Aggregator
"மூன்று கவிதைகள் / 22"
"மூன்று கவிதைகள் / 22"
"மூன்று கவிதைகள் / 22"
மின்னலாய் ஒரு பின்னல்
[சாந்தம்/ கோபம்/ பொறுமை/ மகிழ்ச்சி]
சாந்தம் நிறைந்த விழிகள் எனோ
கோபம் கொண்டு பார்க்குதே
பொறுமை தொலைத்து ஏங்குதே
மகிழ்ச்சி தேடி என்னை அழைக்குதே
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
..................................
'காதல் கோட்டைகள்'
காதல் கோட்டைகள் அன்பில் கட்டியது
காதலன் காதலி சேர்ந்து அமைத்தது
காலம் முழுவதும் நினைவில் நிற்குதே!
ஆசையும் பாசமும் நிறுவிய அரண்மனை
ஆரவாரம் இல்லா உறவின் கனவு
ஆழ்ந்த நட்பின் நிரந்தர அடையாளமே!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
............................................................
புகைப்படக் கவிதை
பாலைவனம் எம்மை ஒட்டகத்தில் ஏற்றிட,
மாலைக் கதிரவன் உடலைத் தீண்ட,
அலை அலையாக இன்பம் பொங்க,
சோலைவனம் மனதில் துளிர் விட்டது!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
...........................................................................
துளி/DROP: 2007 ["மூன்று கவிதைகள் / 22"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33602025986112617/?
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?
'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl
கட்டுரை தகவல்
மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
7 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டின் துவக்க விழாவில் பேசிய விஜய், எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கட்சி துவங்கியதிலிருந்தே தி.மு.கவை கடுமையாக விமர்சித்துவரும் விஜய், இதற்கு முன்பும் இதேபோல, எம்.ஜி.ஆரை முன்வைத்து தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். அவரது இந்த வியூகத்திற்குப் பலன் கிடைக்குமா?
தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு துவங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விஜய் பேச்சின் துவக்கத்திலிருந்தே எம்.ஜி.ஆரை முன்னிறுத்திப் பேச ஆரம்பித்தார்.
"தமிழ்நாட்டில் மிகப் பெரிய கட்சியாக நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் நீங்கள்தான். 1977 ஜூன் மாதத்தில் எம்.ஜி.ஆர். வானொலியில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் பேசும்போது 'பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில், இப்படிப் பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டது எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்று அந்தக் கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அ.தி.மு.க.' என்று சொன்னார். 2017க்குப் பிறகு, 2021க்குப் பிறகு தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழக மக்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டுவிட்டதே என கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்" என்றார்.

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl
தேர்தல் களம் பற்றி என்ன சொன்னார்?
தொடர்ந்து, "எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த பிறகு, அவர் வெற்றிபெற்ற பிறகுகூட, சட்டசபையில் ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறது என கேலியும் கிண்டலும் செய்தார்கள். அதைப்போலத்தான் நாம் அரசியலுக்கு வந்த பிறகும், இந்த விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு என்ன அனுபவம் இருந்தது தெரியுமா? 1952லிருந்து 72வரை தி.மு.கவில் இருந்தார் என்று சொன்னார்கள். பிறகு அதே வாயால், எம்.ஜி.ஆரைப் பார்த்து அவருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது, கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும், டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார் என்று சொன்னார்கள். எம்.ஜி.ஆரை மட்டுமல்ல அவருடைய தொண்டர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் கேலி செய்தார்கள்.
மக்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அரசியலில் பழம் தின்று, கொட்டை போட்டவர்களுக்கு கோட்டை என்பது பகல் கனவாகவே மாறிவிட்டது. இப்போது அதே பழைய ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்" என்றார் விஜய்.
