Aggregator

‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

2 months 3 weeks ago
08 Oct, 2025 | 04:47 PM தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 5ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்தாலான கடல் போன்று காட்சியளித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கத்தில் உள்ள பலரும் இணைந்து , 20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அதிபர் எஸ்.முரளிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல திசாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியானது 250 மீற்றர் தூர நீச்சல், 6 கிலோ மீட்டர் தூர சைக்கிளோட்டம் மற்றும் 3 கிலோ மீட்டர் தூர நடை அல்லது ஓட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தாலான டீ-ஷேர்ட் அணிந்த பங்குபற்றுனர்கள் தலா மூவர் அடங்கிய குழுக்களாக இதில் பங்கெடுத்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டும் செய்தியை தமது வீடுகள், பாடசாலை மற்றும் கிராமங்களுக்குக் கொண்டுசென்ற இவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் கூட்டாண்மையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ரொட்டரி கழகம், லயன்ஸ் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் உள்ளிட்ட அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இந்த நிகழ்வில் இந்திரா ஜயசூரியவின் தந்தையான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தனது மகள் மார்பகப் புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்ட போராட்டத்தையும் நினைவுகூர்ந்திருந்தார். அத்தோடு இந்த விழிப்புணர்வு நெடுமுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மட்டக்களப்பிலும், 19ஆம் திகதி மாத்தறையிலும், 26ஆம் திகதி கொழும்பிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு | Virakesari.lk

‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

2 months 3 weeks ago

08 Oct, 2025 | 04:47 PM

image

தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 5ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும்,  நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.

இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்தாலான கடல் போன்று காட்சியளித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கத்தில் உள்ள  பலரும் இணைந்து ,  20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வடமாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  இந்த  நிகழ்வில் அதிபர் எஸ்.முரளிதரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல திசாநாயக்க, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியானது 250 மீற்றர் தூர  நீச்சல், 6 கிலோ மீட்டர் தூர சைக்கிளோட்டம் மற்றும் 3 கிலோ மீட்டர் தூர நடை அல்லது ஓட்டத்தை உள்ளடக்கியதாக இருந்தது.

இளஞ்சிவப்பு நிறத்தாலான டீ-ஷேர்ட் அணிந்த பங்குபற்றுனர்கள் தலா மூவர் அடங்கிய குழுக்களாக இதில் பங்கெடுத்தனர். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டும் செய்தியை தமது வீடுகள், பாடசாலை மற்றும் கிராமங்களுக்குக் கொண்டுசென்ற இவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.

இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சியின் கூட்டாண்மையுடன் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. ரொட்டரி கழகம், லயன்ஸ் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் உள்ளிட்ட அமைப்புக்களும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.

இந்த நிகழ்வில் இந்திரா ஜயசூரியவின் தந்தையான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய,  தனது மகள் மார்பகப் புற்றுநோயை தைரியமாக  எதிர்கொண்ட  போராட்டத்தையும்  நினைவுகூர்ந்திருந்தார்.  அத்தோடு இந்த விழிப்புணர்வு நெடுமுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மட்டக்களப்பிலும்,  19ஆம் திகதி மாத்தறையிலும், 26ஆம் திகதி கொழும்பிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TLC_Triathlon-_Killinochi__4_.jpeg

TLC_Triathlon-_Killinochi__3_.jpeg

TLC_Triathlon-_Killinochi__2_.jpeg

TLC_Triathlon-_Killinochi__1_.jpeg

TLC_Triathlon-_Killinochi__6_.jpeg

TLC_Triathlon-_Killinochi__9_.jpeg

TLC_Triathlon-_Killinochi__10___1_.jpeg


‘இளஞ்சிவப்பு’ நிறத்தில் மாறிய கிளிநொச்சி நகர் ; மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு | Virakesari.lk

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு

2 months 3 weeks ago
08 Oct, 2025 | 04:54 PM (இணையத்தள செய்திப் பிரிவு) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், விமானப் போக்குவரத்தில் 14.4 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 44,185 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 38,607 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம் அதிகபட்ச மாதாந்திரப் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,976 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு, எதிர்வரும் சுற்றுலாப் பயணிகளின் பருவத்தை முன்னிட்டு அதிகரித்துள்ளமையே காரணம் என விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. அதிகரித்த இந்த விமானப் போக்குவரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும், உச்ச பயணக் காலப்பகுதியில் பயணிகளுக்குத் திறமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு | Virakesari.lk

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு

2 months 3 weeks ago

08 Oct, 2025 | 04:54 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 2024 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், விமானப் போக்குவரத்தில் 14.4 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 44,185 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 38,607 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன. 

