Aggregator
குழந்தைகளிடையே நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பது ஏன்? 3 காரணங்களும் தீர்வுகளும்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கட்டுரை தகவல்
எழுதியவர், அன்பு வாகினி
பதவி, உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்
18 ஜூன் 2025, 08:31 GMT
புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்
உலகளவில், குறிப்பாக இந்தியாவில், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 Diabetes) ஆகியவை வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய ஆய்வுகளின்படி, 2030க்குள் உலகில் உடல் பருமனாக இருக்கும் பத்து குழந்தைகளில் ஒன்று இந்தியாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளில் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது.
இது பெரும்பாலும் வயதானோருக்கு மட்டுமே வரும் நோயாக இருந்தாலும், இப்போது குழந்தைகளிடமும் அதிகரித்து வருகிறது. இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
மூன்று காரணங்கள் என்ன?
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மூன்று காரணங்கள் முக்கியமாகின்றன. அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு (HFSS) கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குழந்தைகளின் உடல் பருமன், நீரிழிவுக்கு முதன்மைக் காரணம்.
குளிர்பானங்கள், பேக்கரி உணவு வகைகள், பாக்கெட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் மறைமுக சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி, இன்சுலின் செயல்படும் தன்மையைக் குறைக்கிறது.
இரண்டாவதாக, சக்கை உணவு (ஜங்க் ஃபுட்), பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைப்பதால் குழந்தைகளின் உணவுப் பழக்கம் மாறிவருகிறது.
மூன்றாவதாக, உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டிருப்பது இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. குழந்தைகள் வெளியே விளையாடுவதற்குப் பதிலாக கைப்பேசி, டேப்லெட், வீடியோ கேம்களில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள், உடற்கல்வி வகுப்புகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இந்த மூன்று காரணிகளும் சேர்ந்து குழந்தைகளின் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கின்றன.
விளம்பரங்களின் தாக்கம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
கார்ட்டூன் கதாபாத்திரங்கள், பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்கள் குழந்தைகளின் உணவுத் தேர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
'ஜங்க் ஃபுட்' தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.
நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விளம்பரப்படுத்துவதால், குழந்தைகள் அவற்றை 'ட்ரெண்டி' என்று கருதுகின்றனர்.
ஜங்க் ஃபுட்டின் சுவை, அவை தரும் அனுபவத்தை மட்டுமே விளம்பரங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. உடல் பருமன், நீரிழிவு, பல் சிதைவு போன்ற நீண்டகால பாதிப்புகள் பற்றி அதில் எதுவும் காட்டப்படுவதில்லை.
பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' அமைக்கும் முயற்சி
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
இந்த பிரச்னையை சமாளிக்க தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. சிபிஎஸ்இ (CBSE), மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளில் 'சர்க்கரைப் பலகை' (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் சிபிஎஸ்இ 24,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 'சர்க்கரைப் பலகை' அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சர்க்கரைப் பலகை (Sugar Board) என்பது அதிக சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், மக்களுக்கு ஏற்படுத்தும் ஒரு தகவல் பலகையாகும்.
இந்தப் பலகைகளில் மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு தேவையான முக்கியத் தகவல்கள் இடம்பெறும். முதலில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
அதேபோல், அவர்கள் அன்றாடம் உண்ணும் சிற்றுண்டிகள், பானங்களில் எவ்வளவு சர்க்கரை அடங்கியுள்ளது என்பதை விளக்கும் தகவல்கள் தரப்படும்.
அதிகப்படியான சர்க்கரை உட்கொண்டால் ஏற்படும் ஆரோக்கிய அபாயங்கள், பல் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இதனுடன், ஆரோக்கியமான மாற்று உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும்.
இந்த முயற்சி மாணவர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்தவும், அதிக - சர்க்கரை, உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளின் நுகர்வைக் குறைக்கவும் உதவும்.
