| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 156 online users. » 0 Member(s) | 154 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,267
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,462
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| எனது அறிமுகம் |
|
Posted by: Unnavan - 02-08-2006, 12:22 PM - Forum: அறிமுகம்
- Replies (24)
|
 |
வணக்கம் நண்பர்களே நண்பிகளே...
எனது பெயர் முக்கியமில்லை...
நான் <b>தமிழன்</b> எண்டது தான் என்ரை அடையாளம்...
பொறியியல் படிச்சுப் போட்டு கணிணியிலை குப்பை கொட்டுற வேலை. (அதாவது பேக்காட்டுற வேலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) உங்களோடை என்ரை கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைச்சதிலை சந்தோசமா இருக்கு.
நன்றி.
|
|
|
| உலக மனச்சாட்சியை உலுக்கிய ஹமாஸின் வெற்றி |
|
Posted by: adsharan - 02-08-2006, 11:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டு அதனுடைய, நிதிமூலங்களான தொண்டர் அமைப்புகள் சர்வதேசம் எங்கும் முடக்கப்பட்டமையும் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதே ஹமாஸ் இயக்கம் தான் இன்று பலஸ்தீன அரசை பொறுப்பேற்கிறது. உலகம் இவர்கள் மீதான தடையை என்ன செய்யப்போகின்றது?
கா.வே.பாலகுமாரன்
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் உலகத்தால் பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கத்திடம் பலஸ்தீன அரசாங்கப் பொறுப்பை பலஸ்தீன மக்கள் ஒப்படைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்று புலிகளின் குரல் வானொலியில் கடந்த சனிக்கிழமை அரசியல் அரங்கம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே. பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸினது வெற்றிதான் இன்று மிக பரபரப்பாக பேசப்படுகிற செய்தியாக இருக்கிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஹமாஸ் இயக்கமானது மூன்றில் ஒரு பங்கு சபைகளைத் தன்வசம் கைப்பற்றிக் கொண்டது. அப்போதே ஹமாஸின் எதிர்கால வெற்றிபற்றி எதிர்வு கூறப்பட்டாலும் ஹமாசே எதிர்பார்க்காதது என்று அந்த இயக்கம் சொல்கிற வகையில் பாரிய வெற்றி பெற்றிருக்கிறது.
ஷேக் முகமது யாசின் தலைமையில் உருவான ஹமாஸ் இயக்கமானது முஸ்லிம் அடிப்படைச் சிந்தனைகளை மக்களிடத்தில் முன்வைத்து அரபாத்தின் பத்தாவுக்கு மாற்றாக இயங்கி வந்தது.
பேச்சுவார்த்தையை முற்றாக நிராகரித்தது இஸ்ரேலின் செயற்பாட்டை முற்றாக வெறுத்து 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த பலஸ்தீனத் தாயகத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
மத்திய கிழக்கிலிருந்து இஸ்ரேலின் ஜோர்டான் நதி வரை பரந்திருக்கக்கூடிய பலஸ்தீனத் தாயகத்தை - காஸா மேற்குக் கரை, ஜெருசலேம் போன்றவற்றை உள்ளடக்கிய அந்தத் தாயகத்தை அவர்கள் கனவாகக் கொண்டிருந்தார்கள்.
அதேபோல், ஒஸ்லோ உடன்பாடு, பலஸ்தீன அதிகார சபை ஆகியவற்றையும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேலில் உள்ள அனைத்து மக்களும் ஆக்கிரமிப்பாளர்கள் என்பது தான் ஹமாஸின் நிலைப்பாடு. ஏனெனில், அவர்கள் பலஸ்தீனத் தாயகத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்ற அடிப்படையில் ஹமாஸ் செயற்பட்டது.
அது ஒரு தீவிரமான அமைப்பான தோற்றம் பெற்றது. அதனது நிதி மூலமும் உலகம் முழுமைக்கும் பரந்து விரிந்திருந்தது. தங்களது நிதியை நன்றாகக் கணக்கிட்டு மக்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.
இந்த நிலைப்பாடு மிக அதிசயமான நிலைப்பாடு.
