Aggregator
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டதால் இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்கள் தூதரகத்திலிருந்து தொடர்புடைய ஆவணங்களைப் பெற்ற பிறகு எகிப்திய எல்லை வழியாக வௌியேறலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் முன்னர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இருப்பினும், நேற்று எகிப்திய எல்லையைக் கடந்து கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவருக்கு இஸ்ரேலிய விசா இல்லாத காரணத்தினால், எகிப்திய அதிகாரிகளால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர், இது தொடர்பில் எகிப்துக்கான இலங்கைத் தூதுவருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, எகிப்திய எல்லை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள முடிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
அவசரநிலையில் கூட, செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசா இல்லாத அல்லது காலாவதியான விசா ஊடாக வெளிநாட்டினர் எகிப்துக்குள் நுழைய முடியாது என்றும், இவ்வாறு பயணிக்க முயற்சிப்பது நீண்ட விசாரணைகளுக்கும், கைதுக்கும் கூட வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலிய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இஸ்ரேலிய விசாக்கள் இல்லாத அல்லது விசாக்கள் காலாவதியான இலங்கையர்கள் எகிப்து வழியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட மாட்டார்கள், மேலும் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்கள் இல்லாதவர்கள் இலங்கைக்கு புறப்பட டெல் அவிவ் சர்வதேச விமான நிலையம் திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை திரும்புவதற்காக மேலும் இரு இலங்கையர்கள் நேற்று (20) ஆவணங்களைப் பெறுவதற்காக தூதரகத்திற்கு வந்ததாக தூதுவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நேற்று இரவும் இன்று அதிகாலையும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யாழ். பல்கலையில் போதைப் பாவனை இல்லை; போதை ஒழிப்பு RTI இல் வெளிவந்த உண்மை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சீ.வி. விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் முக்கிய சந்திப்பு : ஒப்பந்தம் கைச்சாத்து
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை - பங்களாதேஷ் கிரிக்கெட் தொடர்
'சன் பங்குகளை அபகரித்தார்': கலாநிதிக்கு தயாநிதி வக்கீல் நோட்டீஸ் - சன் குழுமத்தில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
பதவி, பிபிசி தமிழ்
20 ஜூன் 2025
புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்
சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேருக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று தயாநிதி மாறன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சட்டவிரோத பங்கு பரிமாற்றம் மூலம் சன் நெட்வொர்க்கின் சொத்துகளை கலாநிதி மாறன் அபகரித்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதில், "கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. இதனால் இந்த இரு குடும்பங்களும் தலா 50 சதவிகித பங்குகளை வைத்திருந்தன" எனக் கூறியுள்ளார்.
"தயாநிதி மாறனின் தந்தை எஸ்.என்.மாறன் என்ற முரசொலி மாறனுக்கு 47,500 பங்குகளும் மல்லிகா மாறனுக்கு 9 ஆயிரம் பங்குகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே மல்லிகா மாறனிடம் ஆயிரம் பங்குகள் இருந்ததால், இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பங்குகளாக இருந்தன" எனக் கூறியுள்ளார் தயாநிதி மாறன்.
இந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பின்னர் சன் டிவி லிமிடெட்டாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நோட்டீஸில் என்ன உள்ளது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
"கடந்த 2002ஆம் ஆண்டு பங்குதாரர்களுக்கும் முரசொலி மாறன் மற்றும் மல்லிகா மாறனுக்கும் போனஸ் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முரசொலி மாறனின் கணக்கில் 95 ஆயிரம் பங்குகளும் மல்லிகா மாறனின் கணக்கில் 20 ஆயிரம் பங்குகளும் சேர்ந்தன" எனவும் தயாநிதி மாறன் கூறுகிறார்.
