Aggregator
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்
வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்
வாகரை பனிச்சங்கேணியில் பிள்ளையானின் 50 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் 50 ஆவது பிறந்த தினம் வாகரை பனிச்சங்கேணியில் பல்வேறுபட்ட நிகழ்வுகளுடன் இன்று கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வுகளை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வி, கலை, கலாசாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நடைபெற்றது.
பலர் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் பனிச்சங்கேணி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசையும் அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.
குறிப்பாக அவரது 50 ஆவது அகவையினை முன்னிட்டு ஆதாரவாளர்களால் 50 மண் பானைகளில் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.
இதன்போது அவரது கட்சியின் தற்போதைய தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான திரவியம் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான பிரசாந்தன், வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் மற்றும் கிழக்கு தமிழர் கூடட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் கிழக்கு பல்கலைக் கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் படுகொலை தொடர்பாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி!
தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு
தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு
தமிழகத்திலிருந்து இலங்கை ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடு நிறுத்திவைப்பு
19 August 2025
தமிழகத்தில் இருந்து இலங்கையின் ஏதிலிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியுள்ளது.
த ஹிந்து செய்தித்தாள் இந்த செய்தியைப் பிரசுரித்துள்ளது.
தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறும் தன்னார்வமாகத் திரும்புபவர்களுக்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.
இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு ஏதிலிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ தரப்புக்களின் தகவல்படி, நாடு திரும்பிய 54 வயதான ஒருவர், 2025 ஆகஸ்ட் 12ஆம் திகதியன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று 2025 மே 28, மற்றொரு தமிழ் ஏதிலி யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பிறகு கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஐக்கிய நாடுகளின் உதவியில்லாமல் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 1996 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் ஏதிலிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இலங்கையின் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில், தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளை இலங்கை அதிகாரிகள் கைது செய்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
2002 முதல், யுஎன்எச்சீஆர் என்ற ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் 18,643 இலங்கை தமிழ் ஏதிலிகளை, தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் தாமாக முன்வந்து நாடு திரும்பும் ஏதிலிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே தற்போதைய நடவடிக்கைக்கான காரணம் என்று ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
பொதுவில், இன மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பயந்து ஏதிலிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் குடியேற்றச் சட்டங்களை மீறுவது மன்னிக்கப்படுகிறது என்றும் அந்த உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம், இராஜதந்திர வழிகளில் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
குடியேற்ற விதிகளை மீறியதற்காக இலங்கை ஏதிலிகள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும், கண்ணியத்துடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை, அவர்களை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
https://hirunews.lk/tm/415305/repatriation-of-sri-lankan-nationals-from-tamil-nadu-suspended
கொத்துக் குண்டு பொதுமக்கள் மீது வீசப்பட்டது; ஒரு செய்தியாளரின் நேரடிச் சாட்சி!
உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி!
உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி!
உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி!

உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (18) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.
இருப்பினும் எந்த உதவியின் அளவு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ட்ரம்ப் சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர், ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் குழுவை வரவேற்ற வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு அசாதாரண உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப் இந்த உறுதிமொழியை அளித்தார்.
சந்திப்பின் பின்னர், “பாதுகாப்பைப் பொறுத்தவரை, நிறைய உதவிகள் இருக்கும்,” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஐரோப்பிய நாடுகள் இதில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குறுதியை “ஒரு பெரிய முன்னேற்றம்” என்று ஜெலென்ஸ்கி பாராட்டினார்.
திங்கட்கிழமை சந்திப்புகளுக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு உத்தரவாதத்தின் ஒரு பகுதி அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்கும் இடையே $90 பில்லியன் (£67 பில்லியன்) ஆயுத ஒப்பந்தத்தை உள்ளடக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.
இதில் உக்ரேனிடம் இல்லாத அமெரிக்க ஆயுதங்களும் அடங்கும், அவற்றில் விமான அமைப்புகள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளடங்கும்.
கியேவிற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் 10 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கருத்து படங்கள்
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!
2025-05-15

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நேற்று மன்றில் தெரிவித்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!

அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கவாதியான கடுவலை மாநகர சபையின் தற்போதைய மேயர் ரஞ்சன் ஜயலால் சட்டவரைபை தீ வைத்து கொளுத்தினார்.
கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த சட்டத்தில் போலியான திருத்தங்களை செய்து அண்மையில் இலங்கை மின்சாரசபை சட்டவரைபு நிறைவேற்றப்பட்டது.
அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பில் ஏதும் பேசுவதில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.
வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லா பிரச்சினைகள் ஏற்படும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தால் வலுசக்தி துறையின் தனியுரிமை கூறாக்கப்படும் என்றார்.