Aggregator
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
களைத்த மனசு களிப்புற ......!
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இரசித்த.... புகைப்படங்கள்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
காசா போர் : டிரம்ப் - நெதன்யாகு சந்திப்பு ; அமைதிக்கு அமெரிக்கா தீவிர அழுத்தம் - சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்பு!
01 Oct, 2025 | 01:16 PM
![]()
(இணையத்தள செய்திப் பிரிவு)
காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் வரவேற்றுள்ளன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுவரும் காசா தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செப்டம்பர் 30 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். காசா போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ள நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததால், இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடப்பு ஆண்டில் நெதன்யாகு அமெரிக்காவுக்குச் செல்வது இது 4வது முறையாகும். வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார். வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, காசா போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.
பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து உறுதியான தகவல் வெளியாகாத போதும், காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளைத் தன்வசம் எடுத்துக்கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருங்காலத்தில் காசாவை யார் நிர்வகிப்பது என்பது பற்றியும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், காசா போர் முடிவுக்காக, டிரம்ப் மேற்கொள்ளும் அமைதி முடிவை ஹமாஸ் அமைப்பு ஏற்க வேண்டும் என்று அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
டிரம்ப் முடிவுக்கு நெதன்யாகு ஆதரவு தெரிவித்தபோதும், "டிரம்பின் முடிவுக்கு ஹமாஸ் சம்மதிக்கவில்லை என்றால், பேரழிவைச் சந்திக்க நேரிடும்" என்று நெதன்யாகு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்தார்.
இந்நிலையில் காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் அறிவித்த 20 நிபந்தனைகள் கொண்ட விரிவான திட்டத்தை சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில்,
"பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உகந்த அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆதரிக்கிறது. காசாவில் உடனடி மற்றும் விரிவான போர்நிறுத்தத்தை அடையவும், அனைத்து கைதிகளையும் விடுவிக்கவும், உள்ளூர் மனிதாபிமான நெருக்கடியை அவசரமாகத் தணிக்கவும் சீனா அனைத்து தொடர்புடைய தரப்பினரையும் அழைக்கிறது.” என்றார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்பின் முயற்சிக்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. டிரம்புக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஆதரவாக நிற்கின்றன. எகிப்து, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், "போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்ன வழிகள் உள்ளனவோ, அவற்றை மேற்கொள்ள டிரம்ப் முழு அளவில் தயாராக இருக்கிறார் என எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
டிரம்பின் மத்தியஸ்தம் மூலம் காசாவில் அமைதி ஏற்படுமா, அல்லது நெதன்யாகுவின் ஆக்கிரமிப்பு நோக்கம் வெற்றி பெறுமா என்ற கேள்விகளுடன் மத்திய கிழக்கு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!
01 Oct, 2025 | 12:46 PM
![]()
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, ஜோதிட நிலையம் நடத்திவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில், இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்து ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அந்த வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை (30) சென்ற பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளை என்பதும் அவர்கள் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, பருத்தித்துறை பகுதிக்குச் சென்று விடுதி ஒன்றில் தங்கி, ஜோதிடம் கூறி வந்த நிலையில், அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று, அங்கு குடியமர்ந்து, அவ்வீட்டை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்ததாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.