Aggregator

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

2 months 2 weeks ago
சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி தொடர்பில் வௌியான தகவல் Dec 19, 2025 - 04:20 PM சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது. இன்று (19) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன. குறித்த தடுப்பூசியை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பில், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு உள்ள பொறுப்பிலிருந்து அவர்கள் எவ்விதத்திலும் தப்பித்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விநியோகப் பிரிவின் இணையத்தளத் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மாத்திரம் தரக் குறைபாடுகள் பரிசோதனை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 90 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். 'ஒன்டன்செட்ரோன்' மருந்திற்குள் பக்டீரியா காணப்பட்டமையே அண்மைய சம்பவமாகும். மேலும், குறித்த நிறுவனத்தின் மேலும் 9 மருந்துகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது மிகவும் பாரதூரமான விடயமாகும் என வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjcr02tk02x6o29nte2l40g3

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

2 months 2 weeks ago
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம் Dec 19, 2025 - 05:58 PM அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக ஈட்டுவதன் மூலம் டொலரின் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் ஊடாக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி குறித்துப் பின்வருமாறு விவரித்தார். முழுமையாக 6,282 வீடுகளுக்கு சேதம். 4,543 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம். எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் NBRO வினால் அனுமதி வழங்காத 6,877 வீடுகள் உட்பட மொத்தம் 17,648 வீடுகளுக்கு, மூன்று மாத காலத்திற்கு மாதமொன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அனர்த்த நிலைமை தணிந்த பின்னர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக 25,000 ரூபாய் வழங்கல். தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கல். முதற்கட்டமாக, முழுமையாக வீடுகளை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், NBRO பரிந்துரைகளைக் கொண்ட பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் அல்லது வீடுகள் சேதமடையாத போதிலும் அபாய நிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு ஜனவரி முதல் மூன்று மாத காலத்திற்கு 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்கள், பகுதியளவில் சேதமடைந்தவர்கள் அல்லது வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும் NBRO பரிந்துரையின் பேரில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கல். நெல், சோளம், நிலக்கடலை மற்றும் ஏனைய தானியங்களைப் பயிரிட்டுள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை உள்ளிட்ட செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். அடர்த்திக்கு ஏற்ப மிளகு, ஏலக்காய் மற்றும் கோப்பி ஆகிய பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் ( ஒரு மிளகு கொடிக்கு 250 ரூபாய்). கால்நடை மருத்துவ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கலப்பினப் பசுவிற்காக தலா 200,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 பசுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். ஒரு நாட்டு பசுவிற்காக 50,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 பசுக்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும். பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு விலங்கிற்கு 20,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். உயிரிழந்த ஒரு முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 2,000 கோழிகளுக்கு உதவி வழங்கப்படும். இறைச்சிக் கோழி ஒன்றிற்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 4,000 கோழிகளுக்கு உட்பட்டு (அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை) நட்டஈடு வழங்கப்படும். கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, காப்புறுதி கொண்டுள்ள படகுகளுக்கு, அக்காப்புறுதித் தொகையை 'சீனோர்' நிறுவனத்திற்கு வழங்கி அத்தரப்பினருக்கு புதிய படகுகளைப் பெற்றுக்கொடுத்தல். வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இழந்த ஒவ்வொரு மீனவருக்கும் 100,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கல். அனர்த்தத்தினால் சேதமடைந்த படகுகளை 'சீனோர்' நிறுவனம் மூலம் இலவசமாகத் திருத்திக் கொடுத்தல். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தோணியை இழந்தவர்களுக்கு 100,000 ரூபா பணமும், பாதிப்படைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகளும் வழங்கல். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 9,600 கைத்தொழில் நிலையங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கல். பகுதியளவில் சேதமடைந்த வர்த்தகக் கட்டடங்களுக்கு 5 இலட்சம் ரூபா அல்லது மதிப்பீட்டின் பின்னர் அதிகபட்சமாக 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கல். பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேச வர்த்தக நிலையங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடுப்பனவு வழங்கல். சிறிய கைத்தொழில்களுக்கு 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும், பெரிய கைத்தொழில்களுக்கு 25 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கல். https://adaderanatamil.lk/news/cmjcui1t802xco29n6co5fogn

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

2 months 2 weeks ago

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

Dec 19, 2025 - 05:58 PM

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார். 

