Aggregator

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 பேர் மீது சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

2 months 3 weeks ago
முறைகேடாய் சொத்து சேர்த்து சிக்கினார் மகிந்தவின் கூட்டாளி சாணக்கியன்! 28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு! தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் உரிய சொத்துக்களை கொள்வனவு செய்ததாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர, சாமர சம்பத் தசநாயக்க, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாரச்சி, கஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க, ஜானக திஸ்ஸகுட்டிஆரச்சி, வஜிர அபேவர்தன, மஹிபால ஹேரத், அநுர பிரியதர்ஷன யாப்பா, மனுஷ நாணாயக்கார, வடிவேல் சுரேஸ், துஷார சஞ்ஜீவ பதிரண, ஹர்ஷன ராஜகருணா, சாணக்கியன் இராசமாணிக்கம், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சாந்த அபேசேகர ஆகியோரின் பெயர்கள் உரிய விசாரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சொத்துக்கள் தொடர்பிலும், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணையில் யாராவது முறைகேடாக சம்பாதித்து சொத்துக்களை வாங்கியிருப்பது தெரியவந்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. News:- Tamil leader.lk 19,June,2025 Monisha Kokul is with Malaravan Uthayaseelan

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
இது பல பரிமாணங்கள் உள்ள பிரச்சனை. ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு நெருக்கி விட்டது என்பது திசைதிருப்பும் பொய். உண்மையில் நோக்கம், இரான் அரசாங்க அமைப்பை மாற்றுவது, ஆகப் பிந்தியதும், முந்தியதும், இந்தோ பசிபிக், அதை ஒத்த நவீன பட்டுப் பாதையும். (இதை வேறு திரியில் படம் போடு காட்டினால் கூட பூகோள ராஜதந்திரம் என்னவென்று கேட்பவர்களும் இங்கே இருக்கிறர்கள், மற்றவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை என்று கொக்கு மண்ணுக்குள் தலையை புதைத்த கதையாக) கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முதல் தான் சீனாவில் இருந்து கசக்ஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஊடக, நேரடியாக ஈரானுக்கு சரக்கு புகையிரத பாதை அமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது உள்ளது. (அமெரிக்கா / மேற்குக்கு சீன பொருளாதர தளத்தில் மட்டும் வைத்து, வவன்முறை பலத்தையும் சேர்த்து அடித்தது போல அடி. us ஆல் தாங்க முடியாமல் இருக்கிறது, ஏனெனில் கடல் வழியால் தடுத்தால் தரைவழி இப்பொது உள்ளது. மற்றும் பொருளாதார தடை என்று அமெரிக்கா வாலாட்ட முடியாது) எனவே, இப்பொது இரான் அணு ஆயுதம் என்ற போர்வை எடுக்கப்பட்டு இருக்கிறது, ஈரானில் உள்ள அரசாங்கத்தை அகற்றுவதற்கு. (டிரம்ப் சும்மா வாய்ச்சவடாலுக்கு சொன்னதே, அவரின் தேசிய புலனாய்வு director சொன்னன இரான் அணுஆயுதத்தை தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு மேல் தேவை என்றதை தான் கேட்கவில்லை என்று. எந்த அதிபராவது அப்படி இருந்தாலும் சொல்லமாட்டார், Trump இன் வாயால் விளாசும் போக்கால் வெளிவந்து உள்ளது. ஆகவே, ஈரான் அணு ஆயுதம் என்ற பிரச்சனை மட்டும் இப்போதைய தாக்குதல் முனைப்பில் மூல காரணம் அல்ல) இதன் மறுவளம், அமெரிக்காவின், இஸ்ரேல் இன் அந்த இடத்தில உள்ள ஈரான் அந்த பிராந்திய விடயங்களில் தங்களை மீறக்கூடாத நிலையில் ஈரான் இருக்க வேண்டும் என்ற கொள்கையின் விளைவு. அதுக்குதான் இஸ்ரயேலிடம் மாத்திரம் அணுஆயுதம், அமெரிக்காவின் கொள்கை இஸ்ரேல் ஏ எப்போதும் இராணுவ / பல மேலாண்மை கொண்டு இருக்க வேண்டும் என்பது (இதை QME என்று அமெரிக்கா சொல்கிறது, இஸ்ரேல் qualitative military edge எப்போதும் கொண்டு இருக்க வேண்டும் என்று) அத்துடன் இஸ்ரேல் இன் zionist சிந்தனையும் - அந்த பிராந்தியத்தில் தாம் சொல்வதே நடக்க வேண்டும், மற்ற நாடுகள், இனமாக அரபுகள், persians கதைக்க, எதிர்க்க கூடாது என்ற கொள்கை. (அமெரிக்காவின் பொம்மையான ஷாவின் ஆட்சியில் கூட, ஈரானுக்கு அணு சக்தியை வெளியில் இருந்து, US ஏ சகல கட்டுமானக்கனலை வழங்கும், எரிபொருளை வழங்கும், மற்றும் பாவிக்கப்பட்ட அணு எரிபொருளின் பக்க விளைவன புளுடோனியம் கூட ஈரானில் இருந்து அகற்றப்படும் என்பது. ஷா கூட அதை ஏற்கவில்லை. ) ஆகவே, ஈரான் அணு துறையை வைத்து இருக்க கூடாது என்று அமெரிக்கா / மேற்கு, இஸ்ரேல் நாண்டு பிடிப்பது ஈரானில் உள்ள அரசாங்களால் அல்ல (இங்குள்ள சிலரின் விளக்கப்படி ஈரானில் இப்பொது ஆட்சியில் இருக்கும் முல்லாக்களால் அல்ல) US, மேற்கின் நடத்தையால், முதலில் செய்த JCPOA ஐ அமெரிக்கா குழப்ப, eu உம் அதாய் எதிர்க்காமல் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டு நின்றது, இறுதியாக கூட விபரங்கள் பற்றிய பேச்சுவார்த்தைக்கு 2 நாள் இருக்கும் போது இரானின் கவ்வனத்தை திருப்பும் சந்தர்ப்பமாக பாவித்து தாக்குதல் நடத்தியது, அதை முற்றாக அமெரிக்கா அறிந்து ஆமோதித்து என்பது போண்றவைகளும், எந்தவொரு ஒப்பந்தமும், treaty என்றால் கூட சாத்தியம் இல்லாத நிலைக்கு வந்துள்ளது. தாக்குதலை பொறுத்தவரை, இஸ்ரேல், us, மேற்கு முதலில் தந்திரோபாய அடிப்படையில் இரானை கணிசமாக நிலைகுலைய வைத்து இருந்தாலும், 24 மணிநேரத்துக்குள் இரான் சுதாகரித்து மீண்டதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம், ஈரனின் அரச, அரசாங்க, படை அமைப்பை மேற்கு, us க்கு இப்போதும் குழப்பமாகவே இருக்கிறது. (மறுவளமாக, அமெரிக்கா வேறு நாடடு படைகளுக்கு உதவி, பயிற்றசை கொடுப்பது, அந்தா படைகளில் பரவி, விரவி அறிவத மூலம் உத்தியோகப்பற்றற்ற செல்வாக்கை உருவாக்குவதுக்கு. ஈரானில், எந்த ஒரு குறித்த வெளிச்சக்தி உதவி இன்றி அதன் படை பலத்தை காட்டி எழுப்பி வைத்து இருக்கிறது, புலிகளை போல, இது அமெரிக்காவுக்கு மூலையில் இருந்து குதி வரை குத்திக் கொண்டு இருக்கிறது) கேந்திர அடிப்படையில் அமெரிக்கா, இஸ்ரேல், மேற்கு இதில் மாட்டுப்பட்டு உள்ளது. (இதன் அடிப்படை காரணம் சீன, ரஷ்யா என்ற சகதியில் மறுவளத்தில் போட்டியாக இருப்பதால்) மாட்டுப்பட்டதன் ஒரு காரணம் பகுதியாக டிரம்ப் இன் வாயால். சீனா, ருசியா வெளியில் சொல்வதை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாது. (அவை US ஐ மாட்டிவிட்டு, பின் இரானுக்கு என்ன உதவி செய்யலாம் என்பதை பற்றியே சிந்திக்கும் சந்தர்ப்பம் கூட) ( சீனாவை பற்றி இவிடயங்களில் அறிவதற்கு, முன்பும் இங்கு சொல்லி இருக்கிறேன்.சீன அரசியல், ராஜதந்திர, இராணுவ சிந்தனையாளர் Sun Zi (ஆங்கிலத்தில் Sun Tzu , காலம் கி.மு 600 - 400) எழுதிய The Art of War என்பதை வாசித்து அறியலாம். (இணையத்தில் பல இடங்களில் இருக்கிறது) )

