| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 271 online users. » 0 Member(s) | 269 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,267
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,042
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,462
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம் |
|
Posted by: Shankarlaal - 02-09-2006, 12:21 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (4)
|
 |
இன்று அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் 29 ஆவது நினைவு தினம்
க.மு. தருமராஜா
அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் இன்றைய நினைவு தினத்தில் அவரை நினைவு கூருவதற்குரிய காரணங்கள் இது வரையில் பல நினைவுக் கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர் தனது அரசியல் வாழ்வில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமிழ்த் தேசிய இனத்தை பிரியவிடாமல் ஒற்றுமையாக ஒரு கொடியின் கீழ் இயங்குவதற்காகவே செயல்பட்டவர்.
தமிழ்த் தேசிய இனத்திற்கு தீமைவரும் செயல்களை இந்நாட்டு அரசாங்கங்கள் கையாண்ட பொழுது தனது அறிவிற்கு எட்டியவைகளை தனது நாவன்மையால் தமிழ்த் தேசிய இனத்திற்காக செயல்பட்டவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விடயத்தை முன்னாள் ஊர்காவற்றுறை தொகுதி தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வ.நவரத்தினம் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் "The Fall & Rise of the Tamil Nation" என்ற நூலில் எழுதியதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
"அடையாள அட்டை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதம் நடந்த சமயம் என்னை ஒரு அரசியல் எதிரியாகக் கருதி என் மீது கடும் வெறுப்புக்காட்டுவதற்கான அனைத்துக் காரணங்களையும் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் எதிர்ச் செயலோடு வேறுபடுத்திக் காட்டாமலிருக்க என்னால் இயலவில்லை. சட்ட மூலத்தின் மூலம் உரையாற்று முன்னர் பாராளுமன்றக் புறக்கூடத்தில் என்னை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் என்னிடம் கேட்டார் நீங்கள் இரட்டைக்குழல் என்ற பதத்தை பயன்படுத்தினீர்கள். ஒரு குழாய் சட்டத்திலுள்ள ஏற்பாடு என ஒத்துக்கொள்கிறேன். மற்றையது என்ன என்று தமிழர்களுக்கு தீங்கிழைக்கப்பயன்படுத்தக் கூடியதென நான் உணர்ந்த சட்ட ஏற்பாடுகளை அவருக்கு சுட்டிக்காட்டி விளக்கினேன். அவர் (ஜீ.ஜீ.) சபையில் பேசுகையில் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். எப்படியெனில் ஒழுங்கு விதிகளை இயற்றுவதில் அமைச்சருக்குள்ள அதிகாரங்களை குறித்த வார்த்தைப் பிரயோகத்தை அவர் சாடியதுடன், அடையாள அட்டைகள் வைத்திருப்போர் எவ்வகை பிரசா உரிமை கொண்டவர் என்பதை அவ் அட்டைகள் காட்ட மாட்டா என்று உறுதி மொழியை பிரதமரிடமிருந்து அவர் வரவழைத்துக் கொண்டார்.
அமரர் ஜீ.ஜீ. தனது நாவன்மையால் சமபலக் கோட்பாட்டுக் கொள்கையை சோல்பரிக் கமிஷன் முன் தமிழ்த் தேசிய இனத்திற்கு வரும் இன்னல்களை முன் உணர்ந்து சமர்ப்பித்து வாதாடினார். சோல்பரிக் கமிஷன் குழுவினர் சமபிரதிநிதித்துவக் கோட்பாட்டை ஏற்காவிடிலும் ஜீ.ஜீ. யின் நாவன்மை வாதத்திறமையால் 29 ஆம் பிரிவு ஒன்றில் சில பாதுகாப்புகளை சிறுபான்மையினரின் நன்மை கருதி அரசியல் சாசனத்தில் உட்புகுத்த வேண்டுமென சிபார்சு செய்தனர்.
அச்சட்டம் அமரர் ஜீ.ஜீ. பாராளுமன்றத்தில் இல்லாத சமயமே நீக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் புகுத்தப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் சமபலக்கோட்பாட்டுக் கொள்கையை சமர்ப்பித்து ஆற்றிய உரையில் அவர் இறுதியாகக் கோரியதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
"சபாநாயகர் அவர்களே, இறுதி வார்த்தையானது அரசியலமைப்புச் சீராக்கம் பற்றியல்ல, ஆனால், இலங்கையின் எதிர்கால அரசியல் அமைப்பு பற்றியதாகும். பாராளுமன்ற முறைமைகள் ஒவ்வொன்றும் அந்தந்த இடங்களில் நிலவும் சூழ்நிலைகளின் ஆளுகைக்குட்பட்டதாக விளங்க வேண்டும். சூழ் நிலைக்கொவ்வாத ஒரு விடயத்தை அறிமுகம் செய்வதில் பயனில்லை. பிரதிநிதித்துவ முறையில் மாற்றம் செய்து ஜனநாயகத்தை முறையாக இயங்கச் செய்வதில் உள்ளார்ந்த விதத்தில் தவறேதுமில்லை.
