2 months 3 weeks ago
பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை Published By: VISHNU 20 JUN, 2025 | 03:12 AM செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். குறித்த சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் என கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்களைக் கைப்பற்ற இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் இயங்கும் IAID தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்புத் தலைவர் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து காவல்துறை நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்ததாகக் கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபாய் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும் சரிபார்க்க முடியாத சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும். சொத்துக்கள் விசாரிக்கப்படும் அரசியல்வாதிகளில் இலங்கை பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முந்தைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் குழு மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் அடங்கும். இந்தக் குழுவில் முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் பலரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணையின்போது, யாரேனும் முறைகேடான ஆதாயங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/217956
2 months 3 weeks ago
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் யாழ் விஜயமும் முக்கிய சந்திப்புக்களும்! Published By: PRIYATHARSHAN 20 JUN, 2025 | 12:01 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் அங்கு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், வடமாகாண ஆளுநர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழுக்கான விஜயத்தின் முதல் நாளில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், யாழ். கோட்டையை பார்வையிட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி ஏனைய உறுப்பு நாடுகளுடன் இப்போதிருந்தே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு, முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள், கட்டுமான அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை , விமான சேவை, கப்பல் சேவை, காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் பாரிம்பரிய உள்ளூர் கூழை சுவைத்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் உள்ளுர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசாவை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், உயர்கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் அபிலாஷைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந்த சந்திப்பு, கல்வியை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. யாழ். மாநகர மேயர் விவேகானந்தராஜா மதிவதானியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார், இந்த ஆக்கபூர்வமான ஈடுபாடுகள், மாகாண மற்றும் நகராட்சி மட்டங்களில் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் முயற்சிகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கயுள்ளது. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஆங்கில மொழி கற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியை ஆதரிப்பதில் அவர்களின் பணிகளை அறிந்துகொண்டார். உலகளாவிய சூழலில் செழித்து வளர இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட இலங்கையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரை Yarl IT Hub -இல் சந்தித்தார் பிரித்தாகிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், இந்த மையம் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை ஆதரிக்கிறது. தொழில்நுட்பம், தொழில்முனைவோரை உள்ளிடக்கிய வளர்ச்சியில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சிகளை பிரித்தானிய மதிக்கிறதாக குறிப்பிட்டார். நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நைனாதீவுக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகார் அன்று பற்றிக், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடல் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது. பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை பிரித்தானியா அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீனவர் அமைப்புகளிடமிருந்து பல தகவல்களை கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், நிலையான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களின் நுண்ணறிவு முக்கியமானது என்று குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்தித்த, உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், இலங்கையில் முதன்மை மருத்துவத்தில் நீண்டகால நிலைமைகள் மேலாண்மைக்கான ஆதரவு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக். யாழ்ப்பாணத்திலுள்ள பழைமை வாய்ந்த உணவகமான மலாயன் கபேக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அங்கு உள்ளூர் செய்திகளை அறியும் முகமாக 94 வருட கால பழைமை வாய்ந்த வீரகேசரி பத்திரிகையில் செய்திகளை ஆராய்ந்தார். யாழ். தீபகற்பத்தில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன திட்டத்தின் முதலாம் கட்ட நிறைவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். நீர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும், சமூகங்களை ஆதரிக்கும் மற்றும் இலங்கையில் நீண்டகால மீள்தன்மையை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு நிதியளிப்பதில் பிரித்தானிய பெருமை கொள்கிறது என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217980
2 months 3 weeks ago
மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC கௌரவிப்பு 17 JUN, 2025 | 12:13 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும். தனது 118ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் இந்த டெஸ்ட போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார். இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்த நினைவுச் சின்னத்தை ஏஞ்சலோ மெத்யூஸிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாசவும் கலந்துகொண்டார். இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட அழைக்கப்பட்டதை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தினுள் சென்றார். அப்போது பாடசாலை வீரர்கள் இருபுறமும் நின்றவாறு துடுப்பை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர். மெத்யூஸ் கையை உயர்த்தி அசைத்தவாறு களத்தினுள் புகுந்தார். அப்போது இலங்கை வீரர்களும் அரங்கில் குழுமியிருந்தவர்களும் பலத்த கரகோஷம் செய்து ஏஞ்சலோ மெத்யூஸை பாராட்டி கௌரவித்தனர். https://www.virakesari.lk/article/217694
2 months 3 weeks ago
மண்குதிரைக்காக அல்ல, மண்குதிரையை காட்டி மக்களை ஏமாற்றும் அற்ப பதர்களை இனம்காட்டவும் அரசியல் என்பது அறிவு ரீதியனதேயொழிய பக்தி ரீதியானது அல்ல என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே எனது கருத்துக்கள்.
