Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 813 online users.
» 0 Member(s) | 810 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,253
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,613
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,032
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,433
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,143
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  வணக்கம் நண்பர்களே!!!!!
Posted by: iniyaval - 02-10-2006, 07:18 PM - Forum: அறிமுகம் - Replies (45)

<b>வணக்கம் நண்பர்களே!!!!!

எல்லோரும் நலம்தானே??

இவ்வளவுகாலமும் யாழ் வாசகியாகிய இனியவள் இவள்
இன்று உங்களுடன் ஒருத்தியாவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறாள்.
இவளையும் உங்கள் நண்பியாக எற்றுக்கொள்வீர்கள் தானே?

என்றும் அன்புடன்
உங்கள் இனியவள்.</b>

Print this item

  வணக்கம்
Posted by: kannan_nokia - 02-10-2006, 04:34 PM - Forum: அறிமுகம் - Replies (21)

என்னையும் உங்களுடன் இனைப்பிர்களா

Print this item

  ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது
Posted by: நர்மதா - 02-10-2006, 12:32 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஜெனீவாவில் பேச்சு ஸ்ரீலங்கா அரசுக்கு தற்கொலைக்கு ஈடானது; - புலிகளுக்கு அதிர்ஷ்டம்

சமாதானப் பேச்சுகளை நடத்துவதற்குரிய நகரமாக சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகர் தெரிந்தெடுக்கப்பட்டது விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆசியாவைச் சேர்ந்த நாடொன்றில் புலிகள் அமைப்புடனான சமாதானப் பேச்சுகளை நடத்தும் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா அரசு முதலில் கொண்டிருந்தது. இந்த நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டே சமாதான நடவடிக்கைகளுக்கான சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுகளை பிரிட்டனிலோ ஜப்பானிலோ அல்லது நோர்வேயிலோ நடத்துவதற்குச் சம்மதித்திருந்தனர். ஆயினும், தற்போது ஜெனீவாவில் பேச்சுகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசு இணங்கியிருப்பது புலிகள் அமைப்பினருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு கிடைத்த அதிர்ஷ்டம் போன்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையும் மற்றும் பல சர்வதேச அமைப்புகளும் அமைந்திருப்பதும் பல்வேறு சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் செயற்பட்டு வருவதுமான முக்கிய நகர் ஒன்றில் ஸ்ரீலங்கா தமிழர்களின் பிரச்சினைகளை வெளியிடுவதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது ஸ்ரீலங்கா அரசு செய்துள்ள தற்கொலைக்கு ஈடானதும் மீண்டும் சரி செய்ய முடியாததுமான பாரிய தவறாகும். ஜெனீவாவை சமாதானப் பேச்சுகளை நடத்தத் தெரிவு செய்ததானது ஒஸ்லோ நகரில் சமாதானப் பேச்சுகளை நடத்தியதைக் காட்டிலும் பயங்கரமானதாகவே இருக்கப் போகிறது. இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையுடன் விடுதலைப்புலிகள் அமைப்பு நேரடியாகத் தொடர்புகளை வைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கத்துடனும் உத்தியோகபுூர்வமாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சுூழ்நிலை உண்டாகும். புலிகள் அமைப்பினரின் முக்கிய எதிர்பார்ப்பும் இதுவேயாகும்.


கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒஸ்லோவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுகளுக்கான மாநாட்டில் புலிகள் அமைப்பின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி பச்சைப் பொய் மூட்டையை அவிழ்த்திருந்தார். ஸ்ரீலங்கா அரசின் சமாதான பிரதிநிதிகள் சமாதானத்தை உத்தேசித்து பாலசிங்கத்தின் பேச்சுகளை பொறுத்துக் கொண்டனர். ஆயினும் இதன் விளைவாக ஸ்ரீலங்கா அரசைப் பற்றியும் சிங்களப் பெரும்பான்மை மக்கள் பற்றியும் சர்வதேச ரீதியில் தவறான அபிப்பிராயமே ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான சர்வதேச பாதிப்பு ஜெனீவா மூலமாகவும் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா அரசு இடம்கொடுத்திருப்பது மேலும் பயங்கரமானதாகும்.


