Aggregator
ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு
ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு - கர்தினால் கவலை தெரிவிப்பு
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் 'அக்கமஹா பண்டிதர்' கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmecd842d02klqp4kir09iie9
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சியில் ஜே.வி.பி.யின் ‘மணி’ சத்தம் அதிகமாகி தேசிய மக்கள் சக்தியின் ‘திசைகாட்டி’ தவறாகத் திசை காட்டத் தொடங்கியுள்ளதால் ‘மாற்றம்’ என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை பொய்த்துப்போகத் தொடங்கியுள்ளது.இதனை ஓரளவுக்குத் தடுத்து நிறுத்தவே கடந்த வாரப் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்குக் கொடுக்கும் குடைச்சல்கள் மட்டும் காரணமின்றி, ராஜபக்ஷக்களின் ‘மொட்டு’க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவும் அது தொடர்பில் அரசுத் தரப்புக்குக் கிடைத்துள்ள புலனாய்வு எச்சரிக்கைகளுமே நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தைச் சதித் திட்டங்கள் மூலம் நாசப்படுத்த முயன்றால், அவர்களைத் தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்.எனவே, “ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தீட்டும் எண்ணம் வந்தாலும், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’’ என பேச வைத்துள்ளது.
ராஜபக்ஷக்களின் குடும்பம் மீது குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தையும் இலக்கு வைத்து அனுரகுமார அரசு முன்னெடுத்து வரும் விசாரணை,கைது, விளக்கமறியல்,வழக்குகள் போன்ற விடயங்களும் அனுரகுமார அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது ஊழல்.
மோசடி எனக் கூறிக்கொண்டு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதுமே அனுரகுமார அரசை வீழ்ச்சிப் பாதைக்கும் ராஜபக்ஷக்களை எழுச்சிப் பாதைக்கும் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் தான், ராஜபக்ஷக்களின் ‘ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன’வின் முன்னாள் அமைச்சரும் முக்கிய உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நாமல் ராஜபக்ஷவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளன.
சமீபத்திய தூதரக விஜயர்களின்போது, நாம் சந்தித்த பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள், ராஜபக்ஷக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து இதேபோன்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நாமல் ராஜபக்ஷ உங்கள் தலைவர், அடுத்த ஜனாதிபதி என்று எம்மிடம் கூறினர்.
அதுமட்டுமன்றி, பொதுமக்கள் கலந்துரையாடல்கள், குறிப்பாக, கிராம மட்டத்தில், ராஜபக்ஷக்களுக்கு குறிப்பாக நாமல் ராஜபக்ஷவுக்குஆதரவு அதிகரித்து வருகின்றது. ஒரு கட்சியாக, நாமல் ராஜபக்ஷவின் பயணம் சிறப்பாக முன்னேறி வருவதாக நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஜனாதிபதியாக அவர் வருவதைப் பற்றி கிராம மக்கள் ஏற்கெனவே பேசத் தொடங்கி விட்டனர்.
நாமல் ராஜபக்ஷவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்த அச்சம் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி ராஜபக்ஷவினரை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்குப் பயமாக இருக்கும்போது, அவர்கள் வழக்குகளைத் தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். நாமல் ராஜபக்ஷ வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இது குறித்து புலனாய்வுப் பிரிவுகள் “ஏற்கெனவே தமது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன” என்று கூறியுள்ளார்.ஆட்சி மாற்றத்துக்காக 2029ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்பது மக்களின் கருத்தாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்து, அனுரகுமார அரசுக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன கூறுகையில், “அடுத்த ஜனாதிபதி யார்? என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அனுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துகள் இல்லை. நாமலைப் பற்றிதான் தேடப்படுகின்றது. நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை.
அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது.இயற்கையாகவேதான் அந்த கருத்தாடல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லை . எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் அப்படி நடந்தும் உள்ளது. பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணி திரட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் எம்.பியுமான நாமல் ராஜபக்ஷவும் ,ஏமாற்றத்தைப் பொறுத்தது போதும், இனி அதிலிருந்து எழுவோம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே எம்முடைய கட்சி உழைத்தது. நாம் பௌத்தர்கள் மாறாக இனவாதிகள் அல்ல. இளைஞர், யுவதிகளின் புதிய பரம்பரைக்கு ஏற்ற அரசியலை உருவாக்க நாம் தயார்.
பொய்யுரைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக அனுர அரசாங்கம் மாறியுள்ளது.எம்மை அரசாங்கம் அதிகம் தாக்குகின்றது. அதற்கு காரணம் எம்மை பார்த்து ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அஞ்சுகின்றது. காரணம் நாம் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
எம்முடைய கட்சி நாட்டை சேதப்படுத்தும் கட்சி அல்ல. மாறாக பயங்கரவாத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து ஆசியாவில் விரைவாக அபிவிருத்தி அடையும் நாடாக ஆக்கிய கட்சியே எம்முடைய கட்சி .அடுத்த ஜனாதிபதி எம்முடைய கட்சியிலிருந்தே தெரிவு செய்யப்படுவார் என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழலில், தமிழ்த் தேசிய அரசியலின் புது வரவும் சர்ச்சைக்குரியவருமான அர்ச்சுனா இராம நாதன் எம்.பியும் ‘நாமல் ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி. அவர் ஜனாதிபதியாக நான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இதனை நான் அவரிடம் நேரிலும் தெரிவித்துள்ளேன்.