டொலரின் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் உடனடி உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார். 

2026 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த டொலர் அளவை விட 500 மில்லியன் டொலர் மேலதிகமாக ஈட்டுவதன் மூலம் டொலரின் மீதான அழுத்தத்தைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதன் ஊடாக வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி குறித்துப் பின்வருமாறு விவரித்தார். 

முழுமையாக 6,282 வீடுகளுக்கு சேதம். 4,543 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம். எவ்வித சேதமும் ஏற்படாத போதிலும் NBRO வினால் அனுமதி வழங்காத 6,877 வீடுகள் உட்பட மொத்தம் 17,648 வீடுகளுக்கு, மூன்று மாத காலத்திற்கு மாதமொன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அனர்த்த நிலைமை தணிந்த பின்னர், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக 25,000 ரூபாய் வழங்கல். 

தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கல். 

முதற்கட்டமாக, முழுமையாக வீடுகளை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள், NBRO பரிந்துரைகளைக் கொண்ட பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் அல்லது வீடுகள் சேதமடையாத போதிலும் அபாய நிலை காரணமாக வீடுகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு ஜனவரி முதல் மூன்று மாத காலத்திற்கு 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். 

வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்கள், பகுதியளவில் சேதமடைந்தவர்கள் அல்லது வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும் NBRO பரிந்துரையின் பேரில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கல். 

நெல், சோளம், நிலக்கடலை மற்றும் ஏனைய தானியங்களைப் பயிரிட்டுள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.

 

மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை உள்ளிட்ட செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். 

அடர்த்திக்கு ஏற்ப மிளகு, ஏலக்காய் மற்றும் கோப்பி ஆகிய பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் ( ஒரு மிளகு கொடிக்கு 250 ரூபாய்). 

கால்நடை மருத்துவ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கலப்பினப் பசுவிற்காக தலா 200,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 பசுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 

ஒரு நாட்டு பசுவிற்காக 50,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 பசுக்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும். 

பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு விலங்கிற்கு 20,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 

உயிரிழந்த ஒரு முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 2,000 கோழிகளுக்கு உதவி வழங்கப்படும். 

இறைச்சிக் கோழி ஒன்றிற்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 4,000 கோழிகளுக்கு உட்பட்டு (அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை) நட்டஈடு வழங்கப்படும்.

 

கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள, காப்புறுதி கொண்டுள்ள படகுகளுக்கு, அக்காப்புறுதித் தொகையை 'சீனோர்' நிறுவனத்திற்கு வழங்கி அத்தரப்பினருக்கு புதிய படகுகளைப் பெற்றுக்கொடுத்தல். 

வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை இழந்த ஒவ்வொரு மீனவருக்கும் 100,000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கல். 

அனர்த்தத்தினால் சேதமடைந்த படகுகளை 'சீனோர்' நிறுவனம் மூலம் இலவசமாகத் திருத்திக் கொடுத்தல். 

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தோணியை இழந்தவர்களுக்கு 100,000 ரூபா பணமும், பாதிப்படைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்குஞ்சுகளும் வழங்கல். 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல். 

கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 9,600 கைத்தொழில் நிலையங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வழங்கல். 

பகுதியளவில் சேதமடைந்த வர்த்தகக் கட்டடங்களுக்கு 5 இலட்சம் ரூபா அல்லது மதிப்பீட்டின் பின்னர் அதிகபட்சமாக 50 இலட்சம் ரூபாய் வரை வழங்கல். 

பதிவு செய்யப்பட்டுள்ள பிரதேச வர்த்தக நிலையங்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கொடுப்பனவு வழங்கல். 