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்துள்ளது. ஏன் அவர்களுக்கு பொருளாதார தடை இல்லை? முதலாவது காரணம், இஸ்ரேல் 1960 ம் ஆண்டுகளிலேயே, மற்றைய ஐந்து அணு ஆயுத நாடுகள் போன்று, அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டது. அன்று எவரும் எவர் மேலும் தடை விதிக்கும் நிலை உலகில் இருக்கவில்லை. இரண்டாவது காரணம், அமெரிக்கா - பிரான்ஸ் - இங்கிலாந்து - இஸ்ரேல் என்றும் ஒரே அணியிலேயே இருக்கின்றார்கள். இதில் பிரான்ஸ் மட்டுமே அவ்வப்போது இஸ்ரேலின் கொடுமைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நாடு. இவர்கள் இஸ்ரேலுக்கு எந்தப் பொருளாதார தடைகளையும் அறிவிக்கமாட்டார்கள் ஏனெனில் நட்பு நாடுகள். ஆனால் ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளை அறிவிக்கலாம். இவர்கள் இருவரும் தடைகளை அறிவித்தாலும் எதுவும் ஆகப் போவதில்லை. அணு ஆயுதம் வரை, பொருளாதார தடை வரை , ஒரு நாளுக்கு 50 ஆக கொன்றால் ஒரு இனத்தை அழிக்கலாம் என்ற குரூரம் யாரிடம் உள்ளது? ஒரு உதாரணம்???? வேறு இனமோ அல்லது வேறுபாடுகள் கொண்ட மனிதர்களை கொன்று அழிக்கலாம் என்ற கொடூரம் காலம் காலமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதர்களிடம் இருக்கின்றது. ஹிட்லரும், அவரது படையினரும் யூதர்களை இலட்சக் கணக்கில் கொன்று அழித்தார்களே. ஒரு நாளைக்கு 50 அல்ல, ஐம்பதினாயிரம் யூதர்களை ஹிட்லர் கொன்றார். பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தால் இந்தியாவில் தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் செத்து விழுந்தார்களே. ருவாண்டாவில் ஒரு இனம் இன்னொரு இனத்தை தினமும் கொன்று அழித்தார்களே. அமெரிக்கப் பழங்குடிகள், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் என்று கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே. இப்படி ஆயிரம் நிகழ்வுகள் பூமியில் சில ஆயிரம் வருடங்களாக நடந்து கொண்டேயிருக்கின்றது. அணு ஆயுதம் இன்றைய உச்ச ஆயுதமாக இருக்கின்றது. நச்சு வாயு ஒரு காலத்தில் இருந்தது. தீக்குண்டம் ஒரு காலத்தில் உச்ச ஆயுதமாக இருந்திருக்கும். கழுமரம் கூட ஒரு காலத்தில் இருந்திருக்கும். தனது நலம் எப்படி முழு அரபு உலகமும் வேடிக்கை பார்க்கும் போது பலஸ்தீனத்துக்கு மட்டும் உதவ முயல்கிறது. அதுவும் பலஸ்தீனியர்கள் வேறு முஸ்லீம்களாக உள்ள போது?? பலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு உதவியது போலவே சிரியாவில் அசாத்துக்கு உதவி செய்தது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு உதவி செய்தது. ஈராக்கில் ஒரு புரட்சிப்படையை உருவாக்கி உதவி செய்தது, ஹூத்தீஸ் அமைப்பிற்கு உதவி செய்வது என்று பலவற்றை ஈரான் செய்து கொண்டிருக்கின்றது. இது பொதுவான மனிதநலமா அல்லது தன்னலமா என்ற கேள்வி இங்கு எப்படி வருகின்றது? சி ஐ ஏ ,மொசாட் செய்த கொலைகளை காட்டிலுமா??? சிஐஏ, மொசாட் செய்த கொலைகளை விடவா இலங்கை அரசு செய்து விட்டது என்றும் இலங்கை அரசு சார்பான ஒருவர் கேட்கக்கூடும். அதற்கும், உங்களின் கேள்விக்கும் பதில் ஒன்றே.