ஐக்கிய தேசமொன்றை விரும்புபவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனநாயகம் பற்றி வாய் ஓயாமல் பேசுவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் பெருமைப்படத்தக்க விதத்திலே வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஒரு முதுசொத்தை, ஒரு கலாசாரத்தை விட்டுச் செல்ல விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். சிறுபான்மையினரின் நியாயபூர்வமான கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு ஐக்கியம் தேவை என்று விரும்புவோருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈடிணையற்ற பாராளுமன்ற அதிகாரத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உலக வரலாறு முழுவதிலும் சுதந்திரத்தின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய இங்கிலாந்து தேசத்திடம், சிறிய தேசங்கள் மற்றும் சிறிய சமூகங்களின் நலன்களுக்காகப் போராடிய இங்கிலாந்து தேசத்திடம், வேண்டுகோள் விடுக்கின்றேன். இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினரால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் உரிய கவனத்துடன் கூடிய நியாயத்தை வழங்குங்கள்"
அமரர் ஜீ.ஜீ. சட்டமாமேதை என்று எவரும் மறுக்கமாட்டார்கள். சட்டத்துறையில் அவருடைய ஆற்றலைப்பற்றி, சில வழக்குகளைப்பற்றி முந்திய நினைவுக்கட்டுரைகளில் வெளிவந்தன. அவர் சட்டத்துறையிலே ஏழைகளுக்கும் நண்பர்களுக்கும் பல உதவிகள் செய்தவர் என்பதை அவருடன் நெருங்கி தொடர்புடையவர்கள் பலருக்குத் தெரியும். இன்றைய தினத்திலே ஓர் ஏழைக்கு உதவி செய்த வழக்கைப்பற்றி ஞாபகப்படுத்துவது சாலப்பொருத்தம் என்ற எண்ணுகிறேன்.
எழுபது வயது ஏழைக்கு உதவி
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கோட்டில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக ஜீ.ஜீ. ஆஜராகி கோட்டுக்குச் சென்றார். அச்சமயம் கோட் தொடங்கவில்லை. அவர் சக வழக்கறிஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சமயம் கம்பிச் சிறைக்கூட்டில் இருந்து "ஜீ.ஜீ. ஐயா என்னைக் காப்பாற்றுங்கள்" என்ற அபயக்குரல் கேட்டது. உடனே ஜீ.ஜீ. திரும்பிக் கூட்டைக் கவனித்தார். தலை நரைத்த தள்ளாடும் வயோதிபரைக் கண்டதும் உடனே எழுந்து அவரிடம் சென்றார். வயோதிபருக்கு வயது 70 இருக்கும். இரு கையும் கூப்பியபடி கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டு "நான் சாகப் போறன் ஐயா என்னைக்காப்பாற்றுங்கள்" என்று இரந்து வேண்டினார்.
இக்கோலத்தைக் கண்ட ஜீ.ஜீ. மனம் இழகிவிட்டார். "அப்பு இன்று உங்களைப் பிணை எடுக்கின்றேன். மறு தவணை உங்கள் வழக்கை விசாரணைக்கு எடுக்கின்றேன்" என்று சொல்லி அவரை அமைதியாக இருக்கும்படி கேட்டார். வயோதிபர் அமைதியோடு உட்கார்ந்து விட்டார். கோட் தொடங்கியது. அவருடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுபட்டது. வெகு நேர வாதாட்டத்தின்பின் வழக்கு தவணை போடப்பட்டது. பின்னர் பெரியவருடைய வழக்கை பொலிஸ் அதிகாரியிடம் சுருக்கமாகக் கேட்டறிந்தார். வயோதிபரை பிணையில் செல்ல நடவடிக்கை எடுத்து தன்னுடைய வழக்கின் மறு தவணை தினத்தில் வயோதிபருடைய வழக்கு விசாரணைக்கு ஏற்பாடு செய்து சென்று விட்டார். மறு தவணை கோட்டுக்கு வந்தவர் வயோதிபரிடம் வழக்கு விபரத்தைக் கேட்டறிந்தார்.