இதன்மூலம், பள்ளி கேன்டீன்களில் இத்தகைய ஆரோக்கியமற்ற உணவு வகைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் இயலும். இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும், குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவதில் இது முக்கியமான நடவடிக்கை என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை, பள்ளி கேன்டீன்களில் ஆரோக்கியமான, சத்தான உணவு வகைகள் வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
முழுமையான தீர்வுக்கான வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்
ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களால் மக்களின் ஆரோக்கியம், குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழ்நிலையை சரிசெய்ய அரசாங்கம், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த 'உணவுக் கொள்கை' மாதிரியை உருவாக்க வேண்டும்.
இந்தக் கொள்கையின் மூலம், ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகளுக்கு அருகே ஜங்க் ஃபுட் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் தேசியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பள்ளி வளாகங்களிலிருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் இந்த உணவு வகைகள் கிடைக்காதவாறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
'சர்க்கரைப் பலகை' போன்ற முயற்சிகள் நல்ல தொடக்கமாக இருந்தாலும், நீண்ட கால மாற்றத்துக்கு உணவு பழக்கவழக்கங்கள், விளம்பரத் தடைகள், உணவுப் பொருட்களின் விற்பனையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் தேவை.
இதற்கு ஒரு முன்மாதிரியாக, மெக்சிகோ, சிலி போன்ற நாடுகள் உணவு-பானங்களில் அதிக சர்க்கரை, கொழுப்பு அல்லது சோடியம் (உப்பு) இருப்பதை எளிதில் அடையாளம் காண உதவும் 'முன்பக்க எச்சரிக்கை லேபிள்களை' (Front-of-Pack Warning Labels) அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த லேபிள்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை நுகர்வோருக்கு தவிர்க்க உதவுகின்றன.
இதேபோல், இந்தியாவிலும் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) உடனடியாக எச்சரிக்கை லேபிளிங் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய நடவடிக்கைகள், குழந்தைகள் உட்பட அனைவரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
அதேநேரத்தில், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள ஜங்க் ஃபுட் பொருட்கள் வரியின்றி இறக்குமதி செய்யப்படுவதால், அவை மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.
இந்த நிலைமை பொது சுகாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. இதைத் தடுக்க, அரசாங்கம் உடனடியாக திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
ஒருங்கிணைந்த திட்டம் தேவை
தற்போதைய 'சர்க்கரைப் பலகை' முயற்சி குழந்தைகளின் ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை மேம்படுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருந்தாலும், நிலையான மாற்றத்துக்கு ஒருங்கிணைந்த தேசிய பல்துறை செயல்திட்டம் தேவை.
இதை அவசர கால அடிப்படையில் உருவாக்கி குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம், சுகாதாரம் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் தீர்வுகள் காண்பதற்கும் அரசாங்கம், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்புகளும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து உறுதிப்பட செயல்பட வேண்டும்.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்து ஆகும்)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கல்வித்துறையில் கத்தரிக்காய் வியாபாரிகள்
முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும்.
செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்?
இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது.
தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது.
குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை.
தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா!
கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
Posted 23 hours ago by ஆர். அபிலாஷ்
கல்வித்துறையில் கத்தரிக்காய் வியாபாரிகள்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
குட்டிக் கதைகள்.
நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர்
நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர்
18 Jun, 2025 | 04:32 PM
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து, அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியலை நடத்தும் நபர்களாக சிலர் மாறியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சஜித் அணி தொடர்பில் கடந்த காலங்களில் பாரிய விமர்சனங்களை முன்வைத்தவர்கள், அவர்களுடன் சேர்ந்து தமது அரசியலை முன்னெடுக்கும் கேவலமான நிலை உள்ளது.
இப்படியானவர்களே எமக்கு எதிராக போலியான பிரச்சாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றனர் என்றார்.
நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது - இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன்
18 Jun, 2025 | 05:13 PM
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்கள் கூறி இருந்தோம்.
இத்தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் கூறியிருந்தோம்.
