Yarl Forum
துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: (/showthread.php?tid=861)



துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: - Shankarlaal - 02-14-2006

அமெரிக்க நிறுவனம் விளம்பரம்: துர்க்கை கையில் விஸ்கி பாட்டில்: இந்துக்கள் கடும் எதிர்ப்பு

லண்டன், பிப். 14-

அமெரிக்காவில் உள்ள மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' என்ற பெயரில் மதுவை தயா ரித்து வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்து வருகிறது.

கிரீஸ் நாட்டிலும் இந்த மது விற்கப்படுகிறது. அங்கு இவற்றை விற்கும் கடை மற்றும் மது பார்களில் இந்து கடவுளான துர்க்கை தனது அனைத்து கைகளிலும் `சதர்ன் காம்பெர்ட் விஸ்கி' பாட்டிலை வைத்து இருப்பது போல விளம்பரம் செய்யப் பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்கா- இங்கி லாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். `அந்த நிறுவனம் துர்க்கை விளம்பரங்களை வாபஸ் பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.


மாலைமலரிலிருந்து மடக்கியது