Aggregator

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
1954 மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியினை கலைத்து சா மன்னராட்சியினை ஏற்படுத்திய அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகள் அதற்கான காரணமாக கூறப்பட்ட காரணம் எண்ணெய் வளத்தினை தேசியமயப்படுத்தல் என கூறப்படுகிறது, பின்னர் அந்த மன்னராட்சியினை கோமேனி கலைத்தார் அப்போது அந்த கோமேனிக்கு ஆதரவாக இருந்தவர் தற்போதுள்ள அலி கோமேனி, இவருடைய ஆட்சிக்கு இந்த ஆண்டு முடிவு வரலாம், அதனால் இதுவரை காலமும் அல்லலுறும் மக்களுக்கு ஒரு விடிவு ஏற்படலாம் (நடக்காமலும் போகலாம்), ஆனால் ஈராக் போல 1 மில்லியன் உயிரிழப்பு ஏற்படுமா எனத்தெரியவில்லை ஆனால் பல இலட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என கருதுகிறேன். ஆனால்இதற்கு எண்ணெய் வளம் முக்கியமாக காரனமாக இருக்கலாம், 1975 இல் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உளவுத்துறைகளால் அவுஸ்ரேலிய பிரதமர் ஒருவரும் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டார், அதற்கு வளங்களை தேசிய மயப்படுத்தல் மற்றும் அவுஸ்ரேலிய ஒரு குடியுரிமை கொண்ட சுதந்திர நாடாக அதன் விருப்பின் படி செயற்பட வேண்டும் என விரும்பியிருந்தார் என வேறு சில காரணங்கள் உள்ளடங்கலாக.

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 4 weeks ago
@கந்தப்பு போட்டியை நடாத்துங்கள்😀 வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல நாட்கள் நான் விடுமுறையில் இருப்பதால் யாழுக்கு வருவதே குறைவாக இருக்கும்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம்

2 months 4 weeks ago
யாழில் பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொண்டார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 19 JUN, 2025 | 11:17 AM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பில் அறிந்து கொள்ள விநியோகஸ்தர்களை நேரில் சென்று பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் பார்வையிட்டுள்ளார். அங்கு பாரம்பரிய வளங்கள், தொழில் முயற்சியாண்மை மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுடன் நிலைபேண்தகு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல எவ்வாறு உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்கவும் முடியும் என்பதை இந்த விஜயத்தின் போது அறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/217876

தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்!

2 months 4 weeks ago
தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்! தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார். ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சந்தமாலி, ஜூன் 16 அன்று கொழும்பின் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் அவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் இருப்பதாக சண்டமாலி குற்றம் சாட்டியுள்ளார். எனினும், அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. https://athavannews.com/2025/1436213

தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்!

2 months 4 weeks ago

New-Project-254.jpg?resize=750%2C375&ssl

தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்!

தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சந்தமாலி, ஜூன் 16 அன்று கொழும்பின் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் அவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் இருப்பதாக சண்டமாலி குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும், அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

https://athavannews.com/2025/1436213

மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர்

2 months 4 weeks ago
நான், தலைப்பை பார்த்துவிட்டு.... ஸ்ரீலங்காவில் வயிற்றுப் பிழைப்புக்காக... ஐஸ்கிறீம் விற்பவர்களை ஏன், கைது செய்கிறார்கள் என யோசித்தேன். அந்த ஐஸ் வேறை, இந்த ஐஸ் வேறை என்று.. பிறகுதான் புரிந்தது. 😂