இவ்வாண்டில் ஆகஸ்ட் மாதம்  அதிகபட்ச மாதாந்திரப் போக்குவரத்தைப் பதிவு செய்துள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,976 விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு, எதிர்வரும் சுற்றுலாப் பயணிகளின் பருவத்தை முன்னிட்டு அதிகரித்துள்ளமையே காரணம் என விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

அதிகரித்த இந்த விமானப் போக்குவரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும், உச்ச பயணக் காலப்பகுதியில் பயணிகளுக்குத் திறமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து 14.4 வீதமாக அதிகரிப்பு | Virakesari.lk

லண்டன் பேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளம் - தாரை, தப்பட்டை இசை ஒலிக்க மேடையேறிய நெசவாளர்

2 months 3 weeks ago

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

படக்குறிப்பு, லண்டன் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளமும், அதை நெய்தவரும் மேடை ஏற்றப்பட்டனர்.

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

''அந்த மேடையில் கையில் கைத்தறி இராட்டை மாதிரியுடன் என்னை நடக்க வைத்து, வார்த்தைகளின்றி சைகைகளால் இவர்தான் அவற்றை நெய்தவர் என்று என்னை அறிமுகம் செய்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கரவொலி எழுப்பினர். அது எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அங்கீகாரமாக இருந்தது!''

லண்டனில் செப்டெம்பர் 21-ஆம் தேதி டிவான்ஷைர் சதுக்கத்தில் (Devonshire Square) நடந்த ஃபேஷன் ஷோவில் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜாவுடன், கைகளில் இரும்பு கைத்தறி இராட்டை மாதிரி வடிவத்துடன் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரத்துடன் நடந்து வந்த 69 வயது கைத்தறி நெசவாளர் சக்திவேல் பெரியசாமியின் வார்த்தைகள் இவை.

சக்திவேல் பெரியசாமி, ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பெரியகோளபாளையத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர். அவருடைய கைத்தறித் துணியில் தயாரித்த கைப்பைகளுடன் வலம் வந்த மாடல் அழகிகளின் அணிவகுப்பு, அவர் தயாரித்த பவானி ஜமுக்காளத்தை வைத்து அதே மேடையில் நடந்த நடன நிகழ்ச்சி அனைத்தும் காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பலராலும் கொண்டாடப்படுகின்றன.

பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு, பாரம்பரியம் மற்றும் தனித்துவத்தை போற்றும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வகையிலும் அந்த மேடையில் அவரை வலம் வரச் செய்ததாகச் சொல்கிறார், இதற்கு ஏற்பாடு செய்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா.

'இந்த அங்கீகாரத்தால் பவானி ஜமுக்காளத்திற்கு சிறியதொரு வர்த்தக வாய்ப்பு கிடைத்தாலும் அதுவே பெருமகிழ்ச்சியளிக்கும்' என்கிறார் சக்திவேல்.

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

படக்குறிப்பு, பவானி ஜமுக்காளத்தைக் கொண்டு கைப்பைகள், புதிய வடிவிலான ஆடைகள் வடிவமைக்கப்பட்டன.

டெல்லி செங்கோட்டைக்குள் பவானி ஜமுக்காளத்தை நெய்தவர்

இந்த கெளரவத்தைப் பெற்றுள்ள சக்திவேல் பெரியசாமி, பவானி அருகேயுள்ள பெரியகோளப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனக்கென ஒரே ஒரு கைத்தறியை மட்டுமே வைத்துள்ள சக்திவேல், மற்றொரு தறியை நிறுவினாலும் அதில் பணி செய்வதற்கு ஆள் யாருமில்லை என்று கருதி, ஒரே ஒரு தறியில் பவானி ஜமுக்காளத்தை நெய்து வருகிறார். பிபிசி தமிழிடம் தன்னைப் பற்றி விரிவாக விளக்கினார் சக்திவேல்.

''எங்களுடையது நெசவாளர் குடும்பம். வறுமையால் நான் ஆறாம் வகுப்பையே கடக்கவில்லை. ரேஷனில் போடும் செஞ்சோளத்தை வாங்கவே முடியாத நிலையில், 13–14 வயதிலேயே தறியில் உட்கார்ந்துவிட்டேன். சிறு வயதிலேயே பட்டுத்துணியில் பார்டர் போடக் கற்றுக்கொண்டேன். முதல் முதலாக ஜேசீஸ் அமைப்புக்கு, அவர்கள் தந்த சின்னத்தை ஜமுக்காளத்தில் நெய்து கொடுத்தேன். அதன்பின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தலைவரின் படத்தை அப்படியே நெய்தது பலருடைய கவனத்திற்கும் போனது. ஆனால் கூலிக்குப் போகுமிடத்தில் இதைச் செய்ய முடியாது என்று தனியாக ஒரு தறி போட்டு, இதுபோன்று புதுப்புது டிசைன்களைப் போட்டு, ஜமுக்காளங்களைத் தயாரித்தேன்!'' என்கிறார்.

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

படக்குறிப்பு, 69 வயதான சக்திவேல் பெரியசாமி, லண்டன் பேஷன் ஷோவில் கௌரவிக்கப்பட்டார்.

