| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 812 online users. » 0 Member(s) | 809 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,253
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,613
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,032
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,433
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,143
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| குழந்தை வளர்ப்பு |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:54 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
குழந்தை வளர்ப்பு - பிறப்பு முதல் பத்து வயது வரை
குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.
பிறப்பு முதல் ஒரு வயது வரை:
பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.
குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.
பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்' பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்' மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
ஒரு சிறிய பிளாஸ்டிக் `பேசினில்' கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான) நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும். முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்' தேய்த்து கழுவவேண் டும். அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.
குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.
சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில் இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில் ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.
பால் குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந் தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்... போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.
ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்' கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.
சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.
2 முதல் 3 வயது வரை:
இரண்டு வயதான பிறகும் குழந்தை ஒரு சில வார்த்தைகள்தானே பேசுகிறது -என்று 75 சதவீத பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் பேச்சுத்திறன் அதிகரிக்கவே செய்யும். அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்'டிடம் ஆலோசனை பெறவேண்டும்.
குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.
இரண்டு வயது குழந்தைகள் 9-10 மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.
குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் போதிய இடைவெளியில் அமர்ந்து பார்க்கா விட்டால், கண்களைப் பாதிக்கும். குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது மிக அவசியம். அந்த ஆர்வத்தைக் கெடுத்து டி.வி. முன்னாலே உட்கார வைத்து விடுவது சரியல்ல.
இந்த பருவத்து குழந்தைகள் சிலவற்றி டம் மண் தின்னும் பழக்கம் ஏற்பட்டு விடும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மண்ணைத் தின்னும். அந்த சத்தை ஈடுசெய்ய வேண்டும். டாக்டரிட மும் காட்டி ஆலோசனை பெறலாம்.
குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். வற்புறுத்தி திணிப்பது சரியல்ல.
குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது அவை பளபளப்பாகவும், விலை உயர்ந்த தாகவும் இருந்து எந்த பலனும் இல்லை. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும். சப்பாத்தி மாவை சிறிதளவு பிசைந்து கொடுத்து பலவிதமான உருவங்கள் செய் யச் சொல்லலாம். பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.
4 முதல் 10 வயது வரை:
இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்.
பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ, அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.
இப்போது 5, 6 வயது சிறுவர் -சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.
பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.
இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.
சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்' என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.
|
|
|
| பெண்ணிடம் ஈர்ப்பு... |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:28 PM - Forum: மருத்துவம்
- Replies (24)
|
 |
ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படும். அப்படி என்னதான் இருக்கோ தெரியலை.. இப்படி அலையறானுக.. என்பார்கள். சரி. என்ன இருக்கு தெரியுமா?
பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளைச் செல்களிடம் ஈர்ப்புத் தன்மை அதிகமாக இருப்பது தான் ஆண்களை கவர்ந்திழுக்கக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களின் இரத்த சிவப்புச் செல்கள் உபரியாக இருக்கும்போது எண்ணம், உடல் யாவற்றையும் கவ்விக்கொள்ளும் தன்மை ஏற்படும்.
இதனால்தான் ஆண்கள் எதையும் தனித்து ரசிக்கிறார்கள், புசிக்கிறார்கள். ஆணின் சிவப்புச் செல்லின் தன்மைகள் பெண்ணின் வெள்ளைச் செல்லின் மென்மையான ஈர்ப்புத் தன்மையால் கவரப்படுகிறது. இதனால்தான் பெண்களிடம் ஆண்கள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். முதுமையில் பாசமாக, அன்பாக மாறுகிறதே அதுகூட இந்த வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் ஈர்ப்புதானாம்.
|
|
|
| இளமையாகத் தோன்ற ஆசையா? |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:25 PM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:-
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.
கண்ணில் கருவளையம் மறைய...
சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
முகத்தை பாதுகாக்கும் முறை:-
ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
கழுத்தில் உள்ள கருவளையம் மறைய:-
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக் கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் அகன்றுவிடும்.
இடுப்பில் காய்ப்புத் தழும்பு அகல:-
இடுப்பில் இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து லூசான ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணையை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
காது அழகை பராமரிப்பது எப்படி?
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டு கொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும்... காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.
ஆகவே பெண்மணிகளே காதை மிளிர வைப்பது எப்படி? என்பது பற்றிய யோசனையைகேளுங்க.
உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும். முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக தெரியாது.
சிறிது சூடாக்கப்பட்ட நல்ல எண்ணையினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்தும் பளபளவென பளிச்சிடும்.
|
|
|
| குடிகார கணவரை திருத்துவது எப்படி? |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:24 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.
சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்.
அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்ட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது.
எந்நேரமும் போதையில் மிதக்கும் கணவர்களை அடிக்கடி கோவில்களுக்கு அழைத்துச் செல்லலாம். யோகா, தியானம், போன்றவற்றில் ஈடுபடுத்துவதும் நல்ல பலனைத்தரும்.
சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சா... போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள். இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலும் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்... என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு பேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.
|
|
|
| குங்குமம் வைப்பதன் நன்மைகள் |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:22 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.
ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும். இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும்.
குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது. இந்தச் சக்தி பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள், பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக் கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்!
சக்தி விகடன்
|
|
|
| தாய்ப்பால் |
|
Posted by: ஊமை - 02-10-2006, 10:20 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு வதும் தாய்ப்பால்தான்.
உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றhன மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகின்றன. இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று* எனவேதான் நாம் பாலுட்டி இனத்தைச் சார்ந்தவர்களாகப் பகுக்கப்படுகின்றோம்.
பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. எங்காவது ஆடு, பசுவின் பாலைப் பருகுகின்றதா? கழுதை குதிரைப்பாலைக் குடிக்கிறதா? இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றேhம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றேhம்.
தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. மூன்று மாதக் குழந்தைக்குப் பால் பவுடர் வாங்கினால் மாதத்திற்கு குறைந்தது ரூபாய் 450 ஆகும். நமது நாட்டில் ஏறக்குறைய 10 கோடி தாய்மார்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர். இவர்கள் கொடுக்கும் தாய்ப்பாலின் மூலதனம் ரூபாய் 6500 கோடியாகும்.
இந்த புட்டிப்பால் பழக்கங்களால் குழந்தை களுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கைத் தடுக்க நேரும் செலவு ரூபாய் 176 கோடியாகும்.
தந்த பசி தனையறிந்து முலையமுது தந்து முதுகு தடவிய தாயார்ஹஹஎன அருணகிரிநாதர் தாயின் அன்பினை அவள் குழந்தைக்குப் பால் ஊட்டுவதன் முக்கியத்தின் வாயிலாகப் பாடி யுள்ளார். சீர்காழியில் குளக்கரையில் ஸஸதன் தந்தையைக் காணாமல் தன்னந்தனியே அழுது தவித்துக் கண்களைக் கசக்கிக் கொண்டிருந் தான் ஆளடையப்பிள்ளைஹஹ என்ற ஒரு சிறுவன். அவன் அழுகுரலைக் கேட்டவுடன் மனம் பொறுக்காத உமாதேவியார் அழுகின்ற பிள்ளை மீது அன்பு கொண்டு அணைத் தெடுத்துத் தமது திருமுலைப்பாலை ஊட்ட அச்சிறுவனே பின்னாளில் திருஞான சம்பந்தரானதாக நாம் பெரிய புராணத்தில் படிக்கின்றேhம்.