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
'400 நொடிகளில் டெல் அவிவ்' - இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவியதா இரான்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்புப்படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 18 புதன்கிழமை அன்று இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்திய இரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைப்பர்சோனிக் ஃபடா ஏவுகணைகளை பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி.) இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவை நோக்கி ஏவியதாக குறிப்பிட்டுள்ளது. இரானின் அரசு ஊடக முகமையான மெஹர் மற்றும் அரசு தொலைக்காட்சியான பிரஸ் டிவி, ஃபடா 1 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியதாக தங்களின் செய்திகளில் குறிப்பிட்டுள்ளது. பிரஸ் டிவியின் செய்தியில், "தாக்குதலின் சமீபத்திய கட்டமானது முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் தலைமுறை ஃபடா ஏவுகணைகள், இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் முடிவுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல், இரானில் தாக்குதல்கள் நடத்துகிறது. மற்றொருபுறம், இரான் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா துறைமுகம் போன்ற இஸ்ரேலின் முக்கியமான பகுதிகளில் மீது ஏவுகணைகளை ஏவி வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் இரானின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இதற்கும் முன்னதாக ஃபடா-1 ரக ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஒரு டஜன் ஃபடா-1 ரக ஏவுகணைகளை ஏவியது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் மோதலின் போது, இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. 2023-ஆம் ஆண்டு இந்த ஃபடா ஏவுகணைகள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த ரக ஏவுகணைகளுக்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஐ.ஆர்.ஜி.சி. அமைப்பினர் இந்த ஏவுகணைகளை 'இஸ்ரேல் ஸ்ட்ரைக்கர்' என்று அழைக்கின்றனர். இந்த ஏவுகணைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போது பெரிய அளவிலான பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டன. ஹீப்ரூ மொழியில் அச்சிடப்பட்ட அந்த பேனர்களில், "400 நொடிகளில் டெல் - அவிவ்," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஐ.ஆர்.ஜி.சி. படையினர் இந்த ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று அழைக்கின்றனர். ஆனால் பாதுகாப்புத்துறை நிபுணர்கள், உண்மையாகவே இந்த ஏவுகணைகளுக்கு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப செயல்திறன் இருக்கிறதா என்று சந்தேகிக்கின்றனர். பட மூலாதாரம்,NEWS ONLINE படக்குறிப்பு, ஹீப்ரு மொழியில் அச்சிடப்பட்ட பேனர்கள் ஃபடா ஏவுகணைகளின் சிறப்பம்சங்கள் ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 முதல் 25 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியவை ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரான் ஃபடா ஏவுகணைகளை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்று பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் பிரிவுகளில் இணைத்தது. அல்-ஃபடா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 1,400 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பில் சிக்காமல், அவற்றையே அழிக்கும் தன்மை கொண்டது என்று ஐ.ஆர்.ஜி.சி. கூறுகிறது. அல்-ஃபடா ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழிப்பதற்கு முன்பு 13 முதல் 15 'மெக்' வேகத்தில் செல்லும். மெக் 15 என்பது ஒரு நொடிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் செல்வதை குறிப்பதாகும். "இந்த ஏவுகணைகள் மிகவும் வேகமாக செல்லக் கூடியது. வளிமண்டலத்திற்கு உள்ளும் வெளியும் பயணிக்கக் கூடியது. வேறெந்த ஏவுகணைகளாலும் ஃபடாவை அழிக்க இயலாது," என்று இந்த ஏவுகணைகளின் அறிமுக நிகழ்வன்று, புரட்சிகர காவல்படையின் விண்வெளி அமைப்புத் தளபதி அமீர் அலி ஹஜிஸேதா தெரிவித்தார். இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலண்ட், இந்த ஏவுகணைகள் குறித்து, "நம்முடைய எதிரிகள் அவர்கள் உருவாக்கிய ஆயுதங்கள் குறித்து பெருமை பேசி வருகின்றனர். நீர், நிலம் மற்றும் ஆகாயம் என எந்த இடத்திலும் எத்தகைய தொழில்நுட்பத்துக்கும் (மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டாலும்) சரியான பதில் நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார். அல்-ஃபடா 1 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து புரட்சிகர காவல்படையினர் அல்-ஃபடா 2 என்ற புதிய தலைமுறை க்ரூஸ் ஏவுகணைகளை அறிமுகம் செய்தனர். அது 1500 கி.மீ வரை பயணித்து இலக்குகளை தாக்கி அழிக்கும். இரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில், அல்-ஃபடா 2 குறைவான உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தன்னுடைய பாதையை மாற்றி அமைத்துக் கொள்ளும் செயல்திறனும் அதனிடம் உள்ளது. ஐ.