மேலும், "மும்முனைப் போட்டி, நான்கு முனைப் போட்டி என்று சொல்கிறார்கள். நாம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தி.மு.க. கூட்டணி , இன்னொரு பக்கம் பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். எத்தனை பேர் வந்தாலும் தி.மு.கவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். ஒவ்வொரு வீட்டிலும் டி.வி.கே. இருக்கிறது. தீயசக்தியை வீழ்த்த தூயசக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம் மக்கள் விசிலை ஊதுவதில் தீய சக்தியும் ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl
'தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார்'
அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சின் சாரமும் "எம்.,ஜி.ஆர் Vs தி.மு.க., எம்.ஜி.ஆரைக் கேள்வி கேட்டதைப் போல தன்னையும் கேள்வி கேட்கிறார்கள், தி.மு.கவால் எம்.ஜி.ஆரைக் கடைசிவரை வெல்ல முடியவில்லை, தி.மு.கவை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி த.வெகதான்" என்பதாகவே இருந்தது.
எம்.ஜி.ஆரைப் பார்த்து விஜய் காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது என்கிறார் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை.
"அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டு அதை எப்படி வழிநடத்துவது, இந்த அரசியல் கட்சியை மக்கள் அங்கீகரிக்கிற வகையில் எப்படிப்பட்ட கொள்கைகளை வகுப்பது என்ற அரசியல் அரிச்சுவடி கூட தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரைப் பார்த்து காப்பியடிக்க விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.''
''சினிமாவில் வேண்டுமானால் 'டூப்' போடுவது சரியாக இருக்கும். ஆனால் அரசியலில் 'டூப்' எடுபடாது. ஓர் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிற ஓர் அரசியல் தலைவர் தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார் செம்மலை.
மேலும், பா.ஜ.கவை மகிழ்விப்பதற்காகவே அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று குறிப்பிடுவதாகவும் சொல்கிறார் செம்மலை.
"பா.ஜ.க. தலைவர்களே தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில்தான் எங்கள் கூட்டணி என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்கள். அப்படிச் சொல்லியிருக்கிறபோது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என விஜய் சொல்லத் தயங்குகிறார்? ஒரு மிகப்பெரிய பலம் வாய்ந்த ஒரு கட்சியை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அந்த கட்சியினிடத்தை தான் பிடிக்கலாம் என்று ஒரு தவறான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.கவின் பெயரை இவர் சொல்லவில்லையென்றாலும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் முன்னணியிலே இருக்கிற எங்கள் கட்சியை இவர் சேதப்படுத்த முடியாது. மக்கள் மத்தியிலே எவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்பதைக் கூட சோதிக்காத கட்சியாக இருக்கிற த.வெ.க., தான்தான் களத்திலே ஹீரோ என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியதாக இருக்கிறது" என்கிறார் செம்மலை.

பட மூலாதாரம்,@EPSTamilNadu
முன்பே துவங்கிய விஜய்
எம்.ஜி.ஆரை தன் பக்கமும் தி.மு.கவை எதிராகவும் விஜய் நிறுத்துவது இது முதல் முறையல்ல. மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டிலேயே இதைத் துவங்கிவிட்டார் விஜய்.
அந்த மாநாட்டில் பேசும்போது, "அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல. எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு அப்படியானது" என்றார் விஜய்.
அதேபோல, ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், ''எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தி.மு.கவை தீய சக்தி என்றார்கள். அதையே நானும் கூறுகிறேன். தி.மு.க தீய சக்தி, த.வெ.க. தூய சக்தி. தூய சக்தி த.வெ.கவுக்கும், தீய சக்தி தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி. மக்கள் சக்தியான த.வெ.கவால்தான் தி.மு.கவை வீழ்த்த முடியும்" என்றார்.
கிட்டத்தட்ட அதே தொனியில்தான் திங்கட்கிழமையும் பேசினார் விஜய்.
வெற்றியாக எதிரொலிக்குமா?
திடீரென ஒருவர் தன்னை எம்.ஜி.ஆராக முன்னிறுத்தினால், அது தேர்தல் களத்தில் வெற்றியாக எதிரொலிப்பது சந்தேகம்தான் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை.