இவருடைய வடிவமைப்புகளைப் பற்றி அறிந்த கோவை குமரகுரு பொறியியல் கல்லுாரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் பூங்கொடி, ராமகிருஷ்ணன் ஆகியோர் இவரை நேரில் வந்து பார்த்து, இவருடைய ஜமுக்காளம், வடிவமைப்புகள் குறித்த தரவுகளைச் சேகரித்து டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். அதனால் மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடந்த கைவினைக் கண்காட்சியில் ஒரு மாதம் தங்கி இவற்றைச் செய்து காண்பிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்துள்ளது.

''அது கோவிட் பெருந்தொற்றுக்காலம். தொற்றுக்கு பயந்து வடிவமைப்பாளர்கள் வரவில்லை. அதனால் நானே வடிவமைத்து ஜமுக்காளத்தைத் தயாரித்துக் கொடுத்தேன். அதை இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் ஆடை வடிவமைப்புத் துறையினர் பார்த்துப் பாராட்டினர். டெல்லியில் இரு முறை இதைச் செய்வதற்கு எனக்கு வாய்ப்பை வழங்கினர்.'' என்று விளக்கினார் கைத்தறி நெசவாளர் சக்திவேல்.

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

படக்குறிப்பு, ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா மற்றும் நெசவாளர் சக்திவேல் பெரியசாமி.

அதற்குப் பின்பே தன்னை ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா தேடி வந்ததாகக் கூறுகிறார் சக்திவேல் பெரியசாமி. தனக்கு துணிகளில் சாயம் போடத்தெரியாது என்று கூறியதால், அவரே துணிகளை சாயமிட்டு வாங்கி வந்து, அவற்றில் டிசைன்களைக் கொடுத்து நெய்வதற்கு தந்ததாகத் தெரிவித்த சக்திவேல், அப்படித்தான் தனக்கு லண்டன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்க அழைப்பு வந்ததாக விளக்கினார்.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த வினோ சுப்ரஜா, தற்போது துபாயில் வசிக்கிறார். தன்னை நீடித்த தன்மைக்குரிய ஆடை வடிவமைப்பாளர் (sustainable fashion designer) என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வினோ சுப்ரஜா, ஒரு சிறிய ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். துபாய் மற்றும் சிங்கப்பூரில் தங்கள் நிறுவனத்துக்கான சந்தை இருப்பதாகக் கூறும் வினோ, இதற்கான துணி வகைகளை சென்னிமலை நெசவாளர்களிடமிருந்தே கொள்முதல் செய்கிறார்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய வினோ சுப்ரஜா, ''கடந்த 2024 ஆம் ஆண்டில் சென்னிமலைக்கு வந்திருந்தபோது, பவானி ஜமுக்காளம் செய்யும் கைத்தறி நெசவை நேரில் காண விரும்பி அங்கே சென்றேன். அங்கே தறியில் இருந்தவர்களில் எல்லோருமே 60 வயதுக்கு மேற்பட்டோராக இருந்தனர். பெரும்பாலான தறிகள் உடைந்திருந்தன. அவற்றைப் பயன்படுத்தியே வெகுநாளாகியிருந்தது தெரியவந்தது.'' என்றார்.

''கைத்தறி நெசவாளர்களிடம் பேசிய போது, இதில் வருமானம் பெரிதாக இல்லாததால் வீட்டிலுள்ள இளைஞர்கள் வேறு வேலைக்குச் செல்கின்றனர் என்று கூறினர். அதனால் 5 ஆயிரம் கைத்தறிகள் இருந்த ஊரில் இப்போது ஐந்தில் ஒரு பங்குதான் தறிகள் இருந்ததை அறியமுடிந்தது. பவானி ஜமுக்காளத்தில் பந்தி விரித்துச் சாப்பிட்டு, வீட்டு விசேஷங்களில் கூட்டமாக விளையாடி, படுத்துத் துாங்கிய அனுபவம் எனக்கு இருப்பதால் அதன் நிலையை அறிந்து எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது.'' என்றார் வினோ.

பவானி ஜமுக்காளத்திலிருந்து விதவிதமாய் கைப்பை தயாரிப்பு!

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

கடந்த 2021–2022 ஆம் ஆண்டிலிருந்து லண்டன் ஃபேஷன் ஷோவுக்காக, ஆக்ஸ்போர்டு பேஷன் ஸ்டூடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியுள்ள வினோ சுப்ரஜா, ''இப்போது பெரும்பாலும் மேஜை, நாற்காலிகளையே பயன்படுத்துவதால் தரையில் யாரும் அதிகம் அமர்வதில்லை. இதனால், பவானி ஜமுக்காளத்தின் தேவை குறைந்துவிட்டது. இதனால், ஜமுக்காளத்தின் வண்ணம், கோடு வடிவமைப்பு, துணியின் தன்மை ஆகியவற்றின் தனித்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அதில் கைப்பைகளைச் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.'' என்கிறார் வினோ சுப்ரஜா. அதை அரங்கேற்றம் செய்யும் மேடையாகவே லண்டன் ஃபேஷன் ஷோ இருந்ததாகச் சொல்கிறார் அவர்.