ஆர்.ஜி.சி.யின் கீழ் செயல்படும் அஷூரா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகதிற்கு இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி வருகை தந்த போது அல்-ஃபடா க்ரூஸ் ஏவுகணைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்போது அது பயணிக்கும் தூரத்தின் திறன் குறித்து எந்த தகவலும் வெளியிப்படவில்லை. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இரான் ஃபடா ஏவுகணைகளை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த ஆண்டு ஏப்ரல் 13 தாக்குதலின் போதும், கடந்த ஆண்டு அக்டோபர் 1 தாக்குதலின் போதும் அல்-ஃபடா 2 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படவில்லை. பட மூலாதாரம்,I.M.A. இரானின் கைவசம் உள்ள ஏவுகணை வகைகள் கடந்த அக்டோபர் 7 அன்று இரானின் ஏவுகணைகள் திட்டம் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது பிபிசி. அதன்படி, ராக்கெட் க்ரூஸ் ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இந்த நான்கு வகை ஏவுகணைகளே இரானால் உருவாக்கப்பட்டவை. இவற்றில் நிலத்தில் இருந்து நிலத்தில் மற்றும் நிலத்தில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளும் உள்ளன. இதுமட்டுமின்றி இரானின் ஆயுதக்கிடங்கில், பாதுகாப்பு அமைப்பில் செயல்படுத்தப்படும் ஏவுகணைகளும் உள்ளன. சில ரஷ்யா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்டவை. சில இரானின் பாதுகாப்புப் படையினரால் உருவாக்கப்பட்டவை. அது இங்கே பட்டியலிடப்படவில்லை. ஏப்ரல் 2024 தாக்குதலின் போது 'இமாத் 3' பாலிஸ்டிக் ஏவுகணைகள், 'பாவேஹ்' க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 'ஷாஹித் 136' வகை டிரோன்களையும் இரான் பயன்படுத்தியது. ஆனால் 'கைபர் ஷிகான்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இரான் பயன்படுத்தியதாக அரசு செய்தி முகமை தெரிவித்தது. 'இமாத்' பாலிஸ்டிக் ஏவுகணை ஒரு மிட்-ரேஞ்ச் (medium-range) ஆயுதமாகும். ஆனால் 1700 கி.மீ வரை பயணித்து இலக்குகளை அழிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் நீளம் 15 மீட்டர்கள். அதன் வெடிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் பகுதியான வெடிப்பு முனையின் (warhead) எடையானது 750 கிலோ கிராம். இது 2015-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இமாத் ஏவுகணைகள், அல் கதார் (Al Qadr) பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். 'பாவேஹ்' என்பது மீடியம்-ரேஞ்ச் க்ரூஸ் ஏவுகணைகள். இது 1650 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கக் கூடிய செயல்திறன் கொண்டவை. இலக்கை அடைவதற்கு பல்வேறு பாதைகளை தேர்வு செய்யக் கூடிய ஏவுகணைகளின் முதல் தலைமுறை ஏவுகணைகள் என்று 'பாவேஹ்' அழைக்கப்பட்டது. 'பாவேஹ்' ரக ஏவுகணைகள் குழுவாக சென்று தாக்கக் கூடிய திறன் கொண்டவை. ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து இணைந்து செயல்படும் தன்மை கொண்டவை. இதனால் கூட இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். 'பாவேஹ்' 2023 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இஸ்ரேல் வரை சென்று தாக்குதலை நடத்தக் கூடும் என்று இரான் தெரிவித்தது. அது ஏப்ரல் 13 தாக்குதலின் போது நிரூபிக்கப்பட்டது. இரானின் சமீபத்திய ஏவுகணைகள் அதிகபட்சமாக 2000 - 2500 கி.மீக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுடையவை. ஆனால் ஐரோப்பிய நாடுகளை தாக்கி அழிக்கும் அளவுக்கான திறன் கொண்ட ஏவுகணைகள் அதனிடம் இல்லை. இரானின் அதி உயர் தலைவர் அலி காமனெயி, தற்போதைக்கு 2 ஆயிரம் கி.மீ வரை இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை மட்டும் உருவாக்கினால் போதும் என்ற கட்டளையைப் பிறப்பித்ததாக இரானின் ராணுவப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால்தான் நீண்ட தூரத்தை இலக்காகக் கொண்டு தாக்குதலை நடத்தும் லாங்க்-ரேஞ்ச் ஏவுகணைகளை உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டன. காமனெயி, இந்த உத்தரவுக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் அது என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை. இந்த ஏவுகணைகள் மட்டுமின்றி, 'ஜுல்ஃபிகர்' என்ற குறைந்த தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஷார்ட் - ரேஞ்ச் (700) பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரானிடம் உள்ளன. 2017 மற்றும் 2018 காலகட்டங்களில் ஐ.எஸ்.ஐ.எஸின் டாயிஷ் இலக்குகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்பட்டன இவை. இதன் மொத்த நீளம் 10 மீட்டர். 'மொபைல் லாஞ்ச்' தளம் உள்ளது. ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிச் செல்லும் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிறது. 'ஃபடா 110' ஏவுகணைகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 'ஜுல்ஃபிகர்'. இதன் வெடிப்புமுனையின் எடை 450 கிலோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yg3j596q4o

இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா “மதில் மேல் பூனை”

2 months 4 weeks ago
மதில் மேல் பூனை sudumanal மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு. ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..? எஸ்.சி.ஓ (SCO- Shanghai Cooperation Organisation) இன் ஓர் அங்கத்துவ நாடாகவும் இந்தியா இருக்கிறது. 2001 இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், பெலாரூஸ், கஸஹஸ்தான், கிர்ஹிஸ்தான் உற்ஸ்பெஹிஸ்தான் இருந்தன. 2003 இல் இந்தியாவின் அனுசரணையின் கீழ் ஈரானும் இணைந்துகொண்டது. இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ள மறுத்துள்ளது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலை இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரானின் இறைமைக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அது சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு இந் நடவடிக்கை பிராந்திய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதில் இந்தியாவின் குரல் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது. 2024 இல் இருமுறை வலிந்த தாக்குதலை இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டது. ஈரானும் எதிர்த் தாக்குதல் செய்தது. ஆனால் இம் முறை நடந்த தாக்குதல் இன்னும் வீரியமான விளைவுகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் (இதுவரையான கணக்கின்படி) 70 க்கு மேற்பட்ட மக்களை மட்டுமல்ல, அணு விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் என்பவர்களும் இவ் எதிர்பாராத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் இறைமையை மோசமாக மீறிய செயலாகும். அத்தோடு பேரழிவை ஏற்படுத்தவல்ல அணுச் சக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. ஒன்று புரியவில்லை. இன்று அணுவாயுதங்களை வைத்திருக்கிற இஸ்ரேல் உட்பட்ட நாடுகள் யாரிடம் அனுமதி வாங்கி அதை சாதித்தன. பெருமை வேறு கொண்டாடின. ஈரானுக்கு மட்டும் அதை மறுக்க அமெரிக்காவோ இஸ்ரேலோ யார்?. உண்மையில் சிறிய நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அணுகுண்டு ஒருவகையில் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற கருத்து ஒன்று உண்டு. அது ஏவியவர் உட்பட மனித குலத்தையே அழிவுக்கு உள்ளாக்கும் வலு கொண்டது. அதனால் அதை எடுத்த எடுப்பிலே பாவிக்க முடியாதபடியான அதி எச்சரிக்கைத் தன்மையையும் அந்த வலு உள்ளடக்கியுள்ளது எனலாம். தாம் அணுகுண்டை தயாரிக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை என்கிறது ஈரான். அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அணுவாயுத செயல்முறை அச்சுறுத்தலை தரலாம் என நியாயப் பூழல் சொல்லி ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை 5 தடவைகள் பேசியுமாயிற்று. முன்னேற்றகரமாக இருக்கிறது என இரு தரப்பும் பேசிக்கொண்டிருக்க இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடுகிறது. இதெல்லாம் பெரியண்ணனுக்கு தெரியாமலா நடக்கும் என்பதை ஊகிக்க கடினமேதுமில்லை. இந்தத் தாக்குதலுக்கான இரகசிய ட்றோன் மறைவிடத்தை மொசாட் ஈரானுக்குள்ளேயே நிறுவி பதுங்கியிருந்ததானது ஈரானின் பாதுகாப்பு கவசத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மொசாட் செய்திருக்கிற இந்த சதியில் இதுவரை ஈரானால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது இன்னொரு பக்கத்தில் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் றோ சம்பந்தப்பட்டதா என்பது தெரியாது. காஸா படுகொலை நடந்து கொண்டிருக்கிறபோது கூட, மோடி அரசு இஸ்ரேலுக்கு தமது ஆயுத விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுக் கொலை, பட்டினிக் கொலை என்பவற்றின் மீதான மனிதாபிமானத்தையும், இனப்படுகொலையையும் கோடிப்புறத்துள் ஒளித்துவைத்து நடத்தும் இராசதந்திரம் ஜனநாயக அரசு எனப்படுகிற ஒரு நாட்டின் அசிங்கத்தையே வெளிப்படுத்தக் கூடியது. இந்த இஸ்ரேல்-ஈரான் திடீர் யுத்தம் குறித்து அவசரமாகக் கூடிய ஐநா பொதுச்சபையில் உடனடியானதும் நிபந்தனை ஏதுமற்றதுமான நிரந்தரமான போர் நிறுத்தம் குறித்த வரைவின் மீது நடந்த வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை. இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்யக் கேட்பதில்கூட என்ன நடுநிலை வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை. இக் கூட்டத்தில் ரசியா சீனா உட்பட பல நாடுகள் கறாராக தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்தன. இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். கழுவுற சட்டியில் நழுவி ஓடும் மீனாக இந்த வார்த்தைகள் நெளிகின்றன. அத்தோடு, இந்த பதட்டநிலையை தவிர்க்க அவசரமாக வேண்டுகோள் விடுப்பதாகவும், விரைந்த இராசதந்திர நகர்வை எடுக்கும் படியும் கோரியிருந்தார். இவையெல்லாம் அவர் ஈரானுடன் தொலைபேசிவழி ஓடவிட்ட வார்த்தைகள். இதைத்தானே ஐநாவும் வரைபாய் முன்வைத்து வாக்கெடுப்புக்கு விட்டது. ஏன்தான் வாக்களிக்காமல் நழுவியது இந்தியா? அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் இந்த வருடம் இந்தியா வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவை பல பரிமாணங்களிலும் ஏற்று, விதந்துரைத்த அவர், “ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். சீனாவுடனான முரண்பாட்டை அமைதியாக இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அமெரிக்காவின் விளையாட்டை நீங்கள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Don’t play American’s game). இதைச் சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் கடற்படைப் போருக்குச் சாதகமாகவும் அந்த சீனக் கடற் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே அவரது தூர நோக்காகும். நான் விரும்பிப் பார்க்கும் பிரபல இந்திய செய்தியாளர் பல்கி சர்மா உடனான நேர்காணல் அது. மேற்குலகு குறித்து மிகக் கூர்மையாக செய்தியிடும் பல்கி சர்மா, அதற்கு மாறாக ஸக்ஸ் வெளிப்படுத்திக் காட்டும் கூற்றினுள் அமெரிக்க நுண்ணரசியலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிய மறுத்து “சீனாவுடனான முரண்பாட்டை நாம் (இந்தியா) எமது பாணியில் சந்திப்போம்” என பதிலளித்திருந்தார். அவர்கூட அண்மையில் தனது F. செய்தித் தளத்தில் “இந்த யுத்தத்தில் இந்தியா தனது நடுநிலையை எவளவு தூரத்துக்கு தக்கவைக்கும் என்பது கேள்வி” என்றார். இந்த உண்மையை மோடி அரசு எப்போ புரிந்துகொள்ளப் போகிறது. அமெரிக்காவின் எதிரியாக இருப்பதைவிட பேரழிவு தரக்கூடியது அமெரிக்காவின் நண்பனாக இருப்பது என கென்றி கிஸிங்கர் சொன்னதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் நடுநிலை என்பது ஓர் இராஜதந்திர அணுகுமுறை அல்ல. கோட்பாட்டு ரீதியில் ‘நடுநிலை’ என்பது ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்ந்து நிற்பதுதான். எங்கள் வீட்டு வாசல்படி வரை ஆபத்து வந்தபின் கத்திக் குளறி பிரயோசனமில்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார். இதை அனுபவப்பட்டு உணரவேண்டும் என்பதில்லை. மோடி அரசு புரியாமலிருக்கலாம். ஆனால், விமர்சனங்களைக் கொண்டிருக்கிற போதும், பூகோள அரசியலில் நழுவல் போக்கு இன்றி நேரு, இந்திராகாந்தி போன்ற கறாரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி நின்ற தலைவர்களைக் கண்ட இந்திய நாடும், -பார்ப்பனிய சிந்தனைக்கு வெளியில்- சிந்திக்கக் கூடிய இந்திய மக்களும் புரியாத விடயமல்ல, https://sudumanal.com/2025/06/16/மதில்-மேல்-பூனை/#more-7180

இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா “மதில் மேல் பூனை”

2 months 4 weeks ago

மதில் மேல் பூனை

sudumanal

modi.jpg?w=368

மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு.

ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..?

எஸ்.சி.ஓ (SCO- Shanghai Cooperation Organisation) இன் ஓர் அங்கத்துவ நாடாகவும் இந்தியா இருக்கிறது. 2001 இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், பெலாரூஸ், கஸஹஸ்தான், கிர்ஹிஸ்தான் உற்ஸ்பெஹிஸ்தான் இருந்தன. 2003 இல் இந்தியாவின் அனுசரணையின் கீழ் ஈரானும் இணைந்துகொண்டது.

இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ள மறுத்துள்ளது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலை இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரானின் இறைமைக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அது சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு இந் நடவடிக்கை பிராந்திய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதில் இந்தியாவின் குரல் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது.

2024 இல் இருமுறை வலிந்த தாக்குதலை இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டது. ஈரானும் எதிர்த் தாக்குதல் செய்தது. ஆனால் இம் முறை நடந்த தாக்குதல் இன்னும் வீரியமான விளைவுகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் (இதுவரையான கணக்கின்படி) 70 க்கு மேற்பட்ட மக்களை மட்டுமல்ல, அணு விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் என்பவர்களும் இவ் எதிர்பாராத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் இறைமையை மோசமாக மீறிய செயலாகும்.

