2 months 3 weeks ago
நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் 22 JUN, 2025 | 01:02 PM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் நாட்டுக்கு வருகைதரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், மகாநாயக்க தேரர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பன அறிவித்துள்ளன. முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுஸைன் கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தார். அதன் பின்னரான காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஒருவர் நாட்டுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாக இது அமைந்திருக்கின்றது. அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை வரை (26) நாட்டில் தங்கியிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்தோடு பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் ஏனைய முக்கிய அரச கட்டமைப்புக்களின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். அதேவேளை செவ்வாயன்று (24) மாலை 4.30 மணிக்கு பாராளுமன்றக் கட்சித்தலைவர்களை பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கும் வோல்கர் டேர்க், மாலை 5.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ளார். இச்சந்திப்புக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர், மதத்தலைவர்கள், இராஜதந்திரிகள் என சுமார் 300 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது. இதன்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல், செயற்திறன்மிக்க தீர்வுகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் என்பன உள்ளடங்கலாக பரந்தளவிலான மனித உரிமைசார் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக மனித உரிமைகளின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தலைநகர் கொழும்பில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள உயர்ஸ்தானிகர், அங்கு தலதா மாளிகையில் மதவழிபாடுகளில் ஈடுபடவிருப்பதுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உரையாடவுள்ளார். அதனைத்தொடர்ந்து கிழக்கில் திருகோணமலைக்கும், வடக்கில் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ள அவர், அங்கும் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். மேலும் இவ்விஜயத்தின் முடிவில் எதிர்வரும் வியாழக்கிழமை (26) கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ள வோல்கர் டேர்க், அதில் தனது இலங்கை விஜயத்துடன் தொடர்புடைய அவதானிப்புக்களையும், வலியுறுத்தல்களையும் வெளியிடவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உருவாகியிருந்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே அவரது இவ்விஜயம் இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/218129
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
ஐ நா சபைய குண்டு வைச்சு தகர்க்கனும் இவளவும் நடந்து வெறுமன வேடிக்கை பார்க்குது என்றால் இந்த சபை உலகிற்க்கு தேவை இல்லாத சபை இதே அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பெருத்த ஆவத்து நெருங்குது என்றால் இந்த கோமாளி சபைய உடன கூட்டுவினம்....................................
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
மண்ணுக்குள் பொன் தேடும் எலிபன் .......... ! 😂
2 months 3 weeks ago
ஈரானிய மக்கள் நல்லவை அதோட அவர்கள் எதற்க்கும் துணிந்தவை.................இப்போதுவரை மற்ற நாடுகளின் உதவி இல்லாம தான் 9நாளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போர் செய்யினம்...............இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜரோப்பிய பல நாடுகள் பின்புலத்தில் இனி ஈரானுக்கு அவர்களின் நட்பு நாடுகளின் ஆதரவு வெளிப்படையா கிடைக்க அல்லது மறைமுகமாய் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு............................
2 months 3 weeks ago
அணுசக்தி உலைகளை தாக்கியதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் எந்த சேதமோ அழிவுகளோ ஏன் அணு வெளியேறியதற்கான அறிகுறிகளோ இல்லை???
2 months 3 weeks ago
எனக்கு அடிப்படையில் அமெரிக்கா அரசியலை பிடிக்காது.....................அதன் வெளிப்பாட்டை எனது எழுத்தின் மூலம் பார்க்கலாம்.....................சும்மா இருந்த ஈரான் மீது பல வாட்டி இஸ்ரேல் சீண்டி பார்த்தது.................. உலகவரை படத்தில் இஸ்ரேல் என்ர நாடு எங்கை இருக்குதென்ரே தெரியாது , சூம் பண்ணி பார்த்தால் சிறு கோடு தான் தெரியுது அந்தக் கோடும் மெது மெதுவாய் அழிய நெத்தனியாகுவும் ரம்பும் வழி வகுக்கினம்...................இன்று தானே அமெரிக்கா ஈரான் மீது நேரடியாக தாக்கி இருக்கினம் இனி வரும் நாட்களில் பாப்போம் அமெரிக்கா காங்ரஸ் சவை ரம்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் பதிவு போடுகினம் , ரம் செய்தது பிழையென..........................