அவரின் தந்தை, சித்தப்பாமார் தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளை அவர் தமிழ் மக்களுக்குச் செய்யக்கூடாது என்றும் நேரடியாகக் கூறியுள்ளேன்.அதற்கான உத்தரவாதத்தை அவர் எனக்கு வழங்கியுள்ளார்’’ என சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து ‘அடுத்த ஜனாதிபதி நாமல்’ என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளார்.
இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்க குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. ஆனால் அதனை ராஜபக்ஷக்கள் மாற்றி ‘ராஜபக்ஷ குடும்ப ஆட்சி’ என்ற வரலாற்றை எழுதினர்.
அவர்களின் குடும்ப ஆட்சி எந்தளவுக்கு அவர்களுக்கு பலத்தைக் கொடுத்ததோ, அதுவே பின்னர் பலவீனமாகவும் மாறி அவர்களின் குடும்ப ஆட்சியை விரட்டியது. அதன்பின்னர் மக்கள் மாற்றமான ஆட்சி ஒன்றை எதிர் பார்த்த நிலையில்தான் அதனைப் பயன்படுத்தி தமது பிரசார ஆயுதத்தின் மூலம் அனுரகுமார தலைமையிலான ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடம் ஏறியது. ஆனால், அவர்கள் ‘வாய்ச் சொல் வீரர்’களாக மட்டுமே இருக்கின்றனர். இதனால் இவர்கள் மீது ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ என்றவாறாக மக்களுக்கிருந்த மயக்கம் தெளிந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில், இலங்கை அரசியலில் மாற்று அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் அணி, சஜித் அணி என பிளவுண்டு மீண்டும் அணி சேர வாய்ப்பில்லாத நிலையில், இருப்பதால் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயாரில்லை.
அதனால் தான் ராஜபக்ஷக்கள் என்னதான் ஊழல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் தான் யுத்தத்தை முடித்து வைத்தவர்கள். நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டுவந்தவர்கள்.
அவர்களின் ஆட்சிக்குப் பின்னர் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை, மக்களுக்கு விமோசனமும் கிடைக்கவில்லை என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில்தான் தற்போது மீண்டும் ‘ராஜபக்ஷக்களின் அலை’ அடிக்கத் தொடங்கும் அறிவிப்புக்கள் விடப்படுகின்றன.
13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது
13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது
சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி தம்பதியினரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000 கொடுத்தார் என்றும் கூறினர்.
இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், கணவன் மனைவி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு, கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மனைவிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய, முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான இலங்கையை சேர்ந்த முகமது முனாவர், கைது செய்யப்படாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் முகமது முனா வரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவனான முகமது முனாவரும், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தது அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த பொழுது தெரியவந்தது.
இதை அடுத்து அவரை கைது செய்து சட்டநடவடிக்கள் மேற்கொள்வதற்காக மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவன், இலங்கையில் இருந்து சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
https://www.tamilmirror.lk/செய்திகள்/13-ஆண்டுகளாக-தேடப்பட்ட-இலங்கை-கடத்தல்-தலைவன்-கைது/175-362950
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு!
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு!

இலங்கையின் மனித உரிமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் நிலைப்பாடு!
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமை அறிக்கையில், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்றும், அவற்றால் வருந்தத்தக்க சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த அறிக்கையில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளம் காண்பதிலும், அவர்களைப் பொறுப்பேற்க வைப்பதிலும் இலங்கை அரசாங்கம் மிகக் குறைவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாது இலங்கையில் நடைபெறும் தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், விளக்கமறியலில் இருக்கும் வேளை இடம்பெறும் மரணங்கள் , ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பொலிஸ் காவலில் 7 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
எனினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் 2024 ஆம் ஆண்டில் பதிவாகவில்லை என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்!

காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்!
காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர்,
இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவு படுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது.
இருப்பினும், காசாவை கைப்பற்றும் புதிய நடவடிக்கை ஒக்டோபர் மாதம் வரையில் தொடர்வதற்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இல்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத் தயாரிப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் துணை படையினரை இணைத்துக் கொள்வது போன்ற செயற்திட்டங்களை இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று, இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றையதினத்தில் மட்டும், சுமார் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை : 14 முக்கிய அம்சங்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி
சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!
தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.!
தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.!
தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.!
Vhg ஆகஸ்ட் 14, 2025
மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார்.
எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார்.