Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 452 online users.
» 0 Member(s) | 449 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,251
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,118
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  வணக்கம்
Posted by: nokia - 02-14-2006, 02:13 AM - Forum: அறிமுகம் - Replies (9)

Hello everybody,
Unfortunately I dont have any facilities or much knowledge about typign in tamil. Hope none of our pals mind.

Thanks again for allowing me to become as a part of this forum.

<span style='font-size:14pt;line-height:100%'>தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்</span>

Print this item

  காதல்
Posted by: கறுப்பன் - 02-13-2006, 10:13 PM - Forum: கவிதை/பாடல் - Replies (3)

<img src='http://photos1.blogger.com/blogger/3052/2105/320/Salman%20%26%20Manisha%20Koirala_Dilse_00.jpg' border='0' alt='user posted image'>
<b>என் கவிதா ப்ரவாகம் [2] </b>
<span style='font-size:21pt;line-height:100%'>காதல்</span>


<span style='font-size:14pt;line-height:100%'>உன் கடிதங்களோடு
உன் எல்லாவற்றையும்
திருப்பி கேட்டாய்.
தந்தேன்!
மன்னித்துக்கொள்!!
உன் காதலை
திருப்பி கேட்ட உனக்கு
என் காதலையும்
கேட்டது என்ன நியாயம்???

என் காதல் மட்டும்
இன்னும் அப்படியே...
நீ விட்டு போன மீதி வசந்தங்களோடு
நன்றாகவே!!!!

நான் மட்டும்
தொலைந்து போன அந்த நாட்களை
இன்னமும் தேடுகின்றேன்
திருடப்பட்டது
புரியாமல்!!!!!</span>

Print this item

  இன்றும் அவனுக்காகவே.....
Posted by: ப்ரியசகி - 02-13-2006, 08:01 PM - Forum: கவிதை/பாடல் - Replies (28)

[b]இன்று காதலர் தினம்
இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே..

எனக்கொன்றும் சலிப்பில்லை
ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ..

கொட்டும் பனிக்குள் என்ன...
கோடை வெயிலில் என்ன.....
வீசும் காற்றில் என்ன....
மேனி நடுங்கும் சினோவில் என்ன....

அவனுக்காகவே எனது காத்திருப்பு..
தொடர்ந்திருக்கின்றது..
வருவான்....அவன்...
ம்ம்.....வருவான்...
இன்றும்...
நம்பிக்கை கையோடு இருக்கின்றதே...
..

இன்றும் பற்கள் ஒன்றோடு ஒன்று
அடித்துக்கொள்ளும் குளிர்..
கைகளை ஜக்கெற் பொக்கெற்றுக்குள்ளும்..
கண்களை பனி படர்ந்திருக்கும் வீதியிலும்..
விட்டுக்கொண்டு..வழமை போலவே..
காத்திருக்கிறேன்...

நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன
பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறகுகளை..
தெரியவில்லை..

அவனை அன்று தான் சந்தித்தேன்
புலம் பெயர்ந்த நாட்டில்
முதல் முதல் பள்ளிக்கு செல்கையில்...
அந்த அழகிய காலை வேளையில்..
அழகிய உயரம்..
பளிச்சென்ற கண்கள்..
நிமிர்ந்த நடை..
அவன் வருகை...
"மன்மதன்" ஜோதிகா போலவே
ஆடியிருக்கலாம்...பாடியிருக்கலாம்
ஆனால் இல்லை..
ஏனோ படம் அப்போது வெளியாகியிருக்கவில்லை...

............
அப்படியே...
அவன் அழகோடு சில நிமிடம் பேசி விட்டு
முதல் சில சந்திப்புக்களோடு சில தூரம் பறந்து விட்டு
காதலர் தினத்தை கொண்டாடும்
இரு வெள்ளை ஜோடியின்...கிசுகிசுப்பில்
வந்தேன்..மீண்டும்..பூமிக்கு...

மெல்ல இருள..இருள..
இதயத்தில் ஒரு ஏக்கம்..
கால்களோடு உதடுகளும்
குளிரில் உறைந்து போக...சோர்ந்தது மனம்..

இதுவரை வரவில்லை..
இனியும் அவன் வருவான் என்ற
எண்ணம் எனக்கில்லை..
கனத்த இதயத்தோடும்..
பனித்த கண்க்ளோடும்
தொலைபெசியை நாடினேன்..அண்ணனுக்கு
அவன் வரவில்லை..என்னை
காரில் வந்து ஏற்றி செல்லும்படி..
சொல்வதற்கு..................... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


<img src='http://img102.imageshack.us/img102/674/ist2548350blondgirlwaitingfort.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  காதலை பிரித்த காதலர் தினம்
Posted by: jcdinesh - 02-13-2006, 07:00 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