-லங்காதீப விமர்சனப் பகுதி: 05.02.2006-

Print this item

  துரோகத்தின் பரிசு.
Posted by: நர்மதா - 02-10-2006, 12:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பிரஞ்சுக் காலனித்துவப் பிடியிலிருந்து தம்மை விடுவிக்கத் தனது இறுதிப் போராட்டத்தை அல்ஜீரிய "தேசிய விடுதலை முன்ணணி" முடுக்கிவிட்டிருந்த காலகட்டமது. பல நூறாயிரம் படையினரைக் கொண்ட பிரஞ்சு இராணுவத்தின் எல்லை கடந்த கொடூரங்களையும் மீறி அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி உக்கிரமான தாக்குதல்களை பிரஞ்சு இராணுவத்தின் படைப்பிரிவுகள் மீது தொடுத்துக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்தியக் காலணித்துவச் சக்தியிடமிருந்து விடுபட்டு தனது சுதந்திரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அல்ஜீரியர்கள் முன்னெடுத்த சுதந்திரப் போராட்டம் மிகவும் கடினமானதாகவும் பாரிய இழப்புகளைக் கொண்டதாகவும் நகர்ந்துகொண்டிருந்தது.

ஒரு தேசத்தின் விடுதலைப்போராளிகளை அடக்கி ஒடுக்கி நசுக்குவதற்கு அநேகமான அடக்குமுறையாளர்கள் அத்தேசத்தின் பிளவுகளைப்பயன்படுத்தி அத்தேசத்தின் இனத்தவர்கள் மத்தியிலுள்ள பலவீன உள்ளங்கொண்டவர்களையும், சுயநலத்திற்காக எதையும் செய்யத்தயங்காதவர்களையும் இனங்கண்டு அவர்களைத் தம்முடன் இணைத்து தம்மவர்களுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுத்துவது வரலாறு கண்ட வழமை.

அல்ஜீரியர்களுக்கெதிராக அல்ஜீரியர்களையே ஆயுதம் தூக்க வைப்பதில் பிரஞ்சு ஏகாதிபத்தியம் சிறிது சிறிதாக வெற்றிகண்டது.
இவ்வகையில், அல்ஜீரியர்களில் பலவீனம் கொண்டவர்களை, அப்பாவிகளை, சுயநலத்திற்காகத் தேசமறுப்புச் செய்தவர்களையெல்லாம் ஒருங்கு கூட்டி அவர்களுக்கு பயிற்சி வழங்கி, ஆயுதங்களும் வழங்கி பிரஞ்சு இராணுவம் அவர்களை தனது உதவியாளர்களாக உருவாக்கிக் கொண்டது. தமது பிரஞ்சு எஜமானர்களின் கட்டளைகளை ஏற்று தம்மக்களுக்கெதிராகவே இந்த அல்ஜீரியர்கள்அறியாமையாலும் சுயநலத்தாலும் போராட்டத்தில் குதித்தார்கள். பிரஞ்சு இராணவத்தினரால் வெறியூட்டப்பட்ட இவர்கள் எண்ணுக்கணக்கற்ற தொகையில் அல்ஜீரியர்களையே கொன்றொழித்தார்கள். கிராமங்கள் சிலவற்றை முற்று முழுதாக அழித்த பெருமையும் இவர்களுக்குண்டு.

"இயக்கம்" எனும் பெயரில் (அரபு மொழியில் ஹார்க்கா) இவ்வாறான ஒரு துணைப் படையை உருவாக்கி அல்ஜீரியர்களை இலகுவாக அடக்குவதற்குப் பிரஞ்சு இராணுவம் அவர்களைப் பயன்படுத்தி வந்தது. இவர்கள் மூன்று பிரிவுகளாக சேவையிலீடுபட்டிருந்தார்கள். தமது பிரஞ்சு எஜமானர்களுக்கு மிகவும் விசுவாசமாக உழைத்தார்கள் இந்த "இயக்கக்காரர்கள்". அரபு மொழியில் இன்றும் இவர்கள் "ஹார்க்கிகள்" என்றே அழைக்கப்படுகிறார்கள். தமது நாட்டவருக்கெதிராகப் போராடிய இவர்களில் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் போர்காலத்தின்போதே இறந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள்.