''கடந்த ஜனவரியில் லண்டன் ஆக்ஸ்போர்டு ஃபேஷன் ஸ்டூடியோவிடமிருந்து அழைப்பு வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டில் தெருக்கூத்தை கருவாகக் கொண்டு ஷோவை வடிவமைத்ததுபோல இந்த முறையும் புதுமையான கருவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது பவானி ஜமுக்காளத்தைப் பற்றியும் சக்திவேல் பற்றியும் அவர்களிடம் கூறினேன்" என்கிறார் வினோ.

லண்டன் ஃபேஷன் ஷோ நிகழ்வைப் பற்றி விளக்கிய அவர், ''சக்திவேல் அய்யாவை மேடையேற்றும் போது, இந்தியாவை ஏழைத்தொழிலாளர்கள் உள்ள நாடாக யாரும் பார்த்துவிடக்கூடாது, அவரை ஒரு கலைஞராகவே அங்கீகரிக்க வேண்டுமென்பதிலும் நாங்கள் கவனமாக இருந்தோம். அதேநேரத்தில் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளத்தை அறிமுகம் செய்ய நினைத்து, மாடல் பெண்களை அந்த கைப்பைகளை கொண்டு வரச் செய்தேன். சில ஆடைகளையும் ஜமுக்காள டிசைனில் வடிவமைத்தேன்.'' என்கிறார்.

பவானி ஜமுக்காளத்துடன் ஒன்றரை நிமிட நடனம்!

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

சென்னையைச் சேர்ந்த நாட்டிய நாடகக் கலைஞர் வான்மதி ஜெகன், கையில் பவானி ஜமுக்காளத்தை வைத்தபடி ஆடும் ஒன்றரை நிமிட நடனமும் நிகழ்த்தப்பட்டது. இதற்கான நடன அசைவுகளை தெருக்கூத்து பழனி முருகன் கற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கையில் பவானி ஜமுக்காளத்துடன் நடனமாடியது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நாட்டிய நாடகக் கலைஞர் வான்மதி ஜெகன், ''பவானி ஜமுக்காளத்தை அதில் அறிமுகம் செய்யவேண்டுமென்று திட்டமிட்டே, அதற்குரிய இசை தயார் செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப நடன அசைவுகளை வடிவமைப்பது சவாலாயிருந்தது. முற்றிலும் நம்மூர் நாட்டுப்புற நடனமாகவும் இருக்கக் கூடாது. அதேநேரத்தில் அதில் சில அசைவுகள் இடம் பெற வேண்டுமென்று கருதி, தேவராட்டம், தப்பாட்டம் என எல்லாவற்றிலும் கலந்து சில நடன அசைவுகளை பழனி முருகன் அண்ணா சொல்லிக்கொடுத்தார். நான் பவானி சென்று கைத்தறியின் அசைவுகளை பார்த்துவந்து, அதன் அசைவிலிருந்து சிலவற்றை பயன்படுத்திக் கொண்டேன்" என்றார் வான்மதி.

இவரது நடனத்துக்குப் பிறகு இறுதியில் நெசவாளர் சக்திவேல் கையில் ராட்டை மாதிரி வடிவத்துடன் வேஷ்டி, சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து மேடையில் வலம் வந்தார். வழக்கமாக ஃபேஷன் ஷோக்களில் இசைக்கப்படும் மேற்கத்திய ராப் இசைக்குப் பதிலாக இவருக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இசைக்கோர்வை அவர் நடந்து வரும் போது இசைக்கப்பட்டது. அவரைப் பற்றி வேறு எந்த குறிப்புகளும் திரையில் இடம் பெறவில்லை. ஒலிபெருக்கியிலும் விளக்கம் தரப்படவில்லை. ஆனால் சக்திவேலுடன் வந்த ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜா, அந்த ஜமுக்காளத்தை நெய்தவர் இவர்தான் என்பதைக் குறிக்கும் விதமாக தனது சைகைகளால் விளக்கியுள்ளார்.

லண்டன் ஃபேஷன் ஷோ, பவானி ஜமுக்காளம், சக்திவேல் பெரியசாமி, வினோ சுப்ரஜா

''வழக்கமாக ஃபேஷன் ஷோவில் பயன்படுத்தும் இசை வடிவம் தவிர்த்து, தாரை தப்பட்டை இசையைக் கேட்டதும் எல்லோரும் முதலில் 'வாவ்' என்றனர். அங்கே வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களையே அதிகம் பயன்படுத்துவர். ஆனால் இந்த ஷோவில் பவானி ஜமுக்காளத்தில் வருவது போன்று பல வண்ணங்களில் ஆடை, கைப்பைகள் இடம் பெற்றதைப் பார்த்து மீண்டும் 'வாவ்' என்றனர். நாங்கள் வெளியேறியபின் மேலும் அற்புதம் நிகழ்ந்தது.'' என்றார் வினோ சுப்ரஜா.

