| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 134 online users. » 0 Member(s) | 133 Guest(s) Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,250
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,029
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,117
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| அரவிந்த்சாமி விவாகரத்து? |
|
Posted by: Mathan - 02-15-2006, 06:59 PM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/arvindhswamy-450.jpg' border='0' alt='user posted image'>
நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார்.
பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி.
<img src='http://thatstamil.oneindia.com/images31/optimized/arvind-250.jpg' border='0' alt='user posted image'>
இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரவிந்த்சாமிகாயத்ரி பிரிந்தனர். குழந்தைகள் இருவரும் தந்தையுடன் வசித்து வருகின்றன.
இந் நிலையில் விவாகரத்து கோரி காயத்ரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது 2 குழந்தைகளைப் பார்ப்பதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஜெயபால், வருகிற 21ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரவிந்த்சாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மெட்லி ஒலி சீரியல் புகழ் பெரியவர் டெல்லி குமாரின் மகன் தான் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரை தனது தம்பிக்கு குமார் சிறு வயதிலேயே தத்து கொடுத்துவிட்டார். இதனால் தந்தையுடன் அரவிந்த்சாமி பேச்சுவார்த்தையே வைத்துக் கொண்டதில்லை.
தட்ஸ் தமிழ்
|
|
|
| என்ன செய்யலாம்.. |
|
Posted by: Danklas - 02-15-2006, 01:29 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (24)
|
 |
கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல <b>***</b> இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்..
இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன?
ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம்,
1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல்
2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்)
3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் புதிதாக இனைந்தாலும், களப்பொறுப்பாளர் அனுமதித்தால் மாத்திரம் உள் நுழையக்கூடிய முறை)
இதை ஏன் சொல்கிறேன் என்றால், களத்திலே அண்மையில் இனைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையையும், அவர்களில் ஒரு சிலர் கருத்துக்களை முன் வைப்பது எதற்கு? ஒரு நாளில் மாத்திரம் 100க்குமேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்து அதில் 2,3 பேர் கருத்து எழுதுறார்கள் என்றால் ஒன்றில் இங்கு இருக்கும் சிலர் (நான் மேலே குறிப்பிட்ட <b>***</b>) வேனுமெண்டு செய்கிறார்கள் அல்லது இங்கே இருக்கும் அவர்கள் யாழ்களத்தைப்பற்றி விசமத்தனமான கருத்துக்களை பரப்புகிறார்கள், அப்படி பரப்புவர்களின் ஆதரமற்ற செய்திகளை படிப்பதற்காக பல விருந்தினர்கள் அங்கத்தவர்களாக உள் நுழைகிறார்கள் (திரைப்படங்கள் தரவிறக்கம் செய்ய பலர் செய்வது போல), நுழைந்து வாசித்துவிட்டு கருத்துக்களை முன்வைக்காமல் செல்கின்றனர்,,
ஆகவே இதற்கு என்ன முடிவு எடுக்கலாம்,அவ்வாறு களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் உள் நுழைவதால் ஏதேனும் நன்மை அல்லது தீமை எப்படி அமையும் என்று எதிர்பார்கிறீங்க, இதில் களப்பொறுப்பாளரின் கருத்தையும் எதிர்பார்கிறேன்,, :roll:
<b>***தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>
|
|
|
| காதல் கடிதம் |
|
Posted by: Thulasi_ca - 02-15-2006, 01:08 PM - Forum: நகைச்சுவை
- Replies (6)
|
 |
<img src='http://www.geocities.com/padankal/lovelatter.jpg' border='0' alt='user posted image'>
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி
|
|
|
| வெஜிடபிள் குருமா செய்வோமா? |
|
Posted by: சந்தியா - 02-15-2006, 12:58 PM - Forum: சமையல்
- Replies (16)
|
 |
வெஜிடபிள் குருமா
பட்டாணி 200 கிராம்
பீன்ஸ் 200 கிராம்
காலிஃப்ளவர் 100 கிராம்
உருளைக் கிழங்கு 200 கிராம்
காரட் 200 கிராம்
பூண்டு 5 பல்
இஞ்சி ஒரு சிறு துண்டு
பெரிய வெங்காயம் 2
பச்சைமிளகாய் 6
கசகசா அரைத் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 6
பொட்டுக்கடலை ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் அரை மூடி
பட்டை ஒரு அங்குல துண்டு
கிராம்பு 4
எண்ணெய் 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு தேவையான அளவு
1)பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2)பீன்ஸ்இ உருளைக்கிழங்குஇ காரட்இ காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசிஇ பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3)பூண்டுஇ இஞ்சிஇ பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்ஸியில் இட்டு நன்கு மைபோல அரைத்துக் கொள்ளவும்.
