Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 134 online users.
» 0 Member(s) | 133 Guest(s)
Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,117
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  காதல் மலர்ந்தது!
Posted by: சந்தியா - 02-14-2006, 07:06 PM - Forum: கவிதை/பாடல் - Replies (18)

<span style='font-size:25pt;line-height:100%'>காதல் மலர்ந்தது!

காதலர் தினமும் மலர்ந்தது!
காதலர் மனமும் மலர்ந்தது!
வருடம் ஒரு தடவை மலர்ந்தது!
வசந்தம் அந்நாளில் வீசி செல்வது
காதலர்களின் சுதந்திர தினமது
காதல் பரிசு பரிமாறும் பொன் நாளது</span>


படித்ததில் பிடித்தது

சுட்டது
வீரகேசரி

Print this item

  ஜெனீவாவில் ஒப்புவித்தல் மட்டுமே!
Posted by: நர்மதா - 02-14-2006, 05:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

ஒப்புவித்தல் மட்டுமே!

ஜெனீவாவில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அரசாங்கத்தரப்பு குழுவின் வாயும் கைகளும் கட்டப்பட்ட நிலையிலேயே அங்கு அனுப்பப்படவுள்ளனர். இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்களில் எத்தகைய முன்னேற்றங்கள் காணப்படும் என்பது பெரிதும் கேள்விக்குரியதொன்றாக மாறியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெனீவா செல்லும் அரசாங்கத்தரப்புக் குழுவினருக்கு பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் எனப்பல்வேறு வழிமுறைகளில் பேச்சுவார்த்தை மேசையில் எவ்வாறு நடந்து கொள்வது, எவ்வாறு பேசுவது என்பது குறித்து போதிக்கப்பட்டு வருகின்றது. சிரேஷ்ட அமைச்சர்கள் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்பவர்கள் பாடம் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் எனலாம்.

இதேவேளை பேச்சுவார்த்தையில் எதுவரையில் பேசப்படவேண்டும். என்பது குறித்து அரசாங்கத்தின் கூட்டணிக்கட்சிகள் ஒவ்வொன்றும் பேச்சுவார்த்தைக் குழுவினருக்கு அறிவுறுத்தல்கள்; விடுத்தவண்ணம் உள்ளனர். ஆளும் கூட்டணிகளினதும் மற்றும் ஆதரவு வழங்கும் கட்சிகளினதும்; ஆலோசனைகளால் பேச்சுவார்த்தை மேசையில் எதைப்பேசுவது என்ற குழப்பமே அரசாங்கதரப்பு குழுவினருக்கு எஞ்சியிருக்கக்கூடும்.

பயிற்சிப்பட்டறைகள் கட்சிகளின் கருத்தமர்வுகள் என்பவற்றில் அரசாங்கம் எதை வெளிக்காட்ட முனைகின்றது எதைச்செய்ய முனைகின்றது என்பது இலகுவில் ஊகித்து அறிந்து கொள்ளத்தக்கதே. அதாவது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அரசியல் கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் செயற்பட முற்படுவதாக சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட முற்படுகின்றது.

இதேவேளை இச்சந்திப்புக்களை அடிப்படையாக வைத்து யுத்த நிறுத்த உடன்பாட்டில் தமக்குச்சாதகமான மாற்றங்களைக் கொண்டுவந்துவிடலாம் என அரசு கருதுகின்றது. அதாவது சர்வதேச hPதியில் மக்களின் ஒருமித்த கருத்துடன் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதாகவும், யுத்தநிறுத்த உடன்பாட்டில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அது வலியுறுத்த முற்படுவதாகவுள்ளது.

ஆனால் பயிற்சிப்பட்டறைகளை வைத்தாலும், கருத்தமர்வுகளை நடத்தி இருப்பினும் பேச்சுவார்த்தைக்குழுவினர் மீது அரசாங்கத் தரப்பும்- குறிப்பாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்றவை நம்பிக்கை கொண்டிருப்பதாக இல்லை. அத்தோடு சனாதிபதி ராஜபக்ஷ கூட அத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக தெரிகின்றது.