என்றும் அவளை நினைத்திருந்தேன்
அவள் வரா நாட்களில் படித்ததையே மறந்தேன்
நான் அவளுடன் தான் படித்தேன்-ஆனால்
நான் அவளைத்தான் படித்தேன்.
நான் அவளுடன் தான் சுற்றினன் -ஆனால்
நான் அவளைத்தான் சுற்றினேன்.
அவளைக் கண்டதும் காதல் கொண்டேன்
பதிலுக்கு அவள் காதலை அறிய காத்திருந்தேன்
எல்லோருக்கும் காதலர் தினம் மகிழச்சியாக இருந்தது
எனக்கோ சொல்ல முடியாத ஒரு நிலமை
அது நடந்து இவ்வருட காதலர் தினத்துடன்
நான்கு ஆண்டுகள் ஆகிண்றன
ஆனாலும் நேற்று நடந்தவை போன்று
ஒரு இனம் புரியாத உணர்வு
வாழ்க காதல்
வாழ்த்துக்கள் காதலர்களுக்கு......
<img src='http://img523.imageshack.us/img523/6561/ilike8ow.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  டென்மார்க்கில் குடிகொண்ட &quot;சந்திரமுகி&quot;???!!!
Posted by: Vasan - 02-13-2006, 06:57 PM - Forum: புலம் - Replies (14)

பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள்.


ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் தமிழர் வாழும் தேசமெங்கும் வெற்றிகரமாக ஓடியது. அதே போன்று அடுத்து வந்த சங்கரின் "அந்நியன்" என்கின்ற படமும் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டு படங்களின் கதைகளும் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற மனம் சம்பந்தமான அதி தீவிர மனப் பிறள்வு நோய்களை அடிப்படையாக கொண்டவை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனாக மாறும் கதையை கொண்டவை. அவ்வாறு மாறுவதற்கான மருத்துவக் காரணங்களை ஓரளவு புரியும்படி இந்தப் படங்கள் சொல்லிச் சென்றன.


ஆகவே ரஜனிகாந்த் மற்றும் சங்கரின் புண்ணியத்தில் சில விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வது தற்பொழுது ஓரளவு இலகுவாக இருக்கிறது. இனிமேல் ஒரு மனிதப் பிறப்பு சந்திரமுகியாகவோ, அந்நியனாகவோ, அம்மனாகவோ, வைரவராகவோ மாறுவதை புரிய வைப்பதற்கு மருத்துவச் சொற்களை தேட வேண்டியதில்லை. மருத்தவரீதியான விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை. இலகுவாக இது "சந்திரமுகி நோய்", இது "அந்நியன் நோய்" என்று புரியவைக்கலாம்.


இப்பொழுது விடயத்திற்கு வருவோம். மத நம்பிக்கைகள் மிகுந்துள்ள பல நாடுகளில் சில மனிதர்கள் தங்களை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் சொல்லிவருகிறார்கள். இவ்வாறு மனிதர்களை கடவுளாக நம்புகின்ற பழக்கம் தமிழர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. முன்பு சிறுவயதில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் எங்களின் உறவினர் வீட்டில் அவர்களது சாமி அறையில் வழக்கமாக உள்ள படங்களோடு மேலும் இரண்டு படங்கள் இருந்தன. இரண்டு படங்களில் இருந்தவர்களின் தோற்றமும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருந்தது. ஒருவர் நல்ல வெள்ளை. மற்றவர் மிகவும் கருப்பு. வெள்ளை முகத்தோடு இருந்தவரை நான் ஏற்கனவே பல படங்களில் கண்டிருக்கிறேன். அவர் புட்டபர்த்தியில் இருக்கின்ற சத்ய சாயிபாபா என்பவர். ஆனால் அவரைப் போன்றே சடா முடியுடன் கருப்பாக இருந்தவரை எனக்கு யாரென்று தெரியவில்லை. உறவினரிடம் அவர் யாரென்று கேட்டதில் அவர் மிகப் பெரிய மகானென்றும், கடவுளின் அவதாரம் என்றும், இரண்டாவது சத்ய சாயிபாபா போன்றவர் என்றும் விளக்கம் சொன்னார். அந்தக் கடவுளின் அவதாரம் இப்பொழுது சிறையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது. ஆம், கடவுள் என்று அவரை நம்பி வந்த பக்தைகளுக்கு வலுக்கட்டாயமாக சிற்றின்பத்தை அருளிய பிரேமானந்தாதான் அவர். என்னுடைய உறவினர் இப்பொழுதும் பிரோமானந்தாவின் படத்தை வைத்து வழிபடுகிறாரா என்பதை அறியமுடியவில்லை.


