![]() |
|
இலங்கை அகதிகளுக்கான சட்டங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: இலங்கை அகதிகளுக்கான சட்டங்கள் (/showthread.php?tid=959) |
இலங்கை அகதிகளுக்கான சட்டங்கள் - Shankarlaal - 02-09-2006 அகதிகள் தமிழகம் வருகை அதிகரிப்பு முகாமிலுள்ளவர்களுக்கு கட்டுப்பாடு திண்டுக்கல் : இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கையில் நடக்கும் கலவரத்தால் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அகதிகள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மறுவாழ்வு சிறப்பு ஆணையர் ராஜ்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தினால் நிவாரணம் கோரி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு தற்காலிக தங்குமிடம், பணிக்கொடை, மான்ய விலையில் அரிசி, 2 ஆண்டிற்கு ஒரு முறை பாத்திரங்கள், பிளஸ் 2 வரை இலவசக்கல்வி, கல்லுõரி படிக்க பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுகிறது. இங்கு தங்கியுள்ள அகதிகளுக்கு இந்தியாவின் அமைதியை காக்கும் வகையில் கடமைகள் சில உள்ளன. அவையாவன: * பிறப்பு, இறப்பு குறித்த விவரங்களை உடனுக்குடன் முகாம் அருகே உள்ள வி.ஏ.ஓ.,க்களிடம் அவசியம் பதிய வேண்டும். * குழந்தை பிறப்பை பதிய தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பதிந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு பிற்காலத்தில் இலங்கையில் குடியுரிமை கிடைக்கும். * 8 வயது முடிந்த குழந்தைகள் பெரியவர் என்ற எண்ணிக்கையில் கணக்கிடப்படும். * 12 வயது நிரம்பிய அனைவருக்கும் பணிக்கொடை வழங்கப்படும். * 18 வயதான பெண், 21 வயதான ஆண்கள் மட்டுமே திருமணத்திற்கு தகுதி பெற்றவர்கள். இவர்கள் திருமணம் செய்யும் போது அருகே உள்ள சப் ரிஜிஸ்தார் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். * இவ்வாறு திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டுமே, இலங்கை செல்லும் போது தனிக்குடும்பமாக கணக்கில் எடுத்துக் கொள்வர். இலங்கை அரசு தரும் சலுகைகள் இவர்களுக்கு கிடைக்கும். * முகாமை விட்டு வெளியே சென்றால் மாலையில் அவசியம் திரும்பி விட வேண்டும். ஒருவேளை ஒன்று அல்லது 2 நாட்கள் தங்க வேண்டியிருந்தால் முன்அனுமதி பெறுவது அவசியம். * வேறு முகாம் அல்லது வேறு மாவட்டத்தில் உள்ள உறவினர்களை பார்க்க செல்ல வேண்டுமானால் முன் அனுமதி அவசியம். * இலங்கை செல்ல விரும்புபவர்கள் பாஸ்போர்ட், எக்சிட் பெர்மிட் பெற்று விமானம் மூலம் தான் செல்ல வேண்டும். *அரசு செலவில் இலங்கை செல்ல விரும்பினால் முறைப்படி மனு தந்தால் இந்திய அரசே கப்பல் மூலம் அனுப்பி வைக்கும். கல்விச்சலுகை: அகதிகளின் குழந்தைகள் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சேர ஜாதிச்சான்றிதழ் தேவையில்லை. 12ம் வகுப்பு வரை இலவச பஸ்பாஸ், புத்தகங்கள், சத்துணவு ஆகியவை இவர்களுக்கு வழங்கப்படும். செய்யக்கூடாதவை: முகாமில் உள்ளவர்கள் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. சட்டத்திற்கு புறம்பாக இலங்கை செல்ல அவர்கள் முயலக்கூடாது. * சட்டத்திற்கு புறம்பாக உரிய ஆவணங்கள் இன்றி அகதிகள் செல்லும்போது, அவர்கள் தங்கள் பொருள், உடைமை ஆகியவற்றை இழக்க நேரிடும். * ஒரு சிலர் பண ஆதாயத்திற்காக சட்டத்திற்கு புறம்பாக அழைத்துச் செல்வதாக கூறுவதை நம்ப வேண்டாம். * சட்டத்திற்கு புறம்பாக இலங்கை சென்றவர்கள் என தெரிய வந்தால் அவர்களுக்கு எந்த உதவியும் இந்திய அரசு வழங்காது.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. <b>தினமலரிலிருந்து உருவியது</b> |