![]() |
|
எகிப்தில் பண்டைய கல்லறை கண்டுபிடிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: எகிப்தில் பண்டைய கல்லறை கண்டுபிடிப்பு (/showthread.php?tid=930) |
எகிப்தில் பண்டைய கல்லறை கண்டுபிடிப்பு - Mathan - 02-10-2006 எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41316000/jpg/_41316610_kingstombap2203b.jpg' border='0' alt='user posted image'> <b>அகழ்வாராய்ச்சி நடக்கும் இடம்</b> எகிப்தில் மன்னர்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இடத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்லறையை பார்ப்பதற்கு எகிப்திய அதிகாரிகள் முதல் தடவையாக ஒரு தொகுதி பொதுமக்களை அனுமதித்துள்ளனர். 80 ஆண்டுகளுக்குப் முன்னர் ருடாங்கமன் என்பவரது கல்லறை இதே இடத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்துள்ள மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு இது என்று இந்த கல்லறை கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மூவாயிரம் ஆண்டுகள் மனிதர்களின் கண்களில் இருந்து மறைந்திருந்த ஒரு காட்சி இது என்று இதனை வர்ணித்த லக்ஸரில் அந்த இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் ஒருவர், இந்த கல்லரையில் இருந்த மரத்தாலான 5 பிரேதப்பெட்டிகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சாயம் பூசப்பட்டிருந்ததாகவும், அந்த பெட்டிகளின் கீழ்பகுதி மஞ்சள் மற்றும் கறுப்பு கோடுகள் வரையப்பட்டு இருந்ததகவும் கூறினார். மூடி ஓரளவு திறந்து காணப்பட்ட ஒரு பிரேதப்பெட்டியின் ஊடாக மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட சடலம் ஒன்று தென்பட்டதாகவும் அவர் கூறினார். BBC தமிழ் Re: எகிப்தில் பண்டைய கல்லறை கண்டுபிடிப்பு - வர்ணன் - 02-11-2006 Mathan Wrote:எகிப்தில் பண்டைய கல்லறை ஒன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மம்மி- பிரமிட்-உலக அதியசத்தில் ஒன்று எங்கிறாங்க- எகிப்தின் அடையாளம் - உலகத்துக்கு -அது-எண்டும் சொல்லுறாங்க- பிறகும் ஏன் இந்த செய்தியை - ஏதோ புதுசு போல் - சொல்லிக்கிறாங்க - மதன்? :? 8) - Mathan - 02-11-2006 புதிதாக கல்லறைகளை தேடி அகழ்வாராய்ச்சி நடந்த போது 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைக்கு அருகில் வேறொரு புதிய கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதையும் அங்கு கிடைத்தது யாருடைய சடலமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி செய்வதும் தான் செய்தியாக வெளிவந்திருக்கின்றது என்று நினைக்கின்றேன். இதில் மம்மி புதிது என்று பொருள் வரவில்லையே :roll: |