4)பின்பு கசகசாஇ முந்திரிப்பருப்புஇ பொட்டுக்கடலை ஆகியவற்றை தனியே அரைத்துக் கொள்ளவும்.
5)தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
6)ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்இ பட்டைஇ கிராம்புஇ நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் போடவும்.
7)வெங்காயம் சிவந்ததும்இ அரைத்து வைத்துள்ள இஞ்சிஇ பூண்டுஇ மிளகாய் கலவையைப் போட்டு வாசனை வரும் வரை கிளற வேண்டும்.
8)பிறகு காய்கறிகளைப் போட்டுஇ தேங்காய் பாலையும் ஊற்றிஇ தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
9)கால் மணி நேரம் கழித்துஇ காய்கறி வெந்தவுடன் கசகசாஇ பொட்டுக்கடலை மசாலாவினை போட்டு குருமா கெட்டியானவுடன்இ சிறிது நேரம் சிறு தீயில் வைத்திருந்து பிறகு இறக்கவும்.
10)இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும்.
சுட்டது
அறுசுவை.com
|
|
|
| நம்ம கிரிஜாவும் ஐ.நா. சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறா |
|
Posted by: Shankarlaal - 02-15-2006, 12:46 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://www.dinamalar.com/2006feb15/photos/in-26.JPG' border='0' alt='user posted image'>
நம்ம கிரிஜாவும் ஐ.நா.சபை சார்பில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்
ஐ.நா., சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார் பீகார் தலித் பெண்
பாட்னா: மது ஒழிப்புக்காக போராடி வரும் பீகாரைச் சேர்ந்த கிரிஜா தேவி, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடக்கும் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்.
என்ன தான் பெண்ணுரிமை கிடைத்து பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்றாலும் கூட ஆணாதிக்க சமுதாயத்தின் எஞ்சிய சில பகுதிகள் பெண்களை நசுக்கிய வண்ணம் உள்ளன. அதில் முக்கியமானது ஆண்களின் மதுப் பழக்கம். "குடி குடியைக் கெடுக்கும்' என்று கூறும் அரசாங்கமே அதனை விற்பனை செய்யும் கொடுமை நம் நாட்டில் உள்ளது.
ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சமூக அந்தஸ்து அடிபடுகிறது. குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டு குடும்பமே சிதறி விடுகிறது.இத்தகைய கொடுமையான தீமையை எதிர்த்து கிரிஜா தேவி என்ற பெண்மணி பல ஆண்டுகளாக போராடி வருகிறார். 59 வயதான இவர் பீகாரிலுள்ள பிர்க்கியா சிபுலியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.
தலித் வகுப்பைச் சேர்ந்த இவரின் கணவர் சிங்கேஷ்வர் மஞ்சி தினமும் குடித்துவிட்டு வந்து இவரை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னைப் போல "குடிமகன்' கணவன்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுத்து வருகிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு "முஷர் விகாஸ் மன்ச்' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் துவங்கி நடத்தி வருகிறார். "ஆக்ஷன் எய்ட்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஐ.நா., சபையின் ஒரு பிரிவான பெண்கள் மேம்பாடு மற்றும் பொருளாதார, சமூக விவகாரங்கள் அமைப்பின் 15வது மாநாடு வரும் 27ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.
இதில் கிரிஜா தேவி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேச்சின் மூலம் குடிகார கணவன்களால் கஷ்டப்படும் பெண்களுக்கு நல்வாழ்வு பிறந்தால் நல்லது தானே!
தினமலர்
|
|
|
| கற்பை காத்தாள்; கையை இழந்தாள்: |
|
Posted by: Shankarlaal - 02-15-2006, 12:43 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
கற்பை காத்தாள்; கையை இழந்தாள்: இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
லக்னோ: வயலில் வேலை செய்து கொண்டிருந்த தலித் பெண், தன்னை கற்பழிக்க முயன்ற நான்கு பேரிடம் போராடி கற்பை காத்துக்கொண்டாள். ஆனால், அதற்கு விலையாக தன் வலது கையை இழந்தாள். வெட்டிய வலது கையையும் எடுத்துக் கொண்டு கும்பல் ஓடிவிட்டது.
