Aggregator
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?

பட மூலாதாரம், TVK
படக்குறிப்பு, கரூர் சம்பவம் குறித்து விஜய் காணொளி ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
கட்டுரை தகவல்
சேவியர் செல்வகுமார்
பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் பலருடைய குடும்பத்தினரிடம் வீடியோ காலில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தங்களிடம் வீடியோ காலில் விஜய் பேசியபோது, இறந்தவர்களின் படங்களைப் பார்த்து கலங்கி கண்ணீர் விட்டதாகவும், ''உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்'' என்று கூறியதாகவும் பலர், பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
குழந்தையை இழந்தவர்களிடம் பேசும்போது, ''குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே'' என்றும் விஜய் சொன்னதாக சிலர் கூறினர்.
கரூரில் வேலுசாமிபுரம் என்ற பகுதியில், கடந்த செப்டெம்பர் 27 ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்த அன்றிரவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூருக்கு நேரில் சென்று, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கரூருக்கு சென்று சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்தனர். சம்பவ இடத்திலும் சென்று பார்வையிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
கட்சி நிர்வாகிகளின் போனில் வீடியோ கால் பேசிய விஜய்
ஆனால், தவெக தலைவர் விஜய் இதுவரை அங்கு செல்லவில்லை. அன்றிரவு அவர் சென்னை திரும்பும்போது, திருச்சி விமான நிலையத்தில் அவரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
மறுநாள் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவும், அதன்பின் மூன்று தினங்கள் கழித்து காணொளியும் வெளியிட்ட விஜய், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சரையும் விமர்சித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு ஒன்றில், "கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக கட்சியினர் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர். கட்சி சார்பில் எந்த வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த செயலை நீதிமன்றம் கண்டிக்கிறது" என நீதிமன்றம் கூறியிருந்தது.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், "பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து விஜய் விரைவில் சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் அனுமதி கேட்க இருக்கிறோம். அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை" என்றார்.
இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மதியழகன், தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் விஜய் அங்கு வராதது குறித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
அதேபோன்று சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், கடந்த 2 நாட்களாக விஜய் வீடியோ காலில் பேசி வருவது தெரியவந்துள்ளது. விஜய் வீடியோ காலில் பேசிய சிலருடன் பிபிசி தமிழ் பேசியது.

படக்குறிப்பு, ஹேமலதா, மகள்கள் சாய் லெட்சணா, சாய்ஜீவா
'என் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்களுடன் ஒரு படமெடுக்க வேண்டும்'
இந்த சம்பவத்தில் தனது குடும்பத்தில் 3 பேரை இழந்து நிற்கிறார், ஆனந்த்ஜோதி. இவருடைய மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லெட்சணா, சாய்ஜீவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
ஆனந்த்ஜோதியிடம் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆனந்த்ஜோதி, ''கட்சி நிர்வாகிகள் வந்து அவர்களுடைய போனில் வீடியோ காலில் விஜய் பேசுவதாகக் கொடுத்தனர். அவர் என்னிடம் 2, 3 நிமிடங்கள் பேசியிருப்பார்.'' என்றார்.
''உங்க குடும்பத்தில் ஒருவனாக உங்களின் அண்ணனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள் என விஜய் கூறினார். இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தவெகவினர் இருப்பார்கள். எந்த உதவி வேண்டுமானாலும் செய்வோம் என்றார். அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.'' என்றார் ஆனந்த்ஜோதி.
''என்னுடைய மனைவி, மகள்கள் மூவரும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தி என்னை அழைத்துப் போகச்சொன்னார்கள். ஆனால் அவர்களால் பார்க்க முடியவில்லை. அதனால் நீங்கள் நேரில் வரும்போது, என் மனைவி, குழந்தைகளின் புகைப்படங்களுடன் நின்று ஒரு படமெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு போலீஸ் அனுமதி கிடைத்தவுடன் கண்டிப்பாக வருவேன். நிச்சயமாக வீட்டுக்கு வந்து நீங்கள் சொன்னது போல படமெடுக்கலாம் என்றார்.'' என்று ஆனந்த் ஜோதி தெரிவித்தார்.
தன்னிடம் விஜய் பேசும்போது, அதைப் படமெடுக்கவோ, வீடியோ எடுக்கவோ யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விஜய் பேசிய சிலரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் அனைவரிடமும் கட்சி நிர்வாகியின் போனிலிருந்தே வீடியோ காலில் விஜய் பேசியதும், வீட்டுக்குள் கதவைப் பூட்ட வைத்து, அந்த குடும்பத்தினரை மட்டும் அனுமதித்ததாகவும், எதையும் படமெடுக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறினர்.
'நேரில் வரமுடியாததற்கு மன்னிப்பு கேட்ட விஜய்'
கரூர் ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேலின் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா இருவரும் இந்த சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர். அவரிடமும் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
தன்னிடமும், தன் சொந்த அக்காவும் மனைவியின் தாயுமான மரகதம் ஆகிய இருவரிடமும் 2–3 நிமிடங்கள் விஜய் பேசியதாக அவர் கூறினார்.
''இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள். இதுவரை நேரில் வரமுடியாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். அவரிடம் என் மனைவி, மகள் இருவரின் படங்களையும் காண்பித்தேன். விரைவில் நேரில் சந்திக்கிறேன். நேரடியாக வரும்போது பேசிக்கொள்ளலாம். நல்லதே நடக்கும் என்று சொன்னார்.'' என்றார் சக்திவேல்.