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர் ரஹிம் குவித்த அபார சதங்களுடன் பலமான நிலையில் பங்களாதேஷ் Published By: VISHNU 17 JUN, 2025 | 07:32 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோர் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்துள்ளது. நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி அத்தியாயத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் 14 ஓட்டங்களுடனும் மொமினுள் ஹக் 29 ஓட்டங்களுடனும் இலங்கையின் அறிமுக சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவின் பந்துவீச்சில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர். 17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த ஷன்டோவும் ரஹிமும் மிகவும் பொறுப்புணர்வுடன் சுமார் 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களை பெரும் சொதனைக்குள்ளாக்கினர். அவர்கள் இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 247 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர். நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 260 பந்துகளில் 14 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் அடங்கலாக 136 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 186 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 105 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். தனது 36ஆவது டெஸ்டில் விளையாடும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் தனது 97ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 38 வயதான மூத்த வீரர் முஷ்பிக்குர் ரஹிம் 12ஆவது சதத்தைப் பெற்றார். விளையாட்டிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் முஷ்பிக்குர் ரஹிம் அபாரமாக துடுப்பெடுத்தாடினார். இலங்கை அணியில் ஆரம்ப வீரர் லஹிரு உதாரவும் சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவும் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். தரிந்து ரத்நாயக்க ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வீசிய 27 ஓவர்களில் 105 ஓட்டங்களைக் கொடுத்த அவரால் மேலதிக விக்டெகட் எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது. (124 - 2 விக்) தனது முதல் 15.5 ஓவர்களை வலதுகையால் பந்துவீசிய தரிந்து ரத்நாயக்க 16ஆவது ஓவரில் இடது கையால் பந்துவீச ஆரம்பித்தார். ஆனால் அவரால் பந்துவீச்சில் சாதிக்க முடியாமல் போனது. அசித்த பெர்னர்ணடோ 51 ஓட்டங்களுடக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் மிலன் ரட்நாயக்க கட்டுப்பாட்டுடன் 12 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்தார். இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவிச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய 28 ஒவர்களில் 85 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை. பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தாதது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கும். https://www.virakesari.lk/article/217756

