Aggregator
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்
மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்
இளைஞர்கள் குறிவைப்பு
பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
குறித்த இளைஞர் சமூகத்தை குறிவைத்து செயற்பட்டு போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தாரென விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
https://newuthayan.com/article/மனைவியுடன்_ஐஸ்_விற்பனை;_பருத்தித்துறையில்_சிக்கிய_நபர்
காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!
காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!
காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்!
adminJune 19, 2025
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார்.
காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர்.
அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவின் போது, தமிழ் மக்கள் கூட்டணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை குழு ஆகியவை கூட்டிணைந்து ,சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசாவை முன் மொழிந்தனர்.
வேறு பெயர்கள் முன் மொழியப்படாததால் , கோவிந்தராசா தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில், ஆண்டிஐயா விஜயராசா தெரிவானர்.
அதேவேளை , சுயேச்சை குழு , தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தமக்கு இடையில் தவிசாளர் பதவியை 16 மாதங்கள் வீதமாக பகிர்ந்து கொண்டே ஆதரவு வழங்க உடன்பாட்டுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!
adminJune 19, 2025
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது.
இந்நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் தவிசாளர் வேட்பாளராக சோமசுந்தரம் சுகிர்தனும், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் பத்மநாதன் சாருஜனும் போட்டியிட்டனர்.
தவிசாளர் தெரிவை பகிரங்க வாக்களிப்பு மூலமாக தெரிவு செய்ய 24 உறுப்பினர்களும் இரகசிய வாக்களிப்புக்கு 10 உறுப்பினர்களும்,
நடுநிலையாக ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.
அதனை அடுத்து பகிரங்கமாக நடைபெற்ற தெரிவில் சோமசுந்தரம் சுகிர்தன் 14 வாக்குகளையும் பத்மநாதன் சாருஜன் 09 வாக்குகளையும் பெற்றதை அடுத்து சுகிர்தன் தவிசாளராக தெரிவானர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற உப தவிசாளர் தெரிவில் பொன்னுத்துரை தங்கராசாவும் தெரிவானர்