Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 452 online users.
» 0 Member(s) | 449 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,251
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,118
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  கேக் வகைகள்
Posted by: Rasikai - 02-13-2006, 05:27 PM - Forum: சமையல் - Replies (14)

<img src='http://img106.imageshack.us/img106/3514/image0019yb.jpg' border='0' alt='user posted image'>
Baby Boom Strawberry

<img src='http://img495.imageshack.us/img495/3053/image0028yr.jpg' border='0' alt='user posted image'>

White Chocolate

<img src='http://img106.imageshack.us/img106/6361/image0038eg.jpg' border='0' alt='user posted image'>
Tobblerone Cheese Cake

<img src='http://img495.imageshack.us/img495/2527/image0047nr.jpg' border='0' alt='user posted image'>
Taro Fresh Cream Cake

<img src='http://img495.imageshack.us/img495/6065/image0054rp.jpg' border='0' alt='user posted image'>
Prune Cake

<img src='http://img495.imageshack.us/img495/291/image0069um.jpg' border='0' alt='user posted image'>
Cheese Cake

<img src='http://img106.imageshack.us/img106/234/image0076gb.jpg' border='0' alt='user posted image'>
New York Cherry Cheese Cake

<img src='http://img106.imageshack.us/img106/6337/image0086be.jpg' border='0' alt='user posted image'>
Mocha Toffee Cake

Print this item

  தமிழ்ச் சமூகத்தின் இணைய வானொலி
Posted by: kurukaalapoovan - 02-13-2006, 05:09 PM - Forum: தளமுகவரிகள் - Replies (3)

தமிழ்ச் சமூகத்தின் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்கள் ஒலி வடிவிலும், www.tamilsocietyradio.com

"அப்பால் தமிழ்" இணையம்: www.appaal-tamil.com

எரிமலை சஞ்சிகையில் வெளி வந்த "துரோகத்தின் பரிசு"
http://www.appaal-tamil.com/index.php?opti...d=442&Itemid=60

Print this item

  இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா
Posted by: நர்மதா - 02-13-2006, 04:53 PM - Forum: தமிழீழம் - No Replies

இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களை உணர்வுகளைப் புரிந்து கொள்ளுமா?

தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுப் பாதை கடந்த காலங்களோடு ஒப்பிடுமிடத்து இன்னும் பலத்த சவால்களை சந்திக்கவுள்ளது. கடந்து வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் காலத்துக்குக் காலம் பல்வேறுபட்ட தடைகளை சந்தித்து அவற்றினை தகர்த்தெறிந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், இனிவரும் காலம் காத்திருக்கின்ற சவால்கள் மிகமிக கனதியானவை கடினமானவை. எனினும், இவற்றினை தகர்க்கமுடியாதென்றில்லை. ஆனால், முகங்கொடுக்கவேண்டிய முறையில் பல மாறுபாடுகளிற்கு இடமுண்டு. அந்த மாறுபாடுகளை எதிர்நோக்கும் போது சில புதிய அனுபவங்கள் ஏற்பட இடமுண்டு.

இந்த புதிய அனுபவங்கள் புரிவதற்கு சற்று கடினமானதாகவும் அமையலாம். அதிலிருந்து தமிழ் தேசியம் பாடத்தினை கற்பதற்கிடையில் துரோகிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள எதிரிகள் அடுத்த கட்டத்திற்கு நுழைந்திடுவார்கள். இது தமிழர் தரப்பிற்கு சில பின்னடைவுகளையும் அதன் காரணமாக அவர்களின் விடுதலைப்பயணத்தில் தாமதங்களையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனடிப்படையில் தமிழ்த்தேசியம் என்றும், எதிலும், எங்கும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது. விழிப்புநிலையினூடாக சில முக்கிய முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக தமிழ்த்தேசியம் எதிர்நோக்கவுள்ள பேராபத்தைத் தடுக்கலாம். அல்லது ஓரளவாவது குறைக்கலாம். இதற்கு எமது இறந்தகால வரலாறு உதவும். அதே வேளை அந்த வரலாற்றின் வெற்றிகளுக்குள் மட்டும் நாம் மூழ்கக் கூடாது. வெற்றிகள் எப்போதும் சில படிப்பினைகளையே தரும். தோல்விகள் பல கற்பித்தல்களை உணர்த்தும். இது வரலாறு சொல்லித்தந்த பாடம்.

தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட வரலாற்றை எடுத்து நோக்கும்போது எமக்கு ஒரு உண்மைபுரியும். அது யாதெனில், தமிழர் தரப்பு ஒரு வெற்றியை அடைந்த பின் ஒரு பின்னடைவைச் சந்திக்கும் ஆனால் சில வெற்றிகளின் பலாபலன்களைக் கூட அனுபவிக்க முடியாமல் போனதுண்டு. எதிரியினதும் துரோகியினதும் பலவீனத்தை மட்டுமல்ல பலத்தையும் சரிவர எடைபோடவேண்டும். அதற்காக நாம் என்றுமே பின்னடைவுகளையே சந்தித்துள்ளோம் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது. உலகம் வியக்கும் பல போரியல் வெற்றிகளைப் படைத்துள்ளோம். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளைப் புரிந்துள்ளோம். இந்த சாதனைகளும் வெற்றிகளும், உலகை வியக்க மட்டுமல்ல விறைக்கவும் வைத்துள்ளது. அதனால் தான் இன்று தமிழ் தேசியத்திற்கு எதிராக குறைந்தது 3 வல்லரசுகள் உட்பட உலகின் சக்திமிக்க ஆகக்குறைந்த 9 நாடுகளை சிறிலங்காவிற்கு பின்னால் அணிதிரள வைத்துள்ளன. வெறுமனே அணி திரள்வு மட்டுமல்ல தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தீவிரமாகவும் செயற்பட வைத்துள்ளது. இதில் அரசியல் பொருளாதாரம், இராணுவப் பயிற்சிகள் படைப்பலப் பெருக்கம் போன்றவை முக்கியமானவை. இவற்றினைவிட மிகமிக முக்கியமானது புலனாய்வு நகர்வு. இங்கே நகர்வு என்பது புலனாய்வின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிடுகிறது. புலனாய்வு நகர்வு தான் எந்தத் தேசத்தின் இருப்பையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துகிறது. ஆதலால் தான் எந்த அரசும் புலனாய்வுப் பிரிவிற்கு அதிகளவிலான பணத்தை செல்விடுகின்றன. அனைத்து வசதி வாய்ப்புக்களையும் தாராளமாக புலனாய்வுப் பிரிவிற்கு அள்ளி வழங்குகின்றன. இவை அனைத்தும் தமிழ்த் தேசியம் மீது எப்போதும் ஆழமாகப் பாய ஆரம்பித்துவிட்டன. இவையனைத்திற்கும் ஈடுகொடுத்து தமிழ்த்தேசத்தின் படையணி தமிழ்த்தேசியத்தை பாதுகாத்து வலுப்படுத்தி வருகிறது.

இதற்காக அவர்கள் கொடுத்த, கொடுக்கின்ற, கொடுக்க இருக்கின்ற விலையை யார் அறிவார். தமிழ்த்தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துகின்ற விடுதலைப்புலிகளோடு மோதுகின்ற ஏனைய புலனாய்வு நாடுகளின் பலம், வசதி வாய்ப்புக்களோடு ஒப்பிடும் இடத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையின் பலம் கோலியாத்தோடு மோதிய சிறுவன் போன்றதே. அல்லது முழங்கும் பல்குழல் பீரங்கிக்கு முன்னால் 9mm பிஸ்ரலோடு நிற்பதற்கு ஒப்பானதே. இந்த இரண்டு உதாரணங்களிலும் ஒரு பொது விடயத்தைக் கவனிக்கலாம். அதாவது எதிரி எல்லா வகையிலும் மிகமிகப்பலம் பொருந்தியவனாக இருந்த போதும் அவனோடு போராடுகின்றவன் தன்னை தற்காத்தபடி அனைத்துப் பேரளிவுகளிற்கும் மூல காரணமாக இருந்து இயங்குகின்றவனை அழித்துச் செயலிழக்கச் செய்து விடுவான். நேரடியாகக் கூறுவதானால் தன்னைப் பாதுகாத்தபடி நெருங்கி பல்குழல் பீரங்கி இயக்குபவர்கள் கதையை 9mm முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு உடனடியாகவே உத்தரவிடும்.