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

2 months 3 weeks ago
அண்ணை, மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
இந்த‌ கூ முட்டைக‌ளுக்கு ர‌ஸ்சியாவும் ஈரானும் தான் ச‌ரியான‌ ம‌ருந்து அமெரிக்கா த‌லையிடா விட்டால் உக்கிரேன் போர் எப்ப‌வோ நின்று இருக்கும் அமெரிக்க‌ன்ட‌ க‌ள்ள‌க் குழ‌ந்தை இஸ்ரேலும் அட‌ங்கி இருப்பாங்க‌ள்....................இஸ்ரேலால் த‌னிய‌ நின்று ஈரானை வெல்ல‌ முடியாது எரியிர‌ வீட்டுக்கு எண்னைய‌ ஊத்துவ‌து போல் இஸ்ரேல் நீ இற‌ங்கி அடி நாங்க‌ள் ப‌க்க‌ ப‌ல‌மாய் இருக்கிறோம் ஆயுத‌ங்க‌ளை த‌ருகிறோம்.....................இந்த‌ பையித்திய‌ங்க‌ளிட்டை உல‌க‌ ம‌க்க‌ள் ப‌டும் பாடு பெரும் பாடாக‌ இருக்கு............................

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

2 months 3 weeks ago
நான் ஓநாய் என்று யாரையும் குறிப்பிட்டு எழுதியதாக ஞாபகம் இல்லை ஆனால் அவ்வாறு எழுதியிருந்தால் அவர் அதை விட கடுமையான வார்த்தைகளை என் மீது பாவித்திருப்பார். என் ஆயுதம் நீங்கள் காட்டுவது தான்.

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 04:20 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. மருதலிங்கம் பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218011

யாழ். மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

2 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2025 | 04:20 PM

image

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

மருதலிங்கம் பிரதீபன்  2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/218011

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார, தரிந்து ரத்நாயக்க; பங்களாதேஷ் 90 - 3 விக் 17 JUN, 2025 | 12:22 PM (நெவில் அன்தனி) காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டத்தின் பகல்போசன இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இப் போட்டியில் இலங்கை சார்பாக 31 வயதான வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார, இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய 29 வயதான சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர். இன்றைய போட்டியில் பந்துவீச அழைக்கப்பட்ட தரிந்து ரத்நாயக்க தனது நான்காவது ஓவரில் மொமினுள் ஹக்கை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவினால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் (14), மொமினுள் ஹக் (29) ஆகிய இருவரின் விக்கெட்களை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தரிந்து ரத்நாயக்க வீழ்த்தினார். (45 - 3 விக்) எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ (25 ஆ.இ.), முஷ்பிக்குர் ரஹிம் (20 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியை நல்ல நிலையை நோக்கி நகர வைத்துள்ளனர். பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரவுள்ளது. https://www.virakesari.lk/article/217697