1962 ம் ஆண்டு மார்ச் மாதம் பிரஞ்சுக் குடியரசின் அன்றைய ஜனாதிபதியான து கோள் அல்ஜீரியத் "தேசிய விடுதலை முன்னணியை" அனைத்து அல்ஜீரிய மக்களினதும் பிரதிநிதிகளாக ஏற்று அவர்களின் கையில் அல்ஜீரிய ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத் தீர்மானித்து அவசர அவசரமாக "எவியன் ஒப்பந்தம்" கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் பிரஞ்சுப்படைகளுக்கும் அல்ஜீரியத் தேசிய விடுதலை இராணுவத்திற்குமான போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பிரஞ்சு இராணும் அல்ஜீரியாவை விட்டுப்புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில் அண்ணளவாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான "இயக்கக்காரர்கள்" (அல்லது ஹார்க்கிகள்) பிரஞ்சு இராணுவத்துடன் ஒத்துழைப்புச் செய்து கொண்டிருந்தார்கள்.

எவியன் ஒப்பந்தத்தின் இரண்டாவது அதிகாரம் எதிர்காலத்தில் அல்ஜீரியமக்களின் குடியுரிமைகள்பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருந்தது. நூற்று முப்பத்தியிரண்டு வருட காலங்களாக காலணியாதிக்கத்தின்போது அல்ஜீரியாவில் குடியேறி அந்நாட்டிலேயே வேரூன்றி விட்ட பிரஞ்சுப்பிரஜைகளின் எதிர்காலம் சம்பந்தமான தீர்மானங்களை இவ்வொப்பந்தங்கள் கொண்டிருந்தபோதும், பிரஞ்சுக்காரர்களுடன் ஒத்துழைத்து அல்ஜீரிய மக்களின் அடங்காத வெறுப்பைப் பெற்றிருந்த "ஹார்க்கிகளின்" சார்பில் எதுவித பிரத்தியேகப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. அவர்களை முற்றுமுழுதாகப் பிரஞ்சு அரசு அலட்சியம் செய்தது. அவர்களைப் பொருட்டாகக் கூட பிரஞ்சு அரசாங்கம் மதிக்கவி;ல்லை. ஆயுதம் களைந்து அவர்கள் எவ்விதப்பாதுகாப்பும் இன்றிக் கைவிடப்பட்டார்கள்.

பிரஞ்சு அரசாங்கம் தமது ஒத்துழைப்புப் படைகளைச் சேர்ந்த அல்ஜீரியர்களை பிரான்சுக்கு அழைத்துவரவேண்டும் எனும் திட்டத்தை மறுத்தது.
சுயவிருப்பிலோ அல்லது சுயமுயற்சியிலோ இப்படையினர் எவரையும் பிரான்சுக்குள் அழைத்து வரக்கூடாதென அனைத்து பிரஞ்சுப்படை உயர்மட்டக் கட்டளை அதிகாரிகளுக்கும் இறுக்கமாகக் கட்டளையிட்டது.
இவ்வாறக தங்களுடன் ஒத்துழைத்த அல்ஜீரியத் துணைப்படைகளுக்கு ஆபத்து நிகழும் நிலையில் பிரஞ்சுப்படைகள் எக்காரணங்கொண்டும் அவர்களுக்கு உதவியளிக்கும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என பிரஞ்சு அரசாங்கம் ஆணையிட்டது.
தமது இராணுவ முகாம்களை விட்டு வெளியேறிய பிரஞ்சுக்காரர்களின் இராணுவ லொறிகளின் பின்னால் ஓடித்தாவி ஏறி எங்களையும் உங்களுடன் கொண்டு செல்லுங்கள் என அலறிய ஹார்க்கிகளுக்ளின் கையில் துவக்குப்பிடியால் இடித்து அவர்களை கீழே விழுத்தி விட்டார்கள் தமது மேலதிகாரிகளின் உத்தரவுக்குப் பணிந்த பிரஞ்சுச் சிபபாய்கள்.

