Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதயவியாதிகள்
#1
இருப்பது தனித்தென்றால்
இதயவியாதிகள் அதிகமா? ஏஜேஜி-

62 வயதை சராசரியாகக் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக 3267 பேரின் உடல் நிலை பற்றி ஆய்வொன்று நடாத்தியபோது, சில சுவாரஸ்ஸியமான, அதே சமயம் திடுக்கிட வைக்கும் தகவல்களும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், சமூகத்தோடு கலந்து பழக விரும்பாது, தனித்து வாழ்பவர்களுக்கு, இருதய வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறிந்திருக்கின்றார்கள்.
தனித்து இருப்பது அவ்வளவு சங்கடமான விடயமா?

தனித்து வாழ்பவர்கள், உடல்ரீதியாகக் குறைவான அசைவுகளைக் கொண்டவர்களாகவும், அதிகமாகப் புகைப்பவர்களாகவும் இருப்பதுண்டு. இது இருதய வியாதிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது என்கிறார்கள் மருத்துவர்கள். பலருடனும் பழகி, சமூக சேவைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுபவர்களை விட, தனித்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகம். இது இவர்களுக்கு இருதயம் சம்பந்தமான கோளாறுகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது என்று இவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
அதிர்ச்சியாக இருக்கிறதா? சமூகத்தோடு ஒட்டி உறவாடுங்கள். இதுவே அருமருந்தாகி, இருதய வியாதி புறமுதுகு காட்டி ஓடிவிடலாம்.
Reply
#2
என்ன ஊமையாரே.. இங்காவது இணைப்பு சிக்கீட்டுதா..?? மருத்துவப்பகுதி களைகட்டியிருக்கு :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ஆமாம் சகோதரி MP3 பாடல்கள் தேடிய போது சிக்கிய செய்திகளை உடனுக்கு உடன் வெட்டி ஒட்டிவிட்டேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#4
முதலில் 62 வயது வரை இருப்பாமோ தெரியாது. இப்போதே சமூக சேவை செய்வது பிற்காலத்துக்கு மட்டும் அல்ல எக்காலத்துக்கும் சிறந்தது தான்.
தகவலுக்கு நன்று ஊமை.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)