Yarl Forum
நம்ம கிரிஜாவும் ஐ.நா. சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நம்ம கிரிஜாவும் ஐ.நா. சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறா (/showthread.php?tid=847)



நம்ம கிரிஜாவும் ஐ.நா. சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறா - Shankarlaal - 02-15-2006

<img src='http://www.dinamalar.com/2006feb15/photos/in-26.JPG' border='0' alt='user posted image'>
நம்ம கிரிஜாவும் ஐ.நா.சபை சார்பில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்
ஐ.நா., சார்பில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார் பீகார் தலித் பெண்

பாட்னா: மது ஒழிப்புக்காக போராடி வரும் பீகாரைச் சேர்ந்த கிரிஜா தேவி, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடக்கும் பெண்கள் மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்.
என்ன தான் பெண்ணுரிமை கிடைத்து பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நின்றாலும் கூட ஆணாதிக்க சமுதாயத்தின் எஞ்சிய சில பகுதிகள் பெண்களை நசுக்கிய வண்ணம் உள்ளன. அதில் முக்கியமானது ஆண்களின் மதுப் பழக்கம். "குடி குடியைக் கெடுக்கும்' என்று கூறும் அரசாங்கமே அதனை விற்பனை செய்யும் கொடுமை நம் நாட்டில் உள்ளது.


ஒருவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் முதலில் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சமூக அந்தஸ்து அடிபடுகிறது. குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்பட்டு குடும்பமே சிதறி விடுகிறது.இத்தகைய கொடுமையான தீமையை எதிர்த்து கிரிஜா தேவி என்ற பெண்மணி பல ஆண்டுகளாக போராடி வருகிறார். 59 வயதான இவர் பீகாரிலுள்ள பிர்க்கியா சிபுலியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

தலித் வகுப்பைச் சேர்ந்த இவரின் கணவர் சிங்கேஷ்வர் மஞ்சி தினமும் குடித்துவிட்டு வந்து இவரை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னைப் போல "குடிமகன்' கணவன்களால் கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்கு ஆதரவாக இவர் குரல் கொடுத்து வருகிறார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு "முஷர் விகாஸ் மன்ச்' என்ற பெயரில் அமைப்பு ஒன்றைத் துவங்கி நடத்தி வருகிறார். "ஆக்ஷன் எய்ட்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஐ.நா., சபையின் ஒரு பிரிவான பெண்கள் மேம்பாடு மற்றும் பொருளாதார, சமூக விவகாரங்கள் அமைப்பின் 15வது மாநாடு வரும் 27ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.

இதில் கிரிஜா தேவி கலந்து கொண்டு பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேச்சின் மூலம் குடிகார கணவன்களால் கஷ்டப்படும் பெண்களுக்கு நல்வாழ்வு பிறந்தால் நல்லது தானே!


தினமலர்