"இயக்குநர் கே. பாக்யராஜில் துவங்கி விஜயகாந்த்வரை இப்படிச் செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு இருந்த புறச் சூழல் அவர்களுக்கு இல்லை என்பது அவர்களுக்கு புரியவில்லை. எம்.ஜி.ஆர். தி.மு.கவின் உருவகமாக இருந்தார். அவருடைய ரசிகர் மன்றங்கள் கட்சியின் ஒரு பகுதியாகவே இருந்தன. அதனால்தான் அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறியபோது கட்சி செங்குத்தாகப் பிளந்தது. அவருடைய ரசிகர் மன்றங்கள் புதிய கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பாக மாறின. எம்.ஜி.ஆருக்குப் பிறகு யாராலும் அந்த இடத்திற்குப் போக முடியாததற்கு அதுதான் காரணம்" என்கிறார் ராஜன் குறை.

பட மூலாதாரம்,@TVKHQITWingOffl
திமுக கூறுவது என்ன?
தி.மு.க. விஜய்யின் இந்தப் பேச்சு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
விஜய்யின் பேச்சு எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக் என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான டி.கே.எஸ். இளங்கோவன்.
"த.வெ.க. VS தி.மு.க. என முன்னிறுத்துவது எடப்பாடி கே. பழனிசாமிக்கு வைக்கப்படும் செக். அவர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்கிய பிறகு, அவர் தி.மு.கவை விமர்சித்தார், தி.மு.கவும் பதிலுக்கு அவரை விமர்சித்தது. இதிலென்ன இருக்கிறது? இதையெல்லாம் ஒரு வாதமாக முன்வைக்கிறார் அவர். மக்கள் பிரச்னைகளுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்? எங்கள் கூட்டணிக் கட்சிகள்கூட மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்துகிறார்கள். எதுவும் செய்யாமல் முதலமைச்சராகிவிட வேண்டுமென நினைக்கிறார் விஜய்" என்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
'எம்ஜிஆரை முன்வைத்து திமுகவை விமர்சனம்' - விஜய் பேச்சு உணர்த்தும் செய்தி என்ன?
🌿 மூன்றாம் ஆண்டு நினைவில் கந்தையா இராசலிங்கம் (25.01.2023)
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு
மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் மாநாடு ஹட்டனில் ஏற்பாடு
02 Feb, 2026 | 05:57 PM
![]()
மலையகத் தமிழ் மக்களின் காணி, வீட்டு உரிமை, முறையான மாதாந்த சம்பளம் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சம உரிமை இயக்கம் மற்றும் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் புதன்கிழமை (04) ஹட்டனில் மாபெரும் மக்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.
'மலையகத் தமிழ் மக்களே தளராது போராடுவோம்' எனும் கருப்பொருளின் கீழ் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஹட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இம்மாநாட்டில், மலையகத் தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து கொட்டகலை ஆசிரியர் கலாசாலை உப அதிபர் ஜே. சத்குருநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.Politics
அத்துடன், பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபம் மற்றும் தொழிலாளர் சுரண்டல் குறித்து பேராதனை பல்கலைக்கழக கலாநிதி கஸ்ப ராஜபக்ஷவும், காணி உரிமை சார்ந்த சட்டக் கோணங்கள் குறித்து சட்டத்தரணி விஜயகுமாரும் விசேட கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை உள்ளடக்கிய 'மாநாட்டுப் பிரகடனம்' உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
2026ஆம் ஆண்டை மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் ஆண்டாக மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த மக்கள் மாநாட்டிற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பையும், பொதுமக்களின் பங்களிப்பையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பையும் மீறி வலி கிழக்கில் கிவுல் ஓயா எதிர்ப்பு பிரேரணை நிறைவேற்றம்
02 Feb, 2026 | 03:58 PM
![]()
தமிழ் மக்களின் பூர்விக தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழ் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் அரச கொள்கையின் திட்டமிட்ட தொடர்ச்சியாகவே கிவுல் ஓயாத்திட்டம் அமைகிறது எனத் தெரிவித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சபைக் கூட்டம் இடம்பெற்றது. கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான பிரேரணை சபையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்னால் முன்வைக்கப்பட்டது. இப் பிரரேரணையினை சபையில் முன்வைக்க முடியாது என மத்தியில் ஆளும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
அவ் எதிர்ப்பினையும் மீறி தமிழ்க் கட்சிகள் அனைத்தும் பிரேரணைக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியினரின் கருத்தை எதிர்த்தன. இறுதியில் தேசிய மக்கள் சக்தியினர் நிகழ்ச்சி நிகழ்ச்சி நிரலில் இல்லாததை எவ்வாறு தவிசாளர் சபைக்கு ஆற்றுப்படுத்த முடியும் என வாதிட்டனர்.
நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாத ஒன்றை சபையின் அனுமதியுடன் தவிசாளர் அறிவிப்பாக முன்வைப்பதற்கு ஏற்பாடுகளில் இடமுண்டு. எனவே தயவு செய்து இனம் சார்ந்த பிரச்சினையில் உங்கள் கட்சி சார்ந்த நிலைப்பாடுகளுக்காக நீங்கள் தடையினை ஏற்படுத்தாதீர்கள் என பலதடவைகள் தேசிய மக்கள் சக்தியினரின் வினயமாகக் கோரினார், எனினும் கூச்சல் தொடர்ந்தது.
தவிசாளர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான காரணங்களுள் ஒன்றாக அரச அனுசரனையுடன் திட்டமிட்ட சிங்கள பேரினவாதக் குடியேற்றங்கள் வரலாற்று ரீதியாக இடம்பெற்றுள்ளன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அதிகாரசபைகள் ஊடாக குறிப்பாக மகாவலி அதிகார சபை ஊடாக ஏற்கனவே பல சிங்கள குடியேற்றங்கள் தமிழர் இன விக்தாசாரத்தினையும் அடையாளத்தினையும் இருப்பையும் அழிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூறாது இனப்பிரச்சினை தீர்வை முன்வைக்காது கடந்த அரசாங்கங்கள் போலவே தொடர்ந்து செயற்படுகின்றது.
அதனை ஏற்க முடியாது. ஆரம்பமாக அரசாங்கம் 2500 மில்லியன்களை ஒதுக்கி சூட்சுமமான முறையில் ஆரம்பித்துள்ள இத்திட்டத்தினை எதிர்கின்றோம். மேலும் பல கோடிகள் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படவுள்ள நிலையில் அரசாங்கம் தமிழர்களின் வரலாற்றத் தாயக இயல்பு வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
தவிசாளரை உரையாற்ற விடாது செயற்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினரை ஒருமாத காலத்திற்கு சபையில் இருந்து வெளியேற்ற வேண்டிவரும் என தவிசாளர் எச்சரித்த நிலையில் சபையில் சற்ற அமைதி ஏற்பட்டது. இதில் சபை உறுப்பினர்களின் விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டது. விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியைத் தவிர பிரசன்னமாகியிருந்த தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்திற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
இந் நிலையில், சபையில் தேசிய மக்கள் சக்தியின் ஒன்பது உறுப்பினர்களில் தலைமை தாங்கும் உறுப்பினர் இத் தீர்மானத்திற்கு எதிராகவும் ஏனைய எட்டு உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். தேசிய மக்கள் சக்தியைத் தவிர தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு
Feb 2, 2026 - 07:22 PM
2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை தரவிறக்கம் செய்வது மற்றும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தனியார் விண்ணப்பதாரர்கள் தமது அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திணைக்கள இணையத்தளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திருத்தங்களை மேற்கொள்ளும் கால அவகாசம் 2026.02.10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும்.
திருத்தங்களுக்கான இந்தத் திகதி மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சையானது பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அந்தந்த பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரிடமிருந்து அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk இணையத்தளத்தின் ஊடாக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு:
உடனடி அழைப்பு இலக்கம்: 1911
தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537
பெக்ஸ் இலக்கம்: 0112784422
மின்னஞ்சல்: gceolexamsl@gmail.com