Aggregator
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,ஆட்டுக்கால் சூப் குடிப்பது எலும்புகளுக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகளை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்
கட்டுரை தகவல்
எழுதியவர், க.சுபகுணம்
பதவி, பிபிசி தமிழ்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள்.
காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் அவதிப்படும் போது, வீட்டில் ஆட்டுக்கால் சூப் வைத்துக் கொடுப்பார்கள்.
இப்படி, பல விஷயங்களுக்கு ஆட்டுக்காலை சூப் வைத்துக் குடிக்குமாறு வலியுறுத்தும் அளவுக்கு அதில் அப்படி என்ன இருக்கிறது?
உண்மையாகவே ஆட்டுக்கால் சூப், நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக எலும்பு மற்றும் மூட்டுகளுக்கு வலிமையை வழங்குகிறதா? இதைத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர்களிடம் பேசினோம்.
ஆட்டுக்கால் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலுக்குத் தேவையான, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் ஆட்டுக்காலில் இருந்து கிடைப்பதாக ஹார்வர்ட் பொது சுகாதாரக் கல்லூரியில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது.
ஆட்டு இறைச்சியில், குறிப்பாக அதன் கால் எலும்புகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நமது எலும்புகள், மூட்டுகள், முடி, சருமம், ஆற்றல், நோய் எதிர்ப்பாற்றல் என்று பல வகைகளில் நன்மை பயப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்.
ஆட்டுக்காலில் கொலாஜென் மற்றும் ஜெலட்டின் நிறைந்துள்ளதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக். இந்தக் கூறுகள், மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும், மூட்டு வலிக்கு நிவாரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அதுமட்டுமின்றி கொலாஜென் சரும ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் உதவுவதாகக் கூறுகிறார் ரம்யா.
அவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென், மூட்டுகளில் உயவுப் பொருளாகச் (lubricant) செயல்படுவதாகக் குறிப்பிடுகிறார். அதோடு, அவை சருமத்தில் சுருக்கம் போன்ற முதிர்ச்சி அடைவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைப்பதாகவும், ஆட்டுக்கால் சூப்பை தொடர்ச்சியாகப் பருகுவது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் எனவும் தெரிவித்தார்.
படக்குறிப்பு,ஆட்டுக்காலில் இருக்கும் கோலாஜென் எலும்பு மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் எலும்புகள், சருமம் மட்டுமின்றி உடலின் பல செயல்பாடுகளைச் சீராக வைத்துக்கொள்ள உதவுவதாக விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா.
அவரது கூற்றுப்படி, அதிலுள்ள கிளைசீன், ப்ரோலீன் போன்ற அமினோ அமிலங்கள், குடல் செயல்பாடுகளைச் சீராக்க உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டைச் சீரமைப்பதன் மூலமாக உடலின் நச்சு நீக்க செயல்முறையையும் பேணுகின்றன.
"பாரம்பரியமாகவே, தமிழ்நாட்டில் காய்ச்சல், எலும்பு முறிவு போன்றவற்றை எதிர்கொள்ளும் நபர்களுக்கு, ஆட்டுக்கால் சூப் கொடுப்பது அறிவுறுத்தப்படுகிறது. அதற்குக் காரணம், வேகமாக குணமடைவதற்கான ஊட்டச்சத்து, வலிமை மற்றும் ஆற்றலை அவை வழங்குவதே" என்கிறார் ரம்யா.
ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் நல்லதல்ல?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,ஆட்டுக்காலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்
ஆட்டுக்கால் சூப் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைச் செய்தாலும் அவற்றில் கொழுப்பு அளவு அதிகம் இருப்பதால் அவற்றை இதய நோய், அதீத கொழுப்பு, உடல் பருமன் போன்ற பிச்னைகள் உள்ளவர்களுக்கு அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரம்யா.
அவற்றைச் சமைக்கும் விதத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறார் அவர்.
"முழுமையாகச் சுத்தப்படுத்தப்படாத எலும்புகளில் சால்மொனெல்லா அல்லது ஈ.கோலி போன்ற பாக்டீரிய தொற்றுகள் இருப்பதற்கான அபாயம் உள்ளது. ஆகவே, அவற்றைச் சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் தேவை" என வலியுறுத்தும் ரம்யா, நன்கு சமைக்கப்படாத ஆட்டுக்கால்களை உட்கொள்வதிலும் இத்தகைய ஆபத்துகள் இருக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்.
உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருப்பவர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரக பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இதை எடுத்துக்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.
பொதுவாக, ஆட்டுக்கால்களில் இருக்கும் முழு பயன்களையும் பெற வேண்டுமெனில், அவற்றை 10 முதல் 12 மணிநேரம் வரை, மெல்லிய வெப்பத்தில் தொடர்ச்சியாக வேகவைக்க வேண்டும் என்கிறார் அவர்.
படக்குறிப்பு,மிகக் குறைந்த உடல் எடை கொண்டவர்களுக்கு, சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் நல்ல பயன்கள் கிடைப்பதாகக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்
ஆனால், "இன்றைய வாழ்க்கை முறையில் அது சாத்தியமில்லை. வீட்டில் வழக்கமாகச் சமைக்கும் முறையில்கூட ஓரளவுக்கு அந்த ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதால், வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை என்ற அளவில் சீராக எடுத்துக்கொண்டாலே அதன் பயன்கள் உடலுக்குக் கிடைக்கும்," என்று விளக்கினார்.
"சுமார் 10 மணிநேரம் தொடர்ந்து மிதமான சூட்டில் சமைப்பதன் மூலம் அவற்றில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துகளும் சுமார் 95% கிடைக்கும். ஆனால், அப்படித்தான் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று இல்லை.
வழக்கமான முறையில் சமைத்துச் சாப்பிட்டாலே ஆட்டுக்காலில் இருக்கும் சத்துகள் 50 முதல் 75 சதவிகிதம் வரை உடலுக்குக் கிடைக்கும். எனவே 10 மணிநேரம் சமைக்க வேண்டும் எனக் கருதி அவற்றைத் தவிர்ப்பதைவிட, வழக்கமான முறையில் சமைத்து தொடர்ந்து உட்கொள்வது சிறந்தது," என்கிறார் திவ்யா.
ஆட்டுக்கால் சூப் யாருக்கெல்லாம் அவசியம்?
ஆட்டுக்கால்களில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், கொழுப்பு அதிகமுள்ள நபர்களுக்கு அதைப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறும் திவ்யா சத்யராஜ், ஆட்டுக்கால் சூப் எலும்புகளை மட்டுமின்றி கிட்டத்தட்ட மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுவதாகக் குறிப்பிட்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கான உணவுமுறையில் ஆட்டுக்கால் சூப்பையும் தான் பரிந்துரைப்பதாகக் கூறுகிறார் அவர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
"பொதுவாக கீமோதெரபி சிகிச்சையில் பல பக்கவிளைவுகள் உள்ளன. அதை மேற்கொள்வோரால் பெரிதாகச் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் நிச்சயமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாக வேண்டும். ஆட்டுக்கால் சூப்பில் அத்தகைய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருப்பதால் அதைப் பருகுவது ஆரோக்கியத்திற்கு உதவும்," என்றார்.
கீமோதெரபியால் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் குறையும் எனக் கூறிய திவ்யா, அதை மேம்படுத்த ஆட்டுக்கால் சூப் உதவும் என்பதும் தான் அதை அதிகம் பரிந்துரைக்க ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.
ஜிம் செல்பவர்கள் இதை உட்கொள்வது உடலை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுவதாகக் கூறும் திவ்யா, புரோட்டீன் பவுடர் போன்றவற்றை உட்கொள்வதைவிட, இவற்றில் அதிக நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவித்தார்.
இவைபோக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், உடல் எடைக் குறைபாடு உடையவர்கள், சைனஸ் பாதிப்பு உள்ளவர்கள், பலவீனமான எலும்புகளைக் கொண்டவர்கள் இதைச் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்றும் விளக்கினார் திவ்யா.