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES/MAXAR TECHNOLOGIES படக்குறிப்பு,இரானின் நடான்ஸ் அணுசக்தி தளம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரேல், அலிசன் பிரான்சிஸ் & விக்டோரியா கில் பதவி, பிபிசி நியூஸ் அறிவியல் குழு 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து வரும் இஸ்ரேல், இரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையங்கள் மீது முக்கிய கவனம் செலுத்துகிறது. சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி (IAEA), இரானின் அணுசக்தி மையத்தில் உள்ள நடான்ஸ் நிலையம் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மற்றொரு தளமான ஃபோர்டோ, ஒரு மலையின் ஆழத்தில் அமைந்துள்ளது. அந்த நிலத்தடி அணுசக்தி நிலையத்தை அடைவதற்கு, அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள சக்திவாய்ந்த 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் தேவைப்படும். ஒருவேளை ஃபோர்டோ மீது குண்டுவீச்சு நடந்தால், அதனால் ஏற்படும் அபாயங்கள் என்னவாக இருக்கும்? இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் "மிகவும் கவலைக்குரியவை" என்று சர்வதேச அணுசக்தி முகமை விவரித்துள்ளது. திங்கள் கிழமையன்று, அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி, ராணுவ விரிவாக்கம் "மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளுடன் கதிரியக்க வெளியீட்டிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது" என்று கூறினார். யுரேனியத்தின் ஒரு குறிப்பிட்ட வகையை (ஐசோடோப்பை) உருவாக்கிச் சேமிக்க, செறிவூட்டல் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சர்ரே பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டன் தேசிய இயற்பியல் ஆய்வகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பேடி ரீகனின் கூற்றுப்படி, யுரேனியத்தை நிலத்தில் இருந்து தோண்டி எடுக்கும்போது, அது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அவை, பெரும்பகுதியாக, 99.3 சதவிகிதம் யுரேனியம்-238, அதோடு, 0.7% - அதாவது சுமார் 150 அணுக்களில் ஒரு அணு யுரேனியம்-235 "அணு உலை வேலை செய்யத் தேவையானது இதுதான்" என்று விளக்குகிறார் பேராசிரியர் ரீகன். ஆற்றல் வெடிப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானில் உள்ள முழுமையடையாத அராக் கனநீர் உலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய காட்சிகளை இரானிய அரசு ஊடகம் வெளியிட்டது அணுசக்தி செறிவூட்டல் செயல்முறை, அடிப்படையில் யுரேனியம்-235 அளவை அதிகரிப்பதைக் குறிக்கிறது. யுரேனியத்தை அதன் வாயு வடிவத்தில் எடுத்து மைய விலக்குகள் (centrifuges) எனப்படும் இயந்திரங்களில் சுழற்றுவதன் மூலம் இந்தச் செயல்முறை நடைபெறுவதாக விளக்கினார் பேராசிரியர் ரீகன். மேலும் யுரேனியம்-238, தேவையான யுரேனியம்-235ஐ விட கனமாக இருப்பதால், அவை சுழலும்போது இரண்டும் பிரிந்து விடுகின்றன. செறிவூட்டலை அதிகரிக்க இந்தச் செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. ஆற்றலை வெளியிடும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு வினையை உருவாக்க அணுமின் நிலையங்களுக்குப் பொதுவாக இந்தச் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் சுமார் 3-5% தேவைப்படுகிறது. ஆனால் அணு ஆயுதம் தயாரிப்பதே நோக்கமாக இருக்கும்போது, யுரேனியம்-235 சுமார் 90% தேவைப்படும். அடிப்படையில், யுரேனியம் எவ்வளவு செறிவூட்டப்படுகிறதோ, அந்த அணுக்கள் அனைத்தும் பிளவுபடும்போது ஆற்றல் வெடிப்பும் அதிகமாக இருக்கும். இரானின் யுரேனியம் சுமார் 60% செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. அதாவது, அணு ஆயுதம் தயாரிக்கப் போதுமான அளவு செறிவூட்டும் பாதையில் அது முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், முறையாகச் சேமித்து வைக்கப்பட்ட, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மீது ராக்கெட்டை ஏவுவது, ஃபுகுஷிமா அல்லது செர்னோபில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட பேரழிவுகளைப் போன்ற "அணுசக்தி விபத்தை" ஏற்படுத்தாது. "அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம், செறிவூட்டப்படாத யுரேனியத்தைவிட மூன்று மடங்கு அதிக கதிரியக்கத் தன்மை கொண்டது. ஆனால், மொத்த அளவில் பார்த்தால், இரண்டுமே அடர்த்தியான கதிரியக்கத் தன்மை கொண்டவை அல்ல. இதனால் பெரியளவில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் அபாயமில்லை," என்று செர்னோபில் பேரழிவின் பின்விளைவுகளை ஆய்வு செய்த போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம் ஸ்மித் விளக்குகிறார். "யுரேனியம், ஓர் அணு உலை அல்லது வெடிகுண்டில் பயன்படுத்தப்படும்போது பிளவுபடும். இதனால் கதிரியக்க சீசியம், ஸ்ட்ரோன்டியம், அயோடின் போன்ற பிளவுப் பொருட்கள் உருவாகின்றன. இந்தப் பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் முக்கியக் காரணிகள். அதனால், இவற்றைப் பற்றியே நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்," என்கிறார் அவர். ஆனால் செறிவூட்டல் தளங்களில் அணுசக்தி எதிர்வினை எதுவும் நடைபெறுவதில்லை. அதனால் ஒரு வெடிகுண்டு வெடித்தாலும் அது எந்த எதிர்வினையையும் தூண்டாது. எனவே, அந்த ஆபத்தான கதிரியக்க "பிளவுப் பொருட்கள்" இருக்காது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெடிப்பு ஏற்படும்போது, யுரேனியம் அந்த இடத்திற்குள் பரவிச் சிதறக்கூடும். அருகில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் டெஹ்ரானில் இருந்து வெளியேறி வருகின்றனர் நடான்ஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு, ஐ.ஏ.இ.ஏ அந்த இடத்தில் கதிரியக்க மாசுபாட்டைக் கண்டுபிடித்தது. ஆனால் வெளியே உள்ள கதிரியக்கத்தின் அளவுகள் மாறாமல் சாதாரண மட்டங்களில் இருப்பதாக ஐ.ஏ.இ.ஏ குறிப்பிட்டது. "யுரேனியத்தின் கதிர்வீச்சு உண்மையில் அதிக தூரம் பயணிக்காது" என்கிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் கனிமவியல் மற்றும் கதிரியக்க கழிவு மேலாண்மைத் துறையின் தலைவர் பேராசிரியர் கிளேர் கார்க்ஹில். ஆனால் அந்த நிலையத்திற்கு அருகில் இருப்பவர்களுக்கு, உடல்நல அபாயங்கள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். "மனித உடலுக்கு ஏற்படும் நச்சுத்தன்மையைப் பொறுத்தவரை, நீங்கள் நிச்சயமாக யுரேனியம் துகள்களைச் சுவாசிப்பதோ, உட்கொள்வதோ நல்லதல்ல," என்று அவர் கூறினார். "ஏனென்றால் யுரேனியம் துகள்கள் நுரையீரல் அல்லது வயிற்றுக்குள் உள்ள செல்களில் தங்கி, மெதுவாக, கதிரியக்கத்தால் சிதைத்து, சேதத்தை ஏற்படுத்தும்." கதிரியக்கத் தன்மையுடன் ஏற்படும் ரசாயன வெளிப்பாடும் அருகில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கலாம். "ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மையவிலக்குகளில் (centrifuges) அடக்கப்பட்டிருந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் (uranium hexafluoride) வாயு வெளியேறினால், அது மிக மோசமான ஒரு ரசாயன விபத்தாக மாறும்," என பாங்கூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணுப் பொருள் வல்லுநரான பேராசிரியர் சைமன் மிடில்பர்க் தெரிவித்தார். "இந்த யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைட் காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் தொடர்புகொண்டால், அது மிகவும் அரிக்கும் தன்மையுடையதாகவும், ஆபத்தானதாகவும் மாறும். ஏனெனில் இது மிக வலிமையான ஓர் அமிலத்தை உருவாக்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். "ஆனால் அது அந்த உள்ளூர் பகுதிக்கு அப்பால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை." தங்கள் அவசர மையம் 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாகவும், இரானின் அணுசக்தி நிலையங்களின் நிலையும், அதன் தளங்களில் உள்ள கதிர்வீச்சு அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyg44glj3xo