தொடக்கத்தில் இருந்து 2003 செப்டம்பர் 15 வரை சன் நெட்வொர்க் நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஊழியராக கலாநிதி மாறன் இருந்ததாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்த நிறுவனங்களில் எந்தவித பங்கும் அவருக்கு இல்லை. ஆரோக்கியத்துடன் முரசொலி மாறன் இருந்தபோது கலாநிதிக்கு எந்தப் பங்குகளையும் அவர் அளிக்கவில்லை" என்கிறார்.
கடந்த 2002ஆம் ஆண்டில் முரசொலி மாறனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்ததால், கோமா நிலைக்குச் சென்றதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "2002 நவம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
இதன் பிறகு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட முரசொலி மாறன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.
தந்தையின் உடல்நிலை மோசமான நேரத்தில் குடும்பமே அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, "தனிப்பட்ட நலனுக்காக முழு சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் தனது சதித் திட்டத்தை கலாநிதி மாறன் செயல்படுத்தினார்" என தயாநிதி மாறன் நோட்டீஸில் விமர்சித்துள்ளார்.
தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
சன் நெட்வொர்க் குழுமத்தின் 12 லட்சம் பங்குகளை கருணாநிதி குடும்பம் உள்பட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறாமல் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கின் பங்கு மதிப்பு தோராயமாக 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அப்படி இருக்கும்போது, 10 ரூபாய் மதிப்பில் பங்குகளை மாற்றியுள்ளார்.
கடந்த 2003, மார்ச் 31ஆம் தேதியன்று நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரித் தொகையாக 253 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருந்தது. 15.9.2003 வரை நிறுவனத்தின் ஒரு பங்குகூட கலாநிதி மாறனிடம் இல்லை. ஆனால், ஒரே நேரத்தில் பெரும்பான்மையான பங்குதாரராக மாறினார்.
முரசொலி மாறன் 2003 நவம்பர் 23 அன்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டு நவம்பர் 28 அன்று அவரது இறப்பு பதிவு செய்யப்பட்டது. அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை.
பல்வேறு நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கிய சொத்து, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 8வது பிரிவின்படி தாய் சண்முகசுந்தரம், மல்லிகா மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மகள் அன்புக்கரசி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படவில்லை.
கருணாநிதி கேட்ட கேள்வி
முரசொலி மாறனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு (2003 நவம்பர் 24) அன்று, "சொத்து மற்றும் தொழில்களைப் பிரிப்பது தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?" எனத் தன்னிடம் கருணாநிதி கேட்டதாக தயாநிதி மாறன் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு "தந்தையைப் போலவே குடும்பத்துக்கு நன்மை தரக்கூடிய செயல்களை கலாநிதி மாறன் செய்வார்" எனத் தான் கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளதோடு, "ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது திட்டத்தை அவர் செயல்படுத்தினார்" எனவும் கூறியுள்ளார்.
நம்பிக்கையை மீறுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், குற்றவியல் சதி ஆகியவற்றை இது தெளிவாக உணர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406, 409, 463, 465, 467, 468, 471 மற்றும் 120பி (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இவை தண்டனைக்குரியது" என்று தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
சன் குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களை 15.9.2003 அன்று இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் "பங்குகளை உரிமையாளர்களான மு.க.தயாளு மற்றும் முரசொலி மாறனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் குறித்து சன் குழுமம் கூறுவது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சன் குழுமம் முழுமையாக மறுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நிறுவனத்தின் செயலாளர் ரவி ராமமூர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சன் நெட்வொர்க் உரிமையாளருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் இடையில் நடக்கும் விவகாரம் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது குற்றம் சுமத்தப்படும் விஷயங்கள், 22 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை, அவதூறானவை என்றும் சட்டப்படி எந்த உண்மையும் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள சன் நெட்வொர்க் குழுமம், "இடைத்தரகர்களால் அவை சரிபார்க்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளது.
"கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், வணிகம் அல்லது அதன் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உரிமையாளரின் குடும்ப விவகாரங்களில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" எனவும் சன் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
"பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் எந்தவித குழப்பத்தையும் அடையக்கூடாது" என்பதற்காக சன் குழுமம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால், வழக்கறிஞர் நோட்டீஸ் தொடர்பான எந்த விவரங்களையும் கடிதத்தில் சன் குழுமம் குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக, தயாநிதி மாறனின் வழக்கறிஞர் சுரேஷை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. "இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.
சன் குழுமம் உருவான கதை
பட மூலாதாரம்,GETTY IMAGES
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம், 1985 டிசம்பர் 12ஆம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது.
கடந்த 1989ஆம் ஆண்டில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பை கலாநிதி மாறன் கவனித்து வந்தார். 1990ஆம் ஆண்டில் 'பூமாலை' என்ற பெயரில் மாதம் இருமுறை வீடியோ கேசட் ஒன்றை அவர் வெளியிட்டு வந்தார்.
செய்திகளை பின்னணிக் குரலுடன் அதற்கான படங்களைக் காட்சிப்படுத்தி வீடியோவாக உருவாக்கி வெளியிட்டனர். பிறகு 'சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்', 'சன் டிவி லிமிடெட்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் பின்னணியில் முரசொலி மாறனும் கலாநிதி மாறனும் இருந்தனர். இதில் தயாளு அம்மாவும் பங்குதாரராக இருந்தார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சன் தொலைக்காட்சி உருவான காலத்தில் தூர்தர்ஷன் தவிர வேறு தொலைக்காட்சிகள் இல்லாததால் அது பிரபலமடையத் தொடங்கியது. அப்போது 'தமிழ் மாலை' என்ற பெயரில் மூன்று மணிநேரம் மட்டும் ஒளிபரப்பு நடத்தப்பட்டது.
பிறகு கேபிள் தொழிலிலும் கலாநிதி மாறன் இறங்கினார். சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கேபிள் தொழிலை நடத்தி வருகிறார்.
சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் இருந்து 2007 வரையில் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செயல்பட்டது. சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 'தினகரன்' நாளேட்டில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியை மையப்படுத்தி கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது.
இதனால் அழகிரி தரப்பினர் கோபம் அடையவே, மதுரை தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களை கருணாநிதி விலக்கி வைத்தார்.
அண்ணா சாலையில் இருந்த சன் தொலைக்காட்சி அலுவலகம், அடையாறுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் தொலைக்காட்சி உருவானது.
'இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது?' என அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, "சன் டிவியில் என் மனைவி தயாளு அம்மாள் வசமிருந்த 20 சதவிகித பங்குகளை முழுமையாக விட்டுக் கொடுத்ததால் 100 கோடி ரூபாய் கிடைத்தது" எனக் கூறியிருந்தார்.
தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை சன் குழுமம் நடத்தி வருகிறது.
அந்த வகையில், சன் டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா, கே டிவி, ஜெமினி டிவி, சன் லைஃப், சுட்டி டிவி, ஜெமினி மூவிஸ் டிவி, ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி லைஃப், உதயா டிவி, சூர்யா டிவி, சூர்யா மூவிஸ், சூர்யா காமெடி, சூர்யா மியூசிக், கொச்சு டிவி, சன் பங்களா, சன் மராத்தி என இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது.
மாறன் குடும்பத்தின் பின்னணி
பட மூலாதாரம்,GETTY IMAGES
முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் இருந்தனர்.
சண்முக சுந்தரத்தம்மாள் என அழைக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகிய மகன்களும் பெரிய நாயகத்துக்கு அமிர்தம் என்ற மகனும் இருந்தனர்.
முரசொலி மாறனின் இயற்பெயரான தியாகராஜ சுந்தரம் என்பதை நெடுமாறன் என கருணாநிதி மாற்றினார். ஆனால், இந்தப் பெயரில் இருவர் இருந்ததால், முரசொலி நாளேட்டின் பெயரையும் சேர்த்து முரசொலி மாறன் என்று அவர் வைத்துக் கொண்டார்.