அதைப் பற்றி விளக்கிய அவர், ''நிகழ்வு முடிந்தபின் என்னைச் சந்தித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நீங்களிருவரும் மேடையிலிருந்து வந்ததும் கைதட்டுவார்கள், விசில் அடிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் ஒரு நிமிடம் அரங்கம் அமைதியானது, எல்லோரும் எழுந்தனர். எல்லோர் முகத்திலும் புன்னகை, சிலர் கண்களில் கண்ணீர். அதன்பின் பலத்த கரவொலி. அரங்கமே நெகிழ்ந்த தருணம் அது என்றனர். அந்த வகையில் கைத்தறி நெசவாளருக்கு அங்கீகாரம் கிடைத்ததில் திருப்தி.'' என்றார்.

அந்த நிகழ்வை நினைவு கூர்ந்த கைத்தறி நெசவாளர் சக்திவேல், இதனால் எங்களுடைய பவானி ஜமுக்காளத்துக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கும் ஒரு வர்த்தக வாய்ப்பு கிடைத்தால் பெருமகிழ்ச்சி என்றார். பவானி சுற்றுவட்டாரத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த கைத்தறிகள் இப்போது ஆயிரத்துக்கும் குறைவாகி விட்டதாக வருந்திய அவர், இதைக் காப்பாற்றுவதற்கு ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கம், நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்கிறார்.

பவானி ஜமுக்காளத்தின் சிறப்பு

பவானி ஜமுக்காளத்திற்கு புவிசார் குறியீடு கிடைக்க தீவிர முயற்சி செய்தவர்களில் ஒருவர் தவமணி. சிந்தாமணி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர், பவானி ஜமுக்காளத்தின் பெயர்க்காரணத்தையும், சிறப்பையும் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

''பவானி ஜமுக்காளம் என்பது, நுாறாண்டுகளுக்கும் அதிகமான பழமை வாய்ந்த பாரம்பரியத் தயாரிப்பு ஆகும். கோரைப்பாய் உற்பத்தியிலிருந்து இது தோன்றியது. இதற்குப் பயன்படும் கைத்தறியை குழித்தறி என்பார்கள். இதிலுள்ள மூங்கில் பண்ணை, படி, பலகைக்குண்டு எல்லாமே மரத்தால் செய்யப்பட்டவை.

இதில் வலது இடதுமாக நாடா மூலமாக நுாலைக் கோர்த்து, இரு புறமும் இருவர் இருந்து நெய்வர். தனியாகவும் சிலர் நெய்வார்கள்.'' என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், ''விசைத்தறி போலன்றி, இந்த நுாலைத் தள்ளும்போது 'வி' வடிவில் சென்று அந்த நுால் 'அடாப்ட்' ஆகும். இதுபோல கெட்டியான நுால் கோர்வையை வேறு எந்த துணியிலும் பார்க்க முடியாது. இதில் நெசவாளரின் கை, கால், கண், உடல் என எல்லா பாகங்களும் இணைந்து உழைக்க வேண்டியிருக்கும்.'' என்றார்.

''லண்டன் ஃபேஷன் ஷோவில் சக்திவேல் அய்யாவை கெளரவித்ததிலும் பவானி ஜமுக்காளத்தை அறிமுகம் செய்ததிலும் பெருமகிழ்ச்சி. அதனால் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் வர்த்தக பலன்களை இனிமேல்தான் அறிய முடியும்.'' என்றும் தவமணி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9wdzg49727o

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது - சாணக்கியன்

2 months 3 weeks ago

08 Oct, 2025 | 06:30 PM

image

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது என இன்று (8) பாராளுமன்றத்தில் சாணக்கியன் குறிப்பிட்டதோடு, வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல்வீரர்களாக அரசு செயற்பட வேண்டுமென்றும் சுட்டுக்காட்டியுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை சாணக்கியன் பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை தொடர்பான அரசின் தீர்மானம் என்ன என்பது போன்ற  கேள்விகளை முன்வைத்த நிலையில், அந்தக் கேள்வி நேற்றைய தினமே தனக்குக் கிடைத்தது என சபையில் இன்று பிரதமர் தெரிவித்தார். 

அத்துடன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்க தனக்கு இரு கிழமைகள் அவகாசம் வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

அந்தக் கேள்வியானது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக சாணக்கியன் கேள்விகளை எழுப்பியிருந்தார். 

