Aggregator
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, ஏ-9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று காலை, குறித்த பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் இருந்த வேளை, விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, தனது உடமையில் 92 கிராம் 400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த குறித்த நபருக்கு, பொய் வழக்கு பதிவு செய்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயற்படுதல், இலஞ்சம் பெறுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த விடயங்களை ஆதாரப்படுத்தும் வகையில் அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, குறித்த பொலிஸ் அதிகாரி மீது உயரதிகாரிகள் உடனடியாக உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்
மன்னார் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்
Published By: Vishnu
07 Oct, 2025 | 04:49 AM
![]()
ஆர்.ராம்
'காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது'
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின் வலுசக்தித்தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம், அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் அபாயங்கள் குறித்த நிபுணர்களின் எச்சரிக்கைகளையும் வலுவாகவே பெற்றிருக்கின்றன.
முன்னதாக, இந்தியாவின் அதானி நிறுவனம் இப்பகுதியில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலைத் திட்டத்திலிருந்து விலகிய போதும், உள்ளுர் மக்களின் கவலைகளைப் புறக்கணித்துவிட்டு, தனியார் முதலீட்டாளர்களின் துணையுடன் இலங்கை மின்சார சபை அத்திட்டத்தை இடைநிறுத்தாமல் நகர்த்துவது, மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் மக்களின் எதிர்ப்பானது, வெறும் மின் உற்பத்திக்கு எதிரானது அல்ல. அந்தப்போராட்டம் அந்த மக்கள் தங்கள் பூர்வீக நிலம், வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கானவொரு பரந்துபட்ட போராட்டமாகும்.
மன்னார் பிராந்தியம் புவியியல் ரீதியாகவும், கனிம வளங்கள் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு இல்மனைட் உட்படப் பல்வேறு வகையான கனிம வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தக் கனிமங்கள் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவை என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா போன்ற நிபுணர்கள், மன்னாரில் இல்மனைட்டை மிகக் குறைந்த செலவில் அகழ்ந்தெடுக்க முடியும் என்ற நிலை, இங்கு கனிம மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிடுகிறார்.
மன்னார் நிலப்பரப்பு கடல் மட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் இருப்பதால், காற்றாலை கோபுரங்களை அமைப்பதற்காகவோ அல்லது கனிமங்களை அகழ்வதற்காகவோ நிலத்தை ஆழமாகத் தோண்டுவது, நில மட்டத்தை மேலும் தாழ்த்தி, இப்பிராந்தியம் சில வருடங்களிலேயே கடல் நீருக்குள் மூழ்கும் பாரிய அபாயம் உள்ளதாகப் புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
உதாரணமாக, ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பைகள் மண் அகழ்ந்து அகற்றப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுவது, இந்த அபாயத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. குhற்றாலைக் கோபுரங்களை நாட்டுவதற்காக 25அடி வரை தோண்டி, கொங்கிரீட் மற்றும் மண்ணைக் கொட்டி மூடுவது, கரையோரங்களில் கொங்கிரீட் போடுவதனால் மழை நீர் வெளியேறுவது தடுக்கப்படுவது போன்ற கட்டுமானச் செயற்பாடுகள், மன்னாரின் பூகோள சமநிலையைச் சீர்குலைத்து, எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
சுற்றுச்சூழல் ரீதியாக பார்க்கின்றபோது, மன்னார் வகிபாகம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. மிகப் பெறுமதியானது. யுனெஸ்கோவே அங்கீகாரத்தினையும் அளித்துள்ளது. இங்குள்ள சூழலியல் வளங்கள், இலங்கைக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு வலசைப் பறவைகளின் முக்கிய நுழைவாயிலாகவும், இனப்பெருக்க மையமாகவும் உள்ளன.
வலசைப் பறவைகள் இலங்கையில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளுடன் தமது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் இந்த அரிய பறவைகளுக்கு, உயரமான காற்றாலை கோபுரங்களும் அவற்றின் சுழலும் இறக்கைகளும் நேரடியான அச்சுறுத்தலாக அமைகின்றன என்று சூழலியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன், காற்றாலைத் திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான பனை மரங்கள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, உள்ளுர் இயற்கைக்குப் பேரிழப்பாக உள்ளது. இச்சூழலியல் பாதிப்புகளை முழுமையாக ஆராயும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் தரப்பிலிருந்து வலுப்பெற்றுள்ளது.
காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் சமூகப் பொருளாதார விளைவுகள் மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளன. இப்பகுதி மக்கள் பிரதானமாக மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றனர். காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர், முன்னர் இருந்ததைக் காட்டிலும் மீன்களின் வரத்து மிகக் குறைவாகி, தங்கள் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதாகக் கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், தாழ்வுபாடு போன்ற கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகில் காற்றாலைகள் அமைக்கப்பட்டிருப்பது, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மேலும், நிலத்தில் நீர் தேங்கி நிற்கும் காலம் நீடித்துள்ளதால், மழைக்காலத்திற்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதனால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மக்களின் எதிர்ப்பானது, திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்த தீவிரமான விமர்சனமாகவும் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை போன்ற அமைப்புகள், இத்தகைய பாரிய திட்டங்களால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அது பகிரங்கப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்படும் வரை அத்திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம், மக்களின் உணர்வுகளையும் பாதிப்புகளையும் புறக்கணித்து, அரசாங்கம் ஒருதலைப்பட்சமாகத் தீர்மானங்களை எடுப்பது 'ஜனநாயக முறைமைக்கு உகந்ததல்ல' என்றும், இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
இறுதி முடிவு எடுப்பதற்கு முன் தம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். மக்களின் பங்கேற்பின்றித் திட்டங்களை முன்னெடுப்பது என்பது, கடந்தகால நிர்வாகங்களின் விலக்களிக்கப்பட்ட ஆட்சி வடிவத்தின் நீட்சியே என்றும், இது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை, வெறும் காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதல்ல. மாறாக, தங்கள் வாழ்வாதார உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு மதிப்பளித்து, ஒரு சமநிலையான தீர்மானத்தை எட்டுவதே ஆகும். கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மக்களின் கோபமும் வலியும் நியாயமானது என்பதைப் புரிந்து கொள்ள அரசு தவறுவதாகவே இந்தப் போராட்டங்கள் உணர்த்துகின்றன.
எனவே, மன்னார் மக்களின் கோரிக்கை காற்றாலைத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்துவதல்ல் மாறாக தங்கள் வாழ்வையும், நிலத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் சமூக சமநீதி மற்றும் மக்கள் பங்கேற்புடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்.
ஆனால் இந்தநிலைப்பாட்டுக்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றதா என்று கேட்டால் இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக காற்றாலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தான்.
இந்த செயற்றிட்டத்தினை இடைநிறுத்துவதென்ற எண்ணமே இல்லை. ஆனால் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய திட்டங்களை மீளப்பரிசீலிக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாக இருந்தாலும், அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு முன்னதாக தாங்கள் பதவிக்கு வந்தவுடன் மன்னார் காற்றாலைத்திட்டத்தினை நிறுத்துவோம் என்ற வாக்குறுதியை முழுமையாக மறந்துவிட்டது. அப்படியென்றால் ஒரேவழி வெகுஜனப் போராட்டம் தீவிரமயப்படுத்துவது தான்.
மனதுக்கு பிடித்த BGM Background Music
எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?
அபிஷேக் ஷர்மாவுக்கு பரிசாக வந்த 30 லட்ச ரூபாய் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபிஷேக் ஷர்மா ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார்
கட்டுரை தகவல்
பரத் ஷர்மா
பிபிசி செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
போட்டிகள்: 7
ரன்கள்: 314
சராசரி: 44.85
ஸ்ட்ரைக் ரேட்: 200
அதிகபட்ச ஸ்கோர்: 75
பவுண்டரிகள்: 32
சிக்ஸர்கள்: 19
இது ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மாவின் சாதனையாகும்.
இறுதிப் போட்டியைத் தவிர, மற்ற அனைத்து போட்டிகளிலும் அவர் இந்திய அணிக்குச் சிறந்த தொடக்கத்தை அளித்தார். இதன் காரணமாக, அவருக்கு 'தொடரின் சிறந்த வீரர்' விருது கிடைத்தது.
