| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 403 online users. » 0 Member(s) | 401 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,252
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,030
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,419
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,119
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| Steve Fossett புதிய சாதனை..! |
|
Posted by: kuruvikal - 02-11-2006, 11:29 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (1)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41322000/jpg/_41322534_andrew_stevens.jpg' border='0' alt='user posted image'>
Virgin Atlantic GlobalFlyer விமானம்.
Steve Fossett என்ற சாதனையாளர் உலகை Atlantic GlobalFlyer என்றும் நீண்ட நேரம் பறக்கக் கூடிய விமானம் மூலம் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்..! கடந்த புதனன்று (08-02-2006) அன்று அமெரிக்காவில் இருந்து ஆரம்பமான பறப்பு இன்று (11-02-2006) பிரித்தானியாவில் தரையிறங்கியதுடன் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்தச் சாதனைப் பறப்பின் போது Steve Fossett மொத்தம் 26,389.3 மைல்கள் உலகைச் சுற்றி விமானம் மூலம் ஓய்வின்றிப் பறந்திருக்கிறார். இதுவே ஒரு விமானப் பறப்பின் போது ஓய்வின்றி அதிக தூரம் பறந்த உலக சாதனையும் ஆகிறது..!
தகவல் ஆதாரத்துக்கு http://kuruvikal.blogspot.com/ படம் - பிபிசி.கொம்
|
|
|
| சந்தியின் கவிதைகள் |
|
Posted by: சந்தியா - 02-11-2006, 09:10 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (14)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'> மாவீரர்கள்</span>
காவியங்கள் பல படைத்திட
வங்கக் கடல்தனிலே
வேங்கைகளாகப் புறப்பட்ட
மாசற்ற மறவர்கள்
அண்ணன் வழி சென்றே
அவன் ஆணையை நிறைவேற்றியவர்கள்
தாய் தந்தை மறந்தார்கள்
தாய் நாட்டை நேசித்தார்கள்
தாய் நாட்டை தம் தாயாக கருதியவர்கள்
தமிழ் மக்களையும்
தாய் மண்ணையும் காத்திடவே
கரும் புலியாய்!
கடற் புலியாய்!
பல்வேறு வடிவங்களில்
புயலாகப் புறப்பட்டு - இன்று
எல்லோர் மனதிலும் வாழுகின்ற
உன்னதப் புருசர்கள்
மாவீரர்கள்
|
|
|
| மாணவி கடத்தல் |
|
Posted by: Shankarlaal - 02-11-2006, 04:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மாணவி கடத்தல் மீசாலையில் பரபரப்பு
தென்மராட்சி மீசாலைப் பகுதியில் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மீசாலையில் புத்தூர் சந்திக்குச் சமீபமாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீசாலை, புத்தூர் சந்திப் பகுதியில் மில்
ஒழுங்கையில் வசித்து வருபவர் த.அனுஷா. இவர் கொடிகாமம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்விகற்றுவருகின்றார். இம்மாணவி வழமைபோல் நேற்றும் பாடசாலைசென்றுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
இம்மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோ ஒன்றில் ஏற்கனவே தயாராக நின்றிருந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று அம்மாணவி தமது ஆட்டோவை நெருங்கியதும் அவரை பலவந்தமாக பிடித்து ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
வீதியில் நடந்துவந்து கொண்டிருந்த மாணவி ஆட்டோவில் பலவந்தமாக ஏற்றப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் மாணவியை ஆட்டோவில் ஏற்றிய கும்பலை மடக்கிப்பிடிக்க முற்பட்டுள்ளனர்.
எனினும் மக்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாத அக்கும்பல் மாணவியை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் தப்பி ஒடித் தலைமறைவாகியுள்ளனர்.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் கொடிகாமம் பொலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
தினகுரலிருந்து சுருட்டியது
|
|
|
| மன்னார் கடலில் படகு வெடித்து சிதறியது |
|
Posted by: Shankarlaal - 02-11-2006, 03:48 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (3)
|
 |
[February 11, 2006]
<b>Trawler explodes off Sri Lanka coast, gunrunning suspected+</b>
(Japan Economic Newswire Via Thomson Dialog NewsEdge)COLOMBO, Feb. 11_(Kyodo) _ A fishing trawler exploded at sea off Sri Lanka's northeastern Mannar coast on Saturday when approached by navy vessels for inspection, Sri Lankan navy sources said.