ஆனால் இன்று, தங்கள் உடல் அழகைப் பேணவேண்டும் என்ற சுய நலத்தோடு, தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்காத பெண்களும், இயல்பாகவே பால் சுரப்பு இல்லாத சில அம்மாக்களும், அப்படியே சுரந்தாலும் குழந்தையின் முழுத் தேவைக்கும் பால் இருப்பதில்லை என்பதும், இன்னும் சிலருக்குச் சீக்கிரமே பால் வற்றி விடுவதும் நாம் காணுகின்றோம்.
ஏன் இந்த அவலநிலை? பெண்கள் கர்ப்பகாலத்தில் சத்துள்ள உணவுகளை நிறைவாகச் சாப்பிடாவிட்டால் பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சினை ஏற்படும். முக்கியமாக ரத்தச் சோகை, புரதச் சத்துக்குறைவு, கால்சியம் பற்றhக்குறை உள்ள பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்காது. பிரசவம் நெருங்கும் சமயங்களில், பிரசவித்த முதல் ஒரு வார காலத்திலும், தாய்க்குச் சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தாய்ப்பால் சுரப்பது குறையும். தாய்ப்பால் சுரப்பதன் சூட்சுமம் தாயிடம் மட்டுமில்லை, குழந்தையிடமும் உள்ளது என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும்.
தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.
தாய்ப்பால் தங்கநகை போன்றது, பிற வகை பால்கள் கவரிங் நகை போன்றவை. தாய்ப்பால் குழந்தைக்காக ஆண்டவன் அளித்த அருட்பிரசாதம். தாய்ப்பால் குடிப்பது குழந்தைகளின் பிறப்புரிமை, அதை கொடுக்க வேண்டியது தாயின் கடமை. இனியும் கொடுக்காமல் இருப்பது மிகவும் கொடுமை.
|
|
|
| தமிழீழ வீதி போக்குவரத்து துறை |
|
Posted by: Mathuran - 02-10-2006, 09:46 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
கிளி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தமிழீழ காவல்துறையினரால் வீதி ஒழுங்குகளை ஓழுங்கு படுத்தும் மாணவ போக்குவரத்துக் கண்காணிப்பாளர் பயிற்சி நடத்தப்பட்டது. காலை 10.45 மணியளவில் நடை பெற்ற இப்பயிற்சி கிளிநொச்சி நகரப் போக்கு வரத்துத்துறை பொறுப்பதிகாரி சி.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 35 பாடசாலை மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இப்பயிற்சியின் போது முக்கியமாக வீதி ஒழுங்குகள் சமிக்கைகள் போன்ற அம்சங்கள் அடங்கலாக பயிற்சி வழங்கப்பட்டு இறுதியில் சீருடைகள் வழங்கப்பட்டது. அதிகரித்து வரும் வீதிவிபத்துக்களில் இருந்து மாணவர்களையம் கொதுமக்கiயும் பாதுகாக்கும் மற்றும் விழிப்பணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி நடத்தப்பட்டது. இதன் மூலம் பயிற்சி பெற்ற மாணவ கண்காணிப்பாளர்கள் காலை நேரத்தில் பாடசாலை ஆரம்பிக்கும் முன்பும் மாலையில் பாடசாலை விடும்போதும் கடமையில் ஈடுபடுவார்கள். இவ்விரண்டு நேரங்களிலும் பாடசாலை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் இதன்மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் அங்கு கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
<img src='http://img408.imageshack.us/img408/5783/kaval015yb.jpg' border='0' alt='user posted image'>
http://eelampage.com/tamileelam/
<b>நன்றி சங்கதி</b>
|
|
|
| எகிப்தில் பண்டைய கல்லறை கண்டுபிடிப்பு |
|
Posted by: Mathan - 02-10-2006, 09:46 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41316000/jpg/_41316610_kingstombap2203b.jpg' border='0' alt='user posted image'>
<b>அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம்</b>
எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர்.