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
ஆம், (எண்ணெய், இயற்கை எரிவாயு) போன்ற வளங்கள் ஒரு முக்கிய பரிமாணம், குறிப்பாக சீனாவுக்கு அது கிடைப்பது, us / மேற்கின் கட்டுப்பாட்டில் இல்லாதது. முன்பு சொன்னது போல, இரான் சீனாவுக்கு இடையே நேரடியான சரக்கு புகையிரத சேவை. எண்ணெய் வழங்குவதில் பாரிய கடற்கலங்களுக்கு முற்றிலும்ஒப்பானதாக இப்போது இல்லாவிட்டாலும், புகையிரத தொழில்நுட்பத்தில் நடந்து வரும் மாற்றத்தால் அடுத்த 5-10 ஆண்டுகளில் புகையிரத்தே சேவை சிலவேளைளில் கடற்கலன்களை விட கொள்ளவு விநியோக வினைத்திறன் கூட, மற்றும் விலை , நேரமும் குறைவாக (இப்போதே 15 நாட்களே எடுக்கிறது முழுவதும் நிரம்பிய நிலையில் சீன - ஈரான் சரக்கு புகையிரத சேவை. பாரிய கடற்கலம் எடுப்பது 30 - 40 நாட்கள், அத்துடன் கடலில் ஆபத்தும் கூட)
2 months 3 weeks ago
“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; உலகிற்கு பேரழிவு” போர் பதற்றத்தை தணிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர்அன்டோனியோ குட்டெரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும். இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். இராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை." என்று தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-மீது-அமெரிக்கா-தாக்குதல்-உலகிற்கு-பேரழிவு/50-359672
2 months 3 weeks ago
காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன் http://www.samakalam.com/wp-content/uploads/2021/03/111103829_sumanthiran-04.jpg வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார். தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு 28.06.2025 உடன் முடிவடைகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு நாம் கொடுத்த அவகாசம் முடிவடைவதற்கு 1 நாள் இருக்க, அதை மீளப் பெறப் போவதாக 27. 05.2025 அன்று அரசு அறிவித்தது. அது உடனடியாக செய்யப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 வாரமாகியும் இந்த வர்த்தமானி மீள் கைவாங்கப்படாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC FR 112/2025) 12.06.2025 அன்று தாக்கல் செய்தேன். 17.06.2025 இவ் வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்ட மா அதிபர் இன்று வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிக்க 27.06.2025 வரை (காலக்கெடு முடிவதற்கு 1 நாள் அவகாசம் இருக்க) மீண்டும் அவகாசம் கோரியிருக்கிறார்! தாம் தீர்மானித்ததாக கூறியதை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். https://www.samakalam.com/காணிகளைச்-சுவீகரிக்கும்/
2 months 3 weeks ago
காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்? - எம்.ஏ. சுமந்திரன்
http://www.samakalam.com/wp-content/uploads/2021/03/111103829_sumanthiran-04.jpg
வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார்.
தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு 28.06.2025 உடன் முடிவடைகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு நாம் கொடுத்த அவகாசம் முடிவடைவதற்கு 1 நாள் இருக்க, அதை மீளப் பெறப் போவதாக 27. 05.2025 அன்று அரசு அறிவித்தது. அது உடனடியாக செய்யப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 வாரமாகியும் இந்த வர்த்தமானி மீள் கைவாங்கப்படாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC FR 112/2025) 12.06.2025 அன்று தாக்கல் செய்தேன். 17.06.2025 இவ் வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்ட மா அதிபர் இன்று வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிக்க 27.06.2025 வரை (காலக்கெடு முடிவதற்கு 1 நாள் அவகாசம் இருக்க) மீண்டும் அவகாசம் கோரியிருக்கிறார்! தாம் தீர்மானித்ததாக கூறியதை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
https://www.samakalam.com/காணிகளைச்-சுவீகரிக்கும்/
2 months 3 weeks ago
எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? எமது தாயகத்தில் நிகழ்ந்தது போல பொருளாதார தடையினை நீண்ட காலமாக சந்தித்து வரும் நாடு ஈரான், கோவிட் காலத்தில் அதற்கான சரியான் தடுப்பூசிகூட கிடைக்காத நிலை காணப்பட்டது. பெரியவர்களே ஒரு காயம் எற்பட்டு நாடி அறுந்து இரத்தம் வேகமாக வெளியேறும் போது அதிர்ச்சியடைந்து சிலர் மயக்கமாவதும் உண்டு அது தவிர அந்த காயம் பற்றிய மிகைப்படுத்தலான எண்ணம் ஏற்படுதல் என மன ரீதியான பாதிப்புக்கள் ஏற்படும் சரியான வலி நிவாரணி இல்லாத மருத்துவ வசதியற்ற நாட்டில் சிறு குழந்தைகள் இந்தப்போரிற்கு இரையாக போகிறார்கள் அவர்கள் பலர் அவயங்களை கூட இழக்க நேரிடும். இந்த அழிவினால் எப்போதும் சாதாரண மக்கள்தான் பாதிப்படைகிறார்கள், கடைசியாக அந்த மக்களையே மனித கேடயமாகெளம் பாவிப்பார்கள். இந்த போர் சிலருக்கு இலாபமக இருக்கலாம், இந்த போரினால் எமக்கென்ன இலாபம், எதற்காக இந்த கொண்டாட்டம்? பொதுவாக போரின் வலிகளை உணராதாவர்களும் அல்லது பார்க்காதவர்களும் கொண்ட்டாடலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இனமாக இருந்து இவ்வாறான மனித குல அழிவினை கொண்டாட முடியுமா? அணுவாயுதம் ஏவுகணை என்பதெல்லாம் ஒரு சாட்டாக கருதுகிறேன், ஈரானின் வளம்தான் குறியாக உள்ளதாக கருதுகிறேன்.
2 months 3 weeks ago
அமெரிக்கா தனது நாட்டில் பாதுகாப்பை பலப் படித்தி இருக்காம்...............எங்கையோ இருக்கும் ஈரானை கண்டு இம்மட்டு பயமா.......................அப்ப ரஸ்சியா சீனா கூட போர் வந்தால் அமெரிக்காவின் நிலை என்ன ஆகிரது ஹா ஹா..........................
2 months 3 weeks ago
இரான் ஏன் தற்கொலை, அதுவும் சண்டை இல்லாமல் செய்வ வேண்டும் மேட்ற்கு / உச சொல்வது இரான் அணுத்துறையை கைவிட வேண்டும் - அப்படி கைவிட்ட பின் மேட்ற்கு ஏமாற்ற்றாது என்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லை (ஏமாற்றுவதே திட்டம்), அணுத்துறை இல்லை என்றபடியால் உள்ளே என்றது இன்னும் வசதி us, மேற்கிடம். (பொதுவாக இங்கே இதை சொல்லி இருந்தேன், இப்படியான வ்விடயங்களில் இனிமேல் ஒருவரும் மேற்குடன் ஒப்பந்தம் செய்யமாட்டார்கள் (செய்வது மடைத்தனம்). மரபு வழி ஏவுகணைகளை கூட கைவிட வேண்டும் என்கிறது. வேறு நாடுகளில் உள்ள அந்தந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவு இருக்க கூடாது. இது நான் முதலில் சொன்னதே - இஸ்ரேல் எ மத்தியகிழக்கில் நடப்பதை தீர்மானிக்க வேண்டும், அதாவது hegemon, பிராந்திய தாதா. 