முன்பு கடவுளாக கருதப்பட்ட பிரேமானந்தா தற்பொழுது போலிச் சாமியாக தூற்றப்படுகிறார். பிடிபட்டால் போலிச்சாமி என்றும் பிடிபடாத வரை நல்ல சாமி என்றும் சொல்லுகின்ற மடமை மிகுந்த இந்த சமூகத்தை என்னவென்று சொல்வது? தங்களை சாமிகள் என்று சொல்லுகின்ற சில பேர் பல நல்ல காரியங்களை செய்வது உண்டு. தனக்குள் அம்மன் வருவதாக சொல்லுகின்ற கேரளாவைச் சேர்ந்த மாதா அமிர்தாயி என்பவர் நிறைய அனாதை ஆச்சிரமங்களை நடத்துகிறார். பல ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்கின்றார். துன்பப் படுகின்ற பல பேருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். ஆனால் இவ்வளவையும் அவரது சொந்தப் பணத்தில் இருந்து செய்கின்றாரா என்றால் இல்லை என்பதே பதில். அது அவரை அம்மனின் மறு உருவமாக நம்புகின்றவர்கள் கொடுத்த பணமே அவ்வளவும். ஆகவே மக்கள் பணத்தை மீண்டும் மக்களுக்கு வழங்குகிறார். இதில் அவரை போற்றுவதற்கு என்ன இருக்கிறது? ஆயினும் தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பலரைப் போல் இவரும் இல்லாது எதோ சமூகத்திற்கும் கொஞ்சம் செய்கின்றார் என்று ஆறுதல் கொள்ளலாம். இவரைப் போன்று மக்களுக்கு தொண்டு செய்பவர்களாக இன்றுவரை கருதப்படுகின்ற மனிதர்களாகிய புட்டபர்த்தியில் இருக்கும் சத்யசாயி பாபா அல்லது மேல்மருவத்தூரில் இருக்கும் அம்மா என்று பலர் உண்டு. ஆனால் என்னதான் தர்ம காரியங்கள் செய்தாலும் ஒரு மானிடப் பிறப்பு தன்னை கடவுள் என்று சொல்லுகின்ற பொழுது அந்த நிமிடத்திலேயே ஒரு மோசடிப் பேர்வழியாக மாறிவிடுகிறான் அல்லது மாறிவிடுகிறாள்.


ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற எண்ணம் இன்றி உண்மையிலேயே தங்களில் சாமி வருவதாக நினைக்கின்ற மனிதர்களும் உண்டு. இவர்களுக்கு இந்த "சந்திரமுகி நோய்" பீடித்திருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் சிறு வயதில் கேட்ட கடவுள் சம்பந்தமான கதைகளில் ஒன்றிப் போய் பக்தி முற்றி இவ்வாறான மன நோய்க்கு ஆளாகுகிறார்கள். ஆகவே இவர்களின் நோக்கம் மக்களை ஏமாற்றுவது அல்ல. இவர்கள் கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று, அம்பி அந்நியனாகவும் ரெமோ ஆகவும் மாறியது போன்று அம்மனாகவும் முருகனாகவும் வைரவராகவும் மாறி விடுகிறார்கள்.

1986 ஆம் ஆண்டில் இதே போன்று என்னுடைய இன்னொரு உறவினர் திடிரென்று உருவெடுத்து ஆடத் தொடங்கி விட்டார். நாகபாம்பு மாதிரி வளைந்து நெளிந்து ஆடினார். தன்னுடைய கருவிழிகளை உள்ளே செருகி கண்களை வெண்மையாக்கி நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி நிலத்தில் ஊர்ந்தபடி ஆடினார். தன்னை நாக தம்பிரான் என்றும் சொன்னார். அதன் பிறகு எங்களின் ஊருக்கு அருகில் இருந்த ஒரு நாகதம்பிரான் கோவிலில் கிழமையில் ஒரு நாள் அவர் உரு ஆடி குறி சொல்லத் தொடங்கினார். உண்மையில் அவர் மீது நாகதம்பிரன் வந்து இறங்குவதாக பலர் நம்பினார்கள் அவரிடம் குறி கேட்க சென்றார்கள். அவருடைய வீட்டில் அடிக்கடி நாக பாம்பு வந்து செல்வதாக கதைகளும் உலாவத் தொடங்கின. அந்தப் பகுதிக்குள் அவர் மிகவும் பிரபலமானார். ஆனால் திடீரென்று அவருக்குள் நாதம்பிரான் வருவது குறையத் தொடங்கியது. அவர் உரு வந்து ஆடுகின்ற வேகம் குறைந்து போனது. மெது மெதுவாக முற்றிலுமாக நின்று போனது. நாகதம்பிரான் ஒன்றும் அவரை விட்டுவிட்டு வேறு வீடு பார்த்துச் செல்லவில்லை. உண்மையில் அவரிடம் நாகதம்பிரான் வரவில்லை. என்னுடைய உறவினர் என்பதால் அவர் மக்களை ஏமாற்றினார் என்று நம்புவதற்கு என்னுடைய மனம் இடம் தரவில்லை. அவருக்கும் வந்தது இந்தச் சந்திரமுகி நோயே. தற்பொழுது அவர் பூரணமாகக் குணமாகி தன்னுடைய குடும்பத்துடன் வாழ்;ந்து வருவதாக கேள்விப்பட்டேன்.