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பயன்படுத்துவதற்கு சீமானிற்கு தடை விதிக்ககோரிய மனு மீளப்பெறப்பட்டது

2 months 3 weeks ago
நீங்கள் நிதானமாகவோ மரியாதையாகவோ கருதெழுதுபவர் அல்ல. இங்கு கூட சக மனிதர்களை ஓநாய்கள் என்று எழுதியது நீங்கள் தான். மற்றய பலதிரிகளில் கூட தரக்குறைவான வார்த்தைகளை எழுதியுள்ளீர்கள். தமிழர் அரசியலை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதை எதிர்தது உணர்ச்சி வசப்படுத்தும் அழிவு அரசியலை ஊக்குவிப்போரை அப்படித்தான் அழைக்க முடியும்.

'சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது' - ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்

2 months 3 weeks ago

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நித்யா பாண்டியன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி?

வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள்

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர்.

அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர்.

பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர்.

நான்கு முக்கியக் கோரிக்கைகள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம்

"கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்" என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள்,

  • பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும்

  • விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்

  • கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும்

  • கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும்.

"ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கிறார் ராம்ஜி.

"ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின," என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள்

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி:

  • கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும்.

  • வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

  • திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும்.

இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்" என்று கூறினார்.

'அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது'

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார்.

"தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்," என்று தெரிவித்தார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், "கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம்.

மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்," என்றார்.

இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள்

பட்டியலின மக்கள் சம வழிபாட்டு உரிமை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,RAMJI

படக்குறிப்பு,குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர்.

ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர்.

"அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார் ராம்ஜி.

கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்?

"பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ்.

தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், "இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை," என்றும் குறிப்பிட்டார்.

"பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர்.

ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன," என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpw7g1ee0n2o

'சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது' - ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்

2 months 3 weeks ago
பட மூலாதாரம்,RAMJI கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் நடைபெற்றது. கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி? வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர். பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர். நான்கு முக்கியக் கோரிக்கைகள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம் "கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்" என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள், பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும் விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும் கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும். "ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன," என்று தெரிவிக்கிறார் ராம்ஜி. "ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின," என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார். ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள் இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி: கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும். திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும். இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன், "மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்" என்று கூறினார். 'அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது' பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார். "தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்," என்று தெரிவித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், "கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம். மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்," என்றார். இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார். அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள் பட மூலாதாரம்,RAMJI படக்குறிப்பு,குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர். ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர். "அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று கூறினார் ராம்ஜி. கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்? "பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது," என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ். தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், "இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை," என்றும் குறிப்பிட்டார். "பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர். ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன," என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார். அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpw7g1ee0n2o

