Aggregator

பயந்தாங்கொள்ளி

2 months 3 weeks ago
பயந்தாங்கொள்ளி ---------------------------- புலி ஒன்று ஒரு தடவையில் மூன்று குட்டிகளுக்கு மேல் ஈன்றாலும், அநேகமாக அவைகளில் ஒன்றே ஒன்று மட்டுமே தப்பிப் பிழைக்கும் என்கின்றார்கள். எந்தக் குட்டி தப்பிப் பிழைக்கப் போகின்றது என்பது கூட சில நாட்களிலேயே தெரிந்துவிடும். மூன்று குட்டிகளில் ஒன்று மிகத் துணிவானதாக இருக்கும், இன்னொன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும், மூன்றாவது குட்டி ஒன்று எச்சரிக்கையுடன் இருக்கும். துணிவானதும், எச்சரிக்கையானதுமான இரு குட்டிகளும் சேர்ந்தே இருக்கும். பயந்தாங்கொள்ளி ஒதுங்கிப் பதுங்கி தனியாக இருக்கும். பூனையும் புலியும் ஒரு விலங்காகவே இருந்திருக்கவேண்டும். பரிணாம வழியில் எங்கோ இரண்டு விலங்குகளாக பிரிந்து ஒன்று புலியாகவும், இன்னொன்று பூனையாகவும் மாறிவிட்டன. ஆனாலும் பதுங்கிப் பாய்வதும், 24 மணி நேரத்தில் 20 மணி நேரத்துக்கு நாக்கால் நீவி நீவி சுத்தம் செய்வதும் இரண்டு விலங்கிடமும் அப்படியே இன்னமும் இருக்கின்றது. பூனைக்கும் பொல்லாத கோபம் வருகின்றது. மியாவ் என்னும் வழமையான ஒரு மெல்லிய ஒலியை விட, அது இன்னொரு கடுமையான ஒலியை கோபத்தில் எழுப்புகின்றது. காட்டில் புலி சந்தோசமான தருணங்களில் மியாவ் போல மெலிதான ஒலி ஏதாவது எழுப்புகின்றதா என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து போகும் கறுப்பு வெள்ளை பூனைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக பல வகைச் சாப்பாடுகள் வாங்கி வைத்திருக்கின்றோம். அது ஒரு தெருப்பூனை. அது எங்கே படுக்கின்றது, என்ன செய்கின்றது என்று கூட எங்களுக்கு தெரியாது. சில நாட்களில் அதிகாலையிலே வாசலில் நிற்கும். அதன் உணவைக் கொடுத்தால் சாப்பிடும். பின்னர் போய்விடும். மதியம் வரும், பின்னேரத்திலும் சில நாட்களில் வரும். இன்னும் சில நாட்களில் நன்றாக இருட்டும் வரை வீட்டின் பின்பக்கம் படுத்திருக்கும். இரண்டு வருடங்களின் பின், அதன் வாய் திறந்து மியாவ் என்று சொல்ல ஆரம்பித்தது. நன்றி என்று சொல்வதைப் போல அதன் மியாவ் இருப்பதில்லை. 'நீங்கள் நல்லா இருக்கிறீர்களா..............' என்று கேட்பது போலவே அதன் மியாவ் இருக்கின்றது. சில நாட்களில் ஒன்றும் சொல்லாது. அதன் பிரச்சனை அதற்கு என்று நினைத்துக்கொள்வேன். சேர்ந்தால் போல ஒரு மாதம் வரை வீட்டுப் பக்கம் வராமலும் இருந்துவிடும். அதன் கதை முடிந்து விட்டது போல, இனி இந்த மூட்டை மூட்டையாக கிடக்கும் பூனை உணவுகளை என்ன செய்வது என்று நினைக்க, ஒரு நாள் திடீரென்று வாசலில் வந்து நிற்கும். ஒரு நாள் நான்கு குட்டிகளை கூட்டிக் கொண்டு வந்து, அவைகளுக்கும் உணவு வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும் என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன். ஆனால் இது ஆண் பூனை. ஆண் விலங்குகள் பொதுவாக அவ்வளவு பொறுப்பாக நடப்பது இல்லை. சில விதிவிலக்குகள் இருக்கின்றன, ஆனால் பூனைகளில் இல்லை என்று நினைக்கின்றேன். ஆகவே நான்கு குட்டிகள் என்றும் வீட்டுப் பக்கம் வரப் போவதில்லை என்றே இருந்தேன். பல வருடங்களின் முன் இங்கிருக்கும் ஒரு வார இறுதி திறந்த வெளிச் சந்தையில் ஒரு மாதுளம் கன்று வாங்கி வீட்டில் நட்டோம். அதை ஏசியன் மாதுளை என்று அவர்கள் சொன்னதாலேயே வாங்கினோம். அமெரிக்கன் மாதுளை கடும் சிவப்பு முத்துகள், அத்துடன் பெரும்பாலானவை பல்லைக் கூச வைக்கும் கூர்மையான புளிப்புச் சுவையும் கலந்தவை. பல்லுப் போனால் சொல்லும் போய்விடும் என்பது ஊரில், இங்கே பல்லுடன் சேர்த்து சொத்தும் போய்விடும். சொத்து ஏற்கனவே