| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 388 online users. » 0 Member(s) | 385 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,252
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,030
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,419
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,120
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்! |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:14 PM - Forum: மருத்துவம்
- Replies (21)
|
 |
டென்ஷனால் ஏற்படும் தீராத வியாதிகள்!
இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம்.
நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது. ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது.
மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.
டென்ஷன் அதிகமாகும்போது நம்மால் சிறிய வேலையைக் கூட சரியாக செய்யமுடிவதில்லை. மனதை ரிலாக்ஸ் செய்ய மாத்திரைகளை விழுங்குகிறோம். இந்த மாத்திரைகள் தற்காலிகமாக நரம்புகளை தளர்த்தி அமைதியை தருகின்றன. இப்படி தொடர்ச்சியாக நரம்புகளை மருந்து கொண்டு பலவந்தமாக தளர்த்துவதால் நாளடைவில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு பலவகையான வியாதிகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படுகிறோம்.
நாம் அமைதியாக டென்ஷன் ஆகாமல் இருக்கிற ஒவ்வொரு வினாடியும் நம் வாழ்நாளில் ஒரு விநாடியை கூட்டிக் கொண்டே இருக்கிறது.
நம் மனதை உள் மனம், வெளிமனம், புதை மனம் என்று மூன்றாகப் பிரிக்கலாம். வெளிமனதின் உறுதியோடுதான் நாம் நம் அன்றாட அலுவலர்களைச் செய்கிறோம். வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே உள்மனம் ஏற்றுக் கொள்கிறது. உள் மனம் சக்தி வாய்ந்தது - ஆனால் அதற்கு சிந்திக்கத் தெரியாது. வெளிமனம் தனக்கிடும் கட்டளையை அப்படியே ஏற்று செயல்படுகிறது.
உள் மனதை ஒரு கம்ப்யூட்டரோடு ஒப்பிடலாம். சரியாக இயக்கினால் கம்ப்யூட்டர் எதை சாதிக்காது? அப்படித்தான் நம் உள்மனமும். வீணையை சரியாக மீட்டினால் நாதம் வரும். தவறாக மீட்டினால் அபஸ்வரம் தானே வரும்.
டாக்டர் வேதமாலிகா
|
|
|
| கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...! |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:12 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
கைகள் அளவுக்கு மிஞ்சி வம்பு பேசினால்...!
"செல்போன்களில் செய்திகளை (எஸ்.எம். எஸ்.,) அளவுக்கு மீறி அனுப்பினால், அது உடல் நலனைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
செல்போன்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவிர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ்) மூலம் செய்திகளை அனுப்புவர்.
இளைஞர்களிடம்எஸ். எம்.எஸ்., அனுப்பும் பழக்கம் அதிகம் உண்டு. பரிமாறிக் கொள்ள செய்தியே இல்லாவிட்டாலும் கூட, பழமொழிகள், கடி ஜோக்குகளை, வாழ்த்துக்களை அனுப்பி இளைஞர்கள் சந்தோஷம் அடைவது வழக்கம்.
அளவுக்கு அதிகமாக எஸ்.எம்.எஸ்.,களை அனுப்பினால் அது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக கை விரல்களைப் பாதிக்கும் என்று இத்தாலி நாட்டு டாக்டர்கள் எச்சரித்து உள்ளனர்.
செல்போனில் உள்ள எழுத்துக்களை தொடர்ந்து அழுத்தி கொண்டே இருந்தால், தசை நார்களில் வலி ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர். இத்தாலியில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் அதிக அளவில் இருக்கிறது.
37 சதவீத சிறுவர்கள் செல்போன் பித்துப்பிடித்து, எப்போதும் செல்போனும் காதுமாக அலைகின்றனர்.
வடக்கு இத்தாலியில் உள்ள சவோனா நகரை சேர்ந்த 13 வயது சிறுமி நாள்தோறும் குறைந்தது 100 முறை எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.
இதனால் அவள் கைவிரல்களில் வீக்கம் ஏற்பட்டது. இதற்காக அவள் ஒரு முடநீக்கு இயல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். மருந்து கொடுத்ததோடு கை விரல்களுக்கு ஓய்வு கொடுக்கும்படி டாக்டர்கள் கூறினர். இதைத் தொடர்ந்துதான் இத்தாலி நாட்டு டாக்டர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்து உள்ளனர்.
|
|
|
| நீல நிறக் குழந்தை |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:11 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>நீல நிறக் குழந்தை பிறப்பது எதனால்?</span>
குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் வரும்.