1980 களில் அல்பத்தாவின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்காத இஸ்ரேலியர்கள் இது போன்ற தீவிரமான இயக்கத்திற்கு மறைமுகமான ஆதரவு கொடுத்ததை நாம் அறிவோம்.
அல்பத்தாவின் மிதவாதப் போக்கையே செரிமானிக்க முடியாத இஸ்ரேல் ஹமாஸின் இந்த தீவிரவாதத்தன்மையை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
ஹமாஸின் தோற்றம் என்பது மத்திய கிழக்கில் ஒரு உண்மையான அமைதியைத் தேடிக் கொள்ள முடியாத இயலாமையை இன்று வெளிப்படுத்தியிருக்கிறது என்று தான் கருதுகிறார்கள்.
பத்தா அமைப்பின் அழிவு - தலைமையின் சீரழிவாகவும் கருதப்படும் நிலையில் ஹமாஸின் தோற்றமானது இன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
எந்த ஜனநாயக அமைப்பை நம்பி - எந்த அல்பத்தாவின் செயற்பாட்டை நம்பி பலஸ்தீன அதிகார சபையைக் கொடுக்க உலகம் முன்வந்ததோ அதே சபையை அவர்கள் சொல்லுகிற ஜனநாயக வழிமுறைகளுக்கூடாகவே ஹமாஸ் கைப்பற்றியிருப்பது இந்த உலகத்துக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
பலஸ்தீன அதிகார சபையினது மிகப் பெரும் வருமானங்கள் அமெரிக்காவினாலும் ஐரோப்பாவாலும் வழங்கப்படுகின்றன.
வருடாந்தம் 400 மில்லியன் டொலரை அமெரிக்காவும் 300 மில்லியன் டொலரை ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேலியத் தரப்பிலிருந்து வரிகள் என்கிற வகையிலுமாக பலஸ்தீன அதிகார சபை இயங்கியது.
இந்த நிதியை இன்று கொடுப்பார்களா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படி அளிக்காது விட்டால் முழு பலஸ்தீன மக்களையும் பழிவாங்கியதாகும். இப்படியான மிகப் பெரிய இக்கட்டில் சிக்கியிருக்கிற உலகம் என்ன முடிவை மேற்கொள்ளப் போகிறது என்பதை அனைவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஹமாஸின் வெற்றி மூலம் முழு பலஸ்தீன மக்களை பழிவாங்கக் கூடிய முற்றிலுமாக ஒரு ஒதுக்கப்பட்ட கூட்டமாக கருதக்கூடிய நிலைக்கு இட்டுச் செல்லுமா?
அல்லது,
ஒரு புதிய பரிமாணத்தை உலகம் உணர்ந்து தன் போக்கினை மாற்றி ஹமாஸும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து இறங்கி இரு தரப்பினரும் சந்திக்கிற வாய்ப்புக்கூடாக இனிவரும் நாட்களில் பலஸ்தீன மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா? என்பது தான் வெற்றிக்கூடாக எழுந்து நிற்கிறது.
ஹமாஸின் வெற்றி என்பது அடிப்படையில் ஒரு தர்க்க ரீதியாக நிகழ்ந்தது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
50 வருட அமைதி முயற்சிக்கூடாக
50 விழுக்காடு பலஸ்தீன மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்ற-28 அல்லது 29 விழுக்காடு மக்கள் வேலையற்று இருக்கிற நிலையில் பலஸ்தீன மக்களுடைய எதிர்காலம் குறித்த கவலையோடு இப்போது ஹமாஸ் வெளிவந்து நிற்கிறது.
இஸ்ரேலிய அரசை முற்றாக அழித்தல், அமைதி உடன்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ள மறுத்தல் என்கிற தன்னுடைய கோட்பாடுகளில் ஹமாஸ் எந்த அளவுக்கு விட்டுக்கொடுத்துச் செயற்படப்போகிறது என்பது காலப்போக்கில் தெரியவரும்.
அதேபோல், நிலைமையை உணர்ந்து உலகம் தனது நிலையை மாற்றிக் கொள்ளுமா? கொள்ளாதா? என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாக மாறி இருக்கிறது.