இதனை, இன்றைய தினம் பாராளுமன்றத்தில்  சுட்டிக்காட்டிய சாணக்கியன், 

“அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கிறது. வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இந்த அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான, எமது மக்களுக்கான பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை, அரசு இந்த நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது - சாணக்கியன் | Virakesari.lk

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

2 months 3 weeks ago

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில்  வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? பல  நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள். தமிழ் புலம்பெயர் அமைப்புக்களையா,  அல்லது  விடுதலைப் புலி ஆதரவாளர்களையா ? ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம்  தவிர்க்க வேண்டும்  என    ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற  அமர்வின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின்  2025 குறைநிரப்புத் தொகை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்ஷர்கள்  தமது வீடுகளுக்கு செல்வதற்காகவே  அதிவேக நெடுஞ்சாலைகளை  நிர்மாணிப்பதாக குற்றஞ்சாட்டியவர்கள் இன்று ஆட்சியில் உள்ளார்கள். அரசாங்கம் அதிவேக வீதி கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது.அதிவேக வீதியை அமைத்தால் நாய்கள்,விலங்குகளுக்கு வீதியை கடக்க முடியாத நிலைமை ஏற்படும் என்றே அன்று கூறினீர்கள். இந்த வீதிகள் தங்கத்திலா நிர்மானிக்கப்படுகின்றது என்றும் கேட்டீர்கள்.

ஆனால் இப்போது உங்களின் தலைவர் எஞ்சியுள்ள அதிவேக வீதியை அமைக்க நடவடிக்கை எடுக்கின்றார். அன்று நீங்கள் தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இப்போது ஜனாதிபதிக்கு அதிவேக வீதிகளை திறந்து வைத்திருக்கவும் முடியும்.

அரசாங்கத்தின் முன்னேற்றம் தொடர்பில் கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு அமைச்சும் இதுவரையில் அடைந்துள்ள  முன்னேற்றம் என்ன? கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதியில் எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. மக்கள் அடைந்த நன்மை என்ன என்பதனையும் கூற வேண்டும். கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்காமல் வேலைத்திட்டங்கள் பாருங்கள்.

ஒவ்வொரு வாரமும் புது விடயங்கள்  பேசப்படுகிறது. இப்போது பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன.

அன்று பொலிஸ் ஆணைக்குழு வேண்டும். அது சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கூறிய நீங்கள் இப்போது சுயாதீனத்துவத்தை நீக்கி அதன் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கின்றீர்கள். இப்போது மிருகக்காட்சி சாலையிலும் விலங்குகள் திருடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நீங்கள் கடற்படைத் தளபதியை கைது செய்துள்ளீர்கள். விடுதலைப்புலி புலனாய்வில் இருந்த ஒருவர் வழங்கிய சாட்சிக்கமைய கைது செய்துள்ளீர்கள். குற்றப்புலனாய்வுக்கு  ஏற்றவாறு வாக்குமூலங்கள் பதியப்படுகின்றன. இவ்வாறான நிலைமையிலேயே பொலிஸ் ஆணைக்குழுவை நீக்கி பொலிஸ்மா அதிபரின் கீழ் அதிகாரங்களை கொண்டுவந்து அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

பொலிஸ்மா அதிபர் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கடந்த காலங்களில் அரசாங்கத்திற்காக கடைக்கு சென்ற பொலிஸ்மா அதிபர்களுக்கு என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும். பொலிஸாரை பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.மக்கள்  விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய பொலிஸ் சேவை மாற்றியமைக்க கூடாது.

1980 மற்றும் 1990 ஆம்  காலங்களில் இதுபோன்ற நிலைமை இருந்தது. ஆனால் அது தற்போது  பொருத்தமாகாது என்பதை  குறிப்பிட்டுக்கொள்கிறேன். பொலிஸாரை பயன்படுத்தி அரசியல் செய்ய முடியாது. தயவு செய்து பொலிஸை அரசியல்மயமாக்குவதை நிறுத்துங்கள். பொலிஸ் ஆணைக்குழுவின் கௌரவத்தை சீர்குலைக்க வேண்டாம் என்று கோருகின்றோம்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில்  இலங்கை விவகாரம்  தொடர்பில்  வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பை கோரவில்லை. வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன.

யாரை நீங்கள் மகிழ்விக்கப் போகின்றீர்கள்.? புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையா, அல்லது  விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? .ஐ.நா.விவகாரத்தில் இரட்டை வேடம் அணிவதை அரசாங்கம்  தவிர்க்க வேண்டும் என்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ; இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பை கோர அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு | Virakesari.lk

மனநல சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர்

2 months 3 weeks ago

08 Oct, 2025 | 05:53 PM

image

நமது நாட்டில் மனநலம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை நிறுவுவதில் கடுமையான சிக்கல் மற்றும் சிரமம் காணப்படுகிறது. எனவே அவசர சிகிச்சை நடைமுறைகள் போலவே மனநலம் சார்ந்த சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.

உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி, சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் தஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்தன ஆகியோரின் தலைமையில் இலங்கை மன்றத்தின் (Srilanka Foundation) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

ஆண்டுதோறும் நினைவுகூரப்படும் இந்த நாள், "அனைவருக்கும் மனநல சேவைகள்" என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்டது. மனநலத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இந்த சேவை இந்த நாட்டில் நிரந்தரமாக நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

கடந்த காலங்களில், சுகாதாரத்துறையும் இந்த நாட்டு மக்களும் இயற்கை பேரழிவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார சவால்களை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மற்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது போலவே மனநலம் சார்ந்த சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மனநல சேவைகள் பொதுமக்களைச் சென்றடைவது மிகவும் முக்கியம் என்றும், மனநல சேவைகளுக்கு இன்னும் முறையான திட்டங்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மனநலம் மற்றும் ஆலோசனை சேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் துணை அமைச்சர் கூறினார். நாட்டின் மனநல சேவைகளை உலகிலேயே சிறந்ததாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். 

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 10% பேர் பல்வேறு மனநல நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 2% பேர் கடுமையான மனநல நிலைமைகளைக் கொண்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். 

2024 ஆம் ஆண்டில் சுமார் 37,000 நோயாளிகள் மனநல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். என்று கூறிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  தற்கொலைக்கு மனநல நிலைமைகள் முக்கிய காரணம் என்று கூறினார். பலர் மனநலத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என்று சுட்டிக்காட்டிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  சுகாதாரத் துறையில் உள்ள அனைவரும் ஒன்றாக இந்த சவாலை சமாளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

"அவசர சூழ்நிலையில் மனநலத்தை அணுகுதல்" என்ற தலைப்பில் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிரு சந்திரமட சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார், அதே நேரத்தில் சுகாதார அமைச்சின் நிபுணரான டாக்டர் பனோவில் விஜேசேகர " அவசர சூழ்நிலையில் கூட்டுப் பொறுப்பு" என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். மனநலத்திற்காக ஒரு நாளை அர்ப்பணிப்பதன் முக்கிய நோக்கம், உலகளவில் மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதும் ஆகும். மனநல நிபுணர்கள் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும், உலகளவில் மனநலத்தை மேம்படுத்துவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை ஆராயவும் இந்த நாள் ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில், எட்டு பேரில் ஒருவர் மனநலப் பிரச்சினையுடன் வாழ்கிறார். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மற்றவர்களுடன் பழகும் விதத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் கூட பாதிக்கக்கூடும் என்றும், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதைக் காணலாம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. 

மேலதிக செயலாளர் நிபுணர் டாக்டர் குமார விக்ரமசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன, WHO நாட்டு பிரதிநிதி, சுகாதார அமைச்சக அதிகாரிகள், நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2025-10-08_at_15.06.17.jp