80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒருவர், இந்த கல்லரையில் இருந்த மரத்தாலான 5 பிரேதப்பெட்டிகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் பூசப்பட்டிருந்ததாகவும், அந்த பெட்டிகளின் கீழ்பகுதி மஞ்சள் மற்றும் கறுப்பு கோடுகள் வரையப்பட்டு இருந்ததகவும் கூறினார்.
மூடி ஓரளவு திறந்து காணப்பட்ட ஒரு பிரேதப்பெட்டியின் ஊடாக மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட சடலம் ஒன்று தென்பட்டதாகவும் அவர் கூறினார்.
BBC தமிழ்
|
|
|
| தமிழ்ச் சமூகத்தில் தொலைக்காட்சி நாடகங்களின் தாக்கம் |
|
Posted by: kuruvikal - 02-10-2006, 08:35 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
இன்றைய சமூகத்தில் தொலைக்காட்சி நாடகங்கள் என்பது மிகவும் இன்றியமையாத ஓரிடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார மட்டத்தில் உயர்வு, தாழ்வோ, அல்லது கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளோ இல்லாதவாறு வாழ்வியல் அம்சங்களில் ஒன்றாக பிரதான இடத்தினை இது பிடிக்கக் காணலாம். இத்தகைய சமூகத்தின் மீதான செல்வாக்குப் போக்கும் அது சார் நிலைப்பாடுகளுமே இங்கு நோக்கப் பொருளாகின்றது.
நவீனம் (Modern) எனும் போர்வையின் கீழ் இலத்திரனியலை மூலதனமாகக் கொண்டதாக, குறிப்பிட்ட சிலரது, சிறப்பாக ஐரோப்பிய நாடுகளால் காலனித்துவத்திற்குப் பின்னரான முதலாளித்துவ, ஏகாதிபத்தியவாதிகள் சிலரது உடமைகளாகவே இக்கருவிகளுள்ளன.
இவ்வாறு உடமைகளாக உள்ளமையால் அவைகளின் உள்ளடக்கங்களான படைப்புக்களும், வெளியீடுகளும் தங்களது நலன் நோக்கான பொருளாதார ஈட்டலை மையமாகக் கொண்ட வணிகம் சார் நடவடிக்கையாகவே உள்ளமையைக் காணலாம்.
பொழுது போக்கு, கலை நுகர்வு எனும் விடய நோக்கில் பலர் இவை நன்மை பயப்பனவெனப் பறைசாற்றினும், அவைகளுடாக பல வழிகளிலும், எம்மை செயலிழக்கச் செய்யும் செய்ய விளையும், அதனூடாக திட்டமிடல்களுடன் கூடிய திணிப்புக்களாய் தம் நலன் நோக்கினை செயற்படுத்த விளையும் ஏற்பாடுகளாகவே இவை அமையக் காணலாம். இதுவே இங்கு முக்கியமானதும், அடிப்படையானதுமான விடயமாகும். இதுவே இங்கு அசலப்படுகின்றது. விரும்பியோ, விரும்பாமலோ இத்தகைய நோக்கங்களை சமன்செய்துவிட தாரை வார்ப்பனவாகவே இத்தொலைக்காட்சி நாடகங்கள் முயல்கின்றன என்பதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
வாழ்வியல் அம்சங்களில் ஒன்றாக விலக்கி ஒதுக்கிவிட முடியாதளவு பிரதான இடத்தை இந்த நாடகங்கள் பிடித்துள்ளன. உண்மையில் வாழ்வோடிணைந்த வளமூட்டும் மனிதப் பண்பு மிக்க பயன்தரு படைப்புக்களும் நாடகங்களாக வெளிவருகின்றன என்பது ஏற்புடையது. எனினும், மாறாக பல்போக்குகளிலும், செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகள் தாங்கிய செல்வாக்குப் போக்குகளையே பெரிதும் கொண்டுள்ளமையைக் காணலாம். சக்தி, செரச, ரூபவாஹினி, சுவர்ணவாஹினி, ஐ.ஐ.ரி.என் என அதிகப்பட்ட அலை வரிசைகள் போல் அவற்றின் ஊடாக அண்ணாமலை, ஆனந்தம், நீ- நான் - அவள், மனைவி, காவ்யாஞ்சலி, கோபுரம், மெட்டி ஒலி, கோலங்கள் எனப் பல கோலங்களாய் அமைகின்றன. சிறப்பாகத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களையே இங்கு நோக்கலாம்.