ஐயா எனக்கு வயது 70. எனக்கு எதுவித வருவாயும் இல்லை. எனது இயலாத்தன்மையினால் சாராயம் குடிப்பேன். அத்துடன் தினம் இரண்டு அல்லது மூன்று போத்தல் சாராயம் விற்பேன். இதனால் வரும் வருவாயைக் கொண்டு நானும் குடிப்பேன். அதனால் அதிகாரிகளுக்கும் கை லஞ்சம் கொடுப்பேன். கொடுக்க முடியாத சமயங்களில் இந்த அதிகாரிகளால் எனக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். இப்படியான சந்தர்ப்பத்தில் என்னை கைது செய்து கொண்டு வந்து கிழமை ஒன்றாகி விட்டது. இன்னும் கூட்டில் இருக்கின்றேன். உங்களை என் பிள்ளையாக நினைத்து கெஞ்சுகின்றேன். என்னை இதில் இருந்து காப்பாற்றி விடுங்கள் என்று விபரத்தைச் சொல்லி இரந்து வேண்டினார்.
பெரியவர் பயப்படவேண்டாம். நான் சொல்லுகிறபடி நீர் சொல்லும் நான் உம்மைக் காப்பாற்றுவேன் சரிதானே. ஆம் ஐயா, கோட் தொடங்கியது. பெரியவரின் வழக்கு கூப்பிடப்பட்டது. பெரியவர் கூனிக் குறுகிய தோற்றத்தில் வந்து கூண்டில் ஏறி நின்றார். பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் வழக்கின் விபரம் கேட்டார். ஜீ.ஜீ. அவரின் பெயர், சேவைக்காலம், பிறந்த ஊர், கடமையாற்றிய இடங்கள், ஆங்கிலத்திலா? சிங்களத்திலா? விசாரணையை விரும்புகிறீர் என்று கேட்டார். சிங்களத்தில் சேர் என்றார் இன்ஸ்பெக்டர்.
சரி எத்தனை போத்தலோடு கைது செய்தீர். இரண்டரை போத்தலோடு சேர். பெரியவர் உங்களை எத்தனை போத்தலோடு கைது செய்தார். பத்தரை போத்தல் சேர். பத்தரை போத்தலா? ஆம் சேர்.இன்ஸ்பெக்டர் மீதி எட்டுப்போத்தலும் எங்கே என்று கேட்டதும், இன்ஸ்பெக்டர் பதில் சொல்ல முடியாத நிலையில் பதறிக் கொண்டே இல்லை சேர் இரண்டரை போத்தல் தான் என்றார். இது பொய். ஏழைகளை நீங்கள் இவ்விதம் தான் கைது செய்து கைலஞ்சம் வாங்குவதற்காக வருத்தி வதைத்து கஷ்டப்படுத்தி இப்படியான பொய் வழக்குகளை தொகுத்து நீதி ஸ்தலங்களையும் ஏமாற்றுகின்றீர். ஜீ.ஜீ.யின் சிங்கள பேச்சை கேட்டதுமே திகைப்பு உண்டாகி உண்மையைக் கூட சொல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சேர்! இன்ஸ்பெக்டர் பிடித்தது பத்தரைப் போத்தல் சாராயம். வழக்குப் போட்டு கோட்டுக்கு காட்டியது இரண்டரை போத்தல் சாராயம். அந்த வயோதிபர் ஒரு கிழமைக்கு மேலாக சிறைக் கூடத்திலும், கம்பிக் கூட்டிலும் காலத்தை போக்கி கஷ்டப்பட்டுள்ளார். எட்டு போத்தல் சாராயம் காட்டப்படவில்லை. வயோதிபரையும் ஏமாற்றி கஷ்டப்படுத்தி நீதி ஸ்தலத்தையும் ஏமாற்றி விட்டார்கள். எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து இது போன்ற பொய் சோடனை வழக்குகள் ஏற்படாதவாறு நீதிபதி அவர்களின் முடிவான தீர்ப்பு கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கின்றேன் என்றார்.
இதைக்கேட்டதும் நீதிபதி பொய் வழக்கு சோடித்தமையை இட்டு உமது தகுதியற்ற தன்மையை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவிக்கின்றேன். பெரியவர் அவர்களே சொற்ப நாளாவது நீங்கள் விளக்க மறியலில் இருந்து விட்டீர்கள். உங்களுடைய வயதை பொறுத்து மன்னிப்பு தருகின்றேன். இதன்பிறகு இப்படியான வழக்கினால் கோட்டிற்கு வராதபடி எச்சரிக்கை செய்து விடுதலை செய்கின்றேன். நீதிபதியின் வேண்டுகோளின் படி இன்ஸ்பெக்டருக்கு ஒரு வருட பதவி உயர்வு நிறுத்தப்படவேண்டும் என்று மேலிடத்திற்கு அறிவிப்பதாக கூறப்பட்டது. கூட்டால் இறங்கிய வயோதிபர் ஜீ.ஜீ.யின் கன்னங்களை இரு கையாலும் வருடி கை கூப்பி நன்றி கூறி விடை பெற்றார். என்ர ராசன் நீ நல்லாய் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.