இவ்வளவையும் நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு. இங்கே ஐரோப்பாவில் டென்மார்க்கில் ஒரு பெண்மணியை அம்மன் என்று நம்பி சில தமிழர்கள் வழிபட்டு வருகின்றார்கள். அந்த பெண்மணிக்கு தீபாராதனை செய்வதும் பாலூற்றுவதும் தேரில் வைத்து இழுப்பதும் என அங்கே சிலர் அடிக்கின்ற கூத்தை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் நான் கேள்விப்பட்டவரை டென்மார்க்கை விட மற்றைய நாடுகளில் உள்ளவர்கள்தான் அந்தப் பெண்மணியை அதிகமாக வழிபடுகிறார்களாம். அந்தப் பெண்மணியும் தன் பங்கிற்கு குழந்தைகள் அச்சப்படும் வண்ணம் கண்களை உருட்டுவதும் காவி உடை அணிந்து வேப்பிலைகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதும் என மக்கள் நம்புவதற்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார். அம்மன் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று வேலைவெட்டியற்று யாரோ ஒருவன் சொன்னதை நம்பி அந்தப் பெண்மணியும் அவ்வாறான கோலம் பூண்டு உலா வருகிறார். அவரது வாயில் இருந்து பச்சைக் கலரில் ஒரு வித திரவம் வருகிறது. அதை அற்புதம் என்று அங்கே போகின்றவர்கள் கன்னத்தில் வேறு போட்டுக் கொள்கிறார்கள். பிரேமானந்தாவின் வாயில் இருந்தும் லிங்கம் வந்தது. கைகளில் இருந்து வீபூதி கொட்டியது. வாயில் இருந்து அதற்குள் அடங்கக்கூடிய சிறிய லிங்கத்தையும் திரவத்தையும் எந்த ஒரு மந்திரவாதியாலும் வெளியே எடுக்க முடியும். ஆனால் தன்னைக் கடவுள் என்று சொல்லுகின்ற யாரும் வாயில் இருந்து பூசணிக்காயை எடுத்ததில்லையே. அப்படிச் செய்வதில்தானே அற்புதம் உள்ளது. அந்தப் பெண்மணி சில நோய்களை குணப்படுத்தியிருப்பதாக சிலர் சொன்னார்கள். ஐரோப்பாவில் கூட சில ஐரோப்பியர்கள் வெறும் கைகளாலேயே சிலருடைய நோய்களை குணப்படுத்துகிறார்கள். அவர்கள் அதற்கென்றே மருத்துவகூடங்களை திறந்து வைத்திருக்கின்றார்கள். அந்த மருத்துவர்கள் ஒரு போதும் தங்களை கடவுள் என்று சொல்வது இல்லை. அட, மதி கெட்ட என் தமிழினமே நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! கடவுள் என்கின்ற ஒன்று இருந்தாலும் கூட, ஒருபோதும் ஒரு மனிதப் பிறப்பு கடவுள் என்று ஆக முடியாது. அப்படி தன்னை கடவுள் என்று ஒருவன் சொன்னால், ஒன்று அவன் அயோக்கியனாக இருக்க வேண்டும் அல்லது மன நொய் பிடித்தவனாக இருக்க வேண்டும். அதே போன்று டென்மார்க்கில் கோயில் கொண்ட அந்த அபிராமியும் மக்களை ஏமாற்றுகிறவராகவே இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் அவருக்கு சந்திரமுகி நோய் பிடித்திருக்கின்றது. ஆகவே அவருக்கு தேவை வைத்தியமே அன்றி நெய்வேத்திய ஆராதனைகள் அல்ல. அவர் மற்றவர்ளைக் குணப்படுத்துவதை விடுத்து முதலில் அவரைக் குணப்படுத்தும் வழியைப் பாருங்கள்.