இவருக்கு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என இரு மகன்களும், அன்புக்கரசி என்ற மகளும் உள்ளனர். வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்த கலாநிதி மாறன், தொடக்கத்தில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்துள்ளார். இவருக்கு காவேரி என்ற மனைவியும் காவ்யா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று முரசொலி மாறன் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குள் தயாநிதி மாறன் வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2004ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004 மே முதல் 2007 மே 13 வரை இந்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார்.
கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மோதல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது" என்று பதில் அளித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், இந்திய ஜவுளித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தவர், 2ஜி விவகாரம் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'சன் பங்குகளை அபகரித்தார்': கலாநிதிக்கு தயாநிதி வக்கீல் நோட்டீஸ் - சன் குழுமத்தில் என்ன நடக்கிறது?
இலங்கையின் புதிய மனித புதைகுழி தமிழர்களின் பழைய காயங்களை கிளறுகின்றது - அல்ஜசீரா
இலங்கையின் புதிய மனித புதைகுழி தமிழர்களின் பழைய காயங்களை கிளறுகின்றது - அல்ஜசீரா
Published By: RAJEEBAN
18 JUN, 2025 | 12:23 PM
இலங்கையின் வடபகுதியின் தலைநகரமான யாழ்ப்பாணத்தில் மிகவும் மும்முரமான வீதியிலிருந்து 100 மீற்றர் தொலைவில் இரண்டு பொலிஸார் சுடலையின் இரண்டு துருப்பிடித்துப்போன நிறத்தில் உள்ள கேட்களின் பின்னால் நின்று அவதானித்தவண்ணமுள்ளனர்.
இலங்கையில் மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு பாதுகாப்பளிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த புதைகுழியிலிருந்து இதுவரை 3 குழந்தைகள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பாரிய மனித புதைகுழிகள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இலங்கை தமிழர்களின் காயங்களை மீள கிளறியுள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களிற்கு தனிநாடு கோரிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் இடையிலான 26 வருட யுத்தம் காரணமாக தமிழ்மக்கள் துயரங்களை அனுபவித்தனர்.
அரசாங்கம் பலரை பலவந்தமாக காணாமலாக்கியது, 2017 இல் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கை 1980களின் பின்னர் இலங்கையில் 60,000 முதல் 100,000 வரையிலானவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தது.
2009 இல் முடிவிற்கு வந்த யுத்தத்தின் இறுதிகாலப்பகுதியில் 170,000 கொல்லப்பட்டனர் என தமிழ் சமூகம் குற்றம்சாட்டுகின்றது. ஐக்கியநாடுகள் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
1996ம் ஆண்டு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இலங்கை இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது முதல் கடந்த 25 வருடங்களாக செம்மணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்;துள்ளது. அவரது தாயார், சகோதரர், குடும்ப நண்பர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் செம்மணியில் 1996 இல் மீட்கப்பட்டன.
கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு கொலையில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச, 1998 விசாரணையின் போது செம்மணி புதைகுழியில் 300 முதல் 400 பேரை புதைத்ததாக தெரிவித்திருந்தார். அவர் வழங்கிய தகவல்களை தொடர்ந்து அடுத்த வருடம் 15 உடல்கள் மீட்கப்பட்டன, இதில் இருவர் 1996 இல் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் என அடையாளம்காணப்பட்டனர்.
புதிய புதைகுழியின் கண்டுபிடிப்பு நீதிக்கான தேடலில் தமிழ் சமூகத்தினை தொடர்ந்து காயப்படுத்தி வரும் ஒரு பழைய கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
கடந்த கால விசாரணைகள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் யுத்தகால கொலைகள் குறித்த கேள்விகளிற்கு விடைகளை வழங்கவில்லை, அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்தாதது இதற்கான ஒரு ஒரு காரணம் என்கின்றனர் தொல்லியல் நிபுணர்கள்.
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி போன்றவற்றால் இவற்றிற்கு விடையை வழங்க முடியுமா?
பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்
செம்மணியில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை பெப்ரவரி மாதம் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. மே மாத நடுப்பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின
மீட்கப்பட்ட 19 உடல்களில் 3 உடல்கள் பிறந்த குழந்தைகளுடையவை அல்லது பத்துமாதத்திற்கு உட்பட குழந்தைகளுடையவை என அல்ஜசீராவிற்கு தெரிவித்தார் மனித புதைகுழிஅகழ்வுகளிற்கு தலைமைதாங்கும் தொல்லியல் நிபுணர் ராஜ்சோமதேவ.
உடல்களை இறுதியில் மருத்துவர்கள் பகுப்பாய்வு செய்து அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள் என தெரிவித்த அவர் உடல்கள் புதைக்கப்பட்ட திகதியை கண்டறிவதற்காக ஆடைகள் அல்லது செல்லோபோன் உறைகள் போன்றவற்றை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
மனித உடல்களுடன் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்றால் கதிரியக்க காலமதிப்பீட்டு முறையை பயன்படுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம் என அல்ஜசீராவிற்கு தெரிவித்த அவர் செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள்மூலம் இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறினை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.
நான் இடைக்கால அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளேன்,இந்த புதைகுழிகளை பாரிய மனித புதைகுழிகள் என கருதலாம் என தெரிவித்துள்ளேன்,மேலதிக விசாரணைகள் தேவை என தெரிவித்துள்ளேன் என ராஜ்சோமதேவ தெரிவித்தார்.
நான் காணாமல்போன தங்கள் அன்புக்குரியவர்களை தேடும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 600 பேருடன்இணைந்து பணியாற்றுகின்றேன் இவர்களில் அதிகளவானவர்கள் 1996ம் ஆண்டிற்கும் 2008ம் ஆண்டிற்கும் இடையில் காணாமல்போனவர்கள் என காணாமல்போனவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா அல் ஜசீராவிற்கு தெரிவித்தார்.
இவர்களில் பலர் 1995 இல் யாழ்ப்பாணத்திலிருந்து இடமபெயர்ந்தவர்கள்,நாட்டின் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தின் தலைநகர்.
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உடல்களை தோண்டும் நடவடிக்கைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றனர் என தெரிவித்த அவர் அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என விரும்புகின்றனர் என தெரிவித்தார்.
மனித புதைகுழிகளை அகழும் முன்னைய நடவடிக்கைகள் மூலம் முடிவுகள் எதுவும் வெளியாகாத நிலையிலேயே இம்முறை உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அந்த பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொலிஸாருக்கு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் உதவுகின்றனர்.
தோல்வியில் முடிவடைந்த விசாரணைகளின் வரலாறு.
இதேவேளை செம்மணி மனித புதைகுழியிலிருந்து என்ன நடந்தது என்பதற்கான துப்புகளை கண்டுபிடிப்பதற்கு அகழ்வில் ஈடுபட்டிருப்பவர்களிற்கு உதவுவதற்கு தமிழ் சமூகம் கொண்டுள்ள விருப்பம்,கடந்த கால அனுபவங்களால் பாதிக்கப்படுகின்றது.
இலங்கையில் சமீபத்தில் ஏனைய மனித புதைகுழிகள் தோண்டப்பட்ட போதிலும் அவை அர்த்தமுள்ள பதில்களுக்கு வழிவகுக்க தவறிவிட்டன.மூடிமறைக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
மன்னார் கொக்குதொடுவாய் ,திருக்கேதீஸ்வரம் .மனித புதைகுழிகளிற்கு நிகழ்ந்தது செம்மணி மனித புதைகுழிக்கும் நடக்கலாம் என அச்சம் கொண்டுள்ளதாக பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராஜா கனகரஞ்சனி தெரிவித்தார்.