இந்த நினைவுக் கட்டுரையில் அவர் இறக்கும் பொழுது எந்தச் சொத்தை தமிழ்த் தேசிய இனத்திற்கு விட்டுச் சென்றார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
அமரர் ஜீ.ஜீ. கல்விச்செல்வம், பொருட்செல்வம், இடம், பொருள், ஏவல் யாவற்றையும் தமது மைந்தன் மா மனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு விட்டுச் சென்றமையால் தான் மாமனிதர் குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய இனத்திற்கு சேவையாற்றி தன்னுயிரையே தியாகம் செய்தார். அது மட்டுமல்ல மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஆயுதம் ஏந்திய படைகளுக்கும் குழுக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் எதிராக எவ்வித ஆயுதமுமின்றி ஜனநாயக ரீதியில் இரு ஆயுதங்களைப் பாவித்து போராடினார். ஒன்று அமரர் ஜீ.ஜீ. யின் மைந்தன், இரண்டாவது அமரர் ஜீ.ஜீ. முதன் முதலாக ஸ்தாபித்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் என்ற அந்தஸ்து.
மேலே சுருக்கமாகக் கூறியவற்றிலிருந்து அமரர் ஜீ.ஜீ.யின் நாமம் என்றும் அழியாது.
தினகுரலிலிருந்து பெறப்பட்டது
|
|
|
| சிட்னியில் சைவமாநாடும் சாம்பாறும் |
|
Posted by: putthan - 02-09-2006, 12:02 PM - Forum: புலம்
- Replies (12)
|
 |
அண்மையில் சிட்னியில் கம்பரசமான பிரபலம் சைவ மாநாட்டுக்கு வந்து தனது பேச்சு திறமையால் இராவணன் ஒரு ஆரியன் என்று கூறியுள்ளார்.புராணக் கதைகளின் படி (கற்பனையாகவும் இருக்கலாம்)இராவனோ ஒரு சிவ பக்தன் அவன் எப்படி ஆரியன் ஆவான்?சரி அவன் ஆரியனாகவே இருக்கட்டும்.
அதை பற்றி நாம் அலட்டாமல் சைவமாநாட்டுக்கு என்று வந்து இந்து(முஸ்லீம் அல்லாத ஏனைய இந்திய மதங்களுக்கு வெள்ளைக்காரன் வைச்ச பெயர்)கொள்கையை பரப்புகிறார்,ஒரு சில மாதங்களுக்கு முதல் தான் இந்து மாநாடு என்று வைத்தார்கள்,இரண்டு மாநாட்டையும் சிட்னி டமிழ்ஸ் தான் வைத்தார்கள்.இவர்களே குழம்பி போய்யுள்ளார்களா........??????
சைவம் என்றால் இந்து என்பார்கள்.இந்து என்றால் சைவம் என்பார்கள்.(சைவம் என்றால் பதி,பசு,பாசம் என்பார்கள்,இந்து என்றால் பகவத் கீதை என்பார்கள்,புத்தனிற்கோ ஒன்றுமே புரியலே)அப்படியானால் ஏன் இரண்டு மாநாடு வைத்தார்கள்.
சைவம்,இந்து என்று பிரிக்கிறவர்கள் தங்களுக்கு பதவிகள்,பொன்னாடைகள் தேவை என்பதற்காகவா???
பல ஆயிரம் செலவழித்து வைத்த மாநாட்டில் பங்கு பற்றியோர் சிலரே.அப்படியானால் சில புத்திஜீவிகள் அவுஸ்ரேலியாற்விற்கு விசா எடுக்கவும்,அவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காகவுமா????
அவ்வாறு விசா எடுத்து வந்த ஒரு புத்திஜீவி சைவம் சம்பந்தமான ஏதாவது கழகத்தை வைத்திருந்தால் காரியமில்லை அவர் வைத்திருப்பதோ இந்து கழங்கள்,போதாக்குறைக்கு அவர் சிட்னியில் ஒன்றும் தொடங்கியுள்ளார்?!!!!!!!
