ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள் 22 JUN, 2025 | 07:26 AM அமெரிக்கா மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது ”என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக ஃபார்ஸ் மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன ஃபோர்டோ அணு உலையில் வடக்கு ஈரானின் மலைகளில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளது மேலும் யுரேனியத்தை அதிக தூய்மை தரங்களுக்கு செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மையவிலக்குகள் உள்ளன. அதன் ஆழம் காரணமாக அமெரிக்காவின் "பதுங்கு குழி" bunker busters குண்டுகள் மட்டுமே இந்த அணு உலையில் சேதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் வசதிகளும் தாக்கப்பட்டதை இஸ்ஃபஹானின் துணை பாதுகாப்பு ஆளுநர் உறுதிப்படுத்தினார். இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ஊடுருவல்களை நாங்கள் கண்டோம்" என்று அவர் கூறினார் "எதிரி இலக்குகளை எதிர்கொள்ள" வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது ஆனால் "பல வெடிச்சத்தங்கள் கேட்டன" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. ஈரானிய ஊடகங்களின்படி அந்த நிலையங்கள் முன்பே அகற்றப்பட்டுவிட்டன https://www.virakesari.lk/article/218098 ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் அல்லது கப்பல்பாதைகளில் தாக்குதலை மேற்கொள்ளலாம்- ஸ்கை நியுஸ் 22 JUN, 2025 | 07:13 AM ஈரான் மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களை அல்லது கப்பல்களை இலககுவைக்கலாம் என ஸ்கை நியுசின் மத்தியகிழக்கிற்கான செய்தியாளர் அலைஸ்டர் பங்கெல் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஈரான் அமெரிக்காவின் தாக்குதலிற்கு பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் தாக்குதலை மேற்கொண்டேயாகவேண்டிய நிலையில் உள்ளதுஆனால் அதன் தாக்குதல் எவ்வாறானதாக அமைந்திருக்கும் என்பது தெரியவில்லை. பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் உலகளாவிய கப்பல் போக்குவரத்து அல்லது அமெரிக்க இராணுவ தளங்களை ஈரான் குறிவைக்கக்கூடும் அவர்கள் அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்றால் இது மிக விரைவாக மிகவும் குழப்பமாகிவிடும். ஈரான் குறிப்பிட்ட அளவிலான தாக்குதலை மேற்கொண்டால் பதிலடி கொடுத்துவிட்டதாக அவர்கள் திருப்தியடையலாம் டிரம்ப் அதைத் தொடர விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன் மேலும்போதும் நீங்கள் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டீர்கள். நான் இப்போது இதைச் செய்துவிட்டேன். இதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது'.என டிரம்ப் இஸ்ரேலியர்களிடம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கின்றேன் ஈரானுடனான மோதலில் இஸ்ரேலிய மக்கள் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக "மிகவும் ஒற்றுமையாக" உள்ளனர் ஆனால் யாரும் நீடித்த போரை விரும்பவில்லை. "அமெரிக்கர்கள் வெற்றி பெற்று இப்போது எல்லாம் முடிந்துவிட்டால் இஸ்ரேலிய அரசாங்கத்திற்குள் அது ஒரு வேலை முடிந்தது என்ற உண்மையான உணர்வு இருக்கும் என்று நான் நினைக்கிறேன் அது மிகப்பெரியது https://www.virakesari.lk/article/218097 அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை 22 Jun, 2025 | 10:36 AM ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்கா தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளிவிவகார அமைச்சர் இந்த தாக்குதலால் நித்திய விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். இன்றுகாலை நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மேலும் அவை நித்திய விளைவுகளை ஏற்படுத்தும் என தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அபாஸ் அரக்சி ஈரானிற்கு அதன் இறையாண்மையை பாதுகாப்பதற்காக அனைத்து சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுஉலைகளை தாக்கியதன் மூலம் ஐநா சாசனம் சர்வதேச சட்டம் மற்றும் அணுஆயுத தடை பரவல் ஒப்பந்தம் என்பவற்றை கடுமையாக மீறியுள்ளது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218111