ஆனால், இன்று நாம் அவரைப் பற்றிப் பேசாமல், அவரது காரைப் பற்றிப் பேசுவோம்.
பரிசாக அவருக்கு ஒரு விலையுயர்ந்த கார் கிடைத்தது. துபையில் அந்தக் காருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால், அவரால் அந்தக் காரை இந்தியாவில் ஓட்ட முடியாது.
ஆனால் ஏன் ஓட்டமுடியாது?
ஏன் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முன், அது என்ன எஸ்.யு.வி (SUV) கார் என்று தெரிந்து கொள்வோம்.
ஆசிய கோப்பையின் தொடர் நாயகனுக்குக் கிடைத்த கார், ஹவால் ஹெச்9 (Haval H9) ஆகும். இதைச் சீனாவின் கிரேட் வால் மோட்டார் கம்பெனி தயாரித்துள்ளது.
சீனச் சந்தையில் இதன் விலை சுமார் 29,000 முதல் 33,000 டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய்.
ஆனால், அபிஷேக் ஷர்மாவால் இதை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், இந்தக் கார் இடது கை டிரைவ் (Left Hand Drive) ஆக இருப்பதுதான்.
அதாவது, இந்தக் காரில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இது இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கான விதிமுறைகளுக்கு இணங்கவில்லை.
சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களிலும் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இது வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடு (Right Hand Steering Control - RHD) என்று அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ஆசிய கோப்பை 2025-இல் அபிஷேக் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார்
அபிஷேக் நாடு திரும்பியுள்ளார், ஆனால் பரிசு கார் இன்னும் வரவில்லை என்ற செய்தி வந்தபோது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர் என்கிறது நியூஸ் 24 செய்தி.
இப்போது கேள்வி என்னவென்றால், ஏன் சில நாடுகளில் வாகனங்கள் வலது பக்கம் செல்கின்றன, சில நாடுகளில் இடது பக்கம் செல்கின்றன? மேலும், வாகனங்களில் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்குமா அல்லது இடது பக்கத்தில் இருக்குமா என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சாலையில் வாகனம் ஓட்ட நீங்கள் பல விதிகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் (சித்தரிப்புப் படம்)
முதலில், இந்தச் சொற்கள் என்னவென்று புரிந்து கொள்வோம்.
இடது கை போக்குவரத்து (Left Hand Traffic - LHT) மற்றும் வலது கை போக்குவரத்து (Right Hand Traffic - RHT) ஆகியவை இரு திசை போக்குவரத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள்.
அதாவது, இரண்டு திசைகளிலும் போக்குவரத்து ஓடும் சாலையில், இந்த இரண்டு விதிகளில் ஒன்று நிச்சயம் இருக்கும்.
இதில், வாகனங்கள் சாலையின் இடது அல்லது வலது பக்கத்தில் ஓடுகின்றன. இது போக்குவரத்து ஓட்டத்திற்கு மிகவும் அவசியம். இது 'சாலையின் விதி' (Rule of the Road) என்றும் அழைக்கப்படுகிறது.
வலது மற்றும் இடது கை டிரைவ் என்பது வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டீயரிங் சக்கரம் இருக்கும் நிலையை (Position) குறிக்கிறது.
உதாரணமாக, இந்தியாவைப் போல் இடது கை போக்குவரத்து (LHT) உள்ள நாடுகளில், வாகனங்கள் வலது பக்கத்தில் முந்திச் செல்கின்றன.
மறுபுறம், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஓடும் கார்கள் வலது கை டிரைவ் (RHD) ஆகும். அதாவது, அங்குள்ள கார்களில் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். இது இந்தியாவிற்கு நேர் எதிரானது.
உலகில் ஒரே நேரத்தில் இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் கார்களை அனுமதிக்கக்கூடிய நாடு எதுவும் நிச்சயமாக இல்லை.