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 250 கிலோமீட்டர் துõரத்தில் உள்ள ஆரியா மாவட்டம். அங்குள்ள அசல்டா என்ற கிராமத்தில் பெரும்பாலோர் தலித் இனத்தவர். விவசாய கூலியாக வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தலித் மக்களுக்கு, இங்கெல்லாம் அதிக கஷ்டங்களை தருவர் மேல்ஜாதியினர். அதனால் தான் மாயாவதி போன்றவர்கள் கட்சி ஆரம்பித்ததும் தலித் ஆதரவு பெருகியது. ஆனாலும், தலித்களுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்ற குறையும் உண்டு.
இதுபோன்ற கிராமங்களில் தலித் பெண்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் அதிகம். கற்பழிப்புகள், கொலை போன்றவையும் நடக்கத்தான் செய்கின்றன. அதனாலேயே தலித் மக்கள் வெறுத்துப்போய்விட்டனர். நக்சலைட்களாகவும் சிலர் மாற, மேல் ஜாதியினரே காரணம்.
அசல்டா கிராமத்தில் தொடர்ந்து தலித் பெண்களுக்கு "செக்ஸ் தொல்லைகள்' அதிகரித்து வந்தன. எதுவும் பேச முடியாத நிலையில் தத்தளித்து வந்தாலும், பெண்கள் எதிர்க்கத் துவங்கினர். கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவம் கிராமத்தை மட்டுமில்லாமல், மாவட்டம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த 16 வயது பெண் அஞ்சு. இவர் விவசாயக்கூலி வேலைக்கு செல்வதுண்டு. நான்கு பேர் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்த வண்ணம் இருந்தனர். பொறுத்து வந்தார் அவர். இந்த நிலையில் அந்த நான்கு பேரும், கடந்த ஞாயிறன்று, அஞ்சுவை வயலில் இருந்து துõக்கிச்சென்றனர்.
எல்லார் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பற்றி மற்ற விவசாயக் கூலிகள் வாயை திறக்கவில்லை. அஞ்சுவை பம்ப்செட் அறையில் நான்கு பேரும் கற்பழிக்க முயன்றனர். அப்போது தன் மானத்தை காக்க தயாரானாள். நான்கு பேரையும் கடுமையாக எதிர்த்து, தன் கற்பு , பறிபோகாமல் பார்த்துக் கொண்டாள்.
"என்னை கொன்று விட்டு தான் என் கற்பை சூறையாட முடியும், முடிந்தால் அதை செய்யுங்கள்' என்று கூறிய அஞ்சுவிடம் இனி எந்த ஜம்பமும் பலிக்காது என்று வெறியாகிவிட்ட அந்த நான்கு பேரும், "இவளை இப்படியே விட்டுப் போய்விடக் கூடாது, இவளை போன்ற பெண்களுக்கு பயம் வரும் படி ஏதாவது செய்ய வேண்டும் என்று, அஞ்சுவின் வலது கையை கத்தியால் வெட்டினர். பிஞ்சு கை, அப்படியே வாழைத்தண்டு போல, துண்டாகி விழுந்தது.
கதறக்கதற, அஞ்சுவை அங்கேயே விட்டு விட்டு, அவளது துண்டான வலது கையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றி போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் மட்டும் பதிவு செய்துவிட்டனர்.