தமது நாட்டு மக்களின் தேசிய விடுதலைப் போராட்டதில் அந்நிய எதிரிகளுடன் கூட்டிணைந்து போராட்டத்தைப் பின்னடையவைத்து, தமது மக்கள் எதிரிகளினால் அடக்குமுறைக்கும் சித்திரவதைக்கும் உட்படுவதற்கு உடந்தையாயிருந்தவர்களை, தமது மக்களையே எவ்வித இரக்கமுமின்றிக் கொன்றொழித்தவர்களை அவர்களைப் பயன்படுத்தியவர்கள் கூட மதிக்கவில்லை.

அல்ஜீரியத் தேசிய விடுதலை முன்ணணி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்து பிரஞ்சு அரசாங்கம் ஹார்க்கிகளைக் கைவிட்டுவிட்டது. அல்ஜீரியாவில் வசித்த தமது ஐரோப்பியப் பிரஜைகளை மீண்டும் நாட்டுக்கு வருவித்து அவர்களுக்குப் புனர் வாழ்வளிப்பதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்த பிரஞ்சு நிர்வாக உயர்பீடம் தமது முன்னைய ஒத்துழைப்பாளர்களுக்குப் பாதுகாப்பு எதுவும் இல்லையென்பதை நன்குணர்ந்திருந்தும் அவர்களை அடியோடு கைவி;ட்டுவிட்டது.

ஈடிணையற்ற உயிர்களைப் பலி கொடுத்து தமது தேச ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராகப் போராடி அவர்களைப் பின்வாங்கவைத்திருந்த அல்ஜீரியத் தேசிய முன்ணணியினதும் அவர்களது இராணுவமான அல்ஜீரியத் தேசிய விடுதலை இராணுவத்தினதும் நியாயமான சினத்தின் முன் கைவிடப்பபட்டார்கள் ஹார்க்கிகள்.

இது வரையும் காட்டிக்கொடுத்து, கொன்று, சித்திரவதைசெய்து எதிரிகளுடன் ஒத்துழைத்துத் துரோகம் இழைத்தவர்கள் தமது துரோகங்களுக்குப் பரிசாக அல்ஜீரியர்களின் நியாயமாக கோபக்கனல்களின் முன் ஆயுதங்கள் களையப்பட்டுக் கைவிடப்பட்டார்கள்.
இதைத்தொடரந்து 1962ம் ஆண்டு முடிவடைவதற்குமுன் அல்ஜீரிய மக்களும் அவர்களது இராணுவமும் கருணையிழந்து, பொறுமையிழந்து கடூரமான முறையில் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட ஹார்க்கிகளையும், அவர்கள் குடும்பங்களையும் கொடூரமாகக் கொண்றொழித்தார்கள்.

பிரஞ்சு அரசின் காலணித்துவப் போக்கிற்கு எதிராகவும் அல்ஜீரிய விடுதலை முன்ணணின் சார்பாகவும் குரலெழுப்பிய உலகறிந்த தத்துஞானியும் மாக்ஸிஸ்ட்டுமான சார்த்தர் கூட ஹார்க்கிகளின் படுகொலைக்கெதிராக எவ்விதக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. மூன்றாவது மண்டல நாடுகளின் விடுதலையை முன்வைத்துப் போராடிய அல்ஜீரிய போராட்ட ஆதரவாளரான பிரான்ஸ் பனோன் கூட இவ்விடயம்பற்றி எதுமே கூறவில்லை.

பிரஞ்சு அரசின் மனப்பூர்வமற்ற இறுதிநேர அனுசரணையுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையான ஹார்க்கிகள் பிரான்சுக்குள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக நிறுவபட்ட முகாம்களுள் இருத்தப்பட்டார்கள். மொத்தத்தில் அல்ஜீரியாவிலிருந்து 25 ஆயிரம் ஹார்க்கிகள் குடும்பங்கள் பிரான்சிற்கு அரைமனதுடன் காப்பாற்றிக் கொண்டுவரப்பட்டார்கள்.

பிரஞ்சுச் சமுகம் அவர்களை மதிக்கவில்லை என்பது மட்டுமல்லாது அவர்களை அவமதிக்கவும் செய்தது. அவர்களுக்கான முகாம்கள் குடிமனைகள் உள்ள இடங்களிலிருந்து தொலைவான இடங்களிலேயே அமைக்கப்பட்டன. ஒரு பகுதியினர் காடுகளுள்ளும் மறுபகுதியினர் நிலக்கரிச் சுரங்கங்களுள்ளும் வேலைக்கு அனுப்பப்பட்டார்கள்.