ஏற்கனவே சிறிலங்கா ஆரிய,தேரவாத பெளத்த சிங்களவருடையது என்று மகாவம்ச கதையை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்,அது போதாது என்று இவர்கள் புதிதாக இராவணண் ஆரியன் என்றும்
திருமலை அவனுடையது என்றும் புரளியை கிளப்பினம் .
இது சிங்கள அரசுக்கு அரசியல் நடத்த வசதியாக இருக்கும்.
"மழித்தலும்(மொட்டை அடித்தல்)னீட்டலும்(சடை வளர்த்தல்)வேண்டா உலகம் பழித்தது(தீ யொழுக்கம்)ஒழித்து விடின்."
|
|
|
| ஜெயலலிதா கூறிய கதை |
|
Posted by: Shankarlaal - 02-09-2006, 11:11 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அரசு ஊழியர்கள் மாநாட்டில்
ஜெயலலிதா கூறிய கதை
சென்னையில் நடந்த அரசு ஊழியர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது ஒரு கதையை கூறினார்.
அவர் பேசியதாவது:-
நல்லாட்சியின் அடையாளம்
அரசின் திட்டமிட்ட பயன்கள், ஏழை எளிய மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்திட, அந்த அரசின் சேவை செயலாக்க ஏற்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கோட்பாடு ஆகும். ஒரு புறம், அரசு அலுவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, அதன் வாயிலாக அவர்கள் மக்களுக்கு மேலும் சிறப்பாக சேவை ஆற்ற ஊக்கம் அளித்திட வேண்டும் என்னும் நிலை; மறுபுறம், ஏழை எளிய மக்களுக்கு போதிய பயன்கள் உரிய நேரத்தில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்னும் நிலை.
இந்த இரண்டு நிலைகளுக்கும், இடைப்பட்ட நுட்பமான சம நிலையைக் கண்டறிந்து பராமரித்து வருவதே ஒரு நல்லாட்சியின் அடையாளம் ஆகும். நிதி நெருக்கடிக் காலங்களிலும், திறம் வாய்ந்த அரசால் இந்தச் சம நிலையைப் பராமரிக்க முடியும். ஆனால், முற்றிலும் சீரழிந்த நிதி நிலையில் இந்த சமன்பாட்டைப் பராமரிக்க மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட அசாதாரணத் துணிவு அவசியம் ஆகும். இத்தகைய அசாதாரணத் துணிவு, தளராத தன்னம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை, புதுமைச் சிந்தனை மற்றும் நிர்வாகத் திறமை ஆகியவற்றின் காரணமாக, நிதிச் சீரழிவில் இருந்து தமிழகத்தை மீட்டதோடு மட்டுமல்லாமல்; நிதி நிலையை ஆரோக்கியமான நிலைக்கு உயர்த்தி உள்ளோம். இந்த நிலையை உருவாக்கிட நாம் அனைவருமே சில எதிர்பார்ப்புகளை, கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இதனை உணர்வதில் முதலில் சில சிறு பிரச்சினைகள் இருந்தன. இதனை எண்ணும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கரடி கதை
அது ஒரு மழைக் காலம். எங்கும் மழை. ஆறுகளில் புது வெள்ளம் பொங்கிப் பெருகி வந்து கொண்டிருந்தது. காட்டை ஒட்டியிருந்த ஓர் ஊரின் ஆற்றங்கரை ஓரத்தில் நான்கு நண்பர்கள் இந்தப் பெரு வெள்ளத்தில் எவ்வாறு அக்கரைக்குச் செல்வது என்ற சிந்தனையோடு நின்று கொண்டிருந்தார்கள். அப்போது, நட்ட நடு ஆற்றில், கருமையான நிறத்தில், மூட்டை போல ஒன்று மிதந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
அதில் ஒருவன், ``அதோ அங்கே மிதந்து வருவது என்னவென்று பாரப்பா'' என்று சொன்னான்.
அடுத்தவன், ``அது ஒரு கம்பளி போல் தெரிகிறதே'' என்றான்.
மூன்றாமவன், ``கம்பளியே தானப்பா'' என்று கூற,
மிகவும் தைரியசாலியான நான்காவது ஆள், ``அதை எடுத்து பிழிந்து, காய வைத்துக் கொண்டால் இந்த மழைக் காலத்திற்கு இரவில் இதமாக போர்த்திப் படுக்கலாம்'' என்று கூறியபடி அந்த வெள்ளத்தில் பாய்ந்தான்.