இல்லாவிட்டால் பல் வைத்தியம் பார்த்த கடன் ஒரு தலைமுறைக்கு நிற்கும். அதனால் எதுக்கு இந்த அமெரிக்கன் மாதுளை என்று அதை நாங்கள் வீட்டில் வைக்கவில்லை. ஏசியன் மாதுளை ஏசியன் மாதுளை தான். ஊரில் இருக்கும் அதே மாதுளம் பழத்தின் இயல்புகள் தான். ஒரே ஒரு வித்தியாசம் மரத்தில் இருந்தது. மாதுளை மரம் ஒரு சின்ன ஆலமரம் போல பெரிதாக வளர்ந்து வந்தது. இங்கு எல்லாமே பெரிதாகவே இருக்கும், அதற்காக மாதுளை மரமுமா ஆல் போல வளர வேண்டும். அது வளர்ந்து பக்கத்து வீடு, பின் வீடு என்று இரு வீடுகளுக்குள்ளும் புகுந்து நின்றது. அந்த மனிதர்கள் அருமையானவர்கள். இதுவரை எதுவும் சொன்னதில்லை. இந்த மாதுளை மரத்தின் கீழே ஒரு சின்ன கொட்டகை இருக்கின்றது. அதை முன்னர் பார்க்கும் போது பெரிய கொட்டகையாகத்தான் இருந்தது. ஆனால் மாதுளை பிரமாண்டமாக வளர்ந்த பின், கொட்டகை சிறியதாக தெரிய ஆரம்பித்தது. ஒரு நாள் காலை அந்தப் பக்கமாக போன பொழுது கொட்டகையின் கூரையில் சில அசைவுகள் தெரிந்தன. என்னுடைய உயரத்துக்கு கொட்டகைக் கூரையின் மேற்பகுதி முழுவதுமாகத் தெரியாது. ஏணி ஒன்றில் ஏறிப் பார்த்தால், அங்கே நான்கு பூனைக் குட்டிகள் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றன. நான்கில் ஒரு குட்டி கறுப்பு வெள்ளை. ஆனால் எங்களின் கறுப்பு வெள்ளை இவ்வளவு பொறுப்பானவர் இல்லையே, இந்த நான்கும் எங்கேயிருந்து இங்கே வந்திருக்கும் என்று யோசனையாக இருந்தது. மண் நிறத்திலான வரிவரிப் பூனை ஒன்றும் வந்து போவதுண்டு. எங்களைக் கண்டவுடனேயே அது தலை தெறிக்க ஓடிவிடும். அது ஒரு பெண் பூனையாக இருக்கலாம். ஆனாலும் அதன் குட்டிகளை கொண்டு வந்து எங்கள் வீட்டில் விடும் அளவிற்கு அது எங்களை நம்புமா என்று தெரியவில்லை. நான்கு குட்டிகளில் இரண்டு வரிவரிப் பூனைக் குட்டிகளே. பூனைக் குட்டிகள் ஏற்கனவே ஓரளவு வளர்ந்திருந்தன. ஆடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. இரவிரவாக நித்திரை குழம்பிக் கொண்டேயிருந்தது. கூரையில் இருந்து அவை கீழே விழுந்து விடுமா, வேறு ஏதாவது விலங்கு ஒன்று வந்து இந்தக் குட்டிகளை பிடித்து விடுமா என்று பலப்பல யோசனைகள் வந்து கொண்டேயிருந்தன. எங்கோயோ பிறந்து இவ்வளவு நாட்களும் மிக ஆரோக்கியமாக ஒரு தாய்ப்பூனையால் மட்டும் வளர்க்கப்பட்ட அந்தக் குட்டிகள் இன்று என் கண்ணில்பட்டதால் என் கற்பனையில் பல ஆபத்துகளின் ஊடாக போய் வந்து கொண்டிருந்தன. காலை பொழுது விடிந்தும் விடியாததுமாக பின்பக்கம் ஓடினேன். ஏணியில் ஏறி எட்டிப் பார்த்தேன். மண் நிற வரிவரி அம்மா அங்கே குட்டிகளுடன் படுத்திருந்தார். என்னை அது நன்றாகப் பார்த்தது. உடனேயே ஏணியில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்துவிட்டேன். பின்னர் அது அங்கே இல்லாத நேரங்களில் நான்கு குட்டிகளையும் நன்றாகப் பார்த்துக்கொண்டேன். எது துணிந்த குட்டி, எது பயந்தாக்கொள்ளி என்று அடையாளம் கண்டுகொண்டேன். பயந்தாங்கொள்ளிக் குட்டிக்கு வெளி உதவிகள் கிடைக்காவிட்டால் அது தப்பிப் பிழைப்பது கஷ்டம் என்று வாசித்தது மனைதில் வந்து கொண்டேயிருந்தது. அடுத்த நாள் காலை அவைகளை பார்த்து விட்டு, மதிய நேரம் மீண்டும் போனேன். மூன்று குட்டிகள் மட்டுமே கூரையில் நின்றன. ஒரு வரிவரிக் குட்டியைக் காணவில்லை. அது தான் பயந்தாங்கொள்ளிக் குட்டி. அய்யய்யோ............ நான் நினைத்தது நடந்து விட்டதோ என்று நன்றாகத் தேடினேன். கொட்டகையின் ஒரு பக்கத்துடன் ஒட்டி இருந்த மாதுளைக் கிளை ஒன்றுக்கு இடையில் அந்தக் குட்டி மாட்டுப்பட்டிருந்தது. கீழேயும் விழாமல், மேலேறி கூரைக்கும் போக முடியாமல் அது கிளைக்கும் கொட்டகை சுவருக்கும் இடையில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் சின்ன அசைவு இருந்தது. அது உயிருடன் தான் இருக்கின்றது என்று தெரிந்தவுடன், வீட்டுக்குள் மீண்டும் ஓடினேன். 