அவ்வாறு இல்லாது விடில் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் குழுவினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போதைய பேச்சுவார்த்தைகள் யுத்த நிறுத்தம்; பற்றியதாகையால் அது குறித்து எத்தகைய நிலைப்பாட்டை அரசதரப்பு எடுக்க வேண்டும் என்பதை சனாதிபதி தனது ஆலோசனைப்படி மட்டுமே எடுக்கவேண்டும் எனக்கருதுகின்றனர்.

இதனால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஆளும் தரப்பிற்கு போதிக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு வெளியில் விடுதலைப் புலிகள் கேள்விகளை எழுப்பினாலோ விவகாரத்தைக் கொண்டு சென்றாலோ அரச தரப்பினருக்கு பதில் அளிப்பதற்கான உரிமை எதுவும் வழங்கப்படவில்லை. சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அது குறித்து முடிவை அரசகுழு மேற்கொள்ள முடியும்.

இத்தகைய நிபந்தனைகளையும் மீறி அரச குழுவினர் தடுமாற்றம் காரணமாக வாக்குறுதிகளை அளித்து விடுவார்களோ என்ற அச்சம் அரச தரப்பில் நிலவுவதாகக்கூட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அளவிற்கு ஜெனீவாவிற்கு அனுப்பப்படும் து}}துக்குழுவினர் மீது ஆளும் கூட்டணியும் அதற்கு ஆதரவளிப்போரும் தீவிர அக்கறை கொண்டுள்ளனர்.

இது மாத்திரமின்றி பேச்சுவார்த்தை விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் எதுவும் வழங்கப்படக்கூடாது என்ற கட்டுப்பாடும் து}}துக்குழுவினருக்கு விதிக்கப்பட்டுள்ளது அதாவது வாய்கள் கட்டப்பட்ட நிலையிலேயே பேச்சுவார்த்தை தவிர்ந்த நேரத்திலும் இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

இந்த வகையில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தைக்கென அனுப்பும் குழுவானது அரச தரப்பினரால் ஓதப்பட்டவற்றை ஒப்புவிக்கச் செல்லும் குழுவாகவே தயார் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையினால் ஜெனீவாப் பேச்சுவார்த்தை அரச தரப்பில் இருந்து முன்னேற்றமானதெதுவும் எதிர்பார்ப்பதற்கு இருப்பதாக இல்லை சிலவேளை அரச தரப்புக்குழுவினர்; ஏதாவது முன்னேற்றகரமான விடயம் குறித்து பேசிவிட்டால் அக்குழுவினர் நாடு திரும்ப முடியுமா? என்பது மிகைப்படுத்தப்பட்ட கேள்வியாகமாட்டது.

நன்றி: ஈழநாதம்

Print this item

  2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
Posted by: mayooran - 02-14-2006, 02:15 PM - Forum: சினிமா - Replies (1)

<b>2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகர்-நடிகையாக ஜெயம்ரவி-ஜோதிகா 2003-ம் ஆண்டு விருது விக்ரம் - லைலா </b>

தமிழ் திரைப்பட தொழிலுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.

2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், சிறந்த நடிகர்கள்- நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகி யோர்களின் பெயர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

2004-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் விவரம்:-

ஆட்டோ கிராப்

சிறந்த படம்-முதல் பரிசு- ஆட்டோகிராப்.

சிறந்த படம்-இரண்டாம் பரிசு-விஷ்வ துளசி.

சிறந்த படம்- மூன்றாம் பரிசு-கண்ணாடி பூக்கள்.

சிறந்த படம்-சிறப்புப் பரிசு-எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி.

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப்படம்-உப்பு.

அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம்

முதல்-பரிசு-அம்மா அப்பா செல்லம்.

இரண்டாம் பரிசு-ரைட்டா தப்பா.

மூன்றாம் பரிசு-டான்சர்.

ஜெயம்ரவி-ஜோதிகா

சிறந்த நடிகர்-ஜெயம் ரவி (எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி).

சிறந்த நடிகை-ஜோதிகா (பேரழகன்).

சிறந்த நடிகர்-சிறப்பு பரிசு-குட்டி (டான்சர்).

சிறந்த நடிகை-சிறப்புப் பரிசு-சந்தியா (காதல்).

சிறந்த வில்லன் நடிகர்- ராபர்ட் (டான்சர்).

சிறந்த நகைச்சுவை நடிகர்- மயில்சாமி (கண்களால் கைது செய்).

சிறந்த நகைச்சுவை நடிகை-காந்திமதி (ஒருமுறை சொல்லிவிடு).