பல கட்சிகள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டனர். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் உள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறு பார்க்கின்றபோது வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 35 சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் இருக்கின்றன. அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும்.
இந்த கோட்பாட்டிற்கு இணங்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையிலே செயற்பட்டிருக்க வேண்டும்.
மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள். எந்த கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்துள்ளதோ அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் - சுமந்திரன் | Virakesari.lk
புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!
புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..!
18 Jun, 2025 | 05:35 PM
திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கப்பட்டது.
மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது.
பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020 இல் வெளியேறும் போது பிறகு வந்து அச்சிலையை எடுத்து செல்வதாக கூறி சென்றனர்.
ஆனால் இன்று வரை அது எடுக்கப்படாததால் அந்த இடத்தில் ரமேஷ் புத்தர் சிலையுடன் பிள்ளையார் சிலை வைத்து கடந்த 4 வருடம் வழிபாடு செய்தார். கடந்த பொசன் தினத்தன்று விகாராதிபதி வந்து பிள்ளையார் சிலையை அகற்ற முயன்றார். ரமேஷ் எதிர்த்ததால் அவரை கைது செய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல். இன முறுகலை ஏற்படுத்தும் செயல். எனவே அவரை விடுவிக்குமாறு மன்றை கோரினார்.
நீதவான் ரமேஷூக்கு பிணை வழங்கி இன முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று பிணை வழங்கபட்டது..! | Virakesari.lk
மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்!
மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்!
18 Jun, 2025 | 05:42 PM
மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன.
அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது.
இந்த வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த வாவியில் ஆற்றுவாழைத் தாவரம் அதிகமாக வளர்ந்துள்ளதால் மீனவர்கள் தோணிகளை செலுத்த முடியாமல் அவதியுறுவதாகத் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த வாவியில் முதலை, பாம்பு போன்ற மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்கள் வாழ்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் இந்த ஆற்றுவாழைகளுக்குள் ஒளிந்திருந்த முதலையொன்று மீனவர் ஒருவரை இழுத்துச் சென்று கொன்றுள்ளதுடன், பல கால்நடைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வாவியின் தூய்மையை அழிக்கக்கூடிய ஆற்றுவாழைகளை அகற்றுமாறு மீனவர்கள் உரிய தரப்பினரை கோருகின்றனர்.
மட்டு. வாவியில் அதிகமாக வளர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் ; முதலைகள் பெருக்கம் ; மரண பயத்தில் மீனவர்கள்! | Virakesari.lk
வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம்
வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம்
வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம்
18 Jun, 2025 | 06:09 PM
நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நேரகாலத்துடன் செலவு செய்து மேலதிக நிதிகளைக் கோரவேண்டும். அதேநேரம் முன்னெடுக்கப்படும் திட்டங்களை திணைக்களத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிடவேண்டும்.
அதேபோன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களைத் தயாரிக்கும்போதும் களத்துக்குச் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடி அதனை முன்னெடுக்குமாறும் ஆளுநர் திணைக்களத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் புதிய கட்டுமானங்களை அலுவலகத் தேவைகளின் நிமிர்த்தம் அமைப்பதை விரும்பவில்லை. அவ்வாறான திட்டங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி வரும் சுற்றுலாவிகள், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பிரதேசங்களில் தமது இயற்கை உபாதைகளைப் போக்குவதற்குரிய மலசலகூடங்கள் இல்லாமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் எதிர்காலத்தில் இது தொடர்பில் ஒவ்வொரு உள்ளூராட்சி உதவி ஆணையாளர்களும் கவனம் செலுத்தவேண்டும்.
இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சு, உள்ளூராட்சித் திணைக்களம், ஒவ்வொரு மாவட்டத்தினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் அலுவலகம், மாகாண காணித் திணைக்களம், மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என ஒவ்வொரு திணைக்களங்களினதும் ஒவ்வொரு திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி, திட்டமிடல், பொறியியல், கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாகாண பணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் | Virakesari.lk