'னேய், பூனைக்குட்டி ஒன்று நசிந்து தொங்குது. நீங்கள் ஒருக்கால் வாங்கோ...............' 'அதைப் பிடித்து விடுகிறது தானே................' 'நீங்கள் ஒருக்கால் வாங்கோ............' மனைவி அவசரம் அவசரமாக வந்தார். அங்கே இருந்த ஒரு சின்ன துவாயை எடுத்துக் கொண்டு நான் அவர் பின்னால் அவசரமாக ஓடினேன். நான் இந்த மரக் கொப்பை இழுக்கின்றேன், நீங்கள் குட்டியை கீழு பிடித்து கூரைக்கு தள்ளி விடுங்கள் என்றார். அவர் சொன்னபடியே செய்தேன். குட்டி துள்ளிப் பாய்ந்து கூரைக்கு ஓடியது. போன உயிர் வந்தது. பயந்தாங்கொள்ளிகளுக்கு எப்போதும் ஒரு துணையும் உதவியும் தேவைப்படுகின்றது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
வசியவர்களே நன்றி, யப்பானியர்களது கொடுமையைக் கண்ட உலகு அதையே திருப்பி ஏன் மற்றைய இனங்கள் மீதும்,நாடுகள் மீதும் தொடர்கிறது. எல்லாம் பொருண்மிய நலன். அகதியாக ஈராயிரமாண்டுகள் அலைந்ததாகக் கூறும் இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீனர்களை அகதியாக்கி நாடற்றவராக்கும் செயற்பாடு ஏன் நிகழவேண்டும். ரஸ்யா அச்சத்தில் போரிடவில்லை. அது தற்காப்பு நிலையெடுக்கிறது. ஒன்றாக இருந்து இன்று அயலவராக இருக்கும் உக்ரேன் தனது பகைச்சக்திகளைக் குடியேற்ற முனையத் தாக்குகிறது. இன்னும் சில ஆண்டுகளின் பின் மகிந்த சொல்லியது போல் நாம் மேற்கின் போரை நடாத்தினேன் என ஜெலன்ஸ்கி சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
அமெரிக்கா இந்த‌ப் போரில் நேர‌டியாக‌ த‌லையிடாது போல் தெரிகிற‌து வ‌ரும் செய்திக‌ளை கேட்க்க‌...................இஸ்ரேலின் வான் தாக்குத‌லுக்கு முற்றுப் புள்ளி வைக்க‌ப் ப‌டும்.......................ஈரான் பேச்சு வார்த்தைக்கு போக‌ வில்லை என‌ ஒரு த‌ர‌ப்பு சொல்லுது இன்னொரு த‌ர‌ப்பு வேறு மாதிரி சொல்லுகின‌ம் இதில் எது உண்மையென‌ தெரிய‌ வில்லை..................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ஈரான் பின் கதவு வழியாக பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நடத்துவதாக கூறுகிறார்கள், ஈரானிடம் வான் மேலாதிக்கம் இல்லை, அதனால் ஈரானின் வான் பரப்பிற்குள் தங்கு தடையின்றி இஸ்ரேல் விமானங்கள் நுழைகின்றன, இப்படியான நிலையில் ஈரானால் போரில் வெல்ல முடியாது அதனை மீறி வீம்பிற்கு போரில் தொடர்ந்து ஈடுபட்டால் தேவையற்ற மனித அழிவுகளே ஏற்படும், ஈரான் அணு ஆயுத முயற்சியினை கைவிட்டு சமாதானமாகவே செல்லும் என கருதுகிறேன். ஆனால் இஸ்ரேலால் தொடர்ச்சியாக 3 வாரத்திற்கு மேலாக வான் தாக்குதலில் ஈடுபட முடியாது தற்போது 30% சுழ்ற்சியினை விமானங்களிடையே செய்கிறது அதனை இவ்வாறு தொடரமுடியாது அல்லது அமெரிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும் என கருதுகிறேன்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ர‌ம் இர‌ண்டு வார‌ம் என்று சொல்லி இருக்கிறார் இர‌ண்டு வார‌ம் முடிய‌ இன்னும் சில‌ நாட்க‌ள் எடுக்கும் என்பார் அதுக்கிடையில் இஸ்ரேலில் முக்கிய‌ இட‌ங்க‌ளை ஈரான் ஏவுக‌னைக‌ள் மிசேல்க‌ள் மூல‌ம் அழித்து விடுவின‌ம்..................... ஹாசா ம‌க்க‌ள் விட்ட‌ க‌ண்ணீர் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ இஸ்ரேல‌ சும்மா விடாது😉......................எல்லாரையும் விட‌ பெரிய‌வ‌ர் ஆண்ட‌வ‌ர்🙏🙏🙏............................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