நோய்க்கான அறிகுறிகள்: இருதய உறுப்புக்களான வால்வுகள், தடுப்பு சுவர்களில் நோய் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறிகுறிகள் தெரியும். சில குழுந்தைகள் பிறக்கும்போதே நீல நிறமாக பிறக்கும். உடலில் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடு இருந்தால் இதுபோல பிரச்னை வரும்.
கார்பன்டை ஆக்சைடு அதிகமாகும்போது, ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும். சுவாச மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் வேகமாகச் செயல்பட்டு சாதாரணமாக மூச்சு விடும் நிலை அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18, 20 முறை இதயத் துடிப்பும் அதிகமாகி மூச்சிரைப்பு ஏற்படும். இதுபோன்ற குழந்தைகளுக்கு <உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்படலாம்.
குழந்தைக்கு செயற்கை பிராண வாயு கொடுத்து, "இன்டெரால்" என்ற மருந்தை கொடுக்க வேண்டும். ரத்தத்தில் இருக்கும் அமிலத்தன்மையை குறைக்க "பைகார்பனேட்' மருந்தை கொடுக்க வேண்டும். சுவாச மண்டலத்தின் அதிகப்படியான இயக் கத்தை கட்டுப்படுத்த "மார்பியா" தேவைப் படும். மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப் படாமல் அடிக் கடி மூச்சிரைப்பு, அதிகப்படியான இருதய துடிப்பு ஏற் பட்டால் அறுவை சிகிச்சை செய் வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒரு வயதிற்கு முன் அறுவை சிகிச்சை செய்தால், இரண்டு சதவீம்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி குழந் தைகள் பிறக்கின்றனர். இவர்களில் ஆயிரம் குழந்தைகள் "புளூ பேபி" யாக பிறக்கின்றனர். இதில் 50 சதவீத குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர்.
நீல நிற இருதய நோயிலும் பல வகைகள் உள் ளன. 85 சதவீத குழந்தைகளுக்கு வருவது "டெட்டாலஜி பேலோஸ்" என்ற வகை. அடுத்து, பல்மனரி அட்ரீசியா. இதில் இருதயத்தின் வலது கீழறையில் இருந்து அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மனரி வால்வு சுருங்கி, தமனியோடு ஒட்டிக் கொள்ளும். இது பிறவியிலேயே உருவாகும் குறை. இதனால் வலது கீழறையில் இருக்கும் அசுத்த ரத்தம் இரண்டு கீழறைக்கும் இடையில் இருக்கும் தடுப்பு சுவரில் ஏற்படும் ஓட்டை வழியாக இடது கீழறைக்கு வந்து விடும்.
மூன்றாவது வகை "டிரைகஸ் அட்ரீசியா." வலது மேலறைக்கும், கீழறைக்கும் இடையில் இருக்கும் வால்வுக்கு பெயர் டிரைகஸ் பி. இந்த வால்வு முழுமையாக உருவாகாமல் இருக்கும். இதனால் வலது மேலறையில் உள்ள அசுத்த ரத்தம் கீழறைக்கு வராது.
இதனால் வலது மேலறைக்கும் இடது மேலறைக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவரில் பெரிய ஓட்டை உண்டாகி, இந்த ஓட்டை மூலம் வலது மேலறை அசுத்த ரத்தம் இடது மேலறைக்கு வந்து அங்கிருந்து சுத்த ரத்தம் இருக்கும் இடது கீழறைக்கு வந்து (இதில் சுத்த ரத்த மட்டுமே இருக்க வேண்டும்) சுத்த ரத்தத்துடன் கலந்து, உடல் முழுவதும் பரவி ஊதா நிற தோற்றத்தை தருகிறது.
இதுதவிர, மிக சிக்கலான பிறவி இருதய நோய்களான டிரான்ஸ்பொசிஷன் டீ மற்றும் எல் ஆகிய பிறவி நீலநிற இருதய நோய்கள் உண்டாகின்றன. இதில் இருதய உறுப்புகளான தமனி, இருதய அறைகள் போன்றவை இயற்கையாக இருக்கும் இடத்திலிருந்து மாறி, வேறு இடங் களில் இருக்கும்.
சமயங்களில் இடது புறம் இருக்க வேண்டிய இருதயம் வலது புறமாக இருப்பதும் உண்டு.
