Aggregator

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

1 month 2 weeks ago
அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கூறவில்லை. சங்கர் கலவியில் முக்கியமாக கணித பாடத்தில் மிக திறமையானவராக இருந்தார். அவரைப் போன்ற கல்வியில் மிக திறமையானவர்கள்களின் தியாகம் எல்லாம் வீணாகியதுடன், இன்று புலம் பெயர் அடாவடிகளின் கையில் சிக்கி தமிழரின் அரசியல் பாழ்படுவதால் வந்த கடுப்பில் கூறப்பட்ட கருத்து. அவமானப்படுத்தும் தொனியில் அது தெரிந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதை மீளப்பெற்றுகொள்கிறேன். மன்னிக்கவும்.

காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை

1 month 2 weeks ago
வளர்ப்பு அப்பிடி. தாய், தகப்பனுக்கு பாராட்டுக்கள். 😂 கு.சா. ஒரு கிழமைக்கு இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார். 🤣

காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை

1 month 2 weeks ago
எவ்வளவு நல்ல பிள்ளை.ஆரம்பமே இப்படி என்றால்...🤭

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

1 month 2 weeks ago
இந்திய அணியினர் ஐ பி எல் விளையாட்டினுள் அதிகம் ஐக்கியமாகிவிட்டதால் டெஸ்ட் போட்டியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை போல.

மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!

1 month 2 weeks ago
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது! யாழ்ப்பாணம் நகரப்பகுதியில், போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மாசிச்சம்பல் போத்தல்களுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட நிலையிலேயே மேற்படி போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்ப டுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!

மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!

1 month 2 weeks ago


404341203.jpg

யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன்

மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில், போதைமாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண  மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே மேற்படி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து மாசிச்சம்பல் போத்தல்களுக்குள் மறைத்துக் கடத்தப்பட்ட நிலையிலேயே மேற்படி போதைமாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்ப டுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளன

மாசி சம்பலுக்குள் போதை மாத்திரை; மூவர் கைது!

பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சி தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது - ஞானசார தேரர் எச்சரிக்கை

1 month 2 weeks ago
சாத்தான் வேதம் ஓதுகிறது.

தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!

1 month 2 weeks ago
மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம். 26 Nov, 2025 | 04:03 PM மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு - மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (26) காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் சிறப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பில் உள்ள நான்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், வவுணதீவு தாண்டியடி துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ஆனைத்து துயிலும் இல்லங்களிலும் தமிழ் மக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம் | Virakesari.lk

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

1 month 2 weeks ago
உங்கள் சட்ட அறிவையும் பொது அறிவையும் காட்டும் கருத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறோம், நன்றி😇! உண்மையில், இன்று சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் பலரை ரணில் மைத்திரி அரசின் நிர்வாகம் கைது செய்யவில்லை. உங்கள் "சட்ட வியாக்கியானத்தின்" படி அதனால் தான் ரணில் அரசு விடுதலை செய்யத் தடை இருந்திருக்கிறது போல! நீங்களெல்லாம் இலங்கை சுப்றீம் கோர்ட்டில் இருக்காமல் ஏன் இங்க நிக்கிறீங்களோ தெரியவில்லை😎!

வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு!

1 month 2 weeks ago
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது. இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk

வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு!

1 month 2 weeks ago

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10 நாட்களுக்குள், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ஏழுபேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானமை உறுதியானது.

இந்நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 07 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பலருக்கு புனர்வாழ்வு! | Virakesari.lk

நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்

1 month 2 weeks ago
26 Nov, 2025 | 06:34 PM யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk

நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள்

1 month 2 weeks ago

26 Nov, 2025 | 06:34 PM

image

யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. 

சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால்  இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம்  வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

WhatsApp_Image_2025-11-26_at_6.21.00_PM.

WhatsApp_Image_2025-11-26_at_6.21.01_PM.

WhatsApp_Image_2025-11-26_at_6.21.02_PM.

WhatsApp_Image_2025-11-26_at_6.21.04_PM.


நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk

தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!

1 month 2 weeks ago
பொங்கிடும் கடற்கரை ஓரத்தில், மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்தில், மங்களம் தங்கிடும் நேரத்தில், பிறந்த எங்கள் ஒரே தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! நீங்கள் விட்ட சுவாசம் கலந்த காற்றை நான் சுவாசித்ததும், உங்கள் காலடித் தடம் பதித்த கோண்டாவில் முகாமில் சுவடுகள் காயும் முன் நானும் நடந்ததும், உங்களின் குரலை கேட்டதும் என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே ஒரு பெரும் பாக்கியம் ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது எனக்கும் இருக்கலாம். ஆயினும் நீங்கள் ஒருவரே என் தலைவன். என்னைப் போன்றோரிற்கான ஒப்பற்ற ஏக தலைவன். இறந்தும் இறவாமல் நீக்கமற நிறைந்து இருக்கும் தலைவன்! -நிழலி

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

1 month 2 weeks ago
நிழலி சொல்லியிருப்பது நியாயமான கருத்து. பொட்டர் மட்டுமல்ல, திலீபன் கூட மருத்துவக் கல்லூரி செல்லும் வாய்ப்பிருந்த ஒரு படிப்பாளி என்று அறிந்திருக்கிறேன். @island உங்கள் கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும்!

சிங்கள, முஸ்லிம் போராளிகளின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டும்; மூத்த போராளி மனோகர் வலியுறுத்து!

1 month 2 weeks ago
அன்றைய நாட்களில் பல உயர்தர மாணவர்கள் தாமாகவே புலிகளில் இணைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு இணைந்தனர். அவ்வாறு சுய விருப்பில் இணைந்த அனைவரையும் உங்கள் இந்த கருத்து அவமானப்படுத்துகின்றது. நாமெல்லாம் வசதியான வாழ்க்கையை நோக்கி நகரும் பொழுது படிப்பை விட, தாயக மீட்பு முக்கியம் என சென்ற ஆயிரக்கணக்கானோரை அவமானப்படுத்தி உள்ளீர்கள் இங்கு.