WhatsApp_Image_2025-10-08_at_15.06.18__1

WhatsApp_Image_2025-10-08_at_15.06.18.jp

https://www.virakesari.lk/article/227254

திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்

2 months 3 weeks ago
வைத்தியர் மனோகரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 months 3 weeks ago
இன்றைய போட்டியைப் பார்த்தா, அவுஸ்ரேலியா மயிரிலையில் தப்பியுள்ளது போல் உள்ளது. பெத் மூனி தான் ஒரு ராணி என்று இன்று காட்டியிருக்கிறா.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 3 weeks ago
இப்படி மூலைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு தப்பிக்கொள்ள மன்னிப்புக் கேட்ட உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு வழக்கு போன வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் முடிந்திருக்கிறது. விபரங்கள் கீழே: Sean 'Diddy' Combs sentenced to over 4 years in prisonCombs apologised to his mother, children, and victims, specifically naming his two ex-girlfriends, Casandra Ventura and "Jane".சுருக்கமாக, டிடி கோம்ப்ஸ் பல ஆண்டுகளாக பல பெண்களை உணர்வு ரீதியாகச் சித்திரவதை செய்து தானும் அனுபவித்து விபச்சாரத்திற்கும் தூண்டியிருக்கிறார். அவர்கள் விலக முடியாத படி அந்தக் காட்சிகளை மிரட்டும் சாட்சியாக (blackmail) சேமித்து வைத்திருக்கிறார். 12 மாதங்கள் முன்பு இதற்காக குற்றம் சாட்டப் பட்டுக் கைதான போது, கோம்ப்ஸ் பேசியது கிட்டத் தட்ட சீமான் விஜயலட்சுமியைப் பற்றிப் பேசியது போலவே இருந்தது😂. கோம்ப்ஸ் தரப்பினர் மிரட்டினார்கள் , பெண்களை விபச்சாரிகள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஆனால், கோம்ப்சை குற்றவாளியாக ஜூரிகள் தீர்ப்பளித்த பின்னர் ரெக்கோர்ட்டை மாற்றிப் போட்டார்கள் கோம்ப் தரப்பினர். கடந்த வாரம் "11 வருட சிறை வழங்க" வேண்டுமென அரச தரப்பு நீதிபதியைக் கேட்டுக் கொண்ட போது. "நான் திருந்தி விட்டேன், 14 மாத சிறையில் நான் திருந்தி விட்டேன்" என்று கடிதம் எழுதி நிறைய கண்ணீரெல்லாம் விட்டார்கள் கோம்ப்சும் குடும்பத்தினரும். ஆனால், நீதிபதி சுப்ரமணியன் (ஆம், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த நியூ யோர்க்கின் முக்கிய மாவட்டத்தில் பெடரல் நீதிபதி, தமிழராக இருக்கக் கூடும்) "நீ திருந்துவதாக இருந்திருந்தால் 2019 இல் ஒரு வீடியோ வெளியே வந்த பின்னரே திருந்தியிருக்க வேண்டும். இது மனம் வருந்திய திருத்தம் அல்ல" என்று 4 ஆண்டுகள் சிறை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார். பிந்திய செய்திகளின் படி, கோம்ப்ஸ் குற்றவாளியாகத் தீர்ப்புக் கிடைத்தவுடன் ட்ரம்பிடம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் தூது அனுப்பியிருக்கிறாராம். ஒரு ஒப்பீட்டுக்கு, யாழ் கள பெரிசுகளுக்காக, இதைப் பகிர்ந்திருக்கிறேன்.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 3 weeks ago
ஆகவே சீமானுக்கு எதிரான பாலியல்~ புகாரே தவிர அங்கு மழை இல்லை. ஈரம் இல்லைப்போல் தெரிகிறது. உண்மை என்ன??? அது சீமானுக்கும் அந்த நடிகைக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை, இருந்தால் சாட்சி ஏதாவது வந்திருக்கும். சீமான் என்றாலே ஒருவருக்கு வாந்தி வருகிறது, அதை ஏந்த ஒருவர் இருப்பதையும் பின்னூட்டங்களில் காணமுடிகிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அது சீமானுக்குப் பொருந்தும்போல் தெரிகிறது.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 3 weeks ago
மன்னிப்புக் கேட்பது உயர்ந்த பண்பு என்பது சரி. ஆனால், வருடக் கணக்காக விட்டுத் துரத்தி, பல இடங்களில் ஒளித்து விளையாடி, இறுதியில் "இனியெங்கும் போய் ஒளிய முடியாது"😎 என்று ஒரு மூலையில் மாட்டிக் கொண்ட பிறகு மன்னிப்புக் கேட்கிற ஒருவர் உண்மையில் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கிறாரா அல்லது தன்னைக் காத்துக் கொள்ள மன்னிப்புக் கேட்கிறாரா? இந்த மன்னிப்பின் பின்னணியை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறார்களா யாழ் கள "பெரியோர்" அல்லது இதுவும் முரட்டு முட்டின் ஒரு தொடர்ச்சியா?

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!

2 months 3 weeks ago
தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன. இந்த விடுமுறை மூலம் அரசு பொதுக் கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலத்துக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இனி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1449893

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!

2 months 3 weeks ago

download-7.jpg?resize=300%2C168&ssl=1

தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார்.

சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன.

இந்த விடுமுறை மூலம் அரசு பொதுக் கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலத்துக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இனி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1449893

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 3 weeks ago
என்ரை கவலை என்னெண்டால்...... இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂 அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 3 weeks ago
கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும் இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா .... நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா அதை போலத்தான் இதுவும்

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 3 weeks ago
மன்னிப்பு கேட்பது மாண்புதான்…. எப்போது? அது உளப்பூர்வமான மன்னிப்பாக இருக்கும் போது. போன வாய்தாவின் பின் கூட மன்னிப்பு கேட்கமாட்டேன் என வாய் ஜம்பம் அடித்தவர்…இன்று மன்னிப்பு கேட்பது அப்பட்டமான போக்கிரித்தனம். அத்தோடு அண்ணன் தான் பிழையே விடவில்லை என்றார்…தம்பிகளும் அதற்கு வில்லுபாட்டு பாடினர். அப்போ இப்போ ஏன் மன்னிப்பு கேட்கிறார்? ஒன்றில் பிழை விட்டு விட்டு - மக்களுக்கு பொய் சொல்லி விட்டு - இப்போ மன்னிப்பு கேட்கிறார். அல்லது… செய்தாத தவறுக்கு கோழைதனமாக மன்னிப்பு கேட்கிறார். எப்படி பார்த்தாலும் ஒன்றில் சீமான் பொய்யன் அல்லது கோழை என்பதே முடிவாகும். சொல்லுவதுதான் சொல்லுறம் 40% எண்டால் தம்பி-அண்ணன்களாவது சந்தோசப்படுவார்கள்🤣. பிகு தம்பிகளுக்கு ஒரு கேள்வி. நாளைக்கு சோனியா காந்தி, மகிந்த இதே போல் முள்ளிவாய்காலுக்கு மன்னிப்பு கேட்டால்…. மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் எனவே அவர்கள் மாண்புள்ளோர் என கொண்டாடுவீர்களா? %செய்தாலும் செய்வீர்கள்