ஒரு நாட்டில் அனைத்துக் கார்களும் வலது கை டிரைவில் ஓடும்போது, ஒரு இடது கை டிரைவ் கார் குழப்பத்தை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இந்த விதி எங்கிருந்து வந்தது, எப்போது வந்தது?
முதலில், இடது கை டிரைவ் மற்றும் வலது கை டிரைவ் எப்போது தொடங்கியது என்று தெரிந்து கொள்வோம்.
இதற்காக நாம் ரிவர்ஸ் கியரை போட்டு வரலாற்றிற்குச் செல்ல வேண்டும்.
வெவ்வேறு நாடுகளில் ஓட்டுநர் விதிகள் தீர்மானிக்கப்பட்ட தேதிகள் வேறுபட்டாலும், இந்த வரலாற்றில் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளன.
ஆஸ்க்கார்குருவின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் அமித் காரே, "பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது, அவர்களுடன் அவர்களது கார்கள் மட்டுமல்ல, கார் ஓட்டும் விதிகளும் பல்வேறு நாடுகளை அடைந்தன" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
"இதன் காரணமாக, பிரிட்டன் ஆட்சி செய்த பெரும்பாலான நாடுகளில் இன்றும் இடது கை போக்குவரத்து (LHT) உள்ளது. அதாவது, அங்கு வலது கை டிரைவ் (RHD) உள்ளது. இதன் பொருள், காரின் ஸ்டீயரிங் வலது பக்கத்தில் இருக்கும். இடதுபுறத்தில் இல்லை. ஹாங்காங், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தாய்லாந்து, இந்தோனீசியா அல்லது பிரிட்டனில்கூட இதுதான் நிலை," என காரே தெரிவித்தார்.
"பிரிட்டிஷார் இருந்திராத உலகின் பல நாடுகளில் வலது கை போக்குவரத்து (RHT) உள்ளது. அதாவது, காரின் ஸ்டீயரிங் இடது பக்கத்தில் இருக்கும். அதாவது, இந்தியாவில் ஓடும் கார்களுடன் ஒப்பிடும்போது, சரியாக நேர் எதிர்ப்புறத்தில்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஸ்டீயரிங் கட்டுப்பாடு குறித்து விதிகள் என்ன சொல்கின்றன?
மோட்டார் வாகனச் சட்டம் 1988-இன் அத்தியாயம் ஏழு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மோட்டார் வாகனமும் வலது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது.
இதன் பிரிவு 120-இல், 'குறிப்பிட்ட தன்மை கொண்ட' இயந்திர அல்லது மின் சமிக்ஞை சாதனம் (Mechanical or Electrical Signalling Device) வேலை செய்யும் நிலையில் இருந்தால் தவிர, இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனத்தை பொது இடங்களில் இயக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனங்கள் ஓடவில்லையா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல நாடுகளில் வாகனங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் ஓடுகின்றன.
இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனம் தற்போது இந்தியச் சாலையில் ஓடவில்லை என்று கூறுவது தவறாக இருக்கலாம். ஏனெனில், இந்திய அரசு சில விதிவிலக்குகளுக்கு அனுமதி அளிக்கிறது.
ஒரு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனம் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக (R&D) இடது கை டிரைவ் யூனிட்டை இந்தியாவிற்குக் கொண்டு வர விரும்பினால், அதுகுறித்து அரசிடம் அனுமதி கேட்கலாம், அதற்கு அனுமதியும் வழங்கப்படுகிறது என்றுஇந்துஸ்தான் டைம்ஸ் ஆட்டோவின் செய்தி தெரிவிக்கிறது.
மேலும், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்கள் ஓடுகின்றன. அமெரிக்க அதிபர் அல்லது வேறு எந்த உயர்நிலை தலைவரும் இந்தியாவிற்கு வரும்போது, அவர்களுடன் அவர்களது கார் பாதுகாப்பு வாகனங்களும் வருகின்றன. இந்தக் கார்கள் இடது கை டிரைவ் ஆகும்.
அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கார்கள் சாலைகளில் செல்லும் போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இது தவிர, சில பழங்காலக் (Vintage) கார்களும் உள்ளன, அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
அவற்றில் சில இடது கை டிரைவ் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. கடந்த காலத்தில், இத்தகைய பல கார்கள் இந்தியாவில் உள்ள பழைய அரச குடும்பத்தினரிடம் இருந்தன.