"The boat exploded as two naval fast-attack craft approached it for inspection," a senior naval officer said. "There had been no offensive action on either side."
"All on board are presumed dead," he said, adding that he had no information on how many there were.
The naval vessels patrolling the area had approached the trawler due to its suspicious movements, said the officer, who requested anonymity.
The Tamil Tiger rebels have previously exploded gunrunning boats to prevent detection.
Earlier this year, the navy detected an Indian trawler carrying 65,000 detonators for delivery to the rebels. Diplomats expressed concern about the incident ahead of talks slated for Feb. 22 in Geneva between the Sri Lanka government and the rebels to discuss their February 2002 Cease-Fire Agreement.
It would be the first meeting between the two sides since April 2003.
http://www.tmcnet.com/usubmit/2006/02/11/1362817.htm
<b>LTTE smugglers blow up own boat of explosives </b>
http://www.expressindia.com/fullstory.php?newsid=62725
|
|
|
| கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center |
|
Posted by: Mathan - 02-11-2006, 11:55 AM - Forum: கணினி
- Replies (9)
|
 |
கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center
[size=14]<img src='http://safety.live.com/resource/image/v1/notext/windows_live_logo.gif' border='0' alt='user posted image'>
மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும்.
மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது.
<img src='http://www.microsoft.com/library/media/1033/athome/security/images/update/64563_shield_icon.gif' border='0' alt='user posted image'> - <b>Protection</b>
- உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது.
<img src='http://www.microsoft.com/library/media/1033/athome/security/images/update/64563_broom_icon.gif' border='0' alt='user posted image'> - <b>Clean up</b>
- உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது.
<img src='http://www.microsoft.com/library/media/1033/athome/security/images/update/64563_tool_icon.gif' border='0' alt='user posted image'> - <b>Tune up</b>
- உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது.
இதன் தோற்ற படங்கள் சில ....
<img src='http://www.microsoft.com/library/media/1033/athome/security/images/update/64563_375x108_full-service_.gif' border='0' alt='user posted image'>
<img src='http://www.microsoft.com/library/media/1033/athome/security/images/update/64563_375x409_scan-window_F.gif' border='0' alt='user posted image'>
மேலதிக விபரங்களை அறிய ....
http://www.microsoft.com/athome/security/u...ety_center.mspx
[b]இதனை உபயோகிக்க ...
http://safety.live.com/site/en-US/default.htm[/color]
|
|
|
| தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி? |
|
Posted by: Mathan - 02-11-2006, 09:50 AM - Forum: நகைச்சுவை
- Replies (11)
|
 |
தமிழ் வலைப்பதிவுகளில் காலம் தள்ளுவது எப்படி?
தமிழ்மணத்தில் நிகழும் குடுமிப்பிடி சண்டைகளை பார்த்து மண்டை குழம்பியதாலும் எனக்கும் சமீபத்தில் இப்படி ஒரு அனுபவம் எற்பட்டதாலும் சர்வைவல் டெக்னிக் கொடுக்கச் சொல்லி என் நண்பன் ஆழம் அருமைநாயகத்தை வேண்டினேன். அவன் பல வருடங்களாக தமிழ்வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன்தான்.
.எங்கள் உரையாடலை அப்படியே கொடுத்துள்ளேன்.
"முதல்ல உன்கிட்ட எத்தனை பிளாக்கர் அக்கவுண்ட் இருக்கு?" என்றான்.
"ஏன்? ஒண்ணுதான்" என்றேன்.
"போடா லூசு, குறைஞ்சது நாலு அக்கவுண்டாவது வேண்டும்"
"எதுக்கு?"
"ஒரு மெயின் அக்கவுண்ட் வையி..அதுல ஆழமா அறிவுபூர்வமான கட்டுரைகளை எழுதனும்..படிக்கிறவங்க நீ எவ்ளோ பெரிய அறிவாளின்னு நெனைக்கற அளவிற்கு அதில எழுதனும்"
"ம்"
"அப்புறம் பின்னூட்டம் இடுறதுக்கு தனி அக்கவுண்ட்"
"எதுக்கு, அதே பேர்ல பின்னூட்டம் இடலாமே"
"சேச்சே,சில நேரம் தரம் தாழ்ந்து எழுத வேண்டி இருக்கும்..அதுக்கு அதே பேரை யூஸ் பண்ணா உன் இமேஜ் என்னாவது? "
"ஓ"
"ஆமா,ஆனா இந்த பேரை யூஸ் பண்ணும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.சில பேரு ஐ.பி. செக் வைப்பான்.அதுக்காக முடிஞ்ச அளவு உங்கள் பதிவுலேயே நீங்களே பின்னூட்டம் இட்டு யாரையாவது கிண்டல் பண்ணலாம்."
