Aggregator
மரப்பாவம்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!
17 Dec, 2025 | 10:54 AM
![]()
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
எழுவைதீவு ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார்.
அத்தோடு அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில் சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு
மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு
மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு

நிதர்ஷன் வினோத்
மண்டைதீவு புதைகுழி வழக்கு அறிக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், செவ்வாய்க்கிழமை (16) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்,மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதாக திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16) அன்று குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பான கிடைக்க பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
கையால் எழுதிய குறித்த அறிக்கையையாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து (17.12.2025) அன்று மீண்டும் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால்,
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன் திருநாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரின் பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளை சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் பல வருடங்கள் கடந்த விஷயம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியமையால் வழக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதியான இன்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!
புதிய இணைப்பு
கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்கு செல்லவிருந்த விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அதன் விமானி சாமர்த்தியமாக கையாண்டுள்ளார்.
பயணத்தை தொடங்கிய சிறு பொழுதுகளிலேயே, விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்கும் அமைப்பில் (Landing Gear) சிக்கல் ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்துள்ளார்.
அதன் பின்னர், விமானத்தைத் தொடர்ந்து இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த விமானி, உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரியுள்ளார்.
இருப்பினும், முழுப் பயணத்திற்கும் தேவையான எரிபொருளுடன் இருந்த விமானம், அதன் அதிகப்படியான எடையுடன் தரையிறங்குவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் உடனடியாகத் தரையிறக்க முடியாமல் போயுள்ளது.

அதனை தொடர்ந்து, விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக சாமர்த்தியமாக செயற்பட்ட விமானி, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானத்தை வட்ட பாதையில் செயற்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக நடுவானிலேயே பெருமளவு எரிபொருள் கடலில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் முழு அவசரக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, எடையைக் குறைத்துக்கொண்ட அந்த விமானம் நள்ளிரவில் மிகவும் லாவகமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் விமானம் தரையிறங்கியுள்ளது.
ஆபத்தான நேரத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் இவ்விடத்தில் பாராட்டத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதிகாலை 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதலாம் இணைப்பு
துருக்கிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விமானம், தரையிறங்கும் கியரில் செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்கத் தயாராக உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்தான்புல்லுக்குச் செல்லவிருந்த TK 733 விமானம், 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களை ஏற்றி கொண்டு கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் தரையிறங்கும் கியரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார்நிலையில்
இதனை தொடர்ந்து, தரையிறங்கும் போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க விமானி கடலுக்கு மேலே ஒரு முன்னெச்சரிக்கை எரிபொருள் நிரப்புதலை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பிலான அறிக்கை வெளியான நேரத்தில், விமானம் சிலாபம் பகுதிக்கு மேலே சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.
மேலும், விமானம் இன்று நள்ளிரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுக்கள் ஓடுபாதையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை கா...பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கன்னியா வெந்நீரூற்றும் அழிந்து போகும் நாமும்..!
கன்னியா வெந்நீரூற்றும் அழிந்து போகும் நாமும்..!
கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
எனது தாய் தந்தை அவர்களின் தாய் தந்தை அதற்கு முன் இருந்தவர்கள் என இந்த இடம் முழுமையாக சைவர்களின் வழிப்பாட்டுத் தலங்களால் நிறைந்து இருந்தது.
நாம் சிறுவயதில் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோவில் பூசைகளில் கலந்துகொள்வோம்.
இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் இருந்தது.
180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலும் அங்குள்ளது. அந்த கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமானது. குறித்த உரிமையாளர் தனது ஏக்கர் கணக்கான காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார்.
யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குடனும் பெளத்த மயப்படுத்தும் நோக்குடனும் இருந்த பெளத்த பேரினவாதம் முழுமையாக சிங்களவர்களை கொண்ட தொல்பொருள் எனும் பித்தலாட்டத்தின் மூலம் வரலாறுகளை புதிதாக உருவாக்கி தமிழர் காலாகாலமாக இருந்த இடங்களை வழிப்பாட்டுத்தலங்களை கொள்ளையடித்தது.
அதில் திருகோணமலை தழிழர்கள் இழந்த அரிய சொத்து எமது வெந்நீர் ஊற்று. அங்கிருந்த சிவன் கோவிலும் பூட்டப்பட்டது. பிள்ளையார் கோவில் கட்ட வாசலுக்கு ஒரு சிறிய இடம் மட்டுமே வழங்கப்பட்டது அதுவும் செய்ய தடைகள் வந்தது.
பிதிர்கடன் செய்ய வருபவர்களுக்கு அதற்கு முன் பல அனுமதிகள் எடுக்க வேண்டியிருக்கின்றது.
இராணவன் வரலாற்றுப் பதாகை உடைக்கப்பட்டு, புது அனுராதபுர வரலாறு எழுதப்பட்டது.
இராணுவத்தினர் அங்கு இருந்தனர்.
விகாரை உருவானது. முழு நேரம் ஒலி பெருக்கியில் பண ஓதப்படுகிறது.
உப்புவெளி பிரதேச சபையிடம் இருந்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டது.
வருமானமும் அங்கு செல்கிறது.
மொத்தமாக சிதைக்கப்பட்ட ஒரு வரலாற்றை நாம் கண் முன் காண்கிறோம்.
ஒவ்வொரு திருகோணமலைத் தமிழனும் இதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்கின்றனர்.
தொல்பொருள்த் திணைக்களம் மூலம் எல்லாளன் கால கோவில்களைத் தேடுவார்களா? அல்லது ராஜராஜ சோளன் கால கோவிலைகளைத் தேடுவார்களா?
இவர்களது நோக்கம் ஒரு பொழுதும் தொல்பொருளைத் தேடுவதல்ல மாறாக இனவழிப்பை நடத்துவதே.
அதனால் தான் விகாரைகள் புத்தர் சிலை தொடர்பில் ஏனையோர் ஆவது அவதானமாக இருங்கள். திருகோணமலை போல் ஆகி விடாதீர்கள்.
https://www.facebook.com/share/p/1AMkhjKGR6/
Rajkumar.Rajeevkanth.