சிறிய கைத்தொழில்களுக்கு 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையும், பெரிய கைத்தொழில்களுக்கு 25 மில்லியன் ரூபாய் வரையும் வழங்கல்.

https://adaderanatamil.lk/news/cmjcui1t802xco29n6co5fogn

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

2 months 2 weeks ago
அடேங்கப்பா…. 56,000 பிச்சைக்காரர், சவூதிக்கு விசா எடுத்து… விமான சீட்டு வாங்கி போயிருப்பது ஒரு கின்னஸ் சாதனை. 😂 வாழ்த்துக்கள். பாகிஸ்தான் ஜிந்தாபாத். 🤣

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

2 months 2 weeks ago
தீர்வுகள் தானே வருவதில்லை. பொதுவாகவே உலகில் அரசியல் பேச்சுவார்ததைக்கு வரும் எந்த தரப்பும் முழுமையாக மற்றய தரப்பை ஏற்றுக் கொண்டு சமாதானப் பேச்சுவார்ததைக்கு வருவதில்லை. தீர்வுகளை கொண்டு வருவதும் இல்லை. தொடர்சசியான பேச்சுக்களின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை கட்டி வளர்தது தீர்வு திட்டத்தை இரு தரப்பும் இணைந்த தயாரிக்கிறார்கள். அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்று அழைக்கின்றனர். ஆனால் 1990,1994,2002 பேச்சுவார்ததையில் அது நடைபெறவில்லையே! அப்படி இருக்கையில் எப்படி தீர்வுகள் வரும். ஒரு தரப்பின் உள சுத்தி எப்படி உள்ளது என்று உரசிப் பார்தது அது பத்தரை மாற்று தங்கமா, என்று கேள்வி கேட்கும் நீங்கள் மறு தரப்பும் அதே போலவே உள சுத்தியுடன் இருக்கவில்லை அதுவும் கறள் கட்டிய இரும்பாகவே இருந்தது என்பதை ஏன் மறைக்கின்றீர்கள்?

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

2 months 2 weeks ago
ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது. ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்து கொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் கதை. வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பச்சை (காடு) மற்றும் நீல (கடல்) நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால் இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3டியில் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும். தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன. பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை. "காட்டைக் காப்பாற்ற வேண்டும், தீயவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்ற அதே ஒற்றை வரிக்கதை தான். குறைந்தபட்சம் திரைக்கதையிலாவது புதிதாக ஏதாவது செய்திருக்கலாம். படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. சரக்கு தீர்ந்து போனதைப் போல காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை. ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்களில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதில் ஆக்‌ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டிய அக்கறையை, கேமரூன் கதையின் ஆன்மாவில் காட்டவில்லை. எந்த காட்சியும் மனதைத் தொடும்படி இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை. சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். 2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. 'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே. அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஒரு உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்:ஃபயர் அண்ட் ஆஷ்’ Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

2 months 2 weeks ago

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!


ஜேம்ஸ் கேமரூன் என்றாலே பிரம்மாண்டம் தான் நம் நினைவுக்கு வரும். 2009-ம் ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘அவதார்’ படம் வெளியாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு அதன் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த அறிவிப்பை கேமரூன் வெளியிட்டிருந்தார். அதன்படி கடந்த ’அவதார் 2’ கடந்த 2022-ல் வெளியானது. தற்போது அதன் மூன்றாம் பாகம் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு பாகங்களில் காடு மற்றும் கடலை மையக் கருவாகக் கொண்டு பண்டோரா உலகத்தை வடிவமைத்த கேமரூன், மூன்றாவது பாகத்தில் நெருப்பை மையப்படுத்தி திரைக்கதையை எழுதியுள்ளார். ஜேக் சல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்த்திரி (ஜோ சால்டனா) தங்களின் குடும்பத்தையும், பண்டோராவையும் பாதுகாக்கப் போராடும் அதே பழைய கதைதான் இதிலும் தொடர்கிறது.

ஆனால், இம்முறை பண்டோராவில் இருக்கும் அனைத்து நாவிகளும் நல்லவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்குள்ளும் வன்முறை மற்றும் பொறாமை இருக்கிறது என்பதும் இதில் காட்டப்படுகிறது. மனிதர்களுக்கும் ஜேக் சல்லி கூட்டத்துக்கும் இடையிலான யுத்தத்தில் இம்முறை பண்டோராவின் 'சாம்பல் மக்கள்' எனப்படும் வராங் இனத்தைச் சேர்ந்த தீய நாவிகளும் இணைந்து கொள்கின்றனர். இவர்களிடமிருந்து பண்டோராவை ஜேக் சல்லி கூட்டம் காப்பாற்றியதா என்பதே ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் கதை.