டென்மார்க்கில் இப்படியென்றால் ஜேர்மனியில் அனுமன் என்கின்ற குரங்கிற்கு கோயில் கட்டி வைத்துள்ளார்கள். வாரத்தில் ஒருநாள் விசேட வழிபாடு நடை பெறுகிறது. நாம் ராமனையே தமிழர்களின் எதிரி என்கின்ற பொழுது, இவர்கள் அந்த ராமனிற்கு அடிமைச் சேவகம் புரிந்த குரங்கை வழிபடுவதை எந்த வகையில் சேர்ப்பது? மனிதர்களின் கடவுளை மனித வடிவில் சித்தரிப்பதை ஒரளவு பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு குரங்கு எப்படி மனிதர்களுக்கு கடவுளாக முடியும்? அப்படியென்றால் இந்த மனிதர்கள் இன்னும் பரிமாண வளர்ச்சி அடையிவில்லை என்றுதானே அர்த்தம். பொதுவாகவே ஈழத் தமிழர்கள் இந்தக் குரங்கை அதிகமாக வழிபடுவதில்லை. தமிழ்நாட்டில் கூட குரங்கு வழிபாடு குறைவே. அயல் மாநிலமான ஆந்திராவிலும் வட இந்தியாவிலுமே இந்தக் குரங்கு வழிபாடு அதிகம் உண்டு. ஆனால் சிலர் பிழைப்புக்காக குரங்கு வழிபாட்டை தமிழர்கள் மத்தியில் திணிக்கின்றனர். மக்களை நம்ப வைப்பதற்காக பல செப்படி வித்தைகளை செய்த வண்ணமும் உள்ளனர். ஜேர்மனியில் உள்ள இந்தக் குரங்குக் கோயிலிற்கு ஈழத்தில் இருந்து ஒரு மனிதர் வருவார். அவருக்குள் இந்தக் குரங்குக் கடவுள் புகுந்து அருள் வாக்கு சொல்வதாக அங்கே செல்கின்ற மக்கள் நம்புகின்றனர். அந்த மனிதர் நம்பிக்கைக்கு விரோதமானவர்கள் யாராவது வந்தால் உதைப்பாராம். எனக்கு அவர் வருகின்ற பொழுது அவரிடம் உதை வாங்கி அவரை சில நாள் உள்ளே வைக்க வேண்டும் என்று ஆசை.

சரி, நான் அதிகமாக கிண்டல் செய்யவில்லை. வாசிக்கின்ற சிலரின் மனம் புண்படும். ஆகவே ஒரு சமரசத் திட்டத்திற்கு வருகிறேன். டென்மார்க்கில் வாழும் அந்த அம்மனும் ஜேர்மனிக்கு வருகின்ற அந்த ஆஞ்சநேயனும் நான் கேட்பதைச் செய்து காட்டட்டும். அப்படிக் கடினமான ஒன்றையும் நான் கேட்கப்போவதில்லை. அம்மனாலும் ஆஞ்சநேயராலும் செய்ய முடிந்ததைத்தான் கேட்கின்றேன். அடுத்து முறை ஆஞ்சநேயர் ஜேர்மனி வருகின்ற பொழுது விமானத்தில் வராது ஆஞ்சநேயரைப் போல் கடலைத் தாண்டி பறந்து வரட்டும். அபிராமி அம்மனும் ஒரு மிருகக் காட்சிச் சாலைக்குச் சென்று தன்னுடைய வாகனமாகிய சிங்கத்தில் அமர்ந்து விட்டு வரட்டும். அதன் பிறகு நிச்சயமாக அவர்களைக் கடவுள் என்று நானும் வழிபடுவேன்.



http://www.webeelam.com/Chandramuki.htm

Print this item

  வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் !!
Posted by: Rasikai - 02-13-2006, 06:47 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<b>காதலர் தினம்: வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் </b>

நாளை காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி பகுதிகளில் விளையும் கண்கவர் வண்ண ரோஜாக்களின் விற்பனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படுஜோராக நடைபெற்று வருகின்றன.

காதலர்களின் கற்பனையிலும், கவிதைகளிலும் முதல் இடம் வகிப்பது ரோஜா மலர்கள் தான். காதலர்கள் தங்களின் அன்பையும், ஆசையையும் பரிமாறிக் கொள்ள பயன்படும் இந்த வகை வண்ண ரோஜாக்களின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.

குறிப்பாக பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் என்பதால் ரோஜா பூவின் தேவை உலக நாடுகளில் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் ஓசூர், தளி பகுதிகளில் இருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகள் மூலம் பெங்களூர் விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. விமானத்தில் உலக மலர் சந்தையான ஹாலந்துக்கு அனுப்பப்படுகின்றன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாடுகளிலும், உள்நாட்டு மலர் சந்தைகளிலும் ரோஜா பூவின் தேவை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் ஐரோப்பியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் 50 லட்சம் ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

வழக்கத்தை விட இந்த ஆண்டு ஓசூர், தளி பகுதிகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ள ரோஜா பூவிற்கு உலக மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடு களில் பூ உற்பத்திக்கான செலவினம் அதிகம் ஆவதால் அங்கு மலர் சாகுபடி அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடுகள் ரோஜாவுக்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளை எதிர் நோக்கி இருக்கின்றன.

ரோஜா மலர்களில் சிவப்பு ரோஜா என்றாலே மார்க்கெட்டில் அதற்கான தனி மவுசு உள்ளது. ஓசூர், தளி பகுதிகளில் ஏற்றுமதி தரம் வாய்ந்த பூக்கள் உற்பத்தி செய்வதற்கான மண்ணின் தரம், சிதோஷ்ண நிலை மிகவும் ஏதுவாக உள்ளது.

அதனால் நல்ல தரமான மலர்கள் விளைகின்றன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட சாகுபடியாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன் நமது நாட்டுக்கு அன்னியச் செலாவனி கிடைக்க வாய்ப்பாக உள்ளது.