சிறுவன் கோலியாத்தின் கண்களை நோக்கி கற்களை வீசியது போன்றதே. இந்த சிறுவன் 9mm பிஸ்ரல் போன்றதே தமிழ்த்தேசியத்திற்கான படைப்பலம். எதிரி கோலியாத் பல்குழல் பீரங்கி போல் உள்ளான்.

கவனிக்க :- தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ் தேசியத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தும் தமிழரின் படைப்பலம் மிகமிகப் பலப்படுத்தப்பட வேண்டும். இதற்கு தமிழ் மக்களின் உதவி பல்வேறு வழிகளிலும் வழங்கப்பட வேண்டும். இது தன்மானமிக்க மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழனினதும் கடமை பொறுப்பு கட்டாயம். ஏனெனில், எமது எதிரிகள் எங்கள் பலத்தோடு ஒப்பிடுமிடத்து பன்மடங்கு பலமுள்ளவர்களாக திகழ்வதால் நாமும் நவீனமயமானவர்களாக வேண்டிய தேவையுள்ளது.

வெறுமனே எதிரியின் பலம் வளர்ச்சி எங்களின் நிலை தேவை என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாது, நாங்கள் எதிர்நோக்கியுள்ள (காத்திருக்கின்ற) சவாலையும் அது கடந்த காலத்தில் எவ்வாறு விசத்தைக் கக்கியது என்பதையும் கவனிப்பது அவசியமானது.

அதனடிப்படையில் எமக்கு எதிராக யார் யார் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள் எந்தப் பகுதியை மையமாக வைத்துச் செயற்படுகிறார்கள் எதற்காக அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் போன்றவற்றையும் சில பொதுவான அம்சங்களையும் அலசலுக்கு உட்படுத்துவோம். இதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது எமக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள பல நாடுகளில் சிற்சில நாடுகளுக்குள், தமது தேச இருப்பு மற்றும் வலுப்படுத்தல் தொடர்பாக கடுமையான புலனாய்வுப் போர் தொடர்கிறது. இதனை ஓர் சிறிய உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். இரண்டாயிரம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்குடா நாடு புலிகளின் கைகளுக்குள் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நிலையில் இருந்தது. இந்த வேளையில் அங்கு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைகளையும் எந்தவிதமான உயிர்ச்சேதமுமின்றி மீட்பதற்கான சகல ஆயுத்தங்களையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதே போன்று பாகிர்தானோ முதுகெலும்பு முறிந்தது போன்றிருந்த சிறிலங்காப்படையினருக்கு விரைவாக தேறுவதற்காக உன்னத சத்துணவாக பல்குழல் பீரங்கிகளை வழங்கியது. இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 'கார்கில்' போர் இடம்பெற்றதால் பரஸ்பரம் பரமஎதிரிகளாக இருந்தனர். ஆனால் தமிழ்த்தேசியத்தை நசுக்க முனைந்த போது பரமஎதிரிகள் கூட ஓரணியில் திகழ்கிறார்கள். இது எதனைப் புலப்படுத்துகிறது ?

எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது விடுதலை மூலமான உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று கனவுகாணக் கூடாது. நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும். தூரநோக்குள்ள வல்லமைமிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள். தமிழர் தேசத்தின் விடியலிற்கான கட்டளைக்காய் அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள். மூலப்போகின்ற போர் பலசேதிகளை சொல்லக் காத்திருக்கின்றது. இந்தப் போர் இழுபடுவதோ முடிவுகள் அற்றதோ அல்ல. விரைவாக தீர்க்கமான தீர்வினைச் சொல்லும். 17500ற்கு மேற்பட்ட மாவீரர்களின் அர்ப்பணிப்பிற்கான மிமிகச் சரியான பதிலை சொல்லும். விடுதலை வேண்டி போராடும் தேசங்களிற்கு பலபடிப்பினைகளைச் சுட்டிக்காட்டும். தர்மத்தையும் நியாயத்தையும் வெளிப்படுத்தும். அந்நிய ஆதிக்க சக்திகளின் குள்ளநரித்தனங்களை புட்டுவைக்கும். இவையனைத்திற்கும் உறுதுணையாக பல ஆண்டுகளாக அவலங்களையும் ஏக்கங்களையும் சுமத்த எமது மக்கள் இருந்தார்கள், இருக்கப்போகிறார்கள் என்ற சேதி தெரியவேண்டும். எமது மக்கள் எப்போதுமே போரியல், அரசியல், சக பொருளாதார ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் சட்டத்தை கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க ஒரு சக்தியாலும் அசைக்கக் கூட முடியாது. இதனடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக விழப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.

இன்று எமது தேசத்தினை நோக்கி பல நாடுகளின் புலனாய்வுக் கண்கள் தீவிரமாகத் திரும்பியுள்ளன. சில நாடுகள் எமது தேசத்தினைக் கூறுபோடும் முயற்சியிலும் எமது போராட்டத்தினை நசுக்கும் வகையிலும் நேரடியாகவே செயற்பட ஆரம்பித்துள்ளன. அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகள் இதனைப் புலப்படுத்தி நிற்கின்றன. இந்தச் செய்திகளின் மக்களின் கதைகளில் பிரதானமாக பேசப்படும் உளவு அமைப்பாக இந்தியாவின் 'றோ' ( RAW - Research and Analysis Wing) அமைப்பே திகழ்கிறது.

கிழக்கு மாகாணத்தில் இதன் செயற்பாடுகள் அண்மைக்காலத்தில் தீவிரம் பெற்றுள்ளதாக மக்கள் மற்றும் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறான செய்திகள் தகவல்கள் இந்தியாவைச் சங்கடத்தில் ஆழ்த்தக் கூடும்.

இந்த வேளையில் இந்தியாவின் குறிப்பாக றோவின் கடந்த காலத்தைத்திரும்பிப்பார்ப்பது பொருத்தமானதாக அல்லது பயனுள்ளதாக இருக்கும். இதில் முதலில் 'றோவின்' சில முக்கிய பின்னணிகளை நோக்குவோம். பாகிஸ்தான் தனது நாட்டில் முகாம் அமைத்து இந்தியாவிற்கு எதிராக போராடக்கூடிய கெரில்லாக்களுக்கு பயிற்சி வழங்கியதோடு சீக்கியர்களுக்கு ஆயுதங்களை வழங்கியது. இதனையடுத்தே 1968ம் ஆண்டு 'றோ' தோற்றம் பெற்றது, 'றோ' ஆனது இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு நலனை கருத்தில் கொண்டு தனது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அத்துடன் அயல் நாடுகளின் அரசியல் இராணுவ வலுப்படுத்தல்கள் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பில் செலுத்தும் தாக்கத்தினை கூர்மையாக கவனிக்கும். 'றோ' இந்தியாவின் பிரதமரின் கீழே இயங்கும். 250 உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்ட 'றோ' வில் இன்று அண்ணளவாக 12500 முகவர்கள் அயல்நாடுகளில் மட்டும் உள்ளனர். ஆனால் பாகிஸ்தானின் குறிப்பின்படி 1983 - 1993 வரையான காலப்பகுதியில் 35000 'றோ' முகவர்கள் பாகிஸ்தானிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்களில் 12000 பேர் சிந்து என்ற பகுதியிலும் 10,000 பேர் பஞ்சாப் என்ற பகுதியிலும் 8000 பேர் பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியிலும் 5000 பேர் பகிஸ்தானின் எல்லைப் புறமாகவும் பணிபுரிபவர்கள் போல் உளவு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் செராக்கி என்னும் இயக்கத்திற்கு (Seraki Movement) நிதி உதவிகளை வழங்கியதோடு இந்த இயக்கத்தின் உள்ளக மாநாடொன்றை 1993 நவம்பர் - டிசம்பர் காலப்பகுதியில் டெல்லியில் நடத்தியதாக பாகிஸ்தான் இந்தியாமீது குற்றம் சுமத்தியுள்ளது, பாகிஸ்தானிற்குள் தீவிரவாத செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே செராக்கி இயக்கத்திற்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.

கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேசாக மாற்றமடைவதற்கு இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட முக்தி வாகினி ( Mukti Bahini) என்ற இயக்கமே மூலகாரணமென கூறப்படுகிறது. இதன் பின்னணியில் றோ தீவிரமாகச் செயற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. மற்றும் கிழக்குப் பஞ்சாப்பில் ஆயுதப்பயிற்சி முகாமினை அமைத்து முஸ்லிம் அல்லாத பாகிஸ்தானியர்களுக்கு பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான பயிற்சிகளை 'றோ' வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னுமொரு முக்கியவிடயம் யாதெனில், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் றோ போன்று 29 பிரிவுகள் உள்ளன. உதாரணமாக CBI, JIC,DGRI,IB. 20 மில்லியன் இந்திய ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த செலவீடு இன்று 16m $ - 145m$ (m$ மில்லியன் டொலர்) வரை உயர்வடைந்துள்ளது. இதிலிருந்து 'றோ' வின் பரிமாணத்தை, உள்ளீட்டை, இடையீட்டை, வெளியீட்டை உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறான தன்மைகளைக் கொண்ட 'றோ' 1981ம் ஆண்டில் இலங்கையில் காலூன்றியது. டெய்லியில் உள்ள அதியுயர் பாதுகாப்புப் பிரதேசமான சகார்த்தா இராமகிருஷ்ண புரத்திலும், தமிழ்நாட்டிலுமாக 30 முகாம்கள் தனிநாடு கோரிப்போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களிற்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

ஆயுதப்பயிற்சிகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னிலை வகித்ததோடு கட்டுக்கோப்புடைய கூட்டமைப்பினை ஏற்படுத்தினார்கள். (இந்த இடத்தில் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஆயுதப்பயிற்சிக்காக விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் வயது வேறுபாடு, கல்வித்தன்மை, ஒழுக்கம் போன்றவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆட்சேர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார்கள். விடுதலைப்புலிகளோடு ஒப்பிடுமிடத்து ஏனைய இயக்கங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டோர் தொகை அதிகம். இதனையறிந்த புலிகளின் சில மூத்த உறுப்பினர்கள் ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுமிடத்து புலிகளின் எண்ணிக்கை குறைவு என எண்ணி அது எதிர்காலத்தில் ஆட்பலத்தில் பிரச்சனைகளை தோற்றுவிக்கக் மூடும் என்ற கருத்தை தலைவர் பிரபாகரனிடம் தெரிவித்தார்கள். ஆனால் தேசியத் தலைவர் தீர்க்கதரிசனமான முடிவொன்றை அந்த மூத்த உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார். அந்த தீர்க்கதரிசனத்தை நாம் இன்று தரிசித்துக் கொண்டிருக்கின்றோம். தலைவரின் தீர்க்கதரிசனமும், ஆத்மபலமும் தான் தமிழர் தேசம் உலகம் வியக்கும் வண்ணம் வளர காரணம் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்)

1986ற்கு பிறகு இந்திய அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் வந்தது. உதவிகளை நிறுத்தி புலிகளையும் சில இயக்கங்களையும் கடுமையாக கண்காணிக்க தொடங்கியது. ராஜீவ் காந்தியினுடைய காலப்பகுதியில் 'றோ' தமிழ்த் தேசத்திற்கு எதிராக தீவிரமாக செயற்பட ஆரம்பித்து மூக்குடைபட்ட வரலாறு யாவரும் அறிந்ததே. ராஜீவை வழிநடத்தியவர்களின் தவறே இதற்கான காரணம் என பின்னர் அறியமுடிந்தது. இலங்கையில் 'றோ' வின் நடவடிக்கைகளை டேவிட் (David) வழிப்படுத்த, புதுடெல்லியில் சந்திரன் வழிப்படுத்தினார்.

1989 இல் றோவிடம் மூன்று விடயங்களை ராஜீவ் கையளித்தார்.

1 வடக்குக் கிழக்கில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்களை வெளிக் கொணர்தல்.

2 சந்தர்ப்பங்களுக்கேற்ப விடுதலைப்புலிகள் தமிழ்மக்கள் பிரதேசங்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களையும் அல்லது அவ்வாறான தோற்றப்பாட்டையும் அதனை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்தால் முடியாததையும் வெளிப்படுத்தல்.

3 பிரசைகள் தொண்டர் படையணி என்ற ஒரு படையமைப்பை நிறுவி, அதற்கான பயிற்சிகளை மேம்படுத்தி அவர்களை இராணுவத்திற்குரிய அரைவாசி கட்டமைப்புடன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கட்டளையிட்டார். அரைவாசி கட்டமைப்பு என்னும் போது, இலங்கையைப் பொறுத்தளவில் அது பலமிக்கது. இவ்வாறான 15000 பேர் கொண்ட படையமைக்க ராஜீவ் அனுமதியளித்திருந்தார். முழுமையான படைக்கட்டமைப்பெனின் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக இருக்குமென கருதியதனாலேயே அவ்வாறான முடிவை ராஜீவ் எடுத்திருக்கக் கூடும்.

முதலாவது விடயத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தை உண்டு பண்ணி தமிழ் மக்களிற்காக வருவது என்ற போர்வையில் கால்பதித்தல்.

இரண்டாவது விடயத்தின் மூலம் விடுதலைப்புலிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்தல்.

மூன்றாவது விடயத்தின் மூலம் இலங்கையை தாம் நினைத்தபடி செயற்படுத்தலாம் போன்றவையே ராஜீவ் - றோ திட்டமாக இருந்தது. அதேவேளை தாம் ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற உணர்வு மக்கள் மனதிலும் சர்வதேச ரீதியிலும் பதியாமல் இருக்கும் வண்ணம் அவதானமாகச் செயற்பட்டனர். (காலப்போக்கில் முகமூடி கிழிந்து திட்டங்கள் புஷ்பவாணமானது)

பிரசைகள் தொண்டர் படையணிக்கான ஆட்சேர்பின் அங்கமாக ரெலோ, புளொட், DPRLF, ENDLF என்பன உள்வாங்கப்பட்டன.

இந்த இயக்கங்களைக் கொண்டு ஆட்கடத்தல், கட்டாய ஆட்சேர்ப்பு என்பவற்றை 'றோ' மேற்கொண்டது. இளைஞர்கள் அனைவருக்குமான ஆயுதப்பயிற்சிகள் 'றோ' வின் மேற்பார்வையிலேயே நடந்தது.

பிரசைகள் தொண்டர் படையணி தமிழ்த்தேசி இராணுவம் என மாற்றமடைந்து 1989ம் ஆண்டில் சிறிலங்காப் பொலிஸார் மீது அம்பாறை மாவட்டத்தில் தாக்குதலை மேற்கொண்டது. இதனை விடயம் தெரிந்த தமிழ் மக்கள் 'றோ' வின் கபடத்தனமான உள் நோக்கம் கொண்ட தாக்குதலென குறிப்பிட்டனர். இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயமோ இனந்தெரியாத சண்டையிடும் குழுக்களின் தாக்குதல் எனக் கூறி தமது கைங்கரியத்தை மறைக்க முற்பட்டன. இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டமையால் ஆத்திரமடைந்த 'றோ' உள்ளிட்ட தரப்புக்கள் இலங்கையில் பதற்றத்தை உருவாக்கவே அத்தாக்குதலுக்கு வழியமைத்துக் கொடுத்தனர். அப்போதய சிறிலங்காவின் பாது காப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ண இந்தியப் படைகளினதும் றோ வினதும் பின்னணியில் துணைப்படை (Para Military) உருவாக்கப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணிகளின் அடிப்படையோடு, அண்மைக்காலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற நாசகார நடவடிக்கைகளை ஒப்பீடு செய்யும் போது சில சந்தேகங்கள் எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. இந்த சந்தேகத்தை வலுப்படுத்திய முக்கிய காரணிகளில் ஒனன்றாக, தேச விரோத கும்பல்கள் மீது சில மாதங்களிற்கு முன்னர் சொருவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் சான்று பகர்கின்றன. இந்த தாக்குதலின் போது வெளிப்பட்ட இரண்டு விடயங்கள் 'றோ மீண்டும் இலங்கையில் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளதா என்ற சந்தேகத்தை கடந்த காலத்தை நன்கு அறிந்த மக்களுக்குத் தோற்றுவித்துள்ளது.