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

2 months 3 weeks ago
கிருபன் இந்தியா நாடாளுமன்ற தேர்தல்- தமிழகம் போட்டியிலும் முதலாவது இடத்தை பிடித்திருக்கிறார் போட்டியை நடாத்திய கோஷான், முதல் 3 இடங்களை பெற்ற கிருபன், ஈழப் பிரியன், வாதவூரான் ஆகியோருக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுகள்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
18 ஆண்டு ஏக்கத்தை தீர்க்குமா இந்திய இளம் படை? அணியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் (5 போட்டிகள்) இன்று பிரிட்டனின் ஹெடிங்லியில் லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சகாப்தத்தை தொடங்குகிறது. 25 வயது ஆகிய சுப்மான் கில் 21-ம் நூற்றாண்டு இந்திய அணியின் இளம் கேப்டனாக உருவெடுத்துள்ளார். 18 ஆண்டுகள் வறட்சி 2007- ஆம் ஆண்டு ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றபின் 18 ஆண்டுகளாக பிரிட்டன் மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கிறது. ஆதலால், இந்த முறை இளம் கேப்டன் சுப்மன் கில் மீதும், இளம் வீரர்கள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியில் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் முற்றிலும் இளமையான அதே நேரத்தில் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்திய அணி டெஸ்ட் தொடரை அணுகுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பை இன்று பிரிட்டனில் நடைபெறுகிறது டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று அது மட்டுமல்லாமல் 2025-27-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று இந்த டெஸ்ட் தொடரிலிருந்து தொடங்குவதால் இந்திய அணி வெற்றியுடன் டெஸ்ட் தொடரை முடிக்கவும் தீர்மானமாக இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தையும், இங்கிலாந்து அணி, 22 போட்டிகளில் 11 வெற்றிகளுடன் 5-வது இடத்தையும் பிடித்தன. இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்றும், பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இழந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு டெஸ்ட் தொடர் தோல்விகள் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக மாறின. 23 ஆண்டுகளுக்குப்பின் முதல் டெஸ்ட் போட்டி நடக்கும் ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின் 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணியால் டெஸ்ட் வெற்றியைப் பெற முடியவில்லை. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்களில் இந்திய அணி தோற்றது. ஆதலால், இந்திய அணி இந்த மைதானத்தில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்றால்கூட கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் கழித்து கிடைத்த வெற்றியாகவே வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகவே பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய கிரிக்கெட் அணி (கோப்புப் படம்) கில் தலைமைக்கு பரிசோதனை சுப்மன் கில் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி இதற்கு முன் ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு முதல்முறையாக கில் தலைமை ஏற்றுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் 5 முதல் தரப்போட்டிகளில் கில் கேப்டன்ஷிப் செய்துள்ளார், ரஞ்சிக் கோப்பையில் ஒரு முறை கேப்டன்ஷிப் செய்துள்ளார். ஒருநாள்போட்டி, டி20 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டெஸ்ட் கேப்டன்ஷிப். சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச்சு, பேட்டிங் வியூகத்தை மாற்றி கேப்டன்ஷிப் செய்ய வேண்டும் என்பதால், இது சுப்மன் கில்லுக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்கும். ஐபிஎல் டி20 தொடரில் சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார். சுப்மன் கேப்டன்ஷிப் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி "குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கில் கேப்டன்ஷி செய்யும்போது பார்த்தேன், என்னை அவர் ஈர்த்துவிட்டார். அவரின் அமைதி, வியூகம் அமைக்கும் முதிர்ச்சி, முடிவெடுக்கும் திறன் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது," எனத் தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்த சாய் சுதர்சன், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருப்பது கில்லுக்கு கூடுதல் பலத்தையும், எளிமையாக பணியைச் செய்யவும் வழிவகுக்கும். இவர்கள் தவிர ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர் ஆகியோரும் டெஸ்ட் தொடரில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சுக்கு ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இங்கிலாந்து அணி ப்ளேயிங் லெவனை அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் இன்னும் ப்ளேயிங் லெவன் அறிவிக்கப்படவில்லை. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் அல்லது பிரசித் கிருஷ்ணா - இவர்கள் உத்தேச ப்ளேயிங் லெவனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் டி20 தொடரில் சுப்மான் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன்ஷிப் செய்து ப்ளே ஆஃப் சுற்றுவரை கொண்டு சென்றார் சுப்மான் கில் ப்ளேயிங் லெவன் எப்படி இருக்கும்? ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் அருமையான தொடக்கத்தை அளித்த கேஎல் ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது வீரராக கருண் நாயர், அன்கேப்டு வீரர் சாய் சுதர்சன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், ஐபிஎல் தொடரில் கலக்கலாக ஆடிய சுதர்சன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், 3வது இடம் யாருக்கு என்பது குழப்பமாக இருக்கிறது. விராட் கோலி களமிறங்கும் 4-வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார் என்பதால் அந்த இடம் நிரப்பப்பட்டுவிட்டது. 