"இந்தியாவில் நீங்கள் இடது கை ஸ்டீயரிங் கட்டுப்பாட்டு வாகனத்தை ஓட்ட முடியாது என்று அர்த்தமல்ல. நீங்கள் ஓட்டலாம், ஆனால் அதற்காக நீங்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வரையறுக்கப்பட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது, நிரந்தரமாக அல்ல," என்று காரே பிபிசி-யிடம் தெரிவித்தார்.
"இடது கை டிரைவ் கொண்ட சில பழைய கார்கள் இன்றும் இந்தியாவில் உள்ளன, ஆனால் அவை சிறப்புச் சந்தர்ப்பங்களில் மட்டுமே வெளியே எடுக்கப்படுகின்றன அல்லது ஓட்டப்படுகின்றன," என்று அவர் கூறினார்.
காரேயின் கூற்றுப்படி, சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) அல்லது மோரிஸ் (Morris) போன்ற கார்கள் அனைத்தும் வலது கை டிரைவ் ஆகும், இன்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்கள் அப்படித்தான் இருக்கின்றன.
மறுபுறம், அமெரிக்கா அல்லது ஜெர்மனியிலிருந்து வந்த கார்களின் ஸ்டீயரிங் கட்டுப்பாடு இடதுபுறத்தில் இருந்தது.
நிறுவனங்கள் ஒரே மாதிரியான கார்களைத் தயாரிக்கின்றனவா, இரண்டு வகைகளையும் தயாரிக்கின்றனவா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பல பயணிகள் இடது பக்கத்தில் ஸ்டீயரிங் கட்டுப்பாடுள்ள கார்களில் வருகிறார்கள்
சர்வதேசச் சந்தையில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு சேர்க்க, உலகின் அனைத்துப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இடது கை டிரைவ் (LHD) மற்றும் வலது கை டிரைவ் (RHD) ஆகிய இரண்டு வகைக் கட்டமைப்புகளுடன் கார்களைத் தயாரிக்கின்றன.
போக்ஸ்வேகன் குழுமம், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களும், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற வட அமெரிக்க நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இப்போது ஹோண்டா, ஹூண்டாய், மாஸ்டா, டொயோட்டா, நிஸ்ஸான் போன்ற ஆசிய கார் நிறுவனங்களும் இரண்டு வகைகளில் கார்களைத் தயாரிக்கின்றன. இந்திய நிறுவனங்களும் இதைச் செய்கின்றன.
"கார் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைக்காக ஒரு காரை வடிவமைக்கும்போது, இரண்டு வகையான சந்தைகளிலும் கவனம் செலுத்துகின்றன. இதனால், அவர்கள் தங்கள் கார்களை வலது கை டிரைவ் மற்றும் இடது கை டிரைவ் என இரண்டு வகையான சந்தைகளுக்கும் வழங்க முடியும்" என்று அவர் கூறினார்.
அடுத்த முறை கார் ஓட்ட அமரும்போது, ஸ்டீயரிங் இருக்கும் இடத்தில் இல்லாமல், அருகில் உள்ள இருக்கைக்கு முன்னால் இருந்தால் எப்படி உணருவீர்கள் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
எல்ஹெச்டி(LHT) மற்றும் ஆர்ஹெச்டி(RHT) என்றால் என்ன?
இரசித்த.... புகைப்படங்கள்.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒக்டோபர் 7 தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவு : டிரம்ப்பின் 20 அம்ச திட்டம் மூலம் அமைதியை நிலைநாட்ட உறுதி
ஒக்டோபர் 7 தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவு : டிரம்ப்பின் 20 அம்ச திட்டம் மூலம் அமைதியை நிலைநாட்ட உறுதி
Published By: Vishnu
07 Oct, 2025 | 09:35 PM
![]()
இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
அன்றைய தினம் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 254 பேரில், 12 அமெரிக்கர்களும் அடங்குவர்.