வழக்கம்போலவே இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய பலமும் அதன் தொழில்நுட்பம்தான். முந்தைய பாகங்களில் பச்சை (காடு) மற்றும் நீல (கடல்) நிறங்கள் பிரதானமாக இருந்தன. ஆனால் இதில் நெருப்பு மற்றும் சாம்பல் சார்ந்த செந்நிறம் மற்றும் சாம்பல் நிறங்கள் திரையை ஆக்கிரமிக்கின்றன. ஒவ்வொரு பிரேமும் ஒரு ஓவியம் போலச் செதுக்கப்பட்டுள்ளது. முக்கியமான கதாபாத்திரங்களின் முகபாவனைகள் அவ்வளவு தத்ரூபமாக உள்ளன. நிச்சயம் இப்படம் விஎஃப்எக்ஸ் துறையில் ஒரு புதிய மைல்கல். நல்ல ஒலி, ஒளி தரம் கொண்ட பெரிய திரையில் 3டியில் பார்ப்பது ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும்.

தொழில்நுட்ப பிரம்மாண்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், கதையும் திரைக்கதையும் பார்க்கும்போது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றன. பல காட்சிகள் தேவையே இல்லாமல் இழுக்கப்படுகின்றன. குறிப்பாக, புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சிகள் மிக நீளமாக உள்ளன. கிட்டத்தட்ட முதல் ஒரு மணி நேரத்துக்கு படம் நகரவே இல்லை என்பதுதான் உண்மை.

"காட்டைக் காப்பாற்ற வேண்டும், தீயவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்ற அதே ஒற்றை வரிக்கதை தான். குறைந்தபட்சம் திரைக்கதையிலாவது புதிதாக ஏதாவது செய்திருக்கலாம். படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனம். மூன்று மணி நேரம், தொய்வான திரைக்கதையால் 30 மணி நேரம் போல தோன்றுகிறது. சரக்கு தீர்ந்து போனதைப் போல காட்சி அமைப்புகளில் எந்தவித புத்திசாலித்தனத்தையும் கேமரூன் இடம்பெறச் செய்யவில்லை.

hindutamil-prod%2F2025-12-19%2F1e5isibl%

ஜேக் சல்லி மற்றும் நெய்த்திரி கதாபாத்திரங்களில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. முதல் பாகத்திலும் இரண்டாம் பாகத்திலும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இதில் ஆக்‌ஷன் மற்றும் கிராபிக்ஸ் மீது காட்டிய அக்கறையை, கேமரூன் கதையின் ஆன்மாவில் காட்டவில்லை. எந்த காட்சியும் மனதைத் தொடும்படி இல்லை. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் ஆக்‌ஷன் காட்சிகளும் கடும் குழப்பம் ஏற்படுவதையும் தவிர்க்க இயலவில்லை.

சைமன் ஃப்ரான்லென் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை பின்னணி இசை தாங்கிப் பிடிக்கிறது. போர்க்களக் காட்சிகளில் இசை வேகம் கூட்டினாலும், முதல் பாகத்தில் மறைந்த ஜேம்ஸ் ஹார்னரின் மனதைத் தொடும் மெல்லிசை இதில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும்.

2009-ஆம் ஆண்டு புதுமையான சிந்தனை, விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘அவதார்’ என்ற அற்புதத்துடன் வந்த ஜேம்ஸ் கேமரூனிடம் இருந்து இப்படியொரு சலிப்பான படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘ஏலியன்ஸ்’ என்று ரசிகர்களுக்கு திகட்டாத புதுமைகளை தந்த கேமரூன், ‘அவதார்’ என்ற மாய வளையத்திலிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