அதுமட்டுமின்றி, முடி உதிர்வு பிரச்னையைக் குறைப்பதிலும் இது பயனளிப்பதாகக் குறிப்பிடும் அவர், ஆட்டுக்கால்களில் இருக்கும் கோலாஜென் உள்படப் பல கூறுகள், பலவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்குவதாகக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்
குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி
குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு உலக வங்கி 150 மில்லியன் டொலர் நிதியுதவி
22 JUN, 2025 | 01:08 PM
(நா.தனுஜா)
இலங்கையில் தூய, தரமான, குறைந்த செலவிலான வலுசக்தி உற்பத்தி செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக 150 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கிக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
இச்செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையினால் குறைந்த செலவில் பாதுகாப்பானதும், நிலைபேறானதுமான வலுசக்தியை உற்பத்தி செய்யமுடியும் எனவும், இது அதிக செலவில் இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருளில் நாடு தங்கியிருப்பதைக் குறைப்பதற்கும், சோலார் மற்றும் காற்று மூலமான வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் உலக வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
'இச்செயற்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் குறைந்த விலையில், தீங்கற்ற மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.
இந்த இலக்கை யதார்த்தபூர்வமாக அடைந்துகொள்வதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் தனியார் துறையினருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வலுசக்தி உற்பத்தியில் இலங்கை அடையவிருக்கும் நிலைமாற்றமானது தூய வலுசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், வலுசக்திக் கிடைப்பனவை மேம்படுத்துவதற்கும், நீண்டகால அடிப்படையிலான வலுசக்தி மீளெழுச்சியைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பாக அமையும் என சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் இமாத் என் ஃபகோரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!
சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!
-சாவித்திரி கண்ணன்
ஆருயிராய் நினைத்த அண்ணன் தன்னையே வேரறுப்பான் என தயாநிதிமாறன் நினைக்கவில்லை. ஆனால், இந்த இரு சகோதரர்களும் தமிழகம் மட்டுமின்றி, இந்திய காட்சி ஊடகத்துறையில் கருவறுத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அந்த சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தில் புதைந்திருக்கும் எலும்புக் கூடுகளும் எண்ணற்றவை;
எத்தனையெத்தனையோ நிறுவனங்கள், கலைஞர்கள், தொழில் முகவர்கள், ஊழியர்கள், அரசு அதிகாரிகளின் பேரழிவிலே கட்டி எழுப்பப்பட்ட சாம்ராஜ்யம் தான் சன் குழுமம்!
அரசியல் அதிகார பலத்துடன் ஒரு ஆக்டோபஸ் மிருகத்தைப் போல, அடங்காப் பசியுடன் போட்டியாளர்களை அழித்தொழித்து விழுங்கி ஏப்பம் விட்ட நிறுவனம் தான் சன் குழுமம். அண்ணனும், தம்பியும் கைக் கோர்த்து ஆடிய அதிகார ஆட்டங்களை பல வால்யூம்களாக எழுதலாம். இன்று அவர்களுக்குள்ளேயே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணனை தொழில் சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாக்க தம்பி செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். அதே போல தம்பியை அரசியலில் முன்னினைபடுத்த அண்ணன் செய்த ஊடக நரித்தங்கள் சொல்லில் அடங்காதவை. இதுவே கருணாநிதி குடும்பமும், மாறன் சகோதரகள் குடும்பமும் பிரியக் காரணமானது. ஆனால், விரைவில் ஒன்று பட்டனர். இந்த காலகட்டத்தில் நான் எழுதிய நூல் தான் சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும்.
இவர்கள் துளிர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி தொடர்ந்து அணுக்கமாக அவதானித்து வருகிறேன் நான்!
1989 ஆம் ஆண்டு வாக்கில் குங்குமம் வார இதழில் நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளனாக கட்டுரைகள், புகைப்படங்கள் தந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கலாநிதியும், தயாநிதியும் பூமாலை என்ற வீடியோ கேசட் கொண்டு வந்தனர். அதில் குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் போன்றவற்றில் வேலை பார்த்த பத்திரிக்கையாளர்களையே ஊதியம் தராமல் பயன்படுத்திக் கொண்டனர். 1990-ல் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது வீடியோ கேசட் கடைகளை மிரட்டி விற்பனை செய்ய வைத்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலிமாறன் நகர்புற அமைச்சராகப் பதவி பெற்ற வாய்ப்பில் ஏற்பட்ட தொழில் அதிபர்கள் தொடர்புகளால் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.