சந்தேகத்தை உண்டு பண்ணிய விடயங்களாக பின்வரவனவற்றை நோக்கலாம் :-

சொருவில் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இருவர் சொருவிலைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு வேலை எடுத்துத்தருவதாகக் கூறி ஏமாற்றி பின்னர் கட்டாயமாக தேச விரோத குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான கட்டாயமான ஆட்சேர்ப்புக்கள், அப்பாவி மக்கள் மீதான துன்புறுத்தல்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

சொருவில் தாக்குதலில் கொல்லப்பட்ட நுானுடுகு விஜயனினதும் இன்னுமொருவரினதும் கடவுச்சீட்டுக்களும் தாக்குதலை மேற்கொண்டவர்களிடம் அகப்பட்டிருக்கக் Àடும். அல்லது வேறு வழிமுறைகள் மூலமோ குறித்த கடவுச்சீட்டுக்கள் இரண்டும் இந்தியா கடவுச்சிட்டுக்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விஜயனின் குடும்பத்தினர் நீண்டகாலமாக இந்தியாவிலேயே தங்கியிருக்கிறார்கள். வுிஜயன் இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்தபோது தமிழ் மக்களிற்கு எதிராகச் செயற்பட்டவர். அதன் காரணமாகவே IPKF இங்கிருந்த வெளியேற்றப்பட்டபோது அவர்களின் வாலில் தொங்கிக் கொண்டு போனவர்.

தேசவிரோத கும்பல்களின் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் திவிரமாக எளத் தொடங்யதோடு இந்தியாவிலிருந்து இங்கு வந்தார். கிழக்கு மாகாணத்தில் நாசகார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அனுப்பப்பட்டவர்களில் அல்லது வரவழைக்கப்பட்டவர்களில் ENDLF விஜயன் முக்கியமானவர்.

இவைமட்டுமன்றி தமிழ் மக்களுக்கு எதிரான கும்பல்களோடு இந்தியா நெருக்கமான உறவை வைத்திருப்பது சந்தேகங்களை பன்மடங்காக்குகிறது. 1989 காலப்பகுதியில் இந்தியாவோடு இணைந்து செயற்பட்ட இயக்கங்களான EPRLF, PLOT ENDLF போன்றவற்றின் முக்கியர்தர்களுக்கு இந்தியா ஏன் செயற்கைச் சுவாசத்தைக் கொடுத்திருக்கிறது. EPRLF வரதராஜப் பெருமாள் இன்னும் ஒரிசாவிலேயே தங்கியுள்ளார். 2004 எப்ரல் 2ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழ மக்களின் வாக்குகளை கூறுபோடுவதற்காக கடுமையான பாதுகாப்போடு சிறிலங்காவிற்கு வரதராஜப் பெருமாள் வந்திருந்தார். ஆனால் மக்களோ அவரிற்கு நல்ல சூடு போட்டு இந்தியாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்திய கடவுச் சீட்டுடைய இந்தியாவிலேயே நீண்டகாலம் தங்கியிருந்த ENDLF விஜயன் தமிழ்த்தேசத்தை சிதைக்க வந்து இறுதியில் சிறையிலேயே போய்விட்டார். தமிழ்மக்களிற்காக பேனா மனிதனாக விளங்கிய மாமனிதர் சிவராமின் கொலையோடு நெருங்கிய தொடர்புடையவர் எனக் கூறப்படுகின்ற சித்தார்த்தனோடு, இந்தியாவிற்கு இருக்கின்ற உறவின் வடிவம் - என்னத்தை வெளிப்படுத்துகின்றது ?

இவை ஓரிரு அண்மைக்கால உதாரணங்கள் மட்டுமே. இவையெல்லாம் மக்களிற்கு பல்வேறு மாதிரியான வினாக்களை பல்வேறு கோணங்களில் எழுப்பியுள்ளது.

இதே வேளை இன்னுமொரு வடிவத்திலும் தமிழ் மக்கள் இந்தியாவை நோக்குகிறார்கள். இந்த வடிவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் அவர்களிற்கு நிறையவே உண்டு. வழக்கமாக சொல்லுகின்ற உண்மையான தொப்புள்கொடி உறவுதான் அந்த இன்னொரு வடிவம். ஈழத்தமிழனுக்கு ஒரு துன்பமெனில் அவ்வலியின் வேதனை இந்தியாவிற்கு இருக்கும், இருக்க வேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு. இது மீண்டும் துளிர்கிறது என நம்புவோமாக 1980 களின் இறுதிக்காலப்பகுதியில் ராஜி சபை உறுப்பினராகவிருந்த வை.கோபாலசாமி அவர்கள் தமிழர் தாயகத்துக்கு வருகைதந்து தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் கலந்துரையாடிய பின் இந்தியா சென்று 1989 மார்ச் 07ம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தார்.

இந்தியாவுடன் நல்லுறவையும் நட்பையும் பேணவே புலிகள் விரும்புகிறார்கள் என்ற புலிகளின் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா அப்போது இந்த விடயத்தில் அசண்டையீனமாகவே இருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளோ இன்றுவரை அதே நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்கள்.

Print this item

  &quot;TRT&quot; தமிழ் அலையின் அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல்!!
Posted by: ஜெயதேவன் - 02-13-2006, 03:09 PM - Forum: புலம் - No Replies

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான முறையில் ஐரோப்பாவிலிருந்து இயங்கும் "TRT" தமிழ் அலை வானொலியின் அரசியல் ஆய்வாளர் "உதயகுமார்" கூலிக்குழுக்களின் வானொலி மூலம் பயமுறுத்தலுக்கு உட்பட்டுள்ளார்! குறிப்பாக டென்மார்க், ஜேர்மனி நாடுகளிலிருக்கும் கூலிகளின் உறுப்பினர்கள் மூலமே இப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது!

கடந்த காலங்களில் இக்கூலி கும்பல்களினால் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் "விமலராஜன், நடேசன், சிவராம், சுகிர்தராஜன், .." போன்றோர் பயமுறுத்தல்களின் பின் கொல்லப்பட்டதும், பல அரசியல் ஆய்வாளருக்கு கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது!!!

இவர்களது கொலை கலாச்சாரங்கள் புலத்துக்கும் வந்துள்ளதா?? என்று சந்தேகப்படத் தோன்றுகின்றது!!

இக்கொலை வெறி பிடித்த காட்டுமிராண்டிக் கூலிகளின் பயமுறுத்தல்களை உரிய முறையில், அவ்வானொலி நிர்வாகமோ அல்லது அவ்வரசியல் ஆய்வாளரோ, இந்நாடுகளிலுள்ள பாதுகாப்பு துறையினரின் கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் உரிய பாதுகாப்பை பெறக்கூடியதாக இருக்கும். அதேவேளை எதிர் காலத்தில் வரக்கூடிய மிரட்டல்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதாகவுமிருக்கும்.

Print this item

  தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிப்பு
Posted by: Shankarlaal - 02-13-2006, 01:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

(மேலதிக இணைப்பு) தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிப்பு- ஒற்றையாட்சியில்தான் தீர்வு: மகிந்த மீண்டும் அறிவிப்பு
[திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2006, 14:50 ஈழம்] [ச.விமலராஜா]
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கிற தமிழர் தாயகக் கோட்பாட்டை ஏற்க முடியாது என்றும் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை அளித்த நேர்காணல்:

சிறிலங்கா என்பது ஒரே நாடுதான். அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிநாட்டு கோரிக்கை இடமளிக்க முடியாது. அந்த யோசனை முற்றாக கைவிடப்படல் வேண்டும்.

அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த ஆயுதக் குழு இயங்கினாலும் அதை நாங்கள் நிறுத்தக் கூறுகிறோம். கருணா குழு உள்ளிட்ட எந்தக் குழுவாக இருந்தாலும் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஆயுதங்களை ஏந்துவதை கட்டுப்படுத்துவோம்.

பொதுமக்களை சித்திரவதை செய்வதையும் படுகொலை செய்வதையும் நிறுத்துவது தொடர்பாக விடுதலைப் புலிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கூட்டாட்சி முறையைவிட ஒற்றையாட்சியின் கீழ்தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரும்புகிறோம். ஐக்கிய இராச்சியத்தின் அரச முறையின் கீழ் அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தலாம்.

இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால் அது ஒற்றையாட்சி முறை. ஒற்றையாட்சியின் கிழே அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதுவே சிறிலங்காவுக்கும் பின்பற்றலாம். இருதரப்பினரும் உட்கார்ந்து பேசி விட்டுக்கொடுப்புகளின் மூலம் பேச்சுக்களை நடத்தலாம்.

ஜெனீவா பேச்சுக்களில் வன்முறைகளுக்கும் படுகொலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படலாம்.

நான் அமைதியை விரும்புகிற நபர். போர் வெறியர் அல்ல. கடந்த இரண்டு மாதங்களாக இராணுவத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.