இடது கீழறை இல்லாமல் இருப்பது, மகாதமனி சிறுத்துப்போவது, மகாதமனியே இல்லாமல் இருப்பது போன்ற குறைகளும் ஏற்படும். ஈ.சி.ஜி.,எக்ஸ்ரே, எக்கோ கார்டியோகிராம் என்ற நவீன ஒலி அலை வரைபடம் போன்ற பரிசோதனைகள் மூலம் இந்த குறைபாடுகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த பரிசோதனைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு பிறவியிலேயே வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளால் நீலநிறமற்ற இருதய நோய்களான மேலறை தடுப்பு: சுவரில் ஓட்டை ஏற்படுனது, அதேபோல கீழறை சுவர் களில் ஓட்டை ஏற்படுவது உட் பட பல பிறவி இருதய நோய் கள் குழந்தைகளுக்கு வருகிறது. ஒரு வயதில் இருந்து 12 வயதிற்குள் நோய் தாக்கிய 80 சதவீதம் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டுபிடித்துவிட முடியும். சிலருக்கு 30, 40 வயது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து அதன்பிறகு தெரியும். பச்சிளங் குழந்தைகள் பால் சரியாக குடிக்காமல் போனால் அல்லது பால் குடிக்கும்போது அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக புரை ஏறினால், மூக்கில் வழிந்தால் உடனடியாக கவனிக்க வேண்டும். இது பிறவி இருதய நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனிக்காமல் விட்டால் நுரையீர<லுக்குள் பால் சென்று நிமோனியா போன்ற வியாதிகளை உண்டாக்கும்.
வால்வில் ஏதாவது பிரச்னை இருந்தால், படபடப்பு, மயக்கம் அடிக்கடி சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தெரியும்.
எதுவாக இருந்தாலும் குழந்தையின் உடல் மாற்றங்களை கவனத்துடன் பார்த்து, சந்தேகம் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்டி ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.
-பேராசிரியர் அர்த்தநாரி
|
|
|
| இதயவியாதிகள் |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:09 PM - Forum: மருத்துவம்
- Replies (3)
|
 |
இருப்பது தனித்தென்றால்
இதயவியாதிகள் அதிகமா? ஏஜேஜி-
62 வயதை சராசரியாகக் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக 3267 பேரின் உடல் நிலை பற்றி ஆய்வொன்று நடாத்தியபோது, சில சுவாரஸ்ஸியமான, அதே சமயம் திடுக்கிட வைக்கும் தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், சமூகத்தோடு கலந்து பழக விரும்பாது, தனித்து வாழ்பவர்களுக்கு, இருதய வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கின்றார்கள்.
தனித்து இருப்பது அவ்வளவு சங்கடமான விடயமா?
தனித்து வாழ்பவர்கள், உடல்ரீதியாகக் குறைவான அசைவுகளைக் கொண்டவர்களாகவும், அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருப்பதுண்டு. இது இருதய வியாதிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள். பலருடனும் பழகி, சமூக சேவைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்களை விட, தனித்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். இது இவர்களுக்கு இருதயம் சம்பந்தமான கோளாறுகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது என்று இவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
அதிர்ச்சியாக இருக்கிறதா? சமூகத்தோடு ஒட்டி உறவாடுங்கள். இதுவே அருமருந்தாகி, இருதய வியாதி புறமுதுகு காட்டி ஓடிவிடலாம்.
|
|
|
| மூளையைத் தூங்க விடாதீர்கள்! |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:08 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
மூளையைத் தூங்க விடாதீர்கள்! ஜி.வி.ராவ்-
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3, புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.
அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
மங்கையர் மலர்-
|
|
|
| மனிதனின் 6-வது அறிவு |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:07 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
மனிதனின் 6-வது அறிவு
மனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது.
சில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்டளை பிறப்பித்து இயக்குகிறது.
எதிர்பாராத விபத்து, முக்கியமான முடிவுகளை எடுப்பது, தவறுகளை உணருதல் என பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இந்த குறிப்பிட்ட ஏசிசி பகுதியில் இயக்கம் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரு ஆபத்தில் இருந்து மனிதர்களை தப்பிக்க வைப்பதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும் இந்த ஏ.சி.சி.யால் கணப் பொழுதில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்னது நடக்கிறது என்பதற்கு முன்பாகவே ஏ.சி.சி. உhpய உத்தரவுகளை பிறப்பித்து விடுவது குறிப்பிடத்தக்கது.