படக்குறிப்பு, பிரியதர்ஷினி, தரணிகா
கரூரில் இந்த சம்பவம் நடந்த வேலுசாமிபுரம் பகுதியிலேயே குடியிருக்கும் விமல் என்பவரின் சுமார் 2 வயது குழந்தை துருவிஷ்ணுவும் உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் தெரு முனையில் விஜய்யைப் பார்ப்பதற்காக தனது 2 குழந்தைகளுடன், விமலின் குழந்தையையும் அவருடைய அக்கா லல்லி துாக்கிச் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தந்தை விமல், லல்லி இருவரிடமும், அக்டோபர் 7-ஆம் தேதியன்று விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
5 நிமிடங்களுக்குள்ளாகவே தங்களிடம் விஜய் பேசியதாக பலரும் தெரிவித்த நிலையில், தங்களிடம் அரை மணிநேரம் விஜய் பேசியதாக விமல் தெரிவித்தார்.
''குழந்தை இறந்தபோது நடந்ததை எனது அக்கா லல்லி விவரித்தார். அதை முழுமையாகக் கேட்டுக்கொண்ட அவர் மிகவும் கலங்கினார். குழந்தைகளை கூப்பிட்டுக்கொண்டு வராதீர்கள்...கர்ப்பிணிகள் வராதீர்கள் என்று நானே சொல்லியிருந்தேனே என்று சொன்னார். அதன்பின் கவலைப்படாதீர்கள், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கூறி ஆறுதல் கூறினார்.'' என்றார் விமல்.