கம்பளியை கொண்டுவா
ஆற்றில் பாய்ந்தவன் விரைந்து நீந்திச் சென்றான். நட்டாற்று வெள்ளத்தில் மிதந்தபடி வந்த கம்பளியைத் தாவிப் பிடித்தான். தாவிப் பிடித்த சிறிது நேரத்தில், அந்தக் கம்பளியுடன் சேர்ந்து, நட்டாற்றில் அவனும் வெள்ளத்தின் போக்கிலே போக ஆரம்பித்தான்.
கரையில் நின்றிருந்த மூன்று பேரும், ``கம்பளியை இழுத்துக் கொண்டு கரைக்கு வா'' என்று கத்தினார்கள். ஆனால், அவனால் அந்தக் கம்பளியை விட்டு வர முடியவில்லை.
``நண்பா, அந்த கம்பளியை விட்டு விடு! நீ மட்டுமாவது கரைக்கு வந்து சேர்'' என்று கத்தினார்கள்.
அதற்கு, அந்தக் கம்பளியைப் பிடித்தவன் சொன்னான், ``நண்பர்களே! நான் எப்போதோ, கம்பளியை விட்டு விட்டேன். அந்தக் கம்பளி தான் என்னை விட மாட்டேன் என்கிறது'' என்றான்.
கரடி யார்?
உண்மையில், ஆற்று நீரில் மிதந்து வந்த அந்த கருப்பு மூட்டை கம்பளி அல்ல. அது ஒரு நிஜமான கரடி. அந்தக் கரடி, கன மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. ஏதாவது பற்று கிடைக்காதா, எப்படியாவது கரை சேர முடியாதா, யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று எண்ணியபடியே போய்க் கொண்டிருந்தது அந்த கரடி. இப்படி நான்கு பேர் அந்த ஆற்றங்கரை ஓரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்ததும், அவர்களை ஏமாற்றுவதற்காக தன்னுடைய உடலை சுருட்டி கம்பளி போல தோற்றம் காட்டியது. அதை உண்மை என்று நம்பி, அவர்கள் வருவார்கள், அவர்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்பது தான் அந்தக் கரடியின் எண்ணம்.
அதன் எண்ணப்படியே, தன்னுடைய பொய்த் தோற்றத்தில் ஏமாந்து ஒருவன் மாட்டிக் கொண்டதும்; அவனைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு, அவனையும் சேர்த்து ஆற்று வெள்ளத்தில் அமுக்கப் பார்த்தது. ஆனால், நம்முடைய ஆள் அவ்வளவு ஏமாளி கிடையாது. ``என் கைகளைத் தானே பிடித்துக் கொண்டாய்'' என்று கேட்டு, தன் கால்களைப் பயன்படுத்தி, அந்த கரடியிடம் இருந்து தப்பித்துக் கரைக்கு வந்து சேர்ந்து விட்டான். உடலைக் காக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட கம்பளி, உண்மையில் உயிரைப் பறிக்கக் காத்திருந்த ஒரு கரடி என்ற விவரம் தாமதமாகத் தான் அவர்களுக்குத் தெரிய வந்தது. இந்தக் கதையில், கரடி யார் என்பதையும், அப்பாவி நண்பர்கள் யார் என்பதையும், உங்கள் ïகத்திற்கே விட்டு விடுகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
தினதந்தி இணையத்திலிருந்து பெறபட்டது
|
|
|
| புத்தனின் உள்வருகை |
|
Posted by: putthan - 02-09-2006, 10:52 AM - Forum: அறிமுகம்
- Replies (1)
|
 |
என் அருமை மிகு யாழ் இணையதள நண்ப,நண்பிகளே எல்லோருக்கும் எனது இனியம் கனிந்த நல் வணக்கம்.எல்லோரின் அழைப்பிற்கிணங்க புத்தன் களவாயிலிருந்து உள்ளுக்கு இன்று 9.2.2006 வியாழன் நண்பகல் சிட்னி நேரம் 5.00 மணிமுதல் தனது கருத்தொளியை யாழ் இணையதளம் முழுவதும் பாய்ச்சுவான்.
|
|
|
| வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்' |
|
Posted by: Shankarlaal - 02-09-2006, 10:10 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்'
தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினரின் செயல்களும், நடந்து கொள்ளும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பல தேர்தல் கூட்டங்களில் வேட்டி உருவுதல், சட்டையை கிழித்தல் போன்றவை நடக்கும்.
