Aggregator

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
மழைக்குள் நடக்கும் ஐ . பி . எல் மாட்ச் மாதிரி நீதியும் ஆங்காங்கே ஓவரை கூட்டி குறைச்சு கொண்டு போகிறது போல் இருக்கு . ......!

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
இல்லை. சீமான் சென்னை உயர் நீதி மன்றத்தில் கேட்டது, வழக்கை விசாரியுங்கள் என்று அல்ல. இப்போது மாமா உச்ச நீதி மன்றம் செய்தது போல் விசாரிக்காமல் அடித்து மூடுங்கள் என்பதையே. ஆனால் அரிதாக ஒரு நியாயமான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி - இது பாரிய கிரிமினல் குற்றசாட்டு இதை அப்படி நூக்க முடியாது… ஆனால் பொலிசும் இழுத்தடிக்க கூடாது… என காலவரையறை கொடுத்து… மிக, மிக நியாயமான தீர்ப்பை கொடுத்தார்…. தான் சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டதை தாமதாமாக உணர்ந்த சீமான் டெல்லிக்கு ஓடி பாஜக தயவில் வழக்கை அடித்து நூத்தார். இதுதான் நடந்த தரவு. யாழில் பல செய்திதிரிகளில் இதை காணலாம். சங்கு மட்டும் அல்ல, சவமும்தான் சுட்டால் வெண்மை (சாம்பல்) தரும்🤣. உப்புகல்லை வைரம் எண்டு சொன்னால்…. நம்பி ஒப்பு கொள்ளும் மூடருக்கு முன்னால்… - கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்-

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

2 months 2 weeks ago
ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது! ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது. இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும். இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது. மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன. இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர். உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர். https://athavannews.com/2025/1449960 ############### ################## @Justin அந்த மருந்து தயாரிக்கப் பட்டதே... திராவிட ஊழல் மலிந்த, தமிழ் நாட்டில் தான். 😮 ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல், ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும், "குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி, 😂 கருத்து எழுதினால்... இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 🤣

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
ஒரு நீதிமன்றம் அளித்த தண்டனையை, இன்னொரு நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அந்த நீதிமன்றத்தை கேலிக்குள்ளாக்குகிறது. எதற்கு இத்தனை நீதிமன்றங்கள்? குற்றவாளிகள் துணிந்து தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவார்கள். இந்த நீதிமன்றத்தில் இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலையாகிவிடலாமென்கிற துணிவு. இவர் நாளைக்கே பயமில்லாமல் இன்னும் எத்தனை பேரை சீரழித்து கொலை செய்யபோகிறாரோ? அப்படி நடந்தால்; அவரை விடுதலை செய்த நீதிபதியே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 months 2 weeks ago
உண்மைதான் Suvy, பழைய பாடலில் நான் ரசித்துக் கேடகும் பாடலில் இதுவும் ஒன்று. நல்லதொரு அமைதியான பாடல். திருச்சி லோகநாதனின் அருமையான குரலில் அமைதி தரும் நல்லதொரு பாடல்.

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

2 months 2 weeks ago
கோசான் , 1967க்குப் பிறகு தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது 'தமிழ்நாடு வெற்றிக் கழகம்' (தவெக) ‘ஆட்சியில் பங்கு’ என்று முன்வத்திருப்பது கண்டிப்பாக தேசியக் கட்சிகளை நிச்சயம் கவர்ந்திருக்கும். ஆட்சியில் பங்கு என்றாலும் கடிவாளம் தவெக விடம்தான் இருக்கும். எல்லோருமே பாஜக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையே கவனிக்கின்ற நேரத்தில், காங்கிரஸ் சத்தமின்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஜய்க்குச் சேரும் கூட்டத்தைப் பார்த்து திமுக திகைத்திருக்கிறது. அதேநேரம் அவருக்குச் சேரும் கூட்டம் மற்றக் கட்சிகளை அவர்பால் இழுத்துச் செல்லலாம். தை பிறக்கட்டும். காட்சிகள் தெரியும்

பொன்சேகா மீது போர்க்குற்றம் ஏன் முன்வைக்கப்படவில்லை? மகிந்த அணியினர் கேள்வி

2 months 2 weeks ago
அவருக்கெதிராக போர்குற்றச்சாட்டுக்களை கூட பணியாற்றியவர்கள் வைக்கலாம், நிரூபிக்கலாம். கூட்டாக போயிருந்தது வீரக்கதைகளை பரிமாறலாம். குற்றச்சாட்டுக்கள் இன்னும் சூடு பிடிக்கவில்லை. பிடிக்கும்போது எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம், அதற்காகவே காத்திருக்கிறோம்!

விமல் வீரவன்ச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலை!

2 months 2 weeks ago
இனியென்ன, போட்டுக்குடுத்து விட்டு வெளியேறவேண்டியது. பசிலை போட்டுக்கொடுத்ததும் இவர்தானாமே, பேசிக்கொள்கிறார்கள். முகத்தில் அவ்வளவு கலக்கம், வெளியில் சவால் விட்டுக்கொண்டு திரிந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா - சுமந்திரனுடன் சந்திப்பு: வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பேச்சு !