தினமலர்
|
|
|
| ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம் |
|
Posted by: Shankarlaal - 02-15-2006, 12:42 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
ஐஸ்வர்யா அபிஷேக் பச்சன் திருமண ஏற்பாடுகள் தீவிரம்
மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் காதல் விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அபிஷேக் பச்சன் வீட்டில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் முதலில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை காதலித்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மானை விட்டு பிரிந்தார். பிறகு விவேக் ஓபராயைக் காதலித்தார். தங்கள் காதலைப் பற்றி பகிரங்கமாக செய்தி வெளியிட வேண்டும் என்று விவேக் கேட்டதால் அவரை விட்டும் ஐஸ்வர்யா பிரிந்தார். அதன் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை தற்போது ஐஸ்வர்யா ராய் காதலிக்கிறார் என்று மும்பை வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த காதல் வதந்தியல்ல உண்மை தான் என்று நிரூபிக்கும் விதமாக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவின் ஜாதகங்களை சந்திரசேகர் ஸ்வாமி என்பவரிடம் அமிதாப் பச்சனின் தம்பி அஜிதாப் பச்சன் கொண்டு சென்று பொருத்தம் பார்த்ததாக கூறப்பட்டது. பொருத்தம் பார்த்தது உண்மை தான். ஆனால், அமிதாப் பச்சன் தனது நம்பிக்கைக்கு உரிய தன்னுடைய உதவியாளர் ஒருவரை அனுப்பி பொருத்தம் பார்த்தாராம். அஜிதாப் பச்சன் பூஜை விஷயமாகத்ததான் சந்திரசேகர் ஸ்வாமியை சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராயின் ஜாதகங்கள் கனகச்சிதமாக பொருந்தியுள்ளதாக கூறிய சந்திரசேகர் ஸ்வாமி எவ்வளவு சீக்கிரத்தில் திருமணத்தை நடத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்துவது நல்லது என்றும் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியை அபிஷேக் பச்சனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பி வந்தனர். ஆனால், ஐஸ்வர்யாவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சன் பிடிவாதமாக இருந்துள்ளார்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தான் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்கள் நடித்துக் கொண்டிருக்கும்"உம்ராவோ ஜான்' என்ற படத்தின் மூலமாகத்தான் இவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த ஐந்தாம் தேதி நடந்த அபிஷேக்கின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் விடியற்காலை வரை அபிஷேக் குடும்பத்தில் ஒருவர் போல் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாராம். இந்த காதல் பற்றி ஐஸ்வர்யா தரப்பில் இன்னும் மூச்சு விடவில்லை என்றாலும் விரைவில் இது பற்றி அவர் வெளிப்படையாக பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தினமலர்
|
|
|
| மகிந்த மீது கடும் தாக்குதல் |
|
Posted by: வினித் - 02-15-2006, 12:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
மகிந்தவுக்கு ஒற்றையாட்சிதான் நிலைப்பாடு எனில் புலிகளுக்கு தனியரசுதான் நிலைப்பாடு: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை!
[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 15:59 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
தமிழருக்குத் தாயக நிலம் இல்லை, ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசு அரசியல் நிலைப்பாடெடுத்தால், தமிழரின் தனியரசுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக முயற்சிப்பதைத் தவிர வேற்று மாற்று வழிகள் இல்லாதுபோகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழரின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை நிராகரித்து, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திற்கு வழங்கியுள்ள செவ்வி (13.02.06) தமிழ்மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த நேர்காணலின்போது, தமிழரின் தாயகக் கோட்பாட்டை அடியோடு நிராகரித்த சிறிலங்கா அரச தலைவர் அவர்கள், ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தேடப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழரின் அரசியல் உரிமைகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ள சிறிலங்கா அரச தலைவர் அவர்களின் கருத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்குப் பகுதிகள் தமிழரின் தாயகபூமி என்பது திடீரென முளைத்த அரசியல் கோட்பாடு அன்று. பல்லாயிரம் வருடங்களாகத் தமிழரின் வாழிடமாக - தாயகமாக அது இருந்து வருகின்றது. இலங்கை மீதான ஐரோப்பியரின் படையெடுப்பின் போதும் கூடத் தமிழரின் தாயகநிலம் தெளிவான வரையறைகளுடன் இருந்தது.
தமிழரின் தாயகநிலத்தை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அபகரிக்கச் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சூழ்ச்சிகர நடவடிக்கைகளைத் தமிழர் தரப்பு எப்போதும் எதிர்த்தே வந்துள்ளது.
தமிழரின் படைப்பல வளர்ச்சிதான் சிங்கள அரசின் நில அபகரிப்புக்குத் தடைபோட்டுள்ளது என்ற களயதார்த்தமும் அனைவரும் அறிந்த உண்மையாகும்.
தமிழரின் இனப்பிரச்சினையை அமைதிவழியில் தீர்க்கமுனையும் ஒர் அரசியல் தீர்வுத்திட்டத்தின் அடிப்படை விடயங்களாக, தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்பவையே உள்ளன என்பது புலிகள் இயக்கத்தின் நீண்டகால அரசியல் நிலைப்பாடாகும்.
இந்த அடிப்படை விடயங்களை ஜெயவர்த்தனா அரசு நிராகரித்ததால்தான் திம்புப் பேச்சுவார்த்தையே தோல்வியில் முடிந்தது.
தமிழரின் தாயகக் கோட்பாட்டை நிராகரிப்பதில் வெற்றிபெற்றுவிட்டால் அவர்களின் தேசிய இனம் மற்றும் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளும் செயலிழந்து - செத்துப்போய்விடும் என்றே சிங்கள ஆட்சியாளர்கள் கனவு காண்கின்றார்கள்.