ஆண்டு முழுவதும் இதன் உற்பத்தியும், விற்பனையும் இருந்து வந்தாலும் காதலர் தினத்தில் அதிக விலை கொடுத்து கூட காதலர்கள் தங்கள் காதலிக்கு அன்பு பரிசாக ரோஜா மலர்களை வாங்கி கொடுப்பதால் உலக சந்தையிலும், உள்நாட்டிலும் இதன் சாகுபடியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்பாக உள்ளது.

மனம் கவர்ந்த ரோஜாக்கள் ஓசூரில் இருந்து கடல் கடந்து செல்வது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்றாகும்.


விடுப்பு : .

Print this item

  இணையத்தளங்களூடாக வைரஸ் பரவுகிறது!!
Posted by: Rasikai - 02-13-2006, 06:44 PM - Forum: இணையம் - Replies (18)

<b>இணையத்தளத்தினூடாக வைரஸ் பரவி வருவதால் கணணியை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். </b>
<img src='http://img338.imageshack.us/img338/8449/kinpc7no.gif' border='0' alt='user posted image'>
உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கணணிகள் இன்று இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுகமில்லாத - மெயில் தகவல்களை பார்வையிடாமல் இருப்பதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து கணணிகளை பாதுகாக்க முடியுமென இலங்கை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அலுவலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் விகே. சமரநாயக்க தெரிவித்துள்ளார். இணையத்தளத்தினூடாக உலகம் முழுவதிலுமுள்ள கணணிகளில் பரவியுள்ள இந்த வைரஸை -பிளக் வோம்- என பெயரிடப்பட்டுள்ளது ஹொற் மோர்டிவ் கிவ் மி எ கிஸ் மிஸ் லெபனான் 2006 போன்ற ~மெயில் இணைப்புக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவக் கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான ~மெயிலை பார்வையிடாமல் இருப்பது சிறந்ததென கணணி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவல்களை பார்வையிடுவதன்மூலம் கணணியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அழிந்துவிடுமென்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். பிளக் வோர்ம் என்ற வைரஸ் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் திகதி கணணிகளுக்கு பரவக் கூடிய வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அலுவலகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் வி. கே. சமரநாயக்க தெரிவத்துள்ளார். இது கடந்த மாத நடுப்பகுதியில் இணையத்தளத்தினூடாக பரவிய வைரஸ் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&

Print this item

  புத்துணர்ச்சி
Posted by: Rasikai - 02-13-2006, 06:36 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (4)

<b>புத்துணர்ச்சி </b>

பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி
அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின.

ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு சகோதரங்களுடன் பிறந்த அவள் வீட்டில் மூன்றாவது பிள்ளை. வறுமை தாண்டவமாடினாலும் படிப்பிலே அவளுக்கிணையாக யாருமே இருக்கமுடியாது. அவ்வளவு கெட்டிக்காரி. ஸ்கொலசிப்பில் இலங்கை முழுவதிலும் முதல் மாணவியாகத் தேறிய அவளுக்கு அரசாங்கப் பணம் கிடைத்து வந்தது. எப்பொழுதும் தூய்மையான சீருடை. ஒரே சீருடைதான் இருந்தாலும் சீராக இருக்கும். எண்ணெய் பூசி வாரிவிட்ட நீண்ட கூந்தலை மடித்துக்கட்டியிருப்பாள். யாருடனும் அதிகம் பேசமாட்டாள். மென்மையென்றால் என்னவென்று அவளிடம்தான் அறியவேண்டுமெனப் பலதடவைகள் நினைத்ததுண்டு.
ரீட்டாவின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த துன்பங்களால் அவள் வாழ்க்கை எங்கோ திசைமாறி கடைசியில் இப்படியாகிவிட்டது முதலில் தந்தை அண்ணா,அக்கா தம்பி தங்கை அனைவரும் ஒரே நேரத்தில் குண்டுக்கிரையாகிவிட்டார்கள். தாயாரும் ஒரு தம்பியும் மட்டுமே எஞ்சியிருந்தனர். கவலைகள் கஷ்டங்களால் படுத்த படுக்கையாகி தாயாரும் இறந்துவிட்டார். தம்பியோ இராணுவத்தின் கோரப்பிடியில் அகப்பட்டுத் துடிதுடித்து இறந்தான். அதன் பின்னும் அவளால் என்ன செய்ய இயலும். இராணுவத்தின் கையிலகப்பட்டு உயிரை மாய்ப்பதிலும் பார்க்க மண் மீட்பிற்காக உயிரை மாய்ப்பதே மேலென எண்ணியதன் விளைவுதான் இது. இவ்வளவு நடந்திருப்பதை இங்கிருந்து அவளுக்காக அவளை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணீரை உகுக்கும் அவள் ஆசிரியைக்குத் தொரிந்திருக்க ஞாயமில்லைத் தானே. ஏனெனில் அவள் நீண்ட நாட்களுக்கு முன்பே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஊர் விட்டு ஊர் மாறி வந்துவிட்டாள் அல்லவா.