ஜப்பானியர்கள் செய்த பாவமும் கொஞ்ச நஞ்சமல்ல. உலகில் போர்களை நடத்துவதற்கு கூறும் காரனிகளில் அணுகுண்டும் ஒன்று, இரஸ்சியா உக்கிரேன் நேட்டோவில் சேர்ந்தால் தனக்கு பாதுகாப்பில்லை என போரினை நடத்துகிறது அல்லவா? குருவை மிஞ்சிய சிஸ்சியனாகிவிட்டீர்கள், உங்கள் எழுத்துக்களை பார்ப்பதில் சந்தோசம்.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
அனைவருக்கும் நன்றி! உண்மை! ஆனால், மனிதர்களுக்குச் சுடும். அவர்கள் பூனைகள். இன்றுகூட டீ.எல்.எவ் DeutschlandFunk வானொலியில் காலையில் 5:30மணிக்கு இளம் யூத அமைப்பின் தலைவரையும், 15:30க்கு ஈரான் புலம்பெயரமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும் செவ்விகண்டு ஒலிபரப்புகிறார்கள். இந்த ஊடகங்கள் 2009இல் சிங்களம் இன அழிப்பில் ஈடுபட்டபோது, எமது மக்கள் தினம்தோறும் வீதிகளில் நின்று அவலக் குரலெழுப்பியபோது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உலக அமைதியை ஒரு முனையில் வட அத்திலாந்திக் கூட்டாண்மையின் நாட்டாண்மைத்தனம் உரசிப்பார்க்கத் தீப்பற்றிய நிலை. மறுபுறத்தே மிகப்பெரும் இனவழிப்பை இஸ்ரேல் மேற்கொள்வதன் ஊடாக மத்திய கிழக்கைக் கொதிநிலையாக்கியதோடு, அனைத்துலக விதிகளுக்கு முரணாக ஈரான் மீது அத்துமீறிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதற்கு முட்டுக்கொடுப்பதில் அதிதீவிரமாக யேர்மனியும் ஈடுபட்டிருப்பதன்வாயிலாக, அதனது சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஊர்ச் சண்டியர்களின் நினைவுதான் வருகிறது. அதாவது பார்த்ததற்காகச் சண்டைக்குப்போதல். தர்க்கரீதியாக யோசித்தால் அமெரிக்காவும் இஸ்ரேலியர்களும் செய்த, செய்கின்ற அத்துமீறிய அநியாயங்களின் முன் இவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகள் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது. யப்பானியர்களை எலிகளாக எண்ணி அணுகுண்டைப் போட்டழித்த அமெரிக்காவுக்கு ஈரானை அணுகுண்டு செய்யாதே என்று உத்தரவிடும் தார்மீக உரிமை இருக்கிறதா? 90 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு ஈரானைத் தாக்க என்ன அருகதை இருக்கிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியுமா? நிகழ்தகவைக் குறைத்தல் என்பது முதலில் 5000க்கு மேல் அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்காவிலிருந்து தொடங்க வேண்டும். தமது அணுகுண்டுகளை அழித்தொழித்துவிட்டல்லவா ஏனைய நாடுகளைக் கேட்கவும் தாக்கவும் வேண்டும். ஐ.நா. என்று ஒரு நிறுவகம் உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அடாத்தாக ஆபிரிக்க நாடுகளுள் இறங்கும் ஐ.நா. படைகள் இலங்கைத் தீவிலோ அல்லது இஸ்ரேலிலோ இறங்கி இன அழிப்பைத் தடுக்க முனையவில்லை. அமெரிக்கா ஆப்கான் முதல் லிபியா வரை வளர்த்தவிட்ட தீவிரவாதத்தைவிட வேறொருநாடும் செய்துவிட முடியாது. ப.வி. இயக்கத்தைப் பலவீனப்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய பல குழுக்களில் கைமாறிக் கட்டுமீறியதே கமாஸ். " இந்த உலகம் நீதியின் அச்சில் சுழலவில்லை. தார்மீகச் சட்டநெறிகளோ, மக்களின் உரிமைகளோ அல்ல, பொருளாதார வணிக நலன்கள்தான் தற்போதைய உலகப் போக்கைத் தீர்மானிக்கின்றன..." என்ற மேதகு அவர்களின் கூற்று 17 ஆண்டுகளைக் கடந்தும் பொருந்திப் போகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதனை மாற்றியமைக்க முனைந்தவர்களை உலக வல்லாதிக்க சக்திகள் அழித்து வரும் நிலை தொடர்வதால் உலகம் தொடர்ந்தும் நசிந்தழிகிறது. ஆனால், பல சர்வாதிகாரிகளை இந்த உலகம் கடந்து நிமிர்வதும் நடந்துள்ளது. இனியும் நடக்கும் என நம்புவோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