"சரி மூன்றாவது அக்கவுண்ட் எதுக்கு"
"ஆழமாகவும் அகலமாகவும் எழுதி போரடிச்சா விஜய் சாரும் நானும், நயன்தாரா என் தங்கம் என்றெல்லாம் எழுதலாம்.பர்சனாலிட்டி கிலாஷ் பிரச்சினையை தவிர்க்கலாம்"
"சரி நாலாவது அக்கவுண்ட்"
"அதை போலி டோண்டு உங்க பேரில வெச்சிருப்பான்.அதை கண்டுக்காதீங்க"
"அட... இதுவெல்லாம் எழுதறவங்களுக்கு...எங்களை மாதிரி ஆட்களுக்கு என்ன ஐடியா?"
"குறும்பும் பண்ணணும்.ஆனா எல்லார்க்கும் நல்ல பிள்ளைன்னு பேர் எடுக்கணுமா?"
"..."
"சென்சிட்டிவ்வான பிரச்சினைகளில் எனக்கு கருத்தே இல்லைனு நம்ப பதிவுல போட்டுட்டு யாராவது குறும்பா கருத்து சொல்லக்கூடியவங்க பதிவுல போய் சூப்பர்,எல்லா கருத்தையும் ஏற்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவை போற்றுகிறேன் என்றெல்லாம் புகழ வேண்டும்.உடனே நீங்க எந்த கருத்தை ஏற்கறீங்க எதை மறுக்கறீங்கன்னு புரியாமல் மக்கள் குழம்புவாங்கள்ள"
",,,,,"
"இதுல ஒரு வம்பு என்னன்னா உங்க ஆளு எக்கச்சக்கமா மாட்டிட்டார்னா நீங்க அங்க பின்னூட்ட சப்போர்ட் கொடுக்க முடியாது.ஆனா உங்க மறைமுக ஆதரவை தெரிவிக்க நீங்க உங்க பதிவுல கம்பு சுத்தியாகணும்.இது கொஞ்சம் கஷ்டம்.தெறமை வேணும்"
தன் கட்டிலுக்கு அடியில் இருந்து "நெட்ஓர்க்கிங் ஃபண்டமெண்டல்ஸ்", "உள்குத்து மேட் ஈஸீ",ஆகிய புத்தகங்களை எடுத்து கொடுத்தான் அருமைநாயகம். இதற்கே தலைசுத்திபோன நான் அப்புறம் வருகிறேன் என்று கூறி நடையை கட்டினேன்.
நன்றி - முத்து / ஒரு தமிழனின் பார்வை
|
|
|
| சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் |
|
Posted by: வினித் - 02-11-2006, 09:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ்
பிப்ரவரி 11, 2006
திண்டுக்கல்:
28 வயதே ஆன போலீஸ்காரருடன் காதல் லீலையில் ஈடுபட்டார் 48 வயது பெண் சப்இன்ஸ்பெக்டர். இருவரும் காவல் நிலையத்தையே காம நிலையமாக மாற்றி குடும்பம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டராக இருந்த விஜயா (48)வுக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராக இருந்த போலீஸ்காரர் சந்திரசேகரனுக்கும் (28) காதல் பத்திக்கிச்சு.
இந்த சந்திரசேகரன், வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் இருந்தவர் என்பதால் ரூ. 3 லட்சம் துட்டும், பதவி உயர்வும், வீட்டு மனையும் வழங்கப்பட்டவர்.
விஜயாவுக்கும் சந்திரசேகரனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதோடு, காவல் நிலையத்திலேயே இருவரும் காதல் லீலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். குறிப்பாக இரவுப் பணியின்போது இருவரும் ஸ்டேசனிலேயே குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் போனது.
இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறைரீதியில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் விஜயாவையும் சந்திரசேகரனையும் டிஸ்மிஸ் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்கு காவலர் குடியிருப்பில் தரப்பட்ட வீடுகளையும் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.com/news/2006/0.../11/police.html
|
|
|
|