எவ்வளவு நாளைக்கு நான் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியும்? என் மீதான அழுத்தங்களால் அரசாங்கத் தலைவராக இருக்கும் நான் ஒரு சுவரின் ஓரமாக நிறுத்தப்படுகிறேன். நான் ஒரு சுவரின் ஓரமாக நிறுத்தப்படும்போது.....(அதற்கு மேல் மகிந்த ராஜபக்ச கூறாமல் நிறுத்திவிட்டு) இருந்தபோதும் அமைதியை உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அமைதிப் பேச்சுக்கள் மேற்கொள்ள காலம் ஆகும். ஒரே நாடு- ஒரே தேசம்- ஒரே இராணுவம் என்ற நாள் ஒன்று வரும். அவர்கள் காவல்துறை வைத்திருக்கலாம். ஆனால் இரு இராணுவம், இரு விமானப் படை, இரு கடற்படை இருக்க முடியாது என்றார் மகிந்த ராஜபக்ச.


புதினத்திலிருந்து எடுத்த செய்தி


http://today.reuters.com/news/newsArticle....&archived=False

Print this item

  தேசிய போரட்டமும் விளையாட்டும்
Posted by: putthan - 02-13-2006, 12:19 PM - Forum: விளையாட்டு - No Replies

விளையாட்டில் ஏன் அரசியலை நாங்களும் கலக்கணும். என்று மதன் முன்மொழிய அதை சுண்டல்,தமிழன் ஆகியோர் அதனை வழிமொழிந்துள்ளார்கள்.ஓரு தேசிய போராட்டத்தை நோக்கி செல்லுகின்ற இனத்துக்கு உங்களுடைய கருத்து சரி வராது.எமது தேசிய போராட்டம் தனியாக அரசியலால் மட்டும் கிடைக்காது.எமது தேசியம் விடுதலை பெற்ற பின்னர் நீங்கள் கூறிய கருத்து சரியாக இருக்கும்.

இப்பொழுது எமது போராட்டம் சகல விடயங்களிலும் கலக்கதான் வேண்டும்.விளையாட்டு.சமயம்,கலாசார நிகழ்வுகள்,பரத நாட்டிய நிகழ்ச்சிகள்,ஆகியவற்றில் கலக்கதான் வேண்டும்.தென் ஆபிரிக்கா கிரிக்கட் சரித்திரம் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.தென் ஆபிரிக்கா முன்பு இனவெறி அரசு என்பதால் அவர்களை எல்லா சர்வதேச நாடுகளும் பகிச்கரித்தன(இலங்கை,இந்தியா) உட்பட.

அணிகளில் ஆட்சேர்க்கும் போது அதனுள் அரசியல் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது.

Print this item

  உணர்வுகள் www.unarvukal.com
Posted by: vengaayam - 02-13-2006, 06:12 AM - Forum: தளமுகவரிகள் - Replies (2)

Žì¸õ

¡ú ¸Ç ¯È׸§Ç!

<b>¯½÷׸û (unarvukal)</b> ±Ûõ þ¨½Âò¾¢ø ¯Ç ÌØÁò¨¾Ôõ «íÌ ¯Ç þ¨½Â ¯¨Ã¡¼ø ¸Çò¨¾Ôõ ¾¡í¸û «¨½ÅÕõ ´Õ Ó¨È ¦ºýÚ À¡÷¨Å¢Îí¸û.

¯½÷׸û þ¨½Â Ó¸Åâ: www.unarvukal.com
¯½÷׸û ÌØÁ Ó¸Åâ: www.unarvukal.com/forum/
¯½÷׸û ¯¨Ã¡¼ø Ó¸Åâ: www.unarvukal.com/chat/

¡Ƣø ¸ÄóÐ ¸ÕòÐì¸Çò¨¾î º¢ÈôÀ¢ìÌõ ¿£í¸û, ¯½÷׸û ÌØÁò¾¢Öõ ¦ºýÚ «íÌÇ ¸ÕòÐì ¸Çò¾¢Öõ, ¯¨Ã¡¼ø «Ãí¸¢Öõ Àí̦ÀüÚ, «ì¸Çò¨¾Ôõ º¢ÈôÀ¢ôÀ¢Ôí¸û.

¿ýÈ¢ ¡ú ¯È׸§Ç.

Print this item

  தேடுகிறேன் என் செந்தமிழை
Posted by: Eelam Angel - 02-13-2006, 02:52 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<span style='font-size:25pt;line-height:100%'>[/size]

<b>[color=indigo][size=18]தேடுகிறேன் என் செந்தமிழை</b>


[size=9]தேசம் விட்டு தேசம் வந்து

தேடுகிறேன் என் செந்தமிழை

செல்லுகின்ற தெருவெல்லாம்

கேட்பதெல்லாம் செந்தமிழா...?



என்னுடன் படிப்பவர்

கதைப்பதெல்லாம் செந்தமிழா...?

தமிழ் வகுப்பு மாணவர்கள்

கதைப்பதெல்லாம் செந்தமிழா...?



குழந்தை இன்று தாய்தன்னை

அழைப்பதுதான் செந்தமிழா...?

நம்மவர் கடை என்று நாம் சென்றால்

அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...?



நம்மை விட மூத்தவர்

கதைக்கிறார் செந்தமிழா...?

அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம்

<b>அடிமை</b> வந்த எம் இரத்தம் இன்று என்ன

சும்மாவா விட்டு வைக்கும் ...?

உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!!



அம்மாவும் கதைக்கிறாள்

வீட்டில் செந்தமிழா...?

அப்பாவும் அனுமதித்தார்

கதைப்பத்ற்கு செந்தமிழா...? :?

சிந்தியுங்கள் எம்மவரே - நான்

கதைப்பதற்கு தேடுகிறேன்

செந்தமிழில் எம்மவருடன்!!</span>

http://தவறுகள் எதும் இருப்பின் மனித்து விடுங்கள்!!

Print this item

  சிங்களத்தையே முன்நிறுத்தும் தென்னிலங்கைப் போக்கு
Posted by: வினித் - 02-13-2006, 02:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>சிங்களத்தையே முன்நிறுத்தும்
தென்னிலங்கைப் போக்கு

இலங்கை அரசுப் படைகளை அல்லது இலங்கை அரசை குறிப்பிடும் சமயங்களில் தமிழர் தரப்பு அதனை "சிங்களப்படை' என்றோ, "சிங்கள அரசு' என்றோ குறிப்பிடுவது வழமை. நடுநிலையாளர் கள் சிலர் இதனைத் தவறு என்று குற்றம் சுமத்து வதும் உண்டு.
ஆனால், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று அரச கரும மொழி ஆணைக்குழுத் தலைவரை மேற்கோள்காட்டி வெளியிட்டிருக்கும் சில தகவல் களும் மற்றும் புள்ளிவிவரங்களும் அப்படி அழைப்பதில் தப்பு ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத் தியிருக்கின்றன.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் (தமிழர், முஸ்லிம்கள் உட்பட) எண்ணிக்கை முழு மக்கள் தொகையில் 26 வீதமாகும். அதாவது, நாட்டின் சனத் தொகையில் கால் பங்கிலும் அதிகமானோர் தமிழ்ப் பேசுவோர்கள். ஆனால், மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் அரச ஊழியர்களாகப் பணிபுரியும் இந்த நாட்டில் அவர்களில் 8.3 வீதத்தினரே தமிழ்ப் பேசுவோர்.
நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்குப் பொறுப்பாக அமைக்கப்பட்டுள்ள பொலீஸ் திணைக்களத்திலோ நிலைமை மோசம்.
மொத்தம் 36 ஆயிரம் பேர்கள் கொண்ட பொலீஸ் அமைப்பில் 35 ஆயிரத்து 400 பேர் சிங்களவர்கள். 231 பேர் தமிழர்கள்; 246 பேர் முஸ்லிம்கள். ஆக தமிழர்கள், முஸ்லிம்களை ஒன்று சேர்த்துப் பார்த்தால் கூட நாட்டில் 26 வீதத்தைக் கொண்ட தமிழர்க ளுக்கு பொலீஸில் ஆக ஒன்றரை சதவீதம்தான் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய வற்றை எடுத்துக் கொண்டால் நிலைமை படுமோசம். கறிக்குக் கறிவேப்பிலை சேர்த்த மாதிரி அங்கொன் றும் இங்கொன்றுமாக ஓரிரு தமிழர்களோடு சரி.
பெயருக்குத் தலைநகரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தைப் பொலீஸ் பிரிவை எடுத்துப் பார்க்கலாம். அந்தப் பிரிவில் மக்கள் தொகை சுமார் 29 ஆயிரம். அதில் 21 ஆயிரத்து 400 பேர் தமிழர்கள். 7 ஆயிரத்து 600 பேர் சிங்களவர் கள். நூற்றிஐம்பது பொலீஸ் ஆளணியைக் கொண்ட அந்த நிலையத்தில் எத்தனை தமிழ்ப் பேசும் ஊழியர்கள் பணிபுரிகின்றார்கள் தெரியுமா? ஆக ஆறே ஆறு பேர்தான்.