சிறந்த குணசித்திர நடிகர்-ராதாரவி (ஒருமுறை சொல்லிவிடு).

சிறந்த குணச்சித்திர நடிகை-சீதா (ரைட்டா தப்பா).

சிறந்த இயக்குநர்-சேரன் (ஆட்டோ கிராப்).

சிறந்த கதையாசிரியர்- ஹரிராம் (உயிரோசை).

சிறந்த உரையாடலாசிரியர்-பிரசன்ன குமார் (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி).

சிறந்த இசை அமைப்பாளர் -ஸ்ரீகாந்த் தேவா (எம். குமரன் சன்ஆப் மகாலட்சுமி).

சிறந்த பாடலாசிரியர்- சிநேகன் (பேரழகன்).

சிறந்த பின்னணிப் பாடகர்-ஹரிஹரன் (பேரழகன்).

சிறந்த பின்னணிப் பாடகி-சித்ரா (ஆட்டோ கிராப்).

சிறந்த ஒளிப்பதிவாளர்- பி. கண்ணன் (கண்களால் கைது செய்).

சிறந்த ஒலிப்பதிவாளர்-லட்சுமி நாராயணன் (வானம் வசப்படும்).

சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்)- அந்தோணி (மதுர).

சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்)-ஆனந்த் சாய் (நிï).

சிறந்த சண்டை பயிற்சியா ளர்-பீட்டர் ஹெய்ன் (போஸ்).

சிறந்த நடன ஆசிரியர்-சிவ சங்கர் (விஷ்வ துளசி).

சிறந்த ஒப்பனைக் கலைஞர்-புஜ்ஜி பாபு (பேரழகன்).

சிறந்த தையற் கலைஞர்- முரளிதரன் (போஸ்).

சிறந்த குழந்தை நட்சத்திரம்-மாஸ்டர் அருண்குமார் (காதல்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-கதிர் (ஜனனம்).

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ரேணுகா (சிங்காரச் சென்னை).

2003-ம் ஆண்டு விருது சிறந்த நடிகர்-நடிகையாக விக்ரம் - லைலா தேர்வு

2003-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்.

சிறந்த படம் (முதல் பரிசு)- ஈரநிலம்

சிறந்த படம் (இரண்டாம் பரிசு)-பவர் ஆப்உமன்

சிறந்த படம் (மூன்றாம் பரிசு)-பார்த்திபன் கனவு.

சிறந்த படம் (சிறப்பு பரிசு)-காமராஜ்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் திரைப் படம்-உன்னைச் சரணடைந்தேன்.

அளவான திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதி பலிக்கின்ற திரைப்படம் (முதல் பரிசு)-காதலுடன்.

இரண்டாம் பரிசு- றெக்கை

மூன்றாம் பரிசு - அன்பே அன்பே.

சிறந்த நடிகர்- விக்ரம் (பிதாமகன்)

சிறந்த நடிகை- லைலா (பிதாமகன்)

சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு)-ஸ்ரீகாந்த் (பார்த்திபன் கனவு)

சிறந்த நடிகை-மீரா வாசு தேவன் (உன்னைச் சரணடைந்தேன்)

சிறந்த வில்லன் நடிகர்- ரியாஸ்கான் (பவர் ஆப் உமன்)

சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (பார்த்திபன் கனவு)

சிறந்த நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (பார்த்திபன் கனவு)

சிறந்த குணச்சித்திர நடிகர்- அலெக்ஸ் (கோவில்பட்டி வீரலட்சுமி)

சிறந்த குணச்சித்திர நடிகை- சங்கீதா (பிதாமகன்)

சிறந்த இயக்குனர்- கரு. பழனியப்பன் (பார்த்திபன் கனவு)

சிறந்த கதையாசிரியர்- சமுத்திரக்கனி (உன்னைச் சரணடைந்தேன்)

சிறந்த உரையாடலாசிரியர்-தேன்மொழி (ஈரநிலம்)

சிறந்த இசையமைப்பா ளர்-ஹாரீஸ் ஜெயராஜ் (காக்க காக்க)

சிறந்த பாடலாசிரியர்- கபிலன் (பார்த்திபன் கனவு)

சிறந்த பின்னணிப் பாட கர்-உன்னிகிருஷ்ணன (ராமச்சந்திரா)