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்.... https://www.facebook.com/share/r/1AvyN6QYas/
2 months 3 weeks ago
மண் குதிரைக்காக மட்டும் இரவு பகல் பாராமல் நேரம் ஒதுக்கி பாடுபடும் உரிமை உங்களுக்கு உள்ளது.
2 months 3 weeks ago
வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த ‘தண்ணி மருந்து’ ஊழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, இரு மகள்கள், மருமகன் பிணையில் விடுவைப்பு. ஆனால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் மகள் சமித்ரி ஜனனிகா சிறைக்கு, அவர் தந்தையை போலவே கீல்ஸ் பையோடு சிறை செல்வதை படத்தில் காணலாம்! Vaanam.lk
2 months 3 weeks ago
அதி உயர் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா! இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கி வருகின்றது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது” ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை தெற்கு பஞ்சாப்,டெல்லி போன்ற இடங்களில் இருந்து இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் ஏவ முடியும் எனவும், இதனால் இந்தியா எதிரி எல்லைகளை தாண்டாமலே தாக்குதல் நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) தலைமையில், ப்ராஜெக்ட் விஷ்ணு என்ற பெயரில், ‘தன்னம்பிக்கை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. எதிரி நாடுகளின் எச்சரிக்கையை அதிகரிக்கும் வகையில், இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1436418
2 months 3 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 months 3 weeks ago
இரண்டு இணையத்தில் காணொளி பார்த்தேன் ஆனால் அது நூற்றுக்கு நூறு உண்மையென சொல்ல முடியாது.................... ரஸ்சியாவுக்கு ரோன்களை ஏற்றுமதிவ்செய்த நாடு ஈரான்...................ரஸ்சியாவிடம் இருந்தும் ஈரான் சில ஆயுதங்களை வேண்டி இருக்க கூடும் முன் கூட்டியே.......................இன்று கூட X தளத்தில் சீனாவின் விமானம் ஈரானில் வந்து இறங்கினதாக போட்டு இருக்கினம்.......................
2 months 3 weeks ago
வாழ்ககை முழுவதும் மண்குதிரைகளை நம்புவதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. 😂
2 months 3 weeks ago
வெற்றி பெற்ற பெரியப்புவுக்கு வாழ்த்துக்கள்🙏🥰 மனுஷன் இந்த போட்டியில் தான் முதல் முறை வெற்றி பெற்று இருக்கிறார்...................சந்தோஷத்தில் மிதக்க டென்மார்க்கில் இருந்து இரண்டு விஸ்கி போத்தல அனுப்பலாம் என்று இருக்கிறேன் லொள்😁.............................
2 months 3 weeks ago
நிர்வாகத்தை தொடர்வு கொண்டால் அதை அவர்கள் சரி செய்வினமே கந்தப்பு அண்ண........................கடந்த 10வருடமாய் நானும் கைபேசி ஊடாக தான் எல்லாம் செய்கிறேன்..................கொம்பியூட்ர பாவிக்காம விட்டு 10வருடத்துக்கு மேல் ஆகுது........................