ஹமாஸின் வெற்றியானது உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கியிருக்கிறது.
மத்திய கிழக்கின் இந்த நிலைமைகளைப் பார்க்கும் போது, தென்னாசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போக்கும் உலகத்துக்கு முன்னால் பெருத்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.
மத்திய கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் உலகத்தை நோக்கி எதிரொலிக்கிற இந்தக் கேள்விகள் எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
1987 ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஹமாஸ் இயக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடாவில் தடை செய்யப்பட்டது. அதனுடைய நிதி மூலங்களான தொண்டர் அமைப்புகளும் சர்வதேசமெங்கும் தடை செய்யப்பட்டமையும் அவர்களது வங்கிக் கணக்குகள் நிறுத்தப்பட்ட வரலாற்றையும் நாம் அறிவோம்.
அதே ஹமாஸ் இயக்கம் தான் இன்று பலஸ்தீன அரசைப் பொறுப்பேற்கப் போகிறது.
அப்படிப் பொறுப்பேற்கின்ற போது ஹமாஸ் மீதான தடையை இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள்? நிதிகள் வழங்கப்போகிறார்களா? இல்லையா?
எமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்க்கும் போது நிச்சயமாக உலக நாடுகள் தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து கீழிறங்கி இந்த அரசை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என்பதாகத்தான் கூறப்படுகிறது.
மக்களது கருத்துக்கு மாண்பு கொடுத்து, மதிப்பு கொடுத்து செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதை தமிழீழ மக்கள் தங்களது செயற்பாடுகள் மூலம் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் இந்த நிலையில் நாங்கள் இதை பெருமதிப்பிற்குரிய விடயமாகக் கருதுகிறோம் என்றார்.
http://www.thinakural.com/New%20web%20site...8/Article-1.htm
|
|
|
| பிரபு மகனுக்கு திருமணம் |
|
Posted by: Shankarlaal - 02-08-2006, 10:48 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
பிரபு மகனுக்கு திருமணம்
பிப்ரவரி 08, 2006
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மூத்த மகனுமான விக்ரமுக்கு திருமணம் முடிவாகியுள்ளது. 10ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். விக்ரம் லண்டனில் படித்தவர். சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமுக்கு இப்போது திருமணம் முடிவாகியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளை விக்ரம் மணக்கவுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் வரும் 10ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தில் நடைபெறும் முதல் சுப நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ்தமிழிலிருந்து செய்தி
|
|
|
| இலங்கை மாணவி கற்பழிப்பு |
|
Posted by: Shankarlaal - 02-08-2006, 10:43 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (52)
|
 |
<b>பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி கற்பழிப்பு
பிப்ரவரி 08, 2006
பாண்டிச்சேரி:
பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது.
மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே, மீனாவை அக்கும்பல் கற்பழித்துள்ளது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
படுகாயம் அடைந்த மாணவர் அனந்து மற்றும் மீனாவை சக மாணவர்கள் அங்கிருந்து மீட்டு கல்லூரி விடுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கற்பழிப்பு சம்பவத்தில் முக்கியப் பிரமுகர்களின் மகன்கள் அடங்கியுள்ளதால் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரபலமான ஜிப்மர் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது மருத்துவக் கல்லூரியிலும், புதுவையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்ஸ்தமிழிலிருந்து செய்தி</b>
|
|
|
| தமிழீழம் - நாணயமாற்று |
|
Posted by: Thala - 02-08-2006, 10:25 AM - Forum: தமிழீழம்
- Replies (20)
|
 |
குறிப்பு: இக்கருத்து தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எனும் கருத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்தலைப்பாக்கப்பட்டுள்ளது - மோகன்
கந்தப்பு Wrote:இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.
ஐயா இப்ப போக வேண்டாம்....! இங்கு வந்தபின் நாட்டுக்குப் போவது நல்லதல்ல... நீங்கள் ஊருக்கு அனுப்பும் பணம் இலங்கை அரசின் அன்னியச் செலவாணியைத்தான் அதிகரிக்கும்..... அங்கு நீங்கள் வாங்கும் பொருட்கள் வரியாகப் போய் திரும்பவும் ஊரில் குண்டுகளாய் விழும்....!
