Aggregator
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?
adminJuly 31, 2025
யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நாட தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்றைய தினம் புதன்கிழமை (30.07.25) தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் தொடர்பில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்திருந்தனர்.
அதன் பின்னர் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தரோடை பகுதியில் அமைந்திருக்கும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்த மக்கள் தொடர்ச்சியாக பார்வையிடுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள்.
குறித்த பகுதியில் பிக்கு ஒருவர் காணி ஒன்றை கொள்வனவு செய்து பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிப்பு செய்கின்ற ஒரு பெயர் பலகையும் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.
சட்டவிரோத கட்டடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் முதற்கட்டமாக அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது, குறித்த பகுதியில் கட்டிட நிர்மாணத்தை நிறுத்துமாறு என்னால் பிரசுரம் ஒட்ப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக அங்கு வரும் மக்களுக்கு தமிழ் பௌத்தம் இருந்த வரலாற்றை அத்தோடு இந்துமத, சைவமத வரலாற்றை மறைக்கும் முகமாக அங்கே வருகின்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது.
இது ஒரு தவறான செயல் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அகழ்வாராய்ச்சியை செய்து வருகின்றது. அருகில் இருக்கும் காணிகளில் இந்த அகழ்வாராட்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் நான் அறிந்தேதேன் ஆய்வுகளின் போது மூன்று அடி உயரமான ஒரு கிருஷ்ணர் சிலை அங்கே கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதனை மூடி மறைத்து குறித்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த பௌத்த மயமாக்கல் என்பது எங்களுடைய பிரதேசத்தில் அதாவது தயிட்டியை போல், மீண்டும் கந்தரோடையிலும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் தற்போதைய அரசாங்கமும் பௌத்த மாயமாக்கலை எமது பிரதேசத்தில் அமூல்ப்படுத்த நினைக்கின்றது.
இந்த நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சிரிக்க மட்டும் வாங்க
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் - பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் - பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
Published By: RAJEEBAN
31 JUL, 2025 | 10:54 AM
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி உண்மை மற்றும் இழப்பீட்டுக்கான உரிமையை வலியுறுத்தியுள்ளனர்.
யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பல அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 40,000 என்கின்றன என தெரிவித்துள்ள அவர்கள் பல்வேறு நிபுணர்களின் கருத்துப்படி இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகும் என தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ளுதல், சட்டவிரோத படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், சித்திரவதை மற்றும் போதிய மருத்துவ உணவு வசதியின்றி தமிழர்களை இடைத்தங்கள் முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது என பல ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் செம்மணியில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றமையும் 80 வருடங்களாக தமிழர்கள் தொடர்ந்தும் அங்கு அமைதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் நீதியை கோரி நிற்கின்ற போதும், இதுவரை சுயாதீன விசாரணையெதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செய்திக்குறிப்பில் இலங்கையின் வடக்குகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை பட்டியலிட்டுள்ளதுடன், இது இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து விலக்களித்து வருவதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரான்ஸ் நம்பகதன்மை மிக்க நீதி செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன என பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் வசிக்கும் 220,000 தமிழ் வம்சாவளி மக்கள், அவர்களில் பெரும்பாலோர் 1980 களில் போரிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள மற்ற தமிழ் சமூகத்தைப் போலவே, அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு அவசரமாகத் தேவை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுப் பிரகடனத்தில் LFI-NFP கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ (வால் டி'ஓய்ஸ்), எரிக் கோக்வெரல், அலி டியோரா மற்றும் தாமஸ் போர்டெஸ் (சீன்-செயிண்ட்-டெனிஸ்), பெர்செவல் கெய்லார்ட் மற்றும் ஜீன்-ஹியூஸ் ரேட்டன் (ரீயூனியன்) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
எனது மரணச்சடங்கு.🖤
கருத்து படங்கள்
காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது
இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது!
இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது!
இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது!
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர்.
இதற்கு மேலதிகமாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலக் கட்டத்தில் இலஞ்சம் கோரல் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் CIABOC தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 29, வரை மொத்தம் 122,913 நபர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு கூறியுள்ளது.
அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் காலகட்டத்தில், அதிகாரிகள் 928,787 கிலோ கிராம் ஹெராயின், 1,396,709 கிலோ கிராம் ஐஸ், 11,192,823 கிலோ கிராம் கஞ்சா, 27,836 கிலோ கிராம் கொக்கெய்ன் மற்றும் 381,428 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில், ஜூலை 29 அன்று இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படை (STF) மற்றும் முப்படையினரால் நாடு முழுவதும் ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 6,695 பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 10,128 வாகனங்கள் மற்றும் 7,734 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.
சோதனையின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 948 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்தக் குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மேலதிமாக இந்த நடவடிக்கைகளின் போது மூன்று சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரஷ்யாவில் நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை - ஃபுகுஷிமாவில் என்ன நடக்கிறது?
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
சந்தேக நபர் தப்பியோட்டம்; பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் இருந்த சந்தேக நபர், நேற்று (30) கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும், அறையின் கதவு திறக்கப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அண்மையில் பாணந்துறை பகுதியில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் அவர் தொடர்புடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தில் விடயத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரியும், சம்பவத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரியும் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலைமறைவான சந்தேக நபரைக் கைது செய்ய சிறப்பு பொலிஸ் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.