அத்தோடு பேரழிவை ஏற்படுத்தவல்ல அணுச் சக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. ஒன்று புரியவில்லை. இன்று அணுவாயுதங்களை வைத்திருக்கிற இஸ்ரேல் உட்பட்ட நாடுகள் யாரிடம் அனுமதி வாங்கி அதை சாதித்தன. பெருமை வேறு கொண்டாடின. ஈரானுக்கு மட்டும் அதை மறுக்க அமெரிக்காவோ இஸ்ரேலோ யார்?.

உண்மையில் சிறிய நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அணுகுண்டு ஒருவகையில் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற கருத்து ஒன்று உண்டு. அது ஏவியவர் உட்பட மனித குலத்தையே அழிவுக்கு உள்ளாக்கும் வலு கொண்டது. அதனால் அதை எடுத்த எடுப்பிலே பாவிக்க முடியாதபடியான அதி எச்சரிக்கைத் தன்மையையும் அந்த வலு உள்ளடக்கியுள்ளது எனலாம்.

தாம் அணுகுண்டை தயாரிக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை என்கிறது ஈரான். அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அணுவாயுத செயல்முறை அச்சுறுத்தலை தரலாம் என நியாயப் பூழல் சொல்லி ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை 5 தடவைகள் பேசியுமாயிற்று. முன்னேற்றகரமாக இருக்கிறது என இரு தரப்பும் பேசிக்கொண்டிருக்க இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடுகிறது. இதெல்லாம் பெரியண்ணனுக்கு தெரியாமலா நடக்கும் என்பதை ஊகிக்க கடினமேதுமில்லை.

இந்தத் தாக்குதலுக்கான இரகசிய ட்றோன் மறைவிடத்தை மொசாட் ஈரானுக்குள்ளேயே நிறுவி பதுங்கியிருந்ததானது ஈரானின் பாதுகாப்பு கவசத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மொசாட் செய்திருக்கிற இந்த சதியில் இதுவரை ஈரானால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது இன்னொரு பக்கத்தில் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் றோ சம்பந்தப்பட்டதா என்பது தெரியாது.

காஸா படுகொலை நடந்து கொண்டிருக்கிறபோது கூட, மோடி அரசு இஸ்ரேலுக்கு தமது ஆயுத விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுக் கொலை, பட்டினிக் கொலை என்பவற்றின் மீதான மனிதாபிமானத்தையும், இனப்படுகொலையையும் கோடிப்புறத்துள் ஒளித்துவைத்து நடத்தும் இராசதந்திரம் ஜனநாயக அரசு எனப்படுகிற ஒரு நாட்டின் அசிங்கத்தையே வெளிப்படுத்தக் கூடியது.

இந்த இஸ்ரேல்-ஈரான் திடீர் யுத்தம் குறித்து அவசரமாகக் கூடிய ஐநா பொதுச்சபையில் உடனடியானதும் நிபந்தனை ஏதுமற்றதுமான நிரந்தரமான போர் நிறுத்தம் குறித்த வரைவின் மீது நடந்த வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை. இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்யக் கேட்பதில்கூட என்ன நடுநிலை வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை. இக் கூட்டத்தில் ரசியா சீனா உட்பட பல நாடுகள் கறாராக தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்தன.

இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். கழுவுற சட்டியில் நழுவி ஓடும் மீனாக இந்த வார்த்தைகள் நெளிகின்றன. அத்தோடு, இந்த பதட்டநிலையை தவிர்க்க அவசரமாக வேண்டுகோள் விடுப்பதாகவும், விரைந்த இராசதந்திர நகர்வை எடுக்கும் படியும் கோரியிருந்தார். இவையெல்லாம் அவர் ஈரானுடன் தொலைபேசிவழி ஓடவிட்ட வார்த்தைகள். இதைத்தானே ஐநாவும் வரைபாய் முன்வைத்து வாக்கெடுப்புக்கு விட்டது. ஏன்தான் வாக்களிக்காமல் நழுவியது இந்தியா?

அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் இந்த வருடம் இந்தியா வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவை பல பரிமாணங்களிலும் ஏற்று, விதந்துரைத்த அவர், “ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். சீனாவுடனான முரண்பாட்டை அமைதியாக இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அமெரிக்காவின் விளையாட்டை நீங்கள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Don’t play American’s game). இதைச் சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றார்.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் கடற்படைப் போருக்குச் சாதகமாகவும் அந்த சீனக் கடற் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே அவரது தூர நோக்காகும். நான் விரும்பிப் பார்க்கும் பிரபல இந்திய செய்தியாளர் பல்கி சர்மா உடனான நேர்காணல் அது. மேற்குலகு குறித்து மிகக் கூர்மையாக செய்தியிடும் பல்கி சர்மா, அதற்கு மாறாக ஸக்ஸ் வெளிப்படுத்திக் காட்டும் கூற்றினுள் அமெரிக்க நுண்ணரசியலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிய மறுத்து “சீனாவுடனான முரண்பாட்டை நாம் (இந்தியா) எமது பாணியில் சந்திப்போம்” என பதிலளித்திருந்தார்.

அவர்கூட அண்மையில் தனது F. செய்தித் தளத்தில் “இந்த யுத்தத்தில் இந்தியா தனது நடுநிலையை எவளவு தூரத்துக்கு தக்கவைக்கும் என்பது கேள்வி” என்றார். இந்த உண்மையை மோடி அரசு எப்போ புரிந்துகொள்ளப் போகிறது.

அமெரிக்காவின் எதிரியாக இருப்பதைவிட பேரழிவு தரக்கூடியது அமெரிக்காவின் நண்பனாக இருப்பது என கென்றி கிஸிங்கர் சொன்னதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் நடுநிலை என்பது ஓர் இராஜதந்திர அணுகுமுறை அல்ல. கோட்பாட்டு ரீதியில் ‘நடுநிலை’ என்பது ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்ந்து நிற்பதுதான்.