சிறந்த பின்னணிப் பாடகி- ஹரிணி (பார்த்திபன் கனவு)

சிறந்த ஒளிப்பதிவாளர்- ஏகாம்பரம் (இயற்கை)

சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.ரவி (புன்னகைப் பூவே)

சிறந்த திரைப்பட தொகுப் பாளர் (எடிட்டர்)- ஜெயசங்கர் (அரசு தர்பார்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்-கதிர் (திருமலை)

சிறந்த சண்டை பயிற்சியா ளர் - தளபதி தினேஷ் (உன்னைச் சரணடைந்தேன்)

சிறந்த நடன ஆசிரியர்- அசோக்ராஜா (திருமலை)

சிறந்த ஒப்பனைக் கலை ஞர்-சிவக்குமார் (காதலுடன்)

சிறந்த தையற்கலைஞர்- சாய்பாபு (விருமாண்டி)

குழந்தை நட்சத்திரம்

சிறந்த குழந்தை நட்சத்திரம் - என். மதன்குமார் (றெக்கை)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)-ராஜேந்திரன் (சாமி)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- ஜெய்கீதா (திருமலை)

2003-2004 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்பப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் விவரம்:-

1. சிறந்த இயக்குநர்-ஜி.கருணாநிதி (பாராமுகம்)

2. சிறந்த ஒளிப்பதிவாளர்-எஸ்.சஞ்சீவி சத்தியசீலன் (நீலவானமும் பச்சை பூக்களும்)

3. சிறந்த ஒலிப்பதிவாளர்-எம்.வேல்முருகன் (பொம்மலாட்டம்)

4. சிறந்த படத் தொகுப்பாளர்- எஸ்.பிரகாஷ் (சக்தி)

5. சிறந்த படம் பதனிடுபவர்-எஸ்.கணேசன் (கே.அகல்யா)

Print this item

  ஞாபகங்களுடன் இன்றும்....
Posted by: shanthy - 02-14-2006, 02:05 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

ஞாபகங்களுடன் இன்றும்....

மீண்டும் சந்திப்பதாய்
ஒரு மாலைநேர
ஈரக்காற்றின் உவர்ப்போடு
அழுததாய் ஞாபகம்.

தாஜ்மகால் பற்றியும்
தலைசிறந்த
காதல் இலக்கியம் தந்த
ஜிப்ரான் பற்றியும்
நிறையவே பகிர்தல்கள்.

ஒரு தாஜ்மகால்
ஒரு முறிந்த சிறகு
எங்களுக்காயும் எழுதப்படுமெனும்
எண்ணமேயில்லை
கௌரவப் பிரிதலாய் அது
நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது.

என்றாவது நினைவு வரும்
சிறுவயது ஞாபகம் போல்
எப்போதாவது வந்துபோகும்
ஞாபகங்களுடன் இன்றும்....

காதலென்ற சொல்லுக்காய்
செய்து கொண்ட சத்தியங்கள்
நினைவு இடுக்குகளிலிருந்து
கழன்று விழுகிறது.

சத்தியம் ää சபதம்
சாத்தியமில்லாக் கனவுகள்
எல்லா மனசிலும்
காதலின் வலி உணர்வாயும்
நினைவாயும் நிசம் உணர
மனம் மறுத்து
நடிப்புகள் மேலாக....

'காதல் ஒருதரம்தான்"
மறுபடி மறுபடி வரும் காதல்
என்பது கவர்ச்சியென்ற
சத்தியங்களெல்லாம்
சாத்தியமில்லையென்றா சபதமிட....?
12.03.05

Print this item

  நான்கே மணி நேரத்தில் புது மார்பகம்
Posted by: Shankarlaal - 02-14-2006, 12:05 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (5)

நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை
லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர்.

ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது.

செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது.

30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாதிகள் வருகின்றன என்று சர்ச்சைகள் எழாமல் இல்லை.

