Aggregator
தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!
சாத்தானின் படை புத்தகம் வேண்டி
தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!
அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்த தீர்மானம்
அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்த தீர்மானம்
(எம்.மனோசித்ரா)
அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமையை (Analog Terrestrial System) இயக்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது இயங்கிவரும் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்காக தற்போது 16 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி 5 அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 24 அலைவரிசைகள் நாட்டில் தற்போது காணப்படுகின்றன.
தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் வர்ண ஒளிர்மை அதிர்வெண் இயலளவை உயர்ந்தபட்சம் பயன்படுத்தி இயக்கப்படுவதுடன், 46 வருடங்கள் பழமையான அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமைக்குப் பதிலாக நவீன தொழிநுட்பத்தின் கீழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு உயர்தரத்துடனான டிஜிட்டல் ஒளிபரப்பை மேற்கொள்ளும் நோக்கில், தனியொரு டிஜிட்டல் ஒளிபரப்பு முறைமையை இயக்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் வெகுசன ஊடக விடயதான அமைச்சால் டிஜிட்டல் ஒத்திசைந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமை வேலைத்திட்டம் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக, இலங்கை அரசும் ஜப்பான் அரசும் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தை 2029ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. வேலைத்திட்டம் பூர்த்தியடைந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர், பழைய அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமை முழுமையாக நீக்கப்படவுள்ளமையால், அதற்காக மேலும் அனுமதிப்பத்திரங்களை வழங்குவது பயனற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒத்திசைந்த ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான வர்ண ஒளிர்மை ஒளிபரப்பில் அதிர்வெண்களை ஒதுக்கி வழங்கும் செயன்முறை மற்றும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சால் தொலைக்காட்சி அலைவரிசைகளில் அலைமருவி சமிக்ஞை ஒளிபரப்பு முறைமை மூலம் மேற்கொள்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அலைமருவி சமிக்ஞை தொலைக்காட்சி ஒளிபரப்பு முறைமைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயன்முறையை இடைநிறுத்த தீர்மானம் | Virakesari.lk
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
கருத்து படங்கள்
இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து
இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து
இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படத் தேவையில்லை, அவர்கள் சுயமாகச் செயற்படுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவசியமானது – தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாந்து
25 Nov, 2025 | 05:23 PM
![]()
இயலாமை உடைய நபர்கள் தொடர்பில் அனுதாபப்படவேண்டிய அவசியமில்லை, அவ்வாறு அனுதாபப்படுவது அவர்களை ஒரு விதத்தில் அவமரியாதைப் படுத்துவதுபோன்றாகும். இயலாமை உடைய நபர்கள் தமது கடமைகளைச் சுயமாக நிறைவேற்றத் தேவையான சூழலை உருவாக்குவதையே செய்ய வேண்டியிருப்பதாக தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாந்து தெரிவித்தார்.
இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள செயலமர்வுத் தொடரில், முதலாவது செயலமர்வு தொழில் அமைச்சில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், தொழில் அமைச்சு மற்றும் நிறுவனங்களில் மக்கள் தொடர்புப் பிரிவில் பணிபுரியும் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, இயலாமை உடைய நபர்கள் பற்றிய விழிப்புணர்வுக் கருத்துக்கள் சமூகமயமாக்கப்படும் வரை, சட்டதிட்டங்கள் மூலம் ஒருங்கிணைப்பை அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.
சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மூலம் மாத்திரம் இந்தக் குழுவினருக்குத் தேவையான ஆதரவை வழங்குவது போதுமானதாக இருக்காது என்றும், மனப்பான்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இயலாமை உடைய நபர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தனியார் துறையிலும் இயலாமை உடைய நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கு உரையாற்றிய இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா, இயலாமை உடைய நபர்கள் வேலைசெய்யக் கூடிய வகையில் பணியிடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார்.
இதைச் செயல்படுத்த, முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் இயலாமை உடைய நபர்கள் பங்கேற்பதற்கான அனைத்து தடைகளும் நீக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதன் ஊடாக இயலாமை உடைய நபர்களும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஓர் அங்கமாக இருப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இயலாமை உடைய நபர்கள் ஏனையவர்களைச் சார்ந்தவர்களாக அன்றி, பொருளாதார செயல்முறைக்குப் பங்களிப்பவர்களாக இருக்கும் நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இயலாமை உடைய நபர்களைக் கொண்ட வளவாளர்களினால் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. மேலும் இந்தச் செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்துகொண்ட இயலாமை உடைய நபர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்கள் பணியிடங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் அனைத்து அமைச்சுக்களையும் இலக்காகக் கொண்டு இதுபோன்ற செயலமர்வுகளை நடத்துவதற்கு இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
இச்செயலமர்வில் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் இந்ரக உபேசேகர, இத்திட்டத்தின் அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள், இயலாமை உடைய நபர்களுக்கான அமைப்புக்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.








இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
Nov 25, 2025 - 04:52 PM
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
-கிளிநொச்சி நிருபர் சப்தன்-
கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
நியூசிலாந்தில் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிரிழப்பு
நியூசிலாந்தில் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிரிழப்பு
25 Nov, 2025 | 01:38 PM
![]()
அவோராகி அல்லது மவுண்ட் குக் என அழைக்கப்படும் நியூசிலாந்தின் மிக உயரமான மலையில் இருந்து விழுந்து இரண்டு மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
3,724 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறிய நான்கு பேரில் இருவர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை இரவு அவசர சேவைகளைத் தொடர்பு கொண்ட பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் மற்றைய இருவரும் காயங்கள் ஏற்படாமல் மீட்கப்பட்டனர்.
பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, உயிரிழந்த மலை வீரர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன. சடலங்கள் மீட்கும் பணி தற்போது “கடினமான ஆல்பைன் சூழலில்” நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தின் தென் தீவு வரை நீண்டு இருக்கும் தெற்கு ஆல்ப்ஸின் மீது உயர்ந்து நிற்கும் மவுண்ட் குக்கி மலையின் சிகரத்தை அடைவது பெரிய பிளவுகள் மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக அனுபவம் வாய்ந்த மசையேற்ற வீரர்களுக்கு கூட கடினமான விடயமாகும்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மலையேற்ற வழிகாட்டி என நியூசிலாந்து ஊடக நிறுவனமான ஸ்டஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த மூன்று மலையேற்ற வீரர்கள் மலையில் காணாமல் போனார்கள். பல நாள் தேடலுக்குப் பின்னரே அவர்கள் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு சீரற்ற வானிலையே காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மவுண்ட் குக் மலைச் சிகரத்திற்கு செல்ல முயன்ற பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு மலையேற்றப் பருவம் குறைந்தது ஒரு உயிரிழப்பு கூட நிகழாமல் கடந்து செல்வதில்லை என நியூசிலாந்து ஆல்பைன் கிளப் க்ளைம்ப்என்இசட் தெரிவித்துள்ளது.