இன்றுவரை, அமெரிக்க குடிமக்களான இத்தாய் சென் மற்றும் ஓமர் நியூட்ரா ஆகியோரின் உடல்கள் உட்பட மொத்தம் 48 பணயக் கைதிகள் ஹமாஸின் பிடியில் உள்ளனர்.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவு இந்தத் துயரமான ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளையில், இஸ்ரேலின் இருப்புக்கும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும், அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உள்ள உரிமையை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இதுபோன்ற தீய சக்திகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தமது உறுதியை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.
டிரம்ப்பின் 20 அம்சத் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் தலைமையில், அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கும், காசாவில் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்தின் தலைமுறை அமைதி மற்றும் செழுமையை உறுதிப்படுத்தும் நீடித்த அமைதியை முன்னெடுத்துச் செல்வதற்கும் அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாதம் இல்லாத எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு என்ற தொலைநோக்குப் பார்வை, அதிபரின் 20 அம்சத் திட்டத்தின் மையமாக உள்ளது. (இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு இதனைப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.)
யூத - எதிர்ப்புவாதத்திற்கு எதிரான கண்டனம்
2023 அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, உலகளவில் யூத சமூகங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் யூத-எதிர்ப்புவாதம் (Antisemitism) troublingly அதிகரித்துள்ளது என்பதையும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. யூத-எதிர்ப்புவாதத்துடன் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து பயங்கரவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத நடவடிக்கைகளையும் அமெரிக்கா தொடர்ந்து கண்டிக்கிறது.
இந்த வேதனையான ஆண்டு நிறைவின்போது இஸ்ரேலுடன் துணை நிற்க உலக சமூகம் முன்வர வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இரவில் பாம்பாக மாறும் மனைவி - புலம்பும் கணவன்
இரவில் பாம்பாக மாறும் மனைவி - புலம்பும் கணவன்
சமுர்த்தி அதிகார சபையை அபிவிருத்திக்கான அமைப்பாக மாற்ற வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
சமுர்த்தி அதிகார சபையை அபிவிருத்திக்கான அமைப்பாக மாற்ற வேண்டுமென தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
07 Oct, 2025 | 01:59 PM
![]()
உதவித் தொகை வழங்கும் அமைப்பாக அன்றி நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் ஒரு அமைப்பாக சமுர்த்தி அதிகார சபையை உருவாக்க வேண்டும் என்று சமுர்த்தியுடன் தொடர்புடைய தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது சமுர்த்தி தொழிற் சங்க சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கீர்த்தி பண்டார கிவுல்தெனிய இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னைய ஆட்சியாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் சமுர்த்தி அதிகார சபையை வங்குரோத்து நிலைக்கு தள்ளினர்.
கடந்த ஆட்சி காலத்திலும் ஐ.எம்.எப் இன் நலனில் நாட்டம் காட்டிய அவர்கள் சமுர்த்தி அதிகார சபையை கலைக்கும் நிலைக்கு வழிகாட்டினர் என்றார்.
அகில இலங்கை முற்போக்கு சமுர்த்தி முகாமையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் டப்ளியூ ஜோதிரத்ன தெரிவித்ததாவது,
1995ம் ஆண்டு பொது பெரமுன டே்சியின் பொது சமுர்த்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. உண்மையான சமுர்த்தி என்பது உதவித் தொகை அல்லது சகாய நிதி வழங்கும் ஒரு அறக்கட்டளை அல்ல. அது வருமையை ஒழிக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்குக் காலம் அது மாற்றங்களுக்கு உற்பட்டு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளன. இது வறுமையை ஒழிக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு வழி நடத்தும் ஒரு அமைப்பாக அதனை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்று சமுர்த்தி துறையானது பல துறைகளாக பிரிந்து கொண்டு போகிறது. குறிப்பாக ‘அஸ்வெஸும’ என்ற முறையற்ற ஒரு திட்டம் காரணமாக அது பல்வேறு நிர்பந்தங்களுக்கு ஆளாகி வந்தது என்றார்.
எனவே சமுர்த்தி அமைப்பை பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஒரு அமைப்பாக அதனை புனரமைக்க அதிகாரிகளும் அரசும் முன்வர யவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.