இது குறித்து அரச கருமமொழி ஆணைக்குழுத் தலைவர் ராஜா கொலுரே என்ன கூறுகிறார் தெரி யுமா?
""உதாரணத்துக்கு அதிகாரிகள் யாழ்ப்பாணத் தில் உள்ள ஒரு பொலீஸ் நிலையத்துக்குச் சென்று பார்த்தபோது ஆச்சரியப்பட்டனர். அங்கு ஆக இரண்டே இரண்டு பொலீஸார்தான் தமிழில் பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். அங்கு வாக்குமூலங் கள் கூட சிங்களத்தில்தான் பதியப்படுகின்றன என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது.'' என்றார் கொலுரே.
முற்று முழுதாகத் தமிழ்ப்பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகத்தின் மைய நிலமான யாழ்ப்பாணத்திலேயே இதுதான் நிலைமை என்றால் இந்த நிர்வாகத்தை தமிழ் மக்கள் மீது திணித்திருக்கின்ற அரசை "ஆக்கிரமிப்பு அரசு' என்றும், "சிங்கள அரசு' என்றும், தமிழர் தாயகத்தைக் கைப்பற்றி நிலைகொண்டிருக்கின்ற படைகளை "ஆக்கிரமிப் புப் படை' என்றும் "சிங்களப்படை' என்றும் தமிழர்கள் அழைப்பதில் தவறு ஏதும் இருக்க முடியுமா?
தமிழுக்கும் சம உரிமை, தமிழும் அரச கரும மொழி என்றெல்லாம் தென்னிலங்கை பீற்றுவது வெறும் வாய்ச் சவடால்தாம்; வெறும் காகிதத்தில் எழுதப் பட்ட விடயங்கள்தாம். அவை எவையும் நடைமுறையில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.


மொழி உரிமை விடயத்தில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பு விவகாரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு வாழ்வியல் அம்சங்களிலும் தமிழர்கள் தமிழ் புறக்கணிக்கப்படுவதுதான் தென்னிலங்கைப் போக்காக இருக்கின்றது. அதனால்தான் தமிழர்கள் தமக்கென தமது தாயகத்துக்கென தனிநாடு கேட்கத் தலைப்பட்டார்கள்.
கல்வி உரிமை, பாரம்பரியத் தாயகத்தில் வாழ் வியல் உரிமை, தமது மொழி, பண்பாடு, மதம், கலாசார விழுமியங்கள் போன்றவற்றைப் பேணும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்திலும் தமிழர்கள் சிறுபான்மையினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.
தமது தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு அந்த முடிவை அவர்கள் எடுத்தமை நியாயமானதே என்பதை அரச கரும மொழி ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்த தகவல்களும், புள்ளிவிவரங்களும் மீண்டும் உறுதிப் படுத்தியிருக்கின்றன. </b>


http://www.uthayan.com/editor.html

Print this item

  தீர்வுக்கும் தயார்- தீர்த்துக் கட்ட விரும்பினால் ..........
Posted by: வினித் - 02-13-2006, 02:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>தீர்வுக்கும் தயார்- தீர்த்துக் கட்ட விரும்பினால் முகம் கொடுக்கவும் தயார்: க.வே.பாலகுமாரன் </b>

[திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2006, 03:53 ஈழம்] [ம.சேரமான்]

சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களினூடே தீர்வு காண முன்வந்தாலும், பேச்சுவார்த்தையை இழுத்தடித்து தீர்த்து கட்ட முனைந்தாலும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார்.

<b>புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை (11.02.06) ஒலிபரப்பாகிய அரசியல் அரங்கம் பகுதியில் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:

இம்முறை ஜெனீவா பேச்சுக்கள் பற்றிய எண்ணப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

ஜெனீவா என்று சொல்லும்போது எங்கள் எண்ணங்களில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வுகள் விரிகின்றன.

உலகத்தின் தூய்மையான நகரமாக ஜெனீவா விளங்குகிறது. எத்தனையோ உடன்பாடுகள் எட்டப்பட்ட நகரம் அது. ஜெனீவாவின் பெயரில் நூற்றுக்கணக்கான உடன்பாடுகள் காணப்பட்டு சர்வதேச ரீதியாக மிகப் புகழ்பெற்ற நகரம் அது.

குறிப்பாக போர் நடைபெறுகிற நாடுகளில் மனித நேயம் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதைக் கூட ஜெனீவா சட்டங்களினூடாகத்தான் உலகம் கண்டுகொண்டிருக்கிறது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகமும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அலுவலகங்களும் அங்குதான் இருக்கின்றன. ஆயுதக் குறைப்பு மாநாடு அங்கேதான் நடைபெற்றது.

1954 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாளில் தியன்பியன்பு சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னால் வியட்நாமின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பேச்சுக்களும் ஜெனீவாவில்தான் நடைபெற்றது. 17 ஆவது அகலக் கோட்பாட்டு அடிப்படையில் வட வியட்நாம், தென் வியட்நாம் எனப் பிரிக்கப்பட்டு ஹோசிமினின் ஆட்சியும் ஏற்கப்பட்டது ஜெனீவா உடன்பாட்டில்தான்.

ஆகவே, ஜெனீவாவில் பேசுவது என்பது எங்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரிய விடயம். எங்களுடைய தலைவரின் மதிநுட்பம் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களுக்கான வாய்ப்பு எட்டப்பட்டதை உலகம் கவனத்தில் கொண்டிருப்பதால் நாங்கள் இதை மகிழ்ச்சியோடு பார்க்கிறோம்.

மிக அண்மைக்காலமாக சிங்கள அரசின் முழுச் செயற்பாடும் ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழு பற்றியே அமைகிறது. ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழு தெரிவு செய்யப்பட்ட விதம், அது தொடர்பான பரபரப்பான செய்திகள், அதில் இடம்பெற்றவர்கள்- விலகியவர்கள் என்று மிகப் பெரிய செய்தியாக்கப்படுகிறது.

ஜெனீவா பேச்சுக்கான குழுவைத் தயார் செய்ய மிகப் பாரிய ஏற்பாடுகள் செய்யப்படுவது போன்ற தோற்றத்தை மகிந்தர் உருவாக்கி வருகிறார். சிறிலங்காவின் ஜெனீவா பேச்சுக்குழுவிற்கு எத்தனையோ ஆலோசனைக் கூட்டங்கள், ஆலோசகர்கள் என்று மிகப் பெரிய ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன.

ஐ.நா.வின் உடன்பாடுகள் பற்றிய பிரிவின் தலைவராக இருக்கக் கூடிய பாலித கொகன்ன வரவழைக்கப்பட்டிருக்கிறார். சிங்களவரான அவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். எம்.ஆர்.நாராயணசுவாமி என்கிற பத்திரிகையாளர் அழைக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஹோவார்ட் பல்கலைக்கழகத்தினர், சட்ட வல்லுநர்கள் என்று ஒரு போருக்கான ஆயுத்தத்தைப் போல் ஜெனீவா பேச்சுக்களுக்காக மகிந்தர் மேற்கொள்ளுவது ஏன்?

அண்மையில் ஊடகவியலாளர்களிடம் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதை நாம் ஒரு முக்கியமான விடயமாக சுட்டிக்காட்டுகிறோம்.

"தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் வரலாறு தமிழ் மக்கள் சந்தித்து வாழ்வியல் நெருக்கடிகள், பேரழிவுகள், இடப்பெயர்வுகள் பற்றி அரசதரப்பு பேச்சுவார்த்தை குழுவினர் புரிந்துகொண்டு வருவது பொருத்தமாக இருக்கும். தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு பேச்சுவார்த்தைக் குழுவினர் வரவேண்டும். தமிழ் மக்களுடைய சமகால வரலாறையும் ஆக்கிரமிப்பால் ஏற்பட்டிருக்கின்ற விளைவுகள் பற்றி புரிந்துகொண்டு வரும்போதுதான் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமே தவிர பேச்சுவார்த்தை அரங்கம் ஒரு விவாத அரங்கமல்ல. இரண்டு தரப்பும் மனம்விட்டுப் பேசி உண்மையான நிலைப்பாடுகளை பரிமாறிக்கொண்டு தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை மேசையே தவிர விவாதங்களை நடாத்தி கருத்துக்களுக்கு கருத்துக்கள் வெளிப்படுத்தி கருத்து முறியடிப்பு சமரை நடத்துகின்ற அரங்கல்ல- பேச்சுவார்த்தை மேசை" என்று தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் எப்போதும் நம்பிக்கையோடும் அவநம்பிக்கையற்றும் பேச்சுக்களுக்குப் போக விரும்புகிறோம். இந்தத் தீவில் இரத்தக் களரி இல்லாமல் ஒரு தீர்வை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள நாங்கள் தடையாக இல்லை என்பதைத்தான் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா பேச்சுக்கள் தொடர்பிலான சிங்களத் தரப்பின் எண்ணங்கள் எப்படியாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினை உங்கள் முன்னால் வைக்கலாம் என்று கருதுகிறோம்.

எதற்காக ஜெனீவாப் பேச்சுக்குழுவிற்கு பாரிய தோற்றப்பாடு கொடுக்கப்படுகிறது?

ஜெனீவா பேச்சுவார்த்தைக் குழு என்பது தொடர்ச்சியான பேச்சுவார்த்தையின் விளைவு என்பதுதான் உண்மை. ஏற்கனவே செய்யப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைதான் தற்போது நடைபெறுகிறதே தவிர புதியதான பேச்சுவார்த்தை அல்ல.

ஆனால் சிங்களத்தில் நடத்தப்பது அவ்வாறு அல்ல. அதனாலேயே ஏன் என்ற கேள்வி எழுகிறது?

இதற்கு சில பதில்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன.

- சிங்கள தேசத்தில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிரவாதக் குழுவினருக்கு ஒரு தோற்றப்பாடு காட்டவா?

அதாவது முதலிலிருந்து நான் பேச்சுக்களைத் தொடங்கப் போகிறேன். பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவு இல்லை. அதனால் ஆய்வான கருத்துகளைச் சொல்லி பேச்சுவார்த்தைக் குழுவைத் தகைமையாக்கி பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தேசப் பிரதிநிதிகளை முறியடிப்பதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் காட்டுவதற்காகவா இந்த பாரிய ஏற்பாடுகள் என்பதுதான் முதல் கேள்வி.

இதற்கு பதிலாகத்தான் சு.ப.தமிழ்ச்செல்வன் சொன்ன கருத்து அமைகிறது.

- உண்மையிலேயே இந்த பேச்சுவார்த்தைக் குழு என்பது சர்வதேசத்தின் தோற்றப்பாட்டுக்கு அமைவாக தாங்கள் பாரிய முயற்சிகளின் பின்னால் செய்யக் கூடிய ஒரு செயல் என்று காட்டி சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கூடாக தாங்கள் செல்வதாகக் காட்டி ஒரு பரப்புரைக்கான ஏற்பாடா?

கடந்த விடுதலைப் புலிகள் ஏட்டில் சோமஸ்கந்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருக்கும் ஒரு தகவலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அண்மைக்காலமாக சர்வதேச அளவில் தமிழரது நியாயப்பாடுகள் ஆய்வுகள் வழி வெளிவருகின்றன. பல்கலைக்கழகங்களில் முக்கியமான ஆய்வாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு எங்களைப் பற்றிய மிகத் தெளிவான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அதில் ஒரு செய்தி நியூயோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீல் டெவர்ட்டாவின் கூற்றாக சோமஸ்கந்தன் எழுதிய கட்டுரையில் அது வருகிறது.

"தமது வன்முறைகள் மூலம் தமிழர்களைப் பிரிந்து செல்லும் தூண்டும் சிங்கள ஆட்சியாளர்கள் அந்தப் பிரிவினையைத் தடுப்பதற்காகவும் இராணுவ நடவடிக்கையை நடத்துகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

வன்முறை மூலம் தமிழர்களைப் பிரிந்து செல்லத் தூண்டிவிட்டு அந்த வன்முறையைத் தூண்டியவர்களே பிரிவினையைத் தடுக்கிற நிலையையும் உலகம் இன்றைக்கு அறிந்திருக்கிறது.

இப்படியாக இழந்துவிட்ட தனது கருத்து ஆதரவு தளத்தைப் பெறுவதற்காக இப்படியான முயற்சிகள் ஜெனீவா பேச்சுக்களுக்கு சொல்லப்படுகிறதா? அல்லது உண்மையிலேயே சிறிலங்கா அரசாங்கத்தின் ஜெனீவாப் பேச்சுக்களுக்கு எதுவுமே தெரியாதா?

அல்லது

தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தேகிப்பது போல்-

நீண்டகால நோக்கத்திற்காக-

ஒரு சதித்திட்டத்தை உருவாக்குவதற்காக-

இந்தப் பேச்சுவார்த்தையை மகிந்தர் பயன்படுத்த விரும்புகிறாரா?

இன்றைக்கு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கியமான கேள்வி இது.

சிங்களத்தில் ஏகோபித்த கருத்தை உருவாக்க விரும்புவதாக மகிந்தர் சொல்லுகிற போது,

எது ஏகோபித்த கருத்து?

தமிழ் மக்களின் தீர்வை வைப்பதற்காகவா?

அல்லது

விடுதலைப் புலிகளின் பலத்தைக் குறைத்து அவர்களைத் தீர்த்துக் கட்டுவதற்காக தீர்வை முன்வைப்பதற்காகவா? ஜெனீவாப் பேச்சுக்குழுவிற்கு இந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

இவை ஒருபுறமிருந்தாலும் கூட நாங்கள் உண்மையிலேயே விரும்புவது என்னவெனில்-

தலைவர் அவர்கள் சொன்னது போல், இந்த வாய்ப்பை சரியாக மகிந்தர் பயன்படுத்தி மனப்பூர்வமாக ஒரு ஒட்டுமொத்தமான தீர்வை நோக்கி நகருவதற்கான வழிவகைக்கான ஒரு முதல் கட்ட நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்பதுதான்.

ஆனால் மகிந்தரின் செயற்பாடுகளினால் எங்களுக்கு திரும்ப திரும்ப சந்தேகம் எழுகிறது.

அண்மைக்காலமாக அதிகாரிகள்- அமைச்சர்கள்- தளபதிகளை வைத்துக் கொண்டு நடத்துகிற கூட்டங்களில் மகிந்தர் என்ன செய்ய விரும்புகிறார் என்ற கேள்வி எழுகிறது?

ஒருவேளை சில விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கூடாக மகிந்தர் ஒரு நீண்டகாலமாக விடுதலைப் புலிகளைப் பேச்சு மேசையில் இருக்க வைத்து தான் ஒரு ரணிலாக மாறுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே இத்தகைய தெரிவுகளுக்கூடாகவே எல்லாவற்றுக்கும் முகம் கொடுக்கவே நாங்கள் பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லுகிறோம்.

இதனை வியட்நாமின் பட்டறிவு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின்,

"நுணுக்கமாகவும் இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு மூல உபாயம் வியட்நாமியத் தரப்பால் பின்பற்றப்பட்டது.

அது எவ்வாறு எனில்,

அரசியல், இராணுவம், இராஜதந்திரம் ஆகிய மூன்றும் நன்றாக ஒன்றிணைக்கப்பட்டு அதனடிப்படையில் நுணுக்கமாகவும் இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு மூல உபாயத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேசையில் வியட்நாம் குழு செயற்பட்டது".

இதுதான் எங்களது தேசியத் தலைவருடைய அற்புதமான திட்டமும்.

அதாவது

தீர்வுக்கு அவர்கள் இணங்கிவந்தால் நாங்களும் தீர்வுக்கு இணங்கி வரத் தயாராக இருக்கிறோம்.

தீர்வாக எங்களைத் தீர்த்துக் கட்ட விரும்பினால் அதற்கும் ஏற்ற வகையில் நாங்கள் செல்கிறோம் என்பதுதான் எங்கள் கருத்தின் பொருளாக அமையும்.

அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சொன்னது போல

மனந்திறந்து, நியாயமான தீர்வை எதிர்பார்த்து பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லுகிறோம் என்பதுதான் தமிழ் மக்களின் கருத்து.