உங்கள் பணத்தை தமிழீழத்துக்கு கொண்டு போங்கள் போகும் போது உங்கள் பணம் வங்கிக்கு போனாலும் பொருட்களை வாங்கினாலும் தமிழீழம் பயன் பெறும்....!
கொழும்பில் தமிழர்கள் இருக்க சிங்களவன் விடுகிறான் எண்றால் முக்கிய காரணம் அன்னியச்செலவாணி....!
|
|
|
| திராவிடக்கழகம் வீரமணியுடன் பேட்டி |
|
Posted by: கந்தப்பு - 02-08-2006, 12:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
திராவிடர் கழகத்தின் தலைவர் டாக்டர் வீரமணி அவர்கள் தமிழினம் அறிந்த தலைவர். தந்தை பெரியார் அவர்களுக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். ஆரம்பம் தொட்டு இன்று வரை ஈழத் தமிழர்களின் விடிவுக்காக குரல் கொடுத்து வருபவர். சென்ற 29 டிசம்பர் அன்று சென்னையில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தி மீண்டும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் ஆதரவு நிலை வருவதற்கு வழிவகுத்தவர். இனவிடுதலையும் பகுத்தறிவும் இரு கண்கள் என வாழும் தலைவர் வீரமணி அவர்களை பேட்டி காண வெப்ஈழம் விரும்பியது. தன்னுடைய வேலைப்பளுக்களின் மத்தியிலும் வெப்ஈழம் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கேள்விகளுக்கு தன்னுடைய பதிலை வீரமணி அவர்கள் தந்திருக்கிறார். முகம் சுளிக்கக்கூடிய கேள்விகள் என்று கருதப்பட்டவைகளுக்கும் வீரமணி அவர்கள் தயங்காது பதிலளித்திருக்கிறார். டாக்டர் வீரமணி அவர்களுக்கு வெப்ஈழத்தின் நன்றிகள்.
வெப்ஈழம்: பெரியார் வாழ்ந்த மண்ணில் இன்று மதவாதம் பெருகி வருகின்றது. திராவிடப் பாராம்பரியத்தில் வந்த கட்சிகளான திமுகவும் அதிமுகவும் அதிலிருந்து விலகிச்செல்கின்றன. அதிமுக கட்சியினர் வேல்குத்தி வழிபடுகின்றனர். ஆதன் தலைமை கூட யாகங்கள் நடத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுகவின் முக்கிய தலைவர்கள் பூமிபூஜை நடத்துகின்றார்கள். இவைகளை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள். இவைகளை திராவிடக் கொள்கைகளின் தோல்வியாகக் கொள்ளலாமா?
வீரமணி: தந்தை பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி, மனிதநேயர். ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, "அனைவர்க்கும் அனைத்தும்" எனும் தத்துவம், சுயமரியாதை - இவை அனைத்தும் பெரியார் அவர்களுடைய சமூகப் புரட்சிச் சிந்தனைகள் - அவரது மானுடப் பற்றிலிருந்து மலர்ந்தவை.
இவைகளை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க இடையறாத பிரச்சாரம், போராட்டம் மூலமே முடியும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு நாம் அழுத்தம் கொடுத்து இக் கொள்கைகளை சாதிக்கலாம். அதற்காக நாம் அரசியலுக்கு, பதவிக்குப் போனால் இவற்றை மெல்ல மெல்ல விட்டு - பதவிக்கு வருவது எப்படி, அதனை தக்க வைப்பது எப்படி அதனைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதையே சதா சர்வ காலமும் சிந்தித்து, வாக்கு வங்கிக்கு ஏற்ப, மக்களை நாம் வழி நடத்திச் செல்வதிற்க பதில், நாம் மக்களின் பின்னால் செல்ல வேண்டி வந்துவிடும். இதனாற்தான் 1939இலேயே தனக்கு வந்த முதலமைச்சர் பதவியை உதறித் தள்ளினார் தந்தை பெரியார்.