2 months 2 weeks ago
பேச்சுவார்த்தை நடத்துபவர்களும் அதில் பங்குபற்றுவோரும் தமிழரை வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள். அவர்களது பிழைப்புக்கு உதவுவது தமிழர் விவகாரம். கூத்தாடிகள் தேடுவது ஊத்தைவாளிகளையே! இல்லையென்றாலும் இதுகள் வாசலில் போய் நின்று தட்டுகிறார்களே.

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
“சங்கு சுட்டாலும் வெண்மைதரும்” சுடச் சுட சீமானும் வெண்மையாவதுபோல் தெரிகிறது.🤩 நன்றாகப் பெரும் போறனையில் போட்டு சுடுங்கள். நற்றுணையாவது நமச்சிவாயவே.🙏

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
வழக்கை விசாரித்து முடித்து வையுங்கள் என்று வழக்கிட்டவரே சீமான் தான். எனவே தன்னிடம் எதை கேட்டாலும் செய்ய தயாராகவே வழக்கை தொடர்ந்து இருப்பார். போன தடவை விஜயலட்சுமி முரண்டு பிடித்து தொடர விரும்பினார். ஆனால் நீதிபதி அவருக்கு குட்டு வைத்து வழக்கை சமமாக்கினார். அடுத்த தடவை விஜயலட்சுமி இறங்கி வந்து நீதிபதியின் கோரிக்கையை ஏற்று சீமான் விரும்பியபடி கேட்டபடி இனி என்னை தொந்தரவு செய்ய கூடாது என்று வழக்கை முடித்து மூடிவிட்டார். இதை வைத்து கூத்தாட்டம் போட்ட அனைவருக்கும் வாயில் பூட்டு. இனி வெறும் வாயில் கூட சீமான் என்று வரக்கூடாது என்பது கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஆனால் கம்பி எண்ண முடியாது அல்லவா.

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

2 months 2 weeks ago
தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்! 09 Oct, 2025 | 12:47 PM தலைமன்னாரிலிருந்து தீடைப் பகுதியில் உள்ள இராமர் பாலம் வரை சென்று சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான படகுச் சேவையினை ஆரம்பிக்க அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படகு சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (8) மாலை நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான இக்கலந்துரையாடலில் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் உள்ள கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதிலிருந்து, குறித்த இடம், மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரைக் காலமும் இருந்து வந்தது. 2015ஆம் ஆண்டு இந்த கடற்கரைப் பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இராமர் பாலத்தை பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் படகுச்சேவையை பயன்படுத்துவதற்கான கோரிக்கையினை மன்னார் மக்கள் முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் இக்கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச்சேவையினை மேற்கொள்வது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு, படகுச் சேவைக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்ற அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என்றும் இதர வருமானங்களுக்கான திட்டங்களை மன்னார் பிரதேச சபையின் ஊடாக வகுத்து, அவற்றை செயற்படுத்தலாம் என்றும் அரச அதிபர் தனது உரையில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்குபற்றிய தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் உள்ளிட்டோர், மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில், மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகவும் குறைந்துள்ளதையும் இன்னும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டி, படகுச் சேவைக்கான நிதி வசூலிக்கும் பொறுப்பினை தமக்குத் தருமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கைக்கு பதிலளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகல்ல, அவ்வாறு செயற்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். அந்தக் கருத்தினை மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆதரித்துப் பேசினார். அத்தோடு, கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் மேற்படி கருத்தினை பிறிதொரு நாளில் கூடிப் பேசித் தீர்மானிப்பதென மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்து கலந்துரையாடலை நிறைவு செய்தார். https://www.virakesari.lk/article/227307

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

2 months 2 weeks ago

தலைமன்னாரிலிருந்து இராமர் பாலம் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவை விரைவில்!

09 Oct, 2025 | 12:47 PM

image

தலைமன்னாரிலிருந்து தீடைப் பகுதியில் உள்ள இராமர் பாலம் வரை சென்று சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான படகுச் சேவையினை ஆரம்பிக்க அனுமதி பெறப்பட்டதைத் தொடர்ந்து, படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்த படகு சேவையினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (8) மாலை நடைபெற்றது.   

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான இக்கலந்துரையாடலில் மன்னார் பிரதேச சபைத்  தவிசாளர் உட்பட உறுப்பினர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் உள்ள கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையின் பராமரிப்பில் நீண்ட காலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வட மாகாணத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட கடற்கரை பூங்கா மன்னார் பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டதிலிருந்து, குறித்த இடம், மன்னார் பிரதேச சபையின் கண்காணிப்பிலேயே இதுவரைக் காலமும் இருந்து வந்தது.