மற்றொரு செய்தியையும் நாங்கள் இங்கே இணைக்கிறோம்.

எம்.ஆர். நாராயணசுவாமி பற்றியது.

எம்.ஆர்.நாராயணசுவாமி எழுதிய ஒரு புத்தகத்தை மகிந்தர் நான்கைந்து முறை வாசித்தாராம். அந்தப் புத்தகத்தை வாங்கி பேச்சுவார்த்தைக்குச் செல்லுகிற சிறிலங்கா அரசாங்கக் குழுவின் 3 பிரதான அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினருக்கும் வழங்கியுள்ளாராம். அந்தப் புத்தகத்தை ஆழமாக வாசிக்கும்படியும் கூறினாராம்.

என்னதான் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது என்பதுதான் எங்கள் கேள்வி.

அந்தப் புத்தகத்தை நாங்களும் வாங்கி முழுமையாக வாசித்துப் பார்த்தோம்.

ஒரு விடயம் அனைவருக்கும் தெரியும். தேசியத் தலைவரது மனது என்ன என்பதை அறிவது என்பது ஒருவராலும் அறிந்துவிட முடியாத காரியம். அவருடன் இருக்கிற எங்களால் கூட அவரது எண்ணத்தின் வேகத்தை, வீச்சை அறிய முடியாமல் இருக்கிறது.

இப்படியான நிலையில் ஒரே ஒருமுறை தேசியத் தலைவரைச் சந்தித்த நாராயணசுவாமியால் தேசியத் தலைவரைப் பற்றிய கருத்தை முன்வைக்க முடியும் என்று மகிந்தர் நம்பினால் அதுபற்றி எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.

ஆனால் அந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிற விடயங்கள் பற்றி நாங்கள் எங்கள் மக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

அந்த நூலின் ஆங்கிலத் தலைப்பு: இன்சைட் அண்ட் எலுசிவ் மைண்ட்.

தமிழில் சொல்ல வேண்டுமானால், பிடிபடாத, மர்மமான மனநிலையைக் கொண்டவரின் மனநிலையை அறிய முற்படுகிறேன் என்பதுதான்.

தலைவரது மன நிலையை அறிவது என்பது நடக்காது. அவரது மனநிலையை நீங்கள் தேடிச் சென்றாலும் அவர் தப்பித்துக்கொண்டு முன்னாலே சென்று கொண்டிருப்பார் என்பதுதான் எங்கள் கருத்து.

இந்த மனநிலையை அறிவதற்காகத்தான் அந்த நூலை மகிந்தர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

விற்பனைக்கும் பரபரப்புக்குமான சில குறிப்பிட்ட ஆங்கிலப் பதங்களைப் பயன்படுத்தி குழப்பமான, சந்தேகத்துக்கிடமான, மிக கவர்ச்சிகரமான சில ஆங்கிலத் தொடர்கள் இருக்கின்றன. அவற்றை இந்த நூலில் பயன்படுத்தி எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஒரு மர்மமான, சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் உள்ளடக்கியதாக இருப்பதாக- நாவலாக சித்தரிக்கின்ற அந்த உத்தியை நாங்கள் புறந்தள்ளிவிடுகிறோம்.

சில சமயங்களில் எம்.ஆர்.நாராயணசுவாமி சொல்லக் கூடிய சில கருத்துகள் எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன.

ஒரு தேசிய இனத்தினது சிக்கலை ஒரு புலி இயக்கத்தினது சிக்கலாக மட்டுப்படுத்திச் சொல்லப்படுகின்ற விதம் பெருத்த வேதனை அளிக்கிறது.

உதாரணமாக எங்களை அவர் சொல்லுகின்ற போது,

ஒசாமா பின்லேடன் குண்டுவைக்கும் முன்னரே பிரபாகரன் குண்டுவைக்க அனுப்பினார் என்கிற வகையிலான செய்திகள்,

இயக்கத்தினது புனிதமான கட்டுப்பாடுகளை ஒரு பைத்தியக்கார குழுவினது கட்டுப்பாடுகளுக்கு ஒப்பிட்டுப் பேசுவது

என்று பல்வேறு சொற்பதங்கள் எங்களைப் புண்படுத்தினாலும் கூட அவர் குழப்பமான செய்தியைத்தான் கொடுக்கின்றார்.

அந்த நூலை வாசிக்கும் போது பிரபாகரனின் மனநிலையை அறிவது மிகக் கடினம் என்பதும் அவர் ஒருபோதும் தன் இலட்சியத்தை விட்டு விலகமாட்டார் என்பதும் அந்த நூலில் இன்னொரு வெளிப்பாடாக இருக்கிறது.

இப்படியாக குழப்பமான செய்தியைக் கொடுக்கிற நூலை மகிந்தர் வாங்கிக் கொடுத்திருப்பது மேலும் குழப்பத்தான் செய்யும். அதற்காக மகிந்தரை உண்மையில் பாராட்டுகிறோம்.

அந்த நூலில் இறுதியாக ஒரு வரி வருகிறது.

171 ஆம் பக்கத்தில் கடைசிப் பந்தியாக அது உள்ளது.

"சிறிலங்கா இன்றைக்கு முக்கியமான ஒரு திருப்புமுனையிலே நிற்கின்றது. அது உண்மையிலே நடைமுறைச் சாத்தியமான தீர்வைக் கண்டு ஒரு வளர்ச்சியை நோக்கச் செல்ல விரும்பினால் ஒரு அரசியல் முதிர்ச்சி உள்ள ஒருவேளை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு கசப்பான தீர்வாக இருந்தபோதும் கூட அதை எடுக்கக் கூடிய அரசியல் முதிர்ச்சி இந்தத் தலைமையிடம் இருக்கிறதா? இல்லையா?"

என்கிற கேள்வியைத்தான் நாராயணசுவாமி எழுப்பியிருக்கிறார்.

அவர் கடைசியாக சொல்கிற விடயம்

"அந்தத் தீர்வை எடுக்காவிட்டால் என்ன நடக்குமெனில் இந்த சிறிலங்காவின் எதிர்காலம்- 20 மில்லியன் மக்களின் எதிர்காலம்- ஒரே ஒரு மனிதரின் கையில்தான் இருக்கிறது. அவர்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலம் எப்போது? இன்றைகு 2006 ஆம் ஆண்டு பேச்சுக்குச் செல்லும் போது கூட இதே வரிகளைத்தான் வாசிக்கப் போகிறார்கள் எனில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.

உண்மையில் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூட அண்மையில் சொல்லியிருக்கிறாராம்.. தங்களுக்கு அளிக்கப்பட்ட கடைசி வாயுப்பு இது என்று.

வரலாற்றில் அளிக்கப்பட்டிருக்கிற கடைசி வாய்ப்பை ஜெனீவாவில் எடுக்க முடியுமென்றில் நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் ஜெனீவாவின் நகரத்துக்கும் புகழ் சேர்க்கும். எங்கள் வரலாற்றிலும் ஜெனீவா ஒரு புகழ்மிக்க நகரமாகப் பதியப்படும்.

ஆனால் அதைவிடுத்து இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவினது மனநிலையை ஒரு சந்தேகத்துக்கிடமானதாக மாற்றி புலிகளின் உளவியலையும் வலிமையையும் நீண்ட காலத்துக்குப் பேச்சுவார்த்தை மேசை மீது வைத்து இழுத்தடித்து நசுக்குவதற்கான ஒரு தந்திரோபாயமாக ரணில் பயன்படுத்தியது போல் மகிந்தரும் இந்தக் குழுவினருக்கு ஆலோசனைக் குழுவினருக்கு வழங்கினால்-

அதனது விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே நாங்கள் விரும்புகிற விடயம் என்னவெனில்

இந்தத் தீவில் அமைதிக்கான இன்னொரு மேலதிகமான வாய்ப்பு எமது தேசியத் தலைவரால் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வாய்ப்பை சரியான முறையிலே பயன்படுத்திக் கொள்வதற்கான தகைமையைத்தான் பேச்சுக்குச் செல்லும் குழுவினருக்கு இத்தகைய பட்டறைகள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.

அல்லாமல்

அதுவேறு வழியில் செல்லுமாயின் நிச்சயமாக அதை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதைத்தான் வியட்நாம் பேச்சுவார்த்தைக் குழுவின் பட்டறிவினூடாக இங்கே தெரிவித்தோம் என்றார் க.வே. பாலகுமாரன்.
</b>

http://www.eelampage.com/?cn=24178

Print this item