2 months 3 weeks ago
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை கைது என்று செய்தி சொல்கின்றது ஆனால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்காக கடை நடத்திய பரிசு போட்டியில் கார் ஒன்றை பரிசாக பெற்று கொண்ட அதிஷ்டசாலி போன்று அவா மகிழ்சியாக இருக்கின்றா 🙄

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

2 months 3 weeks ago
அவலை நினைத்து உரலை இடிப்பது என்ன பானை கிளாஸ் எல்லாம் இடித்து உடைக்கலாம் எனெனில் நாங்கள் பாதுகாப்பான மேற்குலக நாடுகளில் பவுத்திரமாக இருக்கின்றோம்

13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

2 months 3 weeks ago
பாக்கிஸ்தான் ம‌க‌ளிர் அரை இறுதி போட்டிக்கு தெரிவாவ‌து ப‌க‌ல் க‌ன‌வு😁😛 அவுஸ்ரேலியா இங்லாந் இந்தியா நியுசிலாந் இந்த‌ 4அணிக‌ள் சிமி பின‌லுக்கு போவின‌ம் , மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் ஆர‌ம சுற்றுட‌ன் வெளிய‌..................தென் ஆபிரிக்கா ம‌க‌ளிரும் ந‌ல்லா விளையாடுகின‌ம் , பாப்போம் போட்டி முடிவில்.....................................

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்

2 months 3 weeks ago
போட்டி ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும்...................காலி மைதான‌த்தில் டெஸ்ட் போட்டி ப‌ல‌ வ‌ருட‌மாய் ச‌ம‌ நிலையில் முடிந்த‌து கிடையாது 5வ‌து நாள் பிச் மாறு ப‌ட்டால் விக்கேட் விழ‌க் கூடும் இல்லையேன் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.......................