1992- அக்டோபரில் இந்தியாவின் முதன்முதல் சேட்டிலைட் சேனலாக ZEE தொலைகாட்சி வந்தது. உடனே தன் மகன்களுக்கு காட்சி ஊடகத்தில் இருக்கும் ஆர்வத்தை அறிந்திருந்த மாறன் ஏப்ரல் 14 1993-ல் சன் குழுமத்தை ஆரம்பித்தார்.
திமுக கழகத்தின் நிதியைத் தந்து, அதுவும் போதவில்லை என மந்தைவெளி சிட்டி யூனியன் வங்கியில் கட்சி சொத்தை அடமானம் வைத்து வாங்கப்பட்ட நிதியில் ஆரம்பிக்கப்பட்டது தான் சன் தொலைக்காட்சி.
அவர் தான் சேர்மன் தயாளு அம்மாள், மல்லிகா மாறன் இருவரும் பெயருக்கு இயக்குனர்கள். கலாநிதி, தயாநிதி, ஸ்டாலின் மூவரும் பங்குதாரர்கள். இது தான் தொடக்கம். ஆனால், இன்றைக்கு சுமார் 98 சதவிகித பங்குகளை தன் வசம் வைத்திருக்கிறார் கலாநிதி எனச் சொல்லப்படுகிறது. இதன் மதிப்பு லட்சம் கோடிக்கும் அதிகமாகும்.
முரசொலி அலுவலகத்தையே முதலில் பயன்படுத்தியதும், பிறகு அறிவாலயத்திற்கு எதிர் வாடையில் உள்ள சென்சூரி பிளாசாவில் 2000 சதுர அடிக்கு வாடகையில் இருந்து அதையும் தரமுடியாமல் அறிவாலயத்திற்கே வந்ததும், ஒவ்வொரு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடமும் ரூபாய் ஐயாயிரம் என்றாலும், பத்தாயிரம் என்றாலும் தொடர்ந்து பல முறை தானே போனில் நச்சரித்து பேசி வாங்கிய கலாநிதியின் பொருளாதார நெருக்கடிகளும் அவருக்கு மறந்து போயிருக்கலாம்.
2000 ஆம் ஆண்டு சுமங்கலி கேபிள் விஷனை தயாநிதி மாறன் தான் தொடங்கினார். அப்போது தமிழகம் முழுமையும் 30,000 கேபிள் ஆப்ரேட்டர்கள் இருந்தனர். இவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லோக்கல் சேனல் நடத்தி வந்தனர். சுமார் 200 பேராவது எம்.எஸ்.ஓ நடத்திக் கொண்டிருந்தனர். இதில் பலர் தொழிலைவிட்டே விரட்டி அடிக்கப்பட்டனர். சிலர் நடுத்தெருவிற்கு வந்தனர்,. ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர். அங்குமிங்கும் சில கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. சரண்டரானவர்கள் மட்டுமே தப்பித்தனர். மத்தியி பாஜகவுடன் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் கலைஞர் ஆட்சி, மாநகராட்சியில் ஸ்டாலின் மேயர். கருணாநிதி குடும்ப அதிகாரம் கோலோச்சிய காலம் அது.
சென்னையில் சிட்டி கேபிள், ஹாத்வே, ஏ.எம்.என் போன்றவர்கள் கேபிள் நெட்வொர்க்கில் இருந்தனர். இவர்கள் கேபிள் வயர்களை இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அறுத்து எறிந்தவர் தயாநிதி. அவரே களத்தில் இறங்கி ஒரு பேட்டை ரவுடி போல செயல்பட்ட காலகட்டங்கள் அவை.
இதே போல 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியிலே தயாநிதி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது அப்போது தமிழில் சேனல் தொடங்க விண்ணப்பித்து இருந்த 60 நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்தார். 2007 ஆண்டு மாறன் சகோதர்களுக்கும், மு.க அழகிரிக்குமான மோதலில் மதுரை தினகரன் அலுவலகம் பற்றி எரிந்தது. மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட பகையில் தயாநிதி மத்திய அமைச்சர் பதவி இழந்தார்.