'அவதார்: ஃபையர் அண்ட் ஆஷ்' கண்களுக்குப் பெரும் விருந்து என்பது நிச்சயம். தொழில்நுட்பமும், கிராபிக்ஸ் மாயாஜாலங்களும் மட்டுமே எனக்கு போதும் என்று நினைப்பவர்களை இந்தப் படம் ‘ஓரளவு’ கவரும். ஆனால், ஒரு நல்ல கதையையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமே. அழகான ஃப்ரேம்கள், பிரம்மாண்ட காட்சியமைப்புகள் என பார்த்து பார்த்து செதுக்கியும் ஒரு உயிரற்ற ஓவியமாக பரிதாபமாக நிற்கிறது இந்த ‘அவதார்:ஃபயர் அண்ட் ஆஷ்’

Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

2 months 2 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் நிதி நன்கொடை Published By: Digital Desk 2 19 Dec, 2025 | 02:32 PM “Rebuilding Sri Lanka” நிதியத்துக்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் 100 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம் தொழில் அமைச்சில் நேற்று (18) மாலை இந்த நன்கொடையினை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சமீபத்தில் டித்வா சூறாவளி காரணமாக வரலாறு காணாதளவுக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் பலர் காணாமல் போயுள்ளனர். மேலும், நாடு முழுவதும், குறிப்பாக கொழும்பு மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நாட்டின் பல பிரதேசங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமடைந்திருந்தன. இவ்வாறான நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் நூறு மில்லியன் ரூபாய் (ரூ.100,000,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் சுஜித் ஜெயந்த் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் நிதி நன்கொடையை வழங்கினர். இந்நிகழ்வில் தொழில் துறைப் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/233833

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

2 months 2 weeks ago
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0 - 22 வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது. பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர். புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Tamilmirror Online || 56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

2 months 2 weeks ago

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 04:38 - 0     - 22

image_3b31367f00.jpg

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.   

பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 6,000 க்கும் மேற்பட்டோரை பாகிஸ்தான் அதிகாரிகளே விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

புனிதப் பயணம் (உம்ரா) என்ற பெயரில் சவுதி அரேபியாவுக்கு சென்று மெக்கா மற்றும் மதினா நகரங்களில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்ட 56,000 பேர் தற்போது பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


Tamilmirror Online || 56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

2 months 2 weeks ago

Editorial   / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0     - 24

image_5519cd5615.jpg

 

பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெற்றது.

 சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாகவும், ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 Tamilmirror Online || பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

2 months 2 weeks ago
Editorial / 2025 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0 - 24 பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை (19) அன்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிப்போர்கள் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே, இந்த இரு இன நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நாய் இனங்கள், உரிமையாளரின் கட்டுப்பாட்டை மீறி ஆக்ரோஷமாக செயல்படுவதாகவும், ரோட்டில் செல்வோரை கடித்துக் குதறுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு

2 months 2 weeks ago
19 Dec, 2025 | 01:04 PM "தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது. குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர். அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு | Virakesari.lk

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு

2 months 2 weeks ago

19 Dec, 2025 | 01:04 PM

image

"தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது" என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர்ப் பலகை வைப்பது என்றும், விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என்றும் வலி.வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (18) தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலையில், இக்கட்டடமானது சட்டவிரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை ஒன்று வைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, சட்டவிரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்துக்கு, சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் எனவும் பத்மநாதன் சாருஜனால் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

குறித்த பிரேரணைக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அதேவேளை விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவது என சபையில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் அரசியல் கட்சி எதுவும் தலைமை தாங்காது. மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படுமாயின் தாமும் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்தனர்.

அதன்போது, நடத்தப்படும் போராட்டம் மக்கள் போராட்டமாகவே முன்னெடுக்கப்படும் என சபையில் தெரிவிக்கப்பட்டது. 

அதேவேளை, தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணைத் தலைமை சங்கநாயக்க பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் புத்தசாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்துக்கு யாழில் தேசிய மக்கள் சக்தியினர் எதிர்ப்பு | Virakesari.lk

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!

2 months 2 weeks ago
19 Dec, 2025 | 12:54 PM நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது. இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு! | Virakesari.lk

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!

2 months 2 weeks ago

19 Dec, 2025 | 12:54 PM

image

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான  சந்திப்பு தமிழ்நாட்டில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (19) நடைபெற்றது.

இதன்போதான கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது.  

அத்துடன் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு முதலான விடயங்கள் குறித்தும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. 

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு! | Virakesari.lk