2 months 3 weeks ago
அமெரிக்கன் பெத்துப் போட்ட கள்ளக் குழந்தை தான் இஸ்ரேல் இந்த போரை ஈரான் ஆரம்பிக்க வில்லை.....................ஹமாஸ் தங்கட நாட்டை தாக்கி விட்டினம் என சொல்லி 2வருடத்துக்குள் 50ஆயிரம் பலஸ்தீன மக்களை கொன்று குவிச்ச போர் குற்றவாளி தான் நெத்தனியாகு , தென் ஆபிரிக்கா தொட்டு இன்னும் சில நாடுகள் ஜக்கிய நாட்டு சவை முன் ஆதாரத்தோடு பல உண்மைகளை போட்டு உடைத்தவை , ஆனால் அமெரிக்கனின் ஆனுவத்தால் அதெல்லாம் நீத்துப் போனது...................என்ன கோதாரிக்கு உந்த ஜக்கிய நாட்டு சபைய உருவாக்கினவங்கள் என்று எனக்கு இன்னும் விடை தெரிய வில்லை ..................அமெரிக்கா எப்பவாவது இந்த ஜக்கிய நாட்டு சவையால் தன்டிக்கப் பட்டு இருக்கா அப்படி தன்டிச்சாலும் அதை அமெரிக்கா கேட்டு நடந்து இருக்கா😛....................உலகில் அதி பயங்கரவாத நாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்......................நூறு வருடத்துக்கு முதல் பிரிடிஷ் காரன் எப்படி இருந்தவை , இப்ப அவர்களின் நிலமைய பாருங்கோ என்ன நினையில் இருக்கினம் என்று😉.........................அமெரிக்காவின் இரட்டை வேட நாடகத்துக்கு இந்த உலகில் யாரோ ஒருதன் முற்றுப் புள்ளி வைப்பான் அமெரிக்காவின் சொல்லை மீறி செயலில் பல சம்பவங்கள் நடக்கும் இனி வரும் காலங்களில்....................... அடுத்த நாட்டு வளங்கள் மீது கொள்ளை அடிப்பதற்காக என்ன வேசமும் போடக் கூடிய நாடு தான் அமெரிக்கா , அதுக்கு நல்ல உதரானம் 2003 ஈராக்கில் அமெரிக்கன் படை கால் வைச்சது , சதாம் அணு குண்டு வைச்சு இருக்கிறார் அணு குண்டை மீட்க்க போகிறோம் என சொல்லி போரை தொடங்கின அமெரிக்கா , இதுவரை ஈராக் நாட்டின் அணுகுண்டு எங்கை என்ர கேள்விக்கு பதில் இல்லை😡....................... அமெரிக்கன் பெத்துப் போட்ட கள்ளக் குழந்தை இஸ்ரேல் , அந்த குழந்தை ஈரானால் மெதுமெதுவாய் அழிவதை கண்ணால் பார்க்க முடியுது.....................தங்கட வான் பரப்பில் ஈ காக்கா கூட பறக்க முடியாது என்று மார் தட்டி சொன்ன இஸ்ரேலில் அவர்களின் வான் பாதுகாப்பு கருவி அமெரிக்கன்ட வான்பாதுகாப்பு கருவிய தாண்டி போய் ஈரானின் குண்டுகள் வெடிக்குது என்றால் ஈரானின் மிசேல்களின் பெருமதி கூடி கொண்டே போகுது................................. இஸ்ரேல் போன கிழமை இந்த போரை தொடங்கினதில் இருந்து பல நாட்டு ஊடகங்கள் வழியாக பார்த்துட்டு தான் இருக்கிறேன்....................ஈரான் என்ர நாட்டுடன் மோத எத்தனை நாடுகள் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பின்னால் நிக்கினம்........................இத்தனை நாட்டு உதவியுடன் ஒரு சின்ன நாட்டுடன் மோதுவது உண்மையில் வெக்கக் கேடு , போரை தொடங்கினது இஸ்ரேல் , அமெரிக்கா ஜக்கிய நாட்டு சைபை தொட்டு மற்றும் சில விடையங்களில் இவர்களை மதிக்காம செயல் பட்டு இருக்கு.....................ஜனநாயகம் பற்றி பேச அமெரிக்கா தகுதி இல்லாத நாடு............................ புட்டின் கூட நேருக்கு நேர் மோத துணிவு இல்லாம தான் ஜோ பைடன் பின்னால் நின்று உக்கிரேனுக்கு ஆயுதங்களை பணங்களை அள்ளிக் கொடுத்தார்....................அமெரிக்கான்ட வீரம் ஆசியாவில் இருக்கும் சின்ன சின்ன நாடுகள் மீது தான்...........................சோமாலியாவில் அடி வேண்டி அவமான பட்ட மாதிரி ஈரானிடமும் அடி வேண்டி தங்கட நாட்டுக்கு ஓடி போகனும் என மனதார விரும்புகிறேன்................................ டிக்டாக்கில் ஒரு ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் போல😁😛😛😛😛😛😛😛............................அப்படி ஒன்றும் இல்லை இப்ப தான் கையில் இருந்த கொடிய நோய் கட்டிய அகற்றினவை........................ஓய்வு அதிகம் தேவை , யாழை தினமும் பார்வையிடுவேன் , பிடித்த கருத்துக்கு விருப்ப புள்ளி குத்துவதோட சரி அண்ணா ..............................