1949இல் திமுக பிரிந்தது. 1957இல் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதென தீர்மானித்தது. 1972 இல் அதிமுக பிரிந்தது. (எம்ஜிஆர்). இவை இரண்டு திராவிட முத்திரை பெற்ற திராவிட மண்ணின் கட்சிகள் என்றாலும், பதவிக்கு வருவதற்கு அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளில் இருந்து பெரிதும் தடம் புரண்டுவிட்டனர். அவர்கள் "அரசியல் மோகினியின்" பின்னால் சென்றதன் விளைவு இது
திராவிடர் கழகம் என்பது தாய்க்கழகம். உண்மையில் அதன் பணியை துவக்கத்திலிருந்த நிலையிலேயே செய்து வெற்றி பெற்றுள்ளது. இந்து பாசிச மதவெறிக் கட்சியான பிஜேபி போன்றவைகள் இராமனை வைத்து வட நாட்டில் பதவிக்கு வந்தது போல் இங்கே அது எடுபடாத நிலை.
ஆகவே திராவிடக் கொள்கைகள் தோற்றுப் போகவில்லை. திராவிடக் கொள்கைகளில் கிளைத்த அரசியல் கட்சிகளால் அப்படி ஒரு புறத்தோற்றம். அவ்வளவுதான்.
வெப்ஈழம்: வரவிருக்கும் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் குறித்து உங்கள் கழகத்தில் நிலைப்பாடு என்ன? உங்களின் கணிப்பின்படி எந்தக் கட்சி வெல்லும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
வீரமணி: நாங்கள் அரசியல் கட்சி அல்ல; தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, இன்னும் எங்களுக்கென்ன ஆத்திரம், அவசரம்?
பிறகு அறிவிக்க வேண்டிய நேரத்தில் யாரை ஆதரிக்க வேண்டுமா அதை அறிவிப்போம்!
மதவெறிக் கட்சிகளையோ அவர்களுடன் கூட்டுச் சேருபவர்களையோ ஒருபோதும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
வெப்ஈழம்: சில காலங்களின் முன்னர் நீங்கள் பகவக்கீதை சம்பந்தமாக ஒரு புத்தகம் வெளியிட்டதாகக் கேள்விப்பட்டோம். அதிலிருந்து சில தகவல்களை எமக்கு சொல்லுவீர்களா?
வீரமணி: கீதை - ஒரு வர்ணாசிரமப் பாதுகாப்பு நூல்.
ஜாதி தர்மத்தை - ஆத்மா புரட்டு மூலம் கர்ம வினைப் பயன் என்று காட்டி ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்குகிறது. பெண்களை இழிவுபடுத்தி `பாபயோனியிலிருந்து பிறந்தவர்கள்’ என்று கூறுகிறது.
இப்படிப் பலப்பல. கீழே உள்ள வடமொழி சமஸ்கிருத சுலோகங்களைப் படியுங்கள்.
``நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’
``சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’
(அத்தியாயம் 4, சுலோகம் 13)
இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.
``காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா
க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’
(அத்தியாயம் 4, சுலோகம் 12)
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)
``மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய
ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு
பி யாந்தி பராங்கதிம்
(அத். 9 சுலோகம் 32)
கீதையின் மறுபக்கம்: பக்கங்கள்: 83,84,85
வெப்ஈழம்: விஞ்ஞானம் மிகவும் வளர்ந்துள்ள இந்த மேற்கத்தேய நாடுகளில்கூட எமது தமிழர்கள் கோயில்களைக் கட்டி அலகு குத்தி காவடி எடுக்கின்றார்கள். நிறைய செலவு செய்து யாகங்கள் செய்கின்றார்கள். மனிதர்களை கடவுள் என்று வழிபடுகிறார்கள். இவர்களுக்கு உங்கள் புத்திமதி என்ன?
வீரமணி: படிப்பறிவு வேறு, பகுத்தறிவு வேறு. மூடநம்பிக்கை, அறியாமையைவிட கொடுமையான நோய் மனிதர்களுக்கு வேறு கிடையாது!
காலங் காலமாக கடவுள் வழிபாட்டால் மனிதர்கள் அடைந்த துன்ப, துயரத் தடுப்பு உண்டா?