தொலைபேசி மணி ஒலித்தது. நிஜ உலகிற்கு வந்தாலும் அவள் மனம் அந்தப் பத்திரிகையில் வந்த அந்தப் படத்திலேயே நிலைகொண்டிருந்தது தொலைபேசியில் அவள் தோழி நித்யா தான் அழைத்தாள். அவளுடன் வேலை செய்த சக ஆசிரியைதான் நித்தியா. நித்தியாவே பேச்சை ஆரம்பித்தாள். ரம்யா பத்திரிகை பார்த்தீரா? ஓமப்பா ஒரே குழப்பமாயிருக்கு.. .. எப்படி? எப்படி? அவள் இந்தப் போராட்டத்தில்... என்று இழுத்தாள் ரம்யா. நித்தியா தான் அறிந்தவற்றை விபரமாகக் கூறினாள். பின் தங்கள் வீட்டிலே நேற்று இரவு நடந்த கிறிஸ்மஸ்பாட்டி பற்றிய கதையை சுவாரசியமாக அலசத் தொடங்கினாள்.

மெல்லத் திரைச்சீலையை விலத்திவிட்டு வெளியே பார்த்தாள் ரம்யா. வெளியில் எங்கும் வெண்மையாக இருந்தது. பல வர்ண ஒளி விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன.
நேற்று அவள் தோழியின் வீட்டிலே கிறிஸ்மஸ் பாட்டி நடந்தது. ரம்யாவும் போயிருந்தாள். நித்யா சுத்த இந்து. அவர்கள் யேசு நாதரின் பிறப்பைப்பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரிந்திருப்பார்களா? என்றால்.. இல்லை. எத்தனைவிதமான மதுவகைகள், உணவுப்பண்டங்கள். ஐயோ அந்தப் பெண்களின் உடைகள் பாட்டிக்கென்று புதிதாக விலை உயர்ந்ததாக வாங்கியிருந்தனர் போலும். பாட்டி என்றால் 'வைன்' எடுக்கலாம் எடுங்கோ.
அது ஒன்றும் செய்யாது கொஞ்சமாக எடுமப்பா இன்றைக்குக் கொஞ்சம் டேஸட் பண்ணிப் பாருமன் அதுக்கென்ன என்று அவர்கள் வற்புறுத்திய விதம் நினைக்கவே அருவருப்பாக இருந்தது. வைன் கிளாசை ஒரு கையில் வைத்தபடி காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு தொடையில் அடித்துப் பலமாக சிரித்துக் கதைக்கும் அந்தப் பெண்களை ஒரு புழுவைப் பார்ப்பதைப் போலப் பார்த்தாள் ரம்யா.

இப்போ ரம்யாவிற்கு அந்தப் பெண்களையும் ரீட்டாவையும் மனம் ஏனோ ஒப்பிடத்தூண்டியது. யேசுநாதரைப்போல அமைதியான ரீட்டா எங்கே இவர்கள் எங்கே. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது அவர்கள் தேவாலயம் செல்வதையும் வழிபாடு செய்வதையும் தானே பிரதானமாகக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பவைகளைப் பார்க்கப் பார்க்க அவள் மனம் குமுறியது.

பாட்டி நடந்து கொண்டிருந்த போது ஒரு பெண் பொங்கல் பண்டிகை பற்றிய கதையை எடுத்தாள். அது என்னப்பா வீக்டேயிஸ்ல எல்லே வருகுது. எப்பிடிக் கொண்டாடுறது. வேலையால் வந்து ஏதும் பொங்கிச் சாப்பிடவேண்டியதுதான். அதற்கு மற்றவள் நானென்டா காலையிலேயே எல்லாம் செய்துபோட்டு பின்னேரம் வந்து சாப்பிடுவன். எனக்கு அம்மா செய்வா என்றது ஒரு குரல். இன்னொரு குரல் மாமி என்றது. அதற்குள் ஒரு குரல் சொன்னது சூரியன் வெளியில வரேக்க எங்கட பிரேக் டைமும் வந்திடும் இதில சூரியப் பொங்கலாம் எப்பிடிச் செய்யிறது. கொல்லென அனைவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி. ஒருவராவது கோவில் பற்றிய கதையைமட்டும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

நினைவுகளில் மூழ்கியவள் காலரவம் கேட்டுத் திரும்பினாள். தன் கணவர் வேலையால் வந்துவிட்டதைக் கண்டதும் தான் நீண்ட நேரமாக நின்றுவிட்டதையுணர்ந்தாள். சோர்வுடன் காணப்பட்ட ரம்யாவை மெல்ல அணைத்தபடியே என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியா இருக்கிறீர்? கண் வேற சிவந்திருக்கு. என மிக அன்பாகவும் ஆதரவாகவும் கேட்டான். ரம்யாவின் கண்கள் மீண்டும் குளமாயின. அன்றைய பத்திரிகையில் இருந்த ரீட்டாவின் படத்தைக் காட்டி இவள் தன் மாணவி என்றும் அவள் பற்றி தானறிந்த விபரங்களையும் கூறினாள்.