படக்குறிப்பு, துருவிஷ்ணு
வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த கோகிலா என்ற 14 வயது சிறுமியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர். அவருடைய குடும்பத்தினரிடமும் நேற்று இரவு 7 மணிக்கு மேல், தவெக கட்சி நிர்வாகிகளின் போன் மூலமாக வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார்.
கோகிலாவின் குடும்பத்தினர் பலரும் ஒரே நேரத்தில் அதில் பேசியதாக கோகிலாவின் தந்தை பெருமாள் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''என்னுடைய மகளின் போட்டோவைக் காண்பித்தோம். அதைப் பார்த்ததும் கலங்கி விட்டார். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, எனக்கு என்ன பேசுவது எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை என்றார். கரூருக்கு வருவதற்கு முயற்சி செய்கிறேன். முறையான அனுமதி கிடைத்ததும் நேரில் வந்து சந்திக்கிறேன் என்றார்.'' என்று கூறினார் பெருமாள்.
கரூர் வடக்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்த கிஷோர் நாமக்கல் மாவட்டம் மோகனுாரில் தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரும் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளார். கிஷோரின் தந்தை கணேஷிடம் அக்டோபர் ஏழாம் தேதியன்றே வீடியோ காலில் விஜய் பேசியிருக்கிறார்.
''அன்றைக்கு விஜய்யைப் பார்த்து விட்டு உடனே வந்துவிடுவதாக என்னிடம் சொல்லிவிட்டுத்தான் என் மகன் சென்றான். பின் சடலமாகத்தான் அவனைப் பார்த்தேன். விஜய் என்னிடம் 5 நிமிடங்கள் பேசினார். அதைச் சொன்னதும் ஆறுதல் சொன்னார். சந்திக்க இப்போது நேரம் கைகூடி வரவில்லை. விரைவில் சந்திக்க நேரம் வரும் என்றார்.'' என்று கூறினார் கணேஷ்.
'இன்னும் பேசவில்லை'
விஜய் இன்றும் பலரிடம் பேசி வருவதும் தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி நிவேதிதாவிடம் இன்று மதியம் விஜய் பேசியுள்ளார்.
கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி ஆகியோர், அவர்களுடைய போனில் வீடியோ காலில் விஜய்யைப் பேச வைத்துள்ளனர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மணிகண்டனின் தம்பி சபரி, ''சற்று முன்புதான் அருண்ராஜ் வந்தார். அவருடைய போனிலேயே எங்கள் அண்ணியிடம் விஜய் கால் மணி நேரம் பேசினார். அன்று நடந்ததை அண்ணி விவரித்தார். எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பேசினார். முறைப்படி அனுமதி கிடைத்ததும் நேரில் வரும்போது உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.'' என்றார்.
இதேபோன்று, இந்த சம்பவத்தில் உயிரிழந்த அஜிதா என்ற பெண்ணின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்று முன் தினம் ஓரிரு நிமிடங்கள் விஜய் பேசியதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதே விபத்தில் உயிரிழந்த ஆகாஷ் என்ற இளைஞரின் தந்தை இறந்துவிட்ட நிலையில், அவருடைய தாயாரிடம் தொடர்பு எண் இல்லை என்பதால், தன் மூலமாகவே ஆகாஷின் தாயாரிடம் எல்லோரும் பேசிவரும் நிலையில், விஜய் தரப்பிலிருந்து தன்னை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார், ஆகாஷின் நண்பர் சந்தோஷ்.
இவரைப் போலவே சில குடும்பத்தினரிடம் விஜய் இன்னும் பேசவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) வரையிலும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்கள் 33 பேருடைய குடும்பங்களுடன் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திடம் வீடியோ காலில் விஜய் பேசியது என்ன?
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்
'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்
நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

பட மூலாதாரம், X/Ajithkumar Racing
கட்டுரை தகவல்
மோகன்
பிபிசி தமிழ்
8 அக்டோபர் 2025, 02:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT
தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.
நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.
சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார்.
தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.
தூக்கம் வருவது எப்படி?
இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார்.
தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி.
நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா.
இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.
"59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை"

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர்.
2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி.
தூக்கமின்மைக்கான அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்
அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது.
அவை
போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது
தவறான நேரத்தில் தூங்கச் செல்வது
நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது
போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது
தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது.
"தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது.
தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள்
என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
வயது
தூங்கும் முறை
வளர்சிதை மாற்றம்
இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம்
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு
மது அருந்துவது
தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை
இதய நோய்
சிறுநீரக நோய்
உயர் ரத்த அழுத்தம்
நீரிழிவு நோய்
பக்கவாதம்
உடல் பருமன்
மன அழுத்தம்
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.
உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது.
தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது.
பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி.
"தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார்.
குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்?
கற்றல் குறைபாடு
ஞாபக மறதி
கல்வியில் ஈடுபாடு குறைவது
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது
வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு
நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்?
மன அழுத்தம்
மனச்சோர்வு
ரத்த அழுத்தம்
சிந்திக்கும் திறன் குறைவது
வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது
முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்?
ஞாபக மறதி அதிகரிக்கும்
இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும்
இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும்
தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.
தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா.
தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும்
தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும்
தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்
காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது
20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம்.
உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்
சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
Published:Today at 8 AMUpdated:Today at 8 AM

தஷ்வந்த்
31Comments
Share
சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.
தமிழகத்தை உலுக்கிய கொடூரம்!
இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார்.
சம்பவம் நடந்த இரண்டே நாளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், அடுத்த மாதமே ஜாமீனில் வெளிவந்தார்.