சிக்கலான விஷயங்களில் முடிவு எடுப்பது, சவாலான காரியங்களை செய்வது ஆகிய முக்கியமான கட்டங்களில் ஏ.சி.சி.யின் செயல்பாடு பற்றி அண்மைக் காலமாக மும்முரமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.
|
|
|
| தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா? |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:06 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
தன்னம்பிக்கை- மகிழ்ச்சி வளரணுமா?
மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக முகம் உள்ளது. சோகம், மகிழ்ச்சி, விரக்தி, கோபம், அருவருப்பு என பல வகையான உணர்வுகளை ஒருவன் பூட்டிக் கொள்ள நினைத்தாலும் அது முடியாது. இப்படிப்பட்ட முகத்துக்கு அழகு தருவது எது? சிரிப்பு தான்.
சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோவில் போன்றது என்று சொல்லலாம்.
கள்ள கபடமற்ற குழந்தைகள் சிரிப்பதை பார்த்தால் சகல சோகங்களும் ஓடி விடும். அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அதுபோல சிலர் எப்போதும் சிரித்த முகத்துடன் பொலிவுடன் காணப்படுவர். இத்தகைய நபர்களிடம் பழகுவதற்கும் அனைவரும் விரும்புவர். சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது.
சிரிப்பை பொறுத்தவரை பல வகைகள் உண்டு. இருப்பினும் வாய் விட்டு, பல் ஈறுகள் தெரிய சிரிப்பது உடம்புக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல வாய் விட்டு சிரிக்க வேண்டுமென்றால் பற்கள் முத்துப் போல இருக்க வேண்டும். பல் ஈறுகள் தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் காரை படிந்த மஞ்சள் நிறம், ஒன்றிரண்டு பற்கள் காணாமல் போதல், பற்கள் அரித்து காணப்படுவது, பற்குழி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களால் இதுபோல சிரிக்க முடியுமா? அவர்கள் உண்மையிலேயே சிரிக்க வேண்டும் என்றும் நினைத்தாலும், பல் பிரச்சினைகள் நினைத்து வாயை மூடிக் கொள்வார்கள். அல்லது நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள். இதுபோன்ற நமுட்டு சிரிப்பால் ஒரு பயனும் இல்லை.
வாய் விட்டு சிரிக்கும் போது முகத்தில் உள்ள தசைகள் நன்றாக இயக்கப்படுவதால் முகம் பொலிவடைகிறது. தோற்றத்தில் நன்றhக இருப்பவர்கள், தங்களைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள். இதனால் சமுதாயத்தில் உள்ளவர்களிடம சகஜமாக பழக முடிகிறது. தன்னம்பிக்கையுடன் இருப்பதால் வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைகிறார்கள். ஆனால் வாய் விட்டு சிரிக்காதவர்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால், சமுதாயத்துடன் இணைந்து பழகுவதில் பின்தங்கி இருப்பார்கள். ஒருவேளை அவர்களுடைய பல் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டால், எல்லாம் நார்மலாகி விடும். தன்னம்பிக்கை அதிகரித்து, நிலையும் உயரும்.
பற் குறைபாடுகளை சீர் செய்வதால் 2 லாபம் கிடைக்கிறது. ஒன்று, ஒவ்வொரு வரும் தங்களைப் பற்றி நல்ல விதமாக உணர்வதால், தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னொன்று ஆபத்தான பல் நோய்களும் அகற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒருவருக்கு பற்கள் அதிகமான இடைவெளி விட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்நிலையில் உணவு உண்ட பிறகு, உணவு துணுக்குகள் இந்த இடைவெளிகளில் போய் தங்கும். அப்போது என்னதான் பிரஷ்ஷை வைத்து தேய்த்தாலும் உணவுத் துகள் வெளி வராது. இந்நிலையில் என்ன ஆகும்? நாள் போக்கில் பாக்டீரிய கிருமிகள் குடிபுகுந்து பற்களை அழித்து விடும். இதுதவிர வாயில் துர்நாற்றம் உண்டாவதால், அடுத்தவருடன் பேச தயங்குவர்.
வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்க முதலில் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய் விட்டு சிரியுங்கள்.
|
|
|
| கருக் கலைப்பு |
|
Posted by: ஊமை - 02-10-2006, 11:00 PM - Forum: மருத்துவம்
- Replies (5)
|
 |
கருக் கலைப்பு செய்ய கணவரிடம் "பர்மிஷன்" வாங்க வேண்டுமா?
கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா?
லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி இது குற்றம் என்றும், மருத்துவ ரீதியான கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ், தன்னிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். ஆனால் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
"மெடிக்கல் டெர்மினேஷன் ஆப் பிரெக்னன்சசி' சட்டத்தின் பிரிவு 3 (4)ல், "கருவுற்ற தாயின் ஒப்புதல் இன்றி, கருக்கலைப்பு செய்யக் கூடாது' என்று கூறப்பட்டுள்ளது. இதில் கணவரின் கருத்து பெறப்பட வேண்டும் என்பது குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. ""தாய் வயிற்றில் உள்ள கரு, தாய் உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தக் கருவின் முழு உரிமை தாய்க்கு உள்ளது' என்று சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவிக்கிறார். எனவே கருவைக் கலைப்பதற்கும் தாய்க்கு முழு உரிமை உண்டு என்பது சட்டரீதியாக செல்லும். ஆனால், கருவைக் கலைக்க சரியான காரணங்கள் சொல்லப்பட வேண்டும். அவை என்னென்ன என்பதை இதே சட்டத்தின் பிரிவு 3(2) சொல்கிறது. அவை: "பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் ஒருவரால் மட்டுமே கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யும்போதும் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். (1) வயிற்றில் உள்ள கரு 12 வார வளர்ச் சிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
(2) "வயிற்றில் கரு வளர்வது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்; தாய்க்கு உடல் ரீதியான அல்லது மன ரீதியான கடும் காயங்களை ஏற்படுத் தும்; கற்பழிப்பு மூலம் உருவாகிய கரு; கரு வளர்ந்து குழந்தை பிறந்தால், அது உடல்ரீதியாக அல்லது மனரீதியாக ஊனமடைந்ததாக இருக்கும்; மணமான தம்பதியர் கருத்தடைக்காக பயன்படுத்திய வழிமுறைகள் தோல்வியடைந்த நிலை; தாயின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற் படும்' என்று, பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் இருவர் கருதினால், கருக் கலைப்பு செய்யப்படலாம்.
எப்படியும், 20 வாரங்கள் வளர்ந்த கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம்.
இச்சட்டத்தில், தாய்க்கு "கிரேவ் இஞ்ஜுரி' ஏற்பட்டால் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எந்த வகையான காயத்தை "கிரேவ் இஞ்ஜுரி' என்று எடுத்துக் கொள்வது என்பது விளக்கப் படவில்லை என்பது அவர்கள் கருத்து.
ஆனால், இந்த வழக்குத் தொடுத்தவர் இந்தச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பெண் எப்போது கருவுறுகிறாளோ அப்போதே அக்கருவின் தந்தைக்கு கரு மீது உரிமை பிறந்து விடுகிறது. கருக்கலைப்பு என்பது சட்டம் 21 (வாழ்வதற்கு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை)யை மீறுவதாக அமைகிறது என்றார். மேலும், தனது மனைவி கருக் கலைப்பு செய்யக் கூடாது என்பதை வலியுறுத்துமாறு மருத்துவமனைகள், அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து சட்ட வல்லுனர்கள் கூறும்போது, "கணவனின் முன் அனுமதி இன்றி கருக்கலைப்பு செய்வது சட்டரீதியாக சரி என்று கூறினாலும், அப்படிச் செய்தால், அவர்களிடையே விவாகரத்து ஏற்பட இதுவே வழி வகுத்து விடும். ஆனால் குழந்தை பிறக்கும் வரை, தாயின் வயிற்றில் உள்ள கரு மீது கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. இது மிக வினோதமான விஷயம் தான். தாயின் உறுப்புகளுள் ஒன்றாகக் கரு கருதப்பட்டாலும், கண் இமை போன்றோ, நகங்கள் போன்ற இதைக் கருத முடியாது. கரு உருவாக, கணவன் மிக முக்கியமான காரணகர்த்தாவாக அமைவதால், சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்' என்கின்றனர்.
சட்ட வல்லுனர்கள் இப்படிக் கருதினாலும், லக்னோ ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் இறுதியில் தோற்றுப் போனார். கருக்கலைப்பு செய்து கொள்ள கணவனிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் பெண்ணுக்கு இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது.
|
|
|
| உங்கள் வீட்டில் நீங்கள் எப்படி? |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:58 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது...' என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.
கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.
நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற' வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.
சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்' வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.
உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்... ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.
|
|
|
|