8 மில்லியன் உள்ள இஸ்ரேல் இடம், ஆகக்குறைந்தது, விவிலியப்படி, யூதரை விடுவித்த சைரஸ் இராச்சியத்தின் (அதனால் தான் இப்போதாவது இஸ்ரேல் க்கு நாடு உள்ளது) தொடர்சியான 90 மில்லியன் இரான் இஸ்ரேல் இன் சொல்ல கேட்க வேண்டும் ஈரான் இந்த இப்போதைய ஆட்சி ஷா இன் ஆட்சியுடன் உடம உடன் ஒப்பிடும் பொது எவ்வளவோ மேல். ஷா இன் ஆட்சி , கொலையால் ஆட்சிக்குக்கு என்று cia ல் பயிற்றப்பட்ட SAVAK என்னும் இரகசிய போலீசால் கொலைகளே கொண்டே ஆட்சி. (அதனால் தான் ஷா இன் ஆட்சியை மக்கள் புரட்சியாக தூக்கி எறியப்பட்டு, ஆயதொல்லா கொமெய்னி இஸ்லாமிய அரசாங்கத்தை கொண்டுந்தார்) இங்கே சிலருக்கு வரலாறு தெரியாமல், இரானை பற்றி கதைப்பது, அல்லது வரலாற்று அம்சங்களைவேறு விடயங்களுடன் போட்டு குழப்புவது. (பின் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது). Youtube இல் விடயம் இருக்கிறது எங்கே என்று தெரிந்தால். இதன் மூல காரணத்தை இந்தபேட்டி சொல்கிறது ( அனால் 99% இப்படியானது மிகவும் சலிப்பு. ஏனெனில் விளாசல் இல்லை)
2 months 3 weeks ago
அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை; ஈரான் விளக்கம்! இஸ்ரேல் – ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் களம் இறங்கி ஈரானின் முக்கிய 3 அணு உலைகளை தகர்த்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில், அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இதேவேளை, அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுசக்தி நிலையங்களில் எதுவுமே இல்லை எனவும் அணுசக்தி நிலையங்களில் தீங்கு விளைவிக்கும் எந்த பொருட்களும் இல்லை எனவும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகள் அந்த அணுசக்தி மையங்களிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன எனவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. https://athavannews.com/2025/1436584
2 months 3 weeks ago
அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம் 22 JUN, 2025 | 11:23 AM ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய தலைநகரில் கட்டிடங்கள் பலத்தை சேதத்தை சந்தித்துள்ள என அவசரசேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது பெரிய அளவிலான அழிவு பல இரண்டு மாடிக்கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன, சில தரைமட்டமாகியுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு தெரிவித்துள்ளது. தரைமட்டமாகியுள்ள கட்டிடமொன்றையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ள ஏனைய கட்டிடங்களையும் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் வெளியிட்டுள்ளனர். அந்த பகுதியில் பல அவசரசேவை பணியாளர்களை காணமுடிகின்றது. வெடிபொருட்கள் மத்திய இஸ்ரேலில் விழுந்துள்ளதால் அப்பகுதிக்கு குண்டு அகற்றும் பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹைபா நகரும் தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதலை தொடர்ந்து ஆகக்குறைந்தது பத்து இடங்களிற்காவது அவசரசேவை பிரிவினரை அனுப்பியுள்ளோம் 10 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218117
2 months 3 weeks ago
இனி வரும் சில நாட்களில் ஈரானின் அடிய பார்த்து உலகமே வியக்க போகுது...................ஈரானுக்கு பின்னால் நிக்கும் பெரிய நாடுகள் மிகவும் ஆவத்தான நாடுகள்..............................வடகொரியா இனி இழப்பதற்க்கு எதுவும் இல்லை என அவர்களுக்கு நங்கு தெரியும் , வடகொரியாவின் இன்றைய அறிவிப்பு அமெரிக்காவுக்கு பெரும் தலையிடிய கொடுக்க போகுது😛...............................