இவை காங்கிரஸ் கட்சியில் தான் அதிகமாக இருக்கும். இன்னும் காங்கிரசில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காத நிலையில், தி.மு.க., உடன்பிறப்புகள் வேட்டி உருவும் "திருவிழாவுக்கு' பிள்ளையார் சுழி போட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மெண்ட் பகுதியில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததையடுத்து, உள்ளூர் உடன் பிறப்புக்களே பேசி முடித்தனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்டோன்மென்ட் தி.மு.க., நகர செயலர் பாபு. இக்கூட்டத்தை முன்னிட்டு ஆங்காங்கே தெருக்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அந்த போஸ்டரில் அதே பகுதியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி மோகன் பெயர் இல்லை. பொதுக்கூட்டம் முடிக்கும் நேரம் மோகனின் ஆதாரவாளர்கள் அங்கு வந்தனர்.போஸ்டரில் எங்கள் தலைவர் (மோகன்) பெயரை ஏன் சேர்க்கவில்லை என ஆத்திரப்பட்டனர். அதற்குள் பாபுவின் ஆதாரவாளர்கள் ஒன்று கூடினர். வாய் பேச்சு ஓடிக் கொண்டிருந்த நேரம், கூட்டத்தில் இருந்த ஒரு "உடன்பிறப்பு' அங்கிருந்த எதிர் கோஷ்டி உடன்பிறப்பின் வேட்டியை இழுக்க... ஆரம்பமானது "வேட்டி உருவும் திருவிழா'.பாதுகாப்பிற்காக வந்த போலீஸ் "இதென்னடா வம்பா போச்சே' என்று ஓடிச் சென்று இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். பின்னர் அவரவருக்கு கிடைத்த வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு துண்டை உதறித் தோளில் போட்டு கிளம்பினர்.
தினமலர் இணையத்திலிருந்து உருவிய செய்தி
|
|
|
| இலங்கை அகதிகளுக்கான சட்டங்கள் |
|
Posted by: Shankarlaal - 02-09-2006, 10:05 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அகதிகள் தமிழகம் வருகை அதிகரிப்பு முகாமிலுள்ளவர்களுக்கு கட்டுப்பாடு
திண்டுக்கல் : இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் நடக்கும் கலவரத்தால் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அகதிகள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மறுவாழ்வு சிறப்பு ஆணையர் ராஜ்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தினால் நிவாரணம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு தற்காலிக தங்குமிடம், பணிக்கொடை, மான்ய விலையில் அரிசி, 2 ஆண்டிற்கு ஒரு முறை பாத்திரங்கள், பிளஸ் 2 வரை இலவசக்கல்வி, கல்லுõரி படிக்க பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுகிறது.
இங்கு தங்கியுள்ள அகதிகளுக்கு இந்தியாவின் அமைதியை காக்கும் வகையில் கடமைகள் சில உள்ளன. அவையாவன:
* பிறப்பு, இறப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் முகாம் அருகே உள்ள வி.ஏ.ஓ.,க்களிடம் அவசியம் பதிய வேண்டும்.
* குழந்தை பிறப்பை பதிய தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பதிந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு பிற்காலத்தில் இலங்கையில் குடியுரிமை கிடைக்கும்.
* 8 வயது முடிந்த குழந்தைகள் பெரியவர் என்ற எண்ணிக்கையில் கணக்கிடப்படும்.
* 12 வயது நிரம்பிய அனைவருக்கும் பணிக்கொடை வழங்கப்படும்.
* 18 வயதான பெண், 21 வயதான ஆண்கள் மட்டுமே திருமணத்திற்கு தகுதி பெற்றவர்கள். இவர்கள் திருமணம் செய்யும் போது அருகே உள்ள சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
* இவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமே, இலங்கை செல்லும் போது தனிக்குடும்பமாக கணக்கில் எடுத்துக் கொள்வர். இலங்கை அரசு தரும் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்கும்.
* முகாமை விட்டு வெளியே சென்றால் மாலையில் அவசியம் திரும்பி விட வேண்டும். ஒருவேளை ஒன்று அல்லது 2 நாட்கள் தங்க வேண்டியிருந்தால் முன்அனுமதி பெறுவது அவசியம்.
* வேறு முகாம் அல்லது வேறு மாவட்டத்தில் உள்ள உறவினர்களை பார்க்க செல்ல வேண்டுமானால் முன் அனுமதி அவசியம்.
* இலங்கை செல்ல விரும்புபவர்கள் பாஸ்போர்ட், எக்சிட் பெர்மிட் பெற்று விமானம் மூலம் தான் செல்ல வேண்டும்.
*அரசு செலவில் இலங்கை செல்ல விரும்பினால் முறைப்படி மனு தந்தால் இந்திய அரசே கப்பல் மூலம் அனுப்பி வைக்கும்.
கல்விச்சலுகை: அகதிகளின் குழந்தைகள் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சேர ஜாதிச்சான்றிதழ் தேவையில்லை. 12ம் வகுப்பு வரை இலவச பஸ்பாஸ், புத்தகங்கள், சத்துணவு ஆகியவை இவர்களுக்கு வழங்கப்படும்.