2 months 3 weeks ago
36 லட்சம் அதுவும் இளைய தலைமுறையினர் என்பது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களின் இரு மடங்கு. எனவே தடி பலமாக வேரூன்றி விட்டது உங்களுக்கு கொஞ்சம் அருந்த கடினமானது தான். ஆனால் அந்த தடி பற்றி தரக்குறைவாக தமிழகத்தில் எவனும் கதைக்க முடியாது என்பது தான் தடிக்கு தமிழகம் தந்திருக்கும் முதல் அங்கீகாரம். கூட்டு இல்லை என்பதால் மட்டுமே கட்டுக்காசு இழப்பு. 2026 இற்கு பின்னர் அதுக்கும் பதில் உங்களுக்கு கிடைக்கும். எனவே தடியை இன்னும் பலமாக பிடிக்க தயாராகுங்கள்.
2 months 3 weeks ago
ஹாமெனி , 12ம் கிளை ஷியா இஸ்லாம் இல் ஒரு (மத) தலைவர் (Marja என்ற (அரபி) சொல்லால் இந்த தலைவர்களை குறித்து அழைப்பது. அதியுயர் மத தலைவர் என்பது கருத்து) இப்படி பல மத தலைவர்கள் (Marja) 12 ம் கிளை ஷியா இஸ்லாமில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவொருவரின் இஸ்லாம் கருத்துருவாக்கமும் ஒன்றில் இருந்து ஒன்று சிறியது தொடக்கம் மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டது. இந்த Marja க்கள் இராக்கில் இருக்கிறார்கள், சிரியாவிலும் இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது. காஸ்மீரில் கூட முன்பு இருந்து இருக்கலாம், ஏனெனில் காஷ்மீர் ஷியா இஸ்லாமின் செல்வாக்கு பரவி, ஆழமாக இருந்தது, இப்பொது அந்த அளவு இல்லை. சியா இஸ்லம்மில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒத்துவரும் தலைவரை ( Marja) பின்பற்றலாம். ஆனால் ஹாமெனி யை மிகப்பெரும்பான்மை ஷியா பின்பற்றுவதன் காரணம், ஒப்பிஈட்டளவில் நவீனத்துவதையும், தாராளப்போக்கையும் ஹாமெனி போதிப்பதால்.
2 months 3 weeks ago
அந்த தடியை பத்துவருடங்களாக யூஸ் பண்ணியும் கட்டுப்பணம் கூட எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு இடத்திலாவது கட்டுப்பணம் கிடைக்கும் போது சீமான் என்ற தடியை யூஸ் பண்ணவேண்டிய காலம் வந்துவிடும். ஆனால் அந்த தடி இத்துப்போன தடியாதலால் தற்குறித்தம்பிகள்ளே அந்த தடியை தூக்கி வீதிவிடுவர். 😂😂😂
2 months 3 weeks ago
யாரப்பா இந்த ஐலண்ட் என்கிற பக்திமான். அதீத சிங்கள தேசியவுணர்வில் ஊறிக்கிடக்கிறார் போலத் தெரிகிறது.
2 months 3 weeks ago