காலையில் கண் விழித்தது முதல் நித்திரைக்குச் செல்லும் வரை தொடர் நாடகங்கள் தொடர் சங்கிலிப் பிணைப்புக்களாக வருகின்றன. ஒரே நேரத்தில் வெள்வேறு அலை வரிசைகளில் வெள்வேறு நாடகங்கள். அவைகளைப் பார்ப்பதில் பிரச்சினை, பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வேலைத் தளங்களில் வேலை செய்வோர் வரை இதே சிந்தை, குடும்பம் முதல் பக்கத்து வீட்டினருடன் கூட இதேபேச்சு. அடுத்த கட்டம் என்ன? அது அவ்வாறமையும். இது எவ்வாறு அமையும் என்ற நிலையால், சமையல், பிள்ளைகள் பராமரிப்பு, குடும்ப உறவு எனப் பல்நிலைகளிலும் அந்நியோன்னியத் தன்மையின்மை.
தொடர் நாடகங்களாக அமைவதால் குடும்ப நேர அட்டவணை இந்நாடகங்களை வைத்தே தீர்மானிக்கப்படும் நிலை. தாய், தந்தை, பிள்ளைகள், உறவினர்கள் சுற்றம் என்ற உறவு நிலை விரிசலையடைதல் ஆடிப்பாடி கூடி விளையாடி ஆர்ப்பரித்து, சண்டை செய்து, ஊரை அறிந்து உற்றாரை அறிந்து வாழ்வியல் நிகழ்வுகளில் பங்கு கொண்டு கருத்துப் பரிமாறி, களிப்போடு வாழ்ந்த சூழலோடிணைந்த நிலைமாறி சில என்ன பல விடயங்களைப் புறக்கணித்து வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னர் பார்ப்போராய்ப் புடம் போடச் செய்யும் நிலையையே நாம் இங்கு செல்வாக்காக நோக்கலாம். ஏன் வேளைக்கு உணவு உண்ணக் கூட மறந்து விடுவதாக சிலர் கூறுவதைக் கேட்கின்றோம். நாளைக்கு நாடகத்தில் அது இருக்கிறது நான் வரமாட்டேன்’ எனக் கூறக் கேட்கின்றோம். அடுப்பில் பானை ஏறாவிட்டாலும் தொலைக்காட்சியில் நாடகங்கள் அரங்கேறியே விடும் நிலை. அதுவே நாகரீகம் எனக் கருதும் நிலை. பொருளாதார மட்டத்தைப் பொறுத்து இல்லாது வீட்டுக்கொன்றென தொலைக்காட்சியமைய இந்நாடகங்களும் பிரதான காரணம்.
அதை இதை அடகு வைத்துக்கூட தொலைக்காட்சி வாங்குகிறார்கள், இந்நாடகங்களால் குடும்பப் பிணக்குகள், தாம்பத்தியத்தில் புரிந்துணர்வின்மையென அனைத்து நிலையிலும் எம்மைப் பார்ப்போராகத்தன் முன்னிறுத்தி ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குப் போக்கையே இன்று இந்நாடகங்கள் வகிக்கக் காணலாம்.
தேடலும், படைப்பாக்கத்திறனுமே ஒருவரை முழுமையாக வாழ வழிசமைக்கும். ஆளுமை விருத்தி, நிர்வாகம் என்பவைகளை வளர்க்க முடியாத நம்மில் நாம் தங்கி வாழ முடியாத, காலாகாலமாக தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு கையளிக்கப்பட்டு வரும் சூழலோடிணைந்த வாழ்வியலம்சங்களை வளர்த்தெடுத்து வளம்பெற முடியாத நிலையை இந்நாடகங்கள் ஏற்படுத்துகின்றன.