அப்போது தான் சுமங்கலி கேபிள் விஷனின் கொட்டத்தை ஒடுக்க அரசு கேபிளை தொடங்குகிறார் கலைஞர். நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி அஞ்சா நெஞ்சரான உமாசங்கர் அதன் இயக்குனராகிறார். அவர் மிக கடுமையாக உழைத்து அரசு கேபிளை நிலை நிறுத்தும் போது, சுமங்கிலியின் அட்ராசிட்டிகளை அடக்குகிறார். இதனால் பயந்து போன மாறன் சகோதர்கள் கலைஞரோடு சமாதானமாகிறார்கள். அத்துடன் அரசு கேபிளை அம்போவென விட்டுவிடுகிறார். உமா சங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்படுகிறார். குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் பொது நன்மைக்கு உழைத்த அதிகாரி அவமானப்படுத்தப்படுகிறார்.
இந்த சன் குழும சதிக் கூட்டத்தின் அதிகார ஆட்டத்தை அடி முதல் நுனி வரை விவரித்து நான் இரண்டு நூல்கள் எழுதியுள்ளேன். முதலாவது 2007 ஆம் ஆண்டு எழுதிய சன் குழுமச் சதிகளும், திமுகவின் திசை மாற்றமும். அடுத்து 2013 –ல் கொண்டு வந்த கேபிள் தொழிலும், அரசியல் சதிகளும். இவற்றை மிக விரைவில் கிண்டிலில் வெளியிட உள்ளேன்.
இன்றைக்கு என்ன நிலைமை? இந்தியாவின் பல மொழிகளில் 30 க்கு மேற்பட்ட சேனல்களுக்கு அதிபர். எம்.எம் வானொலிகள், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர், இன்னும் பல பிசினஸ்கள்..எல்லாவற்றிலும் தம்பியைத் தவிர்த்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டார். சுமங்கலி கேபிள் விஷனையும் அவரே எடுத்துக் கொண்டார். நிறுவனங்களின் 98 சதவிகித பங்குகளை கலாநிதியே வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தம்பியை அரசியலில் நீ சம்பாதித்துக் கொள். தொழில் சம்பாத்தியம் அனைத்தும் எனக்கே என முடிவு செய்துவிட்டார் போலும். அரசியலில் இருக்கும் போது கூட அண்ணனுக்கு அடியாள் வேலை மட்டுமே பார்த்தவர் தான் தயாநிதி. பல உயர் நிறுவனங்களில் அண்ணனை பங்குதாராக்க நிர்பந்தம் கொடுத்தார். ரத்தன் டாட்டா அவர்கள் இந்த மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம் என மூஞ்சிக்கு நேராக சொல்லி அனுப்பிவிட்டார். இல்லாவிட்டால் டாட்டாவையே மொட்டை அடித்து தெருவில் நிற்க வைத்திருப்பார்கள். ஆட்சி மாற்றங்களும், காட்சி மாற்றங்களும் நடந்தன.
திமுக குடும்பத்தில் இன்றைக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக சபரீசன் வந்துவிட்டார். கலாநிதி மாறனே கதிகலங்கி போய் அவரோடு கைகுலுக்கி தன்னை தற்காத்துக் கொண்டார். தயாநிதியோ அரசியலில் புதிதாக உள்ளே நுழைந்த சோட்டா பாயான உதயநிதிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டிய நிலையில் உள்ளார். அரசியலில் தனக்கான எதிர்காலம் குறித்து அவருக்கு அச்சம் இருக்கிறது. எல்லாமே அண்ணன் என இருந்துவிட்டதால் அண்ணன் பார்த்து செய்வார் என தனக்கான சேனல் என்பதாக தன் மகனைக் கொண்டு கரண் தொலைகாட்சி தொடங்க முயன்றார்.
தன்னைத் தவிர யாருமே வளர்வதை அறவே விரும்பாத இயல்பு கொண்டவரான கலாநிதி தம்பியை வளரவிடுவாரா? நான்கைந்து வருட காத்திருப்புக்கு பிறகும் தயாநிதியால் தனக்கென ஒரு சேனலை சாத்தியப்படுத்த முடியவில்லை. தன் மகனுக்கு சன் குழுமத்தில் ஒரு முக்கிய பொறுப்பையும் பெற்றுத் தர முடியவில்லை. கலாநிதியின் மனைவியும் மகளுமே அங்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது.