"இந்த ஹார்க்கிகளிலிருந்து எம்மை விடுவிப்பதற்கு, நகரசபை என்ன திட்டத்தை வைத்திருக்கிறது ?" என எழுதியது ஒரு கம்யூனிஸ்ட் பத்திரிகை. தமது நாட்டின் சுதந்திரப்போராட்டத்தை மறுத்தவர்களை பிரஞ்சு இடதுசாரிகள் கணக்கிலெடுக்கவில்லை என்பது மட்டுமல்லாது அவர்களுக்கெதிரான போக்கைக் கடைப்பிடித்தார்கள் என்பதும் என்பதும் உண்மையாகும்.

பிரஞ்சுக் கம்யூனிசக் கட்சி சார்பான பலம்மிக்க தொழிற்சங்கமான சி.ஜீ.ரி, தொழிற்சாலைகளில் ஹார்க்கிகளை வேலைக்குச் சேர்ப்பதற்கு நீண்டகாலமாக எதிர்ப்புத்தெரிவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று வரையும் அல்ஜீரியாவில் துரோகிகள் எனும் சொல்லால் அழைக்கப்படும் ஹார்க்கிகள் அந்நாட்டில் வேண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் அல்ஜீரியாவிற்குப் பயணிக்கும் உரிமையுமற்றவர்கள். பிரான்ஸில் கூட இன்றுவரையும் அவர்களின் நிலை தற்காலிகமானதாகத்தான் உள்ளது. பிரான்ஸில் இன்று வாழும் ஹார்க்கிகளினதும் அவர்களினது வழித்தோன்றல்களினதும் எண்ணிக்கை அண்ணளவாக நான்கு இலட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவிற்கும், பிரான்சுக்குமான பொருளாதார ராஜதந்திர உறவுகள் சுமூகமானவை. இரண்டு சுதந்திர நாடுகளுக்கிடையில் இருக்கக்கூடிய பல ஒப்பந்தங்கள் இவ்விரண்டு நாடுகளுக்குமிடையில் இருக்கின்றன. பிரஞ்சுக்காரர்கள் அல்ஜீரியாவிற்குப் பயணிக்கமுடியும். அல்ஜீரியர்கள் பலர் பிரான்சுக்குப் பயணிக்கிறார்கள். ஆனால் ஹார்க்கிகள் தம் நாட்டில்காலடி எடுத்து வைக்கமுடியாத நிலையிலுள்ளார்கள். பிரான்ஸில் அவர்கள் அந்நியர்கள். தம் தேசத்திற்குத் துரோகம் விளைவித்துவிட்டுத் தப்பியோடிவந்தவர்கள். அல்ஜீரியாவில் அவர்கள் துரோகிகள். அந்த நாட்டு மண்ணில் காலடி எடுத்து வைப்பதற்கு எவ்வித அருகதையும் அற்றவர்கள்.

அண்மையில் தற்போதைய அல்ஜீரிய தேசத் தலைவர் உத்தியோக பூர்வமாக பிரான்சுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அவரிடம் "ஹார்க்கிகளுக்கு" அல்ஜீரியாவிற்குப் மீண்டும் பயணிக்கும் உரிமை வழங்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அவர் அதற்கான காலம் இன்னமும் வரவில்லை என்றும் இரண்டாவது உலகப்போரின் போது தமது தேசத்தை ஆக்கிரமித்திருந்த நாசிகளுடன் ஒத்துழைத்தவர்களைப் பற்றி பிரஞ்சுக்காரர்கள் என்ன கருதுகிறார்களோ அப்படியொரு கருத்தையே அல்ஜீரியர்களும் "ஹார்க்கிகள்" விடயத்தில் கொண்டுள்ளார்கள் என்றும் கூறிவைத்தார்.

ஹார்க்கிகளை அல்ஜீரியர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். சிலவேளை அவர்களின் வழித்தோன்றல்கள் மன்னிக்கப்படக்கூடும். ஆனால் ஹார்க்கிகள் தமது தேசத்திற்கு இழைத்த துரோகத்தை வரலாறும் அல்ஜீரிய மக்களும் எக்காரணம் கொண்டும் மறக்கமாட்டார்கள்.

எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை



இது போலத்தான் இலங்கையில் இருக்கும் ஒட்டுப்படைகளுக்கும் நடக்கும் இது வெகுதுாரத்தில் இல்லை

Print this item

  வணக்கம் நான் புதிய உறுப்பினன்.
Posted by: I.V.Sasi - 02-10-2006, 11:56 AM - Forum: அறிமுகம் - Replies (37)

வணக்கம் என்னையும் உங்களுடன் இனைப்பிர்களா

நன்றி
I.V.Sasi

Print this item

  டொலருக்காக சமாதானம் பேசினால் அது பேராபத்திலேயே முடியும்
Posted by: நர்மதா - 02-10-2006, 11:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

டொலருக்காக சமாதானம் பேசினால் அது பேராபத்திலேயே முடியும் - ஐ.தே.க. எச்சரிக்கை


சமாதான நடவடிக்கைகளுக்கச் செல்லும் முன்னர் அது பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளது. வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர் மோகத்தில் சமாதானம் பற்றி பேச முனைந்தால் அது முடியாமல் போவதுடன், பேராபத்தையே உண்டாக்கும் என்றும் சமாதானப் பேச்சுகளுக்கு அர்ப்பணிப்புகளும், பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் மிக அவசியமானவை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இது தொடர்பாக விளக்கமளித்தார். ஐ.தே.க. வினர் முன்னெடுத்த சமாதான நடவடிக்கைகளுக்கும், தற்போதைய அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளுக்கும் புள்ளியளவாவது வித்தியாசம் இருந்தால் காண்பிக்குமாறு அரசு தலைவர் மகிந்தவுகச்கும், ஜே.வி.பி.யின் விமல் வீரவன்சவுக்கும் நான் சவால் விடுகின்றேன் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச அன்று ஐரோப்பாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், தற்போது அங்கிருக்கும் ஜெனிவாவிலேயே பேச்சுகள் இடம்பெற இருக்கின்றன. அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையினையே அங்கு பேச்சுக்கு எடுத்துச்செல்கின்றனர்.

நோர்வேயின் விசேட தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் ஜெனிவா பேச்சுகளில் போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து மட்டுமே பேசப்படவுள்ளதாகவும் அதன் திருத்தம் ஏதும் பாரிய அளவில் செய்யப்படமுடியாது எனவும் கண்டிப்பாக கூறியிருக்கின்றார்.

அதேபோல, விடுதலைப்புலிகளின் உத்தியோக புூர்வ பத்திரிகையில் அவ்வமைப்பின் தலைவர் ஜெனிவா பேச்சகளில் உடன்படிக்கை குறித்து மட்டுமே பேச்சப்படவுள்ளது என்றும் அதைவிடுத்து அங்கு வேறெதுவும் அராயப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
அன்று போர்நிறுத்த உடன்படிக்கையினை யானை - புலி ஒப்பந்தம் எனக்கூறி கிளித்தெறியப் போவதாக கூச்சல் போட்டனர். அந்த நேரத்தில் அது இலங்கையிலேயே இருந்தது ஆனால் இன்று உலகம் முழுவதற்கும் திரிவதற்கு தற்போது அதை எடுத்துக்கொண்டு ஜெனிவாவுக்கு போகின்றனர்.

அதே போல சொல்ஹெய்மையும் வெள்ளைப்புலி என வர்ணித்து அவரது கொடும்பாவிகளை எரித்து விமல்வீரவன்சவும், சோமவன்சவும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்று டெய்லி நியுூஸ் பத்திரிகையில் மகிழ்ந்த ராஜபக்ஸவுடன் சொல்ஹெய்ம் கைலாகு கொடுக்கும் படமே முதற்பக்கத்திலேயே பெரிதாகப்போடப்படுகின்றது.