சிறப்பாக ஆக்கத் திறன்கள் கலை நிகழ்வுகளை கைவிடச் செய்யும் நிலையை அதனூடாக படைப்போராகவன்றி பார்ப்போராகவே உருவாக்குவோராகவன்றி நுகர்வோராகவே எம்மை மாற்றியமைத்துக் கொண்டிருக்கக் காணலாம். விடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்கள், கரகம், கும்மி, வசந்தன், மகுடி என விளையாட்டு, தொழில்கள், பொழுதுபோக்கு சார் ஆக்கத்திறன்மிகு செயற்பாடுகள் இந்நாடகங்களின் மீதான நாட்டங்களால் அருகிப் போகும் வேளை காலாகாலமாக தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வந்த அரிய உயரிய தனித்துவமிகு படைப்புக்கள் அனைத்து நிலைகளிலும் பறிபோக இந் நாடகங்களும் காலாகின்றன.
கோயில்கள், விழாக்கள், களியாட்ட வேளையில் விடிய விடிய ஆக்கத்திறன்மிகு படைப்புக்களுக்குப் பதில் இன்று நாடகங்களின் தொகுப்புக்களே போடப்படுகின்றன. இங்கு பங்கு பற்றி பயன்பெற்ற நிலை மாற்றம் பெற்று பார்ப்போராய் எம்மை தங்கி வாழச் செய்கின்றமை கண்கூடு.
இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள் யாவும் சினிமாப் பாணி மிக்கனவாகவே உள்ளன. பெரிதும் பாடல்கள், ஆடல்கள், கருத்தியல்கள் யாவும் பாரம்பரிய மடமைசார் கருத்தியல்களை வலுவூட்டுவனவாகவே அமையக் காணலாம்.
சிறுவர் முதல் பெரியவர் வரை சிறப்பாக இளைஞர்கள், அங்கே காட்டப்படுவதுதான் வாழ்க்கை, நாகரீகம் என்று தம்மை சூழலிலிருந்து அந்நியப்படுத்துகின்றனர். புரியமறுக்கின்றனர். தகவல் யுகப் போக்கின் வளர்ச்சிக்கேற்ப காட்டப்படும் யதார்த்தத்துக்கொவ்வாத செயற்பாடுகளையே வாழ்வியலம்சமாக நம்பும் நிலையையும் அவைகள் சார்ந்து நாடும் நிலைமையையும் அதன் பால் நமது தனித்துவங்களைப் பறிகொடுக்கும், நாசம் செய்யும் நிலைமையையும் இவைகள் மூலமாகச் செய்து, தம்நலன் நோக்கை திருப்திப்படுத்துபவர்களாக முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் விளங்க ஊன்றுகோலாக எம் சமூகத்தினூடே இத்தொலைக்காட்சி நாடகங்கள் விளங்கக் காணலாம்.
காலாகாலமாக நிலவி வரும் பாரம்பரிய மடமைசார் கருத்தியல்களை வலுவூட்டுவதாகவே (சிறப்பாக பெண்கள் சார்ந்த நிலைப்பாடுகளைக் கூறலாம்) இத்தொலைக்காட்சி நாடக ஒளிபரப்பு வேளையில் வணிகம் சார்ந்து முதலாளித்துவத்தைச் சார்ந்ததாய் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் நோக்கும், போக்கும் இக்கருத்தியல்களை வலுவூட்டுவதாய் அமையும். அதே வேளை, சுரண்டல் தன்மைக்குள் எம்மை உள்வாங்கச் செய்வதாகவே உள்ளன.