சிங்களப் பாராளுமன்றம் - சிங்கள அரசியல் அமைப்பு - சிங்கள நீதித்துறை - சிங்கள நிர்வாகத்துறை - சிங்களப் படைக்கட்டுமானம் என்று இலங்கைத்தீவில் சிங்களவர் ஆட்சியே அதாவது ஒற்றையாட்சி முறையே அமுலிலிருந்து வருகின்றது.
சிங்கள - பௌத்த மேலாதிக்க சித்தாந்தத்தைக்கொண்ட இந்த ஒற்றையாட்சி அமைப்புக்குள்தான் தமிழினம் கொடூரமான இன அழிப்பை எதிர்கொண்டபடி வாழ்கின்றது.
ஒற்றையாட்சி அமைப்பில் அதிகாரப் பரவலாக்கல் மூலம் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற சிங்கள ஆட்சியாளர்களின் கருத்து ஐம்பது வருடங்களுக்கு முன்னரே காலாவதியாகிவிட்டது.
சமஸ்டி அடிப்படையில் தீர்வுகோரிய தமிழினம் அது மறுக்கப்பட்டதாலேயே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமிழர் சமஸ்டி கேட்டு ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து முப்பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன.
இப்போது சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அரைநூற்றாண்டு காலம் பின்னே சென்று - உழுத்துப்போன ஒற்றையாட்சித் தத்துவத்தைக் கையிலெடுத்த் தமது தாயகத்தின் பெரும் பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்து நடைமுறை அரசொன்றை நடாத்திவரும் புலிகள் இயக்கத்தின் முன்னே வைக்க விரும்புகின்றார்.
தமிழ் - சிங்கள இனப்பிரச்சினையின் ஆழமான முரண்பாடுகளைச் சரியாக அறிந்துகொள்ளாது, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அவசரப்பட்டு அறிக்கைகள் வெளியிடுவது தற்போதைய பேச்சு முயற்சியைப் பாதிக்கும் செயலாகவே இருக்கும்.
தமிழருக்குத் தாயகநிலம் இல்லை, ஒற்றையாட்சிக்குள்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று மகிந்த அரசு அரசியல் நிலைப்பாடெடுத்தால், தமிழரின் தனியரசுக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தீவிரமாக முயற்சிப்பதைத் தவிர புலிகள் இயக்கத்திற்கு மாற்றுவழிகள் இல்லாது போகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்
|
|
|
| நகங்களை நீங்களும் கடிக்கிறீர்களா? |
|
Posted by: சந்தியா - 02-15-2006, 12:19 PM - Forum: மருத்துவம்
- Replies (20)
|
 |
அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு.
நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது.
நகங்களைக் கடிக்கும் 109 பேரினை வைத்து ஆராய்ச்சி செய்ததில்இ தங்களை மற்றவர்கள் மதிக்காமல் ஒதுக்குகிறார்கள் என்ற பயம்இ தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக அவர்கள் இருந்திருக்கின்றார்கள்.
மேலும் இவர்கள் தங்களுக்குப் பாதகமான சூழ்நிலைகளில் தீவிரமாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையும் அதே நேரம் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலைகளில் குறைவாக நகங்களைக் கடிக்கும் பழக்கத்தையோ அன்றி நகங்களைக் கடிக்காமலேயே கூட இருக்கும் தன்மையையும் கொண்டிருந்தார்கள்.
தங்களது கோபங்களை மற்றவர்கள் மீது காட்டமுடியாத ஒரு இயலாமை நிலையிலே தங்கள் நகங்கள் மீது கோபங்களைக்காட்டி விடுபவர்களும் உண்டு.
ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின்படி பார்க்கும் போதுஇ நகம் கடிப்பவர்களே அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். நகம் கடிக்கும் பெண்கள் மென்மையாக இருக்கிறார்கள். அதே வேளையில் நகம் கடிக்கும் ஆண்களோ முரட்டுத்தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச்சுற்றி விரல்களில் கண்களுக்குப் புலப்படாத புண்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த நிகழ்வை இல்லாமற் செய்வதற்கு மருத்துவக் காப்புறுதிகள் உதவவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.
திலீபன் செல்வகுமாரன்
சுட்டது
தீலீபனின் வுலக்கில்
ஆமா இங்கு யார் நகம் கடிக்கிறது?
|
|
|
|