Aggregator
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மனிதநேயம் எங்கே
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்!
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்!
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்!
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்!
இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் தனது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவமனைக்கு அருகில் ஏவுகணைத் தாக்குதலின் போது பராமரிப்பாளர் காயமடைந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விடயத்தில் உதவ தூதரகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஈரானுடனான அதன் 7 நாள் மைல்கல்லை எட்டியபோது, தெஹ்ரான் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் டெல் அவிவ் மீது சுமார் 25 ஏவுகணைகளை சரமாரியாக வீசி பலரை காயப்படுத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்கள் பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையையும், ஹோலோன் மற்றும் ராமத் கானில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளையும் நேரடியாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
இதனால், பரவலான அழிவுகளும் பலர் காயமடைந்தும், உயிரிழந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?
மீன்பிடித் தடை காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற தம் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழக அரசால் ஆண்டுதோறும் அமுல் படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கடந்த திங்கட்கிழமை தயாரான நிலையில் வங்க கடலில் வீசிய சூறைக்காற்று காரணமாக மீன்பிடி அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி அனுமதிச்சீட்டு இரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மீன்பிடி தடைக்காலம் முடிந்து 64 நாட்கள் பின் நேற்று (18) ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கச்சத் தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்களை விரட்டி அடித்ததாகவும், ஒரு சில படகில் இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்த்த அளவு மீன் பிடிக்க முடியாததால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில்,இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்ததோடு, கடற் படையினரின் உதவியுடன் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?
ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!
ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!
ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு!
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள்.
அவற்றின் எண்ணிக்கை 58,947 என DMT ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.