எங்கள் வீட்டு வாசல்படி வரை ஆபத்து வந்தபின் கத்திக் குளறி பிரயோசனமில்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார். இதை அனுபவப்பட்டு உணரவேண்டும் என்பதில்லை. மோடி அரசு புரியாமலிருக்கலாம். ஆனால், விமர்சனங்களைக் கொண்டிருக்கிற போதும், பூகோள அரசியலில் நழுவல் போக்கு இன்றி நேரு, இந்திராகாந்தி போன்ற கறாரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி நின்ற தலைவர்களைக் கண்ட இந்திய நாடும், -பார்ப்பனிய சிந்தனைக்கு வெளியில்- சிந்திக்கக் கூடிய இந்திய மக்களும் புரியாத விடயமல்ல,

https://sudumanal.com/2025/06/16/மதில்-மேல்-பூனை/#more-7180

சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக குறைத்த ஏர் இந்தியா!

2 months 4 weeks ago
சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக குறைத்த ஏர் இந்தியா! ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை அகலமான உடல் வடிவங்கள் கொண்ட விமானங்களின் செயல்பாடுகளை 15% குறைப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பல கூட்டு சவால்களுக்கு மத்தியில் அதிக செயல்பாட்டு ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளின் வான்வெளிகளில் இரவு ஊரடங்கு உத்தரவு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பொறியியல் ஊழியர்கள் மற்றும் ஏர் இந்தியா விமானிகளால் எடுக்கப்பட்ட தேவையான எச்சரிக்கையான அணுகுமுறை காரணமாக, கடந்த 6 நாட்களில் எங்கள் சர்வதேச நடவடிக்கைகளில் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மொத்தம் 83 இரத்து செய்யப்பட்டன என்று ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது. அதேநேரம்,அகமதாபாத் விபத்து குறித்து விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், சம்பவத்திற்கான சரியான காரணங்களைக் கண்டறிய அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஏர் இந்தியாவின் போயிங் 787-8 மற்றும் 787-9 விமானங்களின் பாதுகாப்பு ஆய்வுகளை மேம்படுத்துமாறு இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து பணியகம் உத்தரவிட்டுள்ளது. மொத்தம் உள்ள 33 விமானங்களில் 26 விமானங்கள் ஏற்கனவே முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அது மேலும் கூறியது. மீதமுள்ள விமானங்கள் வரும் நாட்களில் ஆய்வுகளை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான விமானக் குழுக்களின் அனுமதி, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பராமரிப்பு தரநிலைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான வலுவான ஒப்புதலாக அமைகிறது என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. https://athavannews.com/2025/1436235

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
ஈரானின் பக்கத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகள் ஈரானின் இஸ்ரேல் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தமது நாட்டுக்கு மேலாக செல்வதாக கூறி தாக்கியழிக்கிறார்களாம் ஆனால் அவர்களின் நாட்டிற்கு மேலாக செல்லும் இஸ்ரேல் தாக்குதல் விமானங்களை எதுவும் செய்வதில்லை, சிரியாவின் ஒரு பரந்த வெளியின் மேலாக சில மீற்றர் உயரத்தில் மிக தாழ்வாக இஸ்ரேல் போர் விமானம் பறந்து செல்கிற காணொளி ஒன்று இணையத்தில் பார்த்தேன். பக்கத்தில் உள்ள இஸ்லமிய நாடுகளே ஈரானுக்கு உதவவில்லை, ரஸ்சியாவினால் தற்போதய சூழ்நிலையில் ஆயுத உதவி செய்ய முடியுமா என தெரியவில்லை, சீனா ராடார் சாதனங்களை வழங்கியதாக செய்தி வந்திருந்தது, இந்த இரு நாடுகளும் ஈரானுடன் ஏதோ ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளன என கருதுகிறேன். தகவல் தொடர்பு உதவிகளை ஈரானால் பெறமுடிகிறது என கருதுகிறேன், இரண்டு காணொளிகளில் விமான எதிர்ப்பு ஏவுகனை பகுதியினை அண்டிய பகுதியில் ஏவுகணைத்தாக்குதல் நடந்ததை அக்காணொளியில் காண முடிகிறது. இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளையே சீனாவும் இரஸ்சியாவும் செய்யக்கூடும் என கருதுகிறேன். அத்துடன் இந்த போர் நீண்டகால அடிப்படையில் நிகழாது என கருதுகிறேன், இஸ்ரேல் தனது தாக்குதல் விமானங்களில் ஏறத்தாழ 50 விமானங்களை பயன்படுத்துகிறது, அதனடிப்படையில் மொத்தமாக உள்ள 280 விமானத்தில் 168 விமானங்களை பயன்படுத்துகிறது (40% ரிசர்வ் மற்றும் திருத்த மாற்றீடாக 112 விமானங்கள்) அதில் 50 விமானங்கள் எனும்போது 30% சுழற்சியினை பயன்படுத்துகிறது, இது இஸ்ரேல் ஈரான் தொடர்பான திட்டமிடல் மதிப்பீட்டினை காட்டுகிறது, அதாவது ஈரானின் பதில் தாக்குதல் அல்லது ஈரானை பலவீனம் பற்றிய முழுமையான புரிதல். இஸ்ரேல் தனது விமானப்படையில் 20 விமானங்களை இழந்தால் இஸ்ரேலின் தாக்குதல் அணியில் தாக்குதலை தொடரமுடியாமல் அழுத்தம் ஏற்படும், ஆனால் அவர்கள் ஈரானின் படை பலம் அல்லது அதற்கான மாற்றீட்டினை சரியாக கொண்டுள்ளதால் ஈரானால் எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் தாக்குதலை 2 - 3 கிழமைக்கு மேல் தொடர முடியாது என கருதுகிறேன், இந்த போர் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போராகவே இருக்கும் என கருதுகிறேன் அல்லது அமெரிக்கா களமிறங்கினால் நிலமை மாறலாம்.

அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர்

2 months 4 weeks ago
அகமதாபாத் விமான விபத்து: மன்னிப்புக் கோரினார் டாடா குழுமத் தலைவர். அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். விமானம் விழுந்ததில் விடுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள சிலரும் உயிரிழந்தனர். ,இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 270ஐ தாண்டியது. இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகரன் ‘மன்னிப்பு’ கோரியுள்ளார். இது குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வௌியிட்ட சந்திரசேகரன்,’விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ந்துவிட்டேன். அதை புரிந்துகொள்ளவே எனக்கு சில நிமிடங்கள் ஆகின. விபத்து குறித்து கேள்விப்பட்டதும், விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டேன். ‘கடவுளே என்ன இது?’ எப்படியாவது அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது. அதன்பிறகு என்னை நானே தேற்றிக்கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு விட்டேன். விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல கூட வார்த்தைகள் இல்லாத மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கிறேன். டாடா நடத்தும் விமான நிறுவனத்தில் இந்த விபத்து நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நேரத்திலும் அதற்குப் பிறகும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1436224

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்! இஸ்ரேல்-ஈரான் மோதல் வியாழக்கிழமை (19) ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அமெரிக்கா இணையுமா என்பது குறித்து உலகை ஊகிக்க வைத்துள்ளார் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஆனால் தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை கைவிடுமா என்பதைப் பார்க்க இறுதி உத்தரவை வழங்குவதில் தாமதம் செய்துள்ளதாகவும் அவர் தனது நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலின் தாக்குதலில் இணையலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஏதேனும் முடிவு எடுத்துள்ளாரா என்பதை உறுதியாகக் கூற மறுத்துவிட்டார். அதேநேரம், ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கூறினார். அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான இலக்கு ஈரானின் ஃபோர்டோ அணு செறிவூட்டல் நிலையமாகும். இது நிலத்தடியில் ஆழமாக கட்டப்பட்டுள்ளது மற்றும் அழிக்க மிகவும் கடினம். மிகவும் சக்திவாய்ந்த குண்டுகள் மட்டுமே அதை அடைய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இவ்வாறு இருக்க முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது நாடு சரணடையாது என்று கூறினார். எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் அமெரிக்காவை எச்சரித்தார். சர்வதேச தலைவர்கள் தெஹ்ரான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை பொதுமக்கள் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் என்று உறுதியாக உத்தரவாதம் அளிக்கும்படி தெஹ்ரானை வற்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை (19) ஜெனீவாவில் தங்கள் ஈரானிய பிரதிநிதியுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மன் தூதரக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், ராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்தாலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் தெஹ்ரானில் வசிக்கும் சிலர் புதன்கிழமை நகரத்திற்கு வெளியே நெடுஞ்சாலைகளை மறித்து, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முயன்றனர். மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க இராணுவப் படைகள் அண்மைய நாட்களில் அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு அதிக இராணுவப் படைகளை நகர்த்தி வருகிறது. மூன்றாவது கடற்படை அழிப்புக் கப்பல் கிழக்கு மத்தியதரைக் கடலில் நுழைந்துள்ளது. மேலும் மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் குழு அரபிக் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது ஒரு தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்காவுடன் இணையும் திறனையும் இது வழங்குகிறது என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. தெஹ்ரான் தனியாக இல்லை மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த மோதலில் தெஹ்ரான் “தனியாக இல்லை” என்பதை வலியுறுத்தினார். இந்தப் போரில் ஈரான் தனியாக இல்லை. வட கொரிய இராணுவம் மிக உயர்ந்த போர் தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடினமான காலங்களில் நாங்கள் எங்கள் நண்பர்களை கைவிட மாட்டோம். நாங்கள் ஈரானை முழுமையாக ஆதரிக்கிறோம். அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் அழுத்தக் கொள்கை எங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம் என கிம் ஜாங்-உன் தனது அதிகாரப்பூர்வ உரையில் அறிவித்தார். எவ்வாறெனினும் மத்திய கிழக்கின் நிலைமை மோசமடைந்து வருகிறது. அண்மைய தாக்குதல்களால் ஈரானில் 450 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், ஈரானிய தாக்குதல்களால் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1436216

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 4 weeks ago
நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது - ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து ட்ரம்ப் PrashahiniJune 19, 2025 இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என்ற கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது. அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இந்த தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்தது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. ஈரானுக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சி படை உள்ளது. இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தொடர்ந்து தனது கருத்தை தெரிவித்து வந்தார். இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் களமிறங்குமா என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். ஆனால், நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது. நான் அந்த கேள்விக்கு பதில் அளிப்பேன் என நீங்கள் எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை. ஈரானுக்கு நிறைய பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தார்கள். நீங்கள் ஏன் இரண்டு வாரத்துக்கு முன்பு இதை செய்யவில்லை என கேட்டேன். நீங்கள் அதை செய்திருக்கலாம். உங்கள் தேசம் இருந்திருக்கும் என சொன்னேன்” என சிரித்தபடி ட்ரம்ப் தெரிவித்தார். அவரது இந்த கருத்து மூலம் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு எதிராக களம் இறங்குமா? இறங்காதா? என்ற யூகத்தை உலக நாடுகளின் இடையே எழுப்பியுள்ளார் ட்ரம்ப். https://www.thinakaran.lk/2025/06/19/breaking-news/136324/நான்-என்ன-செய்வேன்-என்று/#google_vignette

செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு

2 months 4 weeks ago
செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு Published By: RAJEEBAN 19 JUN, 2025 | 10:39 AM செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த புதைகுழி குறித்த விசாரணைக்கு சர்வதேச சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் ஆதரவளிக்கவேண்டும் மனித என தெரிவித்துள்ளார் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம் என அந்த அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துணை செயலாளரின் பதில் மே 15 ம் திகதி கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் அந்த பதிலில் அவர் இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி மற்றும் உண்மை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் வலியுறுத்தும் என அவர் தெரிவித்திருந்தார். இலங்கையின் யுத்தத்தின் முடிவில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி நிலைப்பாட்டப்படவேண்டும் என்பதற்கான உங்களின் தனிப்பட்டஆதரவிற்கும் நான் நன்றியுடையவளாக உள்ளேன். இலங்கையின் வடபகுதியில் மூன்று குழந்தைகளின் உடல்களுடன் சமீபத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்,இந்த அட்டுழியங்கள் எவ்வளவு புதியவை என்பதை அதிர்ச்சியூட்டும் நினைவுபடுத்தல்களாக காணப்படுகின்றன. 2024 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் உடல்களை தோண்டுவதற்கான போதிய வளங்கள் இலங்கையிடம் இல்லை என தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டிருந்தது. இந்த அடிப்படையிலும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றிற்கான பிரிட்டனின் ஆதரவின் அடிப்படையிலும் இலங்கைக்கு இந்த விடயத்தில் பிரிட்டனின் ஆதரவு குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட திட்டங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். இலங்கை அரசாங்கத்துடனான இரு தரப்பு ஈடாட்டங்களின் போது உங்கள் திணைக்களம் - அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் - இந்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக தக்கவைத்துக்கொண்டால் அதற்கும் நன்றியுடையவளாகயிருப்பேன். மார்ச் மாதம் நீங்கள் தடைகளை அறிவித்தவேளை சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்,பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தொழில்கட்சியின் நீண்டகால பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றினீர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தது போன்று ,யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற எனது வேண்டுகோளை நீங்கள் கருத்தில் எடுப்பீர்கள் என கருதுகின்றேன். உயிர்பிழைத்தவர்கள்,பதிலை தேடும் குடும்பங்கள் ,இந்த குற்றங்களின் நிழலில் வளர்ந்த அடுத்த தலைமுறை நாங்கள் கடன்பட்டுள்ளோம். https://www.virakesari.lk/article/217877

செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு

2 months 4 weeks ago

செம்மணி மனிதபுதைகுழி - உமா குமரன் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்- மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி அவசியம் என தெரிவிப்பு

Published By: RAJEEBAN

19 JUN, 2025 | 10:39 AM

image

செம்மணி மனித புதைகுழியில் சமீபத்தில் குழந்தைகளின் உடல்கள் உட்பட பல உடல்கள் மீட்கப்பட்டமை குறித்து பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் இந்த புதைகுழி  குறித்த விசாரணைக்கு சர்வதேச சகாக்களுடன் இணைந்து பிரிட்டன் ஆதரவளிக்கவேண்டும் மனித என தெரிவித்துள்ளார்

மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளிற்கு சர்வதேச உதவி இலங்கைக்கு அவசியம் என அந்த அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துணை செயலாளரின் பதில் மே 15 ம் திகதி கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் அந்த பதிலில் அவர் இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி  மற்றும் உண்மை நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் வலியுறுத்தும் என அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் யுத்தத்தின் முடிவில் இழைக்கப்பட்ட அட்டுழியங்களிற்கு நீதி நிலைப்பாட்டப்படவேண்டும் என்பதற்கான உங்களின் தனிப்பட்டஆதரவிற்கும்  நான் நன்றியுடையவளாக உள்ளேன்.

இலங்கையின் வடபகுதியில் மூன்று குழந்தைகளின் உடல்களுடன் சமீபத்தில் மற்றுமொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்,இந்த அட்டுழியங்கள் எவ்வளவு புதியவை என்பதை  அதிர்ச்சியூட்டும் நினைவுபடுத்தல்களாக காணப்படுகின்றன.

2024 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் உடல்களை தோண்டுவதற்கான போதிய வளங்கள் இலங்கையிடம் இல்லை என தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த அடிப்படையிலும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் நீதி ஆகியவற்றிற்கான பிரிட்டனின் ஆதரவின் அடிப்படையிலும்  இலங்கைக்கு இந்த விடயத்தில் பிரிட்டனின் ஆதரவு குறித்த தற்போதைய அல்லது திட்டமிடப்பட்ட திட்டங்களை நீங்கள் வெளிப்படுத்தவேண்டும்.

இலங்கை அரசாங்கத்துடனான இரு தரப்பு ஈடாட்டங்களின் போது உங்கள் திணைக்களம் - அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் - இந்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக தக்கவைத்துக்கொண்டால் அதற்கும் நன்றியுடையவளாகயிருப்பேன்.

மார்ச் மாதம் நீங்கள் தடைகளை அறிவித்தவேளை சர்வதேச அளவில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்,பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தொழில்கட்சியின் நீண்டகால பாரம்பரியத்தை நீங்கள் பின்பற்றினீர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தது போன்று ,யுத்த குற்றவாளிகளை  சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்தவேண்டும் என்ற எனது வேண்டுகோளை நீங்கள் கருத்தில் எடுப்பீர்கள் என கருதுகின்றேன். உயிர்பிழைத்தவர்கள்,பதிலை தேடும் குடும்பங்கள் ,இந்த குற்றங்களின் நிழலில் வளர்ந்த அடுத்த தலைமுறை நாங்கள் கடன்பட்டுள்ளோம்.

https://www.virakesari.lk/article/217877