ஈழத் தமிழர்களை புலம் பெயர வைத்த கதிர்காமக்கந்தனும், யாழ்ப்பாண சிவனும் என்ன செய்தார்கள் - `தமிழன் மாமிசம்’ இங்கே கிடைக்கும் என்று சிங்கள இனவெறி ஓங்காரக் கூச்சல் இட்டபோது?
`சுனாமி’யில் இலங்கை மக்கள் கொல்லப்பட்டார்களே, கருணையே வடிவான, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்லவனாக் கூறப்படும் கடவுள் தடுத்தாரா?
இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு இழப்பா? சிறப்பா? ஈழ விடுதலைக்கு அப்பொருளைச் செலவழித்தால் மனித உரிமையாவது பாதுகாக்கப்படுமே!
வெப்ஈழம்: திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா பிரிந்த பொழுது அவரைக் கடுமையாக விமர்சனம் செய்த பெரியார் பின்பு பொதுநலநோக்கில் அவரை ஆதரித்தார். நீங்களும் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருந்து வருகின்றீர்கள். பொதுநலனுக்காய் இணைந்து போராடியும் இருக்கின்றீர்கள். இதே போன்று தற்பொழுது உங்களுடன் இருந்து பிரிந்து தனிக் கழகங்களை நடத்தி வரும் கொளத்தூர் மணி போன்றவர்களுடன் ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் இணைந்து போராட தயாராக இருக்கின்றீர்களா?
வீரமணி: ஈழ தமிழர்களுக்காகப் போராடுவது எங்களது வேலைத் திட்டம்! மற்றவர்களுடன் இணைந்துதான் போராட வேண்டும் என்பது அவசியமில்லை.
ஈழத்தில் கருணா குழுவினருடன் தலைவர் பிரபாகரனை இணைந்து போராடுங்கள் என்று கேட்பீர்களா?
எனவே துரோகத்தோடு சமரசம் செய்ய முடியாது. அதனால் லட்சியப் பணி குன்றாது.
வெப்ஈழம்: ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு தமிழ்நாட்டில் என்ன நிலையில் தற்பொழுது உள்ளதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?
வீரமணி: நீறு பூத்த நெருப்பு - அணையாத நெருப்பு - அதனை டிசம்பர் 29ஆம் (2005) தேதி பெரியார் திடலில் நடந்த ஈழத் தமிழர் பாதுகாப்புக் கூட்டத்தின் மூலம் அறிய முடிந்தது. அதன் தாக்கம்தான், தமிழக முதல்வரை சிங்கள அதிபரைச் சந்திக்காமல் செய்ய வைத்தது!
- வெப் ஈழம்
|
|
|
| வேகமாக தரையிறக்கம் செய்ய,,, |
|
Posted by: selvanNL - 02-07-2006, 08:03 PM - Forum: தரவிறக்கங்கள்
- Replies (4)
|
 |
[b]நீங்கள் ஒரு மென்பொருளை அல்லது படங்கள், பாடல்களை, Megaupload போன்ற இனைப்பின் ஊடாக தரவிறக்கம் செய்யும் பொழுது இனைய இனைப்பின் வேகத்தைவிட குறைவாகவே இருக்கும், FLASHGET என்ற மென்பொருளை உங்கள் கனனியில் நிறுவி விட்டு அதன் மூலம் தரவிறக்கம் செய்யும்பொழுது சாதரணமாக தரவிறக்கம் செய்யும் வேகத்தைவிட அதிகமாக இருக்கும்.
FLASHGET மென்பொருளை இங்கே சென்று தரவிறக்கம் செய்யுங்கள்
இதன் மூலம் தரவிறக்கம் செய்யும் பொழுது,,
1.வேகமாக தரவிறக்கம் செய்யலாம் (சாதரணமாக தரவிறக்கம் செய்யும்பொழுது இருக்கும் வேகத்தைவிட சற்று கூடின வேகம்)
2.உங்களிற்கு வேண்டிய நேரத்தில் தரவிறக்கத்தை நிறுத்தலாம், பின் தொடரலாம்,,
பி.கு:
|
|
|
|