அமெரிக்காவை தொடர்ந்து பல நாடுகளும் செயற்கை மார்பகம் பொருத்தும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். இப்போது இந்தியாவில் கூட, ஏன் சென்னையில் கூட மார்பகத்தை பெரிதாக்கி காட்டும் அறுவை சிகிச்சை வந்து விட்டது. ஆனால், பொதுவாக இது முறையல்ல, தேவையில்லாத பிரச்னைகளை தரும் என்று தொடர்ந்து நிபுணர்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

இப்போது பிரிட்டன் நிபுணர்கள் இந்த "செயற்கை மார்பக' அறுவை சிகிச்சையில் இன்னொரு படி முன்னேறி உள்ளனர். மார்பகத்தை அதிகரித்து காட்டவும், குறைக்கவும், செயற்கை மார்பகம் பொருத்தவும் சில மணி நேரங்களே போதும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

பிரிட்டனில் சிஷயர் மாகாணத்தில் "மெடிஸ்பா கிளினிக்' என்ற பிரபல மருத்துவ மனை உள்ளது. அதன் உரிமையாளர் கார்ல் லெவிஸ் இந்த புது மார்பக பிளாஸ்டிக் சர்ஜரியை அறிமுகப்படுத்தியுள்ளார். சில மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த புது அறுவை சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு வெறும் நான்கு மணி நேரம் போதும். முதல் நாள் இரவு, மருத்துவமனை வந்து தங்கினால் போதும், காலையில் வீடு திரும்பி விடலாம். எந்த பாதிப்பும், பக்க விளைவும் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.

மார்பகத்தில் இயல்பாக உள்ள இடத்தில் சிறிய வெற்றிடம் உருவாக்கி, அதில் சிலிக்கான் நுரைபஞ்சுகளை (ஜெல்) வைக்கின்றனர் டாக்டர்கள். இதில், இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பெண்கள், முழு மயக்க நிலையில் கொண்டு செல்லப்படுவதில்லை. "லோக்கல் அனஸ்தீஷியா' முறையில் தான் மயக்க நிலையில் ஆபரேஷன் செய்யப்படுகின்றனர். எந்த கவலையும் பட வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

இப்போது பிரிட்டனில் பல மருத்துவமனைகளில் இது போன்ற முறை பிரபலமாகி வருகிறது. சில மணி நேரங்களிலேயே பெண்கள், செயற்கை மார்பகம் வைத்துக்கொண்டு வீடு திரும்பி விடலாம் என்பதால் பல இளம் பெண்களும், செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்படி செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்ளும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 32 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

தினமலரிலிருந்து

Print this item

  அமால் ஜயசிங்காவிற்கு செவாலியர் விருது வழங்கி கௌரவிப்பு
Posted by: Shankarlaal - 02-14-2006, 12:03 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - No Replies

France honours Lankan journalist

PK Balachandran

Colombo, February 13, 2006|19:51 IST


The French government has conferred the Chevalier Order of Merit on the well-known Sri Lankan journalist Amal Jayasinghe for his outstanding contribution to journalism in the island.

He has been with Agence France Presse (AFP) for the past two decades, and had earlier served Daily News, the most widely read English language newspaper in Sri Lanka.

For years now, overseas newsmen have been making a beeline to Jayasinghe's office in Colombo to get insights into the intricacies of Sri Lanka's turbulent politics.


http://www.hindustantimes.com/news/7598_16...00500020002.htm

Print this item

  அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!!
Posted by: ஜெயதேவன் - 02-14-2006, 12:01 PM - Forum: விளையாட்டு - No Replies

அரோகரா! மீண்டும் மண் கவ்வியது இலங்கை அணி!!

International Triangular Series: Australia v Sri Lanka
14-02-2006 at Brisbane
Australia beat Sri Lanka by 9 wickets
Sri Lanka won the toss and decided to bat
Sri Lanka Innings
266 for 9 (50.0 overs)
Australia Innings
267 for 1 (45.3 overs)

இலங்கை அணிக்கு எமது வாழ்த்துக்கள்! தொடர்ந்து இதே மாதிரியான தோல்விகளை சந்திக்க எல்லா வல்ல ஈழ்பதீஸானை பிராத்திக்கிறேன்! Confusedmile2:

Print this item

  பறவையை சுட்டார் நண்பர் விழுந்தார்
Posted by: Shankarlaal - 02-14-2006, 12:01 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (2)

<img src='http://epaper.tamilmurasu.in/2006/feb/13/9_1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://epaper.tamilmurasu.in/2006/feb/13/images/9_07.jpg' border='0' alt='user posted image'>

தமிழ் முரசு

Print this item

  கருணாநிதியின் சந்தர்ப்பவாதக் கூச்சல்
Posted by: ஜெயதேவன் - 02-14-2006, 11:11 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (45)

விடுதலைப் புலிகளை விரட்டியே தீருவேன் என்று முழக்கிய வீராங்கனை அல்லவா ஜெயலலிதா?: கருணாநிதி கிண்டல்

[செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2006, 06:52 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி தமிழக அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன.