செய்யக்கூடாதவை: முகாமில் உள்ளவர்கள் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. சட்டத்திற்கு புறம்பாக இலங்கை செல்ல அவர்கள் முயலக்கூடாது.
* சட்டத்திற்கு புறம்பாக உரிய ஆவணங்கள் இன்றி அகதிகள் செல்லும்போது, அவர்கள் தங்கள் பொருள், உடைமை ஆகியவற்றை இழக்க நேரிடும்.
* ஒரு சிலர் பண ஆதாயத்திற்காக சட்டத்திற்கு புறம்பாக அழைத்துச் செல்வதாக கூறுவதை நம்ப வேண்டாம்.
* சட்டத்திற்கு புறம்பாக இலங்கை சென்றவர்கள் என தெரிய வந்தால் அவர்களுக்கு எந்த உதவியும் இந்திய அரசு வழங்காது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது.
<b>தினமலரிலிருந்து உருவியது</b>
|
|
|
| யாழ்தேவி |
|
Posted by: kanapraba - 02-09-2006, 09:43 AM - Forum: தமிழீழம்
- Replies (16)
|
 |
ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது.
" சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி காமாட்சி வண்டி போகுது பார், சுக்குபக்கு சுக்கு பக்கு கூ"
முழுப்பதிவிற்கும்
http://kanapraba.blogspot.com/
|
|
|
| தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம் |
|
Posted by: மேகநாதன் - 02-09-2006, 05:55 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (11)
|
 |
<span style='color:green'><b>தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறைத் திருமணம்
துர்க்கா மணிமண்டபத்தில் நேற்று நடந்தேறியது! </b>
தமிழ் மரபைப் பின்பற்றிய புதுமுறையி லான திருமணம் ஒன்று நேற்று நல்லூரில் சிறப்புற நடந்தேறியது.
பேராசிரியர் அ.சண்முகதாஸ்,கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் தம்பதியர் தலைமையில் நல்லூர் துர்க்கா மணிமண்ட பத்தில் நேற்று முற்பகல் 9.30 மணியளவில் இந்தத் திருமணம் நடைபெற்றது.
தமிழ் முறையில் உள்ள பிரதான சம்பிர தாயங்களை உள்ளடக்கியதாக வித்தியாச மான முறையில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில் அந்தணர்களுடன் கூடிய சமயக் கிரியைகள் எவையும் இடம்பெறவில்லை. மணமகன், தோழன் ஆகியோர் தலைப்பாகை அணிந்துகொள்ளவில்லை.
இந்தத் திருமண நிகழ்வில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து திருக்குறள் ஓதுதல் ஆன்றோர்களால் திருக்குறளுக்கு பொருள் கூறல், தலைவரின் முன்னுரை, மணமகன் உறுதியுரை, மணமகள் உறுதியுரை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து மங்கல நாண் அவையினரின் ஆசீர்வாதத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவேளை மங்கல வாழ்த்துப்பா ஓதுதல் இடம் பெற்றது.
பின்னர் திருமணத்தை தலைமை வகித்து ஒப்பேற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் தம்ப தியர் மாலையை எடுத்து மணமக்களுக்கு வழங்க மணமக்கள் மாறி, மாறி அணிந்து கொண்டனர்.
தொடர்ந்து மங்கல நாண் மணமகனால் பூட்டப்பட்டது.
அடுத்து தலைமை தாங்கும் தம்பதியினர், மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க மணமக்கள் தலைமைக்குரியயோரையும், பெற்றோரையும் வணங்கி ஆசிபெற்றனர்.
தொடர்ந்து அனைவரும் மணமக்களுக்கு ஆசிவழங்கினர். சான்றோர்கள் வாழ்த்துரை களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் கள், விரிவுரையாளர்கள், வங்கியாளர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதைக் காணமுடிந்தது.</span>
<i><b>தகவல் மூல்ம்- உதயன்</b></i>
|
|
|
| நிலவரம் வீரா |
|
Posted by: kuloth - 02-09-2006, 01:49 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
நண்பர்களே, ஒளிவீச்சு 105ல் வீரவின் கவிதைத் தொகுப்பு வெளியீடு காட்டினார்கள். யாராவது வைத்திருந்தால் என்னுடன் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஒளிவீச்சு பாருங்கள். அது ஒரு தரமானதும் வேண்டியதுமான் பலசெய்திகள் உண்டு. எல்லோரும் பார்ப்பது நன்று.
|
|
|
|