3-வது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டால், அடுத்ததாக ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் சாய் சுதர்சனா அல்லது ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியா என்ற கேள்வி எழுகிறது. பந்துவீச்சிலும் 5வது பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா அல்லது நிதிஷ் ரெட்டியை தேர்வு செய்வதா என்ற கேள்வியும் எழுகிறது. பிரிட்டன் மண்ணில் பந்தை நன்கு ஸ்விங் செய்யக்கூடியதில் நிதிஷ் ரெட்டியை விட ஷர்துல் தாக்கூர் சிறப்பாக செயல்படுவார். பேட்டிங்கிலும் ஓரளவு நன்றாக செயல்படுவார் என்பதால் 8-வது வீரராக ஷர்துல் தாக்கூர் வரவும் வாய்ப்புள்ளது. சுழற்பந்துவீச்சு வரிசையில் ஜடேஜா தவிர்த்து பேட்டிங்கில் வலுசேர்க்க வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம், இல்லாவிட்டால் குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ் தவிர்த்து பிரசித் கிருஷ்ணா, ராணா ஆகியோரில் ஒருவர் களமிறங்கலாம். பிரிட்டன் பருவநிலைக்கு ஏற்றார்போல் ராணாவை விட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்விங், பவுன்ஸர் இருக்கும் என்பதால், இருவரில் ஒருவர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இதில் இந்திய அணியில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால், அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்புக் கிடைக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வலைப்பயிற்சியில் கருண்நாயர் இவர்கள் இல்லை இந்திய அணி கடைசியாக 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தில் இருந்த விராட் கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா, புஜாரா, ஷமி, ரஹானே, அக்ஸர் படேல், இசாந்த் சர்மா, சூர்யகுமார், விஹாரி, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் இந்த அணியில் இல்லை. 2022-ஆம் ஆண்டு 5வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டன்ஷியில் இந்திய அணி ஆடியது. இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் சதம் விளாசினர். 98 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிம்மசொப்னாக திகழ்ந்தனர். ஆனால், இங்கிலாந்து அணி 378 ரன்களைத் துரத்தியதில் ரூட், பேர்ஸ்டோவின் சதம் வெற்றியைத் தேடித்தந்தது. மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து பிரன்டென் மெக்கலம் பயிற்சியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியிலும் ஆக்ரோஷமான 'பாஸ்பால்' ஆட்டத்தை விளையாடுகிறது. இங்கிலாந்து அணி, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரை அணுகுகிறது. சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். துணைக் கேப்டனாக ஓலே போப் நியமிக்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், போப், ஸ்டோக்ஸ் என வலுவான வரிசை இருக்கிறது. இதில் ஜோ ரூட்டுக்கு மட்டுமே இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. பந்துவீச்சில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஓய்வில் இருந்த கிறிஸ் வோக்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளார், அவர் தவிர்த்து பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங் ஆகிய வேகப்பந்துவீச்சாளரும், ஷோயிப் பஷீர் சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார். இங்கிலாந்து அணியின் நடுவரிசை பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ரூட் ஆகியோர் ஆட்டத்தை எந்தநேரத்திலும் திருப்பக்கூடியவர்கள் என்பதால், இந்திய அணி நடுவரிசை விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் ஹேரி ப்ரூக், ஜேம் ஸ்மித், கார்ஸ், டங் ஆகிய 4 வீரர்கள் முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக களமிறங்குகிறார்கள். இவர்களின் பேட்டிங், பந்துவீச்சு குறித்து இந்திய வீரர்களுக்கும் தெரியாது, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சு குறித்தும் இவர்களுக்கும் தெரியாது என்பதும் சவாலாக இருக்கும். டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டால் நடுவரிசை பேட்டர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துவிடுவார்கள், இதற்கு வாய்ப்பளிக்காமல் இந்திய பந்துவீச்சாளர்கள் செயல்பட வேண்டும். இங்கிலாந்து ப்ளேயிங் லெவன் ஜேக் கிராளே, பென் டக்கெட், ஓலே போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேம் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்க், ஷோயிப் பஷீர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பக்கூடிய பந்துவீச்சாளர், பேட்டர், சிறந்த பீல்டர் என்பதால், இந்தத் தொடர் சவாலாகவே இந்திய அணிக்கு இருக்கும். ஆடுகளம் எப்படி? ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது. பிரிட்டனில் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெயில் நன்றாக இருக்கும் என்பதால், தொடக்கத்தில் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும், அதன்பின் ஓரளவுக்கு பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும். ஆடுகள தலைமை வடிவமைப்பாளர் ராபின்ஸன் அளித்த பேட்டியில் "வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை பேட்டர்கள், பந்துவீச்சாளர்களுக்கு சமமாக இருக்கும் வகையில் மாற்றியிருக்கிறோம். புற்களை அதிகமாக விட்டு வைக்காமல் குறைத்துவிட்டோம். ஆதலால், ஸ்விங், பவுன்ஸ் இருக்கும், பேட்டிங்கும் நன்றாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்க்கலாம். முதல் 3 நாட்கள் வெயில் இருக்கும் என்பதால் முதல் இன்னிங்ஸில் பேட்டர்களுக்கு நன்றாக இருக்கும், ஆனால் கடைசி இரு நாட்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதால், குளிர்ந்த சூழல், காற்றின் வேகம், ஆடுகளத்தின் தன்மை ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது (கோப்புப்படம்) இதுவரை இங்கிலாந்து-இந்தியா இந்திய அணி கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன் 2007-ம் ஆண்டு திராவிட் தலைமையில் டெஸ்ட் தொடரை பிரிட்டன் மண்ணில் வென்றது. அதேபோல ஹெடிங்லி மைதானத்தில் கடைசியாக 2002ல் வென்றது, 23 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் இந்திய அணி வெல்லவில்லை. முதல் போட்டியில் வெற்றியும், டெஸ்ட் தொடர் வெற்றியும் இந்திய அணிக்கு வரலாறாக இருக்கும். இரு அணிகளும் கடந்த 1932ம் ஆண்டிலிருந்து 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 51 வெற்றிகளும், இந்திய அணி 35 வெற்றிகளும் பெற்றுள்ளன, 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2024ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்த போது 4-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்து சென்றது. இந்திய அணியும் கடைசியாக 2021ம் ஆண்டு இங்கிலாந்து பயணம் செய்து 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடக்கத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்து டெஸ்ட் தொடரை வெல்லும் சூழலில் இருந்தது, ஆனால், கொரோனா தொற்று காரணமாக 2022 ஜூலை மாதம் டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வென்று தொடரை சமன் செய்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g8mmr7ln4o