வாழ்வின் அனைத்து விடயங்களையும் நுகர்வுப் பொருள்களின் மூலம் சமன் செய்து விடலாம் எனும் நிலையை பெரிதும் விளம்பரங்கள் செய்கின்றன. பெண்களின் உடல்கள் பாலியல் ரீதியாக விலை பேசப்படுகின்றன. குடிபானமா? பாடப்புத்தகமா?, பணப்பரிமாற்றமா?, ஆடையணியா? அனைத்து விளம்பரங்களிலும் பெண்கள் அலசப்படுகின்றனர். பொருளை விற்கவா? அங்கங்களை விற்கவா? எனும் நிலை அவ்விளம்பரங்களை நோக்கின் புரியும்.
பெண் என்பவள் ஆணின் பார்வையில் சுகம் தரும் கவர்ச்சிப் பொருளாக பணிந்து சேவை செய்யும் பொம்மையாகவே நாடகங்கள், விளம்பரங்கள் என்பவைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றாள். பெண் வேறு ஆண் வேறு எனப் பாகுபடுத்திப் பார்க்கும், பெண்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளை விளம்பரங்கள் எல்லா நிலைகளிலும் செய்கின்றன. இதேபோன்று மடமைசார் கருத்தியல்களை உரமூட்டி எம்மை நுகர்வுக் கலாசாரத்திற்குள் உள்வாங்கி அதன் மூலம் குறித்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் நலன் நோக்கான பொருளாதாரத்தை வலுவூட்ட வழிசமைப்பனவாகவே இவை அமையக் காணலாம். இத்தகைய நிலைக்குள் உள்வாங்கும் வண்ணமாய் இந்நாடகங்களையும் அதுசார் விளம்பரங்களையும் வைத்திருத்தலென்பதே செல்வாக்காகும்.
இன்றைய எம் சமூகத்தில் வாழ்வியல் ஒழுங்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை தொலைக்காட்சி நாடகங்களே வைத்துள்ளன என்றே சொல்லலாம். இவை நாடகங்களின் செல்வாக்கையே துலங்கப்படுத்துகின்றது. இவ்வாறான செல்வாக்கு பொருத்தமானதாக சில வழிகளில் அமைந்தாலும் எமது சமூகத்தை மட்டுப்படுத்தி தம் நலன் நோக்கை நிவர்த்தி செய்வதாகவே அமைகின்றதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| காதல் என்றும் தப்பல்ல.... |
|
Posted by: jcdinesh - 02-10-2006, 08:17 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
நன்பர்களே.....................
காதல் இல்லாத உலகம் -அது
உலகமே இல்லை...
காதல் என்றும் தப்பல்ல -அது
காதலாக இருக்கும் வரை
நீங்கள் யாரையாவது காதலியுங்கள்
ஆனால் உங்கள் காதலை
காதலியிடம் சொல்லுங்கள்...
காதலை அவள் மறுத்தால்
ஒன்று அல்லது இரண்டு நாட்கள்
அல்லது இரண்டு வாரங்களில் மறந்து விடுவீர்கள்..
ஆனால் அதை சொல்லாமல்
உங்களுக்குள்ளயே வைத்து
புதைத்து விடாதீர்கள்..
காதலை சொல்லி காதலியின்
முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல்
உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து
நீங்களே கொல்லாதீர்கள்...- அது
கருவை வயிற்றிலேயே அளிப்பது போண்றது.
அதனால் நன்பர்களே......
உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள்
காதலை சொல்லாமல் முட்டாளாக இருக்காமல்
இந்த காதலர் தினத்தை பயன் படுத்தி
உங்கள் காதலியிடம் உங்கள் காதலை சொல்லுங்கள்
காதல் அது என்றும் தப்பல்ல......
காதலித்து சந்தோசமாக இருக்கும் காதலர்கள்...........
காதலிக்கும் காதலர்கள்..........
காதலிக்க போகும் காதலர்கள்.............
அனைவருக்கும் எனது இனிய காதலர் தின வாழ்த்துக்கள்...........[/b]
|
|
|
|