்றுவதன் மூலம், இலங்கையை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், புத்தரின் காலத்தில், இலங்கையில் கோரமா [கோரமான விலங்குகள்] போன்ற இயக்கர்கள், அரக்கர்கள், போன்ற மனிதனுக்கு கீழான உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுவது பரிதாபகரமான பொய் ஆகும். புத்தரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான பல தொல்பொருள் சான்றுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. அவைகளின் சில மாதிரிகள் கீழே தரவுள்ளேன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் காலத்தில், இயக்கர், அரக்கர், பூதம் [Yakkhas, Rakkhasas and Bhutas] போன்ற உயிரினங்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறுவது, அறிவியல் ரீதியான பரிணாமக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' என்ற நூலில், சுமார் 174 செமீ (ஐந்தடி எட்டரை அங்குலம்) உயரம் கொண்ட பலாங்கொட மனிதன் சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்ததாக கூறுகிறது. அவரது எலும்புக்கூடு 1950 களில் கண்டு பிடிக்கப்பட்டது. 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001' என்ற நூலின் பக்கம் 77 இன் படி இது உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதனுக்கு உடையது என்கிறது. 'உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்' [‘First Farmers in Global Perspective’] என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் திரு. ஆர். பிரேமதிலகாவின் ஆய்வு கட்டுரையில்: "குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி உள்ளிட்ட ஆரம்பகால இரும்புக் கால பண்பாட்டின் ஆரம்ப சான்றுகள், நாட்டின் புராதன நகரமான அனுராதபுரத்தில், கி.பி. 900 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதே தாளில்; பார்லி மற்றும் ஓட்ஸின் [barley and oats] ஆரம்ப மேலாண்மை ஹார்டன் சமவெளியில் [இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓட்டன் சமவெளி / Horton Plains] 15,500 B. C. இல் நடந்தது என்பது தெளிவாகிறது, இது விஜயனின் வருகைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே என்பது குறிப்பிடத் தக்கது. மேலதிக குறிப்புகளுக்கு, 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake' என்ற ஆய்வின் கட்டுரையைக் பார்க்கவும். இது இந்தியாவின் லக்னோவில் நடந்த ‘உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 18 – 20 ஜனவரி 2006 இல் இந்த கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக. பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கா தனது ‘விஜயனுக்கு முந்தைய விவசாயம் [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] ’ என்ற கட்டுரையில், “இலங்கையில் 300,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இருந்தன என்று கூறுகிறது. மேலும் ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தீபகற்பத்தின் [தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம். தீவு போல் தோன்றும் தீவு அல்லாதது தீபகற்பம் ஆகும்] தென்கோடி முனைக்கு நடந்து பரவியிருக்கலாம். பின்னர் ஒரு காலம் அது பிரிந்து இலங்கையாக மாறியிருக்கலாம் என்கிறது. அதுமட்டும் அல்ல, இறுதிப் பிரிவிற்குப் பிறகும், கடல் மட்டம் குறையும் போதெல்லாம் தரைப்பாலங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 50,000 ஆண்டுகளில் படகுகள் மூலம் பாக்கு நீரிணை கடக்கப்பட்டு இருக்கும். எனவே தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய மக்களிடையே தடையற்ற மரபணு ஓட்டமும் மற்றும் பாலியல் உறவுகள் அல்லது இனப்பெருக்கம் கூட நடந்து இருக்கும். தென்னிந்தியாவின் பாம்பன் கடற்கரையில் (இது தம்பபன்னி கடற்கரைக்கு நேர் எதிரே உள்ளது. தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும். இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும் என அறியப் படுகிறது) இருந்த இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் மற்றும் இலங்கையின் இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது.

இந்த இரண்டு கடற்கரைகளிலும், முத்து குளித்தலும் மற்றும் கடல் அடியில் உள்ள உற்பத்திப் பொருட்களும் எடுக்கப்பட்டன. இலங்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் சங்குகள் பெரியதாக இருந்தன, இது தென்னிந்திய மக்களை இலங்கைக்கு அழைத்து வந்திருக்கலாம்? பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கவின் கட்டுரை, விஜயனின் வருகைக்கு முன்னர் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்தக் கூடிய, மேல் அதிகமான தரவுகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake'' என்ற குறிப்பைப் பார்க்கவும். R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தனது குறிப்பில், ‘சிங்கள மக்கள் தென்னிந்தியாவின் தமிழர்கள் மற்றும் கேரளர்களுடனும், வங்காளத்தின் உயர் சாதிக் குழுக்களுடனும், குஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் தொகையை விட நெருக்கமாக உள்ளனர்’ என்கிறது. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia , என்ற குறிப்பைப் பார்க்கவும். (இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் 1980 களுக்கு முந்தியவை என்பதால், இந்த கட்டுரை 1970 களின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்).

வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முதன்முதல் துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.

உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market]. எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.

Part: 02 / 'Human occupation in Sri Lanka before the alleged visits of Buddha'

The Buddha’s alleged first visit, by flying through air, to Lanka took place, as per the chronicles, nine months after his attaining Nirvana; the enlightenment. The Buddha was a human, and he could not have flown to Lanka. It is perfectly all right for the Buddhists to believe in it, as Hindus from India also believe that Hanuman flew to Lanka carrying a mountain in their Epic Ramayana. But the Hindus have never claim sole ownership over Lanka based on it as it happened as per epic, before Buddha’s alleged first visit.

'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' clearly says on page 8 that ‘At no time did he (Buddha) go farther than 250 miles from Benares. Buddha’s flying visits to Lanka are not true and have no historical merits. The alleged purpose of his first visit was to make Lanka fit for men by removing the beings existed at that time. It is a pathetic lie to say that there were sub-human beings in Lanka at the time of the Buddha, about 2500 years ago. There are many archaeological evidences for the human occupation of Lanka prior to the alleged visits of Buddha, and a few samples are given below. It is against the evolutionary concept to say that sub humans like Yakkhas, Rakkhasas and Bhutas inhabited Lanka about two thousand five hundred years ago, during the time of the Buddha.

'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' says that The Balangoda man of about 174 cm (five feet and eight and a half inch) in height lived in Lanka about 28,000 years ago. His skeletal remains were found in the 1950s. This belongs to an anatomically modern human as per the page 77 of Reference 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001'. Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’: “The earliest evidence of the Early Iron Age culture including horse breeding, iron production, and paddy cultivation found at Anuradhapura, ancient city of the country has been dated around 900 B. C.’. In the same paper, the author says; ‘It is clear that incipient management of barley and oats occur around 15,500 B. C. in the Horton Plains’, well before the arrival of Vijaya. See the Reference 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006' in this regard. Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago. Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”. Unquote • Prof T. W. Wikramanayake’s article gives other data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake' in this regard. R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference 'The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s)' in this regard.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 03 தொடரும் / Will Follow

508718590_10229614250163349_475357283161

509349028_10229614249603335_410920183408

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago
இவர் இங்கு வந்து எல்லோருடனும் முறுக்குவதைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் ....... அண்ணாத்தைக்கு டீ .வீ ....ரிமோட்டும் கையில் கிடைப்பதில்லை . ........ ! 😂