தஷ்வந்த்
தாயைக் கொன்ற தஷ்வந்த்!
அதையடுத்து, பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த் டிசம்பரில் செலவுக்குப் பணம் தரவில்லை என தாயை அடித்துக் கொன்றுவிட்டு மும்பைக்கு தப்பியோடினார்.
பின்னர், மும்பைக்கு விரைந்த தமிழக தனிப்படை போலீஸார் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தஷ்வந்த்தை கைதுசெய்து சென்னை கொண்டுவந்தனர்.
தனது வாக்குமூலத்தில் தாயைக் கொலைசெய்ததை தஷ்வந்த் ஒப்புக்கொண்டார் எனக் கூறப்பட்டது.
தூக்கு தண்டனை + 46 ஆண்டுகள் சிறை!
மறுபக்கம், சிறுமி வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றமோ செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
அடுத்தபடியாக தஷ்வந்த் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்.

உச்ச நீதிமன்றம்
நிறுத்தி வைக்கப்பட்ட தூக்கு தண்டனையும், பிறழ் சாட்சியான தந்தையும்!
தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதில் உரிய விளக்கமளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் தூக்கு தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தஷ்வந்த்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, தஷ்வந்த் தனது தாயைக் கொலை செய்த வழக்கில் முக்கியமான சாட்சியான அவரின் தந்தை பிறழ் சாட்சியாக மாறினார்.
இதனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இந்தாண்டு ஏப்ரலில் போதிய ஆதாரங்கள் இல்லை என தஷ்வந்த்தை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
ஆதாரமில்லை... DNA ஒத்துப்போகவில்லை... விடுதலை!
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கெதிரான தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று, அவர் மீதான தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது.
நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.
சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை. டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை.
எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரத்து செய்கிறோம். மேலும், இவ்வழக்கிலிருந்து தஷ்வந்த்தை விடுவிக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு காவல்துறை
விடையின்றி நிற்கும் கேள்விகள்... காவல்துறை பதில் என்ன?
முதலில் தாயைக் கொலைசெய்த வழக்கில் தந்தை பிறழ் சாட்சியாக மாறியதால் ஆதாரங்கள் இல்லையென 5 மாதங்களுக்கு முன்பு தஷ்வந்த் விடுதலையானார். எனில், அவரின் தாயைக் கொலைசெய்தது யார்?
இப்போது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லை, டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என உச்ச நீதிமன்றமே தஷ்வந்த்தை விடுவித்திருக்கிறது.
அப்படியென்றால், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது யார்?
கீழமை நீதிமன்றத்தில் என்ன மாதிரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையின் பதில் என்ன?
மகளை இழந்த பெற்றோருக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு தமிழக காவல்துறை என்ன செய்யப்போகிறது? விடையின்றியே நிற்கிறது இந்த கேள்விகள்!
தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்
நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
Editorial / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:50 - 0 - 47
பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார்.
Tamilmirror Online || நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
கோமட் (Comet) பிரவுசர், பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) 31 வயது இந்தியாவின் புதிய இளம் பில்லியனர்
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பாவித்து, கும்பலொன்று பெருமளவு பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும், அதற்காக 10 ஆயிரம் ரூபா முதல் 20 ஆயிரம் ரூபா வரையில் செலவாகும் எனவும் சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் ஊடாக அந்தக் குழு விளம்பரம் செய்துள்ளது. இதற்காக, சில பெண்களின் ஒளிப்படங்களை அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் அந்தக் குழு பயன்படுத்துகின்றது.
இந்த விளம்பரத்தை நம்பி அதிலுள்ள இலக்கத்துக்கு சிலர் தொடர்புகொள்ளும் போது குறித்த தனியார் விடுதிகளில் அந்தப் பெண்கள் உள்ளனர் என்று தெரிவித்து மோசடியாளர்கள் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயத்தை அறிந்து கொள்கின்றனர். இதுதொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யத் தயங்குவதால், குறித்த குற்றக்குழுவினர் தொடர்ச்சியாக பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களைப் பாவித்து இந்த மோசடிகள் இடம்பெறுவதால், தமது விடுதிகளின் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பொலிஸார் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த சட்டவிரோதச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதிகளின் பெயரில் தொடர்ச்சியாகப் பணமோசடி; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!