தமிழீழ விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்பேன் என்று கூறியதால் இந்திய அரசாங்கம் கொண்டு வந்த பொடா சட்டத்தினால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யபட்டார்.

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதை பிரதான கட்சிகளான கருணாநிதியின் தி.மு.க.வும் ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க.வும் தங்களது பேச்சுக்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளை ஆதரித்தமைக்காக வைகோவை பொடா சட்டத்தில் சிறையிலடைத்த அண்ணா தி.மு.க.வின் சார்பில் இப்போது பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தி.மு.க. தலைவர் கருணாநிதியும் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

செஞ்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் தொடர்பாக பேசியதாவது:

கர்நாடக மாநில புதிய முதல்வர் சொல்கிறார்..தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழிற்சாலை ஆந்திராவிற்குப் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை ஆந்திராவிற்கும் வேண்டாம். தமிழ்நாட்டிற்கும் வேண்டாம். ஏனென்றால் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆந்திராவில் நக்சலைட்கள் இருக்கிறார்கள், ஆகவே அந்தத் தொழிற்சாலையை கர்நாடகத்திற்குத் தாருங்கள். இங்கே அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார் என்றால், இதைப் பற்றி தமிழ்நாட்டு முதலமைச்சர் வாய் திறந்திருக்கிறாரா?

இங்கே விடுதலைப் புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்க வேண்டாமா?

விடுதலைப் புலிகள் எப்போதே இருந்தார்கள், இப்போது இல்லை என்று சொல்ல வேண்டாமா முதலமைச்சர். அதிகாரபூர்வமாக பதிலளிக்க வேண்டாமா?

சொன்னவர் சாதாரணமானவர் அல்லவே!

பக்கத்து மாநில முதலமைச்சர் அல்லவா? புதிய முதலமைச்சர் தமிழ்நாட்டிலே விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள். ஆகவே, அந்தத் தொழிற்சாலையை எங்கள் மாநிலத்திற்குத் தாருங்கள் என்று கேட்கிறார்.

அதை மறுத்துப் பேச தமிழக முதல்வருக்கு முடியவில்லை.

ஏன் விடுதலைப் புலிகள் என்றால் உங்களுக்குப் பயமா?. இந்த அம்மையாருக்குத்தான் பயமே கிடையாதே!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் விடுதலைப் புலிகளையெல்லாம் விரட்டியே தீருவேன். விடுதலைப் புலிகள் துரோகிகள், அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எள்ளளவு இடமும் தரமாட்டேன் என்று நீட்டி முழக்கிய இந்த வீராங்கனை ஏன் இப்போது கர்நாடக முதல்வரின் கூற்றுக்கு பதில் சொல்லாமல் ஓடி ஒளிகிறார். அப்படி ஒன்றும் விடுதலைப் புலிகள் இங்கேயில்லை, அவர்களால் தொழில் வளருவது ஒன்றும் கெடாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? என்றார் கருணாநிதி.

Print this item

  துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்:
Posted by: Shankarlaal - 02-14-2006, 10:26 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

அமெரிக்க நிறுவனம் விளம்பரம்: துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: இந்துக்கள் கடும் எதிர்ப்பு

லண்டன், பிப். 14-

அமெரிக்காவில் உள்ள மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' என்ற பெயரில் மதுவை தயா ரித்து வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறது.

கிரீஸ் நாட்டிலும் இந்த மது விற்கப்படுகிறது. அங்கு இவற்றை விற்கும் கடை மற்றும் மது பார்களில் இந்து கடவுளான துர்க்கை தனது அனைத்து கைகளிலும் `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' பாட்டிலை வைத்து இருப்பது போல விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்கா- இங்கி லாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். `அந்த நிறுவனம் துர்க்கை விளம்பரங்களை வாபஸ் பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.


மாலைமலரிலிருந்து மடக்கியது

Print this item