இது தவிர வேடிக்கையாக, ஜெனிவாவுக்கு பேச்சுகளுக்கு செல்பவர்களுக்கு ஆலோசனைச் செயலமர்வுகள், பேச்சுகளில் கலந்து கொள்வது எப்படி என்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில் அமைச்சர் நிமால் சிறிபாத டி சில்வா தலைமையில் பேச்சுகளில் கலந்துகொள்ளச் செல்பவர்களக்கு சமாதானம் பற்றியோ, சமஸ்டி என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவும் தெரியாது. ஒற்றை ஆட்சிக்கும் ஐக்கிய இலங்கைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பது கூட அவர்களுக்கு புரியாது.

ஆனால் ஐ.தே.க. அன்று பேசும் போது அதன் தலைமைதாங்கிச்சென்ற பரந்த அறிவுடைய பேராசியர் பீரிஸை 'சமாதானக்கோமாளி" என இதே வித்தகர்கள் வர்ணித்தனர். தற்போது அதே பீரிஸை தமக்கு பயிற்சி வழங்க அழைத்துள்ளனர்.

எனினும் இது சந்தோசமான விடயம் தான்.

சமாதானப் பேச்சுகளுக்கு செல்வதற்கு முன்னர் அதைப்பற்றிய தங்களிடம் இல்லாத அறிவினை அதைப்பற்றி அறிந்தவர்களிடம் அதுபற்றி தமது அறிவினை வளர்த்துக்கொள்வது சிறந்த விடயம் தான்.

வெளிநாட்டு டொலருக்காக வெறுமனே சமாதானம் பேசமுடியாது. அதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும். வடக்கில் சமாதானத்திற்கு விருப்பம் என்றால் தெற்கில் அதற்கான பொது இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்துவது அவசியம்.

அதே நேரம் தற்போதைய அரசாங்கம் சமாதானத்திற்காக அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்கின்றது. நாம் அப்படி செல்லவில்லை. நாம் மேற்கொண்டது உள்நாட்டு சமாதானம். அரசாங்கம் தற்போது சமாதானத்தினை இறக்குமதி செய்கின்றது.

சமாதான நடவடிக்கைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினை அழைத்தால் நாம் அதற்கு ஆதரவு வழங்கத்தயார் எனவும் ராஜித சேனாரட்ண மேலும் தெரிவித்தார்

நிதர்சனம்

Print this item

  தமிழரை மயக்கிய சிங்கள குயில்
Posted by: Shankarlaal - 02-10-2006, 10:48 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://img69.imageshack.us/img69/538/1611dz.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்முரசிலிருந்து

Print this item

  மஹாபாரதம் கிடக்கட்டும் மாமி பாரதம் கேளுங்கோ
Posted by: Shankarlaal - 02-10-2006, 10:46 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://img69.imageshack.us/img69/8254/616iq.jpg' border='0' alt='user posted image'>

தமிழ்முரசிலிருந்து

Print this item

  ஏன் இந்த அவலம்
Posted by: Thulasi_ca - 02-10-2006, 04:47 AM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

[size=18]<b>ஏன் இந்த அவலம்</b>

<img src='http://www.thamilsky.com/forum/cry.jpg' border='0' alt='user posted image'>


ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்
ஐயோ நிம்மதியாய் தூங்கி நெடு நாள் ஆச்து
தூங்கிய நடு நிசியில் கள்வர்கள் மிரட்டல்
பாடசாலை சென்ற பாவையர் கடத்தல்
கல்வியினை வாரிய கல்விமான்கள் கொலை
நாளுக்கு நாள் எம் இளைஞர் கொலை
ஐயோ நம் தமிழ் மண்ணில் ஏன் இந்த அவலம்
நல்லூர் கந்தா நாம் என்ன குறை விட்டோம்
எம் கதறல் உலகம் கண்டும் காணவில்லை
கந்தா உன் காதில் எம் கதறல் விழவில்லை?
கதறி அழுதோம் கால் அடியில் விழுந்தோம் காணாமல் இருப்பதேனோ?
ஐயோ சொந்த மண்ணில் நாம் இருக்க ஏன் இந்த அவலம்

www.thamilsky.com

Print this item

  புதிய இணையத்தளம் அறிமுகம்
Posted by: Thulasi_ca - 02-10-2006, 04:41 AM - Forum: தளமுகவரிகள் - No Replies

[url=http://www.thamilsky.com/][size=18]Thamilsky

<img src='http://www.thamilsky.com/thamilsky.gif' border='0' alt='user posted image'>

Print this item