இங்கே ரம்யா நீர் உம்மட மாணவி என்ற ஒரே காரணத்திற்காக இப்பிடி அழுகிறீர். உப்பிடி உந்தப் பேப்பர்ல எத்தன போராளியளின்ற படங்கள் வருகுது. அதுகளப் பார்த்து அழுகிறவர்கள் எத்தனை பேர். தங்களின்ற ஆட்கள் என்றவுடன மட்டும் அழுகை வருகுது. போராளிகள் மட்டுமில்ல அங்க கஷ்டப்படுறது. எங்கட அப்பாவிச் சனங்களும் தான். இதெல்லாம் யாருக்கும் தெரியாதென்றில்ல. ஆனா அதைப்பற்றிச் சிந்திக்கிறவை குறைவென்று தான் நான் சொல்லுவன். அதுகள் படுற கஷ்டங்கள் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கிறம் அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்குமாம் தன்னை மற்றவர்களுக்குத் தெரியாதென்று. அது போலத்தான் எங்கட வாழ்க்கையும். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் எத்தின சனம் சாகுதுகள். சில போராளிகளின்ற படங்களாவது பேப்பரில வருகுது ஆனால் எத்தின சனம் நாளுக்கு நாள் அநாதைகளாக தேடுவாரற்று ஊனின்றி, உடுக்க உடையின்றி, கிழடுகள் வீட்டிலேயே எலும்புக்கூடாகியிருக்குதுகள். ஏதோ தாங்களும் தங்கட முழுக் குடும்பமும் தப்பி வந்திட்டம் என்றதும் எல்லாத்தையும் மறந்து தலைகீழாக நடக்குதுகள். ஏன் நேற்றைக்குப் பாட்டியில பார்த்தீரே. நீரோ நானோ இதுக்குக் கவலைப்பட்டு என்ன பிரயோசனம் இதையெல்லாம் வெளிநாடுகளில வாழுற எங்கட சனங்கள் உணரவேணும் .
மறுநாள் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. ரம்யா தான் எடுத்தாள். அது ஒரு ஆங்கிலேயனின் குரல். இங்கிருக்கும் அங்கவீனமான பிள்ளைகளில் ஒருவரையோ இருவரையோ தெரிந்தெடுத்து அவர்களுக்கு ஸ்பொன்சர் செய்யட்டாம் ஆளுக்கு 20டொலர்கள் தானாம். அவர் விபரங்களை நீட்டிக்கொண்டே போனார். ரம்யாவின் மனதிலே ஏதோ சுருக்கென்று தைப்பது போலிருந்தது. என்ன மடம் சொல்கிறீர்கள் என்றார் இறுதியாக. எனது தாய்நாட்டிலே நிறையப் பேருக்கு என் உதவி தேவைப்படுகிறது. என் உறவினர்கள் கூட என்னை எதிர்பார்த்திருக்கையில் நான் என்ன செய்வது? தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினாள் ஒரு விதமான புத்துணர்ச்சியுடன்.

மாலை வீடு வந்த கணவரிடம் தொலைபேசி அழைப்புப் பற்றியும் ஏன் நாங்கள் எங்கள் நாட்டிலுள்ள அகதிகளுக்கு மாதம் 20 டொலர்களை ஒதுக்கக் கூடாது என்று படபடவென்று மூச்சு விடாமல் கதைத்து முடித்தாள். பிறக்கின்ற புத்தாண்டில் அப்படியொரு நல்ல காரியமாவது செய்ய அந்தப் புண்ணியவான்தான் எங்கள் கண்களைத் திறந்துவிட்டார் என்று குறும்புப் பார்வையுடன் தன் மனைவியின் கன்னங்களிலே மெல்லக் கிள்ளினான் பிரசாத். அவர்கள் உள்ளமெல்லாம் ஒருவித புத்துணர்ச்சி பரவத் தொடங்கியது.

எழுதியவர்-நளினி மகேந்திரன்
நன்றி எழில்நிலா

Print this item

  வணக்கம்
Posted by: jsrbavaan - 02-13-2006, 06:03 PM - Forum: அறிமுகம் - Replies (20)

வணக்கம் வணக்கம் எல்லாருக்கும் வணக்கம்
உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  காதல் ஜோடிகள்
Posted by: Rasikai - 02-13-2006, 06:00 PM - Forum: நகைச்சுவை - Replies (31)

<b>காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<img src='http://img106.imageshack.us/img106/2690/att214163wq.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img106.imageshack.us/img106/9053/att214171ou.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img106.imageshack.us/img106/3796/att214183hm.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img467.imageshack.us/img467/8231/att214191ve.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img467.imageshack.us/img467/9587/att214206sn.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img467.imageshack.us/img467/7565/att214218hx.jpg' border='0' alt='user posted image'>

Print this item