இந்தச் சூழலில் தான் 22 வருடங்களாக மனதில் பொத்தி வைத்த கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் தயாநிதி. ஆனால், பாட்டி தயாளு அம்மாள், அம்மா மல்லிகா மாறன் ஆகியோரையே நிராகரித்து தன்னை மட்டுமே மையப்படுத்திக் கொண்ட கலாநிதி, தன் இயல்புக்கு ஏற்ப தம்பியை நிராகரித்துள்ளார். ஸ்டாலின் பேசியும் கலாநிதி ஒத்து வரவில்லை. தம்பிக்கு ஒரு நியாயமான பங்கை தர இசைவு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தயாநிதியின் வக்கில் நோட்டீஸ் அண்ணன் கலாநிதியை கலவரப்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தையடுத்து சன் குழுமத்தில் அமலாக்கத் துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் மூக்கை நுழைக்கும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது.
அட்டூழியக்காரர்கள் தங்கள் அழிவை தாங்களே வலிந்து உருவாக்கி கொண்டு அழிவர் என்பது நம் முன்னோர்கள் வாக்கு. அந்த வகையில் பற்பலரின் பேரழிவுக்கு காரணமான சன் குழுமத்தினரின் சங்கதியும் ஒரு முடிவுக்கு வருமா? அல்லது சமாதானமாகிக் கொண்டு ஒன்றிணைந்துவிடுவார்களா/ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சாவித்திரி கண்ணன்
சதிகாரச் சக்கரவர்த்திகளின் சன் குழும சாம்ராஜ்யம்!
இரான் மீது அமெரிக்கா தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த தமிழரசு கட்சி உறுப்பினர் நீக்கம்
சேருவில பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த, உறுப்பினரை கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருக்கு வாக்களித்த தங்கநகர் வட்டார உறுப்பினர் கந்தசாமி சுதேஸ்குமார் என்பவரையே, கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்தும், பிரதேச உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியின் தலைமைப் பீடம் இடை நிறுத்தியுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சி அறிவித்துள்ளது
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?
வாகரை பிரதேச சபையை பிள்ளையான் கட்சி கைப்பற்ற உதவிய கறுப்பு ஆடு யார்?
மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவு செய்யப் பட்டு ஆட்சியை கைப்பற்றியதுடன் அதற்கு தேவையான ஒரு வாக்கை தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கரஸ் கட்சி உறுப்பினரா ? ஆதரவு வழங்கிய கறுப்பு ஆடு ? என அரசியல் கட்சிகளுக்குள்ளே கறுப்பாடு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வாகரை பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்களை தெரிவு செய்யும் அமர்வு வெள்ளிக்கிழமை (20) பிரதேச சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசு கட்சியைச் சேர்ந்த பல்கோஸ் மோகனராசா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதனையடுத்து தவிசாளர் தெரிவு செய்ய உள்ளூராட்சி ஆணையாளர் கோரியபோது திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழரசு கட்சி 6 உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் 2 பேர் உட்பட 8 உறுப்பினர்கள் திறந்த வாக்கெடுப்புக்கு வாக்களித்ததுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 7 உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினர் உட்பட 11 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து தவிசாளரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் 12 வாக்குகளை பெற்றதுடக் இலங்கை தமிழரசு கட்சி பல்கோஸ் மோகனராசா 7 வாக்குகளை பெற்றதையடுத்து கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதித் தவிசாளருக்கு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் போட்டியிட்டனர் இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு 10 வாக்குகளும். மொஹமெட் ஹைதருக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைத்ததுடன் ஒரு உறுப்பினர் வாக்களிப்பதை நிராகரித்த நிலையில் தமிழரசு கட்சி சண்முகநாதன் ரசிகரன் பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தவிசாளராக போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினருக்கு 7 பேருடன் தேசிய மக்கள் கட்சி 3 உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சத்தி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 பேர் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் அவர் 12 வாக்குகளை பெற்றுள்ளார். எனவே மேலதிகமாக அந்த ஒரு வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவாக தமிழரசு கட்சி உறுப்பினரா? அல்லது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி உறுப்பினரா? வாக்களித்தார். இதனால் யார் அந்த கறுப்பு ஆடு, எந்த கட்சி உறுப்பினர் ? என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் குழப்பகரமாக உள்ளது.