2015ஆம் ஆண்டு இந்த கடற்கரைப் பூங்கா பகுதி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு உட்பட்ட பகுதியாக கொண்டுவரப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் முன்பிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இராமர் பாலத்தை பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் படகுச்சேவையை பயன்படுத்துவதற்கான  கோரிக்கையினை மன்னார் மக்கள் முன்வைத்ததுடன் அரச மட்ட தரப்பிலும் இக்கோரிக்கை பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச்சேவையினை மேற்கொள்வது தொடர்பில்  முடிவுகள் எடுக்கப்பட்டு, படகுச் சேவைக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள படகு சேவைக்கான கட்டண வசூலிப்பை வன ஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. 

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், படகுச் சேவைக்கான கட்டண வசூலிப்பை 50க்கு 50 என்ற அடிப்படையில் வன ஜீவராசிகள் திணைக்களமும் மன்னார் பிரதேச சபையும் செயற்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான படகுச் சேவையை நடைமுறைப்படுத்தலாம் என்றும்  இதர வருமானங்களுக்கான திட்டங்களை மன்னார் பிரதேச சபையின் ஊடாக வகுத்து, அவற்றை செயற்படுத்தலாம் என்றும் அரச அதிபர்  தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்குபற்றிய தலைமன்னார் ஊர்மனை கிராமத்தின் உறுப்பினர் உள்ளிட்டோர், மன்னார் பிரதேச சபை கடற்கரை பூங்காவை நீண்ட நாட்களாக பராமரித்து வரும் நிலையில், மன்னார் பிரதேச சபையின் வருமானம் மிகவும் குறைந்துள்ளதையும் இன்னும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டி, படகுச் சேவைக்கான நிதி வசூலிக்கும் பொறுப்பினை தமக்குத் தருமாறு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கைக்கு பதிலளித்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அதிகாரி பாத்தியா மடுகல்ல, அவ்வாறு செயற்பட முடியாது. வன ஜீவராசிகள் திணைக்களம் பல்வேறு இடங்களில் இவ்வாறான சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமக்கு உட்பட்ட பகுதியில் குறித்த கடற்கரை பூங்கா காணப்படுவதனால் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைக்கு ஏற்ப செயற்பட  வேண்டும் எனத் தெரிவித்தார். 

அந்தக் கருத்தினை மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆதரித்துப் பேசினார். 

அத்தோடு, கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் மேற்படி கருத்தினை பிறிதொரு நாளில் கூடிப் பேசித்  தீர்மானிப்பதென மன்னார் அரசாங்க அதிபர் தெரிவித்து கலந்துரையாடலை நிறைவு செய்தார்.  

https://www.virakesari.lk/article/227307

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

2 months 2 weeks ago
மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன் 09 Oct, 2025 | 02:07 PM புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில், மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை. இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/227315

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

2 months 2 weeks ago

மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்த திட்டம்! - இலங்கை தமிழ் அரசு கட்சியை சாடுகிறார் தீபன்

09 Oct, 2025 | 02:07 PM

image

புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக உள்ள தேவிபுர மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவதற்கு எதிராக இன்று (9) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன், மாவீரர் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக அடையாளப்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை மாற்றிக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்டம் நடத்துவதாக எடுத்த முடிவு கைவிடப்பட்டது. 

ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்த இடத்துக்குச் சென்ற போராளிகள் மாவீரர் குடும்ப நல காப்பகத்தின் தலைவர் தீபன் ஊடகங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கையில்,

மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசு கட்சியினர் நிர்வாகத்தினை தெரிவு செய்து வருகின்றனர். அந்த நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை நியமிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இல்லத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டுவர எண்ணுகின்றனர். அதற்கு ஒருபோதும் நாங்கள் சம்மதிக்கப் போவதில்லை.

இதேபோல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன்னெடுத்ததால் நாங்கள் வீதிக்கிறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/227315

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் பெண் : ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே பெண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் ஆண் : உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் .......! --- அழகூரில் பூத்தவளே ---

தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - தஷ்வந்த் விடுவித்த உச்ச நீதிமன்றம்

2 months 2 weeks ago
இந்திய நீதி துறையின் இலட்சணம் - சந்தி சிரிக்கிறது. இரெட்டை கொலை. ஒருவர் அருகில் உள்ள குழந்தை, மற்றது தாய். வழக்காடிய நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அப்படி என்ன கண்மூடித்தனமாகவா இருந்திருப்பார்கள்? இவரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம் மீள் விசாரணைக்கு கூட ஆணையிட்டதாக தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை புகாரை விசாரிக்காமல் தடுத்து, குற்றம் சுமத்தபட்டவரும், சுமத்தியவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆணையிட்ட “சாத்தப்பன் பஞ்சாயத்து” தானே இந்திய உச்ச நீதிமன்றம். கோமிய குடுக்கிகள் நீதிபதியானால், மைனர் குஞ்சுகளுக்கு கொண்டாட்டம்தான். அண்மையில் ஒரு சங்கி வக்கீல் தலைமை நீதிபதி மீது சப்பாத்தை வீசி தாக்கியுள்ளார். அந்தளவுக்கு சங்கிகளின் காலில் கிடக்கிறது இந்திய நீதித்துறை.