'இதனையும் ஏனைய மனித புதைகுழிகள் போல அவர்கள் எந்த பதிலையும் நீதியையும் வழங்காமல் மூடிமறைக்கலாம்," என அவர் தெரிவித்தார். இவரின் மகன் அமலன் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர், 2009 இல் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனார்.' கொலைகாரர்களை நீதி வழங்குமாறு கேட்டால் அவர்கள் நீதி வழங்குவார்களா"?
மிகப்பெரிய மனித புதைகுழி அகழ்வு வடமேற்கு மன்னாரிலேயே இடம்பெற்றது. 2018 இல் இது ஆரம்பமானது. சோமதேவாவே இதனை தோண்டும் நடவடிக்கைகளிற்கு தலைமைதாங்கினார். 346 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன, நீதியமைச்சும் காணாமல்போனோர் அலுவலகமும் இந்த மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தன.
எனினும் சோமாதேவ மன்னார் புதைகுழி விடயத்தை அரசாங்கம் கையாளும் விதத்தினை கண்டித்தார்.
மூன்று வருடத்திற்கு முன்னர் நான் நான் ஆரம்ப கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் கடந்த வாரமே உடல்களை தோண்டியவேளை மீட்கப்பட்ட பொருட்களை கையளித்தார்கள் என குறிப்பிட்டார்.
அவற்றை ஆராய்வதற்கான நிதியை அரசாங்கம் இன்னமும் ஒதுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலைகளில் பணியாற்ற முடியாது எவரும் பொறுப்பேற்பதில்லை, காணாமல்போனோர் அலுவலகம் ஒரு வெள்ளை யானை என ராஜ்சோமதேவ தெரிவித்தார்.
செம்மணி புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோர் அலுவலகம் ஒரு பார்வையாளராகவே இணைந்துகொண்டுள்ளது என தெரிவித்த அதன் பிரதிநிதி, மன்னார் புதைகுழி அகழ்வில் அது நீதியமைச்சுடன் இணைந்து செயற்பட்டது என குறிப்பிட்டார்.
வழங்கப்படவேண்டிய கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்த அவர் முறைப்படியான முறைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
2024 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுப்பதற்கு போதுமான நிதி மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் இல்லை என்பது கவலை அளிக்கிறது மேலும் இது தொடர்பாக சர்வதேச ஆதரவைப் பெற அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது" என்று கூறியது.
கடந்தகாலத்தில் மனித புதைகுழி அகழ்வின் போது காணப்பட்ட குறைபாடுகள் பலவீனங்கள் செம்மணியிலும் காணப்படுகின்றன என தெரிவித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த அடையாளம் கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையம், சர்வதேச நிபுணத்துவமோ மேற்பார்வையோ இல்லாமல் செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டது.
மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை வெளிப்படையாக நேர்மையாக நடைபெறுகின்றது என தமிழ் சமூகமும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களும் கருதவேண்டும் என அரசாங்கம் விரும்பினால், முதலில் போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாங்கம் தெளிவான மற்றும் விரிவான மனித புதைகுழிகளை தோண்டும் கொள்கையை பின்பற்றவேண்டும், சர்வதேச பங்களிப்பிற்கு அனுமதி வழங்கவேண்டும், சர்வதேச நிபுணத்துவத்தை நாடவேண்டும், மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளில் காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் பங்கெடுப்பதற்கும், சட்டபூர்வ பிரதிநிதித்துவத்தை பெறவும் அனுமதிக்கவேண்டும் என அடையாளத்தின் பிரதிநிதியொருவர் அல்ஜசீராவிற்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக செப்டம்பரில் அனுரகுமார திசநாயக்க தெரிவு செய்யப்பட்டமை அவர் நீதிக்கு ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஆனால் இதுவரை அவர் அந்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதத்தில் இடம்பெறவில்லை என கனகரஞ்சினி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகின்றது. இதுவரை அவர் எங்களின் பிரச்சினைகளை சிறிதளவும் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்த அவர் ஆட்சியாளர் மாறியுள்ளார் ஆனால் யதார்த்தம் நீடிக்கின்றது என்றார்.